17 மார்ச், 2010

விலைவாசி எதிர்வினை - Writer Visa

விலைவாசி குறித்த ஈரோடு அருணின் கருத்துக்கு எழுத்தாளர் விசாவின் எதிவினை இது :

சில வருடங்களுக்கு முன்பு அமைச்சர் ஆற்காட்டார் ஒரு அறிக்கை விட்டார் அதில் "எல்லோரும் நன்றாக சம்பாதிக்கிறார்கள். எல்லோரிடமும் பணம் இருக்கிறது. அதனால் செலவு செய்ய யாரும் தயங்குவதில்லை. விலை வாசி உயர்ந்தால் என்ன? விலை வாசி உயர்வால் யாரும் பாதிக்கப்படவில்லை". இப்படி ஒரு பாமரத்தனமான அறிக்கையை நான் ஒரு தமிழக அமைச்சரிடமிருந்து எதிர்பார்க்கவில்லை.ஆனால் தமிழக மக்களுக்கு இது தான் தரமான அறிக்கை. காரணம் அவர்களுக்கு எட்டியது அவ்வளவு தான்.

எழுத்தாளர்களை விட சினிமா ஹீரோக்களை அதிகம் நேசிக்கும் நம்மை போன்றவர்கள் வாழும் ஒரு தேசத்தில் தான் ஒரு அமைச்சர் இவ்வாறான ஒரு அறிக்கையை விட்டும் தொடர்ந்து அமைச்சராக இருக்க முடியும்.

நான் ஜெர்மனியில் வேலை பார்த்த போது என்னுடைய சம்பளம் 2600 ஈரோக்கள். எல்லா வரி பிடித்தங்களும் போக. நான் நண்பர்களோடு சமைத்து சாப்பிட்டு வந்தேன். கிட்டத்தட்ட ஒரு வாரத்திற்கு நான்கு நாட்கள் கறியோ மீனோ சமைப்போம்.எந்த வித தடைகளும் இன்றி விரும்பியதை வாங்கி சமைத்து உண்டு வந்தோம்.

அப்படி ஆடம்பரமாக உணவுக்கு செலவு செய்த போதும் எங்களின் ஒரு மாத உணவு செலவு வெறும் 100 ஈரோக்கள் தான். அதாவது நான் வாங்கிய சம்பளத்தில் 26-ல் ஒரு பங்கு தான் நான் உணவுக்கு செலவு செய்திருக்கிறேன்.

இந்தியாவில் 26000 ரூபாய் சம்பளம் பெற்றால் வெறும் ஆயிரம் ரூபாயில் என்னால் அப்படி ஒரு லக்சுவரி உணவை கனவில் கூட எதிர் பார்க்க முடியாது. இந்தியாவில் வாரத்துக்கு 2000 என்பதாக 8000 ரூபாய் வரை செலவாகும்.

அதாவது நான் வாங்கும் சம்பளத்தில் நான்கில் ஒரு பங்கை உணவுக்காக செலவு செய்ய வேண்டும். இப்போது சொல்லுங்கள். விலைவாசியை கட்டுக்குள் வைத்திருக்கும் ஜெர்மனி போன்ற நாடு சிறந்ததா அல்லது எல்லோரிடமும் பணம் இருக்கு, விலைவாசி இஷ்டத்துக்கும் ஏறட்டும் என்று சாடிஸ்ட்தனமாக சிந்திப்பது சிறந்ததா? இத்தனைக்கும் ஜெர்மனி ஒரு வளம் கொழிக்கும் விவசாய நாடல்ல.

விலைவாசி ஏற்றத்திற்கு அடிப்படை காரணிகளாக இருக்கும் ஏற்றத்தாழ்வுகள் :

Supply – Depends on the Availability of a commodity. சந்தையில் விற்பனைக்காக வரும் ஒரு பொருளின் அளவு. இதுக்கு மேல இதை தமிழில் சொல்ல முடியவில்லை. நீங்களே உங்களுக்கு வாகாக மொழி பெயர்த்துக்கொள்ளவும்.

Demand – Varies with the need and purchasing power of the individuals. சந்தையில் அந்த பொருளின் தேவை. இது இரண்டு காரணிகளால் கூடும். ஒன்று அதன் அத்தியாவிசியம் மற்றொன்று அதை வாங்கும் அளவுக்கு மக்களிடம் அதிகபடியான பணம் இருக்க வேண்டும்.

Excess purchasing power. சப்ளை அதிகமாக இருந்து டிமாண்ட் குறைவாக இருக்கும் போது விலைவாசி குறைவாக இருக்கும் என்பது எளிதாக விளங்கிக்கொள்ள முடிகிற விஷயம்.
இப்போது விலைவாசி ஏறுகிறதென்றால் சப்ளை குறைவாக இருக்க வேண்டும். Demand அதிகமாக இருக்க வேண்டும். அப்படி ஒரு சந்தர்ப்பத்தில் தான் விலைவாசி ஏறுகிறது. தற்போதைய விலை வாசி ஏற்றத்திற்கும் Demand மற்றும் Supply ஏற்றத்தாழ்வுகளே காரணம்.

இதை யார் சரி கட்டுவது?

இதை அரசாங்கம் தான் சரி கட்ட வேண்டும். சும்மா மக்களிடம் போலியாக அறிக்கைகள் விடுவதையும் ரிசர்வ் வங்கியின் மூலம் சில கட்டுப்பாடுகள் விதிப்பதையும் விட்டுவிட்டு நிஜமாக அரசாங்கம் களத்தில் குதித்து தீர்வு காணவேண்டிய கட்டாயம் வந்துவிட்டது. ஒரு வருடத்திற்கு முன்பு பண வீக்கம் அதிகமாக இருந்Tஹது விலைவாசியும் அதிகமாக இருந்தது. சில மாதங்களுக்கு முன்பு பணவீக்கம் குறைவாக இருந்Tஹ போதும் விலைவாசி விண்ணை முட்டி நின்றது .

இதற்கு காரணம் யார்?

இதை கட்டுக்குள் கொண்டு வராத அரசாங்கம். எப்படி என்று கேட்பீர்களானால் விளக்குகிறேன்.

உங்கள் எல்லோருக்கும் வெளிப்படையாக தெரிந்த ஒரு உதாரணத்தை எடுத்துக்கொள்வோம். சில ஆண்டுகளுக்கு முன் சென்னையில் வீட்டு மனைகளின் விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்தது. இதற்கு ஐ.டி. துறை தான் காரணம் என்று பாமரத்தனமாக கட்டுரைகள் எழுதி ஐ.டி. துறையில் இல்லாத மக்கள் கைத்தட்டி ஆர்ப்பரித்து சபித்து மகிழ்ந்தார்கள்.

உண்மையில் ஐ.டி. துறை தான் அந்த விலை ஏற்றத்திற்கு காரணமா?

அப்போது வீட்டு மனைகளின் விலை உயர்ந்தது. வீடுகளின் விலை உயர்ந்தால் கட்டுமான பொருட்களின் விலை உயர்வால் வீடுகளின் விலை உயர்கிறதென்று சமாதானம் அடையலாம். ஆனால் வெறும் தரையும், மண்ணும் இப்படி ஒரு வகை தொகை இல்லாமல் விலை ஏறிக்கொண்டிருக்க காரணம் யார்?

நூறு மனைகள் இருக்கிறது. ஆயிரம் பேர் வாங்குவதற்கு தயாராஇ இருக்கிறார்கள். அந்த ஆயிரம் பேரில் நூறு பேர் தான் உண்மையில் வாங்க பண வசதி படைத்தவர்கள். மீதி 900 பேர் வங்கிகளால் பணம் வழங்கப்பட்டு அந்த போட்டிக்கு அனுப்பி வைக்கப்பட்டவர்கள். இப்போது அந்த நூறு மனையை வைத்திருக்கும் ஓனர்களும் விற்பனையில் ஈடுபடும் இடை தரகர்களும் என்ன விலை சொன்னாலும் ’வாங்க ஆளிருக்குடா மாமே அதனால இஷ்டத்துக்கு விலையை ஏத்து’.

‘இன்னைக்கு வந்தா அம்பது லட்சம் நாளைக்கு வந்தா அறுபது லட்சம்’ - இந்த டயலாக்கை என் காது பட கேட்டிருக்கிறேன். இப்படி இஷ்டத்துக்கு ஏற்றிவிட்டது யார்? இப்போது இதை கட்டுப்படுத்த வேண்டிய அரசாங்கம் என்ன சொல்கிறது. 1000 பேர் வாங்க தயாராய் இருக்கிறார்களே? பிறகு என்ன நம்ம நாட்டில் கஷ்டம் வந்துவிட்டது. கேக்குற விலையை கொடுத்து வாங்க வேண்டியது தானே என்று பொறுப்பற்ற தனமாய் சைக்கோ தனமாய் சாடிஸ்ட் தனமாய் இருந்துவிட்டு பொதுமக்கள் ஐ.டி. துறை மேல் பாய விட்டு வேடிக்கை பார்ப்பதையும் கை தட்டி வரவேற்ற நாம் முட்டாள்கள் தானே?

இந்த எடுத்துக்காட்டின் மூலமாக நான் சொல்ல வருவது என்ன வென்றால் விலைவாசியை Supply - Demand எனும் காரணிகளிடம் கண்ணை மூடி அரசாங்கம் ஒப்படைத்துவிட்டால் சப்ளை எனும் ஒரு காரணியை குறைத்து விலை வாசியை யார் வேண்டுமானாலும் ஏற்றலாமே.

உதாரணமாக பத்து பேர் ஒரு தெருவில் இருக்கிறார்கள். ஒரு கடை இருக்கிறது. பத்து பேரும் காலையில் சிகிரெட் வாங்கி பிடிப்பார்கள். இப்போது சிகிரெட்டின் விலை ஐந்து ரூபாய். அடுத்த நாள் கடைக்காரன் என்னிடம் ஐந்து சிகிரெட்டுகள் தான் இருக்கிறது (மற்ற ஐந்தை வீட்டில் ஒளித்து வைத்துவிட்டு) எனவே உங்களில் யார் ஒரு சிகிரெட்டுக்கு பத்து ரூபாய் தருகிறார்களோ அவர்களுக்கு நான் சிகரெட் கொடுக்க தயார் என்கிறான்.

உடனே அதில் வசதி படைத்த இரண்டு பேர் ஐ.டி. துறையில் மூன்று பேர் பத்து ரூபாய்க்கு சிகிரெட் வாங்கி பிடிக்கிறார்கள். சிகிரெட் கிடைக்காத மீதி ஐந்து பேர் சிகிரெட் விலை உயர ஐ.டி. துறை தான் காரணம் என்று கட்டுரை எழுதி சாந்தமடைகிறார்கள். இது தான் இன்றைய நிலை.

எனவே அரசாங்கம் போலியாக சந்தையில் சப்ளையை குறைத்து விலை வாசியை ஏற்றிவிடும் இடைத்தரகர்களை கண்டறிய வேண்டும். மேலும் இலவசத் திட்டங்களுக்கு செலவிடும் உணவு தானியங்களால் கூட பொது மார்க்கெட்டில் விலை வாசி உயர வாய்ப்புண்டு. அதையும் அரசாங்கம் கண்காணிக்க வேண்டும்.

இதையும் மீறி நிஜமாகவே சப்ளை குறைகிறதென்றால் அது எதனால் என்றும் ஆராய்ந்து அதற்கான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். குறிப்பாக விவசாயத்திற்கு அதிக சலுகைகள் வழங்கலாம்.
மேலும் இந்திய வணிகத்தில் இந்தியா கோதுமையை குறைந்த விலைக்கு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து மிக அதிக விலைக்கு அதே கோதுமையை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்கிறது என்பது தெரியுமா? அதற்கு டிரேட் டிபிசிட்டை காரணம் காட்டுகிறது அரசாங்கம். இதை எல்லாம் கருத்தில் கொண்டு அரசாங்கம் சரியான நேரத்தில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அப்படி நடவடிக்கை எடுக்கிற போது சில உடன்பிறப்புக்கள் தங்கள் அரசியல் தோழர்களே பாதிக்கப்படலாம் என்பதால் அரசும் அத்தனை தீவிரமாய் நடவடிக்கை எடுப்பதில்லை. வெங்காயத்தின் விலை உயர்வை பற்றி தெரிந்திருக்கும். எந்த ஒரு பொருளின் சப்ளையையும் கட்டுப்படுத்தி விலைவாசியை உயர்த்த முடியும். அப்படி யார் கட்டுப்படுத்துகிறார்கள்? அல்லது எது கட்டுப்படுத்துகிறது? அரசாங்கத்தின் எந்த திட்டம் கட்டுப்படுத்துகிறது? என்பதை ஆராய்ந்து அதற்கான எதிர் நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும்.

அதையெல்லாம் விட்டுவிட்டு எல்லாருக்கும் நல்ல சம்பளம் இருக்கு விலைவாசி ஏறினா என்னான்னு கேட்டு பாமரத்தனமா பேசுறது எப்படி இருக்குதுன்னா, ‘கேளேன்.. நீ கேளேன்.. மச்சி நீ கேளேன்’ன்னு சொல்றமாதிரி இருக்கு.

எவனும் கேக்க வேண்டாம் போங்கய்யா.

அன்புடன்
விசா

* - * - * - * - * - *

- இந்த விவாதம் என்னுடைய வலைப்பூவை பொறுத்தவரை முடிவடைகிறது. இப்பதிவுக்கான எதிர்வினைகளை இங்கே பின்னூட்டமாக இடலாம். அல்லது அவரவர் வலையில் பதிந்து மேற்கொண்டு விவாதம் நீள வழிவகுக்கலாம். வலைப்பதிவு இல்லாதவர்கள் யாரேனும் கட்டுரையாக வரைந்தால் மட்டுமே என்னுடைய வலைப்பூவில் வெளியிட முயற்சிக்கிறேன்.

இச்சூழலுக்கு முக்கியமான விவாதத்தை தொடங்கிய அருணுக்கும், தொடர்ந்த விசாவுக்கும் எனது நன்றி.

அன்புடன்
யுவகிருஷ்ணா

28 கருத்துகள்:

  1. நான் கூட விலைவாசி உயர்வுக்கு 'தமன்னாதான்' காரணமோன்னு பயந்துட்டேன். விசா சொல்பவையோடு ஒத்துப் போகின்றேன்.

    பதிலளிநீக்கு
  2. ஆரோக்கியமான விவாதத்திற்கு - சென்ற பதிவில் இருந்த படத்தை விட இந்த பதிவில் இருந்த படத்தின் கருத்து செறிவு அருமை.

    பதிலளிநீக்கு
  3. விசா 2600 சம்பளத்தில் 100 யுரோ மட்டுமே உணவுக்கு செலவழிக்க தேவைப்பட்டது என்பது ஆச்சரியம். அதே சமயம் வீட்டு வாடகைக்கு எவ்வளவு சதவீத சம்பளம் தேவைப்படும் என்பதும் சொல்லி கம்பேர் செய்து இருக்கவேண்டும்.

    பதிலளிநீக்கு
  4. //சதவீத சம்பளம் தேவைப்படும் என்பதும் சொல்லி கம்பேர் செய்து இருக்கவேண்டும்.
    //

    Rent 375. 2 people shared.

    Even if I alone share its just 1/8 of my salary. Luxury guaranteed.
    In chennai it wud be 8,000. So salary should be 800 x 8 = 64,000?
    mudiumaaaaaaaaa?

    Inflation in Germany is less than 3%

    Sorry I typed in english. doesnt have translator.

    பதிலளிநீக்கு
  5. visa, i too have lived in germany :)- Don't know that you get apartments so cheap. So my comparison is like this.

    rent 900 out of salary 3000. (that is what i spent) and it was not luxurious. (I have to clean it myself and do any repair work myself or else spend a huge amount for labour.)

    My sister lives in trichy. Rent 1800 out of salary 13,000.

    Which one is better ?

    Forget about chennai. It is absolutely overinflated and i don't know on how people with traditional salaries live there !

    பதிலளிநீக்கு
  6. விலைவாசி உயவுக்கு கூட தமன்னா புகைப்படம் தேவையா?

    பதிலளிநீக்கு
  7. //Forget about chennai. It is absolutely overinflated and i don't know on how people with traditional salaries live there !//

    Yes of course we are speaking about the overinflated scenario. Why does this overinflation happens. and who does this. How government is going to control this. Kalaignar has given an alternative of giving meals for 20 rupees in hotels. Is this the way to deal inflation. Will the people of UK or US accept this as an alternative for inflation. We are really fools isnt it.

    You are talking about Trichy. I guess there is no glass made so called BPOs or IT buildings coming up in Trichy vastly. If so then even there inflation will go up.Its all the mediators brokers who inflate it. You know 90% of IT employees who own a house own it through housing loans from banks for 20 years of bond. And when IT employees pay the bank for the pumping done by some brokers and mediators who run away with our money 20 years in advance. See how it is?

    பதிலளிநீக்கு
  8. பெயரில்லா6:00 PM, மார்ச் 17, 2010

    I have lived in USA and in Europe (switzerland).Food is not expensive in these countries.Rent varies from place to place but inflation is under control. One can eat well with 10% of the salary.If one cooks regularly and if one buys food in bulk it is all the more cheaper.Switzerland is supposed to be an expensive country. Still food is affordable there and prices wont go up by 30% in one year.In USA food stamps scheme takes care of the needs of the poor. USA is a market economy , still they ensure that poverty does not lead to starvation deaths.
    In India govt. neither gives such facilities for the poor so that they get food irrespective of inflation nor controls the prices.

    பதிலளிநீக்கு
  9. விலைவாசி உயர்வால் நிச்ச்யம் எதாவது ஒரு தரப்பு பாதிக்கப்படும், அதில் எந்த மாற்று கருத்தும் இல்லை!

    ஒரு வீட்டில் குடியிருக்கிறீர்கள், வருடம் பத்து சதவிகிதம் வாடகை ஏறுகிறது, அதே போல் உங்கள் சம்பளமோ அல்லது விற்பனையோ உயர வேண்டும்! இல்லையென்றால் உங்கள் பட்ஜெட்டில் துண்டு விழும்.

    கடந்த இரண்டு வருடத்தில் ஏற்பட்ட இயற்கை பாதிப்புகள் பருப்பு விலை உயர காரணமாக இருந்தது, உண்மையில் நம்மிடம் தேவையான அளவு உற்பத்தியும் இருந்தது, ஒருவேளை நாம் ஏற்றுமதியை நிறுத்தியிருந்தால் பழைய விலைக்கே பொருள்களை பெற்றிருக்க முடியும்! ஆனால் அதனால் பெரும் முதலைகள் கொழுத்த லாபம் சம்பாரிப்பது தடைபடும்!

    என் பார்வையில் தற்போதைய விலைவாசி உயர்வு விடுமுறை அன்று ப்ளாக்கில் சரக்கு வாங்குவது போல், அதாவது நிலையற்றது இது மீண்டும் சீராகும் அதற்கு ஒரே தேவை உற்பத்தியை குறையாமல் வைத்து கொள்ள வேண்டும்!

    ஏன் இப்போதே குறையலாமே என கேட்கலாம், பழைய விலைக்கு பொருள்கள் வாங்கிய சிறு வியாபாரிகளில் இருந்து, ப்ரு வியாபாரிகள் வரை அதை குறைக்க விடமாட்டார்கள், விட்டால் பெருந்த நட்டத்தை அடைய வேண்டியிருக்கும்!

    அரசியல்வாதிகளை இந்த விசயத்தில் நான் என்றுமே நம்புவதில்லை, தொழிற்புரட்சியில் மட்டுமே அக்கறை கொண்டுள்ள அரசாங்கம், பசுமையை தொலைத்து நிற்கிறது, எந்த ஒரு நாடு விவசாயத்துக்கு முன்னுரிமை அளிக்கிறதோ அங்கே நாடும், நாட்டு மக்களும் செழிப்பாக இருப்பார்கள்!

    பதிலளிநீக்கு
  10. இந்த பதிவுக்கு தமன்னா படம் எதற்கு என்று சிலர் கொதிக்கிறார்கள்.
    விலை வாசி ஏற்றத்தால் சூடாகியிருக்கும் மண்டையை கொஞ்சம் குளு குளு செய்ய நான் போட்ட ராஜ திட்டம் அது புரியவில்லையா உங்களுக்கு?

    காலம் காலமாய் அரசியல் செய்யும் இந்திய ஜாம்பவான்கள் மட்டும் இப்படி திட்டம் போட்டு உங்களை கட்டம் கட்டிய போது சுருண்டு படுத்த
    நீங்கள் நான் அதில் ஒரு அம்சத்தை மட்டும் பிரயோகப்படுத்திய உடன் பொங்கி எழுவதென்னவோ......?

    எல்லாரம் அரசியல் மயம்!!!

    மாயாவதிக்கு ஆயிரம் ரூபாய் நோட்டு மாலை. எங்கிருந்து போனது அந்த பணம். விலைவாசி என்ற பெயரில் நீங்கள் அதிகமாக
    கொடுக்கும் ஒரு ரூபாயும் இரண்டு ரூபாயும் தான் கட்சி நிதியாக மாறி அங்கே மாலையாக விழுந்திருக்கிறது.

    சிந்திக்க விருப்பம் இருப்பவர்கள் சிந்திக்கலாம்...மற்றவர்கள் என்னை போல் (நான் ஒரு அரை மணி நேரமா அத தான் யோசிச்சிட்டு இருந்தேன்) தமன்னாவின் அழகிய தொப்புளில் எப்படி தெப்பம் விடுவது என்று ஆராய்ச்சி செய்யலாம்.

    பதிலளிநீக்கு
  11. Very nice article by visa. Currently, in the last few years, it can be observed that except for real estate other commodities are in pace with inflation. Normally, all the commodities have to raise in pace with inflation which is really healthy. Real estate (shelter), basic necessity has faced hyper inflation due to loans provided by the banks. We are borrowing from the future and spending it in the present to secure our future i.e to beat the inflation. Since real estate price increases, rental value increases which in turn increases the commodities price. So, indirectly the banks have caused this inflation. Government via RBI, has to take action to curb inflation instead they have played to tunes of the Builders lobby.

    பதிலளிநீக்கு
  12. To the supply and demand picture there are few more dimensions I would like to add specific to India.
    1. Wastage - Unavailability of good storage (for longer term, like cold storage for perishables, and bug free storage for others) makes the trade urgent, because, every one just want to exchange it up the supply chain, so they can see whatever money they can immediately. Not sure, if there is any study which might indicate how much wastage is in our supply chain.

    2. Greed: What is the right percentage of profit, an individual or a company is expected to have ( I understand that it depends on the supply/demand picture, but are we that scientific yet), and even if they have right % of profit, when there are too many hands in the supply chain, each one, multiplies as the commodity goes up the chain.

    பதிலளிநீக்கு
  13. //உண்மையில் ஐ.டி. துறை தான் அந்த விலை ஏற்றத்திற்கு காரணமா?
    //

    இல்லையா

    //அப்போது வீட்டு மனைகளின் விலை உயர்ந்தது.//

    ஏன்

    //நூறு மனைகள் இருக்கிறது. ஆயிரம் பேர் வாங்குவதற்கு தயாராஇ இருக்கிறார்கள். அந்த ஆயிரம் பேரில் நூறு பேர் தான் உண்மையில் வாங்க பண வசதி படைத்தவர்கள். //
    தயாராக இருந்தவர்கள் எல்லாம் ஆட்டோ ஓட்டுபவர்களும், பள்ளிக்கூட ஆசிரியர்களுமா

    பதிலளிநீக்கு
  14. //உடனே அதில் வசதி படைத்த இரண்டு பேர் ஐ.டி. துறையில் மூன்று பேர் பத்து ரூபாய்க்கு சிகிரெட் வாங்கி பிடிக்கிறார்கள். சிகிரெட் கிடைக்காத மீதி ஐந்து பேர் சிகிரெட் விலை உயர ஐ.டி. துறை தான் காரணம் என்று கட்டுரை எழுதி சாந்தமடைகிறார்கள். இது தான் இன்றைய நிலை.//

    ஐடி துறையில் இருக்கும் மூன்று பேரும் வசதி படைத்தவர்கள் என்று கூறுகிறீர்கள்

    அப்படி என்றால் அவர்களுக்கு அளிக்கப்பட்ட அதிக அளவிலான சம்பளம் காரணம் தானே

    பதிலளிநீக்கு
  15. //Yes of course we are speaking about the overinflated scenario. Why does this overinflation happens. and who does this. How government is going to control this.//

    சென்னையில் மட்டும் விலைவாசி அதிகம் உயர்ந்ததற்கு காரணம் எந்த துறை

    பள்ளிக்கூட ஆசிரியர்களா
    பேரூந்து நடத்துனர்களா
    பூ வியாபாரிகளா

    என்று விளக்கினால் நலம்

    பதிலளிநீக்கு
  16. //You are talking about Trichy. I guess there is no glass made so called BPOs or IT buildings coming up in Trichy vastly. If so then even there inflation will go up.Its all the mediators brokers who inflate it. You know 90% of IT employees who own a house own it through housing loans from banks for 20 years of bond. And when IT employees pay the bank for the pumping done by some brokers and mediators who run away with our money 20 years in advance. See how it is?//

    உங்களின் வாதங்கள் முன்னுக்கு பின் முரணாக உள்ளதே

    ஏன்

    பதிலளிநீக்கு
  17. //தயாராக இருந்தவர்கள் எல்லாம் ஆட்டோ ஓட்டுபவர்களும், பள்ளிக்கூட ஆசிரியர்களுமா//

    ஐயா வணக்கம். என்னுடைய பதிவிலும் பதிலிலும் எந்த முரணும் இல்லை. ஊரில் பணக்காரர்களோ வசதி படைத்தவர்களோ உருவானால் கூடவே விலைவாசியும் ஏறலாம் என்ற கூற்றுக்கு எதிராகத்தான் நான் எழுதினேன். அதாவது ஐ.டி.துறையோ ஆட்டோ ஓட்டுனர்களோ அல்லது கூலி வேலை செய்பவர்களோ கூட நாளை வசதி படைத்தவர்கள் ஆகலாம். அப்படி வசதி படைத்தவர்கள் அதிகம் இருப்பதால் எப்படி விலைவாசி ஏறலாம் என்பது தான் என்னுடைய கேள்வி? இப்படி வசதி படைத்தவர்கள் இருக்கிறார்கள் உடனே விலைவாசியை ஏற்றலாம் என்று ஊதி ஏற்றிவிடும் கூட்டத்தை கட்டுப்படுத்த அரசாங்கம் முன்வரவேண்டும் என்பதே என் கட்டுரையின் சாரம்.
    இதில் நான் எங்கே முரண்படுகிறேன்.

    பதிலளிநீக்கு
  18. என் வீணாப்போன கட்டுரையை இன்னொரு முறை படியுங்கள். நூறு பேர் இருக்கும் தெருவில் நூறு பேருக்கு தக்காளி உற்பத்தி ஆகிக்கொண்டிருக்கிறது.ஒரு கிலோ 10 ரூபாய். திடீரென அதில் வசிக்கும் இருபது பேருக்கு கம்பெனியில் சம்பள உயர்வு வந்தவுடன் விளையும் தக்காளி எப்படி விளையும் போதே தன்னைத்தான் விலையேற்றிக்கொள்கிறதா? ஐ.டி. துறையோ அரசாங்க துறையோ பேப்பர் பொறுக்குபவனோ பணம் வரவர விலைவாசி எப்படி ஏறலாம்? குறிப்பாக அத்தியாவிசிய பொருட்கள்.
    நீங்கள் கண்மூடித்தனமாக ஐ.டி. துறை தான் காரணம் என்பது போல் பின்னூட்டம் இட்டிருக்கிறீர்களே ஏன்?

    பதிலளிநீக்கு
  19. பெயரில்லா1:08 PM, மார்ச் 18, 2010

    VISA, what you are trying to say is those in the queue from 10 to 100 shouldn't buy house, is it?. If the first 10 always buys, then there is no inflation. Since the ordinary people into the real estate market, courtesy bank loan, then inflation starts, is it?.

    பதிலளிநீக்கு
  20. பெயரில்லா4:02 PM, மார்ச் 18, 2010

    திரு. விசா அவர்களுடன் சில இடங்களில் நான் ஒத்துப்போகிறேன். ஒத்துப் போகாத இடம் அயல் நாட்டுடன் ஒப்பிடுவது. ஏனெனில் அதில் நிறைய காரனங்களை அலச வேண்டி இருப்பதால் அதில் மட்டும்...

    இருந்தாலும் திரு. விசா இன்னும் ஆழமாக சிலவற்றை சொல்லவில்லை. அவை சில கேள்விகளாக...
    1. விலைவாசி (hike in cost) உயர்வு என்றால் என்ன?
    2. 2003 ஆம் ஆன்டுக்கு பின் மட்டும் விலைவாசி ஒரு முறை கூட சரிவை சந்திக்காமல் தொடர்ந்து உயர்வது ஏன்?
    3. நுகர்வு கலாச்சார (Consumer Culture) மாற்றத்திற்கு என்ன காரனம்?
    4. ஒரு தனி மனிதன் 50000 டன் வரை உணவு தானியத்தை சேமித்து வைத்து கொள்ளலாம் என்று அரசு அனுமதி வழங்கியது ஏன்?
    5. 'ரிலையன்ஸ்' (Reliance) மற்றும் 'வால்மார்ட் ' (Walmart) போன்ற தனியார் நிறுவனங்கள் சில்லரை வியாபாரத்தில் இறங்கிய பின் மட்டும் விலைவாசி தொடர்ந்து உயர்வது ஏன்?
    6. அரசாங்கம் விவசாய கடன் தள்ளுபடி, இலவசப் பொருட்கள், மலிவு விலை அரிசி போன்றவை தரும் போது விலைவாசி உயர்வு விகிதம் அதிகரிப்பது ஏன்?
    7. 'வாழ்கை தரம்' (standard of living) மற்றும் 'வாழ்க்கைக்கான செலவு' (cost of living) இவை இரண்டுக்கும் விலைவாசி உயர்வுக்கும் உள்ள தொடர்பு என்ன?
    8. பணவீக்கம் (inflation) (note: inflation and hike in cost of goods is entirely different but both are inter related each other thus these are used interchangeably.) என்றால் ஏன்ன? இதற்கும் விலைவாசி உயர்வுக்கும் உள்ள தொடர்பு என்ன?
    9. 'தேவை' (Demand) மற்றும் 'அளிப்பு' (Supply) இதற்கும் விலைவாசி உயர்வுகும் உள்ள நேரடி மற்றும் மறைமுக தொடர்பு என்ன?
    10. பங்கு சந்தை (Share Market), பண சந்தை (Currency Market), பண்டக சந்தை (Commodity Market) போன்றவற்றில் நடை பெறும் சூதாட்டம் விலைவாசியை பாதிக்குமா?
    11. கச்சா எண்ணெய் (Crude Oil) உற்பதிக்கும் விலைவாசி உயர்வுக்கும் உள்ள தொடர்பு என்ன?
    12. உலக பொருளாதாரம், நாட்டின் பொருளாதரம் இவை இரண்டுக்கும் விலைவாசி உயர்வுக்கும் உள்ள தொடர்பு என்ன?

    இந்த கேள்விகளுக்கான விடையும், அந்த விடைகளுக்கு இடையே உள்ள தொடர்பும், அந்த தொடர்புக்கு பின்னால் உள்ள உலக மற்றும் உள்ளூர் (இந்திய) அரசியலும், அந்த அரசியலை ஆட்டி வைக்கும் உலக பணக்காரர்களும், அந்த பணக்காரர்களை வாய்பிளந்து பார்க்கும் என்னைப் போன்றவர்கள்தான் இந்த விலைவாசி உயர்வுக்கு காரணம்.

    இங்கனம்
    திரவியன்

    பதிலளிநீக்கு
  21. //இந்த கேள்விகளுக்கான விடையும், அந்த விடைகளுக்கு இடையே உள்ள தொடர்பும், அந்த தொடர்புக்கு பின்னால் உள்ள உலக மற்றும் உள்ளூர் (இந்திய) அரசியலும், அந்த அரசியலை ஆட்டி வைக்கும் உலக பணக்காரர்களும், அந்த பணக்காரர்களை வாய்பிளந்து பார்க்கும் என்னைப் போன்றவர்கள்தான் இந்த விலைவாசி உயர்வுக்கு காரணம்.//

    I love it.

    ithai ellaam seithathu arasangam. seithuvittu "eloaridamum panam irukirathu athanaal thaan vilai vaasi uyarkirathentru" yaar kaathil poo sutra paarkiraargal.

    பதிலளிநீக்கு
  22. @ Visa.... What you said is true but we are the Masters who create and demolish the government so we have to do that....

    பதிலளிநீக்கு
  23. ///we are the Masters who create and demolish the government so we have to do that....///
    but how to do??

    பதிலளிநீக்கு
  24. விசா. தப்பிச்சேன். வால்பையன் கட்டுரையை மறுபடி படிச்சு பி.பி ஏறாம தடுத்துட்டீங்க.

    பதிலளிநீக்கு
  25. இந்த கேள்விகளுக்கான விடையும், அந்த விடைகளுக்கு இடையே உள்ள தொடர்பும், அந்த தொடர்புக்கு பின்னால் உள்ள உலக மற்றும் உள்ளூர் (இந்திய) அரசியலும், அந்த அரசியலை ஆட்டி வைக்கும் உலக பணக்காரர்களும், அந்த பணக்காரர்களை வாய்பிளந்து பார்க்கும் என்னைப் போன்றவர்கள்தான் இந்த விலைவாசி உயர்வுக்கு காரணம்..........................\

    i 3 love it.

    பதிலளிநீக்கு
  26. பெயரில்லா4:12 PM, மார்ச் 24, 2010

    Mr. LL (LuckyLook)

    I've been a regular reader of blog for almost 18 months.
    Really well said. I donno whether you had a chance to check this
    http://ibnlive.in.com/news/indias-chance-to-take-the-world-now-or-never/111961-7-single.html

    Kudos to You

    Indian

    பதிலளிநீக்கு
  27. திரு. லக்கி, இந்தக் கட்டுரையின் முக்கிய கருத்துகளில் எனக்கு உடன்பாடில்லை. ஊக வணிகம் குறித்து ஒன்றும் சொல்லப்படவில்லை. அந்த சிகரட் உதாரணத்திற்கே வருகிறேன். பெட்டிக்கடைக்காரருக்கு முன்பெல்லாம் ஏற்படாத பதுக்கல் எண்ணம் ஏன் இப்போது வருகிறது? கஸ்டமர்களின் வாங்கும் சக்தியை அவன் அறிய நேரிடும் போது, விலையை எவ்வளவு கூட்டினாலும் வாங்க்வார்கள் என்று நம்பிக்கை ஏற்படுகின்றது. கஸ்டமர்கள் அனைவருமே அன்றாடங்காய்ச்சிகளாக இருந்தால் 5 சிகரட்டை பதுக்கும் எண்ணம் வருமா? இடைத்தரகர்கள், ஊக வணிகம் கட்டுப்பாடில்லாத ஏற்றுமதி போன்றவை விலைவாசி உயர்வுக்குக் காரணமாக இருந்தாலும், இந்தக் காரணிகள் எல்லாமே இரண்டாம் நிலைக் காரணிகளே. முதன்மைக் காரணி ஐடி துறையே. ஐடி துறையின் பிரம்மாண்ட வளர்ச்சியினால், ஏராளமானோர் மிக இளம் வயதிலேயே தேவைக்கதிகமாக சம்பாரிக்கத் தொடங்கினார்கள். ஆரம்பத்தில் இவர்கள் ஊதாரித்தனமாக செலவு செய்தாலும், ஐடி துறையின் ஸ்திரமற்ற தன்மையைப் புரிந்து கொண்டு பல்வேறு முதலீடுகள் செய்ய துவங்கினார்கள். அதிகரித்து வரும் முதலீடுகள் கட்டுமானதுறை, பங்கு வர்த்தகம், ஊக வர்த்தகம், போன்றவற்றில் பணப்புழக்கத்தை அதிகப்படுத்தின.
    அதிகப் பணப்புழக்கம் ஏற்படும் போது இத்தகைய விலை உயர்வு தவிர்க்க முடியாது.
    கட்டுமானத்துறையில் ஏற்படும் மாற்றங்கள் கத்தரிக்காய் விலையையும் பாதிக்கக் கூடிய ஒரு சங்கிலித் தொடர் போன்ற பொருளாதார கட்டமைப்பும் ஒரு முக்கியமான காரணமே.
    நன்றி!

    பதிலளிநீக்கு