30 ஆகஸ்ட், 2010

தூக்குத்தண்டனை!

தர்மபுரி பஸ் எரிப்பும், அதைத் தொடர்ந்து மாணவிகள் உயிரிழப்பும் நிச்சயமாக மன்னிக்க முடியாத குற்றமே. சேலம் நீதிமன்றம் அவ்வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளில் மூவருக்கு தூக்குத் தண்டனையை தீர்ப்பாக விதித்தது. சென்னை உயர்நீதிமன்றமும் இவர்களது மரணதண்டனையை உறுதி செய்துவிட்ட நிலையில் உச்சநீதிமன்றமும் இப்போது கைவிரித்து விட்டதாக தெரிகிறது.

மரணதண்டனைக்கு எதிரான மனநிலை கொண்டவன் என்ற முறையில் உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு எனக்கு கடுமையான மன உளைச்சலைத் தருகிறது. கொலை செய்வது என்பதை எப்படி காட்டுமிராண்டித் தனமாக நினைக்கிறோமோ, அதுபோலவே கொலை செய்தவனை சட்டப்படி அரசு பதிலுக்கு கொலை செய்வதையும் காட்டுமிராண்டித்தனமாகவே நினைத்தாக வேண்டும். பல்லுக்கு பல், கண்ணுக்கு கண் என்று தண்டனை விதிக்கக்கூடிய அளவில்தான் இன்னமும் நம் சட்டம் பணியாற்றுகிறதா என்பதை சட்டத்தை உருவாக்குகிறவர்களும், பயன்படுத்துபவர்களும் பரிசீலனை செய்து பார்த்துக் கொள்ள வேண்டும்.

"நீதிமன்றம் விதிக்கிற தண்டனையால் ஒரு மனித உயிர் பறிக்கப்படுகின்ற ஒவ்வொரு அதிகாலையிலும் மனித உரிமையின் கொடி அரைக்கம்பத்தில் பறக்கிறது" என்று நீதியரசர் வி.ஆர். கிருஷ்ணய்யர் ஒரு தீர்ப்பில் கூறியிருப்பதை இங்கே நினைவுகூர வேண்டும். "கடவுள் தந்த உயிரைப் பறிக்க எந்த மனிதனுக்கும் உரிமை இல்லை. உயிரைப் பறிக்கும் உரிமை அரசுக்கும் கிடையாது" என்பது இந்தியா தனது தேசப்பிதாவாக கொண்டாடும் உத்தமர் காந்தியின் வாக்கு.

பணத்தின் மீது காந்திப் படத்தை அச்சடிக்கும் இந்தியா, காந்தியின் சிந்தனைகளுக்கு ஓரளவுக்காவது மதிப்பு கொடுக்குமாயின், மரணதண்டனை என்ற காட்டுமிராண்டித்தனத்தினை சட்டத்திருத்தம் மூலமாக ஒழித்திட முன்வந்திட வேண்டும். மூன்றாம் உலக நாடுகள் பலவும் தங்களது நாடுகளில் இந்த காட்டுமிராண்டித்தனத்தினை ஏற்கனவே ஒழித்துவிட்டன. காந்தியால் சுதந்திரம் பெற்ற அகிம்சை நாடு, புத்தன் பிறந்த மண் என்றெல்லாம் உலகில் அறியப்படும் இந்தியா இன்னமும் இதை ஒழிக்காதது வெட்கக்கேடு. மவுண்ட் பேட்டனை கொடூரமாக கொன்ற கொலைகாரனுக்கு கூட பிரிட்டிஷ் அரசாங்கம் மரணத்தண்டனை விதிக்கவில்லை.

ஒரு மனிதனுக்கு மரணம் என்பதுதான் இறுதிநாள். லாஜிக்கலாக யோசித்துப் பார்த்தால் நீதிமன்ற ஆணையின் பேரில் தூக்குத்தண்டனை ஒருவனுக்கு இறுதிநாளாக அமைந்துவிட்டால் அது எப்படி தண்டனை ஆகுமென்று தெரியவில்லை. மரணத்தண்டனை விதிக்கப்பட்டு மரணமடையும் ஒருவனின் குடும்பம்தான் தண்டனையை அனுபவிக்கிறதே தவிர, உலகை விட்டு விடைபெற்றுவிடும் குற்றவாளி அல்ல.

ராஜிவ்காந்தி கொலைவழக்கில் மரணதண்டனை பெற்ற பேரறிவாளன் - சாந்தன் - முருகன், அப்சல் குரு, இப்போது தர்மபுரி பஸ் எரிப்பு சம்பவ குற்றவாளிகள் நெடுஞ்செழியன் - ரவீந்திரன் - முனியப்பன் உள்ளிட்டோரில் யார் ஒருவர் தூக்கில் போடப்பட்டாலும், இந்தியாவின் அகிம்சை முகமூடி உலகநாடுகள் மத்தியில் சந்திசிரிக்கும் என்பது உறுதி.

சர்வதேச நாடுகள் மரணதண்டனையை ஒழிக்க வேண்டும் என்று ஐ.நா. பல்லாண்டுகளாக கரடியாக கத்தி வருகிறது. உலகில் கிட்டத்தட்ட 135 நாடுகள் ஒட்டுமொத்தமாக இந்த காட்டுமிராண்டித் தண்டனையை ஒழித்துவிட்டன. சுமார் 30 நாடுகளில் மரணதண்டனை வழக்கத்தில் இருந்தாலும் கடந்த பத்தாண்டுகளாக யாருக்கும் இத்தண்டனையை விதிக்கவில்லை. சுமார் 60 நாடுகளில் தான் இக்கொடுமை வழக்கத்தில் இருக்கிறது. இதில் இந்தியாவும் ஒன்று.

நீதிமன்றங்களால் மரணதண்டனை விதிக்கப்பட்டவர்கள் பிற்பாடு கருணையளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டதெல்லாம் ஏற்கனவே நடந்திருக்கும் முன்னுதாரணங்கள்தான். தமிழக அளவில் ஏற்கனவே தூக்குத்தண்டனை விதிக்கப்பட்ட தோழர் தியாகு, புலவர் கலியபெருமாள் போன்றவருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்ததில் முதல்வர் கலைஞருக்கு முக்கியப் பங்குண்டு. மனிதநேய அடிப்படையில் முதல்வர் உடனடியாக இவ்விஷயத்தில் தலையிட்டு ராஜீவ்காந்தி கொலைவழக்கு மற்றும் தர்மபுரி பஸ் எரிப்பு சம்பவங்களில் மரணத்தண்டனை விதிக்கப்பட்டவர்களின் தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றிட ஆவன செய்திட வேண்டும். கொள்கையளவில் மரணத்தண்டனையை எதிர்ப்பது என்பது பகுத்தறிவாளர்களின் கடமையும் கூட என்பது கலைஞருக்கு நன்றாகவே தெரியும். இந்திய அளவில் முடியாவிட்டாலும் தமிழக அளவிலாவது மரணத்தண்டனை என்ற அரச பயங்கரவாதம் முற்றிலும் கலைஞரால் ஒழிக்கப்படுமேயானால் மனிதம் இருக்கும் வரை அவரது பெயரும் வரலாற்றில் நிலைத்திருக்கும்.

47 கருத்துகள்:

  1. பெயரில்லா12:57 PM, ஆகஸ்ட் 30, 2010

    // உத்தமர் காந்தி //

    YOU ARE A AGMARK UDANPIRAPPU.

    WELL WRITTEN POST LUCKY.

    பதிலளிநீக்கு
  2. Excellent write up.

    Amnesty போன்ற அமைப்புகள் இதற்காக தொடர்ந்து குரல் கொடுத்து வந்தாலும் இந்த கொடுமை தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது.

    மிக மிக மோசமான / கொடுமையான தண்டனை மரணம்.

    அவசியமான பதிவு லக்கி.
    ஆணித்தரமான உனது கருத்துகள் அருமை.

    இது போன்ற நல்ல பதிவுகளை அடிக்கடி எதிர்பார்கிறேன்.

    வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  3. அப்பு 3 உயிர் போச்சே அது சரியா ?
    தண்டனை தப்பு செய்தவனுக்கு கொடுப்பது அவனை தண்டிக்க அல்ல , அடுத்தவன் தப்பு செய்ய பயப்படனும் அதுக்கே ..
    உயிர் இழந்தவர்களை உங்க சகோதரியா நினைச்சு பாருங்க ( உங்களுக்கே கொலைவெறி வரும்)

    பதிலளிநீக்கு
  4. பெயரில்லா1:31 PM, ஆகஸ்ட் 30, 2010

    நண்பரே உங்களுக்கு என்னுடைய கடுமையான கண்டணங்கள்.

    //உச்சநீதிமன்றமும் இப்போது கைவிரித்து விட்டதாக தெரிகிறது///

    யாருக்கு அப்பாவிகளுக்கா????

    //மரணத்தண்டனை விதிக்கப்பட்டு மரணமடையும் ஒருவனின் குடும்பம்தான் தண்டனையை அனுபவிக்கிறதே தவிர, உலகை விட்டு விடைபெற்றுவிடும் குற்றவாளி அல்ல.//

    மரணத்தண்டனையின் போது அவன் அனுபவிக்கும் கடைசி நேர மரண வேதனைதான் அவனுக்கு தண்டனை.

    ஆயுள் தண்டனையாக மாற்றி விட்டால், சிறையில் சிக்கன் லெக் பீஸு சாப்பிட்டுக்கொண்டு வாழ்க்கையை அனுபவிப்பதுதான், கொடூரமாக மனிதாபிமானமற்ற முறையில், மாணவிகளை உயிரோடு எரித்த கொலைபாதகர்களுக்கு நீங்கள் பர்ந்துரைக்கும் தண்டனையா?????

    பதிலளிநீக்கு
  5. என்னது சிறைவாழ்க்கை என்பது வாழ்க்கையை அனுபவிப்பதா?

    பத்து நாட்கள் உங்கள் அறையை விட்டு வெளியே வராமலேயே லெக்பீஸூ சாப்பிட்டுக் கொண்டு வாழுங்கள். தெரியும் எது அனுபவிப்பு, எது தண்டனை என்று.

    பதிலளிநீக்கு
  6. பெயரில்லா1:53 PM, ஆகஸ்ட் 30, 2010

    நான் போனதில்லையே தவிர, சிறைவாசம் கண்ட நண்பர்கள் எனக்குண்டு. அவர்கள் கூறக்கேட்டிருக்கிறேன், அவர்கள் வாழ்க்கையை அனுபவிக்கிறார்களென்று. அதிலும் ஆயுள் கைதிகளென்றால் சொல்லவே வேண்டாம்... சகலமும் சிறைக்குள் கிடைக்கிறது. அதிநவீன செல்போன்கள் முதற் கொண்டு....நிகழ்காலத்துக்கு வாங்க நண்பரே...

    பதிலளிநீக்கு
  7. அந்த பெண்களின் குடும்ப நிலையிலிருந்தும், மனிதாபிமான அடிப்படையிலும் யோசித்து பாருங்கள். சில காட்டுமிராண்டி தனமான செயல்களுக்கு இப்படிப்பட்ட தண்டனைகள் நிச்சயம் அவசியமானதே. மரண தண்டனை என்ற ஒரு விஷயம் இல்லாமல் போனால், காசுக்காக எந்த பாதகத்தையும் செய்து விட்டு ஹாயாக சிறைக்குள் சென்று அமர்ந்து கொள்ளும் கூட்டம் அதிகமாகிவிடும். என்ணை கேட்டால் அந்த அவர்களை இத்தனை நாள் விட்டு வைத்ததே தவறு. அந்த அப்பாவி பெண்களை எரித்து கொன்றது போல அவர்களையும் எரித்துக் கொன்றிருக்க வேண்டும். நானும் மகாத்மாவின் அஹிம்சையே நம்புபவன்தான். ஆனால் இப்போதைய கால கட்டத்தில் தவறு இழைத்தால் மரணம் நிச்சயம் என்கின்ற ஒரு பயம் இருந்தால் மட்டுமே குற்றங்கள் குறையும்.

    மனோ

    பதிலளிநீக்கு
  8. குற்றத்தின் தீவிரத்தைப் பொருத்து தண்டனை இருக்கலாம் என்பது என் எண்ணம்.. அந்தக் கொடுமையை நேரில் கண்டேன். வாழ்வில் மறக்க முடியாத தருணம்.. அந்த மரண ஓலங்கள் இன்னும் காதில் ஒலிக்கிறது. இந்த நாய்களுக்கு இதை விட அதிக தண்டனை சாத்தியம் இல்லாததால் இவர்களுக்கான மரணதண்டனையை ஆதரிக்கிறேன். மேலே ஒரு நண்பர் சொல்லி இருப்பது போல் , தண்டனை என்பது குற்றவாளியை திருத்த மட்டுமில்லை , இனி அது போன்ற குற்றம் நிகழாமல் தவிர்க்கவும் தான். இவர்களுக்கு மரண தண்டனை மிக மிக அவசியம்.

    ஒரு வேளை, நாங்கள் அன்று சில நிமிடங்கள் முன்பு சென்றிருந்தால் அந்த பொறம்போக்குகளை எங்கள் கையாலேயே கொன்றிருக்க வாய்ப்பு இருந்தது. மாணவர்கள் அனைவரும் கொலை வெறியில் தான் இருந்தோம்.

    பதிலளிநீக்கு
  9. ல‌க்கி,

    ம‌ர‌ண‌த‌ண்ட‌னை வேண்டாம் ச‌ரி, வேறு என்ன‌ மாதிரியான‌ த‌ண்ட‌னை கொடுக்க‌லாம் என்று ந‌றுக்கு தெரித்தார் போல‌ கூறாம‌ல் ந‌ழுவுகிறீர்க‌ளே. ப‌ச். இதுக்கு விருமாண்டி ப‌ட‌த்துக்கு விம‌ர்ச‌ன‌ம் எழுதியிருக்க‌லாம்.

    //தமிழக அளவில் ஏற்கனவே தூக்குத்தண்டனை விதிக்கப்பட்ட தோழர் தியாகு, புலவர் கலியபெருமாள் போன்றவருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்ததில் "முதல்வர் கலைஞருக்கு" முக்கியப் பங்குண்டு. மனிதநேய அடிப்படையில் "முதல்வர்" உடனடியாக இவ்விஷயத்தில் தலையிட்டு ராஜீவ்காந்தி கொலைவழக்கு மற்றும் தர்மபுரி பஸ் எரிப்பு சம்பவங்களில் மரணத்தண்டனை விதிக்கப்பட்டவர்களின் தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றிட ஆவன செய்திட வேண்டும்.//

    உட‌ன்பிற‌ப்பே,

    க‌லைஞ‌ர் க‌ண்டிப்பாக‌ ர‌த்து செய்வார் ம‌துரை தின‌க‌ர‌ன் எரிப்பு வ‌ழ‌க்கில் த‌ண்டிக்க‌ப்ப‌டுவோரின் த‌ண்ட‌னையை. செம‌ கா‌மெடி போங்க‌.

    முத‌லில் க‌ருணாநிதிக்கும் ஜெய‌ல‌லிதாவுக்கும் மாறுகால் மாறுகை வாங்க‌னும்.

    பதிலளிநீக்கு
  10. I seriously condemn your thoughts in this matter...What you are saying doesnt apply for these cruel creatures...As karthi says in Naan Maahan Alla that these people are not only dangerous for a individual but for the whole society...why i am quoting this filmy example is if you had seen the climax where he kills all four boys every audience appreciated that scene which shows that its right and people want that type of justice...i have not seen one say it is wrong

    endrum anubdan,
    N.Parthiban

    பதிலளிநீக்கு
  11. பெயரில்லா4:14 PM, ஆகஸ்ட் 30, 2010

    When everyone follow Gandhi way, then there is no need for capital punishment.

    பதிலளிநீக்கு
  12. பெயரில்லா4:54 PM, ஆகஸ்ட் 30, 2010

    இந்தியா அகிம்சை விரும்பும் நாடு என்று நம்பும் அளவுக்கு உலக நாடுகள் பேக்குகளா என்ன????

    பதிலளிநீக்கு
  13. கிருஷ்,இந்த பிரச்சனை பற்றி எழுதுவதே கொஞ்சம் பிரச்சனை தான்.மரண தண்டனை வேண்டாம்னா மாற்று என்ன என்பது மிக முக்கிய கேள்வி.நம்ம சட்டங்களும் தண்டனைகளும் ரொம்ப வீக்.மேலை நாடுகள மரண தண்டனை எடுத்திட்டு அதுக்கு பதில சிறை வாசமே வாழ்நாள் முழுக்க இருக்கு.இங்க பிறந்த நாள் வந்த புறா விடுற மாதிரி ஆள விடுவாங்க.

    பதிலளிநீக்கு
  14. மனிதாபிமானமற்ற இது போன்ற விஷ ஜந்துக்களுக்கு., மரண தண்டனை உடனே நிறைவேற்றுவதுதான் நீதித்துறையின் மீது மக்களுக்கு இருக்கும் கொஞ்சநஞ்ச நம்பிக்கையாவது மீட்டெடுக்க உதவும் லக்கி...

    ஸட்ரைக்கினால் பேருந்தை இயக்கக்கூடாது என நகரிலேயே தடுத்தபின்னரும் மாணவர்களை காப்பாற்றியாக வேண்டும் என்ற எண்ணத்தில் பேருந்தை வேகமாக நகரினை தாண்டி ஓட்டிச்செல்ல காட்டுமிராண்டி கூட்டமும் தமது வாகன பரிவாரங்களுடன் பெட்ரோல் வாங்கிக்கொண்டு மிக வேகமாக பின்தொடர்ந்து சென்று பஸ்ஸினை மடக்கி கொளுத்தியிருக்கின்றன..

    இது திட்டமிட்ட படுகொலையாகத்தான் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும்..சந்தர்ப்ப சூழ்நிலையால் அல்லது விபத்தை போல அல்ல..

    பதிலளிநீக்கு
  15. பெயரில்லா5:43 PM, ஆகஸ்ட் 30, 2010

    லக்கி,

    உள்ளே மாணவிகள் இருக்கிறார்கள் எனத் தெரிந்தே பெட்ரோல் ஊற்றி கொழுத்திய படுபாவிகளை ரோட்டில் நிற்கவைத்து அதே போல எரித்துக் கொள்ளவேண்டும். அந்த நாதாரிகளுக்கு கொடுக்கப்பட்ட தீர்ப்பை மாற்ற வேண்டும் என எழுதி கடுப்பை கிளப்பாதீர்கள். பெத்த வயிறு எரிந்த கரிக்கட்டையாக வந்த பெண்களை பார்த்து என்ன பாடு பட்டிருக்கும் என எண்ணிப்பார்க்க வேண்டும். ஒரு தேவடியாளுக்கு எதிராக கொடுக்கப்பட்ட தீர்ப்புக்காக 3 உயிரை எரித்த தேவடியா மகன்களுக்காக வக்காலத்து வாங்காதீர்கள்.

    பதிலளிநீக்கு
  16. குற்றம் என்னவென்றாலும் சரி

    மரண தண்டனையில் எனக்கு உடன்பாடு கிடையாது

    இதிலும் கிடையாது

    பதிலளிநீக்கு
  17. பெயரில்லா7:03 PM, ஆகஸ்ட் 30, 2010

    http://www.blog.sanjaigandhi.com/2010/08/blog-post_30.html

    இந்த சம்பவத்தில் இறந்த 3 பெண்கள் மட்டும் தான் அனைவருக்கும் தெரிகிறார்கள். ஒருவேளை மற்றவர்களையும் காப்பாற்ற முடியாமல் போயிருந்தால்?. இந்த கூலிப்படையின் நோக்கம் இந்த 3 பெண்களை மட்டும் கொல்வதல்ல. ஒட்டு மொத்த மாணவிகளையும் கொல்வது தான். எனவே இதில் ஈடுபட்டிருந்த அனைவருக்கும் மரண தண்டனை அளித்திருக்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
  18. Dear Yuvakrishna,
    Capital Punishment is to be opposed vehemently by tooth and nail. By the same time I understand the enormous mental agony/humiliation encountered by the parents of the deceased. BUT forgiving the accused is humane. Ordinary human being can not become 'MAHAAN'. There should be mental courage and extra ordinary will power to do so. Similarly with extra ordinary will and courage one has to fight for the abolition of capital punishment in India.

    பதிலளிநீக்கு
  19. என்ன யுவக்ருஷ்ணரே பாவிகளை ரட்சிக்க வந்த பரமாத்மா என்று நினைப்பா? இந்நேரத்துக்கு குற்றவாளிகளைப் புதைத்த இடத்தில் புல் முளைத்திருக்க வேண்டாமா? என்னிடத்தில் மட்டும் அதிகாரம் இருந்திருந்தால்....

    பதிலளிநீக்கு
  20. தூக்கு தண்டனை குறித்த உமது பதிவு மிக எதார்த்தமானதுதான். ஆனால் நடைபெற்ற தண்டனைக்குறிய நிகழ்வை யாருமே மன்னிக்க இயலாது என்பதை நீங்களும் உணர்வீர்கள் என நம்புகிறேன்.
    மேலும் இவ்வளவு கொடிய நிகழ்வுக்கு நமது நீதிமன்றங்கள் தண்டனை வழங்கிடவே பத்தாண்டுகள் ஆன நிலையில் குற்றவாளிகள் சரியான தண்டனை பெறுவது எப்போது? எப்படி?

    பதிலளிநீக்கு
  21. ராஜிவ்காந்தி கொலைவழக்கில் மரணதண்டனை பெற்ற பேரறிவாளன் - சாந்தன் - முருகன், அப்சல் குரு, இப்போது தர்மபுரி பஸ் எரிப்பு சம்பவ குற்றவாளிகள் நெடுஞ்செழியன் - ரவீந்திரன் - முனியப்பன் உள்ளிட்டோரில் யார் ஒருவர் தூக்கில் போடப்பட்டாலும், இந்தியாவின் அகிம்சை முகமூடி உலகநாடுகள் மத்தியில் சந்திசிரிக்கும் என்பது உறுதி

    # அட போங்கண்ணே.!

    பதிலளிநீக்கு
  22. குற்றம் நடைபெற்றது வாய்க்கா தகராறுக்கோ, இல்லை வரப்பு தகராறுக்கோ அல்ல. தன் கட்சியின் தலைமையை குளிர்விக்க ஒரு ரவுடி கும்பல் செய்த செயல் இது. வக்கீல் ஒருவரை தாக்கியவருக்கு, எம்பி சீட் கொடுத்த தலைமை, உயிரோடு மாணவிகளை கொளுத்தினால், தனக்கு ஒரு எம் எல் ஏ சீட் கூடவா கொடுக்காது என்னும் எண்ணம்தான் இந்த குற்றத்தின் ஊற்றுக்கண்.

    இது போன்ற செயல்கள் சமுதாயத்தில் தவறான முன்னுதாரணங்களை ஏற்படுத்திவிடும். கட்சியில் பெரிய ஆளாக வேண்டுமா, நாலு பேரைப் போட்டுத் தள்ளு என்பது கொள்கையாகி விடும். இவற்றையெல்லாம் களைய, இதுபோன்ற குற்றங்களில் தண்டனைகள் கடுமையாக வேண்டும்.

    பதிலளிநீக்கு
  23. உங்கள் குடும்பத்தில் இது போல ஒரு சம்பவம் நடக்காததால் இப்படி எழுதுகிறீர். என்னை கேட்டால் இவர்களை அணு அணு வாக சித்திரவதை செய்து கடைசியில் தூக்கில் போட வேண்டும். உங்கள் மனைவியையோ அல்லது மகளையோ அல்லது உற்ற உறவினையரையோ பலி கொடுத்து இருந்தால் தெரியும். முட்டை இட்ட கோழிக்கு தானே தெரியும் பொச்சரிப்பு!

    பதிலளிநீக்கு
  24. அசோக் மூர்த்தி10:01 AM, ஆகஸ்ட் 31, 2010

    உயிருக்கு பதில் இன்னொரு உயிருனு பாக்காதீங்க .. அந்த உயிரிழப்புக்கு அந்த பொண்ணு குடும்பம் படுற கஷ்டமும் அது எல்லாத்தையும் விட நியாயம் கிடைக்க அந்த பொண்ணோட அப்பா பட்ட பாட்டையும் பாருங்க .. இது எல்லாத்துக்கும் அவன் ஒரு பத்து வருஷம் ஜெயில்ல இருந்துட்டு வந்தா திருந்திடுவானா..? இந்த தண்டனை அவனுக்காக இல்ல , இனி இந்த மாதிரி மத்தவன் செய்ய கூடாதுனுதான்..

    என்ன லக்கி இவ்ளோ யோசிக்கறீங்க , அந்த பொண்ணோட அம்மா அப்பா நெலமையில நின்னு யோசிச்சு பாருங்க ..
    சில நேரங்களில் பரிதாபமும் தேவை இல்லாத இரக்கமும் கலந்த தீர்ப்பும் கூட நியாயம் கோரி நிற்போருக்கு மீண்டும் ஒரு அநீதி விளைவிக்கிறது !

    மத்த எந்த வழக்கும் எப்டியோ போகட்டும் .. இதுல்ல மரண தண்டனை மிக நியாயமான தீர்ப்பு..

    இன்னொரு கேள்வி...

    நாவரசு கொலை வழக்குல என்ன நடந்துது ? அதுக்கு என்ன சொல்ல போறீங்க ?

    பதிலளிநீக்கு
  25. @தூக்கு தண்டனை அவசியம் தேவை அப்போது தான் இதுபோன்ற குற்றங்கள் குறையும், சற்றே பயம் இருக்கும் மனதில், என்ன செய்ய திமுக தலைமை ஏசி மெஷின் பழுது என்று நீதியரசரை கூற வைத்து காப்பாற்றியது (மதுரை சம்பவம்) போல அஇஅதிமுக தலைமை முயலாதது பாராட்டத் தக்கது. மேலும் அதற்கு சந்தர்ப்பமும்இல்லை என நினைக்கிறேன்,

    பதிலளிநீக்கு
  26. லக்கி,


    சொல்ல வந்த கருத்துக்களோடு உடன்படுகிறேன் பெரும்பாலான இடங்களில்.


    ஆனால் என்ன ஆயிற்று? லக்கியின் பதிவுகள் ரஜினி படம் பார்ப்பது போல இருக்கும் இப்போ அவார்டு படம் போல ....

    தொழில் முறை எழுத்து என்பது சரி ஆனால் உங்கள் ஒரிஜினல் ஸ்டைலில் எழுதினால் இன்னமும் நன்றாக இருக்கும் என்பது என் கருத்து.

    பதிலளிநீக்கு
  27. Sorry Yuva,

    Can not be accepted. Capital punishment is required - just to prevent people from doing all this rowdisim.

    Is human rights is not for common people - it is always for such unwanted elements of the society.

    When they decide to take the law into their hands - let them face the concequences.

    பதிலளிநீக்கு
  28. i wont accept your thoughts. Then what is the rate for that 3 lives. If we hang these 3 there then only no body will do this in future. Firing the public property by politicians is become an usual in our country. If we want to change that the Judgement given by supreme court is 100% correct. The Mercy petition should be rejected. The Mercy should be shown only those who done the mistake apart from their knowledge or because of their illness.

    பதிலளிநீக்கு
  29. மரணத்தண்டனை விதிக்கப்பட்டு மரணமடையும் ஒருவனின் குடும்பம்தான் தண்டனையை அனுபவிக்கிறதே தவிர, உலகை விட்டு விடைபெற்றுவிடும் குற்றவாளி அல்ல.


    உயிருள்ள வார்தைதள்.

    பதிலளிநீக்கு
  30. \\ஒரு வேளை, நாங்கள் அன்று சில நிமிடங்கள் முன்பு சென்றிருந்தால் அந்த பொறம்போக்குகளை எங்கள் கையாலேயே கொன்றிருக்க வாய்ப்பு இருந்தது. மாணவர்கள் அனைவரும் கொலை வெறியில் தான் இருந்தோம்.\\

    இதை இதை தான் உணர்ச்சி வசப்பட்ட நிலை என்று சொல்லப்படுகின்றது சஞ்சய். அது ஒரு திட்டமிடப்பட்ட செயல் அல்ல.(ராஜீவ் கொலை போல) இந்த தண்டனை விதிக்கப்பட்ட மூவரும், அன்று அவர்கள் உங்கள் கையில் கிடைத்திருந்தால் நீங்களும் ஒரே மாதிரியான குற்றவாளி தானே அப்படிப்பார்த்தா.

    நான் அந்த மரணதண்டனையை நியாப்படுத்தவில்லை எனினும் திட்டமிட்ட கொலைக்கும் உணர்சிவசப்பட்ட நிலையில் நடைபெறும் கொலைக்கும் வித்யாசம் இருக்கு என்றே சொல்கின்றேன்.

    பதிலளிநீக்கு
  31. ஜெயக்குமார்2:44 PM, ஆகஸ்ட் 31, 2010

    :(

    முற்போக்கு முகமூடி கிடைப்பதற்காக என்ன வேண்டுமானாலும் உளரலாம் என்பதற்கு உங்களின் இந்தப் பதிவு சாட்சி. இதெல்லாம் ஒரு பொழப்பு? இவ்வளவு கொடூரமானவர்களுக்கு வக்காலத்து வாங்கும் உங்களுக்கெல்லாம் உங்கள் வீட்டில் எழவு விழும் வரையில் ( God forbid) 3 பெண் குழந்தைகளின் பெற்றோர்கள் படும் நரக வேதனையை உணர முடியாது. நல்லா இருங்க லக்கி.

    பதிலளிநீக்கு
  32. //இதை இதை தான் உணர்ச்சி வசப்பட்ட நிலை என்று சொல்லப்படுகின்றது சஞ்சய். அது ஒரு திட்டமிடப்பட்ட செயல் அல்ல.(ராஜீவ் கொலை போல) இந்த தண்டனை விதிக்கப்பட்ட மூவரும், அன்று அவர்கள் உங்கள் கையில் கிடைத்திருந்தால் நீங்களும் ஒரே மாதிரியான குற்றவாளி தானே அப்படிப்பார்த்தா.//

    அண்ணே தயவு செஞ்சி மன்னிச்சிடுங்க.. வர வர உங்க ஜல்லியை சகிச்சிக்கவே முடியலை.. 3 பெண்களை எரித்துக் கொன்றிருக்கிறார்கள். இது ஒன்னும் வாகன விபத்தல்ல. எதிர்பாராமல் நிகழ்ந்துவிட்டது என சொல்ல. பெட்ரோல் ஊற்றி கொளுத்தி இருக்கிறார்கள். மாணவிகள் தாகத்திற்கு குடிக்கவா பஸ்ஸில் பெட்ரோலை ஊற்றினார்கள். இது திட்டமிட்ட படுகொலை. எங்கள் நினைவில் இறந்த 3 மாணவிகள் மட்டும் தெரியவில்லை. பஸ்ஸில் இருந்த ஒட்டு மொத்த மாணவிகளும் தெரிந்தார்கள். காப்பாற முடியாமல் போயிருந்தால் அனைவரும் இறந்திருப்பார்கள். இபப்டி பல உயிர்களை பலி கொடுப்பவர்கள் உயிருடன் இருக்கக் கூடாது என்ற வெறியில் இருந்தோம். அந்த பன்னாடைகளிடம் அப்படி என்ன காரணம் இருந்தது அந்த மாணவிகளின் மேல்?

    பதிலளிநீக்கு
  33. பெயரில்லா6:29 PM, ஆகஸ்ட் 31, 2010

    The accused were requested and begged by the principal and other people to wait until the students gets down from the bus... but this was the accused said...

    Koluthuda bussa athanai perum sakattum... how cruel their motive and they were trying to achieve...

    Sir, before advocating Death Penalty for these people... pls... pls... close your eyes for a moment and imagine the same situation in your life and your mother, wife or sister got into this situation...

    what will be your stand???

    HONEST ANSWER PLEASE...


    (by the way your it's a well written article)

    பதிலளிநீக்கு
  34. பெயரில்லா8:25 PM, ஆகஸ்ட் 31, 2010

    Sorry, I can not accept this.

    These type of criminals are to be executed in the public as done in Arab countries.

    பதிலளிநீக்கு
  35. தமிழ் பதிவர் உலகம் பெருமை கொள்ளதக்க கட்டுரை வாழ்த்துக்கள் யுவா

    பதிலளிநீக்கு
  36. பெயரில்லா9:14 PM, ஆகஸ்ட் 31, 2010

    @லக்கி யுவக்ருஷ்ணா: நீங்கள் எழுதிய முடிச்சூர் பற்றிய கட்டுரை நன்றாக இருந்தது. ஆனால் தருமபுரி பஸ் எரிப்பு சம்பவத்தையும் தூக்குதண்டனையை ஒழிப்பதை பற்றியும் இணைப்பது சற்றும் பொருத்தமில்லாதது மட்டுமல்ல, முதிர்ச்சி இல்லாததும் கூட.

    பதிலளிநீக்கு
  37. இந்த ஏரியால கெட்டவார்த்தை அலவ்டா?

    பதிலளிநீக்கு
  38. ஏம்ப்பா லக்கிலுக்கு, சும்மா கலக்கிட்டே ராசா, என்னமா எழுதிருக்கீரு..., என்னா பகுத்தறிவு, என்னா முற்போக்கு, என்னா மனிதநேயம், என்னா சமுதாயக் கண்ணோட்டம் சும்மா பின்னி பெடெலெத்துட்டே ராசா...

    இங்கே இந்த பதிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறவங்களுக்கு நான் ஒன்னு சொல்லிக்க விரும்புறேன்...

    நீங்க யாராவது லக்கி அண்ணாச்சியோட குடும்பத்தையே ஒயிட் பெட்ரோல வச்சி கொளித்தி கொல்லுங்க..., அப்பவும் அண்ணாச்சி..., உங்களுக்காக அவரே வக்கீல் பிடிச்சி தூக்குதண்டனை குடுக்கக் கூடாதுன்னு சொல்லி எப்படியாவது தடுத்துடுவாரு...

    அது மட்டுமில்ல, அதுக்கப்புறம் தூக்குதண்டனைய எதிர்த்து இதை விட ஆக்ரோசமா ஒரு பதிவு போடுவாரு..., பேச வந்துட்டீங்க பேச... போங்கய்யா போய் புள்ள குட்டிகள படிக்க வைய்ங்கப்பா...

    (இதில் உள்குத்து ஏதும் இல்லை என்பதை சொல்லிக் கொள்கிறேன், அண்ணாச்சி லக்கி லுக்கு...,நீங்க எழுதின மேடைப் பேச்சுக்கு கொஞ்சமும் குறையில்லாம உங்களுக்காக நெறய பேசிருக்கேன் ...பாத்து ஏதாவது செய்ங்க)

    இந்த பதிவுலகத்துக்கு வந்து மூனு மாசத்துல உங்க வலை பக்கம் படிக்கச் சொல்லி ஏகப்பட்ட அட்வைசு..., இன்னிக்கி முதல் தடவை வந்து படிச்சி உடம்பெல்லாம் புல்லரிச்சி போச்சி அண்ணேன்...

    பி.கு.- என்னோட அன்றாயரு பிடிச்சி உருவுற அளவுக்கு நான் ஒர்த்து கிடயாதுண்ணேன்..., அதனால நீங்க உங்க கொள்கைல உறுதியா இருங்கோ..., சும்மா பேப்பர்ல படிச்ச நூசுதானே..., தினம் தினம் பாகுறதுதானே...

    பதிலளிநீக்கு
  39. kolaikku kolai theervaakathu unmai thaan. thankalin thalaiviyai kaithu seithu vittarkal enpatharkaai, eppaavamum ariyatha maanavikalai koluthiyathukku enna seiyalaam enru ninaikireerkal. 26/11 thaakuthalil pala nooru uyirkalai soorai aadiya kasaab ku enna thandanai kodukkalaam. gandhi valiyil mannippu valanki vidalama?oru velai mannippu valanki vittal ivarkal thirunthi vaalnthu viduvaarkala?
    meendum ithe ponru sila uyirkalai kaavu vaanga maattaarkal enpathrkku yaar urithi alikkireerkal. . .

    பதிலளிநீக்கு
  40. அப்பு 3 உயிர் போச்சே அது சரியா ?
    தண்டனை தப்பு செய்தவனுக்கு கொடுப்பது அவனை தண்டிக்க அல்ல , அடுத்தவன் தப்பு செய்ய பயப்படனும் அதுக்கே ..
    உயிர் இழந்தவர்களை உங்க சகோதரியா நினைச்சு பாருங்க ( உங்களுக்கே கொலைவெறி வரும்)

    வழி மொழிகிறேன்...!

    பதிலளிநீக்கு
  41. This article is an advance recommendation for the accused persons in Dinakaran issue (if convicted, in this regime)

    பதிலளிநீக்கு
  42. //இதே கருத்தை மதுரை தினகரன் ஊழியர்கள் கொல்லப்பட்ட சம்பவத்துக்கும் பொறுத்திப் பார்த்துக்
    கொள்ளலாம்.//
    so, intha dinakaran uzhiyarkal erithu kollappatta vazhakkil ulla kutravaalikal thookkilirunthu thappu vikka vendumaanal ippo ivarakalyum thookkilirunthu viduthalai seyyanum. Athane ungal aasai lucky. irandume arajakam niranthahu.

    //ஒருவேளை இம்மூவரும் தூக்கில் இடப்பட்டால் - அதன் விளைவாக சிறைவாசலில் இறந்தவர்களின் உற்றாரும், உறவினரும் எழுப்பிடப்போகும் மரண ஓலத்தையும் தோழர் நேரில் கேட்பாரேயானால் - மரணதண்டனை குறித்த தனது மனப்பான்மையை மாற்றிக் கொள்வார் என்று நம்புகிறேன்//

    yen Antha 3 penkal Marana oolamidum pothu intha 3 perukkum illa intha criminal kudumpaththil ullavarkal T.V la partha pothum antha olam nencha sudavillaiya!

    பதிலளிநீக்கு
  43. I personally know one of the girl's family.

    I know the girl very well and she used to call me anna.

    It used to be a happy family.

    Now the family just survives.

    There is really no life in their activities.

    Its as if these guys killed the whole family.

    I am pretty sure thats what has happed to the remaining 2 families.

    பதிலளிநீக்கு
  44. வணக்கம் யுவகிருஷ்ணா...

    தண்டணைகளில் கடுமை குறைய குறைய, தங்களுக்கு சாதகமாய் இல்லை என்றால் தேசத்தை காட்டி கொடுக்கவும் காவு வங்கவும் தயாராயிருக்கும் இன்றைய அரசியல்வாதிகளுக்காக இந்தியாவின் சட்டங்கள் இன்னும் கடுமையாக்கப்பட வேண்டும்!!!

    இந்த சுட்டி உங்களுக்காக

    http://minnalann.blogspot.com/2010/09/blog-post.html

    பதிலளிநீக்கு