'மவுனம்' ரவி - மவுனம் என்ற கையெழுத்துப் பத்திரிகையை நடத்தியவர். அதனால் இவரோடு மவுனம் ஒட்டிக் கொண்டது.
'வெண்ணிற ஆடை' மூர்த்தி - இவர் நடித்த முதல் திரைப்படம் என்பதால் வெண்ணிற ஆடை இவர் பெயரின் மீது போர்த்தப்பட்டு விட்டது.
'மேஜர்' சுந்தரராஜன் - மேஜர் சந்திரகாந்த் என்ற திரைப்படத்தில் இராணுவ அதிகாரியாக நடித்ததால் ராணுவத்தில் பணிபுரியாமலேயே மேஜர் பட்டம் இவருக்கு வழங்கப்பட்டது. இவருக்கு இப்பட்டம் வழங்கப்பட்டது இந்திய இராணுவத்துக்கு தெரியுமா என்று தெரியாது.
'குமரி' முத்து - சொந்தப் பெயர் முத்து. குமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர், அதனால் குமரி முத்து.
'மலேசியா' வாசுதேவன் - மலேசியாவில் இருந்து இந்தியாவுக்கு வந்து செட்டில் ஆனதால்.
'பக்கோடா' காதர் - மெட்ராஸ் டூ பாண்டிச்சேரி படத்தில் எப்போதும் பக்கோடா சாப்பிட்டுக் கொண்டிருப்பார்.
'என்னத்த' கன்னையா - ‘நான்’ படத்தில் எப்போதும் "என்னத்தைச் செஞ்சி" என்று எப்போதும் சலித்துக் கொள்ளுவார். இன்றளவும் அவர் இந்த "என்னத்தை" விடவில்லை.
'சூப்பர்' சுப்பராயன் - ஒரு கெத்துக்காக தான் சூப்பரை சேர்த்துக் கொண்டாராம்.
'கனல்' கண்ணன் - இதுவும் ஒரு கெத்துக்கு தான்.
'விக்ரம்' தர்மா - முதலில் பணிபுரிந்த படம்.
'ராம்போ' ராஜ்குமார் - அதிரடி சண்டைக்காட்சிகள் அதிகம் இடம்பெற்ற ஆங்கில திரைப்பட வரிசையான "ராம்போ" இவருக்கு மிகவும் பிடிக்கும் என்பதால் ராம்போவாகி விட்டார்.
'காத்தாடி' ராமமூர்த்தி - இவரது உருவத்துக்காக அந்தப் பட்ட பெயர் வழங்கப்படவில்லை. இவர் நடித்த நாடகம் ஒன்றில் பிரபலமான இவருடைய கதாபாத்திரத்தின் பெயர் அது.
'நிழல்கள்' ரவி - முதல் படத்தின் பெயர்
'தக்காளி' சீனிவாசன் - கொஞ்சம் புஷ்டியாக இருந்ததால் இவரது கல்லூரி நண்பர்கள் 'தக்காளி' என்று கிண்டல் செய்வார்களாம். 'இவர்கள் வருங்காலத் தூண்கள்' என்ற திரைப்படத்தில் இவரது கேரக்டரின் பெயரும் 'தக்காளி'.
'ஏ.வி.எம்.' ராஜன் - ஏ.வி.எம். என்பது இவரது இனிஷியல் அல்ல. ஏ.வி.எம். நிறுவனம் தயாரித்த 'நானும் ஒரு பெண்' படத்தில் அறிமுகமானதால் நன்றி விசுவாசத்துக்காக ஏ.வி.எம்.மை இணைத்துக் கொண்டார்.
'குண்டு' கல்யாணம் - காரணம் வேணுமா?
'ஓமக்குச்சி' நரசிம்மன் - காரணம் வேணுமா?
'மீசை முருகேஷ்' - காரணம் வேணுமா?
'ஆரூர் தாஸ்' - யேசுதாஸ் திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்தவர். மாவட்ட பாசம் காரணமாக 'ஆரூர் தாஸ்' ஆனார்.
'டெல்லி கணேஷ்' - டெல்லியில் இராணுவத்தில் வேலை பார்த்தவர். பேசாம இவருக்கு 'மேஜர்' பட்டம் கொடுத்திருக்கலாம்.
'யார்' கண்ணன் - சக்தி கண்ணன் 'யார்' படத்தை இயக்கியதால் 'சக்தி' போய் 'யார்' ஆனார்.
'ஒருவிரல்' கிருஷ்ணாராவ் - இவருக்கு பத்து விரல்களும் உண்டு. இவர் நடித்த முதல் படத்தின் பெயர் தான் 'ஒரு விரல்'
'கருப்பு' சுப்பையா - ஏற்கனவே திரையுலகில் ஒரு சுப்பையா கொஞ்சம் வெள்ளையாக இருந்ததால் இவர் 'கருப்பு' சுப்பையாவாகி விட்டார்.
'பயில்வான்' ரங்கநாதன் - மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் இவரை இப்படித்தான் அழைப்பாராம். ஆளும் பயில்வான் தான்.
'பூர்ணம்' விஸ்வநாதன் - அவரோட இயற்பெயரே இது தாங்க.
கடைசியாக எல்லோருக்கும் தெரிந்தது தான். 'சிவாஜி' கணேசன். 'சத்ரபதி' என்ற நாடகத்தில் மராட்டிய மன்னர் சிவாஜியாக நடித்தார். அந்நாடகத்தையும், அதில் நடித்தவரையும் கண்டு வியந்த தந்தை பெரியார் வி.சி.கணேசனை 'சிவாஜி' கணேசனாக்கினார்.
உங்களுக்கு தெரிந்த பட்டப்பெயர்களையும், காரணங்களையும் பின்னூட்டத்தில் சொல்லலாம்.
luckylook - ?
பதிலளிநீக்கு:)
லக்கி லுக் நல்லாதான் இருந்ததே! ஏன் என்ன ஆச்சி????
பதிலளிநீக்குநேரவிரயம்!
பதிலளிநீக்குஇது ஏற்கனவே வந்த பதிவு மாதிரி தெரியுதே?!
பதிலளிநீக்கு'பூர்ணம்' விஸ்வனாதன் - பூர்ணம் என்பது அவருடைய ஊர்.
'ஜெமினி' கணேசன் - 'ஜெமினி' நிறுவனத்தில் பணி புரிந்ததால்.
அது சரி.. நடிகைகளுக்கு இப்படியெல்லாம் கூடப் பிறந்த பெயர்கள் உண்டா? (வெண்ணிற ஆடை நிர்மலா தவிர!)
பதிலளிநீக்கு'தேங்காய்' சீனிவாசன் - கல்மணம் என்ற நாடகத்தில் தேங்காய் வியாபாரியாக தோன்றி கலகலப்பூட்டியதால்தான் அவர் தேங்காய் சீனிவாசன் என்று அழைக்கப்பட்டார்.
பதிலளிநீக்கு'கிரேஸி' மோகன் - கிரேஸி தீவ்ஸ் நாடகத்தால்..!
oru viral krishnarav
பதிலளிநீக்குrocky rajesh
judo rathnam
jaquer thangam
அப்படியே இவரின் பேருக்கும் காரணம் சொல்லுங்க.
பதிலளிநீக்குகஞ்சா கருப்பு ???
Loose Mohan :)
பதிலளிநீக்கு'பக்கோடா' காதர் - மெட்ராஸ் டூ பாண்டிச்சேரி படத்தில் எப்போதும் பக்கோடா சாப்பிட்டுக் கொண்டிருப்பார்.//
பதிலளிநீக்கு****அப்பா பகோடா!!! அப்பா பகோடா!!! என்ற வசனத்தால் வந்த பெயிர்****
'ஜெயம் ரவி' போல
பதிலளிநீக்குநடிகைகளுக்கும் இது போல பெயர் உண்டே.
வெண்ணிற ஆடை நிர்மலா, படாபட் ஜெயலட்சுமி, சில்க் ஸ்மிதா
father of loose mohan acted in a film called "tight and loose" then his son mohan is called loose mohan.
பதிலளிநீக்குi personally like silk smitha, disco shanthi,etc..
puliyur saroja...
punnakai arasi
karakaatta kanaka
thelkadi
trouser
pasunesan
டிஸ்கோ சாந்தி, கோவை சரளா எல்லாம் விட்டுடீங்களே?
பதிலளிநீக்கு"காகா" ராதாகிருஷ்ணன்
"டணால்" தங்கவேலு
"தயிர்வடை" தேசிகன்
"இடிச்சபுளி" செல்வராஜ்
"யூகி" சேது
"அடடே" மனோகர்
"சிஸர்" மனோகர்
"லொள்ளுசபா" மனோகர் (இவர் தவிர,)
மற்றவர்கள் பேர் தெரியும், ஆனா காரணம் தெரியாது.
அதென்ன லக்கி லுக்?
பதிலளிநீக்குலக்கி லுக்குன்னா அதிர்ஷ்டப் பார்வை.. என்ன பார்வையோ... போட்டோவிலேயே கோணலாப் பாக்குறே...
இதுதான் அந்த லக்கிலுக்கா...??
ஓமக்குச்சி - ஒல்லியா இருக்கதுனால இல்ல, அவரு ஒரு நாடகத்துல யுகமுச்சி அப்படின்னு ஒரு ஜப்பானிய கேரக்டர்ல நடிச்சாரம். எப்போதோ எதிலோ படித்த ஞாபகம்.
பதிலளிநீக்கு