23 ஆகஸ்ட், 2010

ஜெயமோகனின் பொறுமை!

எப்படித்தான் இந்த மனுஷனுக்கு இவ்வளவு பொறுமை சாத்தியமாகிறதோ என்று கடந்த ஒரு வாரமாக ஆச்சரியப்பட்டு வருகிறேன். சாருவிடம் யாராவது இம்மாதிரியாக பேசியிருந்தால் சுனாமியே நிச்சயமாக வந்திருக்கும். யாரோ ஒரு தமிழ் ட்விட்டர் ”ஜெ விரைவில் எழுத்துத் துறவறம் மேற்கொள்ளுவார்” என்று ஆரூடம் சொல்லும் அளவிற்கு அவருக்கு உளவியல்ரீதியான வன்புணர்ச்சியை இரு வாசகர்கள் தந்து வருகிறார்கள்.

ஜெயமோகனின் இணையத்தளத்தை தொடர்ச்சியாக வாசிக்குமளவுக்கு சிலநாட்களாக பணிச்சூழல் இடம் தராததால் பிரச்சினையின் மையப்புள்ளி எங்கிருந்து சரியாக தொடங்கியது என்று தெரியவில்லை. ஜெமோ சில நாட்களாக நிறைய எழுத்தாள விக்கெட்டுகளை வீழ்த்தி வருகிறார். கல்கியில் தொடங்கி அவருடைய பந்துவீச்சில் சுஜாதாவென ஒவ்வொருவராக போல்ட் ஆகிவர, பாலகுமாரன் எல்பி.டபிள்யூ. ஆனபோது பிரச்சினை தொடங்கியிருக்கலாம் என்று நினைக்கிறேன்.

இந்த தொடர்தாக்குதலில் குழம்பிப்போன இரு வாசகர்கள் பிச்சைக்காரன் & ராம்ஜியாஹூ. தடாலென்று அதிரடியாக ஜெமோவின் பின்னூட்டப் பெட்டியை கைப்பற்றி, அவருடைய பந்துவீச்சை இவர்கள் இருவரும் எதிர்கொள்ள முடிவெடுத்திருக்கிறார்கள். நொந்துப்போன ஜெமோ ”கேளிக்கை எழுத்தாளர் vs சீரிய எழுத்தாளர்” என்று ஒரு பதிவெழுத வேண்டிய நெருக்கடிக்கு ஆளானார். ஆயினும் அந்தப் பதிவிலேயே நண்பர் ராம்ஜியாஹூ நான்கு ஸ்டெப் ஏறிவந்து பின்வருமாறு ஒரு சிக்ஸர் அடித்திருக்கிறார்.

“எனக்கு தெரிந்து பல வாசகர்கள் (நான் உட்பட) சுஜாதா பாலகுமாரன் புஷ்பா தங்கதுரை யும் படிக்கிறோம், நகுலன் வண்ண நிலவன், சு ர, கோபி கண்ணன், பஷீர், ஜெயமோகன், கோணங்கி, அம்பை யும் படிக்கிறோம். மாலை முரசும் படிக்கிறோம், கார்டியனும் படிக்கிறோம். சகலகலா வல்லவன், சிங்கார வேலனும் பார்க்கிறோம், மூன்றாம் பிறை, சலங்கை ஒலி, அன்பே சிவம், மகாநதியும் பார்க்கிறோம். பால குமாரன் என்றுமே தனது எழுத்து மட்டுமே படியுங்கள். கி ரா, வண்ணதாசன் பக்கம் போகாதீர்கள் என்று சொன்னதே இல்லை.”

ராம்ஜி சிக்ஸர் அடித்த அடுத்த ஓவரிலேயே, பிச்சைக்காரன் இன்னொரு மெகாசிக்ஸரை இவ்வாறாக அடித்திருக்கிறார்.

“பாலகுமாரன் அவர்களை இலக்கியவாதிகள் வரிசையில் வைக்காதது வருத்தமாக இருந்தது . ஆனால் உங்களை போன்ற சிலரை தவிர, பெரும்பாலாலான இலக்கியவாதிகளை பார்க்கும்போது , பாலகுமாரன் போன்ற உன்னத மனிதரை இலக்கியவாதி வரிசையில் வைப்பது அவரை இழிவு செய்வது போன்றது என்றே உணர்கிறேன். உங்களையும் கூட இலக்கியவாதியாக பார்க்கவில்லை. சிந்தனையாளராகவே பார்க்கிறேன்.”

நொந்துப்போன ஜெமோ வெறுத்துப் போய் மிக நாகரிகமாக, எளிமையாக ஒரு பதில் கொடுக்கிறார் பாருங்கள்.

“அன்புள்ள பிச்சைக்காரன்

பாலகுமாரன் மீதான உங்கள் மதிப்பை அங்கீகரிக்கிறேன். ஒர் எழுத்தாளன் மீது கொண்டுள்ள பிரியம் என்பது தன்னளவிலேயே மகத்தானதே. அவரை உங்கள் ஞானாசிரியனாக ஆக்கும் சக்தி அதற்கு உண்டு. ஆனால் அவரில் இருந்து மேலே செல்லும் வாசல்களையும் திறந்தே வையுங்கள். அது உங்களுக்கு உதவும். அந்த நிலை உங்களிடம் இருப்பதை காண்கிறேன், மகிழ்ச்சி”

பிரச்சினை முடிந்தது என்று நினைத்தால் இல்லவேயில்லை. பின்னூட்ட சூறாவளிகள் இருவரும், ஜெமோ ஸ்பின் போட்டாலும் சரி, ஸ்பீட் போட்டாலும் சரி. சுளுக்கெடுக்கும் தீர்மானத்தில் இருந்து பின்வாங்கவேயில்லை.

அடுத்ததாக ரந்தீவ் ஸ்டைலில் ஒரு ‘நோபால்’ போட்டு ஆட்டத்தை நிறுத்தும் முயற்சியில் ஜெமோ ஈடுபடுகிறார். ”பாலகுமாரனும் வணிக இலக்கியமும்” என்று மிக ஸ்ட்ராங்கான முயற்சி இது. எப்படிப்பட்ட பேய்களும் பயந்து ஓடிவிடக்கூடிய செமையான வேப்பிலைப் பூசை.

ம்ஹூம். வேலைக்கு ஆவது போல தெரியவில்லை. இம்முறை ராம்ஜியும், பிச்சைக்காரனும் அடித்துக் கொண்டிருப்பது ‘அவுட் ஆஃப் த ஸ்டேடியம்’ பாணி சிக்சர்கள்.

”ஜனநாயக அடிப்படையில்தான் இங்கே ராம்ஜி யாகூ அவர்கலின் கருத்துக்கள் இடம் பெறுகின்றன. இந்த விவாதத்தில் பொருட்படுத்தி பேசும் அளவுக்கு அவர் கருத்துக்கள் இல்லை. இங்கேஇலக்கிய விமர்சனம் குறித்து பேசபப்டும் எதையுமே அவர் புரிந்துகொள்ள முயல்வதாகவும் தெரியவில்லை. ஆகவே அவரது கருத்துக்களை அப்படியே விட்டுவிடும்படி கோருகிறேன். அது இந்த விவாதத்தை மிகவும் திசைதிருப்பிச் சோர்வூட்டுகிறது” - தாவூ தீர்ந்துப்போன ஜெமோ இப்படி சொல்லியிருக்க வேண்டிய அளவுக்கு நிலைமை மோசம்.

அனேகமாக ஜெமோவின் கால் நூற்றாண்டுக்கால இலக்கிய வாழ்வில் இப்படியான தன்மைகொண்ட எதிர்வினைகளை அவர் சந்தித்திருக்கவே மாட்டார் என்று தோன்றுகிறது. ஆனானப்பட்ட சாருவையே சமாளிக்க முடிந்தவருக்கு ஒரே நேரத்தில் இரு சிம்ம சொப்பனங்கள், யாருமே எதிர்பாராத வடிவத்தில் தோற்றத்தில் தோன்றுவார்கள் என்று யார்தான் நினைத்திருக்க முடியும்.

கடைசியாக ஜெமோ, “வழக்கம்போல விவாதம் அதன் ‘அடுத்த’ கட்டத்துக்குச் சென்றுவிட்டது. நான் சொல்ல வேண்டியதைச் சொல்லிவிட்டமையால் இதில் மேலே ஏதும் சொல்லாமல் முடித்துக்கொள்கிறேன். நான் சொன்னவை ஓர் இலக்கிய விமர்சகனின் கருத்துக்கள். இவற்றுக்குப் பின் மிக விரிவான ஓர் இலக்கிய பாரம்பரியமும் உலகளாவிய அழகியற்புலமும் உண்டு. அவற்றயும் இந்த இணைய தளத்திலேயே அறிமுகம் செய்துகொள்ளலாம். தன் ரசனையையும் நுண்ணுணர்வையும் சார்ந்து மேலே வாசிப்பவர்களும் யோசிப்பவர்களும் இதை பரிசீலிக்கலாம். மற்றவர்கள் தங்கள் கருத்துக்களிலேயே நீளலாம். இதுவே எந்த இலக்கிய விமர்சனத்துக்குக்கும் பயனாகும்.” என்று சொல்லி தற்காலிக பிரேக்கை போட முயற்சித்திருக்கிறார். இந்த சுவாரஸ்யமான இலக்கியப்போர் என்னதான் ஆகுமென்று பொறுத்திருந்துப் பார்ப்போம்.

எனக்கு தெரிந்து ஜெமோவுக்கு இப்போது இருப்பது இரண்டே இரண்டு சாய்ஸ் தான்.

ஒன்று, ஒட்டுமொத்தமாக இணையத்தை பூட்டி வைத்துவிட்டு சினிமாவில் தீவிரமாவது.

இரண்டு, சாருவை மாதிரி பின்னூட்டப் பெட்டியை மூடிவிட்டு, மெயிலுக்கு வரும் ஆபாசக் கடிதங்களை ஸ்பாமுக்கு அனுப்புவது.

மூன்றாவதாகவும் ஒன்று இருக்கிறது. தொடர்ச்சியாக இதுமாதிரி அவர் பந்துவீச்சு ராம்ஜியாஹூ, பிச்சைக்காரன் மாதிரி வகையறாக்களால் சேதப்படுத்தப்பட்டுக் கொண்டே போனால் இலக்கியத்தை மூட்டை கட்டிவிட்டு, ரஜினிசார் ஸ்டைலில் இமயமலைக்கு போய் ரெஸ்ட் எடுப்பது.

18 கருத்துகள்:

  1. அக்கப்போரு ஆரம்பிச்சிடுச்சா ?

    பதிலளிநீக்கு
  2. பெயரில்லா2:35 PM, ஆகஸ்ட் 23, 2010

    can u pls post this as a seperate one and help the child to re-jion her parents
    -
    http://kousalya2010.blogspot.com/2010/08/blog-post_23.html

    - Raji

    பதிலளிநீக்கு
  3. அண்ணே அந்த அவுட் ஆப் தி ஸ்டேடியம் சிக்சையும் இங்கயே போட்டு இருக்கலாமே? அங்க போய் படிக்கிற அளவுக்கு பொறுமை இல்லையே.. :((

    பதிலளிநீக்கு
  4. நாலு பேர்7:41 PM, ஆகஸ்ட் 23, 2010

    ஜெமோ உசுரோட இருக்குற பாலகுமாரனையே இப்படி 'புகழராரே', அவர் போனதுக்கு அப்புறம்...நெனைச்சாலே மெய் சிலிர்க்குது! ஒரு வேளை, "பாலகுமாரன் தன் மனதுள் இருந்த கருமை படிந்த மூலைகளை வெண்தாடி வெண்முடி பளீர் சிரிப்பை கொண்டு மறைத்தார் என்றே தோன்றுகிறது. தன் எழுத்தின் வரலாற்று பங்களிப்பு குறித்த பெரும் அச்சமும், மாலை வெயில் வெளிச்சத்தில் அவரின் முக வெட்டின் அழகற்ற தன்மை அவர் ஆழ் மனதில் ஏற்படுத்தியிருந்த கடும் வெறுமையும் சேர்ந்து ஒரு தோற்றுப்போன சராசரி மனிதனின் உடல் மொழியை தனக்கு தந்துவிடுமோ என்று அவர் நடுங்கினார். " -இப்படியெல்லாம் எழுதுவாரோ?

    பதிலளிநீக்கு
  5. ஜெமோ தன் இணையதளத்தில் பின்னூட்டங்கள் இனிமே கெடையாதுன்னு, புதுசா ஒரு பதிவு போட்டிருக்கார். ஜெமோ... தி எஸ்கேப்

    பதிலளிநீக்கு
  6. //இரண்டு, சாருவை மாதிரி பின்னூட்டப் பெட்டியை மூடிவிட்டு, மெயிலுக்கு வரும் ஆபாசக் கடிதங்களை ஸ்பாமுக்கு அனுப்புவது.
    //

    தலைவா பின்னூட்டங்கள் நிறுத்தப்பட்டு விட்டன - உங்கள் வாய்க்கு சர்க்கரை

    பதிலளிநீக்கு
  7. I didn't read the article fully, I came to saw these lines

    "ஆனானப்பட்ட சாருவையே சமாளிக்க முடிந்தவருக்கு"

    I am thinking that this could be a comedy post, I saved it for future reading..

    பதிலளிநீக்கு
  8. பெயரில்லா8:36 AM, ஆகஸ்ட் 24, 2010

    Your prediction came true. JEMO closed his comment box. ha! ha!! ha!!!

    பதிலளிநீக்கு
  9. ஜெமோவின் விமர்சனத்தின்
    பின் விளைவுகளைப்
    பார்க்கும் போது க.நா.சு
    ஞாபகம் வருகிறது.
    அவரையும் இப்படித்தான்
    ரவுண்டு கட்டி அடித்தார்கள்.

    பதிலளிநீக்கு
  10. Now comments option closed in jeyamohan website. Theergatharisi ayya neengal :-)

    பதிலளிநீக்கு
  11. பெயரில்லா11:52 AM, ஆகஸ்ட் 24, 2010

    யுவகிருஷ்ணா அவர்களுக்கு, " பிறந்த நாள் வாழ்த்துகள் !!

    " HAPPY BIRTHDAY BOSS !!

    - இதயம் உள்ளவன்

    பதிலளிநீக்கு
  12. நீர் விஜய் டி.வி'யில் காலை ஏழு மணிக்கு ஆரூடம் சொல்லச் செல்லலாம். நிறுத்திப்புட்டாங்கயா... நிறுத்திப்புட்டாங்கயா...

    பதிலளிநீக்கு
  13. //இரண்டு, சாருவை மாதிரி பின்னூட்டப் பெட்டியை மூடிவிட்டு, மெயிலுக்கு வரும் ஆபாசக் கடிதங்களை ஸ்பாமுக்கு அனுப்புவது.
    //

    Sir, உங்க நாக்கு கரி நாக்கு...

    பதிலளிநீக்கு
  14. உம்மை சாருவின் ஆள் என்றல்லவா சொல்கிறார்கள்? ஜெமோவுக்கு ஆலோசனையா? நடக்கட்டும் நாச வேலைகள் :)

    பதிலளிநீக்கு
  15. பெயரில்லா12:32 AM, ஆகஸ்ட் 25, 2010

    Sujatha voda writings ellaam paamaranukkum puriyum. indha vennainga ennatha ezhudhuraanunga?

    பதிலளிநீக்கு
  16. லக்கி .. இந்த மாயவரத்தான் போட்ட பின்னூட்டம் தான் மொத்த பதிவின் உச்சம் . பிச்சை, ராம்ஜி, மற்றும் ஜெமோ வுக்கும் ஏதோ ஒரு "தளத்தில்" முட்டி கொண்டிருக்க வேண்டும் . இல்லையெனில் இது பலன் அற்று போன தர்புகழ்ச்சியையும் ஒட்டு மொத்த வாசகர்களையும் தன பின்னால் இழுக்க நினைக்கும் உத்தம தமிழின் ஒரு கீழ்த்தரமான முயற்சி...

    பதிலளிநீக்கு
  17. comment closed,,feelings..

    http://www.jeyamohan.in/?p=7953

    Mudiyala.

    பதிலளிநீக்கு