22 மார்ச், 2013

மாரியம்மாள்

ஈழத்தமிழர்களுக்காக எண்ணற்ற போராட்டங்கள் தற்போது தமிழகத்தில் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. வைகோவின் தாயார் மாரியம்மாள் தள்ளாத வயதில் கலிங்கப்பட்டியில் உண்ணாவிரதம் இருக்கிறார். தொண்ணூறு வயது. எனக்கு மட்டுமல்ல. கட்சி மாச்சரியங்களைத் தாண்டி, திராவிடக் குடும்பங்களில் பிறந்த பலருக்கும் இது ஓர் உணர்ச்சிப்பூர்வமான காட்சி.

வைகோவின் தந்தை வையாபுரி நாயக்கர் அரசியலுக்காக தன்னுடைய பரம்பரை சொத்தை செலவழித்தபோது எந்த ஆட்சேபணையுமின்றி மகிழ்ச்சியோடு அனுமதித்தவர் மாரியம்மாள். எமர்ஜென்ஸி, எம்.ஜி.ஆர் காலத்து அடக்குமுறைகளின்போது இவரது கலிங்கப்பட்டி இல்லம் திமுகவினருக்கு வேடந்தாங்கல். திமுகவின் வனவாசத்தின்போது தென்மாவட்டத்தில் கட்சியை கட்டிக்காத்த புண்ணியத்தலம். மாநில அளவிலான தலைவர்கள் மட்டுமின்றி, தேசியத்தலைவர்கள் பலரும் வருகை புரிந்த முக்கியத்துவமான இடம் கலிங்கப்பட்டி. வடலூர் சத்தியஞானசபையில் மட்டுமல்ல, கலிங்கப்பட்டி வீட்டிலும் அடுப்பு அணைவதேயில்லை.

வைகோவுடைய அரசியல் வாழ்வின் மகத்தான தியாகம் பொடாவில் சிறை சென்றது. அப்போது மாரியம்மாளின் எதற்கும் அஞ்சாத இதயம்தான் மதிமுகவை காத்தது. திராவிடத் தலைவர்களின் ஒவ்வொரு தியாகங்களுக்கும் பின்னணியில் இதுபோல லட்சக்கணக்கான மாரியம்மாள்கள் இருக்கிறார்கள்.

கண்களில் நீர்கசிய வணங்குகிறேன் தாயே!

8 கருத்துகள்:

  1. பெயரில்லா12:12 PM, மார்ச் 22, 2013

    kaneerodu kai koopukiren thaaye

    பதிலளிநீக்கு
  2. படிக்கும்போதே சிலிர்த்துவிட்டது. வணங்குகிறேன்!

    பதிலளிநீக்கு
  3. ஊருக்காக ஒரே ஒரு மணி நேரம் உண்ணாவிரதம் இருப்பதைவிட, உணர்ச்சிகளுக்காக ஒரு நாள் இருந்த உன்னதத் தாய் நீயம்மா .. உன்னையும் உன் பிள்ளையையும் வணங்குகிறோம் ...

    பதிலளிநீக்கு
  4. மாணவர்கள் போராட்டம் உங்களையும் மாற்றி இருக்கிறது...இந்த இடுகைக்கு மிக்க நன்றி!!!

    பதிலளிநீக்கு
  5. வீர தமிழ் தாயே, உங்கள் பாதங்களை தொட்டு வணங்குகிறேன் கண்ணீருடன்.

    பதிலளிநீக்கு
  6. பெயரில்லா7:06 AM, மார்ச் 30, 2013

    அடுப்பு அனைவேதே இல்லை. அருமையான உபசரிப்பு.

    பதிலளிநீக்கு
  7. திமுகவினரின் பெருந்தன்மை அதுவும் துயர சம்பவங்களின் போது காணப்படுவது வேறு எந்த கட்சியிலும் காண்பது அரிது.

    பதிலளிநீக்கு