17 அக்டோபர், 2011

உள்ளாட்சித் தேர்தல்


ஓட்டு போடும் வயதுக்கு முன்பிருந்தே, எல்லா உள்ளாட்சித் தேர்தல்களிலும் கட்சி சார்பான பணிகளில் ஈடுபட்டிருக்கிறேன். அவ்வகையில் பார்க்கப்போனால் மிக அமைதியான, ஓரளவு நியாயமான தேர்தலாக (இந்த நிமிடம் வரை) இத்தேர்தல் நடைபெற்று வருகிறது. கட்சி அடையாளத்தைத் துறந்து முதன்முறை காமன்மேனாக வாக்களிக்கிறேன்.

பாதுகாப்புக்கு லோக்கல் போலிஸார் இல்லாததால், அவர்கள் உதவியோடு அரசியல்வாதிகளின் ’அலும்பு’ நடக்காத தேர்தல் இது. ஓட்டு போட வருபவர்களை “சார்” “மேடம்” என்று போலிஸார் ‘மரியாதையோடு’ விளிப்பது இதுவரை தமிழகம் காணாத அதிசயம். போதாக்குறைக்கு நட்சத்திர ஓட்டல் ரிசப்ஷனிஸ்ட் மாதிரி காக்கிச்சட்டை முரட்டு உருவங்கள் புன்னகைப்பது இன்ப அதிர்ச்சி.

எங்கள் ஏரியாவில் கட்சியினர் சின்னம் போட்டு பூத்ஸ்லிப் வழங்க தடை. அதிமுக மட்டுமே இரட்டை இலை போட்ட பூத்ஸ்லிப் வழங்கிவிட்டு சென்றார்கள். தேர்தல் கமிஷனே களமிறங்கி வழங்கிய பூத்ஸ்லிப்தான் அனைவருக்கும் கிடைத்தது.

”இளைஞர்கள் எங்கள் பக்கம்தான்!” என்று அறைகூவல் விடுக்கும் வை.கோபாலசாமியின் மதிமுகவுக்கு பூத் ஏஜெண்ட் கூட எங்கள் வார்டில் இல்லை. மேயர் வேட்பாளர் பட்டியலில் ‘தாமரை’ இல்லை என்பது ஒரு ஆறுதலான செய்தி.

கடந்த உள்ளாட்சி வரை பஞ்சாயத்தாக இருந்த என் பகுதி, இம்முறை மாநகராட்சிக்குள் இணைக்கப்பட்டிருக்கிறது. சட்டமன்றத் தேர்தலை ஒப்பிடும்போது, உள்ளாட்சியில் ஓட்டுப்பதிவு கொஞ்சம் மந்தமாகவே இருக்கும். ஆனால் கலாட்டா கூடுதலாக நடக்கும். ஆச்சரியமாக இம்முறை இரண்டுமே நேரெதிராக நடந்தது. இரண்டு மணி நேரம் வரிசையில் நின்று வாக்களித்தேன்.

வார்டு கவுன்சிலருக்கு நிற்பவர்கள் குறைவு என்பதால், அதற்கு ஒரே ஒரு மெஷின்தான். மேயர் பதவிக்கு ஏகப்பட்ட வேட்பாளர்கள் என்பதால் இரண்டு மெஷின் வைக்கப்பட்டிருந்தது. இரண்டாவது மெஷினில் முதல் பெயர் ‘சைதை சா. துரைசாமி’. ஆனால் இரண்டாவது மெஷினை முதலில் வைத்து, வாக்காளர் பார்க்கும் முதல் பெயரே துரைசாமியாக வருமாறு அமைத்த தேர்தல் கமிஷனின் நடுநிலையை எப்படி மெச்சுவது என்றே தெரியவில்லை.

வரிசையில் நின்றுக் கொண்டிருந்தபோது பார்த்த ஒரு சூப்பர் காட்சி.

வெள்ளைச்சட்டை, கருப்புப் பேண்டோடு அந்த இளைஞர் வேகமாக நுழைந்தபோது, இடைமறித்தார் ஒரு போலிஸ் அதிகாரி.

“நான் கேண்டிடேட் சார்”

“அடிங்.. இது லேடீஸ் கேண்டிடேட் வார்டு. நீ எப்படி கேண்டிடேட்டா இருக்க முடியும்?”

“சாரி சார். நான் கேண்டிட்டோட ஹஸ்பண்ட்”

தேமுதிக அப்ரண்டிஸூகளா.. நீங்க இன்னும் நிறைய அரசியல் பாடம் படிக்கணும் :-)

8 கருத்துகள்:

  1. //தேமுதிக அப்ரண்டிஸூகளா.. நீங்க இன்னும் நிறைய அரசியல் பாடம் படிக்கணும் :-)//

    அவங்க தலைவரே அப்ரண்டிஸூதானே லக்கி

    பதிலளிநீக்கு
  2. லக்கி, தமிழக உள்ளாட்சித் தேர்தலுக்கு அமெரிக்காவின் Uncle Sam படம் போட்டதில் ஏதேனும் உள்குத்து இருக்கா?

    என்றும் அன்புடன்
    பாஸ்டன் ஸ்ரீராம்

    பதிலளிநீக்கு
  3. //ஓட்டு போட வருபவர்களை “சார்” “மேடம்” என்று போலிஸார் ‘மரியாதையோடு’ விளிப்பது இதுவரை தமிழகம் காணாத அதிசயம். போதாக்குறைக்கு நட்சத்திர ஓட்டல் ரிசப்ஷனிஸ்ட் மாதிரி காக்கிச்சட்டை முரட்டு உருவங்கள் புன்னகைப்பது இன்ப அதிர்ச்சி. //

    உண்மையா பாஸ் அப்டினா, அவர்களுக்காக ஒரு தொப்பி வாங்கி போட்டு அப்றமா அத கழட்டி வணக்கத்துடன் கூடிய மரியாதை செய்யலாம் பாஸ்

    பதிலளிநீக்கு
  4. முந்தாநாள் வரைக்கும் கலைஞரை திட்டி தான் ஒட்டு கேட்டார் விஜயகாந்த்.நேத்து வாங்கின உதையில் இன்று கேப்டன் டிவி நியூஸ்ல சமச்சீர் கல்வி பரமக்குடி கூடங்குளம் விஷயங்களில் மக்களுக்கு அதிமுக மீது கடும் அதிருப்தி, தோல்வி பயத்தில் வன்முறையில் இறங்கிய அதிமுக என்று தலைப்பு செய்தி வாசிக்கிராய்ங்க.அட அப்ப்ரசண்டிகளா என்றது மனம் நீங்கள் எழுதியே விட்டீர்கள்.

    பதிலளிநீக்கு
  5. This is what we expect from you yuva. Not reflecting the DMK views (Sun and Kalaigner TV) and just reporting what you see (Ofcourse in your style)

    In my booth, Saidai duraisaamy was only in the second box. The ADMK candidate was freely roaming near the booth and the school it was happening. Suddenly some police officer came and asked him to go outside and also dismantled the shamiana he was standing under. He went out and this guy came back in, freely roaming and even canvassing. I could see other (congress ???) candidates as well. The other local police couldn't do much I guess. This is why we need people from other states.

    Looked like a very decent poll at-least in my booth. Not as strict as the assembly election, but looked fair. At 11am, I had to stand for 30 minutes to vote and I am happy for that.

    பதிலளிநீக்கு
  6. /*common man; ayyo sir..ippo nenga namma partila illia...*/

    வாழைபழத்துல ஊசி ஏத்துறா மாதிரி தேர்தல் கமிஷனையும், அதிமுகாவையும் வாரியிருக்காரு. அட போப்பா. கீழ்வரும் வாக்கியங்களை கொடிட்டு காட்டுகிறேன்.
    /* எங்கள் ஏரியாவில் கட்சியினர் சின்னம் போட்டு பூத்ஸ்லிப் வழங்க தடை. அதிமுக மட்டுமே இரட்டை இலை போட்ட பூத்ஸ்லிப் வழங்கிவிட்டு சென்றார்கள். தேர்தல் கமிஷனே களமிறங்கி வழங்கிய பூத்ஸ்லிப்தான் அனைவருக்கும் கிடைத்தது. */
    /* வார்டு கவுன்சிலருக்கு நிற்பவர்கள் குறைவு என்பதால், அதற்கு ஒரே ஒரு மெஷின்தான். மேயர் பதவிக்கு ஏகப்பட்ட வேட்பாளர்கள் என்பதால் இரண்டு மெஷின் வைக்கப்பட்டிருந்தது. இரண்டாவது மெஷினில் முதல் பெயர் ‘சைதை சா. துரைசாமி’. ஆனால் இரண்டாவது மெஷினை முதலில் வைத்து, வாக்காளர் பார்க்கும் முதல் பெயரே துரைசாமியாக வருமாறு அமைத்த தேர்தல் கமிஷனின் நடுநிலையை எப்படி மெச்சுவது என்றே தெரியவில்லை.*/
    சைதை சா. துரைசாமி அதிமுக பாஸ். என்ன Elamparuthi இன்னும் சின்னப்புள்ளயாவே இருக்கீங்க ? லக்கி திமுக பக்கம்தான்.

    பதிலளிநீக்கு
  7. Dear Anony, this in my opinion is a fair post from Lucky without taking any sides. MK was very upset with EC during assembly elections, as he did not get any kind of advantage even being in the power. In this panchayat election, the ruling party had their advantages and the EC did not do enough to nullify that. I doubt whether the outcome will reflect that.

    Poor DMK, they are projecting as if this is the worst election they have seen. To my knowledge this is a very decently conducted election.

    From the morning, DMK was talking as if they are going to loose this election. That shows their confidence level and morale or the lack of it. Thats not a good sign for DMK as well as TN politics.

    பதிலளிநீக்கு