விஷால் நடித்திருக்க வேண்டிய படமிது. நல்லவேளையாக அருள்நிதி அறிமுகமாகியிருக்கிறார். இல்லாவிட்டால் ஐம்பது பேரை சுழற்றியெடுத்து பறக்கவைப்பது, பரபர பஞ்சென்று நெத்தியில் டிச் அடித்திருக்கும்.
படத்தின் கதைக்களன் (பத்துநாள் திருவிழா) என்னவென்பதை ஒன்றரை நிமிட டைட்டிலிலேயே விளக்கிவிடுவதால் தலைவலி மிச்சம். இல்லையென்றால் அதற்கும் மெனக்கெட்டு இரண்டாம் பாதி காட்சிகளை நீளவிட்டு தாலியறுத்திருப்பார்கள். திருவிழா கொலை, கத்தாழைக்குத்து, படுக்கையிலே பாடையென்று நிறைய விஷயங்கள் புதுசு கண்ணா புதுசு.
பாண்டிராஜ் நடத்தும் செல்போன் ராவடி அநியாயம். இந்த காட்சிகளை முன்னாள் ஐ.டி. அமைச்சர் தயாநிதி மாறனுக்கும், இந்நாள் அமைச்சர் ராஜாவுக்கும் கட்டாயம் போட்டுக் காட்டி அனுமதி வாங்கியிருக்க வேண்டும். ‘மலரே குறிஞ்சி மலரே’ ரிங்டோன் அருமை.
அருள்நிதி ஆரம்பக் காட்சிகளில் மட்டுமே அறிமுகமாக தெரிகிறார். க்ளைமேக்ஸில் வீழ்ந்த பனைமரத்தில் சாய்ந்து நிலவை ரசிக்கும் ரியாக்ஷனில் அனுபவ நடிகர்களை மிஞ்சுகிறார். நல்ல உயரம். வெட வெட உடல்வாகு. எதிர்கால ஆக்ஷன் ஸ்டார் ரெடி! மலராக சுனைனா. நடிகைகளுக்கு நடிக்கும் பாத்திரம் கிடைப்பது எவ்வளவு பெரிய வரம்? வம்சம் வரமளித்திருக்கிறது சுனைனாவுக்கு.
சிட்டி சப்ஜெக்டுக்கு கருணாஸ் என்பதுபோல வில்லேஜ் சப்ஜெக்ட்டுக்கு கருப்பு கச்சிதம். படத்தில் வரும் பெரும்பாலான கதாபாத்திரங்கள் யதார்த்த நடிப்புக்கு ரொம்பவும் மெனக்கெட்டிருப்பது தெரிகிறது. இசை பெரிய இம்சை. பாடல்கள் சுமார். பின்னணி பல காட்சிகளுக்கு ஒட்டவேயில்லை.
தமிழில் ஐநூற்றி ஒண்ணாவது ‘போற்றிப்பாடடி பெண்ணே’ என்றாலும் திருநெல்வேலி, மதுரை தொல்லையில்லாமல் புதுக்கோட்டை, அறந்தாங்கி பக்கத்தைக் காட்டி ஆறுதல் அளிக்கிறார்கள். பாண்டிராஜின் ட்ரீட்மெண்ட் பக்கா.
கலைஞரின் வம்சம் ஆயிற்றே? அம்சம்தான்!
//திருநெல்வேலி, மதுரை தொல்லையில்லாமல் புதுக்கோட்டை, அறந்தாங்கி பக்கத்தைக் காட்டி ஆறுதல் அளிக்கிறார்கள். //
பதிலளிநீக்குதமிழ்சினிமா மதுரைக்கு வடக்கே வந்து புதுக்கோட்டை, தஞ்சாவூர் எனப் பயணிக்கத்தொடங்கி இருப்பது அதுவும் அரிவாளுக்கு ஓய்வு கொடுக்கத் துவங்கியிருப்பது நல்ல மாற்றம்
//கலைஞரின் வம்சம் ஆயிற்றே? அம்சம்தான்! //
திருச்சில கூட்டம் ஜாஸ்தியாமே? ஒருவேளை அந்நியநாட்டு சதி நடக்குதோ! 'வம்ச'த்துக்கு எதிரா?!
அப்பிடியும்தான், இப்பிடியும்தான்.! :-))
பதிலளிநீக்குஇப்படி பாராட்டும் அளவிற்கு படத்தில் ஒன்றுமேயில்லை என்றே சொல்லலாம்.. :-)
பதிலளிநீக்குஅதென்ன சட்டு புட்டுன்னு விமர்சனத்தை சுருக்கா முடிசிக்கிட்டீங்க?
பதிலளிநீக்கு//வெட வெட உடல்வாகு. எதிர்கால ஆக்ஷன் ஸ்டார் ரெடி! //
பதிலளிநீக்குஎன்னாது! வெட வெட உடல்வாகா!
தனுஷோட ஒப்பிட்டா கொஞ்சம் பரவால்ல. என்னதான் திமுக விசிரினாலும் இப்பிடியா?
லக்கி,
பதிலளிநீக்குஅவ்ளோதானா?
தமிழகமெங்கும் நிறைந்திருப்பது கொசுவும், கலைஞர் குடும்பமும் தான். ஊடகங்கள், விமான நிறுவனம், நிலங்கள், கல்லூரிகள் என்று தமிழகத்தின் பெறும்பகுதி கலைஞர் குடும்பத்தின் கையில். சில நூறு பவுன் நகைகளையும் சில நூறு ஏக்கர் நிலத்தையும் ஆக்கிரமித்த ஜெயலலிதா, பதவியை இழக்க நேரிட்டதை நினைவில் கொள்க. இதுவரை தேர்தலில் தி. மு. க விற்கு முக்கிய உதவியாக இருந்து வருவது அரசு ஊழியர்கள். ஆனால் சமீபத்திய இட மாறுதல்களில் 2 முதல் 3 லட்சம் பெற்றுக்கொண்டு இடமாறுதல் தரப்பட்டுள்ளது. பத்திரிக்கையாளராகிய நீங்கள் இதை மிக எளிதாக சரி பார்க்க முடியும். இந்த துயரத்திற்கு ஆளான அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் இந்த முறை தி. மு. க விற்கு உதவுவது சந்தேகமே. அனைத்து துறைகளையும் ஆக்கிரமித்துள்ள இந்த குடும்பத்தில் இருந்து தமிழகத்திற்கு விடுதலை அவசியம். இவர்கள் ஆட்சியில் தொடர்ந்தால் எங்கள் குடும்பத்திற்கு தனிப்பட்ட முறையில் நல்லது. சமீபத்தில், எனது நெருங்கிய உறவினருக்கு பணி உயர்வு கிடைத்தது. வழக்கப்படி அவர் வேறு மாவட்டத்திற்கு மாற்றப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அவர் வேலை பார்த்த ஊரிலேயே அண்ணன் "அனா" அவர்கள் இடத்தை பெற்றுக்கொடுத்தார். இது போல நிறைய பலன்கள் எங்களுக்கு கிடைத்தாலும், ஆட்சி மாற்றம் அவசியமே. அடுத்த முறையும் இவர்கள் ஆட்சிக்கு வந்தால். தமிழகம் பீகார் ஆகிவிடும். இந்த பட ஹீரோ நன்றாக நடித்து இருந்ததாக அண்ணன் உண்மைத்தமிழன் எழுதி இருந்தார். கலைஞர் வம்சத்திற்கு நடிக்க சொல்லித்தர வேண்டியதில்லை!
பதிலளிநீக்கு-krishnamoorthy
சத்தியமா முடியவில்லைங்க. முதல் வரியில சொல்லியிருக்கீங்க பாருங்க, அதுதாங்க சரியான விமர்சனம்.
பதிலளிநீக்குபாண்டிராஜுன்னு ஆவலோடவொடன பாக்கவந்து ஏமாந்துபோன 'பசங்களுக்கு' ஆழ்ந்த அனுதாபத்த தெரிவிச்சுக்கறேனுங்க.
ரொம்ப சின்ன விமர்சனம். ஏன் லக்கி?
பதிலளிநீக்கு//நல்ல உயரம். வெட வெட உடல்வாகு. எதிர்கால ஆக்ஷன் ஸ்டார் ரெடி! //
பதிலளிநீக்கு//கலைஞரின் வம்சம் ஆயிற்றே? அம்சம்தான்!//
இதெல்லாம் உங்களுக்கே கொஞ்சம் ஓவரா தெரியல??????? (நீங்க தி.மு.க விசிறிதான் அதுக்காக இப்படியா விசிர்ரது)
This review reminded me the support provided to Rajendar movies by DMK Cadres.......
பதிலளிநீக்குThis review reminded me the support provided to Rajendar movies by DMK Cadres.......
பதிலளிநீக்குஎப்பாடு பட்டாலும்
பதிலளிநீக்குமொக்கை போடுபவர்
Sema mokka padam enbathu en thaazhmaiyaan karuthu!hero super cute..and all have acted well. great disapointment as expectations were otherwise..since it is a pandiraj movie..who did a great job in 'pasanga'!moreover the backdrop of thevar community is so irritating! we have to move forward and not backward! I warned my friend who took me to the movie...jut because of the title...and it's proven to b right!
பதிலளிநீக்கு-Vazhuthi