11 அக்டோபர், 2011

உதவுபவர்களை இனி செருப்பால் அடிப்போம்!

ஏறுக்கு மாறாக பேசுவது என்றால் எப்படி வேண்டுமானாலும் பேசலாம்.

‘தமிழ் வலைப்பதிவர்களுக்கு நாம் எவ்வாறு உதவலாம்?’ என்று கலந்தாலோசிக்க முயற்சித்த பாவத்துக்காக indiblogger என்கிற அமைப்பினை போட்டுத் தாக்கிக் கொண்டிருக்கிறார்கள் சில வலைப்பதிவர்கள். இவர்கள் தமிழில் எழுதுவதை அவர்கள் பார்க்க வாய்ப்பில்லை என்றாலும், பார்த்தாலும் பெரியதாக கண்டுக்கொள்ளப் போவதில்லை என்றாலும், நாம் பார்த்துத் தொலைத்துவிட்டோமே என்கிற பாவத்துக்காக இந்தப் பதிவினை எழுதித் தொலைக்க வேண்டியிருக்கிறது.

indiblogger.in என்பது இந்திய வலைப்பதிவர்களை ஒரு குடையின் கீழ் திரட்டும் ஒரு அமைப்பு. bloggingஐ passion ஆக கொண்ட வலைப்பதிவர்கள் சிலர், லாபநோக்கமின்றி தொடங்கிய இணைய அமைப்பு. ஆங்கிலம் மட்டுமன்றி, இந்திய மொழிகளில் வலைப்பதியும் யாரும் இந்த இணையத்தளத்தில் உறுப்பினர்கள் ஆகலாம். ஓரளவுக்கு நம்முடைய ‘தமிழ்மணம்’ திரட்டி மாதிரி என்றும் சொல்லலாம். ஆனால் தமிழ்மணத்தை விட சில கூடுதல் செயல்பாடுகள் கொண்டவர்கள். இந்திய நகரங்களில் ஆங்காங்கே அவ்வப்போது வலைப்பதிவர் சந்திப்புகளை நிகழ்த்துகிறார்கள். இந்தச் சந்திப்புகளில் பல்வேறு ஆக்கப்பூர்வமான, மொக்கைப்பூர்வமான விஷயங்கள் நிகழும்.

கடந்த ஆண்டு சென்னையில் இண்டி பிளாக்கர் சந்திப்பு நடந்தபோது பாலபாரதி, உண்மைத்தமிழன் உள்ளிட்ட சீனியர் பதிவர்களோடு பல ஜூனியர் பதிவர்களும் கலந்துகொண்டோம். ஏழெட்டு தமிழ் வலைப்பதிவர்களை கண்டதுமே இண்டிபிளாக்கர் டீம் மகிழ்ச்சி அடைந்தது. தமிழின் மூத்த வலைப்பதிவரான பாலபாரதிக்கு பேச மேடை அமைத்துத் தந்து கவுரவித்தது. தமிழ் வலைப்பதிவுகளில் நடைபெறும் முயற்சிகள் குறித்து விரிவாக ‘தமிழிலேயே’ பேசினார் பாலபாரதி. ஆங்கில மற்றும் இந்தி வலைப்பதிவுகளுக்கு கிடைக்கும் விளம்பர ஆதரவு உள்ளிட்ட விஷயங்களை சுட்டிக்காட்டி, அம்மாதிரியான வசதிகள் தமிழ் வலைப்பதிவுகளுக்கும் கிடைத்தால், இம்முயற்சிகள் மேலும் பரவலாகும் என்று கேட்டுக் கொண்டார். மேலும் புதியதாக வலைப்பதிய வரும் தமிழ் வலைப்பதிவர்களுக்கு, போதுமான தொழில்நுட்ப வழிகாட்டுதல்கள் இல்லையென்றும், இவையெல்லாம் கிடைக்கும் பட்சத்தில் தமிழில் வலைபதிபவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடுமென்றும் அவர் யோசனை சொன்னார்.

இவ்வாண்டுக்கான இண்டிபிளாக்கர் வலைப்பதிவர் சந்திப்பு கடந்த வாரம் சென்னையில் நடந்தது. “How we can help tamil bloggers?” என்று தனியாக ஒரு அமர்வினை இச்சந்திப்பில் இண்டிபிளாக்கர் அமைப்பினர் முன்னெடுத்ததற்கு காரணம், கடந்தாண்டு பாலபாரதி சந்திப்பில் பகிர்ந்துக்கொண்ட கருத்துகளின் விளைவே என்று கருதுகிறேன்.

“help” என்கிற சொல்லினை ‘உதவி’ என்பதாகவே புரிந்துக் கொள்கிறேன். “May I help you?” என்று யாராவது நம்மைப் பார்த்துக் கேட்கும் பட்சத்தில், “Yes, Please” என்று அங்கீகரிப்பதோ அல்லது “No, Thanks” என்று மறுதலிப்பதோதான் நாகரிகம். “எனக்கு உதவ நீ யாருடா?” என்று கேட்பது அநாகரிகம். ஒருவன் உதவ நினைப்பதை தவறு என்று சொல்லுவது எவ்வகையில் சரியானது என்று தெரியவில்லை. தன்முனைப்புக்காக ஏதாவது ஸ்டண்ட் அடித்துவிட்டு, அதற்கு ‘தமிழ், தமிழன், தன்மானம்’ சாயம் பூசுவது சர்வநிச்சயமாக போலி தமிழுணர்வு, போலி சுயமரியாதை.

“ஈழத்தமிழர்களுக்கு உதவுவோம்” என்று அரசியல்வாதிகளோ, தமிழுணர்வாளர்களோ சொன்னால் அல்லது வலைப்பதிவர்கள் பதிவு போட்டால், அது ஈழத்தமிழர்களை அவமதிப்பது ஆகுமா? அவமதிப்பு என்று கருதுவதுதான் உணர்வினை கொச்சைப்படுத்தும் செயல்.

உதவுகிறார்களோ இல்லையா என்பது வேறு விஷயம். உதவி தேவைப்படுபவர்கள் உபயோகித்துக் கொள்ளட்டும். வேண்டாமென்பவர்கள் மறுத்துக் கொள்ளட்டும். ஆனால் யாரும் ‘உதவுகிறோம்’ என்று சொல்வதையே ஆட்சேபித்து, ‘ஆ, ஊ’வென்று கும்மியடிப்பது அக்மார்க் பாசிஸம்.

‘உடான்ஸ்’ என்று ஒரு திரட்டி நடத்தப்படுகிறது? தமிழ்மணம், இண்ட்லி, தமிழ்வெளி என்று ஏற்கனவே ஏராளமான திரட்டிகள் இருக்கும்போது, புதியதாக இந்த ‘திரட்டி’யை யார் கேட்டது? இந்த திரட்டி இப்போது புதியதாக ஏதோ ஒரு சிறுகதைப் போட்டி நடத்துகிறது. தமிழ் வலைப்பதிவர்களுக்கு சிறுகதையே எழுதத் தெரியாதா? இவர்கள் போட்டோவோடு Hint கொடுத்துதான் சிறுகதை எழுத வேண்டுமா? அவ்வளவு கற்பனை வறட்சியிலா தமிழ் வலைப்பதிவர்கள் இருக்கிறார்கள்? இந்த சிறுகதைப் போட்டி தமிழ் வலைப்பதிவர்களின் புனைவாற்றலை கொச்சைப்படுத்துகிறது. உடான்ஸ் இந்தியிலோ, வங்காளத்திலோ இப்படி ஒரு சிறுகதைப் போட்டியை நடத்துமா? – இப்படியெல்லாம் கேள்விகளை அடுக்கினால் இது எவ்வளவு அபத்தம், எவ்வளவு முட்டாள்த்தனம்?

கடந்த ஆண்டு கூட ஏதோ ‘பதிவர் சங்கம்’ அது இதுவென்று பேச்சு அடிபட்டது. எத்தனை பதிவர்களை கலந்தாலோசித்து அம்முயற்சி மேற்கொள்ளப்பட்டது? ‘தேவை’யென்று நினைத்த ஒரு சிலர் பேசி வைத்துக்கொண்டுதானே அம்முயற்சியை மேற்கொண்டோம். அம்மாதிரி இண்டிபிளாக்கர் தமிழ் வலைப்பதிவர்களுக்கு ஏதோ உதவ முன்வந்தது எப்படி தமிழர்களை, தமிழை கொச்சைப்படுத்துவதாகும்?

ஏதோ உரிமையை கேட்பதாக பாவனை செய்துக்கொண்டு, நடந்து முடிந்த இண்டிபிளாக்கர் சந்திப்பில் நடந்தது வெற்று கலாட்டா. இதன் மூலமாக அங்கு கூடியிருந்த 200க்கும் மேற்பட்ட வலைப்பதிவர்கள் மத்தியில், தமிழ் வலைப்பதிவாளர்கள் கோமாளிகளாக பார்க்கப்பட்டார்கள் என்பதே உண்மை. இவ்வளவு கலாட்டா நடக்கும்போதும், இண்டிபிளாக்கர் அமைப்பாளர்கள் மிக அமைதியாகவே, பெருந்தன்மையாகவே இப்பிரச்சினையைக் கையாண்டார்கள். நல்லவேளையாக ‘எல்லோரும் வெளியே போங்க’ என்று ‘நிஜமான அவமானத்தை’ தமிழ் வலைப்பதிவர்களுக்கு நிகழ்த்திவிடவில்லை என்பது கொஞ்சம் ஆறுதலான சமாச்சாரம்.

அங்கு கலந்துகொண்ட தமிழ் வலைப்பதிவர்களுக்கு தான் மட்டுமே அத்தாரிட்டி என்ற தோற்றத்தை உருவாக்கி கலாட்டா செய்த பதிவரின் விளம்பர வெறியை கன்னா பின்னாவென்று கண்டிக்கிறோம்.

கூகிள் ஆட்சென்ஸில் ஏதோ தில்லுமுல்லு செய்து சம்பாதிக்கும் தமிழ் வலைப்பதிவர்கள், அந்த டெக்னிக்கை சக பதிவர்களுக்கே சொல்லிக் கொடுக்காத அற்பத்தனத்தோடு இருக்கையில், எவனோ ஒருவன் எப்படியோ உதவ வருகிறேன் எனும்போது, அதையும் தடுத்து நிறுத்துவது அயோக்கியத்தனம் இல்லையா? உதாரணத்துக்கு ஜாக்கிசேகரை சொல்லுவோம். தமிழின் நெ.1 பதிவராக இப்போது இருக்கும் நிலையிலும், போதுமான தொழில்நுட்ப அறிவில்லாததால், பதிவுமூலமாக ஐந்து பைசா கூட சம்பாதிக்க இயலாத நிலையில் இருக்கிறார். இவரைப் போன்றவர்களுக்கு இண்டிபிளாக்கர் உதவுவதில் யாருக்கு என்ன ஆட்சேபணை இருக்கமுடியும்?

மேலும் தன்மானம் இழப்பு, சோறு போடுதல் என்றெல்லாம் பெரிய வார்த்தைகள் சொல்லப்படுகின்றன. ஜெண்டில்மேன்ஸ்... அங்கு சென்ற எல்லோருமே ‘கலாட்டாவுக்குப் பிறகும்’, அவர்கள் கொடுத்த டீ-ஷர்ட்டை க்யூவில் நின்று வாங்கி வந்தோம் என்பதை நினைவுபடுத்தவே விரும்புகிறேன். செஞ்சோற்றுக் கடனுக்காக யார் வேண்டுமானாலும், யாரை வேண்டுமானாலும் ஆதரிக்கலாம். அதற்காக அங்கே நாகரிகமாக அமைதி காத்த மற்ற வலைப்பதிவர்களை சிலர் கொச்சைப்படுத்துவது கடுமையாக கண்டிக்கத்தக்கது.

ஒழுங்கு செய்யப்பட்ட கூட்டங்களில் யாராவது மைக்கில் பேசிக்கொண்டிருக்கும்போது மொக்கை கமெண்டுகள் அடிப்பது, குறுக்கீடு செய்வது, குடித்துவிட்டு கலாட்டா செய்வது என்று சமகால தமிழ் வலைப்பதிவு கலாச்சாரம் ஜெகஜ்ஜோதியாகவே இருக்கிறது. இதன் நீட்சியாகதான் இண்டிபிளாக்கர் சந்திப்பில் சலசலப்பும் நடந்தது.

- இந்த கூட்டறிக்கை அதிஷா மற்றும் யுவகிருஷ்ணா ஆகியோரால் தமிழ் வலைப்பதிவர் சமூகத்துக்கு கையளிக்கப்படுகிறது -

45 கருத்துகள்:

  1. ஜாக்கிசேகரை சொல்லுவோம். தமிழின் நெ.1 பதிவராக இப்போது இருக்கும் நிலையிலும், போதுமான தொழில்நுட்ப அறிவில்லாததால், பதிவுமூலமாக ஐந்து பைசா கூட சம்பாதிக்க இயலாத நிலையில் இருக்கிறார்.//

    you mean உள்குத்து

    பதிலளிநீக்கு
  2. அவசியமான தருணங்களில் அமைதியாக இருந்தவர், அனாவசியமாக ஆத்திரப்பட்டது வேதனைக்குரியது.
    அவர் எழுதிய பதிவுக்கு வந்த பின்னூட்டங்கள், பதிவைவிடவும் மிகுந்த மனவேதனையை அளித்தது.

    அவர் சார்பில் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம்.
    Sorry IndiBlogger & Team.

    பதிலளிநீக்கு
  3. கேட்ட விதம் சரியில்லை என்பது அந்த இடத்தில் இருந்த உங்களைப் போன்றவர்க்கே தெரியும். அப்படி தவறு இருப்பின் அது கண்டிக்கத்தக்கதே.,



    ஆனால் //இவர்கள் தமிழில் எழுதுவதை அவர்கள் பார்க்க வாய்ப்பில்லை என்றாலும், பார்த்தாலும் பெரியதாக கண்டுக்கொள்ளப் போவதில்லை //

    யாரு என்ன எழுதறாங்கன்னு பார்க்க வாய்ப்பில்லாதவர்கள் (இண்ட்லி)நமக்கு என்ன உதவி செய்துவிடப்போகிறார்கள் யுவா..?

    //விளம்பர ஆதரவு உள்ளிட்ட விஷயங்களை சுட்டிக்காட்டி, அம்மாதிரியான வசதிகள் தமிழ் வலைப்பதிவுகளுக்கும் கிடைத்தால்//

    அதே பலகை தமிழ் பிளாக்கர் சம்பாதிக்க உதவுவது என வைத்திருந்தால் சரிதான்.,திறமையில் நிச்சயம் தமிழனுக்கு யாரும் உதவ வேண்டியதில்லை:)

    காசு சம்பாதிக்க உதவுற மேட்டர்னா இதெல்லாம் தவிர்க்கமுடியாததே, அப்புறம் என்ன லாப நோக்கமற்ற அமைப்பு...?

    சிறுகதை போட்டி என்பது திறமைக்கு சவால் என்ற ஆரோக்கியமான தூண்டுதல்தானே தவிர எழுதத்தெரியாதவர்களுக்கு கொடுத்த குறிப்புகள் அல்ல...

    சரிசரி.. என் கருத்து இந்த இடுகையப் பொருத்து மட்டும்தான்.,

    இதில் வேறு ஏதேனும் பதிவுலக அரசியல் இருப்பின் நான் எஸ்கேப் :)))))))

    பதிலளிநீக்கு
  4. ரொம்பத் தெளிவு. முழுப் பரிமாணத்தையும் தொட்டிருக்கீங்க. யார் யாரையோ நம்பர் ஒன்னுன்னு சொல்றீங்க, முதன்முதல்லே குமுதத்தின் டாப் டென் பிளாக்ஸ் பட்டியலில் சில வருஷம் முன்பே வந்தவர் நீங்கள் என்பது உங்களுக்கு மறந்திருக்கலாம், எங்களுக்கு மறக்காது!

    http://kgjawarlal.wordpress.com

    பதிலளிநீக்கு
  5. கருத்துக்கள் சரி, தலைப்பை கொஞ்சம் நாகரிகமாய் தந்திருக்கலாம்

    பதிலளிநீக்கு
  6. அதுவும் நியாயமாக தெரிந்தது.இப்ப இது மிக நியாயமாக தெரிகிறதே.

    பதிலளிநீக்கு
  7. சரியாக சொல்லியுள்ளீர்கள். :-)

    பதிலளிநீக்கு
  8. தொழில், கலை, அரசியல் போல பிற தளங்களில் உருவாவதைப்போல கூட்டமைப்பு பதிவர்களுக்காக உருவாக வாய்ப்பில்லை, அது அவசியமுமில்லை. ஒரே குடை, ஒரே வராண்டா என்பதெல்லாம் ஜல்லி. லாப நோக்கற்ற இணைய சேவை என்பதையும் நான் நம்பவில்லை. இதெல்லாம் என் தனிப்பட்ட கருத்துகளே. அதோடு அது இங்கு தேவையுமில்லை.

    இந்தக்கட்டுரையைப் பற்றி நான் சொல்லவிரும்புவது இதுதான். டெக்னாலஜி அப்டேட்ஸ், வரவு சார்ந்து இயங்குவது போன்ற நல்ல விஷயங்களைத்தான் வாலண்டியராக அந்த அமைப்பு தமிழ் பதிவர்களுக்கு கற்றுத்தர முன்வந்தது என்று நீங்கள் சொல்கிறீர்கள். சரிதான். அதைத் தாராளமாக நம்பலாம். அதை யாரும் சந்தேகிக்கவும் இல்லை.

    உறுத்துவது “How we can help tamil bloggers?” என்ற வாக்கியம்தான்.

    பஞ்சத்தால், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எப்படி உணவுப்பொட்டலங்களை வழங்குவது என்று திட்டமிடும் அதிகாரிகளைப்போல, ’அவர்களுக்குள்ளாக இந்த ஜீவன்களுக்கு உதவலாம் என்று திட்டமிடத்தான் (..we can..) கூடியிருக்கிறார்கள். நம்மை எந்த உரையாடலுக்கும் அழைக்கவில்லை.’ என்று எந்த தமிழ் பிளாகரும் அந்த வரிக்கு அர்த்தம் எடுத்துக்கொள்ளமுடியும். அப்படியான அநாகரீகமான வார்த்தைகள் அவை. உண்மையிலேயே இந்த விஷயங்களில் நாம் பின் தங்கியிருக்கிறோமா? அவர்கள் முன்னேறியிருக்கிறார்களா? என்பதெல்லாம் எனக்கு தெரியவில்லை. அப்படியே இருந்தாலும் யார் நல்ல விஷயங்களைக் கற்றுக்கொடுத்தாலும் கற்கை நன்றே.! முன்னதாக நாகரீகமான வார்த்தைகளில் எப்படி ஒரு சந்திப்புக்கு பெயரிடலாம் என்பதை அவர்கள் கற்றுக்கொள்ளட்டும்.

    “May I help you?” வோடு இதையும் ஒப்பிடுவது உங்கள் கருத்தை/நம்புவதை நிலைநாட்ட விரும்பும் ’ஒரு பத்திரிகையாளனி*’ன் லாகவத்தையே காட்டுகிறது.

    “How we can help Yuvakrishna, Athisha and Balabharathi?" என்று இருந்திருந்தால் இதைப்பற்றி யாரும் பேசவேண்டிவந்திருக்காது. நானும் ஒரு பிளாகை வைத்துக்கொண்டிருப்பதால், அவர்கள் எனக்கும் உதவ வந்ததாலேயே நான் பேச வேண்டியிருக்கிறது.

    ‘சோறு போடுதல்’ என்பது ஒரு குறியீடே. நமக்கு டெக்னிகலாக உதவ வந்தவர்களிடம் அறிவை இலவசமாகப் பெறுவோம், சரி. பணப்பங்களிப்பு இல்லாமல் அவர்கள் தரும் இலவச டி-ஷர்ட்டையும் (அதுவும் வரிசையில் நின்று), உணவையும் ஏற்றால் நன்றியுணர்ச்சி வந்து தொலைக்குமே, (சிலருக்கு வந்தும் தொலைத்ததே) என்பதால் சொல்லவந்தேன். ஆனால் அது 'Tata grande' வின் விளம்பரங்களை நாம் பொறுத்துக்கொண்டதற்கான கூலியே என்பது வேறு விஷயம்.

    மற்றபடி தமிழ் ’மொளி’, இங்கிலீஷ் ’மொளி’, இந்தி ’மொளி’ பிரச்சினைக்கெல்லாம் நான் வரவில்லை. அப்படி யாரும் டிஸ்கஸ் பண்ணவிரும்பினால் அதில் எனக்கு ஆர்வமும் இல்லை என்று தெரிவித்துக்கொள்கிறேன். நன்றி.

    ---

    *கபடவேடதாரி :-))

    பதிலளிநீக்கு
  9. ஒன்றை விட்டுட்டேனே..

    // இவர்கள் தமிழில் எழுதுவதை அவர்கள் பார்க்க வாய்ப்பில்லை என்றாலும், பார்த்தாலும் பெரியதாக கண்டுக்கொள்ளப் போவதில்லை என்றாலும்,//

    அவர்களின் நிகழ்வு குறித்த கருத்துகளை எதிர்கொள்ளவே அவ்வளவுதான் அவர்கள் காட்டும் ஈடுபாடு என்று சொல்லவருகிறீர்களா? அல்லது இன்னும் போய்த்தொலைக்காத நமது ’ஆண்டே’ மனோபாவமா?

    பதிலளிநீக்கு
  10. I too witnessed that Yuva… Congratulations!! your site has crossed 1000 followers…

    பதிலளிநீக்கு
  11. நீங்களும் ஊடகம் சார்ந்த பெரிய பதிவர்...ஆனா பதிவர்களுக்குன்னு என்ன செஞ்சிருக்கிங்க? அவரு திரட்டி ஆரம்பிச்சு, ஏதோ தனக்குத் தெரிந்த விதத்தில் சிறுகதைப்போட்டி வைத்து 3000 ரூ. கைக்காசைப் போட்டு பரிசு தர்றார். போட்டி ஒன்னும் க்ரைம் கதை மன்னன் ராஜேஷ்குமாருக்கு இல்லையே... புதுசா எழுதரவங்களுக்கு, க்ளூ குடுத்தாதான் என்ன தப்பு?!

    பதிலளிநீக்கு
  12. //ஒழுங்கு செய்யப்பட்ட கூட்டங்களில் யாராவது மைக்கில் பேசிக்கொண்டிருக்கும்போது மொக்கை கமெண்டுகள் அடிப்பது, குறுக்கீடு செய்வது, குடித்துவிட்டு கலாட்டா செய்வது என்று சமகால தமிழ் வலைப்பதிவு கலாச்சாரம் ஜெகஜ்ஜோதியாகவே இருக்கிறது. இதன் நீட்சியாகதான் இண்டிபிளாக்கர் சந்திப்பில் சலசலப்பும் நடந்தது.//

    தமிழ் பதிவர்கள் கூடுமிடமெல்லாம் இப்படி எதாவது நடப்பதாகவே பதிவுகளிலும் பின்னூட்டங்களிலும் சொல்லப்படுகிறது.

    இப்படி கத்திக் கலாட்ட பண்ணாம வினியோகத்திற்காக பார்த்து தொலைக்க வேண்டிய படத்தை அவர் பார்த்து விட்டு க்ளிஷே, லாங்க்‌ஷாட், மாண்டேஜ் என்ற வார்த்தைகளைப் போட்டு ஒரு விமர்சனத்தை தேத்தியிருக்கலாம்.

    இறைவா எதிரிகளை நானே எப்படியாவது சமாளிக்கப் பார்க்கிறேன், இந்த நண்பர்களிடமிருந்தும் தமிழ் பதிவர்களிடமிருந்தும் என்னைக் காப்பத்தி விட்று.

    பதிலளிநீக்கு
  13. எப்போலிருந்து உருப்படியான பதிவுலாம் போட ஆரமபிச்சிங்க லச்சி...

    பதிலளிநீக்கு
  14. "May I help you" க்கும் "How we can help Tamil Bloggers" க்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு.

    முதலாவது உதவுவதர்க்கே அனுமதி கேட்பது. மிகவும் நாகரிகமான வார்த்தை. யாருக்கு உதவி வேண்டுமோ, அவர்கள் எடுத்த்ுக் கொள்ளலாம். வேண்டதவர்கள் விலகிப் போகலாம்.

    இரண்டாவது, நமக்கு எல்லாம் தெரியும். பாவம் அவர்களுக்கு எதுவும் தெரியாது. வாருங்கள் நாம் எல்லாம் சென்று அவர்களுக்கு உதவுவோம் என்பது. இதில் நமக்கு என்ன தெரியும், எந்த அளவுக்கு தெரியும் என்று அவர்கள் கேட்டார்களா என்று தெரியவில்லை. அப்பிடி கேட்காமல் உனக்கு நான் உதவுகிறேன் என்பது பிச்சைக்கு சமம்.

    இது எந்த மொழி-யாக இருந்தாலும் இது தான் அர்ததிதம். தமிழ் என்பதற்காக மட்டும் இல்லை. எந்த மொழியிலும் சுயமாரியதைக்கு ஒரே அர்த்தம் தான்.

    பதிலளிநீக்கு
  15. "May I help you" - நான் உங்களுக்கு உதவட்டுமா? இது நம்மை அவர்கள் கேட்பது. two way communication. ஆரோக்கியமான விவாதம்.

    "How can we help Tamil Bloggers" - நாம் தமிழ் பிளோக்கர்களுக்கு எவ்வாறு உதவலாம்? one way decision. இது அவர்கள் அவர்களுக்குள்ளே முடிவு எடுப்பது. இதில் நாம் (அதாவது உதவி வாங்குபவர்) எங்கு வருகிறோம் என்றே தெரியவில்லை.

    இரண்டுக்கும் மலை அளவு விதத்ியாசம் உண்டு.

    பதிலளிநீக்கு
  16. சாரி, யுவகிருஷ்ணா!

    'May I help you' வுக்கும், 'Hey, you need my help' க்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு!

    அவர்கள் வைத்த தட்டியின் வார்த்தைகள் தப்பு! அங்கேயும் சொன்னேன், இங்கேயும் சொல்கிறேன்!

    பதிலளிநீக்கு
  17. Yuva / Athisha,
    My view here is not on the issue. I'm baffled why You wouldnt use the name of the other party while writing your view on the issue. Why dont You say cable shankar did this or that ? the blogger community at this point knows very well that Cable shankar is the protagonist and he himself has written about it. And You guys dont have the guts to name the person. Its ok to take sides as everyone is entitled thier opinion. But why this cowardice ?
    - Solomon

    பதிலளிநீக்கு
  18. வாதத்துக்கு அவர்கள் வைத்த தட்டி தவறாகவே இருக்கலாம்... ஆனால் கேபிள் குரல் உயர்த்தி தொடர்ந்து பேசிய போது அவர்கள் குரலை கடைசி வரை உயர்த்தவேயில்லை...அப்படியே அவர்கள் தவறு செய்து இருக்கின்றார்கள் என்று தெரிந்தால் அடுத்த முறை சம்மபந்தபட்டவர்கள் புறக்கணிக்கவேண்டும். நான் கேபிளிடமும் சென்னேன்.. இப்போதும் சொல்கின்றேன்... அந்த வார்த்தைகளில் தவறு இருப்பதாக எனக்கு தெரியவில்லை.,. எனக்கு பொதுமான டெக்னிக்கல் விஷயங்கள் தெரியாது.... நான் நிறைய சந்தேகங்களை கேட்டு தெளியலாம் என்று போனேன்..ப்ச்

    என்னை தவிர்த்து தமிழ் பிளாக்கர்கள் எல்லோருமே டெக்னிக்கல் அறிவு அதிகம் பெற்றவர்கள் என்பதை அறியாத இன்டி பிளாக்கர் டீம் "How we can help Tamil Bloggers" என்று சொல்லாடலை பயண்படுத்தி தமிழ் பிளாக்கர்களுக்கு தீராத கலங்கத்தை ஏற்படுத்தி விட்டது.,..

    அடுத்த முறை விருப்பம் உள்ளவர்கள் இன்டிபிளாக்கர் டீமில் கலந்து கொள்ளவேண்டுகின்றேன்..

    பதிலளிநீக்கு
  19. //Anoop Johnson said...
    Hi Guys, Let me start off by saying that our Tamil is not very good :-) . Its a mixture of malayalam, Hindi, Marati, kannada and god knows what..

    The session to "Discuss IndiBlogger & how we can help Tamil Bloggers" was done primarily because of one of our initiatives to make custom IndiBlogger interfaces for languages like Tamil, Kannada, hindi etc. As we were limited in our language skills across India, we needed bloggers to help us translate and understand whats important to this community, so that the interface we create would match the expectations set by you. This was discussed on the forum as well during the meet and I hope it helped.

    We do realize that our use of the words on the banner may have hurt the sentiments of many people and it really pains us that it happened and our very humble apologies are in order.

    We love you all no matter what and we deal with many cultures across India in our travels to IndiBlogger Meets in places like Kolkata, Hyderabad, Pune , Mumbai etc. What we have found is that there is a profound passion for the local cultures, language , etiquette's and just the way of living. we completely understand your sentiments!

    And please, if you do know how to help readers who are enthusiastic on everything about Tamil, do start a conversation on the IndiBlogger forum on how you can do that , because quite frankly we are clueless about most regions in India and our country is indeed diverse! :-)

    Thank you for taking the time to bring this to attention, we look forward to coming to Chennai again :-)

    To those of you who were hurt by this, our profound apologies again.

    Anoop Johnson,
    Your Host at the Chennai Blogger meet :-)//


    Could anyone find Anything related to money making process..? @yuva: Don't write something useless..

    பதிலளிநீக்கு
  20. //
    As we were limited in our language skills across India, we (INDIBLOGGER) needed bloggers to help us translate and understand whats important to this community, so that the interface we create would match the expectations set by you.
    //
    What is the relationship between the above and the title of the topic?

    பதிலளிநீக்கு
  21. சரியான செருப்படி பதிவு ....////// ஆனால் தமிழில் நல்ல ட்ராபிக் உள்ள தளங்களுக்கு மட்டுமே ஆட்சென்ஸ் விளம்பரம் மூலமாய் வருமானம் வர வழியிருக்கும் போது அந்த ஆப்ஷனும் இவர்களால் முடியாது.////

    இது சுத்தப் பொய் template source code பாத்தாலே தெரியுது அது டிராபிக் மூலம் வந்ததா அல்லது google_language = 'en'; என்ற code மூலம் வந்ததா என்று . ஆனா ஒன்னு கண்டிப்பா ஒரு நாள் இத google bot கண்டு பிடிக்கும் அப்போ குடுத்த பணம் அத்தனையும் வட்டியோட திருப்பி கேட்கும் .

    பதிலளிநீக்கு
  22. அங்க இப்படி ஒரு கமெண்ட் இருக்கு;

    /// தல, நீங்க செஞ்சது தப்பே இல்ல.. இன்னும் சொல்லப் போனா நீங்க சொல்ல வந்த கருத்த ஸ்ட்ராங்கா சொல்லியிருக்கீங்க.. அது புரியாம சில பல பக்கிங்க செருப்பால அடிப்போம் கிழிப்போம்னு சில்லுமண்டித்தனம் பண்ணிகிட்டு அலையுதுங்க..

    வழக்கம் போல, just ignore them!!!!

    இதுங்க கெட்ட கேட்டுக்கு சுஜாதா பேர்ல விருது வேற.. கர்மம்.. முதல்ல ஒரு நண்பர, சக பதிவர எப்படி மதிக்கணும்னு அந்த பக்கிக்கு யாராவது சொல்லித் தந்தா நல்லா இருக்கும். May I help uக்கும், How we can helpக்கும் வித்தியாசம் தெரியாத நாயெல்லாம் பத்திரிகக்கையாளனாம்.. இது எந்த இஸ்கூலுல படிச்சிச்சாம்? ///

    இதை வெளியிட்டு, எந்த கண்டனமும் தெரிவிக்காம்ல் விட்டதிலிருந்தே அவருக்கும் இதில் உடன்பாடு என்று ஆகிறது. சோ, இப்படிப்பட்ட நாகரிகம் உடையவர்களிடம் வேற என்னத்தை ஃதிர்பார்ப்பது?

    பதிலளிநீக்கு
  23. ஆகா... கிளம்பிட்டாங்கய்யா... அங்க நடந்ததை கேபிளார் எழுதியிருப்பதை வைத்து அவருக்கு ஆதரவாக நானும்கூட கருத்திட்டேன். இப்ப இங்க வந்து படித்தால் வேறுமாதிரியாக இருக்கே... இனி கண்ணால் கண்டால்தான் கருத்து சொல்லம்போல... ஆனால் ஒரு கர்துத்து மட்டும்... மற்ற திரட்டிகள் இருக்கும்போது யுடான்ஸ் திரட்டி எதற்கு என்று கேள்வி நியாயமற்றது லக்கி. எத்தனையோ ஊடகங்கள், பத்திரிகைகள் வந்துகொண்டுதான் இருக்கின்றன. இதற்குமேல் எதற்கு என்று நாம் கேட்பதில்லையே... ஒவ்வொன்றும் வித்தியசப்படுத்திதானே வருகிறது. அதுபோல் வலைதிரட்டிகளில் வித்தியாசமான முயற்சியாக நேரலையை ஏற்படுத்தியிருக்கும் யுடான்ஸ் திரட்டியை வாழ்த்துவோம். (இதில் ஏதும் உள்குத்து இல்லைங்கோஓஓஓஓஓஓஓஓ)

    பதிலளிநீக்கு
  24. கோபத்தில் தமிழ் வலைப்பதிவர்களில் யார் முதல் இடம் என்றெல்லாம் அறிவித்து இருக்கிறீர்கள் :))

    பதிலளிநீக்கு
  25. போதுமான தொழில்நுட்ப அறிவில்லாததால், பதிவுமூலமாக ஐந்து பைசா கூட சம்பாதிக்க இயலாத நிலையில் இருக்கிறார்.//

    ஆடு தானா வந்து பிரியாணி ஆயிருச்சி

    பதிலளிநீக்கு
  26. யுவா,

    முதல்ல அவரோட பதிவ படிச்சிட்டு, பின்னூட்டம் போட்டு கொஞ்சம் தெளிய வைக்கலாம்னு நெனச்சேன். அங்க வந்த கமெண்டுகளையும், anoop johnson உடைய டீசன்டான விளக்கத்த புரிஞ்சுக்க கூட தெரியாத தற்குறிகளோட 'கருத்து'களையும் பார்த்த பிறகு வெறுத்து போயிட்டேன்.

    discussionன்னு ஒன்று நடப்பதே கருத்துகளை பரிமாறிக் கொள்ளத்தான். இவர், அதில் கலந்து கொண்டு பேசி, "தலைப்பை இந்த மாதிரி மாற்றினால் நன்றாக இருக்கும்"னு டீசன்டா சொல்லாம, சபையில அசிங்கமா சண்டை போட்டதுமில்லாமல், அதை பதிவாக போட்டு என்னமோ இவரு தான் தமிழ் பதிவர்களின் தலைவன்னு சொல்லிக்கற மாதிரி ஒரு stunt காமிக்கறாரு.

    ஜாக்கி சேகரோட கமெண்டை பார்க்கும் போது நிஜமாகவே ரொம்ப பாவமாக இருக்கிறது. அவரைப்போன்றவர்கள் சம்பாதிக்க கூடாது என்பதற்காகவே இவர் இப்படி கலாட்டா செயதாரோ என்று சந்தேகமாக கூட இருக்கிறது.

    முடிந்தால் அனூப் போன்றவர்களிடம் விசாரித்து, இந்த விஷயத்தில் நீங்கள் உதவலாமே யுவா!

    பதிலளிநீக்கு
  27. wow. Very good post. How can some one stop others to know about technical information. May be because they know it and dont want others know about it. cable always do like this only

    பதிலளிநீக்கு
  28. மிக சரியாய் சொன்னீங்க........


    நன்றி,
    கண்ணன்
    http://www.tamilcomedyworld.com

    பதிலளிநீக்கு
  29. @ ஜாக்கி சேகர் - அண்ணா ஒரு நடை www.vandhemadhram.com போய்ப் பாருங்க. எல்லா விஷயமும் இருக்கு. நீங்கள் மாதம் பத்தாயிரம் ரூபாய் நேர்மையாய் சம்பாதிக்கலாம்.

    பதிலளிநீக்கு
  30. "எத்தனையோ நிறுவனங்கள் கோடி கணக்கில் விளம்பரத்திற்க்காக செலவு செய்கின்றார்கள் புத்தகம் டிவி போன்றவற்றில், வலைபதிவுகளில் விளம்பரம் செய்வது கட்டணம் குறைவு என்பதோடு உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் படிக்கின்றார்கள் என்கின்ற உண்மை அறியாதவர்களாக இருக்கின்றார்கள், அவர்களின் விளம்பரம் பதிவர்களுக்கு கிடைத்தால் இன்னும் நிறைய திறமையானவர்கள் உருவாகுவார்கள் அந்த நாள் விரைவில் வரும் என்பது உறுதி
    எதை பற்றியும் கவலைப்படாமல் தன்மானத்தை விட்டுக்கொடுக்காமல் போராடிய உங்களை பாராட்டுகின்றோம் நன்றி"

    இது கேபிள் பதிவுக்கு நான் போட்ட கருத்து உங்களின் கருத்தை படிக்கும் போது மனதுக்கு கொஞ்சம் கஷ்டமாக இருக்கின்றது பல மொழி பதிவர்கள் இருக்கும் இடத்தில் தமிழ் பதிவர்களுக்கு மட்டும் அறிவிப்பு பலகை வைப்பது யாருக்கும் கோபம் வரும் அதை தமிழில் வைத்து இருந்தால் இந்த பிரச்சனையே வந்திருக்காது என்பது என் கருத்து

    பதிலளிநீக்கு
  31. எல்லாம் சரி என்ன ஏன்பா தம்பிகளா கூப்பிடல போங்கப்பா உங்க டீலிகே சரி இல்லை ஹோ பிரபல பதிவர் சந்திப்போ ( என்னமோ போங்க ) கொஞ்சம் வருத்தம் தான் ( எனக்கு தெரியாம போச்சி ) பிரபா மேல கோவம் தான் நிறைய சட்டை கிழிஞ்சிருக்கும் போல , சபை அடக்கம் என்பது ஒன்று இருக்கு ,
    அதற்காக சொல்வதை எல்லாம் கேட்டுகிட்டு இருக்கனும் என்ற அவசியம் இல்லை , நீங்கள் சொல்வதிலும் சில விசயங்கள் நல்லதாகவும் படுகின்றது சில தவறாகவும் தோணுகின்றது . பொதுவாகவே நமக்கு ஒரு காம்பிளக்ஸ் உண்டு , ஆனால் அதை தவிர்த்து வார்த்தை தவறுதலுக்கு ஆட்சேபம் கண்டிப்பாக செய்திருக்க வேண்டும் தவறில்லை . ஆனால் முறை இருக்கு அவர்கள் அதற்கு மறுப்பு சொல்லாமல் வாதிட்டால் கண்டிப்பாக அதை குரல் உயர்த்தி வாதிடுவது தவறில்லை . நடந்தது என்ன நான் அறியேன் அதனால அதிகமா விமரிக்க முடியல

    பதிலளிநீக்கு
  32. --
    Hi Guys, Let me start off by saying that our Tamil is not very good :-) . Its a mixture of malayalam, Hindi, Marati, kannada and god knows what..

    The session to "Discuss IndiBlogger & how we can help Tamil Bloggers" was done primarily because of one of our initiatives to make custom IndiBlogger interfaces for languages like Tamil, Kannada, hindi etc. As we were limited in our language skills across India, we needed bloggers to help us translate and understand whats important to this community, so that the interface we create would match the expectations set by you. This was discussed on the forum as well during the meet and I hope it helped.

    We do realize that our use of the words on the banner may have hurt the sentiments of many people and it really pains us that it happened and our very humble apologies are in order.

    We love you all no matter what and we deal with many cultures across India in our travels to IndiBlogger Meets in places like Kolkata, Hyderabad, Pune , Mumbai etc. What we have found is that there is a profound passion for the local cultures, language , etiquette's and just the way of living. we completely understand your sentiments!

    And please, if you do know how to help readers who are enthusiastic on everything about Tamil, do start a conversation on the IndiBlogger forum on how you can do that , because quite frankly we are clueless about most regions in India and our country is indeed diverse! :-)

    Thank you for taking the time to bring this to attention, we look forward to coming to Chennai again :-)

    To those of you who were hurt by this, our profound apologies again.

    Anoop Johnson,
    Your Host at the Chennai Blogger meet :-)

    --

    As we were limited in our language skills across India, we needed bloggers to help us translate and understand whats important to this community

    --

    அப்படி என்றால்

    How can Tamil Bloggers help us

    என்று தானே தட்டி இருந்திருக்க வேண்டும்

    பதிலளிநீக்கு
  33. அந்த எதிர்ப்பு நாகரீகமாக இல்லை என்பது எந்தளவு உண்மையோ அதேபோல இப்பதிவும் நாகரீகம் இல்லாத வகையில் தான் தெரிகிறது, ஒரு ஸ்டண்டாக. கடந்தப் பதிவின் தலைப்பிலேயே தெரிந்துவிட்டது உங்கள் உணர்வுகள். ஓசியை விரும்பும் எண்ணம் இருக்கும்வரை பகுத்தறிவு வேலைசெய்யாது நண்பா

    பதிலளிநீக்கு
  34. Thanks for your post and a post from Cable. So, these posts actually generates more publicity to Indiblogger. Infact, I came to know about the Indiblogger through the cable's post.

    And, look for the content..dont look for the title. The end result of the discussion is not useful and it is on one side then there is a point in arguing for agenda of the discussion ( note: not for the title).. even if the title was right and the discussion was not the way we expected then what can we do? just simply fighting for "title" is not good..
    here yuva also saying jackie sekar is no. 1 blogger which creates another level of controversies.. the no.1 or no 100 can be decided by the readers not by the blogger.. basically i dont believe in the ranking, because a logger can not always write the no.1 blog.. again it is based on the blog content. some post would be good and some post would be really "mokkai" .. so I agree with the "Top in 24 hrs" or "Top this week" kind of ranking..

    so "content" matters not the "title" or the "ranking"
    Hope you all agree..
    -SP

    பதிலளிநீக்கு
  35. ஆரோக்கியமான கருத்துகள் .......உங்கள் உடன் உடன்படுகிறானே...முதல் முறையாக..

    பதிலளிநீக்கு
  36. அருமை அண்ணா.

    அவர்கள் சொல்ல வந்ததை கவனிக்காமல் செய்த தவறு இது.

    நம்ம ஆளுங்க நிறைய பேர் ஆளுக்கு ஒரு பத்திரிக்கையை குத்தகைக்கு எடுத்து பதிவு எழுதுறாங்க. இது தப்பா தெரியலையா இவங்களுக்கு? இத சொன்னா ஆங்கில தளங்கள் காபி,பேஸ்ட் செய்யலயான்னு கேப்பாங்க.

    இதுல தமிழை வளக்குறாங்கலாம். அட போங்கய்யா

    பதிலளிநீக்கு
  37. HI Yuva,

    Keep Blogging
    Keep Rocking

    Regards,
    Muthuvel.Sivaraman
    http://ivaikavidhaialla.blogspot.com/2011/10/indiblogger-tata-grande-bloggers-meet.html

    பதிலளிநீக்கு
  38. https://www.google.com/adsense/support/bin/answer.py?answer=9727 - see the languages supported by Adsense. those bunch of idiots who have adsense in tamil blogs they will be banned soon.

    பதிலளிநீக்கு
  39. எப்படியாவது ஆறு மாசத்துக்கு ஒருக்கா எதாவது ஒரு விஷயத்த்க்கு லபோ திபோன்னு அடிச்சுக்கிறதும் தமிழ் பதிவர்களுக்கே உண்டான ஒரு குணம் போலிருக்கிறது.
    :(

    -ஜெகன்

    பதிலளிநீக்கு