19 ஜனவரி, 2010

ஆயிரத்தில் ஒருவன் (2010)


பொங்கலுக்கு முன்பாக திருவண்ணாமலை செல்ல வேண்டியிருந்தது. கோயம்பேட்டில் இருந்து அரசுப்பேருந்து. பூமோ, தூமோ ஏதோ ஒரு பிரத்யேக டிவி சேனல். குணா ஓடிக்கொண்டிருந்தது. ஏற்கனவே ஐம்பது முறைக்கு மேல் பார்த்துவிட்டதால் அசுவாரஸ்யமாக ஹெட்போனை காதில் மாட்டினேன். ‘கரிகாலன் காலைப்போல...’ வேட்டைக்காரன் அலறினான்.

ஐந்துமுறைக்கும் மேலாக ‘மந்தரிச்ச உதடை’ திரும்ப திரும்ப கேட்டு, அலுத்துப் போனதால் ஹெட்போனை கழட்டினேன். செஞ்சியின் நெரிசலான போக்குவரத்தில் பேருந்து ஊர்ந்துக் கொண்டிருந்தது. எனக்கு பின்சீட்டில் ஒரு கிராமத்து இளைஞர், தன் புதுமனைவியிடம் வியப்பான குரலில், சத்தமாக சொல்லிக் கொண்டிருந்தார். “பத்தொன்பது வருஷத்துக்கு முன்னாடியே கமல் என்னாம்மா படமெடுத்திருக்கார் பாரேன்!”

2029லும் யாராவது என்னைப் போல திருவண்ணாமலைக்கு பேருந்தில் போகலாம். அப்போதும் யாராவது கிராமத்து இளைஞர், “பத்தொன்பது வருஷத்துக்கு முன்னாடியே செல்வராகவன் என்னாம்மா படமெடுத்திருக்கார் பாரேன்!” என்று வியப்படையலாம்.

காலத்தை தாண்டி நினைவுகூறத்தக்க திரைப் படைப்புகள் தமிழில் குறைவு. ஆயிரத்தில் ஒருவனையும் தயங்காமல் இப்பட்டியலில் சேர்த்துக் கொள்ளலாம். கமல்ஹாசனின் படங்கள் வெளியாகும் நேரத்தில் வசூல்ரீதியான வெற்றியை பெரும்பாலும் அடைவதில்லை. ஆயினும் பத்து, இருபது ஆண்டுகள் கழித்து அடுத்துவரும் தலைமுறையினர் சிலாகிக்கிறார்கள். செல்வராகவனும் சிலாகிக்கப்படுவார்.

* - * - * - * - * - *

புதுமைப்பித்தன் ஒரு மொக்கை எழுத்தாளர் என்று அடிக்கடி சாரு எழுதுவதுண்டு. ‘அப்படியென்ன மொக்கையாக எழுதியிருக்கிறார்?’ என்று அவரை வாசிக்க சாருவே தூண்டுகோலாக இருந்தார். வாசித்தபிறகே “புதுமைப்பித்தன் ஒரு லெஜண்ட், அவரை யாருடனும் ஒப்பிட இயலாது!” என்பது புரிந்தது.

சாரு யாரையாவது எதிர்மறையாக விமர்சித்தாலும் கூட, அவரது வாசகர்களுக்கு நல்லதையே செய்கிறார். நல்ல அறிமுகத்தை தருகிறார். சாரு ஆபத்தற்றவர். இன்னொரு எழுத்தாளர் நல்லமுறையிலேயே யாரையாவது அறிமுகப்படுத்தினாலும் கூட, அவர் ஆபத்தானவர் என்று உள்ளுணர்வு அடித்து சொல்லிக்கொண்டே இருக்கிறது. பெரும்பான்மையான நேரங்களில் உள்ளுணர்வே வெல்கிறது.

புதுமைப்பித்தனை வாசித்த யாருமே கபாடபுரத்தை மறக்க முடியாது. ஒரு மேஜிக் கலைஞனின் நுணுக்கத்தோடு, அவர் கவனமாக இழைத்து, இழைத்து நெய்த படைப்பு. ‘மேஜிக்கல் ரியலிஸம்’ என்பதையெல்லாம் புதுமைப்பித்தன் அறிந்திருப்பாரா என்று தெரியாது. ஆனால் அப்படைப்பு அச்சு அசல் ‘மேஜிக்கல் ரியலிஸ’ கூறுகளைக் கொண்டது.

கபாடபுரம் வாசித்ததில் இருந்தே, புதுமைப்பித்தனின் வர்ணிப்பு என்னை தொந்தரவு செய்துக்கொண்டே இருந்தது. அவரது எழுத்தை காட்சியாக, மிகச்சரியாக கற்பனை செய்ய இயலாதது குறித்த என்னுடைய திறமைக்குறைவை நினைத்து அடிக்கடி நொந்துகொள்வேன். இதனாலேயே அப்படைப்பை அடிக்கடி மீள்வாசிப்பும் செய்யவேண்டிய தேவை ஏற்பட்டது. கபாடபுரம் மாதிரியான தொல்லையை தந்த இன்னொரு படைப்பு ஜெயமோகனின் டார்த்தீனியம். மேஜிக்கல் ரியலிஸத்தின் தன்மையே வாசகனை இவ்வாறு தொந்தரவுக்கும், தொல்லைக்கும் ஆளாக்குவதாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

இந்த நீண்டகால தொந்தரவுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது ‘ஆயிரத்தில் ஒருவன்’. கபாடபுரத்துக்கு ஒப்பான ஒரு கனவு நகரத்தை கண்முன்னே காட்சியாக விரித்ததில் ஆயிரத்தில் ஒருவன் குழு அபாரவெற்றி கண்டிருக்கிறது.

* - * - * - * - * - *

இப்படம் வெளியான இரு தினங்களுக்குளாகவே பெற்றிருக்கும் விமர்சனங்கள் பலவும் நகைக்க வைக்கிறது. இதுவரை என்னவோ எல்லாப் படத்துக்கும் தமிழ் ரசிகன் ‘லாஜிக்’ பார்த்து ரசித்தது போலவும், இப்படம் லாஜிக்குகளை மீறியிருப்பது போன்ற தோற்றமும் கட்டமைக்கப்படுவது வேடிக்கையானதும் வினோதமானதுமான ஒரு விஷயம். மேஜிக்குக்கு லாஜிக் கிடையாது. ஆயிரத்தில் ஒருவன் ஒரு மேஜிக் கலைஞன்.

படத்தின் இரண்டாம் பாதி, ஈழத்தில் நடந்த கடைசிக்கட்ட சோகங்களை உருவி வணிகமாக்கியிருக்கிறது என்ற விமர்சனமும் அர்த்தமற்றது. படத்தின் படப்பிடிப்பு சம்பந்தப்பட்ட காலக்கட்டத்துக்கு முன்பே படமாக்கப்பட்டு விட்டது என்பதை செல்வராகவனே பேட்டியில் ஒப்புக் கொண்டிருக்கிறார்.

* - * - * - * - * - *

தொழில்நுட்பரீதியாக ஏகப்பட்ட விஷயங்களை முதன்முறையாக தமிழில் செல்வராகவன் சாத்தியமாக்கி காட்டியிருக்கிறார். குறிப்பாக சொல்லவேண்டுமானால் கிளாடியேட்டர் பாணியில் நடைபெறும் அந்த மைதான சண்டைக்காட்சி.

சுற்றிலும் ஆயிரமாயிரம் பார்வையாளர்கள். ஒரு தடியன் சங்கிலியில் இரும்புக் குண்டை கட்டி சுழற்றி, பலரின் தலைகளை சிதறவைக்கிறான் என்பதை சுலபமாக எழுத்தில் வடித்துவிடலாம். தத்ரூபமாக காட்சியாக்கிருப்பதில், ஒரே ஓவரில் எட்டு சிக்ஸர் (ரெண்டு பால் நோ பால்) அடிக்கிறார் செல்வா.

* - * - * - * - * - *

எல்லோரும் சொல்வதைப் போல ரீமா கலக்கியிருக்கிறார். அனாயசமாக இரு கைகளிலும் துப்பாக்கி ஏந்தி சுடுவதில் தொடங்கி, நீருக்குள் டைவ் அடிப்பது, ஓடுவது, ஒரு நொடி நகைத்து மறுநொடி கடுத்து என்று அதகளம். ரீமாவின் உழைப்புக்கு நிஜமாகவே அவர் அணிந்திருக்கும் லெதர் டவுசர் கிழிந்திருக்க வேண்டும். ஆண்ட்ரியா அழகு. ஊட்டிரேஸில் ஓடும் உயர்ஜாதிக் குதிரை.

கார்த்தி ஆரம்பக்காட்சியில் இருந்தே அட்டகாசம். ‘பேலன்ஸ் அமவுண்டை கொடுத்துடுங்க!’ என்று அழுதுக்கொண்டே கேட்கும் காட்சியெல்லாம் கலக்கல். இரவில் இரண்டு ஃபிகரும் கட்டிக்கொண்டு தூங்க, அவர் முழிக்கும் முழி ‘ஏ’ க்ளாஸ். பார்த்திபனின் பாத்திரம் இதுவரை தமிழில் இல்லாதது.

* - * - * - * - * - *

ஆயிரத்தில் ஒருவன் - ஹாலிவுட்டுக்கும், கோலிவுட்டுக்குமான இடைவெளியை வெகுவாக குறைத்திருக்கிறான். விரைவில் எட்டிவிடலாம் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறான். இதுவரை கமல் மட்டுமே சுமந்துகொண்டிருந்த சுமையை, கூட சேர்ந்து தானும் சுமக்க முன்வந்திருக்கும் செல்வராகவனுக்கு ரெட் சல்யூட்!

54 கருத்துகள்:

  1. விமர்சனம் படத்த பத்தி பேசனும். படத்தோட கதைய ஒப்பிக்க கூடாது. நல்ல விமர்சனம்ங்க. நிச்சயம் பாக்கனும் படத்த.

    இன்னும் சில மாதங்களுக்கு குவைத்தில் இப்படத்தை பார்க்க வழியில்லை.

    பதிலளிநீக்கு
  2. ஒரே ஓவரில் எட்டு சிக்ஸர் (ரெண்டு பால் நோ பால்) அடிக்கிறார் செல்வா.

    லக்கி பன்ச்.

    படத்தை பற்றி நிறைய மாற்று கருத்துகளை படித்திருந்தாலும் பதிவு அருமைதான்.

    Well done Yuva..

    பதிலளிநீக்கு
  3. படம் பார்க்கத் தோன்றுகிறது !

    பதிலளிநீக்கு
  4. Havent seen the film..but liked the way you DROPPED DOWN your WORDS..on it..
    ur writing gave a PRESSURE to watch the film..
    gud one..bcoz there were so many PARADOXES floating around the place..
    nandri...

    பதிலளிநீக்கு
  5. Your review is perfect - tamila intha mathiri padam first time vanthurukku we need to appreciate selvas hard work.

    All other the tamil bloggers are only notify the logic - cablesankar also saying the logic mistake.

    your review only appreciate this film again nice review.

    பதிலளிநீக்கு
  6. யுவா,

    உங்களைச் சந்திக்காமல் வந்தது மிகுந்த கவலை அளிக்கிறது.

    பதிலளிநீக்கு
  7. Good review. It could be fantasy not merely magical realism (my opinion).
    If you get a chance read Italo Calvino's "Invisible Cities". Many creative industry (Arts, Media, Architecture) use his stories as their inferences.

    பதிலளிநீக்கு
  8. வணக்கம் நண்பரே, you maketh nice blend.

    பதிலளிநீக்கு
  9. நல்ல விமர்சனங்க!நானும் இந்தப் படத்தை பார்க்க ஆவலாயிருக்கிறேன்!

    பதிலளிநீக்கு
  10. //படத்தின் படப்பிடிப்பு சம்பந்தப்பட்ட காலக்கட்டத்துக்கு முன்பே படமாக்கப்பட்டு விட்டது என்பதை செல்வராகவனே பேட்டியில் ஒப்புக் கொண்டிருக்கிறார்.//

    அவர் சொன்னதாக படித்தபோது சிரிப்பு வந்தது. இங்கே படிக்கும்போது குழப்பம்.
    அப்போ அந்த காட்சிகளை காண்பிக்கப்பட்டதை ஒத்த நிகழ்வுகள் கடந்த இரண்டு வருடமாகத்தான் நடந்ததா ஈழத்தில்? அது ஐ.பி.கே.எஃப்ஃபின் கொடுமைகளாக நினைத்துக் கொண்டேன். கொண்டோம்

    //“பத்தொன்பது வருஷத்துக்கு முன்னாடியே கமல் என்னாம்மா படமெடுத்திருக்கார் பாரேன்!//

    வெகு சுலபமாக சொல்லிவிட்டீர்கள். யதார்த்தமான ஒரு கதையை இயல்பாக சொன்னார்.அதனால்தான் இன்னமும் சிலாகிக்கிறோம். அதன் பிரம்மாண்டம் குறித்து யாரும் சிலாகிக்கவில்லை. ஸ்க்ரிப்ட்டில் பிரம்மாண்டம் இருந்த படங்களே காலத்தை வென்று நிற்கின்றன. நிற்கும். காட்சியில் காட்டும் மேஜிக்குகள் எல்லாம் நிற்காது. ஆ.ஒ.இரண்டாம் வகை.

    பதிலளிநீக்கு
  11. பின்னூட்டங்களுக்கு நன்றி நண்பர்களே!

    கார்க்கி!

    ஆயிரத்தில் ஒருவன் படத்தின் கதை, திரைக்கதை வெகுக்கவனத்தோடு கோர்க்கப்பட்டிருப்பதாகவே கருதுகிறேன். மூன்று மணி நேரம் படம் ஓடிய அலுப்பு எனக்கு எங்குமே இல்லை. படத்தின் இரண்டாம் பாதி தமிழ் புரியவில்லை என்று உடன் படம் பார்த்த சிலர் சொன்னார்கள். எனக்கு அதுகூட பிரச்சினையாகப் படவில்லை.

    பதிலளிநீக்கு
  12. யோசித்து பாருங்கள் லக்கி. பத்து வருடம் குறித்து அன்பே சிவம் பற்றி பேசுவார்கள். தசாவாதாரம்?

    //இதுவரை என்னவோ எல்லாப் படத்துக்கும் தமிழ் ரசிகன் ‘லாஜிக்’ பார்த்து ரசித்தது போலவும், இப்படம் லாஜிக்குகளை மீறியிருப்பது போன்ற தோற்றமும் கட்டமைக்கப்படுவது வேடிக்கையானதும் //

    இது படிக்கும் போது சற்றே நகைத்தேன். எல்லாப் படங்களும் கோலிவுட்டுக்கும் ஹாலிவுட்டுக்குமான இடைவெளியை குறைத்ததாக சொல்லப்படவில்லையே!! அபப்டி ஒரு படமென்னும் போது அளவுகோலை மாற்றித்தானே ஆக வேண்டியிருக்கிறது?

    / இதுவரை கமல் மட்டுமே சுமந்துகொண்டிருந்த சுமையை, கூட சேர்ந்து தானும் சுமக்க முன்வந்திருக்கும் செல்வராகவனுக்கு ரெட் சல்யூட்//

    எத்தனை சுலபமாக பருத்திவீரனையும், சேதுவையும் மறக்க முடிகிறது நம்மால்? அதற்கே இந்த நிலை என்றால் ஆயிரத்தில் ஒருவன் 2010 தீபாவளிக்கு ஒரு முறை தொலைக்காட்சியில் நினைவு கூறுவார்கள். அவ்வளவே.

    வரலாற்றை நானோ, நீங்களோ மட்டும் எழுதிவிட முடியாது சகா

    பதிலளிநீக்கு
  13. //மேஜிக்குக்கு லாஜிக் கிடையாது. //
    இதையேதான் நானும் சொல்லிக்கொண்டிருக்கிறேன்.

    //ஆயிரத்தில் ஒருவன் - ஹாலிவுட்டுக்கும், கோலிவுட்டுக்குமான இடைவெளியை வெகுவாக குறைத்திருக்கிறான்.//
    இதைப்போலத்தான் நான் நாணயத்தையும் நினைக்கிறேன். அழகாக, விருவிருப்பாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  14. கார்க்கி!

    உங்கள் லாஜிக் என்னவென்று எனக்கு நிஜமாகவே புரியவில்லை.

    தசாவதாரத்துக்கு என்ன கேடு? அது குணாவை விடவும் எதிர்காலத்தில் அதிகம் பேசப்படும் வாய்ப்பே அதிகம்.

    அடுத்து, பருத்திவீரனையும் சேதுவையும் வேட்டைக்காரனோ, அசலோ வரும்போது நீங்கள் வேண்டுமானால் மறந்துவிடலாம். என்னைப் போன்றவர்கள் அவ்வளவு சுலபமாக மறந்துவிடுவதில்லை.

    //வரலாற்றை நானோ, நீங்களோ மட்டும் எழுதிவிட முடியாது சகா//

    இந்த பஞ்ச் டயலாக் இந்த காண்டெக்ஸ்ட்டுக்கு எங்கு பொருந்தும் என்று தெரியவில்லை.

    ஏதோ ஒரு ஈகோ காரணத்தால் உங்களுக்கு ஆ.ஒருவனை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்று அனுமானிக்கிறேன்.

    அது சிறந்தப் படம் என்பது என் கணிப்பு. படம் பார்ப்பவர்கள் முடிவு செய்துக்கொள்ளட்டும்.

    வலைப்பூக்களில் நெகட்டிவ் விமர்சனங்கள் அதிகமாக வருகிறதே என்று அடுத்து நீங்கள் சுட்டிக் காட்டலாம். அரசியல், சினிமா, தேர்தல் என்று சகல விஷயங்களிலும் வலைப்பதிவர்கள் திரள்மக்களிடமிருந்து வெகுவாக விலகியிருக்கிறார்கள் என்று பலமுறை சொல்லியிருக்கிறேன். அதையே மீண்டும் ஒருமுறை சொல்லுவேன்.

    பதிலளிநீக்கு
  15. கார்க்கி,
    சேது, ப்ருத்திவீரன் ஆகிய படங்களும், ஆயிரத்தில் ஒருவனும் ஒன்றா? இதற்கு முன்னால் வந்த எதேனும் ஒரு சரித்திர/புராணக் கதை + கற்பனைத் திரைக்கதைப் படத்துடன் ஒப்பிட்டால் நன்றாக இருக்கும்.

    பதிலளிநீக்கு
  16. அ.பிரதாபன், விவாதத்தை நீங்களே கண்டினியூ பண்ணுங்களேன். கொஞ்சம் வேலை டைட்டா இருக்கு :-)

    பதிலளிநீக்கு
  17. லக்கி, அதிகம் வேண்டாம். இன்னும் இரண்டாண்டுகளில் கமலிடம் யாராவ்து சிறந்த ஐந்து படங்களை பட்டியிலட சொல்வார்கள். அவரே அதை சொல்ல மாட்டார் என்பது என் எண்ணம். அது கிடக்கட்டும்.

    நீங்கள் பாலாவை மறக்காதவர் என்றால் இந்த வரி எப்படி வரும் சகா?
    “இதுவரை கமல் மட்டுமே சுமந்துகொண்டிருந்த சுமையை”

    அந்த பன்ச், படம் 19 வருடம் கழித்து பேசப்படுமென்று நீங்கள் சொன்னது நடக்காது என்று நான் சொல்லும்போது பொருந்தாதா? :))

    யூகத்தின் அடிப்படையில் பேச வேண்டாம் என்பதாலே முதல் பத்தியை அது கிடக்கட்டும் என்று விட்டேன். உங்கள் அனுமானம் தவறானது. ஆர்வத்தோடு முதல் நாள் இரவு 12 மணி காட்சி பார்த்தேன். செல்வாவின் மீதிருந்த நம்பிக்கையும், கர்வமுமே முழுக் காரணம்.வேறில்லை

    வலைப்பூக்களை நான் கண்டுகொள்வதில்லை. அதை விடுங்க.

    ஆனால் பொதுவாக எல்லோரும் நான் கேட்கும் கேள்விகளுக்கு விஜயை முன்னிறுத்தியே பதில் சொன்னார்கள். அது என் தவறல்ல என்றே நினைத்தேன். நீங்கள் பதில் சொன்னாலும் வேட்டைக்காரனை டச் செய்திருப்பது என்னை சற்று யோசிக்க வைக்கிறது. :)))

    பதிலளிநீக்கு
  18. @அதிபிரதாபன்,

    அது சரி. கமல் அப்படி என்ன படத்தை எடுத்தார் சார்?கமலோடுதானே ஒப்பிட்டிருக்கிறார்கள்? அதனால் கேட்கிறேன்..

    உலகத்தரத்தில் தான் கமலோடு தோள் கொடுக்கிரார் என்று நினைத்தேன். இது வெறும் ”ஒரு சரித்திர/புராணக் கதை + கற்பனைத் திரைக்கதைப் படத்துடன்” என்று தெரியாமல் போய் விட்டது..

    பதிலளிநீக்கு
  19. நிச்சயமாகச் சொல்லலாம், ஆயிரத்தில் ஒருவன் உண்மையிலேயே ஒரு சிறந்த முயற்சி. அது வெற்றி பெற்றதா இல்லையா என்றெல்லாம் எனக்குத் தெரியாது.

    Troy, Gladiator, 300... இது போன்ற படங்களைப் பார்க்கும்போதெல்லாம் தோன்றும்... நம்மவர்கள் ஏன் இப்படி எடுப்பதைல்லை? கதைக்கும், இலக்கியத்திற்கும், கற்பனைக்கும், திறமைக்கும், தைரியத்திற்கும், பொருளுக்கும் தமிழில், தமிழ்நாட்டில் பஞ்சமா என்று. எனக்குத் தெரிந்து இதற்கு முன்னால் இதே போல ஒரு பட முயற்சி கமலின் மருதநாயகம்.

    அதற்கு முன்னால் இதே போன்ற முயற்சி எப்போது வந்தது என்று ஞாபகம் இல்லை. கமலின் ஹேராம் கூட இதே போன்ற தாக்கத்தைதான் ஏற்படுத்தியது.

    Jodha Akbar பார்க்கும்போது கூட இதே எண்ணம் தோன்றியது.

    பதிலளிநீக்கு
  20. ஞாயிற்று கிழமை தான் பார்த்தேன் நிறைய பேருக்கு பிடித்து இருந்தது..., வெடிகுண்டு வீசப்படும் போது பார்த்திபன் பேசும் வசனத்திற்கும் கை தட்டினார்கள் .., நிச்சயம் வெற்றி பெறும்...,

    //ஆயிரத்தில் ஒருவன் - ஹாலிவுட்டுக்கும், கோலிவுட்டுக்குமான இடைவெளியை வெகுவாக குறைத்திருக்கிறான்//



    இதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது..., என்றாலும் தமிழில் வெளி வந்த முக்கியமான படங்களுள் இதுவும் ஒன்று...

    பதிலளிநீக்கு
  21. அய்யோ கார்க்கி. திரும்ப திரும்ப வேலையை விட்டுட்டு பதில் சொல்ல வேண்டியிருக்கு :-(

    //நீங்கள் பாலாவை மறக்காதவர் என்றால் இந்த வரி எப்படி வரும் சகா?
    “இதுவரை கமல் மட்டுமே சுமந்துகொண்டிருந்த சுமையை”//

    பாலாவின் படங்கள் உணர்ச்சிகரமானவை, சிறந்தவை என்று ஒப்புக் கொள்கிறேன். அவை ஹாலிவுட் தரம் என்றெல்லாம் என்னை நானே ஏமாற்றிக் கொள்ள மாட்டேன். ‘நான் கடவுள்' படத்தை தவிர மற்ற மூன்று படங்களிலும் கதை, திரைக்கதை தவிர்த்து சினிமாவை புரட்டிப்போடும் தொழில்நுட்ப வளர்ச்சி எதையும் நான் கவனித்ததில்லை. அவரது சீடர் அமீராவது ராம் படத்தில் சில வித்தியாச முயற்சிகளை மேற்கொண்டார். அது பருத்தி வீரனிலும் தொடர்ந்தது. யோகி எடுக்கக் கூடிய தைரியமும் அவரிடம் இருந்தது.

    // நீங்கள் பதில் சொன்னாலும் வேட்டைக்காரனை டச் செய்திருப்பது என்னை சற்று யோசிக்க வைக்கிறது. :)))//

    ஏங்க. அசலையும் சேர்த்துதானே சொன்னேன்? :-)

    பதிலளிநீக்கு
  22. சரி இருவரும் வேலைக்கு திரும்பலாம் :))

    அவர் என்னடான்னா வெளிவராத மருதநாயகத்தை சொல்கிறார். தமிழ் சினிமாவைப் பற்றி பேசும்போது ஜோதா அக்பரை சொல்கிறார். உனக்கெல்லாம் அவர்தான் லாயக்கு என்று மாட்டிவிடும் உங்கள் அரசியலை என்னால் மிஞ்ச முடியாது. சோ, நானும் எஸ்கேப்ப்ப்ப்ப்ப்

    :))))

    பதிலளிநீக்கு
  23. கார்க்கி,
    நான் சொல்ல வருவது இதுதான். ஏற்கனவே இருக்கும் பழைய (சரித்திர/இலக்கிய)கதையுடன் புதிய கற்பனையைச் சேர்த்துப் படம் எடுப்பது இங்கு குறைவாகவே உள்ளது. சமீபத்தில்கூட அப்படி ஒருபடம் வந்தது. ஆனால் அது எந்த அளவுக்கு (இது போன்ற) தாக்கத்தை ஏற்படுத்தியது என்று தெரியவில்லை.
    அது, பஞ்சாமிர்தம்.

    பதிலளிநீக்கு
  24. எழுத்துநடையில பழைய பார்முக்கு திரும்பிட்டீங்க லக்கி..கலக்குங்க :))

    பதிலளிநீக்கு
  25. எனக்கும் உங்களி போலவே தோன்றியது

    இது ஒரு புதுமுயற்ச்சி தமிழ் சினிமாவில்

    இதைவிட சிறப்பான படங்கள் வரனும்னா இதை முதலில் பாரட்ட வேண்டும்

    பதிலளிநீக்கு
  26. //எழுத்துநடையில பழைய பார்முக்கு திரும்பிட்டீங்க லக்கி..கலக்குங்க :)//
    unmai ..unmai..

    பதிலளிநீக்கு
  27. பெயரில்லா7:17 PM, ஜனவரி 19, 2010

    ஜெயமோகனின் டார்த்தீனியம் - I see you mentioning this often. Do you know which book/collection has this story?

    பதிலளிநீக்கு
  28. //ஜெயமோகனின் டார்த்தீனியம் - I see you mentioning this often. Do you know which book/collection has this story?//

    அனானி!

    உயிர்மை வெளியிட்டிருக்கும் ஜெயமோகன் குறுநாவல்களில் தொகுக்கப்பட்டு இருக்கும் என்று நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  29. பெயரில்லா7:20 PM, ஜனவரி 19, 2010

    Thanks for the quick response.

    பதிலளிநீக்கு
  30. Boss,
    Dont compare 'Puthumai pithan' with selva raghavan..Puthumai pithan writing are different..If u really knew the art , u can appreciate pithan's or so.vi's worthiness......

    What's ter in 'Ayirathil Oruvan'...Greatest Joke is 'Azhagam Perumal' calls army when he reach the place.....All die except azhagam perumal in his troupe..After pothan make a call , movie can be fade out for a sec and 'vodafone tagline 'WHERE EVER WE GO , OUR NETWORKS FOLLOW' can appear.....Will be a hit......

    Reema sen is so confused.....Ter is no 'continuity' in her 'character'....Parthiban'dress..Still dont be in 'galdiator movie'..Think chozhas , our history and dress selva raghavan!!!...

    Parthiban has 1y time to think about 'SEX'...People are begging for 'food'.....They have technology to destroy a land by turning a 'WHEEL' when azhagam perumal come in but still they are 'BEGGING FOR FOOD and NO DEVELOPMENT....A PITY IN SCREEN PLAY'.......
    What is this 'USELESS SCRIPT WITH FULL OF HOLES AND PEOPLE ARE PRAISING JUST BCOS HE TOOK A MOVIE ON 'RAJA'......

    MGR 'Raja's movie are worth than these useless stuffs......
    POthan have 'CAMCORDER' but he dont have 'CELL FONE'....

    IF they can go with cell fone, why they bloody travel by foot , they can easily find the place by satellites.....

    'CHARACTERISATION' is very horrible...'MGR SONGS SEEMS TO ADDED ..NOT LOOKING NATURAL'...'MOVIES ARE LIKE TYPICAL SECENCES..'...Please dont prasie just bcos 'selva raghavan ' directed it...

    One humble request is 'Read Puthumai Pithan , Jeyakanthan' well, understand the 'true of art'..watch 'Tarkovsky movies'..Just dont say 'He is a legend"...It is a disgrace to an true artist like him ....

    பதிலளிநீக்கு
  31. குனா படம் டை மீ அப்,டை மீ டவுன் என்ற பிரஞ்சு படத்தின் அப்பட்டமான தழுவல் என்று மட்டும் சொல்லிக்கொள்கின்றேன் :-)

    பதிலளிநீக்கு
  32. //இதுவரை கமல் மட்டுமே சுமந்துகொண்டிருந்த சுமையை, கூட சேர்ந்து தானும் சுமக்க முன்வந்திருக்கும் செல்வராகவனுக்கு ரெட் சல்யூட்!//

    நான் ஒத்துகொள்ள மாட்டேன்!

    only Kamal did it? or
    he'll do it? or
    he is doing it?

    there are lot of persons to do the same here.

    what u say?

    expect ur reply!

    பதிலளிநீக்கு
  33. ///ஆயிரத்தில் ஒருவன் - ஹாலிவுட்டுக்கும், கோலிவுட்டுக்குமான இடைவெளியை வெகுவாக குறைத்திருக்கிறான். விரைவில் எட்டிவிடலாம் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறான். இதுவரை கமல் மட்டுமே சுமந்துகொண்டிருந்த சுமையை, கூட சேர்ந்து தானும் சுமக்க முன்வந்திருக்கும் செல்வராகவனுக்கு ரெட் சல்யூட்!///

    so யார் அடுத்த இளிச்சவாய் தயாரிப்பாளர் ?
    முரளி.

    பதிலளிநீக்கு
  34. படத்தை பற்றி பாசிடிவ் விமர்சங்கள் அதிகம் வர ஆரமித்துவிட்டன. இப்பொது ட்ரிம் செய்து 16 நிமிடங்கள் ஓட கூடிய காட்சிகளை எடுத்துவிட்டார்கள். கண்டிப்பாக தமிழில் இது ஒரு பிரம்பாண்ட பாண்டஸி படம். விமர்சனம் அருமை .

    பதிலளிநீக்கு
  35. பெயரில்லா9:41 AM, ஜனவரி 20, 2010

    Nanba - Olunga vela parthiruntha, ethe tiruvannamalaikku Car lla pora alavukku nelamai erunthirukkum.

    Cinema evano edukkiran, evano panam sambarikkiran.

    Neega yenpa adichittu sagarenga. Yentha padam oduna enna? odatti enna? Namakku enna polappo athai parungappa!!

    Yintha Karki olunga vela parthiruntha.. yineram US lla yo UK lla yo unkkanthu, yintha madiri Anonymous comment pottutu valkaiyai oteerukklam. Eppadi Parisalukku mudhugu soriya vendi erukkathu!!

    பதிலளிநீக்கு
  36. அருமையான விமர்சனம், Back to Form......

    பதிலளிநீக்கு
  37. பெயரில்லா10:56 AM, ஜனவரி 20, 2010

    AO defnitely one of the good film in tamil. peoples always criticise badly.
    people acception avatar but not AO. i don't know why ? in avatar no story only graphics(3D). thats all.
    the main comedy is people expecting subtitle for the second half.
    this mean that they want translation of conversation tamil to written tamil.

    பதிலளிநீக்கு
  38. திரளில் ஒருவன்!11:30 AM, ஜனவரி 20, 2010

    தோழர்!
    \\ அரசியல், சினிமா, தேர்தல் என்று சகல விஷயங்களிலும் வலைப்பதிவர்கள் திரள்மக்களிடமிருந்து வெகுவாக விலகியிருக்கிறார்கள் என்று பலமுறை சொல்லியிருக்கிறேன். அதையே மீண்டும் ஒருமுறை சொல்லுவேன். \\ 1000% உண்மை!

    இந்தக் கூற்று உண்மை என்பதற்கும், தோழர் நீங்கள் அப்படி விலகியிருக்கவில்லை என்பதற்கும், திரள்மக்களிடம் இத்திரைப்படம் பெற்றுக் கொண்டிருக்கும் வரவேற்பே
    ஆதாரம்!

    பதிலளிநீக்கு
  39. தமிழில் இதுவரை கண்டுவந்துள்ள திரைவிமர்சனகர்த்தாக்கள் பெரும்பாலானோரும், விமர்சிக்க எடுத்துக்கொண்ட படத்தின் பல்வேறு கூறுகளைப்பற்றி அலசுவதைவிடவும், அத்துறை சார்ந்த தத்தமது நுண் அறிவாற்றலை பறைசாற்றவிட முயலும் வேகத்தையே அதிகம் அவர்களின் விமர்சனத்தில் நான் உணர்ந்திருக்கிறேன் [உதாரணமாக கல்கி, மதன் மற்றும் சிலநேரங்களில் சாரு]. அத்தகைய விமர்சனங்கள், சராசரி பார்வையாளனுக்கு, விமர்சிக்கப்படும் திரைப்படங்கள் பற்றிய சரியான புரிதலுக்கு உதவியாய் இருப்பதில்லை. அவ்வகையில் யுவகிருஷ்ணாவின் இந்த எளிய, மேதாவித்தனமற்ற விமரிசனம் நிச்சயம் ஆறுதல்தான். செல்வராகவனின் படங்களில் உள்ள பிரச்சினையே தொடர்தரம்(consistency) இல்லாததுதான். ஆனாலும், இம்முறை அவர் எடுத்துக்கொண்ட மாறுபட்ட களத்திற்காகவே அவரை பாராட்டலாம்!

    பதிலளிநீக்கு
  40. பெயரில்லா9:06 PM, ஜனவரி 20, 2010

    Padam nalla irukku .....
    kandipaga theatrela poi parkanum.

    பதிலளிநீக்கு
  41. //இதுவரை கமல் மட்டுமே சுமந்துகொண்டிருந்த சுமையை, கூட சேர்ந்து தானும் சுமக்க முன்வந்திருக்கும் செல்வராகவனுக்கு ரெட் சல்யூட்//

    தயாரிப்பாளர்களுக்கு சூனியம் வைப்பதிலா?

    //தசாவதாரத்துக்கு என்ன கேடு? அது குணாவை விடவும் எதிர்காலத்தில் அதிகம் பேசப்படும் வாய்ப்பே அதிகம்.//

    தசாவதாரத்துக்கும் உலகம் சுற்றும் வாலிபனுக்கும் என்ன வித்தியாசம்?
    தொடர்ந்து படத்தயாரிப்பில் ஈடுபட்ட ஆஸ்கார் ரவிச்சந்திரனை எங்கே?
    லீலை என்று புதுமுகங்களை வைத்து எடுத்த படத்தை ரிலீஸ் செய்ய முடியாமல் திண்டாடுவதாக கேள்வி.


    //திரள்மக்களிடம் இத்திரைப்படம் பெற்றுக் கொண்டிருக்கும் வரவேற்பே
    ஆதாரம்//

    "சி" சென்டர்களில் இரண்டாம் பாதியை பாத்துட்டு ஜனங்க டெரர் ஆகுறாங்க.......


    மொத்தத்தில் நல்ல கதையை மோசமான திரைக்கதை எப்படி கெடுக்கும் என்பதற்கு ஆயிரத்தில் ஒருவன் ஓர் உதாரணம்.

    பதிலளிநீக்கு
  42. படம் சொத்தையாக இருந்ததாகவே எனக்குப் பட்டது.
    புது முயற்சி எல்லால் நல்லதுதான், ஆனா, பிசுபிசு கிராஃபிக்ஸ் எல்லாம் போட்டு,வக்கிரங்களை நுழைத்து டோட்டல் டாமேஜ் பண்ணிட்டாரு.
    இது காலத்தை தாண்டி நிக்கும்னெல்லாம் எனக்குத் தோணலை.
    இதே படம், வக்கிரத்தையும், சீப் கிராஃபிக்ஸையும் குறைத்து, நீளத்தையும் குறைத்து எடுத்திருந்தா, நீங்க சொன்ன 'மேலிடம்' பெற்றிருக்கலாம்.

    மொத்தத்தில், கொடுத்த $க்கு முதலாகவில்லை.

    பதிலளிநீக்கு
  43. LUCKY, YOUR REVIEW MADE ME TO SEE THE MOVIE, ON WHICH I WAS HAVING A DEBATE WITHIN ME, "TO SEE OR NOT TO SEE".

    GOOD MOVIE. THANKS FOR THE REALISTIC REVIEW.

    பதிலளிநீக்கு
  44. அருமையான விமர்சனம். என் கருத்தும் இதே தான்!

    பதிலளிநீக்கு
  45. ///ஒரே ஓவரில் எட்டு சிக்ஸர் (ரெண்டு பால் நோ பால்) அடிக்கிறார் செல்வா.///

    ---அப்பாவி யுவகிருஷ்ணா, செல்வாவின் பாட்டிங் பற்றி ரொம்ப சிலாகிக்கிறார். அந்த எட்டு பாலையும் போட்ட அசட்டு பௌலர் தான் தான் என்பது கூட தெரியாமல்..!

    (அதாங்க...அநியாய டிக்கட் விலையில் தண்ட காசு கொடுத்து பிளாக்கில் படம் பார்த்து இருக்கிறாரே... அதைச்சொன்னேன். நாம் எல்லாரும் யுவகிருஷ்ணா டீம், திருட்டு சினிமாக்களுக்காக நல்ல காசை பரிகொடுக்குற ஏமாளி டீம்.)

    பதிலளிநீக்கு