23 ஜூலை, 2010
சும்மா சுழட்டுங்க!
ராஜேந்திரன் ஒரு மருந்து நிறுவனத்தின் பிரதிநிதி. மாதத்துக்கு இருபது நாட்கள் வெளியூர் வேலை. செல்ல மகள் சுவாதியின் பிறந்தநாளுக்கு மட்டும் எப்படியாவது ஊருக்கு வந்துவிடுவார். நான்கு வருடங்களாக இது தவறியதே இல்லை.
அன்று சுவாதியின் ஐந்தாவது பிறந்தநாள். பணிநிமித்தமாக மும்பையில் இருக்கிறார் ராஜேந்திரன். தவிர்க்க இயலாத வேலை. நேரில்தான் செல்ல முடியாது, ஏதாவது அன்பளிப்பாவது குழந்தைக்கு அளித்து தனது அன்பை தெரிவிக்க வேண்டுமே என்று புத்திர பாசத்தால் தவித்துக் கொண்டிருந்தார்.
உடனிருந்த நண்பர் ஊக்கம் சொன்னார். “ஜஸ்ட் டயல் இருக்க கவலை எதற்கு?”“
ராஜேந்திரனுக்கு இப்படி ஒரு சேவை இருப்பது இப்போதுதான் தெரியும். பிறந்தநாள் அன்று காலை அப்பாவிடமிருந்து கேக்கும், பார்பீ பொம்மையும் சுவாதிக்கு சென்று அடைகிறது. தொலைபேசியில் தொடர்பு கொண்ட சுவாதி அப்பாவுக்கு தொடர்ச்சியான முத்தங்கள் மூலமாக தனது அன்பைத் தெரிவிக்கிறாள்.
ஏதோ விளம்பரப் படத்தின் ஸ்க்ரிப் என்று நினைத்து விடாதீர்கள். இதுதான் ஜஸ்ட் டயல்.
உங்களுக்கு ஏதேனும் தகவலோ, சேவையோ தேவைப்பட்டால் யோசிக்காமல் ஜஸ்ட் டயலுக்கு டயலலாம். எதைப்பற்றியதாகவும் உங்கள் சந்தேகம் இருக்கலாம். உங்கள் நகரின் சிறந்த பீட்ஸா கார்னரில் தொடங்கி, ஸ்பெஷலிஸ்ட் மருத்துவர் வரை எதை வேண்டுமானாலும், யாரை வேண்டுமானாலும் நொடிகளில் உங்களுக்கு பிடித்துத் தருகிறார்கள் ஜஸ்ட் டயல் நிறுவனத்தார்.
இந்தியாவின் நெம்பர் ஒன் தேடுதல் நிறுவனம். எப்போது வேண்டுமானாலும் தொடர்பு கொள்ளலாம். இவர்களுக்கு தூக்கமே கிடையாது. 240 நகரங்கள். இரண்டரை கோடி பயனாளிகள். மிகக்குறுகிய காலக்கட்டத்தில் எப்படி இந்த வெற்றி சாத்தியமானது?
வழக்கமான யெல்லோ பேஜ் புத்தகம் செய்யும் வேலையை எளிமை ஆக்கியிருக்கிறது ஜஸ்ட் டயல். தலையணை அளவில் நமக்கு வழங்கப்படும் அந்தப் புத்தகத்தைப் பிரித்து, நமக்கு தேவையான சேவையையோ, தகவலையோ தேடி கண்டறிவதற்குள் மூச்சு முட்டிவிடும். அதுவும் நாம் வசிக்கும் நகரத்தின் தகவல்கள் மட்டுமே அதில் இருக்கும். ஜஸ்ட் டயலோ இந்தியாவின் முக்கிய 240 நகரங்களின் கோடிக்கணக்கான தகவல்களை தனக்குள்ளே அடக்கியிருக்கிறது. தொலைபேசி சேவை மட்டுமல்ல.. இணையத்தளம், எஸ்.எம்.எஸ். என்று காலத்துக்கேற்ப தனது விழுதுகளை விரிவாக்கிக் கொண்டே போகிறது.
சுலபமான வார்த்தைகளில் சொல்வதென்றால், தேடுவோரை தேடும் தகவலுக்கு, சேவைக்கு, பொருளுக்கு அழைத்துச் செல்கிறது ஜஸ்ட் டயல். பயனாளியைப் பொறுத்தவரை அவருக்கு இது முழுக்க முழுக்க இலவச சேவை.
வெறும் ஐம்பதாயிரம் ரூபாயை முதலீடாக கொண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்நிறுவனம் இன்று ஆண்டுக்கு 134 கோடி ரூபாய் வருமானம் ஈட்டிக் கொண்டிருக்கிறது. 3500 பணியாளர்கள்.
‘நச்’சென்ற இந்த ஐடியாவுக்கு சொந்தக்காரர் ஒரு தமிழர் என்பது உங்களுக்கு தெரியுமா?
மும்பையின் மலாடு மேற்கில் 20,000 சதுர அடியில் ஜஸ்ட் டயலின் தலைமை அலுவலகம். அலுவலர்களால் செல்லமாக மிஸ்டர் சேஞ்ச் என்று அழைக்கப்படுபவர்தான் அந்நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குனர். வி.எஸ்.எஸ். மணி. 37 வயது. கொல்கத்தாவைச் சேர்ந்த தமிழர். சில்லறையை (Money) Change என்று ஆங்கிலத்தில் சொல்லுவதுண்டு. இந்த மணியை ‘சேஞ்ச்’ என்று அழைக்க காரணம் வேறு. இவர் மாற்றம் விரும்பி என்பதால். தினமும் ஏதாவது சிறிய சிறிய மாற்றங்களை அலுவலகத்தில் செயல்படுத்திப் பார்ப்பது இவரது வழக்கம்.
“சின்ன வயசுலேயே பிசினஸ் மேலே காதல் இருந்தது. பத்தாவது படிச்சு முடிச்சப்போ வீட்டிலேயே ‘லோன்’ வாங்கினேன். ஒரு கலர் டிவியும், டெக்கும் வாடகைக்கு எடுத்து டிக்கெட் எல்லாம் பிரிண்ட் பண்ணி, செம கூட்டம்! வீட்டு லோனை அடைச்சு எனக்கும் கையில் நல்ல லாபம் கிடைச்சுது“ சிறுவயது நினைவுகளில் சிரிக்கிறார் மணி.
சி.ஏ., படித்துக் கொண்டிருந்த மணி படிப்பினை பாதியில் விடக்கூடிய குடும்பச்சூழல். யெல்லோபேஜஸ் நிறுவனம் ஒன்றில் விற்பனையாளராக பணிக்கு சேர்ந்தார். இரண்டு ஆண்டுகள் அங்கே பணிபுரிந்தவருக்கு ‘திடீர் யோசனை’ தோன்றியது. ஏன் இவ்வளவு பெரிய புத்தகம்? தொலைபேசி மூலமாகவே தேவைப்படுபவர்களுக்கு தேவையான தகவல்களை தரமுடியுமே? இந்தியர்கள் தங்களுக்கு தேவைப்படும் தகவல்களை நண்பர்களிடமிருந்தும், உறவினர்களிடமிருந்தும் பெற்றுக் கொள்கிறார்கள். தகவல்கள் தருவதையே தனி சேவையாக தொடங்கினால் வேண்டாமென்றா சொல்லிவிடப் போகிறார்கள்?
1989ல் ஒத்த சிந்தனை கொண்ட நண்பர்கள் சிலரோடு சேர்ந்து ‘ஆஸ்க் மீ’ என்ற பெயரில் தகவல் சேவை நிறுவனத்தை தொடங்குகிறார் மணி. இந்தியா உலகமயமாக்கல் ஜோதியில் கலக்காத காலம் அது. நகரங்களில் கூட மிகச்சிலரின் வீடுகளில் மட்டுமே தொலைபேசி இருந்தது. கைப்பேசியெல்லாம் வரும் என்று அப்போது ஜோதிடர்கள் கூட கணித்திருக்க மாட்டார்கள்.
‘நல்ல ஐடியா’ என்று பலரால் பாராட்டப்பட்டாலும் கூட ‘ஆஸ்க் மீ’யால் மூன்று ஆண்டுகளை கூட வெற்றிகரமாக கடக்க முடியவில்லை. அப்போது ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சிக்கு சுலபமாக பலியானது. முதலீட்டுப் பற்றாக்குறையும் வணிகத்தை தொடர பெரும் பிரச்சினையாக இருந்தது. தன்னுடைய பங்குகளையும் பங்குதாரர்களுக்கே கொடுத்துவிட்டு நிறுவனத்தில் இருந்து வெளியேறினார் மணி.
1992ல் இருந்து பலவிதமான வேலைகளை செய்து தனது குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்துகொள்ள வேண்டிய நிலை வந்தது. ஒரு பெரிய நாளிதழுக்கு திருமண தேவை விளம்பரங்கள் பிடித்து தரும் வேலையை தொடர்ச்சியாக செய்துவந்தார். கையில் கொஞ்சம் காசு சேர்ந்தது.
ஐம்பதாயிரம் ரூபாயோடு 1994ல் மும்பைக்கு மீண்டும் படையெடுக்கிறார். தனது கனவுத் திட்டத்தை நனவாக்கும் ஊக்கம் மட்டுமே அவரை இம்முறை இயக்கிக் கொண்டிருந்தது. இடையில் உலகமயமாக்கல் தொழில்முனைவோருக்கு திறந்துவிட்ட கதவுகள் ஏராளம்.
அப்போது ஒரு தொலைபேசி இணைப்புக்கே பதினைந்தாயிரம் வரை செலவானது. மூன்றே மூன்று தொலைபேசி இணைப்புகள் மட்டுமே வாங்க முடிந்தது. டேட்டாபேஸ் என்றழைக்கப்படும் நிறுவனங்கள் மற்றும் சேவைகள் தொடர்பான தகவல்களை சுனாமி வேகத்தில் சேர்க்கத் தொடங்கினார். இரவல் வாங்கப்பட்ட மேசை, நாற்காலிகள் மற்றும் வாடகை கணினியோடு ‘ஜஸ்ட் டயல்’ உருவான வெற்றிக்கதை இதுதான். இதற்குப் பின் நடந்ததெல்லாம் சரித்திரம்.
தொலைதொடர்புத்துறையின் தாராளமயம், மொபைல் போன்களின் பரவலான பயன்பாடு ஆகியவற்றால் இன்று ‘ஜஸ்ட் டயல்’ அசுரவேகத்தில் வளர்ந்து வருகிறது. 2007ஆம் ஆண்டு இச்சேவை இணையத்தளத்துக்கும் மாறியபோது கிடைத்த வரவேற்பு மகத்தானது. நாள்தோறும் 2,25,000 பேர் justwww.justdial.com இணையத் தளத்தை பார்வையிடுகிறார்கள்.
இந்தியாவை வெற்றிகண்ட நம் ஐடியாமணியின் பார்வை இப்போது அமெரிக்கா பக்கம் திரும்பியிருக்கிறது. அமெரிக்காவிலும் இதேபோன்ற ஒரு சேவை அமைப்பை நிறுவும் முயற்சிகளில் இப்போது மும்முரமாக இருக்கிறார்.
நம்மூர் தமிழன் ஆயிரம் மைல் தாண்டி வெற்றிக்கொடி நாட்டினால் நமக்கும் மகிழ்ச்சிதானே?
(நன்றி : புதிய தலைமுறை)
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
நல்ல பகிர்வு நன்றி யுவா.
பதிலளிநீக்குஎன்னைப்போல் ஊரூராக அலையும் ஆட்களுக்கு ஜஸ்ட் டயல் ஒரு வரப்பிரசாதம்.
தலைப்பை ரீடரில் சும்மா கழட்டுங்கன்னுதான் படிச்சேன்.. அப்புறம் ட்டீட்டரில்தான் சரியா படிச்சேன். ஹும்ம் .
பதிலளிநீக்குஜஸ்ட் டயல் சிறப்பான சேவை! மேலதிக தகவலுக்கு மிக்க நன்றி!
பதிலளிநீக்குI am also using Just Dial services regularly.
பதிலளிநீக்குThanks for sharing this useful news to all.
interesting article about Just dial.... am using this service since 2007 however have not aware of all these information which you have provided now....thaks yuva.
பதிலளிநீக்குஅருமையான பதிவு அண்ணா ...!!
பதிலளிநீக்குமிக நல்ல பதிவு.
பதிலளிநீக்குநன்றி.
ஆர். கோபி
நண்பருக்கு,ஈயடிச்சான் காப்பின்னு எந்த நேரத்தில பதிவு போட்டீங்களோ தெரியல.ஒரு நாதாரி உங்க அட்வான்ஸ் விமர்சனத்த வரிக்கு வரி
பதிலளிநீக்குகாப்பியடிச்சு ஒரு பதிவ போட்டு,அது இன்ட்லில பிரபல பதிவாகவும் ஆயிடுச்சு.கொஞ்சம் என்னான்னு பாருங்க தோழரே.
அது இதுதான்.http://nesheye.blogspot.com/2010/07/blog-post.html
தகவலுக்கு நன்றி, லக்கி! அமெரிக்காவில் ஏற்கனவே 411 என்ற directory assistance call service மிகவும் பிரபலமாக உள்ளது. Google நிறுவனமும் சில வருடங்களுக்கு முன்னாள் ஒரு இலவச சேவையை ஆரம்பித்தார்கள்.
பதிலளிநீக்குசிறப்பான சேவை ..
பதிலளிநீக்குஅருமையான பகிர்வு..
he is 37 now.In 1989 he started a company with partners after finishing CA and working for few years.So did he finish CA in 12 or 13??
பதிலளிநீக்குLucky get the facts right.
Thanks for your information. just now i thought to send my birthday gift to my daughter. Fortunately i saw ur blog and sent now....
பதிலளிநீக்குThanks once again.....
அருமையான பகிர்வு..
பதிலளிநீக்குYes Lucky, I used this service for many times while I am in Chennai, very useful service...
பதிலளிநீக்குஜஸ்ட் டயல் சேவையை பல வருடங்களாக பயன்படுத்தி வருகின்றேன்! அந்த நிறுவனத்தை பற்றிய ஆச்சர்யமான விடயங்களை தெரியப்படுத்தியமைக்கு நன்றி யுவா!
பதிலளிநீக்குநல்ல கட்டுரையை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி லக்கி....
பதிலளிநீக்குபஷீர் சொன்னது போல், காப்பி கேட் அவர் தளத்துல BE ORIGINALITYனு வேற எழுதி வச்சு இருக்காரு....
Repeat.... what a joke?????
பதிலளிநீக்குhe is 37 now.In 1989 he started a company with partners after finishing CA and working for few years.So did he finish CA in 12 or 13??
Lucky get the facts right....
Lucky all your informations are like this only... and hope you are a so called press person... check the data and the year first then publish it...