5 டிசம்பர், 2011

விஷ்ணுபுரம் விருது 2011

தமிழின் மூத்த படைப்பாளுமைகளை கவுரவிக்கும் பொருட்டு ‘விஷ்ணுபுரம் விருதுகள்’ கடந்த ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தின் சார்பில் வழங்கப்படும் இந்த விருது பாராட்டு கேடயமும், ரூ.50,000/- ரொக்கப் பணமும் உள்ளடக்கியது.

கடந்த ஆண்டு இவ்விருது எழுத்தாளர் ஆ. மாதவன் அவர்களுக்கு வழங்கப்பட்டது. இயக்குனர் மணிரத்னம் தலைமையில் கோவையில் நிகழ்ந்த விழாவில் ஆ.மாதவன் படைப்புலகம் குறித்து ஜெயமோகன் எழுதிய ‘கடைத்தெருவின் கலைஞன்’ எனும் நூலும் வெளியிடப்பட்டது.

2011ஆம் ஆண்டிற்கான விஷ்ணுபுரம் விருது மூத்த எழுத்தாளர் பூமணி அவர்களுக்கு வழங்கப்பட இருக்கிறது. டிசம்பர் 18ம் தேதி கோவையில் திரைப்பட இயக்குனர் பாரதிராஜா அவர்களின் தலைமையில் விருது வழங்கும் விழா நடைபெற இருக்கிறது. விழாவில் ஜெயமோகன், நாஞ்சில் நாடன், எஸ்.ராமகிருஷ்ணன், யுவன் சந்திரசேகர் உள்ளிட்ட பிரபல எழுத்தாளர்கள் கலந்துகொண்டு பூமணியை வாழ்த்த இருக்கிறார்கள்.

6 கருத்துகள்:

  1. சார்! மூட்டி விடாதீங்க சார்... எல்லாருமே நமக்கு நண்பர்கள்தான்! :-)

    பதிலளிநீக்கு
  2. ஜெயமொஹனுடன் பல கருத்து மோதல்களுக்கு பின்பும் இந்த அறிவிப்பா? ம்ம்ம்....

    பதிலளிநீக்கு
  3. யுவா, மத்தவங்க எல்லாம் சரி . யுவன் சந்திரசேகர் எப்போதிலிருந்து பிரபல எழுத்தாளர் ஆனார்?

    பதிலளிநீக்கு
  4. //யுவா, மத்தவங்க எல்லாம் சரி . யுவன் சந்திரசேகர் எப்போதிலிருந்து பிரபல எழுத்தாளர் ஆனார்?//

    சார்! யுவன் சந்திரசேகர் நிஜமாவே பிரபல எழுத்தாளர்தான். நீங்க அவரை யுவகிருஷ்ணாவோட குழப்பிக்கிட்டீங்க :-)

    பதிலளிநீக்கு