3 ஆகஸ்ட், 2010

வாய்தாராணியா நம் தங்கத்தாரகை?

சிங்காரச் சென்னை என்று அறிவிக்கப்பட்டு திராவிடத் திம்மிகளின் கொடுங்கோல் கோர ஆட்சியில் சீரழிக்கப்பட்டு வரும் பாவப்பட்ட சென்னைநகர வாசிகளாக நீங்களிருக்கும் பட்சத்தில் இந்த ஃப்லெக்சு பேனர்களை கண்டிருக்கலாம். “வாய்தாராணி ஜெயலலிதாவை கண்டித்து திமுக இளைஞரணி ஆர்ப்பாட்டம்!”.

உலகமே போற்றும் உத்தம அம்மாவின் பெயரை அமெரிக்காவே தனது வீதிகளுக்கு சூட்டி பெருமைப்பட்டு வருகிறது. ஆனால், கொடநாடு தவிர்த்து வசிக்கும் உள்ளூர் திம்மிகளுக்குதான் அம்மாவின் பெருமையும், அருமையும் தெரியவில்லை. பேய் அரசாண்டால் பிணந்தின்னும் சாத்திரங்கள் என்று சும்மாவா சொன்னார்கள்?

முதலில் அம்மா ஏன் வாய்தா வாங்குகிறார் என்று விளக்கிவிடுகிறோம்.

எந்த சட்டத்தையும் (மதமாற்ற தடை சட்டம் உட்பட) ஒழுங்காக நடைமுறைப்படுத்த துப்பில்லா திம்மியின் ஆட்சியில் வழக்காடுமன்றங்களில் நீதி கேலிக்கூத்தாக ஆகிவருகிறது என்பதை அம்மா பலமுறை சுட்டிக்காட்டியிருக்கிறார். நமது எம்.ஜி.ஆரில் கட்டுரைகள் தீட்டியிருக்கிறார். ஆர்ப்பாட்டங்களில் மக்களுக்கு விளக்கியிருக்கிறார்.

அப்படிப்பட்ட திம்மியின் ஆட்சியில் அம்மா மீது நடைபெறும் வழக்கு எப்படி நியாயமானதாக இருக்கும். அம்மாவே ஒருவேளை அவருக்கு தெரியாமல் குற்றம் செய்திருந்தாலும் கூட அந்த குற்றத்தை எடுத்துக்காட்டி திறமையாக வழக்காட திம்மியின் வக்கீல்களுக்கு யோக்கியதை இருக்குமா என்ற சந்தேகம் மக்கள் மனதில் பல நூற்றாண்டுகளாக நிலவி வருகிறது. இப்படிப்பட்ட சூழலில் அப்படியேதேனும் குற்றம் நடைபெற்றிருந்தால் அம்மாவின் திறமையான வழக்கறிஞர்கள் திறம்பட வாதாடி அம்மாவுக்கே தண்டனை வாங்கித்தரும் ஆற்றல் பெற்றவர்கள். இதுபோல நியாயமாக, நேர்மையாக வழக்கு நடைபெறுவதுதான் ஜனநாயகத்துக்கும், நீதிபரிபாலனத்துக்கும் அழகு.

அம்மா ஆட்சியின் போது நடைபெற்ற ஊழல்கள் என்று திம்மி அரசால் போடப்பட்ட கலர் டிவி வழக்கு, சுடுகாட்டு ஊழல் வழக்கு என்று பலவழக்குகளில் திம்மியின் திக்கை வக்கீல்களின் திறமைக் குறைவால் அம்மா கழகத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் எல்லோருமே வெளிவந்துவிட்டனர். வெளிவந்தவர்கள் அதற்கு நன்றிக்கடனாக நேராகப் போய் திம்மியின் கட்சியிலேயே சேர்ந்துவிடுகிறார்கள். இப்படிப்பட்ட கேவலம் இடிஅமீன் ஆட்சியில் நடந்ததாககூட உகாண்டு நாட்டின் வரலாற்றில் சான்று இல்லை.

இப்போது அம்மாவின் மீது சொத்துக்குவிப்பு வழக்கு நடந்துவருகிறது. இந்த வழக்கிலும் திம்மியின் வக்கீல்கள் கோட்டைவிட்டால், அம்மாவே போய் திம்மி கட்சியில் சேர்ந்துவிடவேண்டிய கொடூரச்சூழல் உருவாகிவிடாதா? அவ்வாறு நடந்துவிட்டால் இந்த நானிலம் தாங்குமா? மக்கள் நாண்டுக்கிட்டு மாண்டுவிட மாட்டார்களா? வாய்தாராணி என்று புரட்சித்தாயை, அல்குவைதா ராஜாக்கள் ஏசுவது நியாயம்தானா?

எனவேதான் இந்த திம்மியின் ஆட்சியில் நீதி கேலிக்குரிய பண்டமாகிவிடக்கூடாது என்ற நல்லெண்ண அடிப்படையில் அம்மா வாய்தாக்களுக்கு மேல் வாய்தாவாக வாங்கிவருகிறார். இவ்வாறு வாய்தா வாங்கி தாமதப்படுத்துவதின் மூலமாக விரைவில் மலர இருக்கும் அம்மா ஆட்சியில் வழக்கினை திறம்பட நடத்தி நீதித்தேவதையின் கண்களில் கட்டப்பட்டிருக்கும் கருப்புத்துணியை அவிழ்க்க அம்மா திட்டமிட்டிருக்கிறார். உலகமே போற்றும் உத்தம அம்மா இப்படியெல்லாம் வாய்தா வாங்கி நீதியைக் காக்கவில்லை என்றால்தான் அது ஆச்சரியம்.

மாறாக அவசரக்கொடுக்குத்தனமாக திம்மியின் இளையமகனான தளபதித்திம்மி ஒரு ஆர்ப்பாட்டத்தை சட்டவிரோதமாக நடத்த முன்வந்திருப்பதாக ப்ளெக்ஸ் பேனர்களை தீயசக்திகள் ஆங்காங்கே மாட்டி அழகு பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இதற்கு என்ன பின்னணி என்னவென்று அம்மாவின் விசுவாசியான ஸ்ரீமான் ராமசாமி அய்யங்கார் அவர்கள் விரிவான விசாரணையை மேற்கொண்டு, எண்பது கோடி ஹிந்து பெருமக்களின் ஒரே புனிதப் பத்திரிகையாம் ஸ்ரீதுக்ளக்கில் விரைவில் கட்டுரை எழுதுவார்.

நாம் சந்தேகப்படும் பின்னணியும் ஒன்று இருக்கிறது. சில நாட்களுக்கு முன்பாக தலைமையே தாங்க துப்பில்லாத ஒருவர் எப்படி தளபதி ஆவார் என்று நம் சமூகநீதி காத்த வீராங்கனை போர்க்குரல் எழுப்பியிருந்தார். ஏனெனில் திம்மி கட்சியின் ஆர்ப்பாட்டமோ, பாராட்டுக் கூட்டமோ எது நடந்தாலும் ‘தலைமை : உதவிப்பேராசிரியர்’ என்று அறிவிக்கப்படுவது வழக்கமாக இருந்தது. தளபதி என்று அவர்களால் விதந்தோதப்படும் நபரோ டம்மிபீஸாக ஒரு ஓரம் உட்கார்ந்து நகத்தை கடித்துக் கொண்டிருப்பார். இந்த அடிப்படையில்தான் நம் தெய்வத்தாய் அப்படியொரு போர்க்குரலை எழுப்பவேண்டிய அவசியமேற்பட்டது.

தெய்வத்தாயின் போர்க்குரல் கண்டு அஞ்சிய கூட்டம் அவசர அவசரமாக தாங்கள் தளபதி என்று சொல்லக்கூடியவர் தலைமை தாங்கும் ஆற்றல் பெற்றவர் என்று பொய்யான மாயைத் தோற்றத்தை மக்கள் மனதில் கட்டியெழுப்பவே இந்த சட்டவிரோத, மக்கள்விரோத, தேசவிரோத ஆர்ப்பாட்டத்தை நடத்த திட்டமிட்டிருக்கிறார்கள் என்று தெரியவந்திருக்கிறது.

மைனாரிட்டி திம்மிகள் அரசு செய்துவரும் இந்த அநியாயங்களை எல்லாம் அடுத்த ஆண்டு வரை நாம் பொறுத்துக் கொள்ளத்தான் வேண்டும். அடுத்த ஆண்டும் மைனாரிட்டி திம்மிகள் அரசு அமைந்துவிட்டால், அதற்கு அடுத்த ஐந்து ஆண்டுகளும் பொறுத்துக் கொள்ளவேண்டும். அடுத்த ஐந்து ஆண்டுகள் கழித்தும் மீண்டும் மைனாரிட்டி திம்மிகள் அரசு அமைந்துவிட்டால், அதற்கடுத்த ஐந்து ஆண்டுகளும்....

திம்மிகளின் இந்த அராஜகங்களை எல்லாம் எதிர்த்து இணையத்தில் பதிவுபோட்டு பதிவர்களான நாம் ஆர்ப்பாட்டங்கள் நிகழ்த்த வேண்டும். இதற்கு இணைய அம்மா பேரவை தலைவரான கோவி.கண்ணனார் தலைமை தாங்க வேண்டும். இடதுசாரித் தோழர்களும், தமிழ்த்தேசிய சொந்தங்களும் இந்த ஆர்ப்பாட்டங்களுக்கு வலுச்சேர்க்க வேண்டும்.

அண்ணா நாமம் வாழ்க. அம்மா நாமம் வாழ்க. தம்பி நாமம் வாழ்க. தங்கச்சி நாமம் வாழ்க.

21 கருத்துகள்:

  1. அப்படியே தா கிருட்டிணன் கொலை வழக்கை மேல் முறையீடு செய்யவும், திராவிட திம்மிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினால் பரவாயில்லை!

    பதிலளிநீக்கு
  2. Sir
    //ஸ்ரீமான் ராமசாமி அய்யங்கார்

    Avar Iyer . Please correct it

    பதிலளிநீக்கு
  3. பெயரில்லா11:39 AM, ஆகஸ்ட் 03, 2010

    நீங்க திமுகவா அதிமுகவா ?
    தெரியலையேப்பா தெரியல

    பதிலளிநீக்கு
  4. / ஸ்ரீமான் ராமசாமி அய்யங்கார் அவர்கள் விரிவான விசாரணையை மேற்கொண்டு, எண்பது கோடி ஹிந்து பெருமக்களின் ஒரே புனிதப் பத்திரிகையாம் ஸ்ரீதுக்ளக்கில் விரைவில் கட்டுரை எழுதுவார்/
    அட்ங்கொக்காமக்கா:)))))))))))))))

    பதிலளிநீக்கு
  5. அம்மாவை ரொம்பதிட்டாதீங்க...உங்களை தீய சக்தின்னு சொல்லி அழிக்க யாகம் செய்திடுவார்..உங்களை ஒடுக்க “’சோ” ஆலோசனை கொடுப்பார்....!

    பதிலளிநீக்கு
  6. எனக்குத் தெரிந்த தமிழ் அகராதியில் தேடிப்பார்த்தேன்.திம்மி என்றால் என்னெவென்று புரியவில்லை.. சொன்னால் நலம்.. மற்றபடி நல்ல கட்டுரை வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  7. நக்கல், நையாண்டி மட்டுமே வாழ்க்கை இல்லை நண்பரே. வாழ்த்துக்கள், தொடரட்டும் உங்கள் திமுக ஜால்ரா.

    பதிலளிநீக்கு
  8. Amma's corruption was in the range of 100s of crores! But your "thimmies" corruption is in the range of LAKH OF CRORES!
    Tamil people have no choice but these "yEriyum kolli vai pisAsugal"! That's the pity, my friend!

    பதிலளிநீக்கு
  9. //மைனாரிட்டி திம்மிகள் அரசு செய்துவரும் இந்த அநியாயங்களை எல்லாம் அடுத்த ஆண்டு வரை நாம் பொறுத்துக் கொள்ளத்தான் வேண்டும். அடுத்த ஆண்டும் மைனாரிட்டி திம்மிகள் அரசு அமைந்துவிட்டால், அதற்கு அடுத்த ஐந்து ஆண்டுகளும் பொறுத்துக் கொள்ளவேண்டும். அடுத்த ஐந்து ஆண்டுகள் கழித்தும் மீண்டும் மைனாரிட்டி திம்மிகள் அரசு அமைந்துவிட்டால், அதற்கடுத்த ஐந்து ஆண்டுகளும்....//

    செம நக்கலு :))


    //அண்ணா நாமம் வாழ்க. அம்மா நாமம் வாழ்க. தம்பி நாமம் வாழ்க. தங்கச்சி நாமம் வாழ்க//

    அதிஷா டச்...சாரி லக்கி டச் :)


    திம்மி திம்மின்னு அடிக்கடி விம்முறீங்களே..அப்படின்னா என்னங்க ?

    பதிலளிநீக்கு
  10. //நக்கல், நையாண்டி மட்டுமே வாழ்க்கை இல்லை நண்பரே. வாழ்த்துக்கள், தொடரட்டும் உங்கள் திமுக ஜால்ரா.//

    தமிழ் வலையுலகத்துல வர்ற பதிவுகள்ல பாதிக்கு மேல கருணாநிதி மீது வசை ,நக்கல் ,நையாண்டி தான் .

    தேடிப்பிடிச்சு இங்க மட்டும் அறிவுரை சொல்லுறீங்களே ..நீங்க யாருக்கு ஜால்ரா?

    பதிலளிநீக்கு
  11. மம்மியோட பவரு திம்மிகளுக்கு எங்கே தெரியப் போவுது

    பதிலளிநீக்கு
  12. லக்கி , திம்மி என்ற வார்த்தைக்கு சரியான அர்த்தம் சொல்லுங்களேன் ...... ப்ளீஸ்........

    பதிலளிநீக்கு
  13. என்ன சொல்றீங்கனு புரிஞ்சுக்கவே கஷ்டமா இருக்குது. . . . ஒரு விடயம் மட்டும் தெளிவா தெரியுது. . . வஞ்சப்புகழ்ச்சி என்று எமது தமிழாசிரியர் சொன்னது இது தான்...

    வாழ்த்துக்கள் ... தொடர்க உங்களது நையாண்டி உரைகள் .. . .

    " திம்மிகள்"--- இந்த வார்த்தையின் பொருள் உரைத்தால் நலமாய் இருக்கும்..

    பதிலளிநீக்கு
  14. லக்கி,

    இதில் தமிழ் தேசியவாதிகளையும் அசிங்கப்படுத்த வேண்டும்...

    பார்ப்பன சங்க தலைவரின் ஆதரவாளர் எல்லாம் தமிழ் தேசியம் பேசுபவர்கள் என குறிப்பிட்டால் சரியாக இருக்கும்...

    பார்ப்பன பாஜகவின் நட்பு கொண்டு இருக்கும் சிலர் வண்டி ஓட்ட தமிழ் தேசியம் பேசுவதால்...

    மொத்த தமிழ் தேசியத்தையும் இழிவுபடுத்த வேண்டியத்திலையே?

    பதிலளிநீக்கு
  15. மம்மிக்கு திம்மிகளோட ஆப்பு "கை" யோட துனை இல்லாம.....
    அதான் என் கனவு......

    பதிலளிநீக்கு
  16. joe david
    yenna sollavarigannu kadasi varaikum puriala

    பதிலளிநீக்கு
  17. தமிழகத்தில் மைனாரிட்டி ஆட்சியை நடத்துகின்றனர். தமிழகத் தில் 234 தொகுதிகள் உள்ளன. மெஜாரிட்டிக்கு எத்தனை சீட் வேண்டும் என, குழந்தையிடம் கேட்டால் கூட கூறிவிடும். தி.மு.க.,வுக்கு ஆதரவளிக்கும் 36 காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்களுக்கு ஒரு அமைச்சர் பதவி கூட இல்லை. ஆனால், 15 எம்.பி.,க்களை வைத்து மத்தியில் ஐந்து மத்திய அமைச்சர் பதவிகளை பெற்றுள்ளனர். இதில் யார் தியாகி என்றால், காங்., தான்.

    - இளங்கோவன்

    பதிலளிநீக்கு
  18. //*
    தமிழகத்தில் மைனாரிட்டி ஆட்சியை நடத்துகின்றனர். தமிழகத் தில் 234 தொகுதிகள் உள்ளன. மெஜாரிட்டிக்கு எத்தனை சீட் வேண்டும் என, குழந்தையிடம் கேட்டால் கூட கூறிவிடும். தி.மு.க.,வுக்கு ஆதரவளிக்கும் 36 காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்களுக்கு ஒரு அமைச்சர் பதவி கூட இல்லை. ஆனால், 15 எம்.பி.,க்களை வைத்து மத்தியில் ஐந்து மத்திய அமைச்சர் பதவிகளை பெற்றுள்ளனர். இதில் யார் தியாகி என்றால், காங்., தான்.

    - இளங்கோவன்
    *//

    கோவி.கண்ணன்,

    ஈவிகேஎஸ் இ கருத்து இருக்கட்டும்...

    உங்கள் கருத்து என்னவோ?

    ஈவிகேஎஸ் இ கருத்தும் உங்க கருத்தும் ஒன்று போல் இருக்கிறது உங்கள் பின்னூட்டம்...

    நீங்கள் ஈவிகேஎஸ் இ, காடுவெட்டு குரு பாணியில் ஜெவை ஆதரிக்கிறீர்களா?

    பதிலளிநீக்கு
  19. //கோவி.கண்ணன்,

    ஈவிகேஎஸ் இ கருத்து இருக்கட்டும்...

    உங்கள் கருத்து என்னவோ?

    நீங்கள் ஈவிகேஎஸ் இ, காடுவெட்டு குரு பாணியில் ஜெவை ஆதரிக்கிறீர்களா?//

    என் கருத்தை நான் என் பதிவில் எழுதி இருக்கிறேன்

    பதிலளிநீக்கு
  20. sathiyama onnume puriyala sir,

    neenga yaara thittureenga

    YAARA PARATTUREENGA..?

    பதிலளிநீக்கு