26 மார்ச், 2010

நீச்சல் கற்றுக் கொள்

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், என்.ஐ.எஸ். தகுதிபெற்ற அனுபவம் வாய்ந்த நீச்சல் பயிற்றுநர்களை கொண்டு சென்னையில் கீழ்க்கண்ட நீச்சல் குளங்களில் ‘நீச்சல் கற்றுக் கொள்' வகுப்பினை நடத்தி வருகிறது.

1. அண்ணா நீச்சல்குளம், மெரீனா

2. வேளச்சேரி நீச்சல்குளம்

3. ஷெனாய் நகர் நீச்சல்குளம்


'நீச்சல் கற்றுக்கொள்' தினமும் ஒருமணிநேர வகுப்பாக காலை 8.00 மணி முதல் இரவு 8.00 மணிவரை 12 நாட்கள் கொண்ட தொகுப்பாக நடத்தப்பட்டு வருகிறது. மேலும் விவரங்களுக்கு நீச்சல்குள பொறுப்பாளர்களை அணுகலாம்.

அண்ணா நீச்சல் குளம். போன் : 2901250. கைப்பேசி : 9940341476

வேளச்சேரி நீச்சல் குளம். போன் : 22354381. கைப்பேசி : 9940341473

ஷெனாய் நகர் நீச்சல் குளம். போன் : 26474794. கைப்பேசி : 9940341480


முந்தையப் பதிவின் பின்னூட்டத்தில் உலக பிரபல எழுத்தாளர் ரைட்டர் சி.எஸ்.கே. அவர்கள் வலைப்பதிவுகளில் சிட்டிசன் ஜர்னலிசம் இல்லவே இல்லையென்றும், குறிப்பாக அதுகுறித்துப் பேச எனக்கு என்ன தகுதி இருக்கிறது என்று கேட்டிருப்பதாலும் சமூகநலன் நோக்கில் இப்பதிவை இட்டே ஆகவேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது!


:-(

14 கருத்துகள்:

  1. ப்ளாக்கரில் பெரும்பேர் வாங்கியவர்கள் பலர் சிட்டிசன் ஜெர்னலிசம் செய்கிறவர்கள் தான் என்பது என் கருத்து!

    பதிலளிநீக்கு
  2. நான் சொல்வது உலகளாவிய ப்ளாக்கர்ஸ் வரிசையில் அண்ணன் சி.எஸ்.கே தமிழோடு நின்றுவிடப்போகிறார்!

    பதிலளிநீக்கு
  3. யுவகிருஷ்ணா, எளிதில் உங்களை கோப்படச் செய்ய முடியும் எனத் தெரிகிறது.

    பதிலளிநீக்கு
  4. சமூகநலன் ஓகே, ஆனா போட்டிருக்கற படத்தப் பார்த்தா அப்பிடி தெரியலியே... ஒரு சின்னப் பையன் நீஞ்சற மாதிரி போட்டிருக்கலாமே ;)

    பதிலளிநீக்கு
  5. மூன்றே மூன்று நீச்சல் குளங்கள் முழு சென்னையின் நீச்சல் பயிற்சியை பூர்த்தி செய்ய முடியுமா?

    சுரக்காய் குடுவை உதவி மூலம் விவசாய கிணற்றில் நீச்சல் கத்துக்கொள்ளும் அனுபவம் எதற்கும் ஈடாகாது.

    பதிலளிநீக்கு
  6. லக்கி உங்களுக்கு வர வர நகைச்சுவை உணர்வு குறைந்து விட்டது.உலக பிரபல எழுத்தாளர் - இதற்கு முன்னால் அகில என்ற வார்த்தை விடுப்பட்டு போனதால் வன்மையாக கண்டித்து இந்த இடத்தை காலி செய்கிறேன்

    பதிலளிநீக்கு
  7. போட்டோவை தவிர வேறேதும் தெரியவில்லை... கடைசியில் ஏக்கமே மிஞ்சியது...

    Mind voice:
    ஏக்கம் நரகம்
    அப்படின்னு கவித எழுதலாமா?

    பதிலளிநீக்கு
  8. இது போன பதிவுக்கான பின்னூட்டம் தான். இருந்தாலும் CSK அவர்களை விடாமல் தொடர்ந்து அடிப்பதால் இங்கும் இடுகிறேன். சற்று கூடுதல் விஷயங்களுடன்.

    லக்கி..என்ன இப்போ? உங்களுக்கு கமெண்ட் போட்ட 57 பேரில் ஒருத்தர் "ஆமோதிக்கிறேன்..வழிமொழிகிறேன்..தெளிவான பகிர்வு" அப்படின்னு போடாமல் தெரியாதனமா சற்று விவாதித்து விட்டார். அவ்ளோ தானே? மாற்று கருத்து என்று ஒன்று இருக்கவே கூடாதா? விவாதிக்கப்பட்ட பொருளுக்குள் நான் போகவில்லை. உங்கள் விவாதிக்கும் முறை நாகரீகமாக இல்லை, ஒருவரை சிறுமைப்படுத்தும் பகடி தூக்கலாக இருக்கிறது என்பதே இந்த எந்த லேபிளும் (எழுத்தாளர், பதிவர்) இல்லாத சாதாரண வாசகனின் கருத்து. தெரியாத்தனமா அவர் தனக்கு பிடித்த 5 பதிவர் பேரை உதாரணமா சொன்னால், அதை ட்விட்டரிலும் மாறி மாறி கேலி செய்கிறீர்கள். மிக மிக தாழ்வான அப்ப்ரோச் நண்பரே..
    மற்றும், what's with the crap about citizen journalism ? ஏதோ அதை செய்யாட்டி குற்றம் என்கிறீர்கள்? உலகிலேயே நிஜ பதிவர் ஒருவரை பற்றி திரைப்படம் வந்திருக்கு என்றால் அது ஜூலி அண்ட் ஜூலியா (மெரில் ஸ்ட்ரீப் 2008 ஆஸ்காருக்கு பரிந்துரைக்கப்பட்ட படம்). அந்த ஜூலியா யாரும் தெரியுமா? ஒரு சாதாரண சமையல் பதிவர்.

    ஒன்று பார்த்து விட்டேன். உங்களை தண்டோரா போன்று ஒருவர் அடாவடியாக தாக்கினால் பம்மி விடுகிறீர்கள். சற்று புதுசாக ஒருவர் நாகரீகமா எதிர்த்து சொன்னால் ரவுண்டு கட்டி அடிக்கிறீர்கள்.

    கடைசியாக, எனக்கு CSK கருப்பா, சிவப்பா, என்ன எழுதியிருக்கிறார் என்று எதுவும் தெரியாது. இது அவர் கருத்துக்கு சப்போர்ட் இல்லை. ரோட்டில் ஒருவரை போட்டு அடிக்கையில் என்ன எது என்று தெரியாமல் தடுக்க முனையும் ஒரு மனநிலையே இந்த பின்னூட்டம்.

    சண்டையை தடுக்கும் தைரியம் எனக்கு இருக்கிறது. இதை வெளியிடும் தைரியம் உங்களுக்கு இருக்கா என்று பார்க்கலாம்.

    பதிலளிநீக்கு
  9. நடராஜ்!

    இங்கும் அதே பின்னூட்டத்தை இட்டிருப்பதால் உங்களுக்கு இந்த விளக்கம்.

    சி.எஸ்.கே.வோடு வன்மமாக மோதுமளவுக்கு ஒன்றுமில்லை. இது அவ்வப்போது நடக்கும் ‘காமெடி' சீண்டல்தான். என்ன எப்போதும் ட்விட்டரில் நடக்கும். இப்போது வலைப்பூவில். அவர் என் கண்களுக்கு வ.வா.ச. தலைவர் கைப்புள்ள மாதிரியே தெரிவதால்தான் இந்த கசமுசா.

    தண்டோரா பற்றி சொல்லியிருக்கிறீர்கள். காமெடி என்னவென்றால் தண்டோராவை நான் எங்கும் தாக்கியதோ, கோபப்படுத்தியதோ இல்லை. அவராகவே அப்படி நினைத்துக் கொண்டு காற்றில் கத்தி சுழற்றினார். நீங்கள் வேண்டுமானால் பழைய பதிவுகளையோ, பின்னூட்டங்களையோ கிளறிப் பார்த்து தெரிந்து கொள்ளலாம். பின்னர் அவராகவே மீண்டும் நட்பினை தொடர தொடங்கினார். அவரோடு எனக்கு எப்போதும், எந்தப் பிரச்சினையுமில்லை. இன்னும் சொல்லப் போனால் பிரமிப்புதான் இருக்கிறது. படுமொக்கையாக வலையில் எழுதத் தொடங்கியவர் மிகக்குறுகிய காலத்தில் அபாரமான பிரத்யேக எழுத்துநடையை தனக்கு சொந்தமாக்கிக் கொண்டிருக்கிறார்.

    அப்புறம், யாரோடு சண்டையிடுவது, விவாதிப்பது என்று தேர்ந்தெடுப்பதெல்லாம் என்னுடைய பிரத்யேக சுதந்திரம் என்று நான் நினைக்கிறேன். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? :-)

    பதிலளிநீக்கு
  10. இலக்கியத்தில் நல்ல பரிச்சயம் இருக்கிறது லக்கி உங்களுக்கு !!:)):)):))

    பதிலளிநீக்கு
  11. நீச்சலடிப்பவருக்கு மல்லாக்கப் படுத்து நீச்சலடிக்கத் தெரியுமா என்று கேட்டு புகைப்படம் எடுத்து வெளியிடவும்.

    பதிலளிநீக்கு
  12. //படுமொக்கையாக வலையில் எழுதத் தொடங்கியவர் மிகக்குறுகிய காலத்தில் அபாரமான பிரத்யேக எழுத்துநடையை தனக்கு சொந்தமாக்கிக் கொண்டிருக்கிறார்.//

    எல்லாரும் அப்படித் தான் சொல்றாய்ங்க.. ஆனா தண்டோராவை அல்ல!

    பதிலளிநீக்கு
  13. அதே பிரத்யேக சுதந்திரத்தில் தான் நான் உங்களை சீண்டியதும் :)
    ஆமோதிக்கிறேன்..ஒத்துக்கொள்கிறேன்..நல்ல கருத்து சகா :))

    பதிலளிநீக்கு