22 ஜனவரி, 2010
சங்கராச்சாரியார்!
எதிர்பார்த்தபடியே புதுவையில் நடந்து வரும் சங்கரராமன் கொலைவழக்கில் அடுத்தடுத்து சாட்சிகள் பல்டியடித்து வருகிறார்கள். உச்சக்கட்டமாக முக்கிய சாட்சியான ரவிசுப்பிரமணியம் ‘கொலை பற்றி எனக்கு எதுவும் தெரியாது’ என்று நேற்று பல்டியடித்து விட்டார்.
இச்சூழலில் பத்திரிகையாளர் சாவித்திரி கண்ணன் முன்பு எழுதிய ஒரு சிறுநூல் நினைவுக்கு வருகிறது. அந்நூலில் ‘வரலாறு நெடுகிலுமே சாதாரண மக்கள் இயல்பாக உணரக்கூடிய உண்மையின் தரிசன்ங்கள் தொடர்ந்து தடுக்கப்பட்டுள்ளன என்ற வெளிச்சக்கீற்று விழுதுகளாய் எனக்குள் இறங்கியது’ என்று குறிப்பிட்டிருக்கிறார். அவரைப் போன்ற பத்திரிகையாளர்களுக்கு இறங்கிய வெளிச்சம் மீண்டும் இருளுக்குள் அமிழத் தொடங்கியிருக்கிறது. அன்றே சொன்னார் அண்ணா, ‘சட்டம் ஒரு இருட்டறை’.
2004, நவம்பர் 11 கைதுக்குப் பிறகான சில சம்பவங்களை மீள்பார்வை செய்துப் பார்க்கவே இப்பதிவு. சங்கராச்சாரியார் கைதின்போது ஏற்பட்ட சில நிகழ்வுகளை தனது துல்லிய ஆய்வுகள் மூலமாக வெளிப்படுத்தியிருந்தார் சாவித்திரி கண்ணன். இவர் துக்ளக்கில் ஏராளமான கட்டுரைகளை எழுதியவர் என்பது இங்கே தேவையில்லாத, ஆனால் அவசியம் குறிப்பிட வேண்டிய ஒரு தகவல்.
ராதாகிருஷ்ணன் மற்றும் மாதவன் என்பவர்கள் மீது ஏற்கனவே கொலைதாக்குதல் முயற்சிகள் நடத்தியவர், பாலியல்ரீதியான பலவீனங்களை கொண்டவர், கூலிக்கு கொலை செய்யும் அடியாள் கூட்டத் தலைவர்களோடு நெருங்கிய நட்பு பாராட்டியவர் என்றெல்லாம் பரபரப்பான செய்திகள் நாள்தோறும் வெளியாகின. பல்லாண்டுகளாக திரையிட்டு மறைக்கப்பட்ட புனிதம் வெட்டவெளிச்சத்துக்கு வந்து சிதைந்துப் போனது.
ஜெயேந்திரர் கைது செய்யப்பட்டதற்கான காரணங்களும், கொலையான சங்கரராமன் மீதான அனுதாபமும் முற்றிலுமாக நிராகரிக்கப்பட்டு, கைதுக்குள்ளானவரின் அந்தஸ்து பற்றியும், கைது செய்யப்பட்ட முறை பற்றியுமே அதிகமாக பேசப்பட்டது.
இத்தனைக்கும் பாரம்பரியமிக்க கோயிலில், இந்து நம்பிக்கையில் ஆழ்ந்தப் பற்று கொண்ட வைதீக பிராமணர் பட்டப்பகலில் வெட்டிச் சாய்க்கப்பட்டது குறித்து இந்து அமைப்புகள் கள்ள மவுனம் காத்தன. இந்துமத எதிர்ப்பு இயக்கமான திமுகதான் அந்த ஏழை பிராமணரின் படுகொலைக்கு காரணமான உண்மை குற்றவாளியை கைது செய்யக்கோரி போராட்டம் நடத்தியது.
இந்துக்களின் பண்டிகையான தீபாவளியன்று மதத்தலைவரை கைது செய்யலாமா என்று கேணைத்தனமாக கேள்வி எழுப்பினார்கள். கிறிஸ்துமஸ் வரும் வரை போலிஸ்காரர்கள் காத்துக் கொண்டிருக்க வேண்டும் என்று விரும்பினார்கள் போலும். அயோத்தியைப் பிடித்து தொங்கிக் கொண்டிருந்த மத அரசியல் கட்சியான பிஜேபி ஒரே நாளில் ‘இஸ்லாமியர்களுக்கு மெக்கா, கிறிஸ்தவர்களுக்கு ஜெருசலேம், எங்களுக்கு காஞ்சி’ என்று கொதித்து எழுந்தது. ஐக்கிய முற்போக்கு கூட்டணித் தலைவர் சோனியா கிறிஸ்தவ மதத்தவர் என்பதாலேயே இந்துமதத் தலைவரை அவமானப்படுத்துகிறார்கள் என்று புரளி பரப்பியது.
ஆடிட்டர் குருமூர்த்தி போன்றவர்களின் உண்மை முகத்தை அறிய ஜெயேந்திரர் கைது துணைபுரிந்தது. “பத்திரிகைகள் பொறுப்பற்று எழுதுகின்றன. மடிப்பத்திரிகைகளுக்கும், மஞ்சள் பத்திரிகைகளுக்கும் இப்போது வித்தியாசம் தெரியவில்லை” என்று கொதித்து எழுந்தார். மடிப்பத்திரிகைகள் என்றால் பிராமணப் பத்திரிகைகளாம். அப்பட்டமான ஜாதியப் பார்வை இவ்வளவு நாட்களாக அறிவுத் தளத்தில் இயங்கிக் கொண்டிருந்ததாக பாவனை காட்டிக் கொண்டிருந்தவர்களுக்கு இருந்தது என்பதை மக்கள் இலகுவாக விளங்கிக் கொண்டார்கள்.
அந்தப் புத்தகத்தில் வலுவான ஒரு கருத்தை தனது சுயகருத்தாகவும் சாவித்திரி கண்ணன் சொல்லியிருந்தார். “சங்கராச்சாரியார்களிடமிருந்து இந்து மதத்தைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள்”
இன்று விசாரணை போகும் போக்கைப் பார்த்தால், ‘இந்து மதத்தின் கதி அதோகதிதான்’ என்று தோன்றுகிறது. கையும் களவுமாக பிடிபட்டிருந்தாலும், யார் ஆட்சியில் இருந்தாலும் ‘அவர்களின்’ லாபி மிகச்சிறப்பாகவே செயல்படும் என்பது மீண்டும் ஒருமுறை வெற்றிகரமாக நிரூபணமாகியிருக்கிறது. வழக்கிலிருந்து விரைவில் விடுவிக்கப்படப் போகும் ஜெயேந்திரருக்கு நமது வாழ்த்துகள்!
நூல் : சங்கராச்சாரியார்களும், இந்துமதமும் - சிதைக்கப்பட்ட உண்மைகள்
ஆசிரியர் : சாவித்திரி கண்ணன்
பக்கங்கள் : 40
விலை : ரூ.10/-
வெளியீடு : மாணிக்க சுந்தரம் வெளியீட்டகம்,
522, 2வது மேற்கு தெரு, காமராஜர் நகர்,
திருவான்மியூர், சென்னை-600 041.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
என்ன செய்வது லக்கி, சில அட்டாக் பாண்டிகளும் தப்பித்துவிடுவது போல இவர்களும் தப்பிக்கலாம்.
பதிலளிநீக்கு'புரட்சித் தலைவி' ஆட்சியில் பலமாக இருந்த சாட்சிகள் கலைஞர் ஆட்சியில் மட்டும் பிறழ் சாட்சிகளாக மாறிய மர்மம் என்ன?ஏழைப்பிராமணனைக் கொன்ற குற்றவாளிகளைக் கைது செய்ய போராடிய தி.மு.க இப்போது ஆட்சியிலேயே இருக்கிறது, இருந்தும் என்ன பயன்? கலைஞரின் பவர் அவாளின் பவருக்கு முன்னால் ஒன்றுமில்லையா, அல்லது இதுவும் ஒரு வகை கூட்டணியா?
பதிலளிநீக்குநம்ம நாட்டில எந்த பெரிய மனுஷனையும் தண்டிச்சதா சரித்திரம் இல்லை..
பதிலளிநீக்குis it available in bookstores...booklands/higginbothams?
பதிலளிநீக்குஇத்தனைக்கும் பாரம்பரியமிக்க கோயிலில், இந்து நம்பிக்கையில் ஆழ்ந்தப் பற்று கொண்ட வைதீக பிராமணர் பட்டப்பகலில் வெட்டிச் சாய்க்கப்பட்டது குறித்து இந்து அமைப்புகள் கள்ள மவுனம் காத்தன//
பதிலளிநீக்குவெட்கம் தான் ...மற்ற விசயங்களுக்கு வரிஞ்சு கட்டி கிட்டு ஆடுவானுங்க...ந்ல்ல பதிவு.ந்ல்ல புதககத்திற்க்கு ஆதரவு தந்துள்ளீர்கள்
//is it available in bookstores...booklands/higginbothams?//
பதிலளிநீக்குடாக்டர்! இந்த புத்தகம் அங்கெல்லாம் கிடைக்குமா என்று தெரியாது. ஆனால் பெரியார் திடலில் இருக்கும் புத்தகக் கடையில் நிச்சயம் கிடைக்கும்.
\\என்ன செய்வது லக்கி, சில அட்டாக் பாண்டிகளும் தப்பித்துவிடுவது போல இவர்களும் தப்பிக்கலாம்.\\
பதிலளிநீக்குஅறியப்படும் நீதி:- சங்கராச்சாரியர்கள்==அட்டாக் பாண்டிகள்.....
\\கலைஞரின் பவர் அவாளின் பவருக்கு முன்னால் ஒன்றுமில்லையா, அல்லது இதுவும் ஒரு வகை கூட்டணியா?\\
பதிலளிநீக்குபுரட்சித் தலைவியின் மீது திமுக அரசு(கலைஞர்) தொடர்ந்த வழக்குகளின் நிலையும் இதுதானே? அது எந்த வகைக் கூட்டணியோ?
ஜெயேந்திரர் என்ற ஆபாச மனிதனை தெய்வநிகர் வழிபாட்டுக்குரியவராக தொழுதுபுடைசூழும் கூட்டம் உள்ளவரையில், அவரால் எந்த தளையிலிருந்தும் தன்னை விடுவித்துக்கொண்டு வெளியில்வரமுடியும். விபூதி வாங்கி பூசிக்கொள், அன்றேல் விரலை சூப்பிக்கொண்டு வேடிக்கைபார்!
பதிலளிநீக்கு\\விபூதி வாங்கி பூசிக்கொள், அன்றேல் விரலை சூப்பிக்கொண்டு வேடிக்கைபார்!\\
பதிலளிநீக்குஇவர்கள் சொன்னால், மாட்டு மூத்திரத்தையே தலையில் ஊற்றிக் கொள்ளத் தயங்காதவர்கள், சாம்பலைப்(விபூதி) பூசிக் கொள்வதற்கா தயங்கப் போகிறார்கள்!
1. இந்துமத எதிர்ப்பு இயக்கமான திமுகதான் அந்த ஏழை பிராமணரின் படுகொலைக்கு காரணமான உண்மை குற்றவாளியை கைது செய்யக்கோரி போராட்டம் நடத்தியது.
பதிலளிநீக்கு2. யார் ஆட்சியில் இருந்தாலும் ‘அவர்களின்’ லாபி மிகச்சிறப்பாகவே செயல்படும் என்பது மீண்டும் ஒருமுறை வெற்றிகரமாக நிரூபணமாகியிருக்கிறது.
முற்போக்கு கட்சி என்று திமுக இன்றும் தன்னை சொல்லிக்கொள்வது மிகப்பெரிய காமெடி என்று மக்கள் நன்றாகவே புரிந்து வைத்திருக்கிறார்கள். அதனால்தான் கிறிஸ்துமஸ் அன்று கிறிஸ்துமஸ் தாத்தா படம் போட்ட கலைஞர் டிவி லோகோவும், விநாயகர் சதுர்த்தியன்று விடுமுறை நாள் சிறப்பு நிகழ்ச்சிகள் என்றும் காட்டுகின்றனர். விநாயர் இருக்கிறார் என்று ஒத்துக்கொள்ளவும் மனதில்லை, ஆனால் அன்று கிடைக்கும் ஸ்பான்சர் லட்சங்களை சுருட்டாமல் விடவும் மனசில்லை. கிருஸ்துமஸ் லோகோ போடுகிரீர அப்படிஎன்றால் இயேசு என்ற மனிதர் இருந்தார், அவர் இறந்த மூன்றாம் நாம் கடவுளானார் என்று ஒத்துக்கொள்கிறீர்களா எனக்கேட்டால் bathilumillai.
என்ன கேவலமான பொழப்பு இவருக்கு. லக்கி, இதெல்லாம் காம்ப்ரமைஸ்ன்னு சொல்லிடாதீங்க, என்ன அவர் தன்னை ரொம்ப சீரியசான முற்போக்குவாதின்னு சொல்லிட்ட்ருக்கார்
மதுரை தினகரன் வழக்கிலும் சாட்சிகள் பல்டி அடித்தனர். அதுவாவது எதிர்பார்த்த பல்டி. ஆனால் இந்த சங்கராசார்யார் விஷயம் மர்மமாக உள்ளது. இத்தனைக்கும் இவாள் தண்டிக்கப்படவேண்டும் என்று அன்று போராடியதே கலைஞர் தான் !!!!
பதிலளிநீக்குஅவாள், இவாள் எல்லாம் மன்னர்மன்னருக்கு கிடையாது, காசு, ஆதாயம் எவாள்கிட்டேர்ந்து வந்தாலும் 'நாம்' னு சொல்லி உதடு ஒட்டிண்டுடாதோ .... ?
பதிலளிநீக்குஅசட்டு அம்மாஞ்சிகள் லக்கி போண்ற தொண்டரடி ஆழ்வார்கள்தான்! பாவம், எப்ப ஏமாறுவோம்னு காத்திகிட்டுருக்கிற கூட்டம்! ;)
லக்கி என்ன செய்வது...இதுதான் பண பலம்..ஆள் பலம் எல்லாம்..
பதிலளிநீக்குமுதலில்..தான் சேர்ந்துள்ள மாநிலத்தில் நீதி கிடைக்காது என்று வேறு மாநிலத்திற்கு வழக்குகளை மாற்றச் சொல்வதே..சட்டத்தை இழிவு படுத்தும் செயல்..இது எல்லோருக்கும் பொருந்தும்..சட்டம் இருட்டறை மட்டுமல்ல..எல்லா வழக்குகளிலும் அதனால் நியாயத்தை வழங்க முடியா ஊனமானதும் கூட
லக்கிக்கு தெரியாததல்ல
பதிலளிநீக்குஇரவி சுப்ரமணியன் மாட்டினால் அப்பு மாட்டுவார்.அப்பு யாரின் பினாமி மற்றும் அடியாள் என்பது ஊருக்கே தெரியும்
//இன்று விசாரணை போகும் போக்கைப் பார்த்தால், ‘இந்து மதத்தின் கதி அதோகதிதான்’ என்று தோன்றுகிறது.//
பதிலளிநீக்குசிலர் செய்யும் தவறுகளால் இந்து மதமே அழியும் என்பது எல்லாம் கொஞ்சம் ஓவர் தான். இவரை விட ஆயிரம் மடங்கு அட்டூழியம் செய்த போப்பாண்டவர்கள் இருந்து இருக்கிறார்கள். அவர்களால் கிறுத்துவ மதம் அழிந்தா போனது?
\\இவரை விட ஆயிரம் மடங்கு அட்டூழியம் செய்த போப்பாண்டவர்கள் இருந்து இருக்கிறார்கள். அவர்களால் கிறுத்துவ மதம் அழிந்தா போனது?// அதில்லீங்க மணிவண்ணன், யுவகிருஷ்ணா போன்றவர்களுக்கு எப்படா பார்ப்பான் தப்பு செய்வான், ஏறி மிதிக்கலாம்னு அவ்ளோ ஆசை... வேறென்ன?
பதிலளிநீக்குIn 1967, Rajaji and CN Annadurai could form an alliance and fight election even though they had no common beliefs or ideologies.
பதிலளிநீக்குIn 1980, Kalaignar joined hands with Indira Ammaiyar, the same lady who had thrown out a government of his undemocratically through emergency just 5 years back.
And In 2002, when we had our Kalaignar and BJP were in the same government in Delhi, even as gujarat riots were happening.
And 2007 Dinakaran Office Attack case is just too recent and no need to tell how the parties on both sides are now today.
BJP , DMK, AIADMK all know that Sankaracharya has outlived its utility value, so they have so many other issues to milk . We can continue to argue about him endlessly (both pro and anti)to boost our ideological beliefs and that is all we can do .
satthathin pidiyilirunthu thappalam. aanal vegu seekiram DEIVAM indha kamakediyai ninru kollum.
பதிலளிநீக்கு60 ஆண்டு கால அரசியலமைப்பு சட்டம், எந்த சமுதாயத்தை சேர்ந்தவராக இருந்தாலும், உயர்ந்த அந்தஸ்து கொண்டவர்களுக்கு பாதுகாப்பாகவே இருந்திருக்கிறது. ஜாதி எல்லாம் அதற்குத் தெரியாது. வசதி படைத்தவர்கள், பெரிய மனிதர்களாக காட்டிக் கொள்பவர்கள், அதிகாரத்தில் இருப்பவர்கள் தண்டிக்கப் பட்டதில்லை.
பதிலளிநீக்குதா.கிருட்டினன் கொலை வழக்கு, மதுரை தினகரன் ஊழியர்கள் கொலை வழக்கு, ஆருஷி கொலை வழக்கு, ருச்சிகா கொலை வழக்கு ஆகியவற்றில் என்ன நடந்ததோ, அது தான் இங்கேயும் நடக்கிறது.
வருத்தப்பட வேண்டிய விஷயம். நல்ல பதிவு, ஆனால் குறிப்பிட்ட சமுதாயத்தின் மீது உள்ள வெறுப்பை கலந்து, திமுக தான் அநியாயத்திற்க்காக குரல் கொடுப்பது போலவும் எழுதி இருப்பதுதான் கொடுமை.
Thatha
பதிலளிநீக்கு=========
Vairavel - Tiruchendur
Udayakumar - Annamalai Univ
Ta Kiruttinan
Dinakaran Case
Amma
=====
Saravana Bhavan Annachi
Kanchi Mutt - Sankar raman
If both of them has given share to Sasikala they wouldnt have went to jail
========
All Cases show us Justice is only available to powerful and rich people not for common man