விருந்தினர் பக்கம் : வழங்குபவர் கார்க்கி - iamkarki@gmail.com
அடுத்த 10 வருடங்களில் இந்தியாவில் அபார வளர்ச்சி காணப்போகும் துறைகளில் ஆட்டோமொபைல் முக்கியமானது. கடந்த 2 வருடங்களாகவே இத்துறையில் வேலைவாய்ப்பு கணிசமாக வளர்ந்திருக்கிறது. இனிவரும் ஆண்டுகளில் இது இன்னும் பன்மடங்காகும். Robert Bosch என்ற ஒரு நிறுவனம் மட்டும் இந்த ஆண்டு 5000 பேரை வேலைக்கு எடுக்கவிருக்கிறது. இந்தியா போன்ற ஒரு பெரிய நாட்டில் மனிதவளமும் நிறையவே இருக்கிறது. ஆனால் நிறுவனங்களுக்கும், வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கும் ஒரு பெரிய இடைவெளி இருக்கிறது.
இந்தியாவில் தற்போது ப்ளூ காலர் என்றழைக்கப்படும் semi-skilled ஆட்களுக்குத்தான் அதிக பற்றாக்குறை. உண்மையை சொல்லப்போனால் பற்றாக்குறை கூட அல்ல. ஆட்கள் தேவைப்படுவோருக்கு ஆட்கள் கிடைப்பதில்லை. வேலைத் தேடுவோருக்கு எங்கே வேலை இருக்கிறதென தெரியவில்லை. இவர்களுக்கு இன்னமும் இணையம் அவ்வளவாக பரிச்சயமாகவில்லை என்பதும் ஒரு காரணம்.
அது தவிர இந்த வேலைகள் எல்லாம் சென்னை போன்ற ஓரு சில தொழிற்துறை நகரங்களிலே இருப்பதால் மற்ற சிறுநகரத்துவாசிகளுக்கு தெரிவதில்லை. நோக்கியா போன்ற பெரிய நிறுவனங்கள் இம்மாதிரி கிராமத்து ஆட்களை வேலைக்கு வரவழைக்க நல்லதொரு திட்டம் வைத்திருக்கிறார்கள் சுற்றியுள்ள கிராமங்களுக்கே சென்று அங்கேயே நேர்முகத்தேர்வு வைத்து (கேம்பஸ் இண்டர்வ்யூ மாதிரி) அப்பாய்ண்ட்மெண்ட் ஆர்டரையும் கையோடு தந்துவிட்டு வருகிறார்கள். மறுநாள் அவர்களை அழைத்து செல்ல நோக்கியாவின் பேருந்து வந்துவிடும். ஒரு சில கிராமங்களுக்கு அரசுப்பேருந்து கூட செல்வதில்லை. ஆனால் நோக்கியா போன்ற பெருநிறுவனப் பேருந்துகள் தவறாமல் செல்கின்றன.
எல்லா நிறுவனங்களும் இந்த முறையை செயல்படுத்தவதில்லை. அவர்கள் மனிதவள மேலாண் நிறுவன்ங்களின் உதவியை நாடுகின்றனர். இன்னமும் பல நகரங்களை சேர்ந்த மாணவர்கள் சரியான வேலை கிடைக்காமல் இருப்பதை பார்க்கலாம். ஆனால் அவர்கள் விரும்பும் துறையிலே வேலைகள் தயாராக இருக்கின்றன. இவர்கள் செய்ய வேண்டியதெல்லாம் இது போன்ற நிறுவனங்களை தொடர்பு கோண்டு தங்களது பயோடேட்டாவை கொடுப்பது மட்டுமே.
“மனிதவள மேலாண் நிறுவனங்களுக்கு இருக்கும் மவுசை நன்றாக உணர்ந்ததால்தான், எட்டு வருடங்களாக உற்பத்தித்துறையில் பணியாற்றிக் கொண்டிருந்தவன், வேலையை ராஜினாமா செய்துவிட்டு சொந்தமாக ஒரு நிறுவனம் ஆரம்பித்திருக்கிறேன்” என்கிறார் இளைஞரான கார்க்கி. வெர்ட் எக்ஸ் சொல்யூஷன்ஸ் என்ற பெயரில் இவர் தொடங்கியிருக்கும் மனிதவள மேலாண்நிறுவனம் ப்ளூகாலர் பணிகளில் இருக்கும் வெற்றிடங்களை நிரப்புவதை குறிக்கோளாக கொண்டிருக்கிறது.
“5000 – 8000 முதல் சம்பளம் கிடைக்கக்கூடிய வேலைக்கு ஆட்களின் தேவை எப்போதும் இருந்துக் கொண்டேயிருக்கிறது. +2, டிப்ளமோ, டிகிரி படித்தவர்கள் எல்லோருமே தேவை. விற்பனை பிரதிநிதிகள், மார்க்கெட்டிங், தொழில்நுட்ப வேலைகள் என எல்லாப் பிரிவிலும் ஆட்கள் தேவை. எங்களைப் போன்ற நிறுவனங்கள் எங்கெங்கே எவ்வளவு வேலை இருக்கிறது என்பதை தெரிந்து வைத்திருக்கிறோம். ஆனால் அந்த வேலைகளை பூர்த்தி செய்ய ஆட்கள் கிடைக்காமல்தான் திண்டாடி வருகிறோம்” என்று மேலும் சொல்கிறார் கார்க்கி.
வெர்ட் எக்ஸ் சொல்யூஷன்ஸ் மூலமாக வேலைவாய்ப்பு பெற்ற இருவரின் வெற்றிக் கதைகள் :
ஒன்று :
தஞ்சாவூரைச் சேர்ந்தவர் சாமிநாதன். அஞ்சல்வழியில் பி.பி.ஏ படித்தவர். படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்கும்வரை காத்திருக்கவில்லை. கிடைத்த வேலைகளை ஊரிலேயே செய்யத் தொடங்கினார். ஒரு பெயிண்டராக வாழ்க்கையைத் தொடர்ந்து கொண்டிருந்தார்.
சென்னையில் ஒரு மனிதவள மேலாண்மை நிறுவனம் மூலமாக ஒரு நிதித்துறை நிறுவனத்தில் Backend office எனப்படும் பிரிவில் பணிக்கு சேர்ந்தார். கிடைத்த வேலையை திருப்தியாக செய்ததற்கு பரிசாக, இப்போது 10 பேர் கொண்ட குழுவை வழிநடத்தும் டீம் லீடராக இருக்கிறார்.
“வாய்ப்பு கிடைக்கும் வரை காத்திருக்க வேண்டும். அதுவரை எந்த வேலை கிடைக்கிறதோ, அந்த வேலையை திருப்தியாக செய்யும் மனநிலைக்கு தயார்படுத்திக் கொள்ள வேண்டும். செய்யும் வேலையிலிருந்தே, அதைவிட சிறப்பான வேலை கிடைக்குமா என்று வாய்ப்புகளை கண்கொத்திப் பாம்பாக பார்த்துவரவேண்டும். வாய்ப்புகள்தான் நம் வாழ்க்கையை நிர்ணயிக்கும்” என்று தத்துவமாக கொட்டுகிறார் சாமிநாதன்.
இரண்டு :
திண்டிவனம் ரமேஷின் கதை கொஞ்சம் வித்தியாசமானது. இவர் ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் விற்பனை மேலாளராகப் பணிபுரிகிறார். பொதுவாக இந்தப் பதவிக்கு வருபவர்கள் எம்.பி.ஏ. படித்திருக்க வேண்டும். ஆனால் ரமேஷோ +2தான் முடித்திருக்கிறார். இப்போது அஞ்சல் வழியில் எம்.பி.ஏ. படித்திருக்கிறார்.
சென்னைக்கு வந்து கிடைத்த வேலைகளை செய்துக் கொண்டிருந்தவருக்கு ஏதோ ஒரு நிறுவனத்தின் விற்பனைப்பிரிவில் வேலை கிடைத்தது.
“எல்லோரும் நினைப்பது மாதிரி படிப்பு எல்லாம் இன்றைய காலக்கட்டத்தில் பெரிய விஷயமேயில்லை. விற்பனைப் பிரிவில் பணியாற்ற சரளமான ஆங்கிலமும், துடிப்பான பேச்சும், நிறைய உழைப்பும் இருந்தால் போதும். வெகுவிரைவில் வெற்றிப்படிக்கட்டுகளை ஏறி விடலாம்” என்பது ரமேஷின் அனுபவம்.
could u pls give more details about வெர்ட் எக்ஸ் சொல்யூஷன்ஸ்
பதிலளிநீக்குMr. Anonymous
பதிலளிநீக்குYou may mail and get details from the CEO of Vertex Solutions. His mail id : iamkarki@gmail.com
நன்றி லக்கி.
பதிலளிநீக்குweldone article.
பதிலளிநீக்கு//Mr. Anonymous//
பதிலளிநீக்குWhat is this??
Anonymous can be Ms/Mrs also know.
ம்...நல்ல தகவல்...எவ்வளவு நாள் தான்...சிறு நகரவாசிகள் நம்மை பார்த்து பிரம்மித்து கொண்டிருப்பது....
பதிலளிநீக்கு"//Mr. Anonymous//
பதிலளிநீக்குWhat is this??
Anonymous can be Ms/Mrs also know//"
என்ன கொடும சார் இது?
//Mr. Anonymous//
பதிலளிநீக்குWhat is this??
Anonymous can be Ms/Mrs also know...
இந்த நக்கலைப் படிச்சா எனக்கு ஒருத்தர் மேல டவுட் வருது...
சரி வேணாம் விடுங்க...
கட்டுரை ஏதோ கடைசியில் அந்தரத்துல தொங்குன மாதிரி ஒரு ஃபீலிங்க்...கை தேர்ந்த இரு எழுத்து சிங்கங்களிடம் இருந்து இதை நான் எதிர் பார்க்கவில்லை...
பதிலளிநீக்குBut Karki is always Mr. you know
பதிலளிநீக்கு\\வாய்ப்பு கிடைக்கும் வரை காத்திருக்க வேண்டும். அதுவரை எந்த வேலை கிடைக்கிறதோ, அந்த வேலையை திருப்தியாக செய்யும் மனநிலைக்கு தயார்படுத்திக் கொள்ள வேண்டும். //சரியாகச் சொன்னீர்கள்.
பதிலளிநீக்கு//Anonymous can be Ms/Mrs also know.//
பதிலளிநீக்குஅனானியோட லொள்ளப் பாரு! லோலாயப் பாரு!!
மத்தபடி நல்ல அறிமுகம்... ஸெமி-ஸ்கில்ட் வொர்க்கர் பற்றாக்குறைய நான் நேரடியா பாத்துருக்கேன்...பூர்த்தி செய்யப்பட இயலாத அளவு பெரிய வெற்றிடம்... கார்க்கிக்கு வாழ்த்துக்கள்!
ஆமா... தோழி அப்டேட்ஸ் ஆபீஸ்ல ஒக்காந்துதான் எழுதுறீங்களா கார்க்கி?
படிகரதனால ஒருத்தன் அறிவாளியாகிட முடியாது
பதிலளிநீக்குவாய்ப்பு கிடைக்கணும் இல்லைன்னா
அவன் அறிவாளியா இருந்தாலும்
நிருபிக்கபடாத அறிவு முட்டாள்தனமானது தான்.
பயனுள்ள தகவல் கிருஷ்ணா, இந்தப் பதிவின் வலைத் தொடர்பை நான் உறுப்பினராக இருக்கும் யாகூ வலைக் குழுமத்திற்கும் அனுப்பியுள்ளேன், அனைவரும் பயனடைவோம், நன்றி.
பதிலளிநீக்குரோபோ படத்துல ரெண்டு பாட்டு எழுதுனது இவர் தானா?
பதிலளிநீக்கு