ஃபேஸ்புக், பஸ் மற்றும் ட்விட்டர் ஸ்டேட்டஸ்களில் அடிக்கடி ‘தள்ளு தள்ளு’ தலைவர் என்று நாம் குறிப்பிடும்போது, அவர் யாரென்று புதுசு புதுசாக தினுசு தினுசாக யாராவது கேட்டுக் கொண்டே இருக்கிறார்கள். அந்தத் தொல்லையில் இருந்து விடுபட தெளிவான விளக்கம் ஒன்றினை அளிக்க வேண்டியது நம் கடமையாகிறது.
ஆத்திகரோ, நாத்திகரோ நீங்கள் திருப்பதி சென்றிருந்தால் இந்த வசனத்தை கேட்காமல் இருந்திருக்கவே முடியாது. ’ஜருகண்டி, ஜருகண்டி’.
கிட்டத்தட்ட ‘ஜருகண்டி, ஜருகண்டி’ வாய்ஸ் மாடுலேஷனிலேயே கடந்த இரண்டு வருடங்களாக, சீமான் வரும் நிகழ்ச்சிகளில் எல்லாம் அவரது தொண்டர்கள் குரல் கொடுத்துக்கொண்டே வருவார்கள். “தள்ளு தள்ளு” என்று வேகமாக குரல் கொடுப்பதோடு இல்லாமல், கூட்டத்தை கையால் இருபுறமாக தள்ளிவிட்டுக் கொண்டேவும் வருவார்கள். யானை வரும் பின்னே, மணியோசை வரும் முன்னே என்பதைப் போல சீமான் வரும் இடமெல்லாம் இந்த ‘தள்ளு தள்ளு’ சத்தம் கேட்பது என்பது வழக்கமாகி போய்விட்டது. ஆளே இல்லாத டீக்கடைக்கு சீமான் வந்தாலும் ‘தள்ளு தள்ளு’ பந்தாவுக்கு மட்டும் எந்த குறைச்சலுமில்லை.
எனவேதான் தமிழுணர்வு வாய்த்த புலவர் பெருமக்கள் சிலர் அவரை ‘தள்ளு கொண்டான்’ என்று புகழ்ந்துரைக்கிறார்கள். நாம் தமிழர் கட்சியின் தொண்டர்களோ இப்போதெல்லாம் வாழ்க கோஷம் போடுவதற்கு பதிலாக விண்ணதிர ‘தள்ளு தள்ளு’ கோஷம் போடுகிறார்கள். அரசியல் மட்டத்தில் ‘தள்ளு தள்ளு தலைவர்’ என்று அறியப்படுகிறார்.
மற்றப்படி இந்தப் பட்டத்தின் பின்னால் ஆபாசமான காரணம் எதுவுமில்லையென்று திட்டவட்டமாக தெரிவிக்கின்றோம்.
"மற்றப்படி இந்தப் பட்டத்தின் பின்னால் ஆபாசமான காரணம் எதுவுமில்லையென்று திட்டவட்டமாக தெரிவிக்கின்றோம். "
பதிலளிநீக்குஅப்டினா?????????
தள்ளு தள்ளு தலைவர் என சீமானைக் குறிப்பிடுகிறிர்கள் எனத் தெரியும் அதற்க்கான காரணமாக நான் நினைத்தது..வடிவேலும் படக் காமெடியை பஸ்சை மற்றவர்கள் தள்ளுவார்கள், ஆனால் ஒருவர் தள்ளாமல் ”தள்ளு தள்ளு” என்று வெறும் சத்தம் மட்டும் தருவார்..அந்த நபரைத் தான் சீமானுடன் ஒப்பிடுகிறிர்கள் என நினைத்தேன்... முத்துக்குமாரது இறுதி நிகழ்விற்கு வந்த போதே இந்த தள்ளு தள்ளு சத்தத்துடன் தான் வந்தார்.... - அருண் சொக்கன்
பதிலளிநீக்குஅவனவனுக்கு மைக் கிடைச்சா எதையாவது உளறி கொட்டி, பின்னர் ஒரு கூட்டம் சேர்த்து இந்த பந்தா கற்றது எல்லாம் தமிழ்நாட்டின் தலைவிதி யுவகிருஷ்ணா.
பதிலளிநீக்குஜெவுக்கு 'ஜே' போடவேண்டும் தள்ளு தள்ளு!
பதிலளிநீக்குசெத்த வீட்டிலும் விளம்பரம் தேடவேண்டும் தள்ளு தள்ளு!
யார் இந்த சீமான்..? என்ன தெரியும் இவருக்கு அரசியல் பற்றி.? எல்லாம் இந்தியாவின் தலைவிதி ... இவெரெல்லாம் தலைவராவது ...
பதிலளிநீக்குவிளக்கத்திற்க்கு நன்றி, கருணாநிதியை சக்கர நாற்காலியில் வைத்து தள்ளுவதால் இதுவரை கருணாநிதிதான் "தள்ளு தள்ளு’ தலைவர்" என் நினைத்திருந்தேன்.
பதிலளிநீக்குநினைத்தாலே சிரிப்பு தான் வருகிறது . சீ.. சீ... மான்
பதிலளிநீக்குயுவா, திமுகவில் இருப்பவர்களைத் தவிர மீதி எல்லோரையும் இந்த கிழி கிழிக்கின்றீர்களே? இது எந்தவிதத்தில் நியாயம்?
பதிலளிநீக்கு10 பேர் கைத்தட்ட ஆரம்பித்தவுடன் சீமானுக்கு தலை கால் புரியவில்லை என்று நினைக்கிறேன்.
பதிலளிநீக்கு" முருகன், சாந்தன்" ஆகியோரிடம் உங்கள் உடலை யாரிடம் ஒப்படைக்க விரும்புகிறீர்கள் என்று வினவிய போது நீங்கள் சொல்லும் இதே தள்ளு முள்ளு தலைவரிடம் ஒப்படைத்து விடுங்கள் என்றனர் (பேரறிவாளன் தன் தாயிடம் ஒப்படைக்கச் சொன்னார்).
பதிலளிநீக்கு(தமிழின தலைவரிடமோ, எழுச்சி தமிழரிடமோ அல்ல!!!!!)
சீமான் நேற்று வந்தவர் தான். ஆனால் எவ்வளவு நம்பிக்கை இருந்தால் அவரிடம் தன் உடல்களை ஒப்படைக்க இருபது ஆண்டுகளுக்கு முன் சிறைபட்ட தமிழர் இருவர் சொல்லிருப்பார்கள்??
இந்த சாமான் மன்னிக்கவும் இந்த சீமான் தான் அணிந்திருக்கும் டி சர்ட்டில் இருக்கும் தலைவரை தனது செயல்கள் மூலமாக எவ்வளவு அவமான படுத்த முடியுமோ அவ்வளவு அவமான படுத்துகிறார்.
பதிலளிநீக்குஇதே ‘தள்ளு தள்ளு’ வார்த்தையை வை.கோ. அவர்கள் திமுக வில் இருந்து விலகிய புதிதிலும் அவரது தொண்டர்கள் இதே போல் தான் நடந்து கொண்டார்கள்.
பதிலளிநீக்குதமிலனுக்காகவே வாளும், தமிலனுக்காகவே குறள் கோடுக்கும் ஒரு இலம் தளைவரை இப்படி தல்லுவதை ஒரு change க்கு மெண்மையாக கண்நடிக்கிறேன்
பதிலளிநீக்குDear ismail,
பதிலளிநீக்குDont compare Mr.Vaiko with some idiots. if u donno thngs, pls be get things shut.
படித்தவர்களையும் பிடிக்கவில்லை. ஆளுமை மிகுந்தவர்களையும் பிடிக்கவில்லை. ஒருவர் காலை அடுத்தவர் வாறுவது. ஏதாவது எழுதத் தொடங்கினால் இப்படி ஆகிவிடுகிறதா? இப்படி இருந்தால் தமிழினம் ஒன்று படுமா? - பரமகுரு
பதிலளிநீக்குமுத்துவேல் கொழந்தையா இருக்கீங்க.
பதிலளிநீக்குவிஜயலட்சுமி அவ்ளோதான்.
தமிழ் வலைத்தளத்திற்கான ஒரு புதிய அறிமுகம்
பதிலளிநீக்குஉங்கள் தளம் தரமானதா..?
இணையுங்கள் எங்களுடன்..
http://cpedelive.blogspot.com
lucky, Did you see this interesting blog post about Chennai Mayor candidate Foodking Sarathbabu?
பதிலளிநீக்குhttp://nocorruptiononlyjustice.blogspot.com
அவருக்கு தள்ளு கொண்டான் என்று பட்டம் கொடுத்த உங்களுக்கு லொள்ளு கொண்டான் என்ற பட்டத்தை வழங்குகிறேன்.
பதிலளிநீக்குthallu kondan thal(lu)aivar vazhga...!
பதிலளிநீக்கு