"அவ மாடியிலே இருக்கா? ஏன் கூட விளையாட மாட்டியா?" நடுத்தர வயது ஆண்ட்டியின் கிறங்கடிக்கும் குரல்.
"ஆண்ட்டீ.. அது வந்து..."
"ஏன் எனக்கு வயசு ஆயிடிச்சின்னு நெனைக்கிறீயா? உனக்கு இன்வைட் அனுப்பினாதான் வந்து விளையாடுவியா? கம்மான்...."
"இனிமே யார் வேண்டுமானாலும் யார் கூட வேண்டுமானாலும் விளையாடலாம். லாகின் பண்ணுங்க ஐபிஐபிஓ.காம்" - அறிவிப்பாளரின் வாய்ஸ் ஓவரோடு அந்த 'ரேடியோ கமர்சியல்' முடிகிறது. ஒரு குறும்பான 'கிரியேட்டிவ்' என்றாலும், கேட்டவுடனேயே பெருசுகளுக்கு 'பக்'கென்றாகிறது. சிறுசுகளுக்கு 'பகீரென்று' பற்றிக் கொள்கிறது. நமக்கே கூட அந்த ஆண்ட்டியோடு விளையாடிப் பார்க்கலாமா என்று ஆசை தோன்றுகிறது.
நிற்க. இம்மாதிரியான 'ஆண்ட்டி ஃபோபியா ஆசை' உங்களுக்கு அடிக்கடி தோன்றுகிறதா?
இதை உளவியல் நிபுணர்கள் 'இடிபஸ் காம்ப்ளக்ஸ்' (Oedipus complex) என்கிறார்கள். இதனை ஓடிபஸ் காம்ப்ளக்ஸ் என்றும் சிலர் உச்சரிக்கிறார்கள். ஆங்கில எழுத்துகளை பார்க்கும்போது ஓடிபஸ்தான் சரியானதாக தோன்றுகிறது. ஆயினும் பேச்சுவழக்கில் இடிபஸ் என்பது இயல்பானதாக இருப்பதால், நாம் இடிபஸ்ஸையே இந்த கட்டுரைக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். பஸ்ஸில் ஆண்டிகளை இடிக்கும் இளைஞர்களுக்கும் இடி-பஸ் காம்ப்ளக்ஸ்தான் இருக்கிறது என்பதை சொல்லவே தேவையில்லை. ஓரிரு ஆண்டுகளுக்கு முன்பாக அந்த நாற்பதை தொட்ட நடிகை, தன் வயதில் பாதியே இருக்கும் ஒரு இளைய நடிகரை அவ்வப்போது ஈ.சி.ஆருக்கு வீக்கெண்டுகளில் அள்ளிக்கொண்டு போவதாக ஒரு கிசுகிசு வாசித்திருப்பீர்கள். அந்நடிகருக்கு இந்த காம்ப்ளக்ஸ்தான் இருந்திருக்கும்.
டீனேஜில் இருக்கும்போது ஏதோ ஒரு மாலைமதியில் வந்த கதையில் முதன்முறையாக இப்படி ஒரு உளவியல் நோயை கேள்விப்பட்டேன். ஏராளமான பெண் சகவாசத்தால், கிளி மாதிரி மனைவியை சரியாக கண்டுகொள்ளாத கணவன். கிளி தன் வீட்டில் வாடகைக்கு குடியிருக்கும் 17 வயது பையனோடு அவ்வப்போது டென்னிஸ் விளையாடுகிறது. டென்னிஸ் போரடிக்கும்போது கேரம், செஸ்ஸென்று முன்னேறி செக்ஸ் விளையாடுமளவுக்கு கொண்டுபோய் விடுகிறது. கடைசியில் பிரச்சினை 'கொலை' ரேஞ்சுக்கு சென்று முடிவதாக க்ளைமேக்ஸ். எழுதியவர் எஸ்.பாலசுப்பிரமணியமென்று மங்கலாக நினைவு. அந்தக் கதையில்தான் இடிபஸ் காம்ப்ளக்ஸ் குறித்து ஒரு அத்தியாயத்தில் விலாவரியாக படித்த நினைவு.
சிக்மண்ட் ப்ராய்ட் இந்த உளவியல் பிரச்சினை குறித்த நெடிய ஆய்வினை, தகுந்த கேஸ் ஸ்டடிகளோடு மேற்கொண்டிருக்கிறார். மிகச்சுருக்கமாக 'தன்னைவிட வயது மூத்த பெண்கள் மீது ஏற்படும் பாலியல் ஆசை' என்று நாம் இடிபஸ் காம்ப்ளக்ஸை பொதுவானதாக வரையறை செய்துக் கொள்ளலாம். மேலைநாடுகளில் கொஞ்சம் பச்சையாக இதை விளக்குகிறார்கள். அதாவது அம்மா மீதான பாலியல் ஆசை. பெண்களைப் பொறுத்தவரை உல்டா. அப்பா மீதான.. இதை எலெக்ட்ரோ காம்ப்ளக்ஸ் என்கிறார்கள். விலங்குகளைப் பொறுத்தவரை இது சகஜமான, இயற்கையான மேட்டர்தான். 'ஆறாவது அறிவு' பெற்றுவிட்ட மனிதக்குலம் இதை இயற்கைக்கு மாறானதாகவே கருதுகிறது. இம்மாதிரியான ஆசை சர்வநிச்சயமாக ஒரு சமூகக் குற்றம். சட்டப்படி குற்றமா என்று தெரியவில்லை.
மேற்கண்ட பாராவை வாசிக்கும்போதே கொஞ்சம் அருவருப்பாக குமட்டுகிறது இல்லையா? முற்றிப்போன இடிபஸ் காம்ப்ளக்ஸ் நிலையில் நீங்கள் இல்லை என்று மகிழ்ச்சியடையலாம். ஆனால் 'இடிபஸால்' பீடிக்கப்பட்டவர்களுக்கு இது இயல்பான, இயற்கையான ஆசைதான். உதாரணத்துக்கு ஹோமோ செக்ஸ், லெஸ்பியன் போன்ற ஆசை கொண்டவர்களுக்கு ஓரினச்சேர்க்கைதான் இயல்பானது. எதிர்பால் காமம் என்பது அவர்களுக்கு அருவருப்பு ஏற்படுத்தக் கூடியதாக இருக்கும். இப்படித்தான் நாம் உளவியல் பிரச்சினைகளை புரிந்துகொண்டாக வேண்டும்.
இடிபஸ் என்ற பெயர் கிரேக்கப் புராணம் உலகுக்கு தத்தெடுத்து தந்தது. தந்தையைக் கொன்று தாயை மணந்தவனின் கதையில் வரும் கதாபாத்திரம். நம்மூர் விக்கிரமாதித்யன் கதைகளில் கூட இதுபோல ஒரு கதை உண்டு. அரசன் ஒருவன் நகர் உலா வரும்போது, அழகியப் பெண்ணைக் கண்டு காமுறுகிறான். இவனைக் கண்டதுமே அப்பெண்ணின் மார்பில் இருந்து பால் பீய்ச்சி அடிக்கிறது. அதைக்கண்டே அவள் தன்னுடைய தாய் என்பதாக உணர்வதாகப் போகும் கதை. பிள்ளையார் ஏன் பிரம்மச்சாரி என்பதற்கு ஊரில் ஒரு கதை சொல்லுவார்கள். தன் தாயைப் போலவே தாரம் வேண்டும் என்று தேடித்தேடி, கிடைக்காததால் அரசமரத்தடியில் போய் உட்கார்ந்துவிட்டார் என்பார்கள். இதெல்லாம் கூட ஒருவகையிலான இடிபஸ்தான்.
ரிப்போர்ட்டரிலோ, ஜூ.வி.யிலோ ஒரு தொடராக எழுதப்பட வேண்டிய மேட்டர் இதுவென்றாலும் அவசர அவசரமாக இக்கட்டுரையை முடிக்கிறேன். ஆக்சுவலி இன்று காலையில் நந்தனம் சிக்னலில் பச்சை விளக்குக்காக காத்திருந்தேன். இடப்பக்கம் ஒரு சூப்பர் ஃபிகர் ஸ்கூட்டியில். இருபது வயதிருக்கலாம். ஸ்லீவ்லெஸ் கருப்பு சுரிதார் அணிந்திருந்தாள். எந்திரன் ஐஸ்வர்யாராயை மாதிரி இருந்த அவளை சைட் அடிப்பதை தவிர்த்துவிட்டு, வலதுப்பக்கமாக நின்றிருந்த சுமாரான ஆக்டிவா ஆண்டியை சைட் அடித்துக் கொண்டிருந்தேன். மூளையின் 'எண்டாக்ரீன்' சிஸ்டத்தில் ஏதாவது எர்ரர் ஆகிவிட்டதா அல்லது எனக்கு இடிபஸ் காம்ப்ளக்ஸ் வந்து தொலைத்துவிட்டதா என்ற அடிப்படை ஐயத்தின் விளைவே இந்தக் கட்டுரை.
ஆபிஸுக்கு வந்து சில இளைஞர்களிடம் விசாரித்துப் பார்த்தால், அவர்களும் என்னைப் போலவே 'ஆண்டி மேனியா'வால் பாதிக்கப்பட்டிருப்பது புரிகிறது. இது இயல்பானதுதான். தமிழ்ச் சமூக இளைய தலைமுறை 'இடிபஸ்' காம்ப்ளக்ஸால் பாதிக்கப்பட்டிருப்பதால்தான் ஆயாக்கள் தெறமை காட்டியதாக இருந்தாலும் 'தமிழ் பிட் இருக்கா?'வென்ற ஆவலான கேள்வியோடு பர்மாபஜாரில் அலைந்துக் கொண்டிருக்கிறது.
எச்சரிக்கை : தேவையான தரவுகள் எதையும் போதிய முறையில் ரெஃபர் செய்யாமல், அடாவடியாக எழுதப்பட்டது என்பதால் இந்தப் பத்தியில் நிறைய ஃபேக்சுவல் எர்ரர்ஸ் இருக்கலாம்.
இதுக்குத் தான் ’சவீதா பாபி’ கதையெல்லாம் ரொம்பப் படிக்காதீங்கன்னு சொல்றது.
பதிலளிநீக்குகேட்டாத்தானே?
// 'ஆண்டி ஃபோபியா'வால் பாதிக்கப்பட்டிருப்பது புரிகிறது. //
பதிலளிநீக்குஅண்ணே போபியா என்றால் பயம். இது "மேனியா" வகையில் வரும். "ஆண்டிமேனியா"
these complex mattrs are very old. amnesia endru oru noi irukkudam. gnabakam maranthu vidumam. ashtma endru oru noi irukkam moochu thinarumam ena eluthuvathu pol ullathu.
பதிலளிநீக்குnalla aaraaya vendiya kadduraithaan. sila visayangalai eerrukkollathaan vendum.
பதிலளிநீக்குபல தவறுகள்
பதிலளிநீக்கு1.
ஆண்டி போபியா - ஆண்டிகளை வெறுப்பது
ஆண்டி பிலியா - ஆண்டிக்களை விரும்புவது
அடுத்தது
பதிலளிநீக்குஈடிபஸ் / எலக்ட்ரா என்பது வேறு
நீங்கள் எழுதியிருப்பது வேறு
--
நீங்கள் எழுதியிருப்பது பெருந்தினை
அவ்வளவு தான்
--
ஈடிபஸ் நுட்பமானது
சிட்டிக்கு தன் தாய் ஸ்தானத்தில் இருக்கும் சனாவுடன் ஏற்படும் காதல் தான் ஈடிபஸ்
பதிலளிநீக்குமற்றப்படி வயதான பெண்களின் மேல் ஆசைப்படுவது ஈடிபஸ் அல்ல !!
பதிலளிநீக்கு--
அது ஆண்டி போபியாவும் அல்ல
--
வேண்டுமென்றால் geriatrophilia என்று வைத்துக்கொள்ளுங்கள்
ஒடிபஸ் சாரி இடிபஸ் பற்றி நல்ல விளக்கம். ஈர்ப்பு எப்போதும் ஒவ்வொரு மனிதரையும் பொறுத்தது தான். அது காம ரீதியான ஈர்ப்பு தானே அது அப்படித்தானே ஏற்படும்
பதிலளிநீக்கு//ஆக்சுவலி இன்று காலையில் நந்தனம் சிக்னலில் பச்சை விளக்குக்காக காத்திருந்தேன். //
பதிலளிநீக்குநல்ல வேலை
சிகப்பு விளக்கிற்கு காத்திருக்கவில்லை தானே
அது வரை சந்தோஷம்
இது தேவையா யுவ கிருஷ்ணா? மிகவும் மெச்சூர்டாக சமீப காலங்களில் எழுதி வந்த நீங்கள் இந்த ஸ்டேஜைஎல்லாம் கடந்து விட்டீர்கள் என்று நான் நினைத்தது என் பிழைதானோ. உங்கள் எழுத்தின் மீது மதிப்பும், உங்கள் வளர்ச்சியின் மீது அக்கறையும் இருப்பதால் எழுதினேன். மற்றபடி என் எதிர்பார்ப்புக்கெல்லாம் நீங்கள் பொறுப்பாக முடியாது என்பதை உணர்ந்தே உள்ளேன்.
பதிலளிநீக்குஓரினச் சேர்க்கையய் உளவியல் பிரச்சனையாக பாகுபடுத்துவது சரியில்லையே தோழர். அது உடற்கூறு தொடர்புடைய விஷயம், இயற்கைக்கு மாறுபட்டதல்ல என்று ஆய்வு செய்யப்பட்டுள்ளது. ஆனால் ஒடிபஸ் காம்ப்ளக்ஸ் முற்றிலும் உளவியல் தொடர்புடையதே.
பதிலளிநீக்குPHOBIA is fear... MANIA is the right word
பதிலளிநீக்குஆண்டிஃபோபியா என்று கூறலாகாது. நீங்கள் கூற நினைப்பது ஆண்டிஃபிலியாவாக்கும்.
பதிலளிநீக்குஆண்டிஃபோபியா என்றால் ஆண்டிகளைக் கண்டால் வரும் வெறுப்பை குறிக்கும். ஃபிலியாவோ விருப்பைக் குறிக்கும்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
FOR MORE DETAILS REFER WITH DR.RUDHRAN.
பதிலளிநீக்குயுவா
பதிலளிநீக்குப்ராய்ட் சொல்வது உண்மை. பொதுவாக ஆண்களுக்கு சற்று வயதான பெண்கள் மீது ஈர்ப்பு இருக்கும். இதற்கு பல காரணங்கள் இருக்கின்றன.
Google-ல் MILF என்று அடித்து பாருங்கள். இந்த MILF க்கு Abbreviation சொன்னால் என்னை செருப்பால் அடிப்பார்கள்.
//எந்திரன் ஐஸ்வர்யாராயை மாதிரி இருந்த அவளை சைட் அடிப்பதை தவிர்த்துவிட்டு, வலதுப்பக்கமாக நின்றிருந்த சுமாரான ஆக்டிவா ஆண்டியை சைட் அடித்துக் கொண்டிருந்தேன்
ஐஸ்வர்யாராயும் ஆண்டிதான்.
அடுத்து எழுதப்போகும் ஒரு நல்ல கட்டுரைக்கு முன்னோட்டமாக இதை கொள்ளலாம். லக்கியின் தைரியத்துக்கு வாழ்த்துகள்.
பதிலளிநீக்கு\\ஆபிஸுக்கு வந்து சில இளைஞர்களிடம் விசாரித்துப் பார்த்தால், அவர்களும் என்னைப் போலவே 'ஆண்டி ஃபோபியா'வால் பாதிக்கப்பட்டிருப்பது புரிகிறது. இது இயல்பானதுதான். தமிழ்ச் சமூக இளைய தலைமுறை 'இடிபஸ்' காம்ப்ளக்ஸால் பாதிக்கப்பட்டிருப்பதால்தான் ஆயாக்கள் தெறமை காட்டியதாக இருந்தாலும் 'தமிழ் பிட் இருக்கா?'வென்ற ஆவலான கேள்வியோடு பர்மாபஜாரில் அலைந்துக் கொண்டிருக்கிறது//
பதிலளிநீக்குஇது தான் பாஸ் ஆராய்ச்சி என்பது .. ஹா ஹா ஹா ..
ஹோமோ செக்ஸ், லெஸ்பியன் போன்ற ஆசை கொண்டவர்களுக்கு ஓரினச்சேர்க்கைதான் இயல்பானது. எதிர்பால் காமம் என்பது அவர்களுக்கு அருவருப்பு ஏற்படுத்தக் கூடியதாக இருக்கும். இப்படித்தான் நாம் உளவியல் பிரச்சினைகளை புரிந்துகொண்டாக வேண்டும்.
பதிலளிநீக்கு=-------------
மிக சரியே
இதில் கூட விவாதித்தோம்..
http://punnagaithesam.blogspot.com/2010/10/1_08.html
நல்ல மேலதிக தகவல் டாக்டர் புரூனோ
ஈடிபஸ் / எலக்ட்ரா என்பது வேறு
பதிலளிநீக்குநீங்கள் எழுதியிருப்பது வேறு
அதே
அடடே... காட்டுரை சூப்பர்ங்னே!
பதிலளிநீக்குஆமா பாஸ், எனக்கு கூட சன் டிவி வாழ்வை மாற்றலாம் வாங்க நிகழ்ச்சி ஆன்டி மீது கொள்ளை காதல் இப்போ.
பதிலளிநீக்கு