27 ஜூலை, 2010

கீற்றுவில் அரங்கேறிய தமிழ்ப் பாசிஸம்!

”இதையெல்லாம் சொல்வதால் என்னுடைய சொந்த இன மக்களே என்னை புறக்கணித்தாலும் பரவாயில்லை. என்னுடைய அரசு என்னை கொன்றுபோட்டாலும் நான் இதை சொல்ல தயங்கப் போவதில்லை” – அரங்குக்குள் நாம் நுழைந்தபோது அந்த இஸ்லாமிய நண்பர் ஒலிபெருக்கியில் முழங்கிக் கொண்டிருந்தார்.

அடுத்ததாக ஒரு நீண்ட பட்டியலை கிட்டத்தட்ட கால்மணி நேரம் வாசிக்க ஆரம்பித்தார். எண்பதுகளில் தொடங்கி இலங்கையில் இஸ்லாமியர்கள் தாக்கப்பட்டது / கொல்லப்பட்டது குறித்த தலைப்புச் செய்திகளாக அவை அமைந்திருந்தன. சிங்களவர்களில் தொடங்கி தமிழீழ விடுதலைப் போராட்ட அமைப்புகள் பலவும் கூட கடந்த முப்பதாண்டுகளில் இஸ்லாமியர் மீது தொடுத்த தாக்குதல்கள் குறித்த நீளமான அறிக்கையாக அது இருந்தது. மிகக்கவனமாக அந்நண்பர் தொண்ணூறில் இலங்கையின் வடக்கிலிருந்து தமிழீழ விடுதலைப்புலிகளால் எண்பதினாயிரம் முஸ்லீம்கள் கட்டிய துணியோடும் ஐநூறு ரூபாய் காசோடும் வெளியேற்றப்பட்டச் செய்தியை தவிர்த்தே பேசிக்கொண்டிருந்தார்.

அப்படியிருந்தும் கூட்டத்தில் ஆங்காங்கே சலசலப்பு. கடைசியாக, “எங்கள் மீது தொகுக்கப்பட்ட தாக்குதல்களுக்கு பரிகாரமாகதான் 2009 மே-யில் முள்ளிவாய்க்கால் சம்பவம் நடந்ததாக இலங்கை இஸ்லாமியர் இன்று சொல்லுகிறார்கள். அது தவறான நிலைப்பாடு. நான் ஏற்றுக்கொள்ளவில்லை” என்றுகூறி முடித்தார். அவர் இஸ்மாயில். இலங்கையைச் சேர்ந்த இயக்குனர் என்று மேடையில் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தார்.

அவரது உரை முடிந்ததுமே ஓவியர் வீரசந்தானம் ஆவேசத்தோடு மேடையை நோக்கி கூட்டத்தின் மையத்திலிருந்து முழங்கினார். “புலிகள் இஸ்லாமியரைத் தாக்கியதாக பட்டியல் வாசித்தீர்கள். ஒவ்வொரு தாக்குதலும் எத்தகைய சூழலில் நடந்தது என்பதை நீங்கள் விளக்கியாக வேண்டும்” என்றார். வீரசந்தானத்திற்கு ஆதரவாக பலரும் குரல் கொடுத்தார்கள். ஒருவர், “நாங்கள் ஒரு லட்சம் உயிர்களை இழந்திருக்கிறோம். நீங்கள் நூற்றுக்கணக்கில், ஆயிரக்கணக்கில் ஏதோ பட்டியலை வாசிக்கிறீர்கள்” என்று விசித்திரமாக குரல் கொடுத்தார். மேடைக்கு முன்பாக அமர்ந்திருந்த தோழர் சுப.வீ.யும் மேடையிலிருந்தவரைப் பார்த்து குரல் கொடுத்துக் கொண்டிருந்தார். கூட்டத்தில் பின்னால் இருந்தவர்களுக்கு சுப.வீ. என்ன பேசிக்கொண்டிருந்தார் என்பது கேட்கவில்லை.

மீண்டும் அந்நண்பர் ஒலிபெருக்கியைக் கைப்பற்றினார்.

முழுமையாக வாசிக்க இங்கே சொடுக்கவும்...

15 கருத்துகள்:

  1. சகோதர யுத்தம் என்ற அறிக்கைக்கு வலு சேர்ப்பது போல் உள்ளது!

    பதிலளிநீக்கு
  2. வெற்றி!

    இஸ்லாமியர்களை ஒடுக்குவது என்ற விஷயத்தில் யாரும், யாருக்கும் சளைத்தவர்களல்ல.

    இஸ்லாமியர்களின் காவலனாக இங்கே அறியப்பட்ட திமுகவும் 98ல் தன்னுடைய இன்னொரு கோரமுகத்தை காட்டியது என்பதை ஒப்புக்கொள்ளும் மனத்திண்மை எனக்கிருக்கிறது.

    இலங்கையில் இஸ்லாமியரை கொன்றவர்களை கண்டிக்கும் துப்பு உங்களுக்கு இருக்கிறதாவென்று நீங்களே உங்களை மீள்விசாரணை செய்து பார்த்துக் கொள்ளுங்கள் :-)

    பதிலளிநீக்கு
  3. இக்கட்டுரையை லும்பினியில் வாசித்த நண்பர் kavi_rt, ட்விட்டரில் இதுதொடர்பான தனது அனுபவங்களை பதிவு செய்திருக்கிறார். அதை இங்கே பின்னூட்டமாக இட்டு வைக்கிறேன் :


    லும்பினி கட்டுரையை முன்வைத்து
    --------------------------------
    கீற்று இணையதளத்தின் 6 வது ஆண்டு துவக்க விழா மற்றும் சிறுபான்மை சமுதாயத்தின் மீதான அரசியல் மற்றும் சமூக ஒடுக்குமுறை மீதான அமர்வில் கலந்து கொண்டவன் என்கின்ற முறையில் மேலும் லும்பினி கட்டுரை எடுத்தாண்டிருக்கும் அபத்த நாடகத்தின் பார்வையாளனாக இருந்தவன் என்ற முறையிலும் எனது அனுபவத்தை பதிவு செய்கிறேன்.

    இலங்கை நண்பர் இஸ்மாயில் பேசுவதற்கு முன்பாக தமிழகத்தை சேர்ந்த இஸ்லாமிய நண்பர்கள் பொய் வழக்குகளின் காரணமாக தங்கள் வாழ்நாளில் 12 அல்லது அதற்கும் மேலான ஆண்டுகள் சிறையில் கழிக்க நேர்ந்ததையும் வெளிவந்த பிறகும் சிதைந்து போன தங்கள் வாழ்கையை சரிப்படுத்தும் போராட்டத்திலேயே கழிக்க வேண்டியிருப்பது குறித்தும் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்கள். அவர்களே சொன்னது போல மற்றவர்கள் அதை உணர்வதற்கான சாத்தியங்கள் இருக்கமுடியாது. கல்லூரி நாட்களில் சிறையில் வெறும் மூன்றே நாட்கள் இருந்தவன் என்ற முறையில் (அதுவும் ஒரு அபத்த நாடகம் மட்டுமே. அதன் விளைவுகள் என்று எதையும் நான் அனுபவிக்கவில்லை) 12 ஆண்டுகள் என்பதின் வீரியத்தை மட்டுமே என்னால் ஓரளவு உணர முடிந்தது. பொய்வழக்கு என்பதால் பாதிக்கப்படும் மனிதர்களைப்பற்றியே சுற்றி வந்த கருத்தரங்கம் சராசரி இஸ்லாமியர்கள் சமூகத்தால் ஒதுக்கப்படுவது குறித்த உரையாடல்களை எதிர்பார்த்திருந்த எனக்கு ஏமாற்றமாகவே இருந்தது. (இது குறித்து விளக்கமாக எழுதினால் தடம் மாறிவிடும் அபாயம் இருப்பதால் தவிர்க்கிறேன்)

    இந்த வாக்குமூலங்களின் இறுதியாக இஸ்மாயில் பேச வருகிறார். அரபு மொழியில் சில மணித்துளிகள் இறைவனை வணகிவிட்டு இலங்கையில் இஸ்லாமிய சமூகத்தவர் படுகொலைகளை (சிங்கள் முஸ்லீம்களும் அதில் அடக்கம் என்றே நினைக்கிறேன் ) ஆண்டு, தேதி வாரியாக பட்டியலிடுகிறார் லும்பினி கட்டுரையில் குறிப்பிட்டது போல புலிகளால் நடத்தப்பெற்ற இஸ்லாமியர்களின் கட்டாய வெளியேற்றம் தவிர்த்து சிங்கள இனவாதம் முதலாக ஆரம்பித்து தமிழ் தீவிரவாதிகள் செய்த அனைத்து இஸ்லாமிய படுகொலைகளும் இடம் பெறுகின்றன.

    நீண்ட புள்ளிவிவரங்களின் முடிவில் (படுகொலை செய்யப்பட்ட, வெறும் எண்ணிக்கைளாகிவிட்ட முகமறியா மனிதர்களுக்கு எனது இரங்கல்கள்) முள்ளி வாய்க்காலில் இறுதிப்போரில் புலிகள் தோற்றதற்கு இந்த படுகொலைகளை காரணமாகச் சொல்வதை தான் ஏற்கவில்லை என்று இஸ்மாயில் வாக்குமூலமளிக்கிறார். புலிகளை புனிதப் பசுக்களாக அணுக வேண்டியதின் கட்டாயம் குறித்து விமர்சனங்கள் இருந்தாலும் இஸ்மாயில் நடுநிலையாளராகவும் இருக்க வேண்டியிருக்கிறதே என்றுதான் தோன்றியது. ஆனால் தமிழ்த் தேசிய பாசிசத்தின் கோரமுகம் வெளிப்படும் தருணம் இதுவென்று நான் கொஞ்சம் கூட எதிர்பார்த்திருந்திருக்கவில்லை.

    வீர சந்தானமும் இன்னொருவரும் எவ்வளவு நேரமானாலும் பிரச்சனையில்லை படுகொலைகளை பட்டியலிட்டது போல அதற்கான காரணத்தையும் சொல்லவேண்டும் என்று கூச்சலிடுகிறார்கள். சுபவீயும் இவர்களுக்கு ஆதரவாகவே எழுந்து நின்று இஸ்மாயிலிடம் பேசுகிறார் (வேறு விதமாக இருக்க வாய்ப்பில்லை தனது உரையிலும் சுபவீ வேறுவிதமாகவும் பேசிவிடவில்லை) இதற்கு ஒரளவு ஆதரவாக குரல்கள் எழுகின்றன. இஸ்மாயில் மறுபடியும் மேடைக்கு வந்து விளக்கமளிக்கிறார். அதைப்பற்றி நான் ஏதும் சொல்லப்போவதில்லை.

    வீர சந்தானமும் மற்றவர்களும் இஸ்மாயிலிடம் அவரே கூறவேண்டும் என்று எதிர்பார்த்த படுகொலைகளுக்கான காரணம் மிகவும் எளிதானது. தமிழ் தேசியவாதிகள் தங்கள் வசதிக்கேற்ப தாக்கும் (அப்படித்தான் நினைக்கவேண்டியிருக்கிறது) இந்து பாசிஸ்டுகள் காலம் காலமாக கூறி வருவதுதான். இஸ்லாமியர்கள் நம்பத் தகுந்தவர்கள் அல்ல துரோகிகள் உள்ளிருந்து குழிபறிப்பவர்கள், காட்டிக் கொடுப்பவர்கள் அதனால் அந்தப் படுகொலைகள் நியாயமானவைதான் என்று இஸ்மாயிலே கூறவேண்டுமாம். பால் தாக்கரேவுக்கும் இவர்களுக்கும் வித்தியாசத்தை உங்களால் கண்டுபிடிக்க முடிந்தால்தான் (தாக்கரேயின் புலிகள் ஆதரவு நிலையை ஞாபகப்படுத்திக்கொள்ளவும்) ஆச்சரியம்.

    இலங்கையில் நடந்த தமிழர்களுக்கான விடுதலைப் போராட்டத்தில் எல்லா அமைப்புகளிளிலும் இஸ்லாமியர்கள் இருந்திருக்கிறார்கள் என்று அவர் சொல்லும்போது நீ பேசியது போதும் என்ற குரல்கள்.. தங்களுக்கான ஆதரவுக் கூட்டம் என்று வந்து வாக்குமூலமளித்த இஸ்லாமியர்கள் மொழி அடையாளம் சிதறுவதைக் கண்டு மேடையில்... இவ்வாறாக ஒரு அபத்த நாடகம் அரங்கேறியது.
    தொடரும்..

    பதிலளிநீக்கு
  4. இக்கட்டுரையை லும்பினியில் வாசித்த நண்பர் kavi_rt, ட்விட்டரில் இதுதொடர்பான தனது அனுபவங்களை பதிவு செய்திருக்கிறார். அதை இங்கே பின்னூட்டமாக இட்டு வைக்கிறேன் :


    லும்பினி கட்டுரையை முன்வைத்து
    --------------------------------
    கீற்று இணையதளத்தின் 6 வது ஆண்டு துவக்க விழா மற்றும் சிறுபான்மை சமுதாயத்தின் மீதான அரசியல் மற்றும் சமூக ஒடுக்குமுறை மீதான அமர்வில் கலந்து கொண்டவன் என்கின்ற முறையில் மேலும் லும்பினி கட்டுரை எடுத்தாண்டிருக்கும் அபத்த நாடகத்தின் பார்வையாளனாக இருந்தவன் என்ற முறையிலும் எனது அனுபவத்தை பதிவு செய்கிறேன்.

    இலங்கை நண்பர் இஸ்மாயில் பேசுவதற்கு முன்பாக தமிழகத்தை சேர்ந்த இஸ்லாமிய நண்பர்கள் பொய் வழக்குகளின் காரணமாக தங்கள் வாழ்நாளில் 12 அல்லது அதற்கும் மேலான ஆண்டுகள் சிறையில் கழிக்க நேர்ந்ததையும் வெளிவந்த பிறகும் சிதைந்து போன தங்கள் வாழ்கையை சரிப்படுத்தும் போராட்டத்திலேயே கழிக்க வேண்டியிருப்பது குறித்தும் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்கள். அவர்களே சொன்னது போல மற்றவர்கள் அதை உணர்வதற்கான சாத்தியங்கள் இருக்கமுடியாது. கல்லூரி நாட்களில் சிறையில் வெறும் மூன்றே நாட்கள் இருந்தவன் என்ற முறையில் (அதுவும் ஒரு அபத்த நாடகம் மட்டுமே. அதன் விளைவுகள் என்று எதையும் நான் அனுபவிக்கவில்லை) 12 ஆண்டுகள் என்பதின் வீரியத்தை மட்டுமே என்னால் ஓரளவு உணர முடிந்தது. பொய்வழக்கு என்பதால் பாதிக்கப்படும் மனிதர்களைப்பற்றியே சுற்றி வந்த கருத்தரங்கம் சராசரி இஸ்லாமியர்கள் சமூகத்தால் ஒதுக்கப்படுவது குறித்த உரையாடல்களை எதிர்பார்த்திருந்த எனக்கு ஏமாற்றமாகவே இருந்தது. (இது குறித்து விளக்கமாக எழுதினால் தடம் மாறிவிடும் அபாயம் இருப்பதால் தவிர்க்கிறேன்)

    (தொடரும்)

    பதிலளிநீக்கு
  5. இலங்கையின் இனப்பிரச்சினையில் முஸ்லிம்களின் இழப்புகள் பற்றி தமிழகத்தில் பேசப்படுவது பற்றி இன்றுதான் நான் கேள்விப்படுகின்றேன். அந்த வகையில் யுவாவுக்கு நன்றிகள்….
    கிழக்கிலங்கை முஸ்லிம்களில் ஒருவன் என்ற வகையில், நானும் நேரடியாகவும், பல வழிகளில் மறைமுகமாகவும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளேன். இதோ எனது பதிவு http://sarhoon.blogspot.com/2010/07/blog-post_05.html

    பதிலளிநீக்கு
  6. லக்கி ....விளங்க முடியா கவிதை தான் நீர் ! நீர் சப்பை என்று நான் நினைக்கும் போதெல்லாம் இது போன்ற தெளிவான நிலைப்பாடுடன் கூடிய கட்டுரைகளை எழுதி என்னை திக்கு முக்காட வைத்து விடுகிறீர் ! உங்கள் பார்வை மிக சரியே ! எப்படி லசந்த நேரான பார்வையில் மகிந்தாவை விமர்சித்தாரோ அது போல நீர் இந்த 'தமிழின உணர்வாளர்களின் '"hypocrisy" ஐ வெட்டவெளிச்சமாக்கி இருக்கிறீர் ! இதோடு முஸ்லிம் சாஹிதரர்களுக்கு ஒன்றை சொல்ல விரும்புகிறேன் :'நீங்கள் ஏன் உங்களில் உள்ள தீவிரவாதிகளை கடுமையாக சாட மாட்டேன் என்கிறீர்கள் ?'!!
    அன்புடன் -காமராஜ்

    பதிலளிநீக்கு
  7. The situation in Lanka was/is grave for all minority communities. Sri Lankan regimes have in the past (and even today) used diplomacy to maintain control over these minority communities. What came out of the oppression was a movement by the Tamil youth that had a single goal - to gain control of the Tamil (& Tamil Muslim) areas from the Sri Lankan armed forces. However, today the Sri Lankan Tamil elite (the educated) are taking ownership of the struggle. We are seeing that all sections of the Tamil society (including Tamil Muslims) are being included in the new political struggle that is taking shape. So while it is important to respect and recognize the sentiments of the Tamil Muslims, it is also important to make everybody realize the importance of Unity. The policies of Sri Lankan regime to divide the Tamil groups on the basis of geography and religion will continue and more so now and we have to be mindful of the same. The focus of every Tamil, irrespective of their religion should be to highlight the Human Rights violations of the Sri Lankan regime with a sound commitment to equality amongst the Tamil population. The Tamil Mulims should be allowed to voice their concerns and that will form the basis for a trust to be established amongst us.

    பதிலளிநீக்கு
  8. லக்கி,துரோகி என்று முத்திரை குத்துவார்கள் என்பது தெரிந்தும் துணிவுடனும் தெளிவுடனும் உங்கள் கருத்தை வெளியிட்டிருக்கிறீர்கள்.வாழ்த்துக்கள்.இலங்கை போலவே மிகவும் கசப்பான ரத்த கறை படிந்த கடந்த காலத்தை கொண்ட நாடுகள் உலகில் பல உண்டு (ருவாண்டா,கம்போடியா மற்றும் பல).அவற்றில் எல்லாம் மக்கள் தங்கள் கசப்பான கடந்த காலத்தை கொஞ்சம் கொஞ்சமாக மறந்து தற்போது சகஜமாக வாழ தொடங்கிவிட்டார்கள்.ராஜபக்சே கூட்டம் செய்தது மன்னிக்க முடியாத குற்றம்தான்.இருந்தாலும் ரணிலின் ஆட்சிகாலத்தில் அமைதி திரும்ப கிடைத்த வாய்ப்புக்களை புறந்தள்ளியதன் மூலம் இலங்கை தமிழர்களின் இன்றைய நிலமைக்கு ஒரு வகையில் புலிகளும் காரணம் என்பதை மறுக்க முடியாது.தற்போதைய சூழ்நிலையில் இலங்கை தமிழர்கள் வாழ்வு நலம் பெற இலங்கை அரசாங்கத்தின் தயவு தேவை இருக்கிறது.புலம் பெயர்ந்த நாடுகளில் வாழ்பவர்களும் தமிழ் நாட்டு கூத்தாடிகளும் தொடர்ந்து வெறும் வாய்ச்சவடால்களால் பல்லாண்டு கால பிரச்சினைக்கு தீர்வு கண்டு விட முடியும் என்று நம்பி வெறுப்பை கக்கி வருகிறார்கள்.முள் வேலிகளுக்குள் அடைபட்டு தங்கள் மற்றும் தங்களின் எதிர்கால சந்ததியினரின் எதிர்காலம் கேள்வி குறியாக தொக்கி நிற்கும் நிலையில் அந்த மக்களின் எதிர்காலம் குறித்து கொஞ்சம் கூட அக்கறை இல்லாமல் வெளிநாடுகளில் வசதியாக இருந்து கொண்டு வெறுப்பை கக்கி இனப்பகை என்னும் நெருப்பை அணைந்துவிடாமல் பாதுகாக்க நினைப்பவர்களை என்ன செய்வது?இவர்களில் பலரும் அகதி அந்தஸ்தில் வளர்ந்த நாடுகளில் குடியுரிமைக்கு விண்ணப்பித்து விட்டு காத்திருப்பவர்கள்.இலங்கையில் அமைதி திரும்புவதால் இவர்களுக்கு எந்த நன்மையும் இல்லை.மாபெரும் புரட்சியாளனாகிய பாரதியை பார்ப்பான் என்று இழிவு படுத்தி கட்டுரைகளை வெளியிட்ட போதே கீற்று இணையதளம் மற்றும் அதன் நிறுவனர்களின் சுயரூபம் வெளிப்பட்டுவிட்டது.அப்போதே அந்த இணைய தளத்தை படிப்பதையும் நிறுத்தி விட்டேன்.

    பதிலளிநீக்கு
  9. நண்பரே, சொல்வதற்கு அருவருப்பாக
    இருந்தாலும் உண்மை அதுதான்.
    புலிகள் வீழ்ந்த செய்தி இலங்கை
    முஸ்லீம்களுக்கு ஒருபோதும்
    வருத்தத்தை தந்திருக்க போவதில்லை.
    இந்த இழிநிலை உலகில் தமிழினத்துக்கு
    மட்டுமே சாத்தியம் என்று நினைக்கிறேன்.
    இழிநிலை இதில் எது?
    இலங்கை முஸ்லீம்களை தமிழரென்றும்
    பாராமல் பகைமை பாராட்டியதா?
    இல்லை புலிகளின் வீழ்ச்சியை ரசிக்கும்
    மனநிலைக்கு இலங்கை முஸ்லீம்கள்
    தள்ளப்பட்டதா?

    பதிலளிநீக்கு
  10. "இஸ்லாமியர்களின் காவலனாக இங்கே அறியப்பட்ட திமுகவும் 98ல் தன்னுடைய இன்னொரு கோரமுகத்தை காட்டியது என்பதை ஒப்புக்கொள்ளும் மனத்திண்மை எனக்கிருக்கிறது.
    "

    Nalla pathiv..

    enna nadanthathu 98 il?

    பதிலளிநீக்கு
  11. முஸ்லிம் விரோதப் போக்கா?
    சத்தியமார்க்கம்.காம்
    http://www.satyamargam.com/1517

    யுவகிருஷ்ணா 11:18 AM, July 27, 2010

    வெற்றி!

    இஸ்லாமியர்களை ஒடுக்குவது என்ற விஷயத்தில் யாரும், யாருக்கும் சளைத்தவர்களல்ல.

    இஸ்லாமியர்களின் காவலனாக இங்கே அறியப்பட்ட திமுகவும் 98ல் தன்னுடைய இன்னொரு கோரமுகத்தை காட்டியது என்பதை ஒப்புக்கொள்ளும் மனத்திண்மை எனக்கிருக்கிறது.

    இலங்கையில் இஸ்லாமியரை கொன்றவர்களை கண்டிக்கும் துப்பு உங்களுக்கு இருக்கிறதாவென்று நீங்களே உங்களை மீள்விசாரணை செய்து பார்த்துக் கொள்ளுங்கள்

    பதிலளிநீக்கு
  12. Unity is the best policy.
    What is the use of going on in arguing with most sensitive subjects and that would lead to more retrospective effect.In every action there is a reaction . Nobody can be converted by argument but can be done by smooth words and touching their heart.
    Past is past . Let us think about the future and better relationship and unity.
    Divide and rule is the policy of all government. We must be aware of that.
    *"அல்லாஹ் எந்த நோயையும் அதற்குரிய நிவாரணத்தை அருளாமல் இறக்குவதில்லை" என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். **அறிவிப்பவர்: **அபூ ஹுரைரா(ரலி) * *நூல்: புகாரி 5678** *
    *"உறவை முறித்து வாழ்பவன் சொர்கத்தில் நுழைய மாட்டான்" என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.* *அறிவிப்பவர்: ஜுபைர் இப்னு முத்யிம்(ரலி)* *நூல்: புகாரி 5984*

    "முஃமின்களே! ஒரு சமூகத்தார் பிறியதொரு சமூகத்தாரைப் பரிகாசம் செய்ய வேண்டாம். ஏனெனில் (பரிகசிக்கப்படுவோர்), அவர்களைவிட மேலானவர்களாக இருக்கலாம்;
    -திருக்குர்ஆன் 49:11

    பதிலளிநீக்கு
  13. லக்கி
    புலிகள் செய்தது மகா தவறு. அதே வேளையில்
    கிழக்கிலங்கையில் இஸ்லாமியர்களால் நடத்தப்பட்ட கொலை வெறித்தாக்குதல்கள் அநேகம். அவற்றைப் பற்றி யாருமே கதைப்பதில்லை. வீரமுனை கோயிலில் அகதிகளாக தங்கியிருந்த தமிழ்ப் பெண்களை கற்பழித்தும், குழந்தைகளை வெட்டியும் கொலை செய்தார்கள். 90 இல் கல்முனையில் சிங்கள ராணுவத்துடன் சேர்ந்து நூற்றுக்கணக்கில் தமிழர்களை எரித்தார்கள். பட்டியல் நீண்டு கொண்டே போகும். சின்ன ஓர் உதாரணம்.
    http://www.scribd.com/doc/16020612/61-Year-Tamil-Massacre-in-Sri-Lanka

    பதிலளிநீக்கு
  14. ஒரு முஸ்லிம் சகோதரன்6:53 PM, ஆகஸ்ட் 01, 2010

    @இனியா...
    //enna nadanthathu 98 il?//

    ---இப்படி 2010-ல் கேட்டு தெரிந்து கொள்ளும் அளவிற்குதான் இன்றைய தமிழகம் இருக்கிறதென்றால், அது உண்மையிலேயே தி மு க அரசுக்கும் ஊடகங்களுக்கும் மகத்தான வெற்றிதான்.

    தமிழ்தேசியவாதிகளும் இதையேத்தான் இஸ்லாமியர்களுக்காக இலங்கையில் விரும்புகிறார்கள். ஆனால், அதையே சிங்களர்களுக்காக தங்களுக்கு விரும்பமாட்டார்கள்...

    அதாவது,

    "என்ன நடந்தது முள்ளிவாய்க்காலில்?" என்று நீங்கள் அப்பாவியாய் கேட்டிருந்தால் ரணகளப்பட்டிருந்திருப்பீர்கள்...

    -----------------------------------

    ////Blogger யுவகிருஷ்ணா said...

    வெற்றி!


    இஸ்லாமியர்களை ஒடுக்குவது என்ற விஷயத்தில் யாரும், யாருக்கும் சளைத்தவர்களல்ல.

    இஸ்லாமியர்களின் காவலனாக இங்கே அறியப்பட்ட திமுகவும் 98ல் தன்னுடைய இன்னொரு கோரமுகத்தை காட்டியது என்பதை ஒப்புக்கொள்ளும் மனத்திண்மை எனக்கிருக்கிறது.

    இலங்கையில் இஸ்லாமியரை கொன்றவர்களை கண்டிக்கும் துப்பு உங்களுக்கு இருக்கிறதாவென்று நீங்களே உங்களை மீள்விசாரணை செய்து பார்த்துக் கொள்ளுங்கள் :-)

    11:18 AM, July 27, 2010/////

    ---மீள்விசாரணை செய்து பார்த்துக் கொள்வது.... என்பது.... //ஒப்புக்கொள்ளும் மனத்திண்மை// என்பதில் மட்டுமா சகோதரர் யுவா? மருந்தில்லா அந்த காயத்திற்கு பரிகாரம் என்ன? அதுவல்லவா காலத்தின் கட்டாயம்...!

    மிக சமீபத்திய பிரபலமான உதாரணம் குனங்குடி ஹனிபா.... அவருக்கான இழப்பிற்கு நஷ்ட ஈடு என்ன?

    பதிலளிநீக்கு
  15. //மருந்தில்லா அந்த காயத்திற்கு பரிகாரம் என்ன? அதுவல்லவா காலத்தின் கட்டாயம்...!//

    சகோதரரே! பரிகாரம் செய்யவேண்டிய அந்தஸ்தில் நான் இல்லை :-(

    பதிலளிநீக்கு