24 ஆகஸ்ட், 2010

பிறந்தநாள்!

தொடக்கத்தில் – அதாவது அப்பா கண்ட்ரோலில் இருந்தபோது..

அப்பாவிடம்...

“ப்ரூஸ் லீ படம் போட்ட சர்ட்டு வேணும்!”

“கபில்தேவ் பேட், அதோட ஒரு ஹீரோ பேனாவும்”

“இப்போ நல்லா ஓட்டுறேன். கால் நல்லா எட்டுது. ஒரு பி.எஸ்.ஏ எஸ்.எல்.ஆர் வாங்கித் தரலாமில்லே”

அம்மாவிடம்...

“கோயிலுக்கு நான் வரலை. பிரண்ட்ஸோட ஜெண்டில்மேன் பார்க்கப் போறேன்”

அப்பா அவருடைய அண்ணனிடம்...

“இவனும் என்னை மாதிரியே மாசக்கடைசியிலே பொறந்து தொலைச்சிட்டானே? இருந்தாலும் என்னத்தைப் பண்ணுறது? ஒரே புள்ளையா பொறந்துட்டான். எத கேட்டாலும் செஞ்சிதான் கொடுத்தாவணும்”

ஆசைகள் எதுவுமே நிராசை ஆனதில்லை. எனக்கு வாய்த்தவர் உலகின் தலைசிறந்த அப்பா.


நடுவில் – அதாவது சிறகு முளைத்துவிட்டதாக நானே நினைத்துக் கொண்டபோது..

கோபாலிடம்...

“இன்னைக்காவது அவகிட்டே பிரபோஸ் பண்ணிடனும்”

அவள்...

“தம்மு கூட அடிக்க மாட்டியா? ச்சே.. என்னடா ஆம்பளை நீ?”

ஜாஹிரிடம்...

“வெற்றிலே கட்டப் பஞ்சாயத்து ஓடுது. நக்மா ஒயின்ஸுலே ஆளுக்கொரு பீர் உட்டுட்டு அப்படியே போயிடலாமா இல்லைன்னா ஜோதியா?”

மெக்கானிக் தமிழ்...

“சில்வர் ப்ளஸ்ஸோட அழகே சில்வர் கலர்தான். நீ ஏண்டா ஃபுல்லா பிளாக் பெயிண்ட் அடிக்கணும்னு சொல்றே?”

பிள்ளையார் கோயில் தர்மகர்த்தாவிடம்...

“சார் திக இளைஞரணி சார்புலே பகுத்தறிவு பிரச்சாரக் கூட்டம் நடத்தப் போறோம். உங்க கோயில் முன்னாடி மேடை போட்டுக்கறோம்”

யாரோ ஒருவர், ஆள் கூட நினைவில்லை...

“எதுவா இருந்தாலும் முதல்லே உனக்கு மீசை முளைக்கட்டுண்டா வெண்ணை”

நிறைய ஆசைகள் பேராசையாகி நிராசையாகிய பருவம்...


லேட்டஸ்டாக – அதாவது இப்போது...

இன்சூரன்ஸ் ஏஜெண்டிடம்...

“சார் ஜீவன் அன்மோல் போட்டுட்டேன். ஜீவன் ஆனந்தும் இருக்கு. வேற ஒரு ரெண்டு பாலிசியும் ஃபேமிலி மெம்பர்ஸ் பேருலே எடுத்துட்டேன். திடீருன்னு ஆக்சிடெண்ட் கீக்ஸிடெண்ட் ஆகி மண்டையப் போட்டுட்டோமுன்னா ஃபேமிலி சேஃப்புதான். இருந்தாலும் குழந்தை ஃப்யூச்சருக்கு ஏதாவது போட்டு வைக்கலாம்னு பார்க்குறேன். லோ ப்ரீயமுத்துலே நிறைய பெனிஃபிட் கிடைக்கிறமாதிரி பாலிசி ஏதாவது பார்த்து சொல்லுங்க சார்!”

பிறந்தநாள் கொண்டாட்டத் தன்மையை இழந்து பீதிநாளாகி வருகிறது :-(

எல்லாமே அப்படியே ரிவர்ஸிலேயே போனால் எவ்வளவு நல்லாருக்கும்?

30 கருத்துகள்:

  1. not sure if it's your birthday today... if it is, then many more happy returns!

    பதிலளிநீக்கு
  2. hahaha! finishing is nice , kathiya padithu asanthutean.


    http://senthilscribes.blogspot.com/2010/08/how-to-escape-from-raksha-bandhan-girls.html

    பதிலளிநீக்கு
  3. பெயரில்லா2:13 PM, ஆகஸ்ட் 24, 2010

    பிறந்தநாள் வாழ்த்துக்கள் யுவா!
    //எல்லாமே அப்படியே ரிவர்ஸிலேயே போனால் எவ்வளவு நல்லாருக்கும்?//
    பெருமூச்சு மட்டுமே விடமுடியும் :)

    பதிலளிநீக்கு
  4. //எல்லாமே அப்படியே ரிவர்ஸிலேயே போனால் எவ்வளவு நல்லாருக்கும்///

    நல்லாத்தான் இருக்கும். என்ன 50 வயசுல நீங்க ஜட்டி மட்டும் போட்டுக்கிட்டு அழ வேண்டியிருக்கும்

    பதிலளிநீக்கு
  5. நல்ல பதிவு . . . பாராட்டுக்கள்

    பதிலளிநீக்கு
  6. இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  7. பிறந்த நாள் வாழ்த்துக்கள் லக்கி; வித்யாசமான பதிவு

    பதிலளிநீக்கு
  8. பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  9. நம்மை போன்றவர்களுக்கு வயதாகி குடிக்க பணமில்லாமல் திண்டாட நேரிட்டால் தினமும் ஒரு குவார்ட்டர் ரிட்டர்ன்ஸ் வர்ற மாதிரி டாஸ்மாக் பாலிசி ஒன்று அரசாங்கம் இலவசமாக ஏழைகளுக்கு(அதாம்ப நமக்கு) வழங்கவேண்டும் என்று 2011 ஆட்சி அமைக்க பாடுபடும் தேசிய பிற்போக்கு முற்போக்கு கட்சி தலைகளை கேட்டுக்கொள்கிறேன்.

    பதிலளிநீக்கு
  10. பிறந்த நாள் வாழ்த்துக்கள் லக்கி! இடுகை அருமை!

    ஸ்ரீ....

    பதிலளிநீக்கு
  11. இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  12. ரிவர்ஸ்ல வராது...ஆனா ஸ்பைரல்ல வரும்... வாரிசு வடிவத்துல!

    பதிலளிநீக்கு
  13. பிறந்த நாள் வாழ்த்துக்கள் லக்கி.

    உங்க ஆசிரியர்கள் குறித்த பதிவு பத்தி பேச கைப்பேசியில் கூப்பிட்டேன், எப்போ கூப்பிட்டா வசதியா இருக்குமுன்னு சொன்னீங்கன்னா கூப்பிடறேன்.

    என்றும் அன்புடன்
    பாஸ்டன் ஸ்ரீராம்

    பதிலளிநீக்கு
  14. இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  15. ha aha ha ah ...ROFL,!! sam feeling..very nice . I believe you must be celebrating your birthday this month,.." Manymore happy returns buddy.."

    பதிலளிநீக்கு
  16. இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  17. பிறந்த நாள் வாழ்த்துக்கள் யுவா...

    பதிலளிநீக்கு
  18. மறந்தேபோயிந்தி தோழர்! :(

    பிறந்தநாள் வாழ்த்துகள்!!!

    பதிலளிநீக்கு
  19. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

    பல்லாண்டு மென்மேலும் நலமும் வளமும் பெற்றுவாழ எல்லாம் வல்லதாகிய அந்த பேராற்றலை வணங்கி வாழ்க...வாழ்க... என வாழ்த்தும்....

    தமிழ்தொண்டரடிப்பொடிகள்.....

    பதிலளிநீக்கு
  20. பெயரில்லா12:54 PM, ஆகஸ்ட் 25, 2010

    Happy bday!!!!!!!!!!!

    -SweetVoice

    பதிலளிநீக்கு
  21. என்ன லக்கி போட்டோல இப்புடி கருத்து போயிட்டீங்க:-)) நேர்ல சவுகார்பேட்டை சேட்டுகணக்கா இருப்பீங்க, போட்டோ எடுத்த ஆத்மா சரியில்லை!

    என் அன்பான வாழ்த்துக்கள் லக்கி!

    ஜெய்சங்கர் சொன்ன மாதிரி நினைச்சு கூட பார்க்க முடியலையே அவரு எப்படித்தான் டைப் செஞ்சு பப்ளிஷ் பண்ணினாரோன்னு பயந்து வருது!

    விசா சொன்ன மாதிரி ஒரு பாலிசி இருந்தா நல்லா இருக்கும்ல:-))

    பதிலளிநீக்கு
  22. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் !!

    பதிலளிநீக்கு
  23. பிறந்த நாள் வாழ்த்துக்கள்

    //////இவனும் என்னை மாதிரியே மாசக்கடைசியிலே பொறந்து தொலைச்சிட்டானே? இருந்தாலும் என்னத்தைப் பண்ணுறது? ஒரே புள்ளையா பொறந்துட்டான். ///////

    ஏன் மாச கடைசில பொறந்தா என்னாகும்?.

    பதிலளிநீக்கு
  24. தாமதமான பிறந்த நாள் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு