21 ஜனவரி, 2010

சாமியார் டி.வி.டி!


இன்னும் எத்தனை நாளைக்குதான் இந்த சினிமாக்காரர்கள் திருட்டு வி.சி.டி, திருட்டு வி.சி.டி. என்று புலம்பிக் கொண்டிருக்கப் போகிறார்களோ தெரியவில்லை. வி.சி.டி. என்ற தொழில்நுட்பம் கிட்டத்தட்ட வழக்கொழிந்துப் போய்விட்டது. இனிமேல் 'திருட்டு டி.வி.டி' என்று சரியாக உச்சரிக்குமாறு சினிமாக்காரர்களை கேட்டுக் கொள்கிறோம்.

ஜக்குபாய் விவகாரத்தைத் தொடர்ந்து நடந்த கண்டனக்கூட்டத்தில் ‘நம்ம ஆளுங்கதான் இதை செய்யுறாங்க. அவங்களை கண்டுபிடிக்கணும்!' என்று ரஜினி கூறியதற்கு, பெருத்த கண்டனங்கள் சினிமாத் துறையில் எழுந்திருப்பதாக தெரிகிறது. யாராவது, எப்போதாவது தப்பித்தவறி உண்மையை பேசிவிட்டால் இதுபோல கண்டனங்கள் எழுவது சகஜம்தான். சொன்னது ரஜினி என்பதால் வெளிப்படையாக யாரும் சண்டை போடாமல், உள்ளுக்குள் நொணநொணவென்று முணுமுணுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

விக்ரம் படம் வெளியானதுமே, அப்படத்தின் திருட்டு வீடியோ கேசட் வெளிவந்துவிட்டது. அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர் வரை முட்டி மோதி சோர்ந்துவிட்டார் கமல். அதன்பிறகு இந்த திருட்டுச் சமாச்சாரங்கள் எல்லாம் அதிசமீபத்திய தொழில்நுட்பங்களாக இருக்கிறது. நல்லதோ, கெட்டதோ என்ன செய்தாலும் இதைத் தவிர்க்க முடியாது. இதையும் தாண்டி எப்படி நாம் முன்னேறுவது என்பதைதான் சிந்திக்க வேண்டும் என்று இருபது வருடங்களாக கரடியாக கத்திக் கொண்டிருக்கிறார். யாராவது கேட்டால்தானே?

ஜக்குபாய் படத்தின் பிரிண்ட் இணையத்தில் வந்தபோதே பார்த்தேன். FX COPY என்ற வாட்டர் மார்க்கோடு இருந்தது. பின்னணி இசை சேர்க்கப் படுவதற்கு முன்பாக போஸ்ட்-புரொடக்‌ஷன் நிலையில் யாரோ ஆட்டையை போட்டிருக்கிறார்கள். நிச்சயமாக இப்படத்தின் தயாரிப்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் ஒருவரின் வேலையாக தான் இது இருக்க முடியும். ரஜினி இதைத்தான் கோடிட்டுக் காட்டியிருக்கிறார்.

அதுமட்டுமல்லாமல், ரஜினியின் லேட்டஸ்ட் படம் ஒன்று ஊத்திக் கொண்டது அல்லவா? அப்படத்தின் திருட்டு டி.வி.டியும் ரிலீஸ் ஆன நாளிலேயே பல நகரங்களில் தாராளமாக கிடைத்தது. வெளியூர் தியேட்டர்களுக்கு பயணமான பிரிண்ட் ஒன்றினை, நடுவழியில் ஆட்டையை போட்டு அடித்திருக்கிறார்கள். இது ரஜினிக்கும் தெரியும் என்பதால்தான் ‘முதலில் நம்ம ஆளுங்கள பிடிங்க' என்று சொல்லியிருக்கிறார்.

திருட்டு டி.வி.டி. தொழிலில் ஈடுபட்டிருக்கும் ஒரு பாண்டிச்சேரி புள்ளி, ஜக்குபாய் விவகாரம் தொடர்பாக தற்கொலை செய்துகொண்டதாக ஒரு வார இதழில் வாசித்தேன். தயாரிப்பு நிலையிலேயே இதை கிள்ளி எறிய முயற்சிக்காமல், பதினைந்துக்கும் இருபதுக்கும் விற்றுக் கொண்டிருக்கும் ஏழை வியாபாரிகளின் மென்னியை பிடிப்பது எந்தவகையில் சரியான செயல் என்று தெரியவில்லை. திருட்டு டி.வி.டி.க்கு எதிராக பஞ்ச் வசனங்களை தங்கள் படங்களில் வைக்கும் இயக்குனர்களும், காமெடி காட்சிகளிலும் திருட்டு டி.வி.டி.க்கு எதிராக மெசேஜ் சொல்ல நினைக்கும் நடிகர்களும் முதலில் தங்கள் துறையில் இருக்கும் கருப்பு ஆடுகள் யாரென கண்டறிய வேண்டிய நிலையில் இருக்கிறார்கள்.

* - * - * - * - *

தமிழ்நாட்டின் இப்போதைய சூப்பர் டூப்பர் ஹிட் திருட்டு டி.வி.டி. எது தெரியுமா? வேட்டைக்காரன் என்று நினைத்தால் நீங்க ரொம்ப நல்லவ்வ்வர்ர்ரூ.

‘தேவநாதன் ஹிட்ஸ்' என்ற பெயரில் இருபத்தைந்து ரூபாய்க்கு பஜார்களில் கூவி கூவி விற்கப்படும் டி.வி.டி. தான், இந்திய திருட்டு டி.வி.டி. வரலாற்றிலேயே அதிக வசூலைக் குவித்து சாதனை புரிந்து கொண்டிருக்கிறது. வேட்டைக்காரன் டி.வி.டி. விற்பவர்களை மடக்கிப் பிடிக்கும் போலிஸ்காரர்களின் கண்களில் மட்டும் இந்த டி.வி.டி. இன்னமும் மாட்டவில்லை என்பதில் எனக்கு எந்தவித ஆச்சரியமுமில்லை. ஏனெனில் நம் போலிஸார் ஸ்காட்லாந்துயார்டுக்கு திறமை அடிப்படையில் சவால் விடுபவர்கள்.

இந்த டி.வி.டி. சந்தைக்கு வந்த வரலாறு உங்களில் பலருக்கும் ஏற்கனவே தெரிந்திருக்கலாம். கோயில் கருவறை உள்ளிட்ட பல இடங்களில் பக்தைகளுக்கு குருக்கள் ஆசிகள் வழங்கிய காட்சிகளை, அவரே அவரது செல்போனில் (நல்ல ஆங்கிளில்) படமாக்கியிருக்கிறார். ஒருமுறை செல்போன் ஏதோ மக்கர் செய்ய, அருகிலிருக்கும் சர்வீஸிங் சென்டர் எதிலோ பழுது பார்க்கத் தந்திருக்கிறார். பழுது பார்த்த மெக்கானிக், போனில் பதிவாகியிருந்த ‘சரக்குகளை' மொத்தமாக உருவி கைமாவாக்கியிருக்கிறார்.

யாரோ ஒரு திருட்டு டி.வி.டி. மொத்த வியாபாரிக்கு கொழுத்த விலைக்கு சரக்கு கைமாற்றப்பட்டு, அவர் மூலமாக சந்தைக்கு வந்தது. சந்தையில் வாங்கிய பக்தர் ஒருவர், கோயில் கருவறையிலேயே கும்மாங்குத்தா என்று பதறிப்போனார். வார இதழ் ஒன்றுக்கு அந்த டி.வி.டி.யின் காப்பியை அனுப்பிவைக்க, அதன்பிறகே எல்லாம் வெட்டவெளிச்சம் ஆனது என்பது வரலாறு.

சமீபத்தில் தோழர் ஒருவர் தீவிரக் கலையார்வம் காரணமாக இந்த டி.வி.டி.யை பர்மா பஜார் பகுதியில் வாங்கியிருக்கிறார். வீட்டில் அனைவரும் தூங்கியப் பிறகு அதிகாலை ஒரு மணிக்கு பூனைநடை போட்டு எழுந்து, டி.வி.யை ம்யூட் செய்துவிட்டு போட்டுப் பார்த்திருக்கிறார். துரதிருஷ்டவசமாக அது தேவநாதன் ஹிட்ஸ் ஆக இல்லாமல், பக்திப்பட பாடல்களின் எம்.பி.3 வகை டி.வி.டி.யாக இருந்திருக்கிறது. சவுண்டு வைத்துப் பார்த்ததில் ‘பெங்களூர் ரமணியம்மாள் ஹிட்ஸாம்!'. பெருத்த சோகம் அடைந்த அவர் அன்றிரவு, குன்றத்திலே குமரனோடு கொண்டாட்டமாக இருந்திருக்கிறார்.

மறுநாள் டி.வி.டி. விற்ற கடைக்குப் போய் புகார் செய்திருக்கிறார். கடைபையனோ ரொம்ப சாதாரணமாக சொல்லியிருக்கிறான். “சார் வேற ஒரு கஸ்டமருக்கு எடுத்துட்டு வந்த டி.வி.டி. சார் அது. மாத்தி கொடுத்துட்டேன் போலிருக்கு”. நண்பருக்கு சரியான டி.வி.டி. கிடைத்துவிட்டது. ஒருவாரமாக தேவநாதன் புகழை காண்பவர்களிடமெல்லாம் பாடிக் கொண்டிருக்கிறார். தேவநாதனின் காலைத் தொட்டு கும்பிட வேண்டும் என்பது இப்போது அவருடைய ஆசை.

அவர் காலையாவது அல்லது வேறு எதையாவது தொட்டு கும்பிட்டுக் கொள்வதில் நமக்கு பிரச்சினை எதுவுமில்லை. என்னுடைய கவலையெல்லாம் பெங்களூர் ரமணியம்மாள் ஹிட்ஸுக்கு பதிலாக தேவநாதன் ஹிட்ஸை தவறுதலாக எடுத்துச் சென்ற ஆன்மீக அன்பரைப் பற்றிதான். ஒன்று, அந்த கலைப்படைப்பை அவர் தெரியாத்தனமாக பக்தி பாடல் என்று நினைத்து குடும்பத்தினர் மத்தியில் போட்டுப் பார்த்து அவமானப்பட்டிருக்கலாம். அல்லது தேவநாதனால் ஈர்க்கப்பட்டு, இரண்டாம் தேவநாதனாக மாற முயற்சித்துக் கொண்டிருக்கலாம்.

26 கருத்துகள்:

  1. அயன் திரைபடத்தில் இது போன்ற காட்சி அமைப்பு இருக்கும்

    திரை துறையில் தான் இது கவனிக்கபட வேண்டும்

    பதிலளிநீக்கு
  2. திருட்டு டிவிடி பற்றி கவலைப்படும் திரைப்படத் துறையைச் சார்ந்தவர்களுக்கு இது வெறும் தொழில் ரீதியான கவலையாக மட்டும் இருக்கும் வரையில் இது பிரச்னைதான். அவர்களுக்கு இது கொள்கை ரீதியான அக்கறை இல்லை. இப்படிப் பேசுபவர்கள் எல்லோரும் வெளிநாட்டுப் படங்களை எப்படிப் பார்க்கிறார்கள்? original dvd வாங்கியா?

    ரஜினி ஜக்குபாய் பற்றிப் பேசுகையில் ஒரு வெளிநாட்டுப் படத்தைப் பார்த்ததாகச் சொன்னார், எப்படிப் பார்த்தார்? திருட்டு டிவிடி தானே?

    ஒட்டு மொத்தமாக திருட்டு டிவிடியை ஒழித்தால் நம்மூரில் original dvd மட்டுமில்லை, original கதையோடு படங்களும் வரலாம் :-)

    பதிலளிநீக்கு
  3. ரொம்ப நாள் கழிச்சு புல் பார்ம்ல அடிச்சு ஆடிற்க்கேள்...பேஷ் பேஷ் போங்கோ..அதென்ன வோய் புதிய தலைமுறைக்குன்னு ஒரு ரைட்டிங் ஸ்டைல் , பதிவுக்குன்னு ஒரு கும்மாங்குத்து ஸ்டைல், புஸ்தகதுக்குனு ஒரு ஸ்டைல் வெச்சுர்கேள்? பதிவு ஸ்டைல் தான் ரியல் லக்கி ஸ்டைல்..மை பேவரைட்.

    பதிலளிநீக்கு
  4. பெயரில்லா12:47 PM, ஜனவரி 21, 2010

    இந்த கில்மா படம் நெட்டுல கிடைக்குதாண்ணே.

    பதிலளிநீக்கு
  5. அனானி!

    கில்மா என்ற நவீனச் சொல்லுக்கு எனக்கு அர்த்தம் புரியாததால் உங்கள் கேள்விக்கு விடையளிக்க இயலவில்லை :-(

    ஒன்று மட்டும் சொல்லிக் கொள்கிறேன். முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்.

    பதிலளிநீக்கு
  6. //ஒன்று மட்டும் சொல்லிக் கொள்கிறேன். முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்//

    ஆச்சரியம் பாருங்களேன். இது அந்த தேவநாதனில் தொடங்கி, (கடந்தகாலம்)உங்களுக்கு(நிகழ்காலம்) அப்புறம் அனானிக்கு(எதிர்காலம்) பொருந்துது..

    நானும் இன்னைல இருந்து முயற்சி செய்யப் போறேன் :))

    பதிலளிநீக்கு
  7. கார்க்கி!

    நோ டபுள் மீனிங் ப்ளீஸ்! :-)

    நீங்கள் முயற்சித்தால் (ஒரு போன்காலிலேயே) உங்கள் வீட்டுக்கே எதையும் 'பார்சல்' அனுப்பி உதவும் நண்பர்களை நீங்கள் பெற்றிருக்கிறீர்கள் என்பதை மட்டும் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்!

    பதிலளிநீக்கு
  8. DEAR LUCKYKRISHNA.. NAANUM UNGA FRIENDUDHAAN. YENAKU KOODA ORU PARCEL COURIER PANNIDUNGHO...........

    பதிலளிநீக்கு
  9. "சந்தையில் வாங்கிய பக்தர் ஒருவர்"
    "குன்றத்திலே குமரனோடு கொண்டாட்டமாக இருந்திருக்கிறார்."

    விழுந்து விழுந்து சிரித்தேன். நல்லா இருந்தது.

    பதிலளிநீக்கு
  10. ஸினிமாத்துறையில் இருக்கும் கருப்பு ஆடுகளைக்களைவதே, திருட்டு திரைவட்டுகள் (disc) ஒழிப்புக்கு முதற்கட்ட தீர்வைத்தரும். இவ்விஷயத்தில், சில்லறை வியாபாரிகளும் மக்களும், கிடைக்கும் வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்பவர்கள் மட்டுமே!

    பிற மொழி-நாட்டு படங்களைத்தழுவி அல்லது திருடி எடுக்கப்படும் திரைப்படங்கள், திருட்டு சந்தைக்கு வருவதில் வருத்தப்பட எதுவும் இல்லை!

    பதிலளிநீக்கு
  11. Good Style of writing...
    Congrats..

    அவரது செல்போனில் (நல்ல ஆங்கிளில்) ??!!!

    பதிலளிநீக்கு
  12. டபு மீனிங்கா?

    அட தேவநாதா..

    நான் சொன்னது முயற்சி செஞ்சு அவர்ய்க்கு தேவையானதா அவர் அடைஞ்சாரு. உங்க பயணத்துல(எழுத்துல) நீங்க ஜெயிச்சிட்டு இருக்கிங்க.அனானியும் ஜெயிக்கட்டும்ன்னு சொன்னேன்..

    ஏன் பாஸ்? :))

    அப்புறம் அந்த பார்சல் என்ன விஷயம்னு ஃபோன்ல கேட்டுக்கிறேன்

    பதிலளிநீக்கு
  13. ரைட்டு. எனக்கு ஒரு டவுட்டு.

    சக்கைப் போடு போடுவதாக நீங்க சொல்லும் இந்த டி.வி.டி.யின் சேல்சில் 'தேவநாதன்' அவர்களுக்கு கமிஷன் உண்டா?? நாயகன்.. இயக்குனர்.. கேமிரா ஓனர்.. என பல முகங்கள் அவருக்கு இப்படம் சம்பந்தமாக உண்டே அவர் வில்லனாக சித்தரிக்கப்பட்டாலும் ;) !!

    பதிலளிநீக்கு
  14. திருட்டு விசிடி, மன்னிக்கவும் திருட்டு டிவிடி பற்றிய மற்றொரு சூடான பதிவு தோழர் மதிமாறன் தளத்தில் இருந்து,
    http://mathimaran.wordpress.com/2010/01/19/artical-272/

    பதிலளிநீக்கு
  15. //அவர் காலையாவது அல்லது வேறு எதையாவது தொட்டு கும்பிட்டுக் கொள்வதில் நமக்கு பிரச்சினை எதுவுமில்லை. என்னுடைய கவலையெல்லாம் பெங்களூர் ரமணியம்மாள் ஹிட்ஸுக்கு பதிலாக தேவநாதன் ஹிட்ஸை தவறுதலாக எடுத்துச் சென்ற ஆன்மீக அன்பரைப் பற்றிதான்.//

    லக்கி டச்!!!!

    யுவா,

    உம்ம லொல்லுக்கு ஒரு அளவே இல்லாம போயிடுச்சு.

    பதிலளிநீக்கு
  16. விஜய் தொலைக்காட்சியிலேயே குற்றம் பகுதியில் இதை ஒரு சிறு தொழில் போலத்தானே காட்டினார்கள்.... அவர்கள் யார்? யார்? என்றும் படம் போட்டே காட்டினார்கள்? அப்புறம் என்ன? இந்த தொழில் செய்பவர் எல்லாம் கார், பங்களா என்று வசதியுடன்தான் இருக்கின்றனர்? (பிளாட்பாரக்கடைக்காரர் தவிற) யாரும் இந்த தொழில் செய்வதை பற்றி அலட்டிக்கொள்வதில்லை... வேலைகிடைக்காதவர்களுக்கு இதுதான் சிறந்த தொழில்....உபயம் விஜய் டிவி...சும்மா கணக்கிற்கு இரண்டு ரெய்டு...அவர்கள் நிறுத்தினாலும் மக்கள், (போலி...ஸ்) விடுவதாயில்லை...25 லிருந்து 40 ரூபாய் மொத்த குடும்பமும் பார்த்து விடலாம்... உங்களை யார் கோடி கோடியாக பணம் (நடிகர்களுக்கு கோடியை (கொடுத்து)) போட்டு படம் எடுக்க சொன்னது... டிவிடி ரேட்டுக்கு ஏத்த மாதிரி படம் எடுத்தால் போதாதா?..... கோடியை போட்டு படம் எடுத்தாலும்...எங்க தெருக்கோடில இதுக்கு விலை 40 ரூபாதான்... அதான் நம்மாள முடியும்....இதுதான் ஜனங்க பல்ஸ்...

    பதிலளிநீக்கு
  17. ரசினியின் கருத்து சரியே

    வேரை அழிக்காமல் இலையை கிள்ளி பயன் இல்லை

    பதிலளிநீக்கு
  18. நல்லா வெளிப்படையா எழுதுறிங்க...
    சொல்ல வர்ற விஷயத்தை அருமையா தெளிவா சொல்றீங்க....! பாராட்டுகள் நம்ம பக்கமும் கொஞ்சம் வாங்க உங்களுக்கு, எனக்கு பிடித்த புத்தகம் அறிமுகப்படுத்தப் போகிறேன். கண்டிப்பாக வாங்க...!
    http://dpraveen03.blogspot.com/

    பதிலளிநீக்கு
  19. பெயரில்லா11:09 PM, ஜனவரி 21, 2010

    அது சரி உங்க வலைதளத்தின் எண்ணிக்கை கூடியாச்சா? இனி வயாகரா தொந்தரவு உங்க அருகிலுள்ள ஸ்பாம் ஸ்டோர்களில் கிடைக்கும்.

    பதிலளிநீக்கு
  20. //சொன்னது ரஜினி என்பதால் வெளிப்படையாக யாரும் சண்டை போடாமல், உள்ளுக்குள் நொணநொணவென்று முணுமுணுத்துக் கொண்டிருக்கிறார்கள்.//


    பல நேரங்களில் அப்படித்தான்..,

    பதிலளிநீக்கு
  21. "யுவகிருஷ்ணா
    கார்க்கி!
    நீங்கள் முயற்சித்தால் (ஒரு போன்காலிலேயே) உங்கள் வீட்டுக்கே எதையும் 'பார்சல்' அனுப்பி உதவும் நண்பர்களை நீங்கள் பெற்றிருக்கிறீர்கள் என்பதை மட்டும் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்!"

    அப்படின்னா எனக்கும் .....கொஞ்சம் ... ஹி ஹி ஹி ஹி

    பதிலளிநீக்கு
  22. இன்னும் எத்தனை முறை சிரித்துக்கொண்டுருக்கப் போகிறேனோ தெரியவில்லை. சாலையில் செல்லும் போது ஆண்டவா சிரிக்காமல் இருக்க வேண்டும்.

    பின்னி பெடல் மட்டுமல்ல பின்னூட்டத்தில் மர்கார்டு வீல் எல்லாம் எடுத்துட்டிங்க.

    பதிலளிநீக்கு
  23. பெயரில்லா1:36 AM, ஜனவரி 23, 2010

    he is back.... this is real luckylook

    பதிலளிநீக்கு
  24. என்னமோ பண்ணுங்கப்பா....

    ஆனா தேவ நாதாரி படம் பாத்தா, தயவு செய்து ராயல்டிய அவருக்கே அனுப்பிவெச்சுருங்கா.
    பாவம்.. இந்த டெக்னாலஷி காலத்திலும் , இயற்க்கை வெளிச்சத்திலே படம்
    புடிக்க எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பார்?..

    பதிலளிநீக்கு
  25. //அவர் காலையாவது அல்லது வேறு எதையாவது தொட்டு கும்பிட்டுக் கொள்வதில் நமக்கு பிரச்சினை எதுவுமில்லை.

    நீங்க சொல்ல வர்றது என்னனு எனக்கு புரிஞ்சு போச்சு.. :)

    பதிலளிநீக்கு