14 அக்டோபர், 2010

பரத்தை கூற்று - அனைவரும் வருக!

நண்பரும், படைப்பாளியுமான எழுத்தாளர் சி.சரவணகார்த்திகேயன் இப்போது கவிஞராகவும் பீறிட்டுக் கிளம்பியிருக்கிறார். அவரது இரண்டாவது நூல்/முதலாவது கவிதைத் தொகுப்பு 'பரத்தை கூற்று' எதிர்வரும் சனிக்கிழமை (16.10.2010) அன்று மாலை 5 மணியளவில் வெளியிடப்படுகிறது.

இடம் :
டிஸ்கவரி புக்பேலஸ், முனுசாமி சாலை, கே.கே. நகர், சென்னை-78.

வரவேற்புரை :
அகநாழிகை பொன்.வாசுதேவன்

புத்தகம் வெளியிட்டு சிறப்புரை :
எழுத்து எந்திரன் சாருநிவேதிதா

நன்றியுரை :
எழுத்தாளர்/கவிஞர் சி.சரவணகார்த்திகேயன்

காமம் தொடர்பான புத்தகம் என்பதால் சாருவின் பேச்சு காமச்சுனாமியாய் தாக்கும் என்று எதிர்ப்பார்க்கப் படுகிறது. எனவே உத்தம தமிழ் எழுத்தாளரின் ரசிகர்களும் முக்காடு போட்டுக்கொண்டாவது வந்து கூட்டத்தை ரசிக்கலாம். மாலை 4.50 மணியளவில் 'இலக்கிய ரோபோ சாருநிவேதிதா அகில உலக ரசிகர்மன்றம்' சார்பாக அவரது கட்டவுட்டுக்கு பாலாபிஷேகமும் நடைபெறும்.

அனைவரும் வருக!

7 கருத்துகள்:

  1. //'இலக்கிய ரோபோ சாருநிவேதிதா அகில உலக ரசிகர்மன்றம்' //

    மன்றத்துல எதாச்சும் பதவி இருந்தா குடுங்க பாஸ்...

    //கட்டவுட்டுக்கு பாலாபிஷேகம்//

    பீராபிஷேகம் தான் கரெக்டா இருக்கும்...

    பதிலளிநீக்கு
  2. //'இலக்கிய ரோபோ சாருநிவேதிதா அகில உலக ரசிகர்மன்றம்' சார்பாக அவரது கட்டவுட்டுக்கு பாலாபிஷேகமும் நடைபெறும்.//

    ஒரு பக்கெட் பால் இருக்கு. எந்த அட்ரஸ்கு அனுப்பனும்?

    பதிலளிநீக்கு
  3. லக்கி எந்திரன் சாருவுக்கு பிடிக்கலையாமே?. எந்திரன்னா டென்ஷன் ஆகிடப் போறார்.

    பதிலளிநீக்கு
  4. இப்போதுதான் வாசிக்கிறேன். நன்றி யுவா.

    பதிலளிநீக்கு
  5. மீட்டிங் முடிஞ்ச அப்பால இன்னா எதுன்னு ஒரு போஸ்டு போட்டிருக்கலாமே தல. அண்ணன் உண்ம வெளம்பி சாரு, நிறிய நிறிய உண்மைய புட்டு புட்டு வெச்சாராமே?

    பதிலளிநீக்கு