உருப்படாதது நாராயணன், அவருடைய பதிவில் குறிப்பிட்டிருக்கும் என்னுடைய ஃபேஸ்புக் ஸ்டேட்டஸ் இதுதான் : "தமிழ்
அந்த இரட்டை நாக்கு கீபோர்ட் புலியோடு 'கருத்து மோதல்' எனக்கு இரண்டு சந்தர்ப்பங்களில் பொதுவாக ஏற்பட்டிருக்கிறது.
1) சாருநிவேதிதா குறித்த அந்த ஜென்மத்தின் இழிமொழிகள்
2) மசாலாப் படம் பார்ப்பவர்களை மடையர்கள் என்று அந்த ஜென்மம் விமர்சிக்கும்போது
இவை இரண்டுமே என் தனிப்பட்ட ரசனையின் அடிப்படையில் நிகழ்ந்த விபத்து என்பதால், இவற்றைப் பற்றி விலாவரியாக எதுவும் விளக்கம் அளிக்கப் போவதில்லை. அவரவர் தேர்வு அவரவர்க்கு.
இந்த கொட்டையெடுத்த புளியை ஓரிரு சந்தர்ப்பத்தில் நேரில் சந்தித்து உரையாடித் தொலைக்க வேண்டிய அபாக்கிய நிலைமை எனக்கு நேர்ந்து தொலைத்திருக்கிறது. அவ்வேளையில் இவரைப் பற்றிய ஒரு அனுமானத்துக்கும் வரமுடிந்தது. இவருக்கு நண்பர்களே இருக்க வாய்ப்பில்லை. இவர் மற்றவர்கள் பேசுவதை கேட்கவே விரும்புவதில்லை. இவர் சொல்லுவதை மற்றவர்கள் எந்த எதிர்கேள்வியும் கேட்காமல் ஒப்புக்கொள்ள வேண்டும். செலக்டிவ்வாக கள்ளத்தனப் பேச்சு சுபாவம் கொண்டவர். ஓக்கே. இது என்னுடைய தனிப்பட்ட அவதானிப்பு. ஜோசியம் மாதிரி. கொஞ்சம் முன்னே பின்னே உண்மை நிலவரம் இருக்கலாம். ஆனால் இவரோடு பழகிய வேறு சில இணைய துரதிருஷ்டசாலிகளும் கிட்டத்தட்ட இதே மாதிரியான மதிப்பீட்டினை தனிப்பேச்சில் முன்வைக்கிறார்கள்.
கீபோர்ட் புளியின் கடந்தகால செயல்பாடுகளை லீசில் விட்டுவிடுவோம். அவற்றையெல்லாம் புரட்டிப் பார்த்து ரெஃபரென்ஸ் எடுக்க வேண்டுமானால் கடுமையான மன உளைச்சலுக்கு உள்ளாகி நாம்தான் கீழ்ப்பாக்கத்துக்கு செல்ல நேரிடும். எதிர்வினை என்று உளறிவைத்திருக்கும் லேட்டஸ்ட் பதிவிலிருந்தே புளியின் இரட்டை நாக்கை புரிந்துகொள்ள முடியும்.
//என் பதிவுகள் மொக்கை எனத் தெரிந்தும் ஏன் வாசித்து துன்புறுகிறீர்கள், நான் உங்கள் பதிவுகளை புறக்கணித்து விட்டு செல்வதைப் போல் புறக்கணித்து செல்வதுதானே என்கிற என் கேள்விக்கு அவர் இதுவரை முறையான பதிலளித்தது போல் தெரியவில்லை. // என்று ரோஸாவசந்தைப் பார்த்து கேட்கிறார்.
ஆனால், அதற்கு சில பாராக்களுக்கு முன்பாக //இணையத்தில் இதுவரை இத்தனை கடுமையான மொழியை நான் உபயோகித்திருப்பது சாருவைக்குறித்துதான். வாசகர்களை ஆபாசமான மொழியிலும் சக எழுத்தாளர்களை வன்மத்துடன் தொடர்ந்து எழுதும் சாருவின் முன்னால் வைக்கும் என்னுடைய எதிர்ப்பு அரசியல் அது.// என்றும் எழுதித் தொலைக்கிறார்.
என்ன கருமம் அய்யா இது?
நம் புளி தினமும் சாருவைப் படித்துவிட்டு ஜீரணம் ஆகாமல் எதையாவது கழிந்து வைப்பாராம். ஆனால் ரோஸா மட்டும் இவரது கழிவுகளை புறக்கணித்து செல்ல வேண்டுமாம். ரோட்டில் செல்லும்போது, தெருவோரம் யாராவது கழிந்து வைத்திருந்தால் எல்லோரும் மூக்கைப் பொத்திக் கொண்டுதான் போவோம். ஏன் மூக்கைப் பொத்துகிறாய்? இங்கேதான் கழிந்து வைத்திருக்கிறோமே? வேறு வழியாகச் செல்ல வேண்டியதுதானே? என்று கேட்பது என்ன மாதிரியான லாஜிக் என்று தெரியவில்லை.
//ரோசாவின் பதிவுகளை நான் பொருட்படுத்தி வாசிப்பதோ பின்னூட்டம் இடுவதோ கிடையவே கிடையாது.//
//ரோசாவிற்காவாவது ஒரு குறிப்பிட்ட அளவிற்கு பொருட்படுத்தி பதிலளிக்கலாம்.//
எப்படி இப்படி முன்னுக்குப் பின்னாக ஒரே பதிவில் ஒரு மனிதரால் எப்படி முரண்பட முடியுமென்று தெரியவேயில்லை.
உண்மையில் ரோஸாவசந்த் குறித்தெல்லாம் இவ்வளவு வன்மமாக இந்த கீபோர்ட்புளி எழுதும் அளவுக்கு தகுதியோ, தராதரமோ கொண்டவர் அல்ல. ரோஸாவசந்த் இணையத்தில் இதுவரை அவர் சந்தித்தவர்களில் எல்லோரிடமும் ஏதாவது ஒரு விஷயத்தில் முரண்பட்டே வந்திருக்கிறார். அதுகுறித்த சூடான விவாதங்களில் ஈடுபட்டிருக்கிறார். ஆயினும் எங்கேனும் நேரில் சந்திக்க நேர்ந்தால் ஒரு அபாரமான புன்னகையோடு, அதே நபர்களை எதிர்கொள்ளும் பேராண்மை வாய்த்தவர். இந்த உம்மணாம் மூஞ்சி மாதிரி முகத்தை திருப்பி வைத்துக் கொள்ளும் மூணாங்கிளாஸ் மனோபாவம் அவரிடம் இல்லவே இல்லை. யார் யாரை என்ன சொல்லித் திட்டுவது என்று விவஸ்தை கிடையாதா?
"புறக்கணித்து விட்டு செல்வதுதானே?" என்று சுலபமாக கேட்கும் ஜென்மம், எந்திரன் விவகாரத்தில் எப்படி நடந்துகொண்டார் என்பதை தமிழிணையம் அறியும். படம் பார்த்தவர்கள் கூட ஒரு விமர்சனப் பதிவோடு நிறுத்திக் கொண்டபோது, நம்முடைய கீபோர்ட் புலி ஐந்து பதிவுகளை வரிசையாக அடித்துவிட்டு ஹிட்ஸ் தேத்திக் கொண்டார். ஊருக்கு உபதேசம் செய்யும் இந்த நல்லவர், எந்திரனை கமுக்கமாக புறக்கணித்துவிட்டு போயிருக்க வேண்டியதுதானே? நியாயம், நேர்மை பேசிவிட்டு திருட்டு டி.வி.டி.யில் படம் பார்ப்பவர்களிடம் வேறு என்னத்தை எதிர்ப்பார்க்க முடியும்?
என்னுடைய அவதானிப்பில் அவருடைய உளவியல் பிரச்சினையாக இதைத்தான் பார்க்கிறேன். "இவ்வளவு அருமையாக எழுதுகிறோமே? நம்மை ஏன் யாரும் படிப்பதில்லை, பின்னூட்டம் போடுவதில்லை" என்று பல்லாண்டுகளாக அவராகவே மனதுக்குள் புழுங்கித் தவிக்கிறார். அவனவன் மொக்கையாக எழுதுவதற்கு கூட 100, 200 பின்னூட்டம் வருகிறதே என்று பொறாமைப் படுகிறார். உண்மையில் அவரைப்போல எழுதுவது மகா எளிது. எந்தவித நடைமுறை வாழ்வியல் அனுபவமும் இல்லாமல் பத்து மாத காலச்சுவடையும், ஆறுமாத உயிர்மையையும் பக்கத்தில் வைத்துக்கொண்டு, 'இலக்கிய' மொழியில் யார் வேண்டுமானாலும், எதை வேண்டுமானாலும் 'நல்ல' தமிழில் எழுதிவிட முடியும்.Content is the king. மாஸ் ஆடியன்ஸை address செய்பவர்களுக்கு நல்ல மொழி கூடத் தேவையில்லை. Interesting Content சுமாரான தமிழில் இருந்தாலே போதுமானது.
புளியிடம் அது சுத்தமாக கிடையாது. அது தேவையென்றால் ரோட்டில் இறங்கி நடக்க வேண்டும். ஒரு அடி ரோட்டுக்கு மேலே பறந்தவாறு சென்று கொண்டிருப்பவர் இப்படியான இடியாப்பங்களைதான் சுடமுடியும். புதியதாக படிப்பவர்கள் "நல்ல பதிவு, நல்ல மொழியாளுமை" என்று ஆரம்பத்தில் பின்னூட்டம் போடுவார்கள். தொடர்ச்சியாக இதே மாதிரி நான்கைந்து இடியாப்பங்களை வாசித்தவர்கள் அஜீரணம் ஆகி சொல்லாமல், கொள்ளாமல் ஓடிவிடுவார்கள்.
எனவேதான் நம் கீபோர்ட் புளி, அடிக்கடி யாரையாவது வம்புக்கு இழுத்து, தான் லைம்லைட்டிலேயே இருப்பதாக கருதிக்கொண்டு தன்னைத்தானே ஏமாற்றிக் கொள்கிறது. இது எக்ஸிபிஸனிஸ மனநிலை. //சாருவிற்குப் பிறகு நான் இத்தனை கடுமையாக எழுதியது ரோசாவைக் குறித்தான்// என்று அப்பட்டமாக புளுகுகிறது. உதாரணமாக அகில உலக அப்பாவி மன்றத் தலைவரான ஆசிஃப் அண்ணாச்சியிடம் கூட ஒருமையில் இவர் எவ்வளவு மோசமாக நடந்துகொண்டார் என்பது பலருக்கும் தெரியும். "நான் ஊரில் இருப்பவனையெல்லாம் திட்டுவேன், என்னை யாராவது ஏதாவது ஒரு வார்த்தை சொல்லிவிட்டால் தாங்கமாட்டேன்" என்று நினைப்பது மனநோயின் ஆரம்பக்கட்ட மனநிலையாகவே எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. மனிதர்களில் இரண்டே இரண்டு வகைதான் உண்டு. ஆபத்தானவர்கள், ஆபத்தற்றவர்கள். கீபோர்ட் புளி முந்தைய வகையைச் சேர்ந்தது. ஏற்கனவே கீரப்பட்டவர்கள் ஏராளம். மற்றவர்களாவது உணர்ந்து தெளியவேண்டும்.
எதிர்வினையெல்லாம் எழுதித் தொலைத்து மாமாங்கமாகிறது. எனவேதான் கொஞ்சம் இப்பதிவில் சூடும், காரமும் குறைவாக இருக்கிறது. நாமென்ன தினமும் புளியை மாதிரி எவரிடமாவது சண்டை போட்டுக் கொண்டிருக்கிறோமா என்ன? இந்தப் புளி சீரியஸில் இதுதான் முதலும் கடைசியுமான பதிவு. கீபோர்ட் புளி ரிட்டர்ன்ஸெல்லாம் கண்டிப்பாக வரவே வராது. ஏனெனில் நிஜமாகவே கடந்த சில காலமாக வேலை கொஞ்சம் டைட்.
நல்லவேளை லக்கி, அவர் எழுதுன பதிவும் புரியலை, நீங்க எழுதுனதும் புரியலை.. இது நல்லதா கெட்டதான்னு தெரியலை...
பதிலளிநீக்குenna vivaram?
பதிலளிநீக்குஇந்த கொட்டை இல்லாத புளிக்கேல்லாம் எதுக்கு இந்த அளவுக்கு பில்ட் அப்?
பதிலளிநீக்குசினிமாவை இப்படித்தான் பார்க்கவேண்டும் என்று உலகுக்கு சொல்லும் அந்த மொக்கை மாமாவிற்கு வேறு வேலையே கிடையாதா என்ன? எந்திரன் பிடிக்கவில்லை என்றால் மூடிக்கொண்டு போகவேண்டியதுதானே? எதற்கு ஐந்து பதிவுகள்?
சில ஊர் பேர் தெரியாத ஆசாமிகள் இப்படித்தான் பிரபலமான ஒரு விஷயத்தையோ (எந்திரன் படம்) அல்லது பிரபலமான ஒரு நபரையோ (லக்கி) வேண்டுமென்றே தாக்கி பேசி தங்களுடைய இருப்பை காட்டிக்கொள்வார்கள். இது ஒரு வகையான மனவியாதி.
ஆகையால், மக்களே, கொட்டை இல்லாத புளியின் மனநல செலவுக்காக நாமெல்லாம் என் ஒரு நிதி திரட்ட கூடாது?
புதியதாக படிப்பவர்கள் "நல்ல பதிவு, நல்ல மொழியாளுமை" என்று ஆரம்பத்தில் பின்னூட்டம் போடுவார்கள். தொடர்ச்சியாக இதே மாதிரி நான்கைந்து இடியாப்பங்களை வாசித்தவர்கள் அஜீரணம் ஆகி சொல்லாமல், கொள்ளாமல் ஓடிவிடுவார்கள்.
பதிலளிநீக்குஅப்பட்டமான உண்மை.
என்னமோ நடக்குது, நான் போய்ட்டு அடுத்த மாதம் வர்றேன்.
பதிலளிநீக்குஉம்மணாம் மூஞ்சி மாதிரி முகத்தை திருப்பி வைத்துக் கொள்ளும் மூணாங்கிளாஸ் மனோபாவம்
பதிலளிநீக்கு-- epadi pata varthaikal
மாமல்லன் பொச்சு பின்னாடியே போய்ட்டு அப்புறம் அவர் ஏதோ சொன்னாருன்னு பொசுக்குன்னு கோவிச்சு கூவி கூவி அவர திட்டுனத விட்டுட்டீரே.
பதிலளிநீக்கு//மாமல்லன் பொச்சு பின்னாடியே போய்ட்டு அப்புறம் அவர் ஏதோ சொன்னாருன்னு பொசுக்குன்னு கோவிச்சு //
பதிலளிநீக்குஇது மாதிரி LKG பயல்களுடன் குலாவ மாமல்லன் என்ன லூசா?
மலம் என்றால் ஒதுங்கிச் செல்லாமல் மலத்தையே சுத்தி சுத்தி மொய்க்கும் இது போன்ற விவஸ்தை கெட்ட ஜென்மங்களுக்கு
மண்டையில் மூளைக்குப் பதிலாக மலம் இருக்குமோ?
சுக பாணியில் இதை நன்னியச் சிந்தனையுடன் பொதுவாகச் கூறுகிறேன் சுனாகானா தனிப்பட்ட முறையில் எடுத்துக்கொள்ள வேண்டாம். ;)
enna nadakkuthunne puriyalaiye?
பதிலளிநீக்குhttp://charupenline.blogspot.com/
பதிலளிநீக்குrightu
பதிலளிநீக்குithu etho ilakiya fightu
புளியின் மனநிலை ஒரு வகையான மனவியாதிதான்!!
பதிலளிநீக்குS.Ravi
Kuwait
ஆஹா வேறு மாதிரியான விபரங்கள் இங்கு தென்படுகிறதே.
பதிலளிநீக்குவிருமாண்டி படம் பார்க்கும் கதைதான்.
ஒவ்வொருவருடைய மனதிலும் என்ன இருக்கிறது என்பதை இந்த எழுத்துகள் நன்றாகவே படம் பிடிக்கின்றன.
இதுதான் உண்மையான நிலையா? எப்போதுமான நிலையா என்பதை வரும் நாட்கள் முடிவு செய்யும் என்றே நினைக்கிறேன்.
கமல் ரசிகராக இருந்த போதிலும் , ரஜினிக்காக குரல் கொடுப்பது சூப்பர்..
பதிலளிநீக்குஎந்திரனை திட்டி அறிவு ஜீவி பட்டம் வாங்குவீர்கள் என நினைத்த என்னை ஏமாற்றி விட்டீர்கள்.. உங்கள் நேர்மை மிகவும் பிடித்து இருக்கிறது..
பிசினஸ் செய்வது, மார்க்கெட்டிங் செய்வது எல்லாம் , ஒரு கிரிமினல் குற்றம் போல சிலர் எழுதுகிறார்கள். தமிழர்களின் பொதுவான மன நிலையாக இது இருக்கிறது .
மார்க்கெட்டிங் என்பது ஒரு கலை, அதி எவ்வளவு நுணுக்கங்கள் இருக்கின்றன என்பதெல்லாம் உங்களுக்கு தெரியும்..
இதைபற்றி விரிவாக எழுதுமாறு கேட்டு கொள்கிறேன்
pulee - unmai thamizhan
பதிலளிநீக்குநான் ஜெர்மனியில இருக்கிறேன். கொட்டை இல்லா புளி எங்க கிடைக்கும்னு தேடிக் கிட்டிருந்தப்போ, உங்க பதிவுக்கு கொண்டுவந்து விட்டுருச்சு. என்னுடைய அஜீரனதுக்கும் வைத்தியம் கிடைச்சதுல இரட்டை மகிழ்ச்சி.
பதிலளிநீக்கு- Lucky Fan
Who is that PULEE ???,
பதிலளிநீக்குpulee is the kili of the gilli who eats jelly with chilli as a filly topping, but sali is his mozhi, where he eats kali, but while solli adikkirathil gilli.. his vazhi is thani vazhi..
பதிலளிநீக்கு