29 மார்ச், 2010

வானிலை அதிகாரி விளக்கம்!

கடந்த அக்டோபர் மாதம் வானிலை ஆராய்ச்சி நிலையத்தின் அறிவிப்பினை கேட்டுவிட்டு ரெயின்கோட் போட்டு வந்து மழையே வராமல், கடுமையான வெயில் அடித்த ஒரு தினத்தில் எழுதிய பதிவு இது.

சென்னை வானிலை ஆய்வு நிலையத்தில் பணிபுரியும் அதிகாரியான திரு கே.வி.பாலசுப்பிரமணியம் அவர்கள் இப்பதிவினை வாசித்துவிட்டு, தனது விளக்கத்தினை நம்முடைய மின்மடல் முகவரிக்கு அனுப்பியிருக்கிறார்.

திரு. கே.வி.பி. அவர்களின் கடிதம் கீழே :


திரு யுவகிருஷ்ணா அவர்களுக்கு,

இது தங்களுடைய வானிலை ஆராய்ச்சிமையம் பற்றிய அக்டோபர் மாதம் பதிவு செய்துள்ள செய்தி பற்றிய மின்னஞ்சல், தாமதத்திற்கு மன்னிக்கவும், இடையில் நான் தங்களின் வலைப்பூவில் என்னுடைய கருத்துக்களைப் ஆங்கிலத்தில் பதிவு செய்தேன், ஆனால் அது உங்கள் வலைப்பூவில் பதிவாகவில்லை,  எனவே இந்த மின்னஞ்சல்.

என் பெயர் கு,வை, பாலசுப்பிரமணியன், சென்னை நுங்கம்பாக்கம் மண்டல வானிலை ஆய்வு மையத்தில் உதவி வானிலையாளராகப் பணிபுரிகிறேன், முனைவர் எஸ்.ஆர்.இரமணன் வானிலை முன்னறிவிப்பு தொடர்பான பணிகளின் அதிகார பூர்வ ஊடகத் தொடர்பாளர். அவர் விடுமுறையில் சென்றாலோ அல்லது பணி நிமித்தம் வெளியில் சென்றாலோ அவருக்குப் பதிலாக முனைவர் எஸ், பாலச்சந்திரன் என்பவரும் திரு ஈ.குழந்தைவேலு என்பவரும் ஊடகத் தொடர்பாளர்களாகப் பணியாற்றுவர்.

வானிலை ஆய்வு மையம் பற்றிய தங்கள் கருத்துக்கள் தவறானவை. பல்வேறு விதமான தலைப்புக்கள் பற்றிய தங்களின் வலைப்பதிவுகளைப் பார்க்கும்போது தாங்கள் அறிவியல் படித்தவராக் இருப்பீர்கள் என எண்ணுகிறேன்.

வானிலை என்பது வளி மண்டலம் எவ்வாறு உள்ளது என்பதைத் தெரிவிக்கும் சொல்லாகும், அதாவது பூமியை ஓட்டியுள்ள காற்று அல்லது வளிமண்டலம் வெப்பமாக உள்ளதா? குளிராக உள்ளதா? ஈரமாக அல்லது உலர்ந்து உள்ளதா? காற்றே இல்லாமல் அமைதியாக உள்ளதா? அல்லது புயல் வீசுகிறதா? வானம் மேகமற்று உள்ளதா அல்லது மேகமூட்டமாக உள்ளதா? என்பதனையே வானிலை என்கிறோம்.

வெதர் என்ற ஆங்கிலச் சொல்லுக்கு ‘வானிலை மாற்றம். புயல். லேசான மழை. பெருந்துளி மழை.  துன்பங்களைச் சமாளித்தல். காற்றோடு கப்பலைச் செலுத்துதல்’  போன்ற பிற விளக்கங்களும் உள்ளன.

‘வானிலை. தனி இடத் தனிவேளை வளிமண்டல நிலை. ஈர்ம்பதக்  குளிர்வாடை நிலை. காற்றின் திசை. காற்று விசையாலையின்  பாய்த்திரையின் சாய்கோண அளவு’ என்று பல விதமான பொருள் அளிக்கப்பட்டுள்ளது,

எனவே வானிலை என்பதனை ஓரு குறிப்பிட்ட இடத்தின் ஓரு குறிப்பிட்ட நேரத்தில் உள்ள வானிலைக்கூறுகளின் தொகுப்பு எனலாம். எடுத்துக்காட்டாக சென்னையில் காலை எட்டு மணிக்கு நிலவும் வெப்பநிலை, ஈரப்பதம், காற்றழுத்தம், காற்றின் திசைவேகம், பார்வைத்தூரம், மேகங்களின் வகைகள், அளவு, உயரம் ஆகியவை பற்றிய தகவல்கள் மற்றும் அந்நேரத்தில் மழை, இடி, பனி ஆகியவை உள்ளனவா? போன்ற வானிலைக் கூறுகளின் தொகுப்பே சென்னையின் அப்போதைய வானிலையாகும்.

எனவே வானிலையை அளவீட்டு முறையில் [Quantitative method] சொல்வதானால் இதனை பத்திற்கும் மேற்பட்ட மாறிகளால் [Variables] குறிப்பிடவேண்டும். இந்தியா முழுவதும் 559 தரைநிலைக் கண்காணிப்புக்கூடங்களிலிருந்து பெறப்படும் வானிலைத் தகவல்களை non linear equationஆக மாற்றி, கணினியில் கொடுத்து அடுத்தநாள் வானிலையின் சில கூறுகள் எவ்வாறு இருக்கும் என்று விடைகாண முயன்றால் தற்போது வானிலை ஆய்வு மையத்திற்கு வழங்கப்பட்டுள்ள கணினி வகைகள் 3 முதல் 12 மணி நேரத்தில் விடையளிக்கும். இவ்வகை கணினி வழி வானிலை முன் எச்செரிக்கைகளும் தவறாக இருக்கக்கூடும்.

இது தங்களின் குற்றச்சாட்டிற்கு ஓரு சிறிய விளக்கமே.  தாங்கள் சென்னையில் வசிப்பவராக இருந்தால் எங்கள் அலுவலகத்திற்கு ஓரு நாள் வாருங்கள், மேலும் அதிக விளக்கங்ளைப் பெறலாம்.

இப்படிக்கு தங்கள்
கே.வி.பாலசுப்பிரமணியன்
M.Sc  (Physics), M.A (Tami), M.A(History,) M. Phil
Assistant Meteorologist,
Regional Meteorological Centre,
Chennai – 600006



கே.வி.பி. சார்!

நான் அறிவியல் படித்தவனல்ல. ஒரு சராசரி மனிதனுக்கு வானிலை ஆய்வு மையம் மீது இருக்கும் அசட்டு கோபமே அப்பதிவில் வெளிபட்டது. அது எவ்வளவு அபத்தமானது என்பதை தங்களது கடிதம் மூலமாக உணர்கிறேன். மத்திய அரசுப் பணிகளில் பணிபுரியும் அதிகாரிகள் இதுபோன்ற அசட்டுக் கோபங்களை கூட சீரியஸாக எடுத்துக் கொண்டு விளக்கம் அளிப்பது என்பது அரசுத்துறை மீதான என்னுடைய மதிப்பினையும், நம்பகத்தன்மையையும்  மேலும் மேலும் கூட்டிக்கொண்டே செல்கிறது. தங்களைப் போன்ற அதிகாரிகளால் தேசம் பெருமையடையும். நன்றி!

சென்னையில்தான் வசிக்கிறேன். வாய்ப்பு கிடைக்கும்போது தங்களை அலுவலகத்தில் வந்து சந்திக்கிறேன்.

அன்புடன்
யுவகிருஷ்ணா

24 கருத்துகள்:

  1. அவ‌ர‌து விள‌க்க‌த்தைப் ப‌டித்த‌போது என‌க்கு தோன்றிய‌ அதே விச‌ய‌ங்க‌ளை அழ‌காக‌ உங்க‌ள் ப‌திலில் சொல்லியிருக்கிறீர்க‌ள் ல‌க்கி. பாராட்டுக‌ள், விம‌ர்ச‌ன‌த்தை த‌வ‌றாக‌ எடுத்துக்கொள்ளாம‌ல் விள‌க்க‌ம் கொடுத்த‌ அவ‌ருக்கும், அத‌ற்கான‌ ப‌திலுக்காக‌ உங்க‌ளுக்கும்.

    பதிலளிநீக்கு
  2. அரசு அலுவலர்கள் மீதான மதிப்பு இன்னும் தொங்கிக்கொண்டிருப்பதற்கு இதுபோன்ற ஒரு சிலரே காரணம்.

    பகிர்ந்தமைக்கு நன்றி கிருஷ்ணா.

    பதிலளிநீக்கு
  3. அவரின் கோபம் புரிகிறது, ஆனால் அறிவியல் வெகுவாக முன்னேறிய காலத்தில் இன்னும் குத்துமதிப்பாக வானிலை அறிவிப்பும் அதற்க்கு அறிவியலை துணைக்கு அழைப்பதும் சரியாக படவில்லை.

    மற்ற நாடுகள் இதில் வேகமாக முன்னேறி விட்டன, ஒருமுறை மசாச்சு செட்டில் வானிலை பார்த்தேன். மாலை நாலுமணிக்கு பனி பெய்யும் இருவது நிமிடம் என்றார்கள். ஆச்சரியமாய் இருந்தாலும் நம்மூர் டிவி போலவா ? என்ற கேள்வியுடன் குறிப்பெடுத்து வைத்தேன், மிக சரியாக மாலை நான்கு மணிக்கு இருவது நிமிடம் பனி கொட்டியது.

    எனவே காரணங்களை தேடுவதை விட்டு வானிலை ஆராய்ச்சி துறையை நவீனமய மாக்குவதே தேவை.
    ஒருநாள் மழை பெய்யும் என்று அறிவித்து நடக்க வில்லை என்றல் மக்கள் நிச்சயம் குறை சொல்ல மாட்டார்கள்.
    அது வழக்க மாகும் போது தான், நம்பிக்கை இழக்கிறார்கள்.

    விளக்கத்தை வைத்துக்கொண்டு என்ன செய்வது ?

    இதற்கென்று ஒரு துறை வைத்து அறிவிப்பு வைத்து ஆனால் அவர்கள் அறிவிப்பில் ஒரு நன்மையும் சராசரி குடிமகனுக்கு இல்லை என்றல் அது நேர மற்றும் உழைப்பு விரயம் அன்றி வேறென்ன ?

    இந்த விளக்கத்திற்கு பதில், இந்த துறை வேறு எந்த வகையில் எல்லாம் மக்களுக்கு உதவியாக இருக்கிறது என்று விளக்கினால் நிச்சயம் மகிழ்வாக இருக்கும்

    பதிலளிநீக்கு
  4. பெயரில்லா2:56 PM, மார்ச் 29, 2010

    வானிலை ஆராய்ச்சிமையத்தின் முன்னறிவிப்பைப் பற்றி பல நகைச்சுவைத் துணுக்குகள் பல பத்திரிகைகளில் வருவது புதிதல்ல.
    தங்கள் வலைத்தளத்தின் வீச்சை (reach ஐ) அறிந்து, அதன் மூலம் பலருக்கும் விளக்கமளித்த அரசு அதிகாரிக்கு நன்றி/வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  5. surprised. But good move my கே.வி.பாலசுப்பிரமணியன் sir.
    when you meet pls ask him to upgrade those computers.
    hope he did not read your post in one of those computers :-)

    பதிலளிநீக்கு
  6. பெயரில்லா3:39 PM, மார்ச் 29, 2010

    Shri.K.V.B has rightly pointed out the reasons. However one has to accept that prediction of weather is NOT an easy job, that too prediction of weather on tropical regions is a Herculian task; because of its variability in space and time. Now a days people's awarness over weather and expectation on precise prediction is more. That is why one gets annoyed when the prediction goes wrong.
    Keep it up. Keep your science temperament vibrant.

    பதிலளிநீக்கு
  7. இன்றும் வானிலை அறிக்கை சரியாக வர வைக்க கம்ப்யுடர் (Cray Super Computer Series III) கொடுக்காத அமெரிக்காவெல்லாம் ஒரு நல்ல நாடா? உளவுக்கும், ஆயுதம் தயாரிக்கவும் இந்தியாவில் பயன் படுத்துவோம் என்று நம்புவது அவர்களின் முட்டாள்தனம்.

    பதிலளிநீக்கு
  8. Dear Yuavakrishana,

    I am surprised at the speed with which your friends are responding the blog. Especially I would like to respond to the comments of the Simple Man. But I will do that when I go home. My office time is meant for office is it not?

    kvb

    பதிலளிநீக்கு
  9. Mr. K. V. B.
    weather forecast in US is almost accurate then why not in India?
    Is it something to do with the ocean/atmospheric modelling? or the uncertainty due to the tropical region? jus a doubt..hope you will read it.. sorry I could not type in Tamil

    பதிலளிநீக்கு
  10. Dear K.V.B Sir,
    Please answer for 'SureshDurairajan' cmd as well.

    பதிலளிநீக்கு
  11. அவர் விளக்கமும் சூப்பர். உங்கள் பதில் விளக்கமும் சூப்பர்.

    பதிலளிநீக்கு
  12. எங்கூர்க்காரரா இருந்தும் இம்புட்டு அப்பாவியா இருக்காரே! ஹும்!

    பதிலளிநீக்கு
  13. while printing media and self styled intelectuals ( tamil writers) losing credibility, BLOGs like you, getting more reach and credibility..

    Hats off

    பதிலளிநீக்கு
  14. உங்களை போலவே , எனக்கும் ஆங்கிலம் தெரியாது.. என்றாலும், நான் அற்றவ கோளாறில் ஆங்கிலத்தில் உளரியதை தமிழில் சொல்கிறேன்

    ஆச்சு ஊடகங்கலும் , சில தமிழ் ( ? ! ) எழுத்தாளர்களும், அறிவு( !! ? ) ஜீவிகலும், சாமியார் பிரச்சினை மூலம் நம்பகத்தன்மை இழந்து விட்டனர்...

    தங்கள் வலிபதிவின் வீச்சு , நம்பகத்தன்மை , நமிக்கை ஊட்டுவதாக உள்ளது...

    பெருமையும் படுகிறேன்.. பொறாமையும் படுகிறேன் ,,
    வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  15. பெயரில்லா11:11 AM, மார்ச் 30, 2010

    Rain,rain go away,
    come again another day !!!!!

    பதிலளிநீக்கு
  16. பெயரில்லா11:08 PM, மார்ச் 30, 2010

    Suresh Durairajan SAid:
    அவரின் கோபம் புரிகிறது, ஆனால் அறிவியல் வெகுவாக முன்னேறிய காலத்தில் இன்னும் குத்துமதிப்பாக வானிலை அறிவிப்பும் அதற்க்கு அறிவியலை துணைக்கு அழைப்பதும் சரியாக படவில்லை.

    மற்ற நாடுகள் இதில் வேகமாக முன்னேறி விட்டன, ஒருமுறை மசாச்சு செட்டில் வானிலை பார்த்தேன். மாலை நாலுமணிக்கு பனி பெய்யும் இருவது நிமிடம் என்றார்கள். ஆச்சரியமாய் இருந்தாலும் நம்மூர் டிவி போலவா ? என்ற கேள்வியுடன் குறிப்பெடுத்து வைத்தேன், மிக சரியாக மாலை நான்கு மணிக்கு இருவது நிமிடம் பனி கொட்டியது.''''

    ----------------------------------
    Here are some of the fields where Met service is essential
    [1] Aviation: Of all the emergencies in aviation WEATHER is the prime emergency. All aircrafts have to land and / or to take off only on HEAD wind. This surface wind, surface pressure, visibility,temperature etc are intimated every half an hour to Air Traffic Control tower[ATC]for smooth flow of air traffic.
    Further upper winds and its velocity are very important for aviation that is supplied by Met offices. Similarly reports on Clear Air Turbulence(CAT),reports on wind
    shear,cyclonic circulation,reports on towering cumulus on the flight path, icing level,Run way visibility to help visual landing / take off, etc are constantly disseminated to airmen
    [2] Agriculture: Rainfall summary at district level for farmers to plan agricultural operations, "adverse weather" advisories, Drought / flood monitoring,[ho! but this apex body is not even a member in any of the inter state water dispute related tribunals]are disseminated.
    Tropical weather forecasting is a tedious process. Weather in higher latitudes is comparatively stable and as some body pointed out,weather forecast may be accurate in US. Because of comparatively lesser varying meteorological parameters in space and time in US than in India or in any tropical regions. During the tracking of storm 'KATHARINA' US utilised the expertise in India.
    Numerical Weather Prediction is gaining ground now and most the models like WRF, MM5, GFS are made operational for local weather conditions / situation. However the success will be obtained stage by stage only, that is after assimilation of all possible weather events / parameters.
    Corporate giants are thinking of private weather forecast, since Indian economy is mostly depending upon rainfall. The new "CLOUD COMPUTING' technology will be a handy tool for the private players by which even the Cray super computers can be networked for forecast.
    Then wonders will happen in India too

    பதிலளிநீக்கு
  17. It sounds like a lame excuse. Upgrade your systems and process to the world standard.
    I live in Denver, where the common saying is, "You dont like the weather", "just wait for an hour". Its that variable on a daily basis, and I am amazed at the accuracy at which the local news station can predict weather upto the hour. They will say the temperature will be around 70 degrees around 2pm, and the thermometer will exactly around 70s. Last wednesday they said, the snow showers will start around 3.30pm, accelerate to reach a high reach snow shower resulting in 9 - 12 inches snow in Arvada (my town), and that exactly happened. And they can predict exact variances in the cities, which are like Mambalam, Saidapet, Kodambakkam (not just Chennai I mean).

    So Thanks for the response, but he should really update his knowledge about the availability of better prediction systems around the world. Its unfortunate that we are in 20th Century still.

    பதிலளிநீக்கு
  18. இவரு சும்மா கதை விடறாரு. www.weather.com வெப்சைட்ல அமெரிக்கன் weather எப்படி அவங்களால துல்லியமா கணிக்க முடியுது ? நான் அமெரிக்காவுல pittssburgh la 2 வருஷமா இருக்கேன், இங்கே இவங்க கணிப்பு கிட்ட தட்ட 90% சரியா இருக்கும்.

    பதிலளிநீக்கு
  19. This is my response to the comments of Suresh Durai Rajan and another gentlemen about weather predictoins in USA. In USA there are a number of (more than 80 I think)Doppler Weather radar. These radars are fixed as well as mobile. They are all maintained by private weather watchers who are freelancers and work on payment.In India there are only 5 such radars. No private weather watchers here, becasue it involves lot of money. These doppler weather radars help in predicting local weather.But there are occassions in which their forecast failed.The damages due to Katerina storm is unprecedented. The people in USA are having more knowledge about weather. However in India that is not the case. Our media uses the name PUYAL CHINNAM for trough of low pressure, Low Pressure area, Depression, Deep depression. Cyclone. Though Meteorological Department is a very old department functioning from 1875, Meteorology is taught as a subject, that too in PG level only in two universities in India.
    K.V. Balasubramanian

    பதிலளிநீக்கு
  20. Dear KVB Sir,

    I suggest you to open a blog and write your views, process used for prediction etc as I don't think you can detail everything in this one single post's comments section.

    பதிலளிநீக்கு
  21. லக்கி!
    கலைஞர் தொலைக்காட்சியில் காலை 8:15 மணிக்கு ஒளிபரப்பாகும் 'சந்தித்த வேளை'யில் இன்று (9/4/10) கே.வி.பாலசுப்பிரமணியனுடன் ரமேஷ் பிரபா நேர்முகம். மனிதர் சங்கப்பாடல்கள் முதல் நாளைய தொழில்நுட்பம் வரை உதாரணம் காட்டி அற்புதமாகப் பேசினார். (சுனாமியின் போது ஐரோப்பாவைக் காட்டிலும் இரண்டு மணி நேரம் முன்னதாகவே நமக்கு தகவல் தெரிந்தது, ரிக்டர் அளவுகோலில் 0.6 என்பது 60% அதிகம் என) செறிவுடன் சென்றது நேர்முகம்.
    இதைப் பார்த்து விட்டு தசாவதாரம் மற்றுமொருமுறை பார்க்கனும் என்று நினைத்துக்கொண்டால் புதனன்று 'சித்திரை முதல்நாளை' முன்னிட்டு 'தசாவதாரம்'! கலைஞரின் அருள் :-) பதிவர் சந்திப்பில் பார்ப்போம்!

    அன்புடன்
    வெங்கட்ரமணன்

    பதிலளிநீக்கு
  22. Dear KVB,

    Another concern we have is the precision of your report. We have heard a lot of times: "தமிழகத்தில் ஆங்காங்கே மழை பெய்யும்”. This is not going to help any one, because Tamilnadu is 1,30,000 sq.km in area. We would expect a weather report in district level precision. Why is this not possible?

    - Karthik

    பதிலளிநீக்கு