24 பிப்ரவரி, 2010

மை நேம் ஈஸ் கான்!


சரியாக எத்தனை ஆண்டுகளுக்கு முன்பாக என்பது நினைவில்லை. 1999 உலகக்கோப்பை போட்டியாக இருக்கலாம். இந்தியா-பாகிஸ்தான் ஆடும் கிரிக்கெட் போட்டி நடந்து கொண்டிருந்தது. வெற்றி நிலை மாறிக்கொண்டே இருந்தது. அண்ணாசாலை விஜிபி ஷோரூமுக்கு முன்பாக சாலையில் நின்று பார்த்துக் கொண்டிருந்தேன். இந்தியா தோற்பது போன்ற ஒரு சூழல்.

நடுத்தர வயதுடைய ஒருவர் வெறுப்பாக சொன்னார். “துலுக்கப் பசங்கள்லாம் கொண்டாடுவானுங்க! பாகிஸ்தான் ஜெயிக்கப் போவுது!!” இத்தனைக்கும் அப்போது இந்திய அணிக்கு தலைமை தாங்கிக் கொண்டிருந்தவர் முகம்மது அசாருதீன்.

இறுதியில் வென்றது இந்தியா. சாலை என்று பாராமலும் ‘ஹூர்ரே’ என்று குரலெழுப்பி, ஹைவோல்டேஜ் மகிழ்ச்சியோடு துள்ளிக் குதித்தவர் கமெண்டு அடித்த நடுத்தர வயதுக்காரர் அல்ல. அவருக்கு அருகில் இருந்த இளைஞர். தலையில் வெள்ளைத் தொப்பி. திருவல்லிக்கேணிகாரராக இருக்கலாம்.

நியாயமான காரணங்கள் ஏதுமின்றி, வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் இஸ்லாமியரை இழிவுபடுத்தும் தேசமாக இந்தியா இருக்கிறது. ‘பாகிஸ்தான் ஜெயிக்க வேண்டும்’ என்று சொல்லக்கூடிய ஒரு இஸ்லாமியரை கூட இதுவரை நான் சந்தித்ததேயில்லை. ஒரு இஸ்லாமியனாக பிறந்திருக்கக் கூடாதா? என்று நான் ஏங்கியிருக்கக்கூடிய சந்தர்ப்பங்கள்தான் அனேகம்.

* - * - * - * - * - *

ஷாருக்கின் ‘மை நேம் ஈஸ் கான்’ ஏற்படுத்தியிருக்கும் தாக்கத்தின் ஒரு சதவிகிதத்தை கூட என்னால் வார்த்தைகளில் வெளிப்படுத்த முடியுமா என்று தெரியவில்லை. ஒரு இஸ்லாமியராகவே மனதளவில் வாழும் சாரு போன்றவர்களின் விமர்சனம் சரியான வெளிப்பாடாக அமையும் என்று நம்புகிறேன். அடையாளம் தொடர்பான அரசியலை மிக நுட்பமாக பேசும் படம் இது. உணர்வுகளை அலைக்கழிக்கும் இதுபோன்ற திரைப்படங்கள் வெளியாவது அரிதிலும் அரிதாக நடக்கும் அபூர்வம்.

ஏதோ வாயில் நுழையாத பெயருடைய நோய் கொண்ட ரிஸ்வான்கான் சூழ்நிலை காரணமாக அமெரிக்கா செல்கிறான். மூளை தொடர்பான நோய் அது. புரிந்துகொள்வதிலும், பேச்சிலும், நடத்தையிலும் மற்றவர்களிடமிருந்து சற்றே வேறுபட்டவன் ரிஸ்வான். ஆயினும் அவனுக்கு வேறு சில விஷயங்களில் அதீதமான மாற்று ஆற்றல் உண்டு.

அமெரிக்காவில் இளம் விதவையான மந்திராவை சந்திக்கிறான். இயல்பாக மலரும் காதல் திருமணத்தில் முடிகிறது. மந்திராவுக்கு ஏற்கனவே ஒரு மகன் உண்டு. 2001 செப்.11 சம்பவத்துக்கு பிறகு இஸ்லாமியர் மீதான அமெரிக்கர்களின் விரோத மனோபாவம் நீறுபூத்த நெருப்பாய் மாறி, வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் வன்முறையில் முடிகிறது. ஒரு இஸ்லாமியன் தனக்கு திடீர் தகப்பன் ஆனதாலேயே மந்திராவின் மகன் ஒரு வன்முறையில் உயிரிழக்கிறான்.

‘கான் என்ற உனது பெயர்தான் என் மகனை கொன்றது!’ என்று மந்திரா கோபத்தில் குற்றம் சாட்டுகிறாள். “உனக்கு தைரியம் இருந்தால் அமெரிக்க அதிபரை சந்தித்து ‘என் பெயர் கான். நான் தீவிரவாதி இல்லை’ என்று சொல்!” என்று கத்துகிறாள். கோபத்தில் விளைந்த இந்த அர்த்தமற்ற வார்த்தைகளை கான் சீரியஸாக எடுத்துக் கொள்கிறான். அமெரிக்க அதிபரை சந்திக்க தன் பயணத்தை தொடர்கிறான். இதையடுத்து அடுத்தடுத்து நடக்கும் சம்பவங்கள், கான் அமெரிக்க அதிபரை சந்திக்க முடிந்ததா? என்பதுதான் கதை.

தான் பிறந்த இனத்துக்கு ஒரு கலைஞனால் செய்யப்படக்கூடிய உச்சபட்ச கைமாறினை ஷாருக்கான் செய்து தந்திருக்கிறார். அமெரிக்க அரசியல், அதன் குடிமக்கள், வர்க்கம் - இவை தொடர்பான வேறுபாடுகளை நுணுக்கமாக பதிவு செய்கிறார். “அமெரிக்காகாரங்களே இப்படித்தான் எசமான்!” என்று புலம்பாமல், மனிதத்தை மதிக்கும் அமெரிக்கர்களையும் கருப்பின தாய் கதாபாத்திரத்தின் வாயிலாக படம்பிடித்து காட்டுகிறார்.

‘அன்பே சிவம்’ படத்தில் கமல்ஹாசனின் நடிப்பைக் கண்டு சிலாகித்தபோது, இனிமேல் இப்படி நடிக்க ஒருவன் பிறந்துதான் வரவேண்டும் என்று நினைத்தேன். ஷாருக்கான் எப்போதோ பிறந்துவிட்டார். ஒரு காட்சியிலாவது கதாபாத்திரத்தின் தன்மையிலிருந்து விலகி ஷாருக்கின் ஹீரோயிஸம் எங்காவது வெளிப்படுமா என்று பார்த்தோமானால் ஏமாற்றம்தான் மிஞ்சுகிறது. அடுத்த ஆண்டு ஷாருக் வீட்டின் கதவுகளை வரிசையில் நின்று விருதுகள் தட்டும்.

ஒரு சினிமாவுக்கு தொழில்நுட்பக் கலைஞர்களின் பங்களிப்பு என்னவென்று படம் வரைந்து பாகம் குறித்து காட்டுகிறது ’மை நேம் ஈஸ் கான்’. குறிப்பாக கஜோலுக்கான ஒப்பனை, உடையலங்காரம் வழியே கதையின் வலிமை வெகுவாக கூட்டப்படுவது அபாரம். ரவி கே.சந்திரனின் ஒளிப்பதிவு, ஷங்கர் என்லாயின் இசை என்றெல்லாம் தனித்தனியாக குறிப்பிட இயலாதவாறு, ஒட்டுமொத்தமாக ஒரு அதிசயத்தை சாதித்துக் காட்டியிருக்கின்றனர் இந்த படக்குழுவினர்.

ஒவ்வொரு அமெரிக்கனும் கட்டாயம் பார்க்கவேண்டிய படம் இது.

அப்போது இந்தியர்களுக்கு?

கமல்ஹாசன் விரைவில் ‘மை நேம் ஈஸ் தெனாலி’ என்றொரு படம் எடுப்பார். 1991, மே 21-க்குப் பிறகு, சென்னையில் வசிக்கும் ஒரு ஈழத்தமிழன் சோனியா காந்தியை சந்தித்து, “நான் தெனாலி, நான் விடுதலைப்புலி அல்ல” என்று சொல்லுவது கதையாக இருக்கும். இந்தியத் தணிக்கைக்குழு அனுமதித்தால் இப்படத்தை இந்தியர்களுக்கு போட்டுக் காட்டலாம்.

72 கருத்துகள்:

  1. நல்ல படத்தை பற்றிய நல்ல பதிவு..

    பதிலளிநீக்கு
  2. பொதுவானவன்2:41 PM, பிப்ரவரி 24, 2010

    நீங்கள் பார்க்காமல் இருந்திருக்கலாம். எனது நண்பன் கிரசண்ட் பொறியியல் கல்லூரியில் படித்தபோது சொன்னது நினைவிருக்கிறது. இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் மேட்ச்களின் போது அங்கே படிக்கும் சிலர் பாகிஸ்தானுக்கு ஆதரவாக கரகோஷம் எழுப்பும் தன்மை உண்டாம்.

    அது ஏன்?
    இப்போதுகூட இங்குள்ள ஈழத்தமிழர்கள் பலர் இந்தியா-இலங்கை கிரிக்கெட் போட்டிகளின் போது இலங்கைக்கு ஆதரவாக கரகோஷம் எழுப்புகிறார்கள்! இதுக்கு என்ன சொல்வது?

    பதிலளிநீக்கு
  3. வழக்கமான லக்கி பன்ச்சுடன் வழக்கத்திற்கு மாறான திரைப்பட பதிவு...

    பதிலளிநீக்கு
  4. //கமல்ஹாசன் விரைவில் ‘மை நேம் ஈஸ் தெனாலி’ //

    senchaalum seivaan ya anthaalu.
    avaraea SONIA GANDHI vesham poaduveanu adam pudipaaru. sir Manmohan Singh...an Patil...ellaa veshamum avarea poatu Manmohan Singh oru dance program vaikiraarunu kadhaila oru paatu veara paaduveanu adam pudipaaru. aiyoa aiyoa....

    பதிலளிநீக்கு
  5. Incredible...What a flow of writing!Man,You really rock.
    Keep up the flow!

    பதிலளிநீக்கு
  6. //இப்போதுகூட இங்குள்ள ஈழத்தமிழர்கள் பலர் இந்தியா-இலங்கை கிரிக்கெட் போட்டிகளின் போது இலங்கைக்கு ஆதரவாக கரகோஷம் எழுப்புகிறார்கள்! இதுக்கு என்ன சொல்வது?//

    அதான் நீங்களே தெளிவாச் சொல்லி இருக்கீங்களே.. ஈழத்தமிழர்கள்ன்னு. அதுமாதிரி சத்தம் போட்டது ஒரு வேளை பாகிஸ்தானிய தமிழர்களா இருக்கலாம்ன்னு நெனைக்கறேன்.

    பதிலளிநீக்கு
  7. இந்தியத் தணிக்கைக்குழு அனுமதித்தால் இப்படத்தை இந்தியர்களுக்கு போட்டுக் காட்டலாம்.


    இன்றைய நிலையை அழகாக சொன்னீர்கள்

    பதிலளிநீக்கு
  8. கடைசி பத்தி இன்னும் கொஞ்சம் நன்றாக வந்திருக்கவேண்டும் லக்கி.

    பதிலளிநீக்கு
  9. "பொதுவானவன் said...
    நீங்கள் பார்க்காமல் இருந்திருக்கலாம். எனது நண்பன் கிரசண்ட் பொறியியல் கல்லூரியில் படித்தபோது சொன்னது நினைவிருக்கிறது. இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் மேட்ச்களின் போது அங்கே படிக்கும் சிலர் பாகிஸ்தானுக்கு ஆதரவாக கரகோஷம் எழுப்பும் தன்மை உண்டாம்."




    நிஜம் தான் பாஸ் ....

    பதிலளிநீக்கு
  10. நான் படித்த UNIVERSITY களில் எல்லாம் இனம் மற்றும் மத வேறுபாட்டை நிறையவே உணர்ந்து இருக்கிறேன் ....

    என்னை பொறுத்த வரைக்கும் வீடுகளில் தான் மதம் அதிக அளவில் போதிக்க படுகிறது

    பதிலளிநீக்கு
  11. நல்ல விமர்சனம்! நன்றி! பெங்களூர் சிவாஜி நகர் ஏரியாவில் இந்தியா-பாகிஸ்தான் போட்டி நடக்கும்போது சில வீடுகளில் பாகிஸ்தான் கொடி பறப்பதைப் பார்த்திருக்கிறேன். இலங்கை தமிழர்கள் தமிழ் பேசினாலும் பலர் பல தலைமுறைக்கு முன்னே அங்கு சென்றவர்கள். பிறந்து வளர்ந்த, தன் சொந்த நாட்டை ஆதரிப்பது தவறாக தெரியவில்லை.

    பதிலளிநீக்கு
  12. அருமையான எருமை அவர்களே!

    சில வருடங்களுக்கு முன்பாக இதுபோலதான் ஏ.ஆர்.ரஹ்மான் வீட்டில் பாகிஸ்தான் கொடி பறப்பதாக ஒரு பிரபலமான புலன்விசாரணை இதழ் எழுதி பிரச்சினை பெரியதானது.

    கடைசியில் பார்த்தால் இஸ்லாமியர் உலகெங்கும் பயன்படுத்தும் வழக்கமான பச்சைக்கொடிதான் அது.

    நம் ஆட்களுக்கு பகலிலேயே பசுமாட்டை தெரியாது. இரவில் மட்டும் எருமைமாட்டை கூர்மையாக பார்த்துவிடுவார்களோ?

    பதிலளிநீக்கு
  13. எந்த ஒரு நடிகனையும் ஒப்பிடாதீர்கள் மற்ற நடிகனுடன். நீங்கள்தான் யுவ கிருஷ்ணா உங்களால் ஒன்று முடியும் என்றால் உங்களுக்கு பிறகு பிறந்த வேறொருவானால் நீங்கள் செய்யும் அதே செயலை வேறு விதமாக அதைவிட நன்றாகவே செய்ய முடியும். ஆனால் முன்பு செய்தவரைப் போலவே செய்வதென்பது முடியாத ஒன்றல்ல நிகழாத ஒன்று. நான் சே.ராஜப்ரியன் கொஞ்சம் தமிழ பேசவும் எழுதவும் தெரியும். என்னைவிட நன்றாக புலமையுடன் தமிழை எழுதவும் பேசவும் தெரிந்தவர்கள் நிறைய புலவர்கள் இருக்கின்றார்கள் அல்லாகிருஷ்ணா.

    பதிலளிநீக்கு
  14. இராஜப்ரியன்!

    நீங்கள் பேசுவது தத்துவமென்று தெரிகிறது. ஆனால் புரியவில்லை.

    பதிலளிநீக்கு
  15. நல்ல பதிவு.. சிலர் பதிவிட தவிர்ந்த விடயமும் கூட..

    பதிலளிநீக்கு
  16. அப்போ,முன்பு(பல நாட்களுக்கு முன்பு) என் நண்பன் பேசிய தத்துவங்களை ஏன் வெளியிடாமால் மறைத்துவிட்டீர்கள். உங்களிடம் பிறர் பேசினாலே அது தத்துதுவமாக மாறிவிடுமோ? நான் தத்துவம் பேசும் அளவிற்கு இன்னும் வளரவில்லை, வளரவும் முடியாது. நீங்களே தத்துவ ஞானியாக இருங்கள்.

    பதிலளிநீக்கு
  17. உங்களுக்கு தமிழ் தெரியுமென்றால், நிச்சயம் நான் பேசியது புரிந்திருக்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
  18. //சென்னையில் வசிக்கும் ஒரு ஈழத்தமிழன் சோனியா காந்தியை சந்தித்து, “நான் தெனாலி, நான் விடுதலைப்புலி அல்ல” என்று சொல்லுவது கதையாக இருக்கும். இந்தியத் தணிக்கைக்குழு அனுமதித்தால் இப்படத்தை இந்தியர்களுக்கு போட்டுக் காட்டலாம்//

    போட்டு காட்டிட்டா மட்டும் நாங்க சிலிர்த்து எழுந்துடுவோமா... இலங்கையிலிருந்து லைவ் டெலிகாஸ்ட் பாத்தவங்களாச்சே நாங்க..
    அது சரி பிரபுதேவா மேட்டர் என்னாச்சு.. சோறு இறங்கமாட்டேன்துப்பா..

    பதிலளிநீக்கு
  19. யுவா, நல்ல விமர்சனம். ஆனால் கடைசியில் கமலை இழுத்து விட்டீர்களே! தமிழில் நல்ல கலைஞனுக்கு மதிப்பு இருந்திருக்கிறதா என்ன? வியாபார வெற்றியைத் தருபவரைத்தான் உலகம் கொண்டாடும். கமல் அந்த வரிசையைச் சேர்ந்தவர். வயிற்றுப் பிழைப்பைக் கவனிக்க வேண்டுமல்லவா?

    பதிலளிநீக்கு
  20. kamal: my name is tenali.. i'm not a vidudhalaip puli..

    sonia: my name is sonali.. i'm not from italy..

    பதிலளிநீக்கு
  21. //அதான் நீங்களே தெளிவாச் சொல்லி இருக்கீங்களே.. ஈழத்தமிழர்கள்ன்னு. அதுமாதிரி சத்தம் போட்டது ஒரு வேளை பாகிஸ்தானிய தமிழர்களா இருக்கலாம்ன்னு நெனைக்கறேன்.//

    பாகிஸ்தானிய தமிழர்கள் - நல்ல பஞ்ச் சார் - நல்ல வேலை நான் இந்தியன் தமிழன்தான்

    நான் விளையாட்டை விளையாட்டாக தான் பார்பேன். யார் நன்றாக விளையாடினாலும் பிடிக்கும். (இந்தியா ஜெயிக்க வேண்டும் என்று எப்போதும் ஆசை பட்டாலும் ) எந்த அணியில் யார் ன்றாக விளையாடினாலும் ரசிப்பேன் (இந்தியா, australia,west indies, pakistan , இங்கிலாந்து, newzeland ETC).

    நல்ல அற்புதமான விமர்சனம் யுவா @ lucky

    பதிலளிநீக்கு
  22. //மேட்ச்களின் போது அங்கே படிக்கும் சிலர் பாகிஸ்தானுக்கு ஆதரவாக கரகோஷம் எழுப்பும் தன்மை உண்டாம்.
    //

    அன்பர்களே நமக்கெல்லாம் தேச பக்தியை பற்றி பேச என்ன அருகதை இருக்கிறது என்பது புரியவில்லை.

    கிரிக்கெட் போட்டியில் மட்டும் தான் நம்முடைய தேச பக்தி ஒட்டிக்கொண்டிருக்கிறது. ஒரு வேளை பாகிஸ்தான் கிரிக்கெட் விளையாடுவதில்லை என்று அறிவித்தால் நம்முடைய தேச பற்றுக்கு திண்டாட்டம் தான்.

    கோடி கோடியா பணம் சுருட்ட லண்டன் போன நம் சில்பா ஷெட்டிக்கு ஒரு ரியாலிட்டி ஷோவில் நடந்த ஒரு கோமாளி வசனத்துக்கு வரிந்து கட்டிக்கொண்டு புறப்பட்டவர்கள் தானே. (That was then termed as RACISM!!!) ஷில்பா அதன் பிறகு இந்த தேசத்துக்கு ஆட்டிய சாரி ஆற்றிய அருந்தொண்டு தான் என்னே என்னே??. ப

    ணமும் புகழும் அவள் சம்பாதித்துக்கொண்டாள். நாம் ஷில்பா ஷெட்டிக்கு லண்டனில் ஜெட்டி கழண்Tஆல் இங்கே கொதிப்போம்...காரணம் தேச பற்று....மயிரா போச்சுய்யா....

    இங்க நம்ம நாட்டுல மும்பைக்கு பிஹார் காரன் வர கூடாது கர்நாடகாவுக்கு தமிழன் போக கூடாதுன்னு ஆயிரம் பேசுவானுங்க.
    நம்ம நாட்டுல நம்ம ஆளுங்க சிரட்டைல டீ குடிக்க வச்சிட்டு லண்டன்ல ஷில்பாவுக்கு நாடா கட்டி விட போன தேச பக்தி திருநாயகர்களே வாழ்க வழமுடன்.

    பதிலளிநீக்கு
  23. You can not simply blame all indians, first of all to say or conclude anything on this tricky subject, you must live in a non democratic country.
    Its a shame in india a religion is used as vote bank and writers(?) and politicians use it as a weapon....
    Again i am repeating, you can write(including me) whatever you like because you live in INDIA...if not think about it....
    you might delete it, who cares

    பதிலளிநீக்கு
  24. //‘பாகிஸ்தான் ஜெயிக்க வேண்டும்’ என்று சொல்லக்கூடிய ஒரு இஸ்லாமியரை கூட இதுவரை நான் சந்தித்ததேயில்லை// சாரி! நீங்க இன்னும் பலதரப்பட்ட மனிதர்களை சந்திச்சதில்லைன்னு தெரியுது! சுமார் 20 வருடங்களுக்கு முன் சென்னையில் நாங்கள் குடியிருந்தபோது இரண்டு தெரு தள்ளி ஒரு முஸ்லிம் குடும்பம்! இந்தியா பாகிஸ்தான் போட்டியில் பாகிஸ்தான் ஜெயித்தால் பட்டாசு வெடிப்பார்கள்! இந்தியா ஜெயித்தால் “கப் சிப்”! அதற்காக எல்லா முஸ்லிம்களும் அப்படித்தான் என்று சொல்லவில்லை! ஜஸ்ட் ஒரு உதாரணம்!

    பதிலளிநீக்கு
  25. பால்தாக்கரே எதிர்த்த போத அந்தப் படத்தில் நிச்சயம் ஏதோ நல்ல விஷயம் இருக்கிறது என்று நினைத்தேன்.ஒரு இஸ்லாமியனின் பார்வையில் அமெரிக்க வாழ்க்கையை அழகாகப் படம் பிடித்திடித்திருக்கிறார் ஷாருக்..!!

    நல்ல விமர்சனம் யுவா..!! ஆனால் கடைசியில் கமலை நீங்கள் பாராட்டத்தானே செய்தீர்கள்???

    :D :D

    பதிலளிநீக்கு
  26. நியாயமான காரணங்கள் ஏதுமின்றி, வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் இஸ்லாமியரை இழிவுபடுத்தும் தேசமாக இந்தியா இருக்கிறது. ‘பாகிஸ்தான் ஜெயிக்க வேண்டும்’ என்று சொல்லக்கூடிய ஒரு இஸ்லாமியரை கூட இதுவரை நான் சந்தித்ததேயில்லை. ஒரு இஸ்லாமியனாக பிறந்திருக்கக் கூடாதா? என்று நான் ஏங்கியிருக்கக்கூடிய சந்தர்ப்பங்கள்தான் அனேகம்.

    Now also you can convert to Islam and say India should win Freedom is here You can say whatever you want

    பதிலளிநீக்கு
  27. Hi, as you may already noted I am recent here.
    Hope to receive any help from you if I will have some quesitons.
    Thanks in advance and good luck! :)

    பதிலளிநீக்கு
  28. Mr, Yuvakrisna,
    Thank you very much for your courage to write many more things in this article.
    When I was a college student in Loyola college some of my (non- Muslim) friends ask me whether you take vegetarian foods and speak Tamil in your house,thinking we take only non vegetarian food and speak Urudu or Hindi only in our house. We read many books and histories but do not try to know about our neighbour. I am born தமிழன் , and I do not know other language (except English) even in our house we speak only தமிழ்.Our mother tongue is தமிழ்.
    Please include about you
    ஆளப்பிறந்தவன் - ஆத்திரப்பட மாட்டேன்!--பயப்படமாட்டான்

    பதிலளிநீக்கு
  29. Hi

    I have not seen the film. so no comments on it.
    But we cannot ignore Q that raise in our mind ? Why Sharuk is forced to project people belonged to his religion as not terrorists? Why such a situation occured?
    He spent so much money to prove his stand. How much effort he would have put to stop terrorism by islamic terrorists? Atleast a request to them? Atleast a human chain, to say please consider?

    He might have been called by some activists to show secularism. But what he did on his own?

    My neighbours give a roaring response whenever India lose a wicket to Pakistan.

    What is your comment for the whole of Mumbai police giving protection to theatres on the day of release of a film. Can't that film wait for somedays until a compromise is achieved?

    India is losing itself due to its secular approach.

    Because of this comment I am not against any muslim. I just question their approach.

    http://www.virutcham.com

    பதிலளிநீக்கு
  30. //What is your comment for the whole of Mumbai police giving protection to theatres on the day of release of a film. Can't that film wait for somedays until a compromise is achieved?//

    Boss its the duty of INDIAN POLICE FORCE to protect its fellow citizens from vandalism and brutal violence.

    Why should a compromise be achieved. You have a party and you have few goondaas who are ready to stretch their muscles to invoke fear. So you can go ahead and stop anything which you feel against your ideology and then the sufferers has to come beg you and do a compromise with you?

    Boss this is one of the cheapest exhibition of political tantras.

    Its not going to feed any road side beggar or jobless youth.

    First of all we should learn to think beyond cricket when it comes to P A T R I O T I S M.

    பதிலளிநீக்கு
  31. //He spent so much money to prove his stand. How much effort he would have put to stop terrorism by islamic terrorists? Atleast a request to them? Atleast a human chain, to say please consider?
    //

    I will tell you a story. Assume that there is a rape incident in the city. Then there is another rape and so on in one month there were around 100 rape incidents in the city. Then the police analyse and find out all the victims were raped by men who are wearing spectacles. So now the public and the police starts suspecting every man who wears spects. Unfotunately I am wearing spects. So I would spend any amount of money or any amount of effort to convince women and police that "ALL WHO WEAR SPECTS ARE NOT RAPISTS - AND I AM NOT A RAPIST' .

    But imagine me spending lakhs of ruppees to advise all those who are wearing spects not to rape. Though I have a responsibility to do that it comes under my social responsibility which everyone are responsible for. But when I want to protect myself its my personal responsibility. I would say first PERSONAL RESPONSIBILITY and then SOCIAL RESPONSIBILITY.

    Because every PERSON contributes to the SOCIETY.

    And there is also a chance of persons who are not wearing spects come forward wear a spects and commit a rape so that they can escape.

    I have given this as an example. Dont make funny comments about my example but understand the view point.

    So what Sharukh has done is please sir please madam all those who wear spects are not RAPIST. He has made a request.....

    பதிலளிநீக்கு
  32. யோகேஷ்வரன்1:44 PM, பிப்ரவரி 25, 2010

    நல்ல பதிவு லக்கி! வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  33. I am not against Sharukh taking ( I like the Faujy guy) such a movie. After all some hindus (again extending hands for secularism) have taken this with Sharuk.

    No need to spend lakhs of rupees to advise not to do this or do that. Can be done in simple and humble way. He won't do. It will put him in their whishlist. He knows that.

    Giving protection is what Police are supposed to do. Correct. Thats what they are doing. Protecting our politicians, our film heroes, their films(if it had waited, it may not have made the same money it made now)

    Hope you started the cricket matter. So others had to point out that it is not so.

    Hope Sharuk would make another film, how the islamic activities beyond boundaries are affecting the whole of humanity (why muslims alone)

    Hope someone else, a secularist muslim or atleast a Hindu take a film or even few lines about how a hindutva terrorist is getting created?

    It is really paining to see the increasing number of terrorism irrespective of who did it. Gundu vedikkum pothu entha mathamnu partha vedikuthu. ellarum thane savurom.

    etho pannunga. kottunga kottunga.

    http://www.virutcham.com

    பதிலளிநீக்கு
  34. " இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் மேட்ச்களின் போது அங்கே படிக்கும் சிலர் பாகிஸ்தானுக்கு ஆதரவாக கரகோஷம் எழுப்பும் தன்மை உண்டாம். "


    இது பெரும்பான்மையானவரின் வாதமாக இருக்க வாய்ப்பில்லை.
    இந்த வாதங்களை முழுமையாக மறுக்கவும் முடியாது. இதனால் எனக்கும் என் நண்பர்களுக்கும் இடையில் சில சமயங்கள் கருத்து மோதல்கள் ஏற்பட்டதுண்டு. அந்த சமயங்களில் நான் அவர்களிடம் கேட்கும் கேள்வி, " நீ உண்ணும் உணவும், உடுத்தும் உடையும் மற்றும் நீ அனுபவிக்கும் அனைத்தும் இந்த நாடுதான் தந்தது.இதை நீ இல்லை என்று சொன்னால் நீ ஒரு துரோகி என்பேன்." ஆனால் இந்த எண்ணங்கள் பலரது மனதில் இப்பொழுது இல்லை என்பது உண்மை. ஏனென்றால் எண்ணிடம் வாதம் செய்தவர்கள் தங்களுடைய நிலைப்பாட்டினை,எண்ணங்களையும் மாற்றிக்கொண்டதை நான் அறிவேன்.

    என்னுடன் படித்த சக சமுதாய நண்பர்கள் என்னிடம் "நாளைக்கு எங்கடா குண்டு வைக்க போறீங்க" என்று விளையாட்டாக கேட்டுவிட்டு சிர்ப்பார்கள். இந்த மாதிரியான கேலிப்பேச்சுகள் இன்று எல்லாயிடத்திலும் இருக்கின்றது. இதன் வலி அதை அனுபவித்தவர்களுக்குத்தான் தெரியும்.

    அரசியல்வாதிகளிடமும், மதவாதிகளிடமும், மீடியாக்களிடமும் மற்றும் உலகமயமாக்கல் இந்த நான்கிடமும் மாட்டிக்கொண்டு அவர்களுடைய சொந்த நலனுக்காக ஒன்றுமரியாத மக்கள்தான் திட்டமிட்டு ஏமாற்றப்படுகிறார்கள்.

    சமீர் அகமது.

    பதிலளிநீக்கு
  35. ஆரம்பிச்சச்சா? என்னடா கொஞ்ச நாளா எந்த மத துவேஷமும் இல்லாமல் இருந்ததே என்று சந்தோஷப்பட்டேன். நான் இதுவரை இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியின்போது இந்தியா ஆதரவு முஸ்லீமை நான் பார்த்தது இல்லை.
    அது நடக்க ஒருவழி இருக்கு. நீங்க இஸ்லாமை தழுவி முஸ்லிம் ஆக ஆயி இந்தியாவை அதரியுங்களேன்.ஏன்னா உங்ககிட்ட இருந்து அப்பவாவது இந்து மதம் தப்பிக்கட்டும்.Bullshit.

    பதிலளிநீக்கு
  36. Hi

    You say, the film is taken brillaintly. The acting is very good and is neat and does not over show anything. It is technically excellent etc. But please don't justify.

    Why you know?

    For years and years, people are affected by terrorist activities. Even though all are not done by one sect alone, many are done by them. How many times, how many have tried to bring it to project thru films? If any one does, then they have to pay a high price for it even if they take special effort in having balancing scenes.

    When this single man was few times affected by waiting and extra scanning in few airports it has deeply(?) affected him.
    So he and his well wishers have created this historical movie (they know his stardom will bring money to it) about telling the rest of the world, in muslims there are common man also. Pls understand.

    Do you remember, some sikhs because of their dress code were misunderstood and got killed in America during the Sep 11 havoc.

    So, can we get another film by Sikhs, stating we wear this costume and these are the diff between we and them and we are not terrorists?

    Common muslims are affected. Yes. But is common muslims alone are affected? Other lifes are not lifes at all?
    When a whole humanity is affected how good I am if I stand up and shout I am affected, I am affected. Please understand I am not 'he'.

    Please note, when they raise voice, they raise voice only for them. They always try to tell this our beleif and you give it up.

    Everyone keep talking about effect and the return effect. But the cause?
    Hi all (all means all), please raise voice for cause first and then the effect. When raising voice for effect include all human, all living beings.

    valiyum vethanaiyum ellorukkum pothu thane.

    Thanks for understanding
    Virutcham

    பதிலளிநீக்கு
  37. குஜராத்தில் தனது உற்றார் உறவினர்களை இந்துமதவெறியர்களின் நரபலிக்கு பறிகொடுத்துவிட்டு அவர்களை குண்டு வைத்து கொல்லும் வாய்ப்பு கிடைக்காத இளைஞன் ஒருவன் தனது ஆற்றாமையை பாக் கிரிக்கெட் அணியை ஆதரிப்பதன் மூலம் நிறைவேற்றிக் கொள்வதில் தவறேதுமில்லை. இந்த முசுலீம் இளைஞர்களை மனதளவில் அனாதைகளாக்கிய இந்த நாடும் இதன் அமைப்பு முறையும்தான் குற்றவாளிகள்.

    அடுத்து கிரிக்கெட்டை வைத்து தேசபக்தியை அளவிடும் போக்கு கண்டிக்கத்தக்கது. தெண்டுல்கர் தனது ஜட்டியைத் தவிர எல்லா இடங்களையும் பெப்சி கோக்குனு வாடகைக்கு விட்டு சம்பாதிக்கிறார். அவருக்கு தேசபக்தி இருந்தால் உடையில் தேசிய சின்னங்களைப் பொறித்திருக்கலாமே?

    உலக அளவில் முசுலீம் மக்களை பயங்கரவாதிகளாகச் சித்தரிக்கப்படுவதற்கு காரணமான அமெரிக்க அதிபரிடமே ஒரு முசுலீம் தனது நியாத்தை நிலைநாட்டுவது முரண்பாடாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  38. இந்திய பாக்கிஸ்தான் ஆட்டத்தில் பாக்கிஸ்தானை ஆதரித்த முஸ்லீம்களை சொல்லும் தமிழர்களே இங்கிலாந்தில் 50 வருடங்களாக இருந்து கொண்டு இந்தியா இங்கிலாந்து ஆட்டதில் இந்தியாவிற்காக பட்டாசு வெடிப்பவர்களை என்ன சொல்வீர்கள்? அதையும் தொலைக் காட்சியில் கண்டு "ஆஹா..என்ன தேசபற்று" என்று வாழ்த்துவீர்களா இல்லையா?
    முட்டாள்தனம் எங்கும் உண்டு என்பது தெளிவு.
    விளையாட்டில்தான் ஒரு தேசத்தின் பற்றை வெளிபடுத்த வேண்டும் என்பது எத்தனை அவமானம்.

    பதிலளிநீக்கு
  39. //ஆளப்பிறந்தவன் - ஆத்திரப்பட மாட்டேன்//

    i remember one 'Thirukural'

    ''adakkam amararul uykum''

    பதிலளிநீக்கு
  40. Nice review....Like others said, my comment is here. I used to live in Hosur and Bangalore. For every match between India and Pakistan, local govt needed to provide heavy police protection in muslim areas because they support Pak team and celebrate big time if Pak wins. Police protection is to protect properties of hindus and others in that area. Majority people need protection from minority.

    Also, in areas like Karaikkal, Keelakarai in eastern Tamilnadu, local muslims celebrate Aug 14th as their Independence day. Ee;ethamilians are not born here but on policitical asylum. Compare the status of same eeletamilians in Canada, Norway, France and their financial status. their children are citizens of local country. is that how we treat them in India?

    பதிலளிநீக்கு
  41. Nice review lucky. Well said!!! I have encountered lot of incidents where muslims are accused and insulted for no reason. Most of the conversations of Indian gatherings here in US does not end without blaming islam for all the issues in India. In my personal and humble opinion, Americans have lot of religious tolerance than our fellow Indians.

    பதிலளிநீக்கு
  42. அழகாக சொல்லி இருக்கிறீர்கள் கிருஷ்ணா.
    மை நேம் ஈஸ் கான். விமர்சனம் அருமை.

    பதிலளிநீக்கு
  43. // அமெரிக்க அரசியல், அதன் குடிமக்கள், வர்க்கம் - இவை தொடர்பான வேறுபாடுகளை நுணுக்கமாக பதிவு செய்கிறார் //

    How and What the FCUK you know anything about American politics and her people to say such a know-all-ekambaram statement. Reading in Nakkeeran?

    // ஒவ்வொரு அமெரிக்கனும் கட்டாயம் பார்க்கவேண்டிய படம் இது // Holy... ROTFL

    btw // இஸ்லாமியனாக பிறந்திருக்கக் கூடாதா? என்று நான் ஏங்கியிருக்கக்கூடிய சந்தர்ப்பங்கள்தான் அனேகம் // can u point a few, so we know what we miss?

    பதிலளிநீக்கு
  44. Dear Lucky,
    You have given a very good balanced review. The disease SRK is suffering is known as Autism:Asperger's Syndrome. The disease is named after Doctor Asperger. The person affected becomes a slow learner and feels himself inferior. The genius in SRK is well seen throughout the film. The only irritating thing in the film is The American President meeting the Khan. Because they only brand Muslims as terrorists. There may be some terrorists in Islam, but what about the terrrists of other religions ?
    The whole state where Gandhi was born now is hindutva terrorist state where muslims are always targetted. If I say 'My name is Modi or Thakkere and I am not a Terrorist', will anyone believe it ? Seeni Mohan

    பதிலளிநீக்கு
  45. மிக நல்ல பதிவு நண்பரே ...
    Blogger

    VISA said...//கமல்ஹாசன் விரைவில் ‘மை நேம் ஈஸ் தெனாலி’ //
    //senchaalum seivaan ya anthaalu.
    avaraea SONIA GANDHI vesham poaduveanu adam pudipaaru. sir Manmohan Singh...an Patil...ellaa veshamum avarea poatu Manmohan Singh oru dance program vaikiraarunu kadhaila oru paatu veara paaduveanu adam pudipaaru. aiyoa aiyoa....//

    @visa
    தங்களின் நாகரீகமான வார்த்தையாடலை வைத்தே உங்களின் ரசனை அறிய முடிகிறது. கமலின் குறைகளிலே குறியாய் இருக்கும் உங்களை போன்ற புத்தி சாலிகளுக்கு warren buffett இன் பிரபலமான வாக்கியமாவுது எதாவுது ஞானம் தரலாம்.
    ' if you like me raise your hands,
    if dont then raise your standards'

    பதிலளிநீக்கு
  46. //இந்த முசுலீம் இளைஞர்களை மனதளவில் அனாதைகளாக்கிய இந்த நாடும் இதன் அமைப்பு முறையும்தான் குற்றவாளிகள்.
    //
    சிறுபான்மை தீவிரவாதம் என்பது பெரும்பான்மை தீவிரவாதத்தின் விளைவே. இன்று துரதிருஷ்டவசமாக இந்து இளைஞர்கள் பெரும்பாலும் இந்துவாக இருப்பதுதான் இந்தியனாக இருப்பதற்கான் தகுதி என்ற அளவுக்கு மூளைச்சலவை செய்யப்பட்டிருக்கின்றனர்

    பதிலளிநீக்கு
  47. Hey Mr.
    Really do you undersatand hindi...This is one of the wrost movie of Mr. SRK

    பதிலளிநீக்கு
  48. நண்பா,
    நியாயமான காரணங்கள் ஏதுமின்றி, வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் இஸ்லாமியரை இழிவுபடுத்தும் தேசமாக இந்தியா இருக்கிறது.
    // மிக சரி

    ‘பாகிஸ்தான் ஜெயிக்க வேண்டும்’ என்று சொல்லக்கூடிய ஒரு இஸ்லாமியரை கூட இதுவரை நான் சந்தித்ததேயில்லை.

    // நன் பார்த்து இருக்கிறேன் நண்பா இந்தியாவை பற்றி மோசமாக , பாகிஸ்தானை மற்றும் இஸ்லாமிய நாடுகளை உயர்வாக பேசியவர்களும் எனக்கு தெரியும் . ஆனால் அது மிக சொற்ப மக்களே . இந்த சொற்ப மக்களின் பேச்சுகளே அதிகமாக வெளியிடபடுவதால் வந்த வினை .

    தனக்கு ஏற்பட்ட கௌரவ குறைசசலை ஒரு படமாக எடுத்து விட்டதாகவே தெரிகிறது . இதில் கவனிக்க படவேண்டிய ஒரு விஷயம் அமெரிக்கவில் இரட்டை கோபுர நிகழ்வுக்கு பின் எந்த ஒரு கொண்டு வெடிப்பு நடந்ததாக செய்தி இல்லை . இதற்கு அவர்களின் இந்த நடவடிக்கை ஒரு காரணம் . இரட்டை கோபுர நிகழ்வுக்கு முன் இந்த போல் கெடுபுடிகள் இல்லையே . அதற்கு பின் தானே இது எல்லாம் .
    இந்த தீவிரவாதம் மதத்தின் பெயர்ரால் நடப்பதால் தானே இந்த நிலை
    யார் தீவிரவாதி யார் நல்லவர் என அறிய அமெரிக்க போலீஸ் என்ன கடவுளா .

    ஒரு சதவிதம் செய்யும் தவறு பாலில் விழுத்த விஷேம் போல் ஆகி விட்டது

    இஸ்லாம் ஒரு அருமையான மார்க்கம் . எப்படி தன் வாழ்வை வாழ்தவர் யார் இதை ஊருக்கு சொல்ல்வது . இஸ்லாம் என்றாலே ஜிஹாத் மற்றும் தீவிரவாதம் தானே மனதில் முதலில் தோன்றுகிறது .

    எல்லாம் மாறனும் .

    பதிலளிநீக்கு
  49. வாணியம்பாடி இஸ்லாமிய கல்லூரியில் படிக்கும் இஸ்லாம் மதத்தை சேர்ந்த மாணவர்கள் கிரிக்கெட் ஆட்டத்தின் பொது வெளிப்படையாக பாகிஸ்தானுக்கு சப்போர்ட் பண்ணுவார்கள் என்பது அங்கு படிக்கும் அனைவருக்கும் தெரியும். நல்லவனாக காட்டிக்கொள்வதற்காக பொய் சொல்ல வேண்டாம் என்று கேட்டுகொள்கிறேன். தமிழ் சினிமாவின் முகவரியாக கருதப்படும் கமலை இழிவாக பேசும் உன்னை போன்ற நபர்களை என்ன செய்தால் தகும்?

    பதிலளிநீக்கு
  50. "நியாயமான காரணங்கள் ஏதுமின்றி, வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் இஸ்லாமியரை இழிவுபடுத்தும் தேசமாக இந்தியா இருக்கிறது."

    "மை நேம் இஸ் யுவா" - என்று உங்களது எழுத்து உங்களை பற்றி சொல்கிறது

    ஷாருக்கை பாலிவுட்டில் "கிங் கான்" என்கிறார்கள்.

    யுவா, வலையுலகில் உங்களை "கிங் யுவா" என்று சொல்லலாம்

    பதிலளிநீக்கு
  51. //தங்களின் நாகரீகமான வார்த்தையாடலை வைத்தே உங்களின் ரசனை அறிய முடிகிறது.//

    அன்பரே காலம் காலமாய் குட்டியூண்டு ஓட்டைக்குள்ள பத்து இருபது ஐம்பதுன்னு காசு குடுத்து வியர்வ சொட்ட சொட்ட டிக்கெட் வாங்கி தமிழ் படமா பாத்துட்டு இருந்ததுல என் ரசனை கொஞ்சம் கம்மி ஆயி போச்சு. நானும் லேப்டாப்புல டவுன்லோடு பண்ணி இங்கிலீஸ் படமா பாத்திருந்தேன்னா உங்க அளவுக்கு கொஞ்சம் ரசனை வந்திருக்கும்.


    // கமலின் குறைகளிலே குறியாய் இருக்கும் உங்களை போன்ற புத்தி சாலிகளுக்கு warren buffett இன் பிரபலமான வாக்கியமாவுது எதாவுது ஞானம் தரலாம்.
    ' if you like me raise your hands,
    if dont then raise your standards'//

    கமலின் குறைகளில் குறியாய் இருப்பது அவர் மேல் எனக்கு இருக்கும் எதிர்பார்ப்பினால் தான். அவரிடம் எதிர்பார்ப்பது அவரை பிடித்திருப்பதால். எனவே எனக்கு பிடிக்காத ஒரு நடிகரை நான் அப்படி குறை கண்டு பிடிக்கமாட்டேன். கேலியாக ஒரு சிரிப்பு சிரித்துவிட்டு நகர்ந்துவிடுவேன்.

    பதிலளிநீக்கு
  52. //
    i remember one 'Thirukural'

    ''adakkam amararul uykum''//

    நிச்சயமாக அடக்கம் அமரருள் உய்க்கும் என்பது சரியே. அமரர்களை தான் நாம் அடக்கம் செய்வோம் சுடுகாட்டில். நீங்களே அடக்கமாகிவிட்டீர்கள் என்றால் உங்களையும் அமரர் லிஸ்டில் சேர்த்துவிடலாம். எனவே நீங்கள் அடக்கமானவராகவோ அமரராகவோ இருந்தால் உயிக்கும் உரைக்காது.

    பதிலளிநீக்கு
  53. //' if you like me raise your hands,
    if dont then raise your standards'//

    தசாவதாரம் மாதிரி ஒரு படத்தை பாராட்டுற உங்கள மாதிரி ஆளோட ஸ்டேண்டட் என்னான்னு எனக்கு புரிஞ்சிடிச்சு.

    //warren buffet//

    dinner and lunch per head evalavu?

    பதிலளிநீக்கு
  54. //தசாவதாரம் மாதிரி ஒரு படத்தை பாராட்டுற உங்கள மாதிரி ஆளோட ஸ்டேண்டட் என்னான்னு எனக்கு புரிஞ்சிடிச்சு//

    இங்க யாரு தசாவதாரத்தை பாராட்டினாங்கனு தேடி பார்த்தேன்..புலப்படவில்லை... தசாவதாரம் நிச்சியம் கொண்டாடப்பட வேண்டிய படமில்லை தான் ஆனால் பகடி செய்ய வேண்டிய படமில்லை என்பது என் தாழ்மையான கருத்து. இன்னொரு ஆங்கில படத்தின் பாதிப்பானாலும் அன்பே சிவம் மாதிரி ஒருபடத்தை தோல்விப்படமாக்கிய நம்மை சுஜாதா சொல்வது போல் 'பசித்த புலி தின்னட்டும்'

    பதிலளிநீக்கு
  55. வினவு said...
    "குஜராத்தில் தனது உற்றார் உறவினர்களை இந்துமதவெறியர்களின் நரபலிக்கு பறிகொடுத்துவிட்டு அவர்களை குண்டு வைத்து கொல்லும் வாய்ப்பு கிடைக்காத இளைஞன் ஒருவன் தனது ஆற்றாமையை பாக் கிரிக்கெட் அணியை ஆதரிப்பதன் மூலம் நிறைவேற்றிக் கொள்வதில் தவறேதுமில்லை..."

    How do you explain the activities up to the day before Gujarat incident? You intellectuals will come with other reasons why they act like the way they are. Also we have to remember “who” started that incident… OK.

    I agree that the minorities unsafe feelings (irrespective of religion/nationality) and our responsibility to accommodate them – as long as they don’t misuse them.

    How many bomb blasts handled by Hindus in Pakistan (or any other countries where Hindus are minority) in spite of continued killings.

    Like one mentioned “in England, Indians support Indian Cricket team….” The fool you made statement should understand that those Indians were born and brought up in India and now they are in England. The idiots we are talking about were born and brought up in India. Please also note the Aug 14th Independence Day celebrations mentioned by somebody here.

    பதிலளிநீக்கு
  56. Raja said... "இதுவரை இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியின்போது இந்தியா ஆதரவு முஸ்லீமை நான் பார்த்தது இல்லை...."

    I know - we have to take your statement for "most" not for "all".

    When visited Triplicane, Chennai many years ago (match was somewhere else) - I was so surprised (and shocked) to see the big time celebrations and found out from the mansion friends that was a "normal" act whenever Pakistan wins.

    So I can recommend to Yuva (and others) who have not seen the celebrations to visit Triplicane on a game day and have fun.

    Fans normally support even other teams (if they play well) but celebrating other team's win is too much.

    பதிலளிநீக்கு
  57. yenna sir ithu,

    //aalapirandavan, aathirapadamatten//

    appidinnu pottu side look pose yellam koduthutuu ipidi naan
    sonnathukku aathira pattu yenna
    saagasolli yeluthi irukigale.

    //நிச்சயமாக அடக்கம் அமரருள் உய்க்கும் என்பது சரியே. அமரர்களை தான் நாம் அடக்கம் செய்வோம் சுடுகாட்டில். நீங்களே அடக்கமாகிவிட்டீர்கள் என்றால் உங்களையும் அமரர் லிஸ்டில் சேர்த்துவிடலாம். எனவே நீங்கள் அடக்கமானவராகவோ அமரராகவோ இருந்தால் உயிக்கும் உரைக்காது//

    neenga aalapora naatula nan
    kudimagan illaya?. Oh ho neenaga
    oru vela 'Hitlar' madiriya?.
    Pudikathavangala mudichiduvingala?,
    yaarukku theriyum.

    Yenna sir aalapora neenga
    ippiyellam aathira padalama?
    pathu seyunga sir.

    unga yeluthu styla padikkumpothe
    ungalukku pothu thalathula iyangura sagipputhanmai, mudirchi illaiguratha therinjukitten. athu
    ippo prove aaiduchu.

    sir yennoda karuthukku mudinja
    padil sollunga. thanipatta
    thaakudal, amarar list la sekkurathu yellam yaar seivangannu
    neengale yosichipaarunga.

    Guru

    பதிலளிநீக்கு
  58. //unga yeluthu styla padikkumpothe
    ungalukku pothu thalathula iyangura sagipputhanmai, mudirchi illaiguratha therinjukitten. athu
    ippo prove aaiduchu.
    //

    ஒரு நையாண்டிக்கு சொன்னா எதுக்கு இம்புட்டு சீரியஸ் ஆயிட்டு.....

    ஹெல்லோ சார்...கூல்....நான் சொல்ல வந்தது அடக்கமாக எல்லா விஷயத்திலும் இருந்தால் நம்மை அமரர் லிஸ்டில் சேர்த்துவிடுவார்கள் என்பது தான். பிரீயா விடுங்க.

    அடங்கமறு என்பது தான் நான் சொல்ல வந்தது. தப்பா எடுத்துக்காதீங்க. ஆனா லக்கியின் ஆளப்பிறந்தவன் ஆத்திரப்படமாட்டேன் என்ற அரிய தத்துவத்திற்கு இன்னும் விளக்கம் தேடி மண்டையை பிய்த்துக்கொண்டிருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  59. படம் இந்தியாவில் மாபெரும் நஷ்டத்தைச் சந்தித்ததும், வெளி நாடுகளில் (குறிப்பாக இங்கிலாந்தில்) வெற்றி பெற்றதையும் வைத்துப்பார்த்தால் வெளிநாட்டு வாழ் "மு"மக்களின் பேராதரவைப் பெற்றிருக்கிறது என்பது தெரிகிறது.

    பதிலளிநீக்கு
  60. Superb review! Terrorists shud watch this movie and realize the indirect damage they make to their own ppl!

    பதிலளிநீக்கு
  61. Dear brother,
    Islam is not for some one, this is a real way for mankind. all of the children birth in Islam, parents are diverted to other religion. We are always welcome to Only one God's religion. Allah will bless you, and show you a good path.

    பதிலளிநீக்கு
  62. பெயரில்லா4:59 PM, மார்ச் 02, 2010

    who said that my name is khan is not run as well in india. u can see mumbai, still house full shows, even kolkatta too. in india, this is super dooper hit film.

    பதிலளிநீக்கு
  63. பெயரில்லா5:03 PM, மார்ச் 02, 2010

    mr. yuvakrishna!
    you got so many comments on this blog. so other bloggers are blame or make jealous on you. so they made negative comments on my name is khan.
    MY NAME IS KHAN NICE MOVIE...ALL PEOPLE (HINDU, MUSLIM, CHRISTIAN) MUST SEE THIS MOVIE

    பதிலளிநீக்கு
  64. http://bala-balamurugan.blogspot.com/2010/03/blog-post_03.html

    பதிலளிநீக்கு
  65. ஆல் இன் ஆல்9:52 PM, மார்ச் 03, 2010

    Sir,
    I request the so called indians to grow up and look at sports separately from politics.As long as muslims dont support pakistan in a war(so far all indo-pak wars had genuine reason on indian side)why do u worry?

    அப்புறம் பொதுவானவன் சார்...நீங்க எப்பிடி சார்...australiaku வேலைக்கு போனா அப்புறம் ஆஸ்திரேலியன் கிரிக்கெட் டீம சப்போர்ட் பண்ண ஆரமிச்சுடுவீங்களா? அப்புறம் ஏன் ஈழதமிழர்கள் மட்டும் இலங்கைய சப்போர்ட் பண்ணா ஏத்துக்க மாட்றீங்க?

    sports and culture are used as positive track-2 diplomacy to develop positive relationship between countries.but only in case of india-pak it is having netgative implications

    first let us start to think a game as a game and stop bursting crackers.how many of us burst crackers and celebrated after india's vicoty in kargil war or when india won in the securitty council for tproscribing JUD?

    dear yuvakrishna,
    it is good to support muslims by being a hindu than converting to islam.that way u show the secular face u have.when u want to praise do it across,when u want to criticise do it inside

    பெரியார் புத்த மதத்துக்கு மாறாமல் இருபதற்கு சொன்ன காரணமும் இதுவே

    இலங்கை டீம்ல இருக்க முத்தயாஹ் முரளிதரன் சுத்தமான் தமிழர் அவர் டெண்டுல்கர அவுட் ஆக்குன நீங்க எப்பிடி ராக்கெட் உட்டு கொண்டாடுவீங்கள?

    பதிலளிநீக்கு
  66. சமீபத்தில் “My Name is Khan” படம் பார்க்க நேர்ந்தது, அதிக எதிர்பார்ப்போடு படத்தை பார்த்தால் ஒரு கமர்சியல் மசாலா படத்தை ஷாரூக் மதத்தின் துணைக்கொண்டு கேலிக்கூத்தாக்கி இருக்கிறார். உலகில் உள்ள அனைத்து முஸ்லீம்கள் தீவிரவாதிகளாக சித்தரிக்கப்படும் போது இவர் மட்டும் தான் தீவிரவாதி அல்ல என நிலை நிறுத்தி ஒன்றும் ஆகி விட போவதில்லை.

    விஜய் போன்று ஹீரோயிசத்தை ஷாரூக் புதிய பரிமாணத்தில் முயன்று இருக்கிறார். முகமது, கான், பேரில் என்ன இருக்கிறது. முஸ்லீம் என்றாலே தீவிரவாதி என்று முத்திரை குத்தப்பட்டதால், நானோ, நீயோ இதிலிருந்து மீள முடியாது. நபிகள் நாயகத்தையே தீவிரவாதியாக சித்தரிக்கும் இந்த உலகத்தில் நாம் மட்டும் விதிவிலக்கா என்ன?

    ஒரு படத்தில் சந்தானம் ஒரு செய்யும் காமெடி சீனை உங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன்,
    “அரசியல் பண்றவங்களை அரசியல்வாதின்னு கூப்பிடறாங்க. அப்ப கோயில்லே மந்திரம் சொல்றவங்களை ஏன் மந்திரவாதி என்று கூப்பிடக்கூடாது? என்பார்.

    அதே போல முஸ்லீம்களை தங்கள் மதத்தை தீவிரமாக பின்பற்றுவதால் ஏன் தீவிரவாதி எனக் கூப்பிடக்கூடாது என்று எனக்கு நானே சமாதானம் படுத்திகொள்வேன். தீவிரவாதி என்ற அடைமொழிஇ ந்தியாவில் வேறு யாருக்கும் கிடையாது, முஸ்லீமுக்கு மட்டும் தான். எந்த செய்தித்தாளைப் படித்தாலும், எந்த டிவி பார்த்தாலும் இதே நிலை தான்.

    முன்பெல்லாம் கறிக்கைடை பாய், சாம்பிராணி புகை போடுவராக காட்டி கொண்டு இருந்த சினிமா இன்று முஸ்லீம் என்றால் தீவிரவாதியாகவே சித்தரித்து கொண்டு இருப்பது வேதனை. ஜிப்பா, தலையிலே தொப்பி, கழுத்திலே தாயத்து, நெற்றியில் வடு, தோள் பட்டையில் துப்பாக்கி என விஜயகாந்த், அர்ஜுன், படத்தில் எல்லாம் தவறாமல் காணலாம், ஏன் உன்னை போல் ஒருவன் மட்டும் விதி விலக்கா என்ன?.

    ஆகவே இன்று முதல் நான் கூற போவது, “my name is Mohamed I don’t care what you think about me”

    MOHAMED SALEEM

    பதிலளிநீக்கு
  67. many comments
    There are good comments may be for and against.It can be published as an article if it does not hurt others

    பதிலளிநீக்கு