5 மார்ச், 2010
Univercell Chennai Blogger meet!
www.indiblogger.in பற்றி தமிழ்பதிவர்களுக்கு பெரிய அறிமுகம் கிடையாது. இந்திய மொழிகளில் எழுதிவரும் வலைப்பதிவர்களை ஒருங்கிணைக்கும் ஒரு இணையத்தளம்.
இத்தளத்தின் மூலமாக அவ்வப்போது வலைப்பதிவர் தொடர்பான சந்திப்புகளும், நிகழ்ச்சிகளும் நடந்துவருகிறது. இதன் தொடர்ச்சியாக சென்னையில் வரும் 20ஆம் தேதி ஒரு சந்திப்பு ஜி.ஆர்.டி. கன்வென்ஷன் சென்டரில் நடக்க இருப்பதாக அறிவிக்கப்படிருக்கிறது. தமிழ் வலைப்பதிவர்களும் பங்கேற்கலாம். ஏற்கனவே சில பிரபல(!) வலைப்பதிவர்கள் இச்சந்திப்பில் பங்கேற்க தங்கள் பெயரை பதிவு செய்திருப்பதை சம்பந்தப்பட்ட பக்கத்தில் அறியமுடிகிறது.
என்று & எங்கே?
சனிக்கிழமை, மார்ச் 20, 2010 பிற்பகல் 2.30 மணி. நிகழ்ச்சி முடியும் நேரம் மாலை 6 மணி.
இடம் : ஜி.ஆர்.டி. கன்வென்ஷன் சென்டர்
120, சர். தியாகராயா சாலை,
தி. நகர், சென்னை - 600 017.
(ஜி.ஆர்.டி. கிராண்ட் டேஸ்க்கு அடுத்து)
மேலதிக விவரங்களுக்கு : 45018949 என்ற தொலைபேசி எண்ணில் indiblogger அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.
சந்திப்புக்கு வர விரும்புபவர்கள் இந்தப் பக்கத்தில் சென்று உடனடியாக தங்களது பெயரை பதிவு செய்யவும். அதிகபட்சம் 150 பேர் மட்டுமே கலந்துகொள்ளக் கூடிய நிகழ்ச்சி என்பதால் முதலில் பதிபவர்களுக்கே முன்னுரிமை கிடைக்கும்.
பொதுவாக இதுபோன்ற நிகழ்ச்சிகளில் ஓசியில் எதையாவது வழங்குவார்கள் என்பதால், நம் தமிழ் பண்பாட்டுக்கிணங்க தமிழ் வலைப்பதிவர்கள் முண்டியடிக்கும்படி தாழ்மையோடு கேட்டுக் கொள்கிறேன். நிகழ்ச்சியை வழங்குபவர்கள் : யுனிவர்செல், சென்னை.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
பொதுவாக இதுபோன்ற நிகழ்ச்சிகளில் ஓசியில் எதையாவது வழங்குவார்கள் என்பதால், நம் தமிழ் பண்பாட்டுக்கிணங்க தமிழ் வலைப்பதிவர்கள் முண்டியடிக்கும்படி தாழ்மையோடு கேட்டுக் கொள்கிறேன். நிகழ்ச்சியை வழங்குபவர்கள் : யுனிவர்செல், சென்னை.
பதிலளிநீக்குMm Kalakunga...
நம் தமிழ் பண்பாட்டுக்கிணங்க தமிழ் வலைப்பதிவு பின்னுட்டர்கள் முண்டியடித்து கமெண்ட் அனுப்ப தாழ்மையோடு கேட்டுக் கொள்கிறேன்
பதிலளிநீக்குமுடியல !!!!
சோறு போடுவாங்களா?
பதிலளிநீக்குRing-a-ring-a-roses,
பதிலளிநீக்குA pocket full of posies;
Hushka! bushka! khushka! musshka!
We’re all tumbled down.
பொதுவாக இதுபோன்ற நிகழ்ச்சிகளில் ஓசியில் எதையாவது வழங்குவார்கள் என்பதால், நம் தமிழ் பண்பாட்டுக்கிணங்க தமிழ் வலைப்பதிவர்கள் முண்டியடிக்கும்படி தாழ்மையோடு கேட்டுக் கொள்கிறேன்
பதிலளிநீக்குsssssssssshhhhhhhhhhhhhhhhhhhhhhhh
பொதுவாக இதுபோன்ற நிகழ்ச்சிகளில் ஓசியில் எதையாவது வழங்குவார்கள் என்பதால்,//செல்போன் கிடைக்க வாய்ப்பு உண்டு...ஆமா எதுக்கு இந்த சந்திப்பு?
பதிலளிநீக்குYou're really making your true followers really work overtime. Is defending the indefensible a new type of tapas
பதிலளிநீக்கு