20 ஜனவரி, 2010

க்ரீன் டெக்னாலஜி : ஒரு சுருக்கம்!


‘க்ரீன் டெக்னாலஜி’ என்னும் சொல் கோபன்ஹேகன் மாநாட்டுக்குப் பிறகு பரபரப்பாக பேசப்படும் ஒரு சொல்லாகியிருக்கிறது. தமிழில் பச்சை தொழில்நுட்பம் என்று பச்சையாக மொழிப்பெயர்க்காமல் ‘சுற்றுச்சூழல் தொழில்நுட்பம்’ என்று நம் வசதிக்கு அழகாக மொழிபெயர்த்துக் கொள்ளலாம்.

இந்த ஆண்டிலிருந்து பொருளாதார கேந்திரமான வால்ஸ்ட்ரீட் சுற்றுச்சூழல் தொழில்நுட்பத்தை மையமாக்கி செயல்படும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது. இதுவரை எரிவாயு மற்றும் எண்ணெய் ஆகிய துறைகளையே பெரிதுமாக பொருளாதாரத்துக்கு உலகம் நம்பிக் கொண்டிருந்தது. உலகமே இவற்றில்தான் இயங்கிக் கொண்டிருந்தது.

புவிவெப்பம் மற்றும் சுற்றுச்சூழல் மாசு காரணமாக இவற்றுக்கு மாற்று தொழில்நுட்பத்தை முன்வைக்க வேண்டிய அவசியம் இன்று மனிதகுலத்துக்கு பெரும் சவாலாக விளங்குகிறது. இயற்கை நமக்கு அள்ளிக் கொடுத்திருக்கும் வளங்களை எந்தவிதத்திலும் சேதாரப்படுத்தாமல், அடுத்தக்கட்ட தொழில்நுட்ப வளர்ச்சிக்கு நாம் நகர்வது சுற்றுச்சூழல் தொழில்நுட்பத்தின் வாயிலாக மட்டுமே சாத்தியமாகும்.

எனவேதான் சுற்றுச்சூழல் தொழில்நுட்பம் இங்கே முக்கியத்துவம் பெறுகிறது. அரசுகளாலும், பல நிறுவனங்களாலும் இத்துறை வளர்ச்சிக்காக செலவழிக்கப்படப் போகும் தொகை நாம் கனவில் கூட காணமுடியாததாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது. ஏற்கனவே நன்கு வளர்ச்சியடைந்திருக்கும் தகவல் தொழில்நுட்பத்துறை, சுற்றுச்சூழல் ஆராய்ச்சிகளுக்கு கைகொடுக்கும் எனவும் தெரிகிறது.

எதிர்காலத்தில் வளர்ச்சி அடையப்போகும் துறை எப்படி இருக்கும் என்று துல்லியமாக விளங்கிக் கொள்வது கொஞ்சம் கடினம்தான். காப்பி குடித்துவிட்டு நாம் குப்பைத் தொட்டியில் தூக்கி எறியும் பிளாஸ்டிக் கப்பிலிருந்து, விண்ணுக்கு ஏவப்படும் ராக்கெட்டின் எரிபொருள் வரை எல்லாவற்றையுமே மாற்றப்போகிறோம் என்று புரிந்துக் கொள்ளுங்கள். மின்சாரத்துக்கு மாற்று வந்தாலும் ஆச்சரியப்பட ஏதுமில்லை. இயற்கைக்கு இணக்கமில்லாத எல்லா விஷயங்களையும் தூக்கி கடாசிவிட்டு, புதிய விஷயங்களை உருவாக்கப் போகிறோம். புதியதோர் உலகம் படைக்கப் போகிறோம். நீங்கள் எழுதும் பேனாவிலிருந்து, வீடு, ரோடு என்று ஒன்றுவிடாமல் எல்லாமே மாறப்போகிறது.

இப்போது இருக்கும் விஷயங்களே, நம் பயன்பாடுகளுக்கு இலகுவாகதானே இருக்கிறது, நாம் ஏன் மாற்றவேண்டும்? என்ற நியாயமான சந்தேகம் உங்களுக்கு எழலாம். சுவர் இருந்தால்தானே சித்திரம் வரைய முடியும்? உலகு உயிர்ப்போடு இருந்தால்தான் மனிதக்குலமும் வாழும். இதுவரையிலான நமது பெரும்பாலான கண்டுபிடிப்புகளும், தயாரிப்புகளும் சுற்றுச்சூழலுக்கு எதிரானவை. இவற்றை தொடர்ந்து பயன்படுத்திக் கொண்டிருக்கும் பட்சத்தில் சில நூறு அல்லது சில ஆயிரம் ஆண்டுகளில் பூமியில் புல், பூண்டு கூட மிச்சமிருக்காது. இயற்கையின் கோபத்தை யார்தான் தாங்கிவிட முடியும்?

எல்லாவற்றையும் மாற்றுவதற்கான பணி இவ்வருடம் தொடங்குகிறது. இது ஒரு தொடக்கம் மட்டுமே. இப்பணி பல நூற்றாண்டுகளாய் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டால் தான், கடந்த இரண்டு, மூன்று நூற்றாண்டுகளில் நாம் பாழ்படுத்திய உலகை பழைய நிலைக்கு கொண்டுவர முடியும்.

ஒயிட் காலர், ப்ளூ காலர் வேலையை எல்லாம் மறந்துடுங்க. இனிமேல் எல்லாருக்குமே க்ரீன்காலர் வேலைதான்!

13 கருத்துகள்:

  1. //ஒயிட் காலர், ப்ளூ காலர் வேலையை எல்லாம் மறந்துடுங்க. இனிமேல் எல்லாருக்குமே க்ரீன்காலர் வேலைதான்!//
    ரசித்தேன் !!!

    பதிலளிநீக்கு
  2. பெயரில்லா3:35 PM, ஜனவரி 20, 2010

    Green Technologies = Pasumai Thozilnudpangal right?
    Venkat

    பதிலளிநீக்கு
  3. அனானி!

    பசுமைத் தொழில்நுட்பம் என்றால் அது வேளாண்மை தொழில்நுட்பத்தை அல்லவா குறிக்கும்?

    பதிலளிநீக்கு
  4. நம் எதிர்கால சந்ததியினருக்கு நாம் ஏதேனும் விட்டுச்செல்ல விரும்புவோமானால், மாசற்ற சுற்றுச்சூழலைத்தவிர சிறந்த வேறெதுவும் இருக்கமுடியாது. வளர்ந்துவரும் அறிவியலின் வேகத்தில் புவிமாசுறுதலை கவனிக்கத்தவறிய மனிதன், காலங்கடந்தேனும் விழித்துக்கொன்டதில் மகிழ்ச்சிதான். தொழில்நுட்பத்தை சார்ந்திருக்கும், பயன்படுத்தும் ஒவ்வொருவரும் இதில் தங்களுக்கிருக்கும் பங்களிப்பை உணர்ந்துகொள்வதே, பூகோளத்தின் பசுமை மாற்றத்திற்கு வித்திடும் என்பதில் ஐயமில்லை!

    பதிலளிநீக்கு
  5. எல்லாம் இயற்கை சார்ந்து இயங்கிக்கொண்டிருந்தவைதான் லக்கி.

    விவசாயத்தையே எடுத்துக்கொள்ளுங்கள்.
    மரபு சார்ந்த விவசாய முறைகளை விட்டு, மக்கள் தொகை பெருக்கத்திற்கேற்ப உற்பத்தி போதாது என்னும் செயற்கையான ஒரு பட்யமுறுத்தலை முன்னிறுத்தி எம்.எஸ்.சாமிநாதன் ஆரம்பித்து வைத்த பசுமைப்புரட்சியின் விளைவாக,
    கணக்கிலடங்கா உரமும், பூச்சி மருந்துகளைய்டும் கொட்டி,
    பூச்சிகளின் உயிர்ச்சூழலையும், மண்ணிலிருந்த நுண்ணுயிரிகளையும் அழித்து தற்காலிக உற்பத்தி பெருக்கத்தினை உருவாக்கி,
    பலனை வெளிநாட்டு உரம் ,பூச்சி மருந்து மற்றும் விதை கம்பெனிகளுக்கு வாரி வழங்கினோம்..

    நிலத்திலிருந்த உயிர் சக்தியை சுத்தமாக அழித்து விட்டு இப்போது இயற்கை முறை விவசாயம் என எம்.எஸ் உட்பட அனைவரும் முழங்கிக்கொண்டிருக்கிறோம்.

    வானிலும் அப்படித்தானோ....

    இனி ராட்சத கற்றாலைகளும், சூரிய ஒளி மின் தயாரிப்புகளும் பெருமளவு பயன்பாட்டுக்கு வரும் என நம்பலாம்..

    ஆனால் கம்பெனிகளை பற்றியோ, லாப நட்டங்கள் பற்றியோ, நாடுகளின் வணிக நோக்கங்கள் குறித்தோ இயற்கைக்கு கவலையில்லை அல்லவா....
    அது பாட்டுக்கு சுனாமிகளையும், பூகம்பங்களையும், புயல்களையும் உருவாக்கி தனது இருப்பை நினைவு படுத்திக்கொண்டேயிருக்கிறது.

    தென்னை மரத்தில் தேள் கொட்டினால் பனை மரத்தில் நெரி கட்டுமாம்...
    பொருத்தமாகத்தான் தெரிகிறது.

    அங்கங்கே அடிபடவும் உலக நாடுகளை ஒன்றினைத்து க்ரீன் டெக்னாலஜியை புகுத்தப்போகின்றனர்..

    எப்படியோ நல்லது நடந்தால் சரி....

    பதிலளிநீக்கு
  6. எல்லோரும் இனிமேல் தண்ணீராலேயே 'கால்' கழுவ வேண்டும்...

    toilet tissue paper ஒழிக!

    பதிலளிநீக்கு
  7. மின்சாரத்துக்கு மாற்று வந்தாலும் ஆச்சரியப்பட ஏதுமில்லை//

    தயாரிக்கும் வகையில் மாற்றா? மின்சாரத்துக்கே மாற்றா? மின்சாரத்துக்கு எதுக்கு மாற்று தேவை?

    பதிலளிநீக்கு
  8. //தயாரிக்கும் வகையில் மாற்றா? மின்சாரத்துக்கே மாற்றா? மின்சாரத்துக்கு எதுக்கு மாற்று தேவை?//

    மின்சாரத்துக்கே மாற்றுதான். இப்போது நாம் பெறும் மின்சாரம் தயாரிக்க சுற்றுச்சூழலை வெகுவாக கெடுத்துத் தொலைக்க வேண்டியிருக்கிறதல்லவா?

    பூமியை சூடேற்றிக்கொண்டே போனால் என்னதான் ஆகும்? :-(

    பதிலளிநீக்கு
  9. மின்சாரத்துக்கே மாற்றுதான். இப்போது நாம் பெறும் மின்சாரம் தயாரிக்க சுற்றுச்சூழலை வெகுவாக கெடுத்துத் தொலைக்க வேண்டியிருக்கிறதல்லவா?
    //

    சரி தான். நீங்கள் கூறுவது இன்னும் புரியவில்லை ஆனால்.மின்சாரத்தை மாற்றாக எது? ( சூரிய ஒளியை நீங்கள் பயன்படுத்தினாலும் , அதை எதேனும் ஒரு வகையில் சேமித்து மின்சாரமாகவே பயன்படுத்த முடியும்.மரபு சாரா எரி சக்திகள் தயாரிக்கும் வகைக்கான மாற்று , மின்சாரத்திற்க்கு மாற்றா என்று எனக்கு தெரியவில்லை)

    பதிலளிநீக்கு
  10. பிரகாஷ்!

    மின்சாரத்துக்கு மாற்று கிடைத்தாலும் சரி. சுற்றுச்சூழலுக்கு ஏதுவான மாற்று மின்சாரம் கிடைத்தாலும் சரி. பிரியாணி டேஸ்ட்டாக இருந்தால் சரிதான்.

    பதிலளிநீக்கு
  11. நல்ல பதிவு யுவகிருஷ்ணா,

    இதில் மின்சாரத்திற்கு மாற்று என சமீபங்களில் சேர்த்துள்ளார்கள்.

    இதற்குமுன் energy saving என்பதுதான் கோட்பாடாக இருந்தது.

    இதுகுறித்து நானும் எனக்கு தெரிந்த அளவில் “சூடாகும் பூமி - Green Building தேவைகள்” என ஏற்கனவே பதிவிட்டிருக்கிறேன்.

    http://venkatesh-kanna.blogspot.com/2009/12/green-building.html

    நேரம் கிடைக்கும் போது பார்த்து உங்கள் பார்வையை பகிரவும்.

    பதிலளிநீக்கு
  12. Electricity is the most economical and easy way to distribute energy and so there will be no replacement of electricity ever . Right now over 75% of electricity in world is generated by burning coal/naturalgas/oil. How are we going to change all this, without making the necessary sacrifices (higher costs, availability constraints)? No one has the answer.

    பதிலளிநீக்கு