தமிழ்நாட்டில் ஒரு மோஸ்தர் உண்டு. பேசுவதற்கோ, போராடுவதற்கோ எதுவுமில்லை என்றால் மதுவிலக்கை கையில் எடுத்துக் கொள்வார்கள். மது சமூகத்தின் பிரச்சினையா என்று கேட்டால் ஆமென்று ஒப்புக் கொள்வதில் நமக்குப் பிரச்சினையில்லை. ஆனால் அது மட்டுமே பிரதானப் பிரச்சினையுமல்ல.
காந்தியவாதிகளின் மதுவிலக்கு கோரிக்கையை நாம் சந்தேகிக்க முடியாது. அது அவர்களது கொள்கையின்பால் உருவாகும் எண்ணம். கள் இறக்க அனுமதிப்பது குறித்து அரசு பரிசீலிக்கலாம் என்று முன்பு ஒருமுறை சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்திருந்தது. அப்போது பனைத்தொழிலாலர் நலவாரியத்தின் தலைவராக இருந்த குமரி ஆனந்தன் அந்த சிந்தனையை ஆரம்பத்திலேயே எதிர்த்தார். இத்தனைக்கும் பனைத்தொழிலில் ஈடுபட்டவர்கள் குமரியாரின் சொந்த சமூகத்தை சேர்ந்தவர்கள். தன்னுடைய சமூகத்தையே எதிர்த்துக்கொண்டு மதுவிலக்கு கோரிக்கைக்காக வாழ்க்கையை அர்ப்பணித்த குமரியார் போன்றவர்களை நாம் மதிக்கலாம்.
பாமக தலைவர் ராமதாஸ் அடிப்படையில் மருத்துவர் என்பதால் மதுவுக்கு எதிரான எண்ணம் கொண்டிருக்கிறார். இந்த எண்ணத்தை தனது இயக்கத்தின் கொள்கையாகவும் முன்னிறுத்துகிறார். ஆனால் அவரது எண்ணத்துக்கு அவரது கட்சியிலேயே எவ்வளவு ஆதரவிருக்கிறது என்பது கேள்விக்குறிதான். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் விதிகளிலேயே மது அருந்தும் பழக்கம் இருப்பவர்கள் கட்சிக்காரர்களாக இருக்க முடியாது என்கிற அம்சம் இருக்கிறது. இது நடைமுறையில் இருக்கிறதா என்று தெரியவில்லை.
சமீபமாக மறுமலர்ச்சி திமுக பொதுச்செயலர் வைகோ திடீரென்று மதுவிலக்கு போராட்டங்களில் ஈடுபடுவது ஆச்சரியமாக இருக்கிறது. இத்தனை ஆண்டுகளாக அவர் சார்ந்திருந்த இயக்கத்திடம் இதற்கு முன்பாக இவ்விஷயத்தில் எப்போதாவது முரண்பட்டிருக்கிறாரா? வைகோ மட்டுமல்ல. எந்த திராவிட இயக்கத் தலைவராவது திடீரென்று ‘காந்தி வேஷம்’ போட்டால் நாம் சந்தேகித்தே ஆகவேண்டும்.
“கொஞ்சமாவது உலக அறிவு கொண்டவர்கள் யாரும் மதுவிலக்கை ஆதரிக்க முடியாது. மதுவிலக்கு பிரச்சாரத்தில் ஈடுபட்டு காந்தியாலும், ராஜாஜியாலும் பாராட்டப்பட்ட, எனது தோப்பில் இருந்த 500 தென்னைமரங்களை அதற்காக வெட்டிச்சாய்த்த நான் சொல்கிறேன்” என்று தந்தை பெரியார் எழுதுகிறார். 1937ல் முதன்முதலாக ராஜாஜி மதுவிலக்கை சோதனை முயற்சியாக சேலம் ஜில்லாவில் கொண்டுவரும்போது அதை கிண்டலடிக்கவும் பெரியார் தவறவில்லை. “ஆச்சாரியாருக்கு தனது ஜில்லாக் கிழவிகளிடம் நல்ல பெயர் வாங்க வேண்டும் என்பதே இந்த திடீர் யோசனைக்கு காரணம்”
பெரியார், ராஜாஜியின் மதுவிலக்கை வெறுமனே எதிர் அரசியல் என்கிற நிலையில் இருந்து மட்டுமே எதிர்க்கவில்லை. அக்காலத்தில் மதுவால் வந்த வருமானத்தில் பெரும்பகுதி கல்விக்காக அரசால் செலவழிக்கப்பட்டு வந்தது. பார்ப்பனரல்லாத மக்கள் கற்பதை ராஜாஜி விரும்பவில்லை என்பதாலேயே கல்விக்கு வருமானம் தரும் வழியான மதுவை தடை செய்கிறார் என்றும் பெரியார் குற்றச்சாட்டினை வெளிப்படையாக முன்வைத்தார். பெரியாரின் குற்றச்சாட்டுக்கு ஏற்ப ராஜாஜியின் காலத்தில் நிர்வாகச் செலவுகளை காரணம் காட்டி இரண்டாயிரத்து ஐநூறு பள்ளிகள் மூடப்பட்டதையும் நாம் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
மது அருந்துவதை பெரியார் ஒருவனுடைய தனிப்பட்ட உரிமையாக பார்க்கிறார். மதுவை எடுத்துக் கொள்வதும், நிராகரிப்பதும் அவனுடைய உரிமை, அதில் அரசாங்கம் தலையிட முடியாது என்பது அவரது வாதம். தன் மனைவியோடு ஒருவன் கலவி வைத்துக் கொள்வதை எப்படி அரசு தடை செய்யமுடியாதோ, அதுபோல மதுவையும் தடை செய்ய முடியாது என்றும் பேசுகிறார்.
எனவே பெரியாரின் வழித்தோன்றல்களான திராவிட இயக்கத்தார் திடீரென்று காந்தி குல்லா போட்டு மதுவிலக்குக்கான புரட்சியை முன்னெடுப்பது என்பது வெறும் அரசியல் சந்தர்ப்பவாதமே அன்றி வேறல்ல. அவ்வாறு மது ஒழிக்கப்பட வேண்டியது என்று நினைப்பவர்கள், முன்னெப்போதாவது இது குறித்து பேசியிருக்கிறார்களா, போராடியிருக்கிறார்களா என்று பார்க்கவேண்டும். 1993 வரை திமுகவில் இருந்த வைகோ மதுவிலக்குக்காக கட்சியிலோ, பொதுமேடைகளிலோ அல்லது ராஜ்யசபாவிலோ ஏதேனும் கருத்தை முன்வைத்திருக்கிறாரா?
ராஜாஜி காலத்தில் அமலுக்கு வந்த மதுவிலக்கை கலைஞர்தான் திரும்பப் பெற்று ஒரு தலைமுறையையே மதுவுக்கு அடிமையாக்கி விட்டார் என்கிற பிரச்சாரத்தை இப்போது வைகோ முன்வைக்கிறார். அவரது மதுவிலக்கு வேடத்துக்கு இதுவே போதுமான காரணமுமாக இருக்கிறது. மிகக்கவனமாக ஆட்சியிலிருக்கும் அம்மாவை சங்கடப்படுத்தாமல் தன்னுடைய வழக்கமான பாதயாத்திரை போராட்டமுறையை தொடர்ந்துக் கொண்டிருக்கிறார்.
மதுவைப் பொறுத்தவரை அந்தந்த மாநில அரசுகளே, அதன் தலையெழுத்தை தீர்மானித்துக் கொள்ளலாம் என்பது இந்திய அரசியல் சட்டம். இதன்படி அப்போது குஜராத்தும், தமிழகமும் மட்டுமே மதுவிலக்கு கொள்கையை அமல்படுத்தி வந்தன. மதுவிலக்கை அமல்படுத்தும் மாநிலங்களுக்கு கூடுதல் நிதி தருவதாக மத்திய அரசு அறிவித்தது. ஏற்கனவே தமிழ்நாட்டில் அக்கொள்கை அமலில் இருப்பதால் தங்களுக்கும் அந்நிதியை வழங்குமாறு முதல்வராக இருந்த கலைஞர் அப்போது மத்திய அரசை கோருகிறார். ‘புதியதாக மதுவிலக்கு அமலுக்கு வரும் மாநிலங்களுக்கு மட்டுமே நிதி’ என்று மத்திய அரசு மறுக்க, அதற்காகவே மதுவிலக்கை கலைஞர் 1971ல் வாபஸ் வாங்குகிறார். யார் மறுத்தாலும், ஊடக மாய்மாலங்களால் மறைக்க நினைத்தாலும் இதுதான் வரலாறு.
சட்டமன்றத்தில் அப்போது கலைஞர் பேசும்போது, “மதுவிலக்கை இந்தியா முழுவதும் விரிவாக்க வேண்டும் என்று காந்தியடிகள் விரும்பினார். ஆனால் அவருடைய தானைத் தளபதிகளாக விளங்கும் முதல் அமைச்சர்களாலும், மத்திய அரசை நடத்தும் மகாத்மாவின் வாரிசுகளாலும் மதுவிலக்குக் கொள்கை புறக்கணிக்கப்பட்டது வேதனை தரும் செய்தியாகும். கொழுந்து விட்டெரியும் நெருப்பு வளையத்திற்குள், கொளுத்தப்படாத கற்பூரமாக தமிழகம் எத்தனை நாளுக்குத்தான் தன்னைப் பாதுகாத்துக் கொள்ள முடியும்? ” என்று கேள்வி எழுப்பினார்.
தமிழகத்தை ஆண்டுகொண்டிருந்த திமுகவோடு நட்புறவில் இருந்த ராஜாஜியும், காயிதேமில்லத்தும் மதுவை மீண்டும் தமிழ்நாட்டுக்கு கொண்டுவரவேண்டாம் என்று கலைஞரிடம் கேட்டுக் கொள்கிறார்கள். தமிழக அரசின் நிதிநிலைமை மோசமாக இருப்பதாலேயே இப்போது இந்த முடிவுக்கு வரவேண்டிய இக்கட்டில் இருப்பதாகவும், சரியானதும் மீண்டும் மதுவிலக்கு படிப்படியாக அமல்படுத்தப்படும் என்றும் கலைஞர் சமாதானம் சொன்னார்.
அதன்படியே படிப்படியாக 1973ல் கள்ளுக்கடைகள் மீண்டும் மூடப்படுகின்றன. 1974ல் சாராயக்கடைகளும் மூடப்பட்டன. ராஜாஜிக்கும், காயிதேமில்லத்துக்கும் கொடுத்த வாக்கை கலைஞர் காப்பாற்றினார். இன்றுவரை மிகக்கவனமாக இது மறைக்கப்பட்டு, ஒட்டுமொத்தமாக கலைஞரை வில்லனாக குறிவைத்து இவ்விவகாரத்தில் பேசுகிறார்கள். எனவே, மதுவிலக்கினை திடீரென கையில் எடுப்பவர்களின் நோக்கம் எதுவென்பது தெளிவாகிறது.
எம்.ஜி.ஆர் இரண்டாம் முறை ஆட்சிக்கு வந்தபிறகு 1981ல் கள்ளுக்கடைகளும், சாராயக்கடைகளும் மீண்டும் வருகிறது. தமிழ்நாடு வாணிபக் கழகம் எனப்படும் ‘டாஸ்மாக்’ 1983ஆம் ஆண்டுதான் உருவாக்கப்படுகிறது. இந்நிறுவனமே ஒட்டுமொத்த மதுவிற்பனைக்கும் பொறுப்பேற்கிறது. மிகக்கவனமாக மதுவிலக்கு பிரச்சினையில் எம்.ஜி.ஆரின் பாத்திரமும் திட்டமிட்டு மறைக்கப்படுகிறது. தமிழ்நாடு மதுவிலக்கு சட்டம் 1937ல் சட்டத்திருத்தம் கொண்டு வந்தவர் ஜெயலலிதா. 2003ஆம் ஆண்டு ‘தமிழகத்தில் மது சில்லறை விற்பனை செய்ய அதிகாரம் பெற்ற ஒரே நிறுவனமாக டாஸ்மாக் இருக்கும்’ என அத்திருத்தத்தில் இடம்பெறுகிறது. வைகோவுக்கு தைரியமிருந்தால், நேர்மையிருந்தால் இன்றைய டாஸ்மாக் சூழலில் எம்.ஜி.ஆருக்கும், ஜெயலலிதாவுக்குமான தொடர்புகளையும் பேசட்டும்.
மதுவிலக்கு போராளி வைகோ நடுரோட்டில் நடந்து வருகிறாராம். டாஸ்மாக்கில் புரட்சி கண்ட புரட்சித்தலைவி வெயில் என்றும் பாராமல் அவரை சாலையில் சந்தித்து, எதற்காக இந்த போராட்டம் என்று கேட்கிறாராம். வைகோ விளக்குகிறாராம். தமிழ்நாட்டில் மேடைநாடகங்கள் அருகி வருகிறது என்று யார் சொன்னார்கள்?
இன்று திடீரென மதுவிலக்கு கொண்டுவரவேண்டுமானால் நமக்குத் தெரிந்து பிரதானமாக இரண்டு பிரச்சினைகள் இருக்கின்றன.
ஒன்று. அரசின் நிதிநிலைமை ‘தள்ளாடும்’. குறிப்பாக தமிழக அரசு எளிய மக்களுக்காக தொடர்ச்சியாக அறிவித்து வரும் சமூகநலத் திட்டங்களுக்கான நிதி பெரும்பாலும் மது வருவாயிலிருந்தே வருகிறது. மதுவிலக்கு கொண்டுவரும் பட்சத்தில் இத்திட்டங்களை நிறுத்த முடியாது. இதற்கு தேவையான நிதி வருவாய்க்கு வேறேதேனும் ஆதாரத்தை தேடவேண்டும்.
இரண்டு. மதுவுக்கு அடிமையாகி விட்ட மக்களை திருத்துவது. மது கிடைக்கவில்லையெனில் கள்ளச் சாராயத்துக்கும் தயாராகவே இருக்கிறார்கள். மதுவிலக்கு அமலில் இருக்கும் குஜராத்திலேயே கூட மூன்று, நான்கு வருடங்களுக்கு முன்பு நூற்றி ஐம்பதுக்கும் மேற்பட்டோர் ஒரே சம்பவத்திலேயே மரணமடைந்தனர்.
அரசு, ‘டாஸ்மாக்’ நடத்துவதாலேயே மட்டும் மது குடிப்பதை ஊக்குவிப்பதாக எடுத்துக்கொள்ள முடியாது. ஆணுறை அணிந்தால் எய்ட்ஸ் வராது என்று பிரச்சாரம் செய்து, இலவசமாக ஆணுறைகளை அரசு வழங்குவதை கள்ள உறவுகளை ஊக்குவிப்பதாக புரிந்துகொள்ள முடியுமா என்ன?
மது ஓர் அரக்கன் என்பதிலேயோ, அது சமூகப் பிரச்சினை, மக்கள் அதிலிருந்து வெளிவரவேண்டும் என்பதிலேயோ மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் இப்பிரச்சினையின் பின்னணிகளை அலசி ஆராயமல் வெறுமனே பிளாக் & ஒயிட்டாக மதுவிலக்கை உடனே அமல்படுத்த வேண்டும் என்று போராடுவது அபத்தம். ஒரு குறிப்பிட்ட மாநிலத்துக்கு என்றில்லாமல் நாடு முழுக்க ஒரே மாதிரியான நிலையை ஏற்படுத்துவதற்கான விவாதத்தை முதலில் தொடங்கவேண்டும். மதுவிலக்கு கொள்கையை மனதளவில் ஏற்றவர்கள் இதற்காக இயக்கங்கள் தொடங்கி மக்களிடம் பேசவேண்டும். மக்களின் மனமாற்றமின்றி, பங்களிப்பின்றி எதுவுமே சாத்தியமில்லை.
சங்கக் காலத்தில் இருந்து குடித்துக் கொண்டிருப்பவர்கள் ஒரே நாளில் மாறிவிடுவார்களா என்ன? முள்ளில் பட்ட சேலை. பொறுமையாகதான் எடுத்தாக வேண்டும்.
மதுவிலக்கு சாத்தியமும் இல்ல,அவசியமும் இல்ல அதெல்லாம் சரி தான், ஆனா உங்க வருத்தம் மதுவிலக்குக்கு ஆதரவான போராட்டம் பத்தியா ? இல்ல வைக்கோவும் ஜெயும் சந்திச்சது பத்தியா ? கவலப்படாதீங்க தோழர் அதான் அந்த அம்மாவே சொல்லிடுச்சே 40 தொகுதியிலும் அதிமுகவே நிக்கும்னு ...அதனால இந்த டாப்பிக்க விட்டுட்டு ஹரிதாஸ் பட விமர்சனம் எழுதுங்களேன்.
பதிலளிநீக்கு<<அரசு, ‘டாஸ்மாக்’ நடத்துவதாலேயே மட்டும் மது குடிப்பதை ஊக்குவிப்பதாக எடுத்துக்கொள்ள முடியாது
பதிலளிநீக்குமுழுக்க உடன்படுகிறேன். அரசு tasmac நடத்துவது இதன் மூலம் கிடைக்கும் வருவாயை சிந்தாமல் சிதறாமல் அப்படியே பெற மட்டும்தான். அரசு நடத்தவில்லை என்றல் தனியார் கொழிப்பார்கள்.
<<முள்ளில் பட்ட சேலை. பொறுமையாகதான் எடுத்தாக வேண்டும்.
எவ்வளவு பொறுமையாக? அரசு tasmac நடத்துவது மிக நல்ல விஷயம். அரசுக்கு "full control" உள்ளது. எப்போது மூட வேண்டும்? எப்போது திறக்க வேண்டும் என்று அரசால் அணைத்து கடைகலுக்கும் dictate செய்ய முடியும். அரசு ஒரு தெளிவான முடிவெடுத்து அடுத்த 5 வருடங்களில் படி படியாக டாஸ்மாக்கை மூட வேண்டும். மது விலக்கை அமல் படுத்தவேண்டும்.
மற்றபடி உங்கள் கட்டுரையின் நோக்கம் வைகோவை சீண்டுவதுதான். போராட வேண்டிய அளவு மக்களின் நிலை இன்று உள்ளது. அப்போ ஏன் பேசலை? அங்கே ஏன் பேசலை என்று கேட்பது நல்லா இல்லை.
//மற்றபடி உங்கள் கட்டுரையின் நோக்கம் வைகோவை சீண்டுவதுதான்.//
பதிலளிநீக்கும்ஹூம். தப்பாப் புரிஞ்சுக்கிட்டீங்க. வைகோவின் நோக்கம் கலைஞரை சீண்டுவதுதான் :-)
ரொம்ப சரி அதுக்குத்தான் தமிழக முதல்வரும் அவரை பயன் படுத்திக்கொண்டிருக்கிறார். இது அரசியல் தெரிந்த அனைவருக்கும் தெரியும், வைகோவை தவிர !!! அவர் தொண்டரடிப்பொடிகள் மட்டுமே பாவம்...அனைவரும் நாஞ்சில் சம்பத் ஆகி விட முடியுமா ? அதற்க்கு முதல் போட்டியே அவர்கள் தலைவரிடம் இருந்துதானே ?!
நீக்கு"மதுவை எடுத்துக் கொள்வதும், நிராகரிப்பதும் அவனுடைய உரிமை, அதில் அரசாங்கம் தலையிட முடியாது என்பது அவரது வாதம். தன் மனைவியோடு ஒருவன் கலவி வைத்துக் கொள்வதை எப்படி அரசு தடை செய்யமுடியாதோ, அதுபோல மதுவையும் தடை செய்ய முடியாது என்றும் பேசுகிறார்."
பதிலளிநீக்குமதுக்கடைகள் தனியார் கையில் இருந்தவரை வேண்டுமானால் மனைவியோடு படுப்பதை அரசு தலையிடாமல் இருக்கவேண்டும் என்பதுபற்றி பேசலாம் ஆனால் இன்று அரசே மதுக்கடைகள் நடத்துவதைப்பற்றித்தான் பேச்சு.
"மதுவுக்கு அடிமையாகி விட்ட மக்களை திருத்துவது. மது கிடைக்கவில்லையெனில் கள்ளச் சாராயத்துக்கும் தயாராகவே இருக்கிறார்கள். மதுவிலக்கு அமலில் இருக்கும் குஜராத்திலேயே கூட மூன்று, நான்கு வருடங்களுக்கு முன்பு நூற்றி ஐம்பதுக்கும் மேற்பட்டோர் ஒரே சம்பவத்திலேயே மரணமடைந்தனர். "
கள்ளச்சாராயம் அரசுக்கும் அதன் அதிகார வட்டத்திற்கும் தெரியாமல் காய்ச்சவேண்டுமானால் அவரவர் வீட்டில்தான் காய்ச்சவேண்டும். எனவே கள்ளச்சாராயம் என்பது ஒரு வெற்றுவாதம்தான். இன்று அரசுக்கு சரக்கு சப்ளை செய்யும் நிறுவனத்துடன்
அ.தி.மு.க விற்கும், தி.மு.க விற்கும் பங்கு உண்டு என்பதில் யாருக்கும் சந்தேகம் இருக்காது. பூரன மதுவிலக்கு சாத்தியமில்லை என்றே வைத்துக்கொண்டாலும் இன்றைய நிலையில் மது ரொம்ப அதிகமாய்தான் பழக்கத்தில் உள்ளது. முன்னெல்லாம் தீபாவளிக்கும் பொங்கலுக்கும்தான் புது துணி உடுத்துவோம் ஆனா கடைகள் அதிகமாகி அவைலபளிட்டியும் அதிகமாய்ட்டதால இப்போ துணி எடுக்கும் பழக்கம் அதிகமாய் இருப்பதுபோலதான் சந்துக்கு சந்து கடை இருப்பதால குடிக்கவேண்டும் என்ற உந்துதல் அதிகமாய்டுச்சு. அதை குறைக்கத்தான் இந்த போராட்டம்.
சூப்பர். இந்த மாதிரி விளக்கத்தை எல்லாம் கேட்டாலும் / படிச்சாலும் விளக்கெண்ணை மாதிரி பேசிக்கிட்டு இருந்தா என்ன பண்ணுறது ?!
பதிலளிநீக்குதோழர் அகலிகன்,
பதிலளிநீக்கு//மதுக்கடைகள் தனியார் கையில் இருந்தவரை வேண்டுமானால் மனைவியோடு படுப்பதை அரசு தலையிடாமல் இருக்கவேண்டும் என்பதுபற்றி பேசலாம் ஆனால் இன்று அரசே மதுக்கடைகள் நடத்துவதைப்பற்றித்தான் பேச்சு.//
அப்படியென்றால் அரசு கடை நடத்தாத மாநிலங்களுக்கு எல்லாம் மதுவிலக்கு தேவையில்லை என்கிறீர்களா? :-)
1.குமரி ஆனந்தன்????..2.சந்துக்கு சந்து கடை இருப்பதால குடிக்கவேண்டும் என்ற உந்துதல் அதிகமாய்டுச்சு. அதை குறைக்கத்தான் இந்த போராட்டம். அரசு tasmac நடத்துவது மிக நல்ல விஷயம். அரசுக்கு "full control" உள்ளது. எப்போது மூட வேண்டும்? எப்போது திறக்க வேண்டும் என்று அரசால் அணைத்து கடைகலுக்கும் dictate செய்ய முடியும். அரசு ஒரு தெளிவான முடிவெடுத்து அடுத்த 5 வருடங்களில் படி படியாக டாஸ்மாக்கை மூட வேண்டும். மது விலக்கை அமல் படுத்தவேண்டும்.
பதிலளிநீக்குஉங்களை போன்ற மக்கள் இருபதினால் தான் திரு.கருணாநிதி இன்னும் சாமானிய மக்களை எல்லாம் இன்னமும் முட்டாள் என்று நினைத்து அரசியல் செய்து கொண்டிருக்கிறார்...தமிழ்...டெசொ....உச்ச கட்ட காமெடி போங்க....
பதிலளிநீக்குWas Jayalalitha in power in 1937???
பதிலளிநீக்கு1971 இல் கருணாநிதி தவிர்க்க இயலாமல் மதுவுக்கான தடையை நீகினாராம். இது அவர் சொல்வது போலவே எந்த பிரச்சினைக்கும் கடிதம் எழுதும் வழக்கத்தை நினைவு படுத்துகிறது. அதன் பிறகு எத்தனை முறை அவர் ஆட்சிக்கு வந்துவிட்டார். எல்லா தமிழ் மக்களையும் இந்தி படிக்க முடியாமல் செய்து விட்டு மாறனை மட்டும் அவருக்கு இந்தி தெரியும் என்று மதிய அமைச்சர் ஆகினார். இத்தனை முறை ஆட்சிக்கு வந்தும், மத்திய அரசின் எல்லா அதிகார சுகத்தை அனுபவித்தும் அப்போதெல்லாம் இதை மீண்டும் நிறைவேற்றாதது ஏன்? கலவியும் குடியும் ஒன்றா? பெரியவர் சொன்னார் என்றும் அதனால் எந்த திராவிட கட்சிகாரனும் மது விலக்கு பற்றி பேசினால் சந்தேகப்படவேண்டும் என்றும் சொல்கிறீர்கள். அப்படியானால் அவர் சொன்ன எதை இவர்கள் எல்லாம் இன்றும் பின்பற்றுகிறார்கள். நோன்புக்கு குல்லா மாட்டிக்கொண்டு கஞ்சி குடிகிரார்கள். அறுபது வயதானால் விழா கொண்டாடுகிறார்கள். தாலி கட்டி கொள்கிறார்கள். பெயருக்கு டெசோ என்னும் கூட்டம் நடத்துகிறார்கள். யாருக்கு எதிராக? இப்போது காங்கிரஸ் கலட்டி விடப்பட்டால் எல்லோரும் தமிழருக்காக காங்கிரஸ் வுதரிவிட்டார் என்று சொல்வார்களா? யாரும் எதையும் கருணாநிதி பற்றி மூடி மறைக்க வில்லை. நீங்கள்தான் அவருக்கு தேவையான விஷயம் என்றால் தோண்டி எடுக்கிறீர்கள். அவருக்கு தேவை இல்லை என்றால் அது பற்றி பேசுவது இல்லை. வை கோ வும் ஜெயாவும் பேசினால் என்ன? அது மட்டும் மேடை நாடகம் இல்லை. அவளவு பிரச்சினைகள் வந்தபோது இரண்டு மனிநீரால் உண்ணாவிரதம் இருந்து விட்டு எல்லாம் முடிந்து விட்டது என்று சொன்னார்? கேட்டால் பிரணாப் சொன்னார் என்றார் பிறகு அது உண்மை இல்லை என்றதும் அவர் ஜனாதிபதி ஆவதற்கு என் ஆதரவு அளித்தார்? இப்போது கருப்பு சட்டை அணிந்து போராட போகிறார்களாம். இது மட்டும் மேடை நாடகம் இல்லையா?
பதிலளிநீக்குவணக்கம் அண்ணா..
பதிலளிநீக்குநல்ல பதிவு.. எனக்கு தெரியாத சில, பல விஷயங்களை தெரிந்து கொண்டேன்..
ஆனால் தங்களிடமிருந்து மற்றுமொறு ஒரு விஷயத்தை தெளிவுப்படுத்தி கொள்ள விரும்புகிறேன்..
நீங்கள் குறிப்பிடவாறு மது விலக்கை அமல் படுத்திய ஐயா கலைஞர்,தன் ஆட்சி காலமான 2006-2011 இல் என் அதை மீண்டும் அமல் படுத்தவில்லை..
மதுக்கடை வேண்டாம் என்பதுதான் ஒட்டுமொத்த கோரிக்கை. குடி உடம்புக்கு ஆகாதுன்னா அப்ப குடிக்கரவன் எல்லாம் செத்தா போய்ட்டன்னு கேட்ட என்ன பதில் சொல்வது.
பதிலளிநீக்குஅகலிகன் அண்ணே, உங்க கோரிக்கை புரியுது. ஆனா இந்த கோரிக்கையை தமிழ்நாட்டுக்கு மட்டும் ‘லிமிட்’ பண்ணிக்கிட்டிருக்கீங்களான்னுதான் கேட்குறோம்.
பதிலளிநீக்குதொடர்ந்து தடுப்பூசி போட்டிக்கொண்டே இருப்பதால்தான் போலியோ இல்லாத இந்தியா சாத்தியப்பட்டிருக்கிறது. நான் என் குழந்தைக்கு தடுப்பூசி போடவது பற்றி பேசுகிறேன் அதன் நன்மையை மற்றவர்கள் உணர்ந்து தெளியட்டும்.
நீக்குஎல்லாம் தங்களிடம் குடித்த யானை பால் மன்னா !
பதிலளிநீக்கு(என்ற நகை சுவையே ஞாபகம் வருகிறது )
எழுத்தும் எதிலும் கொஞ்சம் சமூக அக்கறையோ மக்களுக்கு தேவையான தொலை நோக்கு பார்வையோ, இந்த பிரச்சனைக்கு எது நல்ல தீர்வாக இருக்க முடியுமோ அதை முன் வைக்கும் பொழுது உங்கள் எழுது அர்த்தம் பெரும், தேடி வந்து படிக்கும் எங்கள் சிந்தனையும் தூண்டும்.
வெறும் கண்மூடி தனமான இவர் வாழ்க அவர் ஒழிக கோஷத்தில் எதையும் நிறுவ முடியாது யுவா... டெசோ மாநாட்டு அறிவிப்பின் போது நீங்கள் காரசாரமாக மொத்த வரலாற்றையும் ஆராய்ந்து எழுதியது நினைவிருக்கலாம், அதன் பிறகு தலைப்பை மாற்றி, தேதியை மாற்றி ஏன் கோரிக்கைகளையே மாற்றி அடித்த கூத்துகளை எல்லாம் பார்த்து மக்கள் நமுட்டு சிரிப்பு சிரித்தார்கள், அதன் பிறகு அதை பற்றி ஒரு வீர தீர பதிவு கூட உங்கள் தளத்தில் காணூம். இப்போது மது விலக்கு, பெரியார், வைக்கோ
உங்கள் நம்ம்பிகையை பாராட்டுகிறேன் யுவா அனால் நீங்களோ நானோ எதிர்பார்ப்பது போல நம்பிக்கையாய் எந்த அரசியல் தலைவரும் இருப்பதில்லை என்ற உண்மை முகத்தில் அறையும் போது விரக்தியான சிரிப்பு தான் வருகிறது. ஏதோ முயற்சி செய்யுங்கள். அரசியலில் இதெல்லாம் சகஜம் இல்லையா !
எல்லாம் தங்களிடம் குடித்த யானை பால் மன்னா !
பதிலளிநீக்கு(என்ற நகை சுவையே ஞாபகம் வருகிறது )
எழுத்தும் எதிலும் கொஞ்சம் சமூக அக்கறையோ மக்களுக்கு தேவையான தொலை நோக்கு பார்வையோ, இந்த பிரச்சனைக்கு எது நல்ல தீர்வாக இருக்க முடியுமோ அதை முன் வைக்கும் பொழுது உங்கள் எழுது அர்த்தம் பெரும், தேடி வந்து படிக்கும் எங்கள் சிந்தனையும் தூண்டும்.
வெறும் கண்மூடி தனமான இவர் வாழ்க அவர் ஒழிக கோஷத்தில் எதையும் நிறுவ முடியாது யுவா... டெசோ மாநாட்டு அறிவிப்பின் போது நீங்கள் காரசாரமாக மொத்த வரலாற்றையும் ஆராய்ந்து எழுதியது நினைவிருக்கலாம், அதன் பிறகு தலைப்பை மாற்றி, தேதியை மாற்றி ஏன் கோரிக்கைகளையே மாற்றி அடித்த கூத்துகளை எல்லாம் பார்த்து மக்கள் நமுட்டு சிரிப்பு சிரித்தார்கள், அதன் பிறகு அதை பற்றி ஒரு வீர தீர பதிவு கூட உங்கள் தளத்தில் காணூம். இப்போது மது விலக்கு, பெரியார், வைக்கோ
உங்கள் நம்ம்பிகையை பாராட்டுகிறேன் யுவா அனால் நீங்களோ நானோ எதிர்பார்ப்பது போல நம்பிக்கையாய் எந்த அரசியல் தலைவரும் இருப்பதில்லை என்ற உண்மை முகத்தில் அறையும் போது விரக்தியான சிரிப்பு தான் வருகிறது. ஏதோ முயற்சி செய்யுங்கள். அரசியலில் இதெல்லாம் சகஜம் இல்லையா !
Dear Yuva, Do you know unofficially how many brothels are in our state? So according to this your suggestion would be that Govt. should itself open and conduct brothels all over the state because Central Govt. will not provide money!!! That way they can provide condoms and avoid people contracting diseases. Very funnny logic!
பதிலளிநீக்குமது விலக்கு என்ற அலாஉதின் விளக்கு மறுபடியும் பலரால் ஏதாவது புதையல் கிடைக்குமா என்ற எண்ணத்தில் பலரால் தேய்க்கப்படுகிறது
நீக்குபால் விலக்கு போராட்டம் ஏன் யாருக்கும் தோன்றவில்லை.பால் கறப்பதை விட கொடிய பாலியல் வன்முறை எதுவும் இருக்க முடியாது .மிருகவதை எதிர்ப்பு போராளிகளும் பசு,எருமையின் மீதான இந்த பாலியல் வன்கொடுமையை இன்று வரை எதிர்த்ததாக தெரியவில்லை .
பாலூட்டிகள் எனப்படும் ஜீவராசிகள் தங்களின் குழந்தைகளுக்கு பாலூட்டி வளர்க்கும்.அதனால் அவற்றிற்கு மடி உண்டு
குட்டி போடாமல் தன்னால் பால் சுரக்காது.பால் கறப்பதை யாராவது பார்த்திருக்கிறீர்களா .பால் சுரப்பதற்க்காக குட்டியை சில வினாடிகள் மடியை நக்க வைத்து விட்டு பின்பு வலுக்கட்டாயமாக பிரித்து எடுப்பார்கள்.கதறும் குட்டியை பார்த்து கட்டி போடப்பட்ட பசுவும் கதறும்.ஒரு சொட்டு விடாமல் பால் கறக்கப்படும்.
பசுவை சினையாக்குவதர்க்கு வெளிநாட்டில் இருந்து விந்து மட்டும்,அல்லது காளை இறக்குமதி செய்யப்பட்டு பசு கர்ப்பம் ஆக்கப்படும்
பல ஆண்டுகளுக்கு பசுவை கட்டி போட்டு ,வலுக்கட்டாயமாக அதற்குள் செயற்கையாக விந்துவை ஏற்றி சினையாக்கி,குட்டி போட்ட பின் குட்டியின் கதறலை கேட்டபடி பால் கரக்கபடுவதை விட/அதை வைத்து அபிஷேகம் செய்வதை எதிர்க்க வேண்டும் என்று எந்த காந்தியவாதிக்கும் தோன்றாதது ஆச்சரியம் தான்
மிருக பால் ஒவ்வாமை உள்ள குழந்தைகள்,பெரியவர்கள் பல லட்சம் பேர் உண்டு.மது ஒவ்வாமை எனபது மிகவும் அரிது
பால் குடிப்பதால் வரும் வியாதிகளும் ஒன்றும் குறைவு கிடையாது .இவ்வளவு பெருமை கொண்ட,மிருகத்தின் மீது பாலியல் வன்முறை புரிந்து கரக்கபடும் பாலை விலக்க யாரும் போராடதது ஏன் என்று விளங்கவில்லை
மது விலக்கு என்ற அலாஉதின் விளக்கு மறுபடியும் பலரால் ஏதாவது புதையல் கிடைக்குமா என்ற எண்ணத்தில் பலரால் தேய்க்கப்படுகிறது
நீக்குபால் விலக்கு போராட்டம் ஏன் யாருக்கும் தோன்றவில்லை.பால் கறப்பதை விட கொடிய பாலியல் வன்முறை எதுவும் இருக்க முடியாது .மிருகவதை எதிர்ப்பு போராளிகளும் பசு,எருமையின் மீதான இந்த பாலியல் வன்கொடுமையை இன்று வரை எதிர்த்ததாக தெரியவில்லை .
பாலூட்டிகள் எனப்படும் ஜீவராசிகள் தங்களின் குழந்தைகளுக்கு பாலூட்டி வளர்க்கும்.அதனால் அவற்றிற்கு மடி உண்டு
குட்டி போடாமல் தன்னால் பால் சுரக்காது.பால் கறப்பதை யாராவது பார்த்திருக்கிறீர்களா .பால் சுரப்பதற்க்காக குட்டியை சில வினாடிகள் மடியை நக்க வைத்து விட்டு பின்பு வலுக்கட்டாயமாக பிரித்து எடுப்பார்கள்.கதறும் குட்டியை பார்த்து கட்டி போடப்பட்ட பசுவும் கதறும்.ஒரு சொட்டு விடாமல் பால் கறக்கப்படும்.
பசுவை சினையாக்குவதர்க்கு வெளிநாட்டில் இருந்து விந்து மட்டும்,அல்லது காளை இறக்குமதி செய்யப்பட்டு பசு கர்ப்பம் ஆக்கப்படும்
பல ஆண்டுகளுக்கு பசுவை கட்டி போட்டு ,வலுக்கட்டாயமாக அதற்குள் செயற்கையாக விந்துவை ஏற்றி சினையாக்கி,குட்டி போட்ட பின் குட்டியின் கதறலை கேட்டபடி பால் கரக்கபடுவதை விட/அதை வைத்து அபிஷேகம் செய்வதை எதிர்க்க வேண்டும் என்று எந்த காந்தியவாதிக்கும் தோன்றாதது ஆச்சரியம் தான்
மிருக பால் ஒவ்வாமை உள்ள குழந்தைகள்,பெரியவர்கள் பல லட்சம் பேர் உண்டு.மது ஒவ்வாமை எனபது மிகவும் அரிது
பால் குடிப்பதால் வரும் வியாதிகளும் ஒன்றும் குறைவு கிடையாது .இவ்வளவு பெருமை கொண்ட,மிருகத்தின் மீது பாலியல் வன்முறை புரிந்து கரக்கபடும் பாலை விலக்க யாரும் போராடதது ஏன் என்று விளங்கவில்லை
பத்திரிக்கைகள்,ஊடகங்கள்,பதிவர்கள் மற்றும் பின்னூட்டம் இடுபவர்கள்(உங்களை தவிர) ஜெயலலிதாவை எவ்வளவு பெரிய தவறு செய்தாலும் சிறிது அளவு கூட விமர்சனம் செய்ய பயப்படுகிறார்கள், இதுவே கலைஞர் ஆட்சியாய் இருந்தால்,அவர் குடும்பத்தையே பேஸ்புக்கிலும் ட்விட்டரிலும் டார் டாராய் கிழித்து தொங்க விட்டிருப்பார்கள் கருத்து சுதந்திரம் எப்பவும் கலைஞர் ஆட்சியில் தான் முழுமையாக நிலவும் என்பது மறுக்க முடியாத உண்மை.
பதிலளிநீக்குஅங்கு கோத்த பய ராஜபக்சே.
பதிலளிநீக்குஇங்கு தமிழக அரசு (யார் ஆட்சியில் இருந்தாலும்).
தமிழா போன ஜென்மத்தில் என்ன பாவம் செய்தாய்?
இப்படி கொத்து கொத்தாக செத்து மடிய.
Whats ur problem Liquor Ban or Vaiko ? Just for the sake of opposing Vaiko you are writing this , keep it up .
பதிலளிநீக்குஎங்களாண்ட வரலாறு சொல்ல வேண்டாம் கருணாநிதிக்கு நல்லதே செய்ய தெரியாது செய்யவும் மாட்டார் செய்தாலும் சொல்லாதேள் நாங்க ஒத்துக்க மாட்டோம் நம்பவும் மாட்டோம் ஏன்னா எங்க அப்பாம்மா அப்படி எங்களை வளத்துர்க்கா.பார்த்தேளா எத்தனை பேர் பொங்கி எழுந்துட்டம் ன்னுட்டு.
பதிலளிநீக்குமது விலக்கு விஷயத்தில் நீங்கள் காட்டுகிற தொலை நோக்குப் பார்வை, நீண்டகாலத் திட்டமிடல் தூக்கு தண்டனை விஷயத்துக்கு மட்டும் பொருந்தாதா? வேறு வருமான ஆதாரங்களை ஆராய்வது, நாடு முழுதும் ஒரே மாதிரியான கொள்கை போன்றவை மதுவிலக்கு விஷயத்தில் தேவைப்படுவது என்று கூறுகிறீர்களே, அது போல தூக்கு தண்டனை ஒழிப்பு விஷயத்திலும் நிதானமாக சிந்திக்கலாமே?
பதிலளிநீக்குகுற்றவாளிகளுக்கு வேறு விதமான கடுந்தண்டனைகள் ஊவாக்குவது பற்றி, குற்றம் செய்கிற மன நிலையே வராத அளவு கல்வி, விழிப்புணர்ச்சி உருவாக்குவது பற்றி, நீதி, தண்டனை முறைகளை பலப்படுத்துவது பற்றி ஆற அமர அனைவரும் யோசித்து இவற்றையெல்லாம் நடைமுறைப்படுத்திவிட்டுப் பின் தூக்கு தண்டனையை ரத்து செய்யலாமே? மதுவிலக்கு எதுவரை இருக்கிறதோ அதுவரை அது வரை தூக்கு தண்டனையும் தொடரலாம் என்று தொலைநோக்குப் பார்வையுடன் ஒப்புக் கொள்ளலாமே?
பார்க்கப் போனால் ஒரு வருடத்தில் மது அருந்துவதால் ஏற்படும் உயிரிழப்புகளை விடத் தூக்கு தண்டனையால் ஏற்படும் உயிரிழப்புகள் 100ல் ஒரு பங்கு கூட இருக்காதே?
அஜ்மல் கசாப்பின் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்ட போது காந்தியும் புத்தரும் பிறந்த தேசம் என்று கருணையே வடிவாகி உருகினீர்களே, ஒரு பாவமும் அறியாமல் குடித்துவிட்டு வருகிற மிருகத்துக்கு எதிரே வண்டி ஓட்டிய ஒரே குற்றத்துக்காக உயிரிழக்கிறவர்கள் மீது உங்கள் கருணை பெருகாதா? அப்போது காந்தி, புத்தர் தேசம் இல்லையா இது? ஒரு வேளை உங்களுக்கு காந்தியும் புத்தரும் அவ்வப்போது தொடுக்கொள்ளப்படும் (டாஸ்மாக் சரக்குக்கு?) ஊறுகாயாக மாறிவிடுகிறார்களோ?
பிரச்சினை மது ஒழிப்பு வேண்டுமா அல்லது வேண்டாமா என்பது. இதில் வைகோ எங்கே வந்தார். அவர் தி மு க வில் இருந்தபோது அல்லது முன்னர் ஏன் இது பற்றி பேசவில்லை என்று கேட்கிறீர்கள். அவர் கெட்டாரா என்பது முக்கியம் இல்லை கேட்டால் என்ன நடந்து இருக்கும். தி மு க வின் உட்கட்சி ஜனநாயகம் எல்லோருக்கும் தெரியுமே. மதுரையில் முக்கிய பொறுப்பில் இருந்த தா கி தொடர்ந்து, கருத்து கணிப்பு வெளியிட்ட மாறன் பத்திரிகை, (அது என்ன ஆச்சு? புதிதாக ஒரு சேனல் கலைஞர் தொலைக்காட்சி என்று வந்துதான் மிச்சம்) குஷ்பூ மீது செருப்பு வீச்சு, பரிதிக்கு நடந்தது எல்லாம் தெரிந்தும் ஒன்றும் நடக்காதது மாதிரியே எந்தனை காலம்தான் நடிப்பீர்கள்? கருணாநிதி மட்டும் இப்போது டெசோ மற்றும் கருப்பு சட்டை போராட்டம் என்று நடத்துகிறாரே அப்போது பதவி, பலம், அதிகாரம் என்று எல்லாம் இருந்தும் என்ன செய்தார். குளிர் சாதனா பெட்டி, படுக்கை, மனைவி ஒருபுறம், துணைவி ஒருபுறம் என்று இரண்டு மணிநேரம் பீச்சில் படுத்ததுதான் மிச்சம். வை கோ வை முடக்க அவர் செய்தது என்ன? நீங்கள் வை கோ வெளியேற்ற பட்டபோது தி மு க அனுதாபியாத்தான் இருந்திருப்பீர்கள் என்று நினைக்கிறன். வை கோ என்னை கொள்ள சதி செய்கிறார் என்று நாடகம் போட்டார். அது முதல் அவருடன் கூட்டணி வைத்தாலும் அவர் கட்சியை பிளக்க, முடக்க என்ன வெல்லாம் செய்து வருகிறார். ஜெயாவும் அதுதான் செய்கிறார். வை கோ வும் என்ன செய்வார். அவர் இவளவு காலம் அரசியலில் இருப்பதுவே பெரிய விஷயம். தூங்குபவரை எழுப்பலாம் ஆனால் தூங்குவது போல நடிப்பவரை எழுப்ப முடியாது.
பதிலளிநீக்குhi yuva i dont agree ur point. u always support kalaignar only
பதிலளிநீக்குசரிங்கோ அதோ தட்சிணாமூர்த்தி தான் 1989-1991ல் 2 வருடம் 1996-2001 5 வருடம் 2006-2011 5 வருடம் என ஆட்சிக்கட்டில் ஏறினாரே அப்பொழுது என்ன செய்தார். சரி விடுங்க கடைசி 5 வருடங்களில் மேலும் அதிக டாஸ்மாக் கடைகளை திறந்து விட்டவராயிற்றே இந்த தட்சிணா.
பதிலளிநீக்கு//ஆணுறை அணிந்தால் எய்ட்ஸ் வராது என்று பிரச்சாரம் செய்து, இலவசமாக ஆணுறைகளை அரசு வழங்குவதை கள்ள உறவுகளை ஊக்குவிப்பதாக புரிந்துகொள்ள முடியுமா என்ன? //
பதிலளிநீக்குA+ comedy keep it up....
சமூகம் திருந்தாது, தனிமனிதன் திருந்த வேண்டும்! http://manam.online/News/Social-Issues/2016-MAY-20/Campaign-to-Eradicate-Liquor-6
பதிலளிநீக்கு