2 ஜூலை, 2010

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு!

’செம்மொழி மாநாடு - முதல்வர் கொடுத்த பறக்கும் முத்தம்’ என்ற தலைப்பில் மாநாடு குறித்த என்னுடைய 6 பக்க கட்டுரை, இன்று கடைகளில் விற்பனையாகும் (08 ஜூலை 2010 இதழ்) 'புதிய தலைமுறை' வார இதழில் வெளிவந்திருக்கிறது.

அரசியல் கலக்காமல் ஊடகங்களில் மாநாடு குறித்து வெளிவந்திருக்கும் ஒரே கட்டுரை அனேகமாக இதுவாகத்தான் இருக்கும். மாநாட்டில் இரண்டே இரண்டு இடத்தில் திமுக கொடி காணப்பட்டது என்று சகபத்திரிகையாளர்கள் ஆச்சரியப்பட்டார்கள். அதில் ஒரு கொடி வைத்திருந்தவரை நம் புகைப்படக் கலைஞர் படம்பிடித்திருந்தார். அப்படம் லே-அவுட்டிலும் பயன்படுத்தப் பட்டிருக்கிறது.

வலைப்பதிவில் கட்டுரையை பகிர்ந்துகொள்ளும் வாய்ப்பில்லை. ஒருவாரம் கழித்து பதிந்தால் ‘ராஜீவ்காந்தி படுகொலை’ மாதிரி பழைய நியூஸ் ஆகிவிடும். எனவே படிக்க விரும்புபவர்கள் கடையில் வாங்கிப் படிக்கலாம்.

7 கருத்துகள்:

  1. யுவா நீ சொல்வது உண்மைதான், கொய்யலா மாநாட்டுக்கு, பேரணிக்கு வந்தவர்கள் பேருந்துகள் கார்களில் கட்டியிருந்த கொடி உன் கண்ணுக்கு தெரியாமல் போனது ஆச்சரியம்.

    பதிலளிநீக்கு
  2. படித்துவிட்டேன் லக்கி. நல்ல கட்டுரை வாழ்த்துகள் தோழர்.
    சமூகநீதியின் வெற்றி குறித்த திரு.ராஜா அவர்களின் செம்மொழி மாநாடு நிறைவு விழா பேச்சு
    பற்றியும் எழுதி இருக்கலாம். நெகிழ்ச்சியான, கண்ணீரை வரவழைத்த பேச்சு இல்லையா தோழர்.
    தரணி

    பதிலளிநீக்கு
  3. பெயரில்லா12:26 AM, ஜூலை 03, 2010

    i feel u r becoming the pro of kolaingar

    பதிலளிநீக்கு
  4. எல்லாம் சரிதான் . நீங்க எந்த கட்சி ! தே. மு .தி .க . கட்சியா .அல்லது பத்திரிகையாளர்கள் கட்சியா!
    உண்மையில் எது ?

    பதிலளிநீக்கு
  5. oru varam aanalum paravaillai dhayavu saithu blogil podavum

    பதிலளிநீக்கு
  6. பெயரில்லா11:31 PM, ஜூலை 03, 2010

    (08 ஜூலை 2010 இதழ்) 'புதிய தலைமுறை' வார இதழ் இங்கு கிடைக்கவில்லை அதனால் யுவகிருஷ்ணா வலைப்பதிவில் பார்க்க வழி !
    அது என்ன ‘ராஜீவ்காந்தி படுகொலை’ மாதிரி !அவர் புகழ் நிலைக்கட்டும் .

    பதிலளிநீக்கு