30 மார்ச், 2010

சங்கம்!

மேற்படி வருத்தமில்லா வாலிபர் சங்கத்துக்கு ஆதரவாக கூட்டத்தில் பேசியவன் என்ற முறையில் இப்போது வருந்துகிறேன். உண்மைத்தமிழன் என்ற பதிவர் தற்போது எழுதியிருக்கும் பதிவின் பாணியை வைத்துப் பார்த்தால் சங்கத்தை வைத்து உப்புமா வாங்கி சாப்பிடலாம் என்றுதான் தோன்றுகிறது.

நான் ஆதரித்துப் பேசிய குழுமம் வேறு. உருவாகப் போகும் குழுமம் வேறு என்று தெரிகிறது. அப்பதிவு மூலமாக வெளிப்பட்டிருக்கும் வக்கிர சிந்தனைகள் மிக மோசமானது. இப்படிப்பட்ட ஆட்களின் முன்முயற்சியால் ஏற்படுத்தப்படும் சங்கம் அல்லது குழுமம் என்பதின் செயல்பாடு எப்படியிருக்கும் என்பதை ஜோசியம் பார்க்காமலேயே உணர்ந்துவிடலாம்.

தனிப்பட்ட முறையில் நண்பர்கள் என்ற முறையில் பேசிக்கொள்ளும் பர்சனல் விஷயங்களை கூட பதிவுகளுக்கு எடுத்துவந்து பொதுவிவாதமாக எடுத்துச் செல்லும் போக்கு மிக மிக மோசமானது என்பதை மட்டும் இப்போதைக்கு சொல்லிக் கொள்கிறேன். அதிலும் ஒரு பதிவரின் பணிக்கு வேட்டு வைக்கும் எண்ணத்தோடு விஷமத்தனமான முறையில் அந்த கடைசி பத்திகள் எழுதப்பட்டிருக்கிறது.

இதன் காரணமாக எதிர்காலத்தில் பதிவர் சந்திப்புகளில் ஒருவருக்கொருவர் மனம் விட்டு பேசிக்கொள்வது கூட தடைபடும். சந்திப்புகளில் கலந்துகொள்ளவே பலரும் யோசிப்பார்கள்.

ஆரம்பிப்பதற்கு முன்பாகவே இவ்வளவு ஆடுபவர்கள், ஆரம்பித்த பின்பு எவ்வளவு ஆடுவார்களோ? :-(

சங்கம், கிங்கம் என்றில்லாமல் வழக்கம்போல பதிவராகவே செயல்பட விரும்புகிறேன். கூட்டத்தில் ‘சங்கம் தேவை' என்று நான் கொடுத்த ஆதரவை, இப்பதிவின் மூலமாக வாபஸ் பெற்றுக் கொள்கிறேன் என்று மனவருத்தத்தோடு என்னை கூட்டத்துக்கு அழைத்து கருத்து சொல்லச் சொன்ன மற்ற நண்பர்களுக்கு சொல்லிக் கொள்கிறேன்.

22 கருத்துகள்:

  1. லக்கி,

    அவசரப்பட வேண்டாம். வருத்தங்களைப் பேசி நீக்கிவிடலாம். நீங்கள் அவசியம் குழுமத்தில் இருக்க வேண்டும்.

    ஸ்ரீ....

    பதிலளிநீக்கு
  2. என்னாங்க இது? இப்பிடி இவ்வளவு மோசமா போவுது விஷயம்?
    :(

    பதிலளிநீக்கு
  3. எல்லோரும் சில வருத்தங்கள் இருக்கத்தான் செய்யும். சங்கம் என்பது வேறு தனிமனிதர் பதிவு என்பது வேறு லக்கி. இரண்டையும் இணைக்க வேண்டாம் ப்ளீஸ்.

    பதிலளிநீக்கு
  4. பெயரில்லா1:37 PM, மார்ச் 30, 2010

    அவசரப்பட வருத்தங்கள் என்னாங்க ??

    சில தனிமனிதர்களை மோசமா பேசி நீக்கிவிடலாம் !!!

    பதிலளிநீக்கு
  5. லக்கி,

    வேறு உருப்படியான வேலை செய்ய முடியவில்லை என்றால்... சங்கம் வைக்கலாம்...

    தமிழ் வலைபதிவு தொடர்பாக... தொடங்க காலத்தில் அதிக பங்களிப்பை கொடுத்த பாலபாரதி, மா.சிவகுமார் போன்றவர்கள் இதனை சொல்லி இருந்தால் நியாயமாக இருக்கும்...

    உண்மைத் தமிழன் என சொல்லி கொள்ளும்... ஜெ... அடிவருடி, பார்ப்பன அடிவருடிகள் எல்லாம் சங்கம் வைத்தால்... உருபடுமா என்பதே கேள்வி?

    வேண்டுமானால்... உண்மைத் தமிழன்... ஜெயலலிதா பக்த ஜன சங்கம் அல்லது பார்ப்பனர்களுக்கு பல்லக்கு தூக்கும் வலைபதிவு சங்கம் என சொல்லி விட்டு சங்கம் வைத்தால்... அவரோது ஒத்தவர்கள் சங்கத்தில் சேர வாய்ப்புண்டு...

    உங்கள் பணிகளை பாருங்கள்...

    உண்மைத் தமிழன் என சொல்லி கொள்ளும் கன்னடர் நண்பர்... ஜெ... பக்த ஜன சங்கம் அமைக்க நமது வாழ்த்துக்களை தெரிவிப்போம்...

    பதிலளிநீக்கு
  6. நல்ல பதிவு. நன்றி பத்ரி

    பதிலளிநீக்கு
  7. //இதன் காரணமாக எதிர்காலத்தில் பதிவர் சந்திப்புகளில் ஒருவருக்கொருவர் மனம் விட்டு பேசிக்கொள்வது கூட தடைபடும். சந்திப்புகளில் கலந்துகொள்ளவே பலரும் யோசிப்பார்கள்.
    //

    உண்மை தான். அந்தப் பதிவு படிக்கும்போது இது தான் என் மனதிலும் தோன்றியது :-(

    பதிலளிநீக்கு
  8. ஆளப்பிறந்தவன் - ஆத்திரப்பட மாட்டேன்!..?

    பதிலளிநீக்கு
  9. கோயிஞ்சாமி சார்! :-(

    மன்னிச்சிடுங்க. இனிமேலாவது உருப்படறேன்!

    பதிலளிநீக்கு
  10. ஒரு ஓட்டு போச்சே..

    நான் தலைவர் அல்லது பொருளாலர் பதிவுக்கு நிக்கலாம்னு இருக்கேன் சகா

    பதிலளிநீக்கு
  11. //உண்மைத் தமிழன் என சொல்லி கொள்ளும் கன்னடர் நண்பர்... ஜெ... பக்த ஜன சங்கம் அமைக்க நமது வாழ்த்துக்களை தெரிவிப்போம்..//

    சம்பந்தமில்லாமல் ஈரோடும்,சமூக நீதிகாத்த வீராங்கனை” டைட்டிலும் நினைவுக்கு வருகிறது..

    பதிலளிநீக்கு
  12. //
    கார்க்கி said...
    ஒரு ஓட்டு போச்சே..

    நான் தலைவர் அல்லது பொருளாலர் பதிவுக்கு நிக்கலாம்னு இருக்கேன் சகா
    //

    த‌ல‌ (சாரி அப்ப‌டி கூப்டா உங்க‌ளுக்கு பிடிக்காதா?)... தேர்த‌ல்ல‌ நிக்குற‌து இருக்க‌ட்டும், முத‌ல்ல‌ பொருளாள‌ர்க்கு ஸ்பெல்லிங் க‌ரெக்டா எழுதுங்க‌... ஹி..ஹி..

    பதிலளிநீக்கு
  13. //
    சங்கம், கிங்கம் என்றில்லாமல் வழக்கம்போல பதிவராகவே செயல்பட விரும்புகிறேன்.
    //

    பாருங்க‌ இது உங்க‌ முடிவுதான்.. அப்பாலிக்கா ச‌ங்க‌த்துல‌ இல்லைன்ற‌துக்காக‌ நான் வ‌ந்து நெக‌ட்டிவ் ஓட்டு போட்டா என்னை திட்ட‌க்கூடாது...

    பதிலளிநீக்கு
  14. கார்க்கி, நீ பொருளாள‌ர் ப‌த‌விக்கே நில்லு... த‌லைவ‌ர் ப‌த‌விக்கு நான் நிக்குறேன். ந‌ம்ம‌ ரெண்டு பேரும் கூட்ட‌ணி, டீலா / நோ டீலா?

    பதிலளிநீக்கு
  15. //
    பார்வையாளன் said...
    I am happy for not attending that meeting ....
    //

    அது எப்ப‌டிய்யா நான் நென‌க்குற‌த‌ நீ எழுதுற‌? டெலிப‌தியா?

    பதிலளிநீக்கு
  16. //கார்க்கி, நீ பொருளாள‌ர் ப‌த‌விக்கே நில்லு... த‌லைவ‌ர் ப‌த‌விக்கு நான் நிக்குறேன். ந‌ம்ம‌ ரெண்டு பேரும் கூட்ட‌ணி, டீலா / நோ டீலா? //
    ஒரு ஓட்டுக்கு 1000 ரூவான்னா நான் 5 ஓட்டு போட ரெடி :-))

    பதிலளிநீக்கு
  17. lucky, ponnaagaram vetri kuriththu enthap pathivum illaiyaa?

    பதிலளிநீக்கு
  18. பெயரில்லா12:12 PM, மார்ச் 31, 2010

    @மணிஜீ
    //சம்பந்தமில்லாமல் ஈரோடும்,சமூக நீதிகாத்த வீராங்கனை” டைட்டிலும் நினைவுக்கு வருகிறது.//

    இது என்னங்க புது கதையா இருக்கு ?யாரந்த வீராங்கனை ?

    பதிலளிநீக்கு
  19. சங்கத்தின் நோக்கமாக உண்மைத்தமிழன் எழுதியிருக்கும் பதிவு மிகுந்த சோர்வைத்தருகிறது.

    ஆணியே புடுங்க வேண்டாம் என்றுதான் தோன்றுகிறது.

    பதிலளிநீக்கு