11 மார்ச், 2010
வச்ச குறி தப்பாது!
’தில்லுதுர’ என்ற மொக்கையான சீண்டல் விளம்பரத் தொடரின் தொல்லை இப்போதுதான் முடிந்திருக்கிறது. அடுத்தது ஆரம்பித்து விட்டார்கள். வெச்சகுறி தப்பாதாம்.
அதிருக்கட்டும். அதென்ன சீண்டல் விளம்பரம்?
‘சுண்டி இழுக்கும் விளம்பர உலகம்’ நூலில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டிருக்கிறது :
சீண்டல் விளம்பரங்களை (Teaser ads) நீங்கள் அதிகம் கண்டிருக்க முடியும். இங்கே சீண்டுதல் என்பது மக்களை சீண்டுவதாக பொருள்படும். ஒரு விளம்பரத்தை கண்டதுமே தலையும் புரியாமல், வாலும் புரியாமல் அந்த விளம்பரத்தை தந்த நிறுவனம் எது, விற்க விரும்பும் பொருள் எது என்று தெரியாமல் நீங்கள் குழம்பினால் அதுதான் சீண்டல் விளம்பரம்.
சில ஆண்டுகளுக்கு முன்பாக ‘புள்ளிராஜாவுக்கு எய்ட்ஸ் வருமா?’ என்ற கேள்வியை எங்கு பார்த்தாலும் கேட்டுக் கொண்டிருந்தார்கள் இல்லையா? அதுதான் சீண்டல் விளம்பரம். சீண்டல் விளம்பரங்கள் எந்த பொருளையும் உடனடியாக விற்றுத் தராது, எந்த நிறுவனத்தையும் பற்றி உடனே மக்களை பேசவைக்காது. ஆனாலும் சீண்டலை மக்கள் அவ்வளவு சீக்கிரமாக மறந்து விட மாட்டார்கள். சீண்டல் விளம்பரங்கள் மூலமாக நிறுவனத்தின் பிராண்டை மக்கள் மத்தியில் வெகுவாக பரவலாக்க முடியும்.
ஓக்கே, கமிங் பேக் டூ த பாயிண்ட்.
‘வச்ச குறி தப்பாது’ யாரை குறிவைத்து விளம்பரப் படுத்தப் படுகிறது என்று கடந்த ஒருவாரமாய் பல்வேறு வேண்டுகோள்களை ஏற்று ஆராய்ந்து கொண்டிருக்கிறேன். இந்த விளம்பரத்துக்கான மீடியம் மூன்று வகைகளாக இருக்கிறது. 1) போஸ்டர், 2) பத்திரிகை விளம்பரம், 3) டிவி விளம்பரம்.
சினிமா சுவரொட்டிகளுக்கு நடுவில் வச்ச கண்ணு வாங்காமல் பார்த்தால்தான் இந்த போஸ்டர்களை காணமுடிகிறது. பொதுவாக அரசியல் போஸ்டர்களும், ஏனைய அடாசுகளும் ஒட்டப்படும் இடங்களில் காணமுடிவதில்லை. எனவே சினிமா போஸ்டர் ஒட்டும் ஆட்களே இதையும் ஒட்டுகிறார்கள் என்று கண்டுகொள்ளலாம்.
பத்திரிகை விளம்பரங்களிலும் விண்ணை தாண்டி வருவாயாவுக்கு கீழேயும், தம்பிக்கு இந்த ஊருக்கு மேலேயும் நம் வச்சகுறி இடம்பெறுகிறது. டிவி விளம்பரம் என்று பார்த்தால் விஜய் டிவியில் மட்டும் கவுபாய் இசையோடு ஒளிபரப்பாகிறது.
விசிபிலிட்டி மற்றும் டார்கெட் ஆடியன்ஸ் அடிப்படையில் பார்த்தோமானால் இது சினிமா விளம்பரமென்று அதிநிச்சயமாக சொல்லலாம். அப்படி மட்டும் இல்லையெனில் விளம்பரத்தை தரும் விளம்பர ஏஜென்ஸியின் கிரியேட்டிவ் டைரக்டர்கள் அதிபுத்திசாலிகள் என்று எடுத்துக் கொள்ளலாம்.
விளம்பரத்துக்கு பயன்படுத்தியிருக்கும் எலிமெண்ட்ஸை வைத்துப் பார்த்தோமானால் இது ‘இரும்புக்கோட்டை முரட்டுச் சிங்கம்’ படத்துக்கான விளம்பரங்களாக இருக்கக்கூடும் என்று கணிக்க முடிகிறது. பொதுவாக சினிமாவுக்கு இதுபோல சீண்டல் விளம்பரங்கள் சரியாக எடுபடுவதில்லை. ஓரிரு விதிவிலக்குகள் இருக்கலாம். விதிவிலக்குக்கு உதாரணம் : ‘ஜெயம்’ படம் வெளியானபோது செய்யப்பட்ட சாதாரணமான போஸ்டர் கேம்பைன்.
என் விளம்பர அனுபவத்தில் உணர்வது என்னவென்றால் புராடக்டுக்கு டீசர் வேலைக்கு ஆகாது. சர்வீஸுக்கு தான் இந்த உத்தியை பயன்படுத்தலாம். புராடக்ட்டை டமாலென்று காட்சிக்கு வைத்து சிறப்பம்சங்களை வரிவரியாக அடுக்குவதே இந்திய மனோபாவத்துக்கு வேலைக்கு ஆகும்.
சினிமா என்பது ஒரு புராடக்ட். சர்வீஸ் அல்ல. ’இரும்புக்கோட்டை முரட்டு’ படத்தைப் பொறுத்தவரை குழந்தைகளை டார்கெட் செய்து அடித்தால் மட்டுமே வெச்சகுறி தப்பாமல் வசூலை அள்ளலாம். கோடைவிடுமுறை ரிலீஸ் என்பது அருமையான வாய்ப்பு. ஆனால் இதுபோல சீண்டலாக மாற்றி மாற்றி அடிப்பது என்பது இலக்கில்லாத வெத்து அடியாக மட்டுமே இருக்கும்.
சிம்புதேவன் ‘இம்சை அரசன்’ விளம்பரங்களில் டக்கர் அடி அடித்திருந்தார். குழந்தைகளை சரியாக டார்கெட் செய்து அடிக்கப்பட்ட சரியான அடி அது. அதே பாணியையே இப்படத்துக்கும் தொடர்ந்திருக்கலாம். இப்பொழுதே கவுபாய் எலிமெண்ட்ஸை (தொப்பி, பொம்மை துப்பாக்கி போன்றவை) விற்பனைக்கு வைத்து அல்லது குழந்தைகளுக்கு பரிசுகளாக கொடுத்து படத்துக்கு ஹைப்பை ஏற்றமுடியும்.
இவ்வளவு நாளாக இறைக்கப்பட்டது விழலுக்கு இறைத்த நீர் என்றே நினைக்கிறேன்.
தொடர்புடைய பழையப் பதிவு ஒன்று இங்கே!
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
சுண்டியிழுப்பது இங்கே சந்தியாவின் கண்கள் மட்டுமே
பதிலளிநீக்குலட்சுமி ராய் இருக்க குழந்தைகள் டார்கெட் செய்வது சரியா?
பதிலளிநீக்குஇரும்புகோட்டை முரட்டு சிங்கம் !
பதிலளிநீக்குலக்கி மாறு படுகிறேன்.
பதிலளிநீக்குஅர்ஜுன் அம்மா யாருன்னு கேட்டு, ஆவலைத் தூண்டி நலரைப் பால் வித்து நல்லாக் கல்லாக் கட்டினார்களே மறந்து விட்டீர்களா தோழரே?
lucky, i disagree. i believe cinema is a service, not a product, for the following reasons:
பதிலளிநீக்கு1. if the service is not good, you cannot return (as there is no product) or claim refund
2. you cannot try it out before you buy (as you do with apparel)
3. well, you cannot even see the product before you buy. all you can see are the brochure (poster) or hear reviews from others
4. if the same movie is running in multiple theaters, you go to the better theater (service location - like a better store in a chain hotel). whereas in a product, you just buy it where it is cheap.
5. you don't bring it home or get to keep it for long.
is there any specific reason why you called it a product?
//லக்கி மாறு படுகிறேன்.
பதிலளிநீக்குஅர்ஜுன் அம்மா யாருன்னு கேட்டு, ஆவலைத் தூண்டி நலரைப் பால் வித்து நல்லாக் கல்லாக் கட்டினார்களே மறந்து விட்டீர்களா தோழரே?//
ம்ஹூம். அதற்கு டீசர் விளம்பரங்கள் வெளியிடாமல், சாதாரண விளம்பரங்களை வெளியிட்டிருந்தாலும் இதே கல்லா கேரண்டீ! :-)
இதுமாதிரி பிராடக்ட்களில் இந்தச் சத்து இருக்கு, அந்தச் சத்து இருக்கு என்று ஜல்லியடிப்பதுதான் மேட்டரே தவிர அர்ஜூனுக்கு அம்மா யாராக இருந்தாலும் வியூவர்ஸுக்கு கவலை இல்லை.
டீசர் விளம்பரங்கள் பொதுவாக நிறுவனத்தின் Branding மற்றும் Service ஆகியவற்றை மக்கள் நினைவில் வைத்துக் கொள்ளவே பயன்படுத்துவார்கள்.
அனானி நண்பரே!
பதிலளிநீக்குஆங்கிலத்தில் எழுதியிருக்கிறீர்கள். சரியாகப் புரியவில்லை. இருந்தாலும் சினிமா என்பது ஒரு நுகர்வுப் பண்டம் என்ற என் கருத்தில் எந்த மாற்றமுமில்லை.
சத்யம் காம்ப்ளக்ஸ் போன்ற நிறுவனங்கள் இதை ‘சர்வீஸ்’ ஆக மாற்றுவதில் ஓரளவு வெற்றி கண்டிருக்கிறார்கள். ஆனாலும் கூட அது இன்றுவரை சத்யம் சினிமாஸில் மட்டுமே சாத்தியமாகி இருக்கிறது. தமிழக சினிமா உலகில் சத்யம் சினிமாஸின் பங்கு என்பது ஒரு சதவிகிதத்துக்கும் குறைவாகவே இருக்கும்.
//ம்ஹூம். அதற்கு டீசர் விளம்பரங்கள் வெளியிடாமல், சாதாரண விளம்பரங்களை வெளியிட்டிருந்தாலும் இதே கல்லா கேரண்டீ! :-)//
பதிலளிநீக்குஇல்லை லக்கி முதலில் தாய்மார்களின் கவனத்தைத் தங்கள் பக்கம் திருப்பி பின் தங்கள் பொருளை விளம்பரப்படுத்தினார்கள்.
வெறுமனே செய்திருந்தால் இத்தனை வெற்றி கிட்டி இருக்காது.
//இல்லை லக்கி முதலில் தாய்மார்களின் கவனத்தைத் தங்கள் பக்கம் திருப்பி பின் தங்கள் பொருளை விளம்பரப்படுத்தினார்கள்.
பதிலளிநீக்குவெறுமனே செய்திருந்தால் இத்தனை வெற்றி கிட்டி இருக்காது.
//
மறுபடியும் ம்ஹூம். மறுபடியும் ஒத்துக்க மாட்டேன். இந்தியச்சூழலில் டீசர் விளம்பரங்கள் மெகா சீரியல் ஆடியன்ஸை கவர்வதில்லை என்று கண்டறிந்திருக்கிறார்கள்.
அர்ஜூன் அம்மா யாரு என்று சீண்டிக் கொண்டிருந்ததற்குப் பதிலாக ‘நாலரைப் பால்’ விளம்பரத்தை அப்போதே கொண்டுவந்திருந்தால், இன்னும் அதிகமான எஃபெக்டை ஆரோக்கியா அடைந்திருக்கும். அந்த பிராடக்டின் யூ.எஸ்.பி. பக்காவாக இருந்தது. யூ.எஸ்.பி.யை ஆரம்பத்திலேயே விளம்பரப் படுத்தி இருக்க வேண்டும் என்பதுதான் விளம்பர வல்லுனர்களின் கருத்து.
உங்கள் பதிலில் ’கவனத்தை திருப்பி’ என்றொரு பதத்தைப் பார்த்தேன். விளம்பரம் கவனத்தை திருப்பினால் மட்டும் போதாது, சம்பந்தப்பட்ட தயாரிப்பை விற்கவேண்டும். சேவையை நாட செய்யவேண்டும்.
ஆரோக்கியாவை விட நல்ல ஹிட் அடித்த டீசர் கேம்பைன் ஹட்ச்சின் Hi!. இதைவிட வெற்றிகரமான ஒரு டீசர் கேம்பைன் இந்தியாவிலேயே இதுவரை இல்லை. ஆனால் பிராடக்ட் சேல் ஆகலையே? இத்தனைக்கும் ஹட்ச் என்பது சர்வீஸ் இண்டஸ்ட்ரி. இதை ஆர்ட் டைரக்டர்ஸ் கேம்பைன் என்ற பதத்தில் சொல்வோம். அதாவது ஆபரேஷன் சக்சஸ். பேஷண்ட் அவுட்.
ஆரோக்கியா டீசர் கேம்பைனாக வெற்றி அடையவில்லை என்ற என் கருத்தைப் பற்றி ரொம்ப டீடெய்லாக பின்னூட்டத்தில் பேசமுடியாது. எப்போதாவது நேரிலோ, தொலைபேசியிலோ பேசலாம்.
அது இ.மு.கோ.சி வுக்கானதா..?
பதிலளிநீக்குநான் கூட ஏதோ யோகி.B ஆல்பம் விளம்பரம் நினைச்சேன்.
எவ்வளவு தான் விளம்பரம் செஞ்சாலும் படத்தோட வெற்றி தோல்வியில பெரும்பங்கு வகிக்க போறது அதனோட தரம் தான். சில படங்கள் சரியான விளம்பரம் இல்லாமல் தோல்வி அடையிறதும் உண்மை தான். விளம்பரம் முக்கியம் தான், ஆனா தரம் அத விட முக்கியம். சேது படம் இதுக்கு ஒரு உதாரணம்.
பதிலளிநீக்குவடகரைவேலன் பாணியில் எனக்கும் சீரியஸ் கருத்துக்கள் உண்டு. இருந்தாலும் அவை வெறும் வாக்குவாதமாக போகும் சாத்தியகூறுகள் இருப்பதால்...
பதிலளிநீக்குசந்தியா 'மார்க்கட்டு' (டபுள் மீனிங் எல்லாம் இல்லை) செய்யும் 'பிரா'டக்ட் என்ன என்ற மொக்கை கேள்வியோடு என் பின்னூட்டத்தை நிறைவு செய்கிறேன் :)
Hi Yuvakrishna, simply superb writing... interesting...
பதிலளிநீக்குஅர்ஜூன் அம்மா யாரு விளம்பரம் பிளாப் என்பது உண்மை.
பதிலளிநீக்குஅவ்வளவு பில்ட் அப் ஏத்திட்டு நாலரை பால் கொடுக்குறது தான் அர்ஜூன் அம்மா என்ற போது சலிப்பு தான் வந்தது.
நான் அர்ஜூன் அம்மாவிடமிருந்து நிறைய எதிர்பார்த்தேன் ஹீ ஹீ ஹீ....
ஐபிஎல் கிரிக்கெட் போட்டி இருப்பதால் இம்முறை முரட்டுசிங்கம் படம் வரும் நாளை போட்டி போட விடமாட்டார்கள்.
பதிலளிநீக்குஇன்றுவரை சுண்டியிழுப்பது ஒரு நுகர்வுப் பண்டம். Branding நிறுவனத்தின் விளம்பரங்கள் வெறுமனே விளம்பரங்கள் செய்திருந்தால் ஜல்லியடிப்பது ஆரோக்கியம் அடைந்திருக்கும்.
பதிலளிநீக்குதரம் மட்டுமே சரியா?