17 டிசம்பர், 2011

அழிக்கப் பிறந்தவன் - 3

அழிக்கப் பிறந்தவன் - 1

அழிக்கப் பிறந்தவன் - 2


ரிசர்வ் வங்கி கட்டிடத்தை தாண்டி, செயிண்ட் ஜார்ஜ் கோட்டைக்கு எதிர்ப்பக்கமாய் யாரையோ எதிர்ப்பார்த்து, நடந்து கொண்டிருந்தார் வாப்பா. சாலையை ஒட்டி உருவாக்கப்பட்டிருந்த புதிய பூங்காவில் அவள் காத்திருந்தாள். தேடிய ஆளை கண்டதும் கண்களில் சின்ன மின்னல் வாப்பாவுக்கு. பூங்காவில் போதிய வெளிச்சமில்லை. சாலையில் இருந்த சோடியம் விளக்குகளின் வெளிச்சம் மரம், செடி, கொடியை எல்லாம் தாண்டி பூங்காவுக்குள் கொஞ்சமாக நுழைந்தால்தான் உண்டு.
என்ன வாப்பா லேட்டு?_ மட்டமான ரோஸ் கலர் லிப்ஸ்டிக்கை அப்பியிருந்தாள். மாநிறம். வாளிப்பான சந்தனக்கட்டை உடம்பு. குண்டு மல்லி கண்கள். இடுப்பு, தொப்புள் பகுதிகளெல்லாம் டிரான்ஸ்பரண்டாக தெரியும் வண்ணம் ரோஸ் கலர் ஷிபான் புடவை அணிந்திருந்தாள். கண்டதுமே கும்பிடத் தோன்றாது, கூப்பிடத் தோன்றும் தோற்றம். வயது 35லிருந்து 40க்குள் இருக்கலாம். சாலை விளக்கு வெளிச்சத்தில் அவளது இடுப்பு டயர் வாப்பாவை வெறியேற்றியது. இந்த வர்ணிப்பை அடுத்து நீங்கள் யூகிப்பது மாதிரிஅவள் நிச்சயமாக அப்படித்தான்!
எவ்ளோ வாட்டி சொல்லியிருக்கேன். வாப்பா, வாப்பான்னு கூப்புடாதேன்னு. அப்படி கூப்புட்டேன்னா மூடு வரமாட்டேங்குதுடி என் செல்லம்கிழம் கொஞ்சியது.
கெரகம். ரெகுலர் கஸ்டமர்னு சொல்லிட்டு இந்த கெழத்தையெல்லாம் சகிச்சிக்க வேண்டியிருக்குமனசுக்குள் நொந்துக் கொண்டு,, மேலாக்காகஅட. வா மாமோய் போலாம்!” என்று கொஞ்சலாக சிரித்தாள். இளசுகளிடம் போவதைவிட இதுபோல பெருசுகளிடம் போவது ஒருவகையில் மேல். வேலையும் கம்மி. காசும் கொஞ்சம் அதிகம்.
அசிங்கமாக இளித்துக்கொண்டே அவளை இடையோடு சேர்த்து அணைத்துக்கொள்ள முயற்சித்தார் வாப்பா. காமம் வெட்கமறியாது. சுற்றுப்புறத்தை மறந்தார். தலையில் போட்டிருந்த வெள்ளை குல்லாவை எடுத்து, பாக்கெட்டில் செருகிக் கொண்டார்.
யோவ் பப்ளிக் ப்ளேஸ். வுடுய்யா. யாராவது பார்த்தா அசிங்கமா நெனைக்க போறாங்கஅவள் சொன்னமாதிரியே இருட்டுக்குள் சங்கமமாகி விட்ட சில காதலர்கள், இவர்கள் ஏற்படுத்திய சலசலப்பை கண்டு கடுப்பானார்கள்.தொழில்’ செய்பவளாக இருந்தாலும் அவளும் பெண்தானே? அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு எல்லாம் அவளுக்கும் உண்டுதானே?
வாப்பாவும், அவளும் இன்னும் கொஞ்ச தூரம் பேசிக்கொண்டே நடக்கத் தொடங்கினார்கள். சாலை காலியாக துடைத்து விட்டது போல இருந்தது. அவ்வப்போது ஏதாவது பல்ஸர்களும், ஹீரோஹோண்டாவும் காற்றைக் கிழித்துக்கொண்டு பறக்கும். எப்போதாவது ஒரு கார். அவளோடு கைகோர்த்து காதலர் மாதிரி நடந்ததில் வாப்பாவுக்கு ஒரு அல்பமான கிளுகிளுப்பு. அண்ணா சதுக்கம் மேம்பாலத்துக்கு முன்பாக இடதுபுறமாய் ஒடித்து நடந்தார்கள். வழக்கமாக வரும்  அதே இடம்தான். எதிரில் கூவம் கழிமுகப் பகுதி. வெளியூரில் இருந்து வருபவர்கள்தான் கூவத்தைக் கண்டதுமே, ‘என்னா.. இப்படி நாறுது?’ என்கிறார்கள். இங்கிருக்கிறவர்களுக்கு அப்படி எதுவும் தெரியவில்லை. பழகிவிட்டது. இந்த கூவத்திடம் சகித்துக் கொள்ள முடியாத விஷயம் கொசுத்தொல்லை ஒன்றுதான்.
துறைமுகம் தொடர்பான மத்திய அரசு அலுவலகங்களும், குடியிருப்புகளும் நிறைந்திருந்த பகுதி அது. அடர்த்தியான இருட்டினிலும் வசதியான இடத்தை தேடி அமர்ந்தார்கள். அது ஒரு கைவிடப்பட்ட பழைய கட்டிடம். தோளில் கிடந்த துண்டினை விரித்தார். சிகரெட் பாக்கெட்டை எடுத்தார். ஒரு சிகரெட்டை லைட்டர் வைத்து புகைத்துக் கொண்டார். லைட்டர் வெளிச்சத்தில் இடத்தை நோட்டம் விட்டார். ஏதாவது பூச்சிப் பொட்டு இருந்தால்..?
கடைப்பையனிடம் அவர் சொல்லிவிட்டு வந்தமவுண்ட்ரோட்டு வேலைஇதுவே தான்.. இந்த வேலை விஷயத்தில் வாப்பா ஒரு வெள்ளிக்கிழமை ராமசாமி. வாரமானால் எது தவறினாலும் தவறுமே தவிர, மவுண்ட் ரோடு வேலை கடந்த பத்தாண்டுகளில் ஒருமுறை கூட தவறியதே இல்லை. வாரத்துக்கு ஒருநாளாவது உடம்பை இதுபோல சர்வீஸ் செய்துக் கொண்டால்தானே மத்த நாட்களில் ஒழுங்காக வேலையைப் பார்க்க முடியும்?
நீயும் சிகரெட் புடிக்கிறியா?” அக்கறையாக கேட்டார். இந்தத் தொழிலில் சிகரெட்டு, தண்ணி எல்லாம் வாடிக்கைதான்.
இல்லைய்யா. பீரு, பிராந்தியா இருந்தா சாப்பிடறது உண்டு
வாப்பா கொஞ்ச நாட்களாகதண்ணிஅடிப்பதில்லை. எப்போதாவது ரொம்ப  டென்ஷனாக இருந்தால் ஒரு பீர் மட்டும். வயது ஆகிறது இல்லையா? சரக்கடித்தால் இப்போதெல்லாம் ரொம்பஓவராகிஏதாவது ஏடாகூடமாக கசமுசா ஆகிவிடுகிறது. வயசுக்கு தகுந்த நடவடிக்கை வேணாமா என்று தம்பிகள் கூட கண்டிக்கிறார்கள். அதிலும் வெள்ளிக்கிழமை நிச்சயமாக ‘தண்ணி’ இல்லை. போதையில் வீரியம் குறைவதாகவும் ஃபீல் செய்கிறார் வாப்பா.
கைகள் இரண்டையும் மேலே தூக்கி ஜிப்பாவை கழட்டினார். அந்த அவசர வேளையிலும் ஜிப்பா பாக்கெட்டில்பென் ட்ரைவ்இருக்கிறதா என்பதைத் தொட்டுப் பார்த்து உறுதி செய்துக் கொண்டார். சந்தனக்கட்டை தனது மாராப்பை தாராளமாக்கியது. பாவாடை நாடாவை தளர்த்திக் கொண்டது. போதையாக கண்களை உருட்டி, முத்தம் வாங்க ஏதுவாக உதடுகளை குவித்தாள். குஷியாகிவிட்ட பெருசு அவளை இறுக்கி அணைத்தார். தோளில் அவளது தலைகளை சாய்த்துக் கொண்டார். கழுத்துப் பகுதியை பூனைபோல மோப்பம் பிடித்தார்.
வாப்பாவின் தோளில் தலையைச் சாய்த்துக்கொண்டு கட்டிடத்தின் வாசல் பக்கமாக யதேச்சையாகப் பார்த்தவளின் கண்களில் இண்ஸ்டண்ட் பீதி. ஒரு முழம் சைஸுக்கு பளபளவென மின்னிய கத்தியோடு அவன் பாம்பு போல சைலண்டாக நின்றிருந்தான். விரலை உதட்டில் வைத்து சத்தமிட வேண்டாம் என்று சாடையில் மிரட்டினான். சத்தமிட்டால் குத்துதான் என்பதாக, கத்தியை காற்றில் குத்தியும் காட்டினான். மெல்லிய நிலா வெளிச்சம் அவனது தோற்றத்தை டெர்ரராக காட்டியது.
இந்தப் பக்கத்தில் வாப்பா வேலையில் மும்முரமாக இருந்தார். அந்தக் காலத்து மோஸ்தரில் முதுகுப் பக்கமாக தைக்கப்பட்டிருந்த அவளது ஜாக்கெட் ஹூக்கினை நீக்க முயற்சித்து, திரும்ப திரும்ப தோற்றுக் கொண்டிருந்தார். “கருமம்... கண்ணு மண்ணு சரியா தெரியமாட்டேங்குது
பூனை நடை நடந்து அருகில் வந்தவன், இவர்களுக்கு இரு அடி தூரம் இருக்கும்போது சட்டென்று தாவிக்குதித்து வாப்பாவின் வாயைப் பொத்தினான்.
கோட்டை ஸ்டேசன் எதுத்தாப்புலேதானே உன் வூடு? இங்கே நீ வரவேயில்லை. எதையும் பார்க்கவுமில்லை. சரியா. ஓடிப்போயிடு. இனிமே வெள்ளிக்கிழமை, வெள்ளிக்கிழமை வேற கஸ்டமரை புடிச்சிக்கோ. திரும்பிப் பார்க்காம ஓடிடு.
அவளைப் பார்த்து கரகரப்பான குரலில் சொன்னான். மறைமுகமான பரிவும், நேரடியான மிரட்டலும் சமவிகிதத்தில் கலந்திருந்தது அவன் பேச்சில். ஏற்கனவே அவளை அவனுக்கு தெரிந்திருக்க வேண்டும். வூடு இருக்கிற ஏரியாவெல்லாம் கரெக்டாக சொல்கிறான். முகம் முழுக்க தாடி. கருப்புக் கண்ணாடி. ஏற்கனவே இருட்டு. இவனது முகத்தை நிச்சயமாக நினைவில் வைத்துக்கொள்ள வாய்ப்பேயில்லை.
வாப்பாவின் வாயோடு சேர்த்து மூக்கையும் அழுத்தமாக அவன் பொத்தியிருந்தான். மூச்சுவிட சிரமப்பட்டுக் கொண்டு, கையை பின்னுக்கு காற்றில் வீசி தத்தளித்துக் கொண்டிருந்தார்.
உடைகளை வேகமாக சரிசெய்துக் கொண்டே, அடுத்து என்ன செய்வதென்ற குழப்பம் சூழ பதட்டமாக அவள் ஓடினாள். இந்த தொழிலில் இதெல்லாம் சகஜம்தான். வாப்பாவை மிரட்டிவிட்டு, அவன் தன்னை அனுபவிக்க வருவானென்று எதிர்ப்பார்த்தாள். ஆனால் அவனுடைய நோக்கம் பெண் சுகமில்லை. இது ஏதாவது தொழில் தொடர்பான அடிதடியாக இருக்கலாம். கையில் கத்தி வேறு வைத்திருக்கிறான். யாருக்கு தெரியும், அவரை இவன் கொலைகூட செய்யலாம். போலிசு, கேசென்று வந்தால் நம் தொழிலும் நடக்காது. வாழ்க்கை வண்டியும் குறைஞ்சது ஒரு வருஷத்துக்கு ஓடாது. கவலையோடு யோசித்தவாறே ஓட்டமும் நடையுமாக தீவுத்திடலை தாண்டி நடந்துகொண்டிருந்தாள். ச்சே... கெழவன் கிட்டே பஸ்ட்டு காசையாவது வாங்கியிருக்கலாம்.
அவளது நினைப்பு சரிதான். அங்கே ஒரு கையில் வாயை பொத்தியவன், மறு கையில் கத்தியை எடுத்தான். சரசரவென்று வாப்பாவின் கழுத்தை ஆட்டை அறுப்பதுபோல அறுத்தான்தொண்டைக்குழியருகே ஏதோ எலும்பு மாதிரி தட்டுப்பட்டு சரியாக அறுபடவில்லைவாப்பாவின் உடல் தலையறுப்பட்ட ஆட்டுடல் மாதிரி துள்ளியது. சட்டென்று உயிரும் போவதாக தெரியவில்லை. இவனுக்கு இது நிச்சயம் முதல் கொலை. அரைகுறையான வேலை. இருந்தாலும் அவனோ கருமமே கண்ணாக கழுத்தை அறுத்துக் கொண்டிருந்தான். எதிரே சுவற்றில் சிகப்புநிற திரவம் ஸ்ப்ரேயரில் தெளிக்கப்பட்டது மாதிரி பீய்ச்சியடித்துக் கொண்டிருந்தது. மனிதக் கவிச்சி வாடை காற்றில் பரவியது. வாப்பாவின் கண்கள் நிலைகுத்தி, தனது அறுபதாண்டுகால தொடர்ச்சியான இயக்கத்தை அந்த இரவோடு நிறுத்திக் கொண்டது.

(தொடரும் - 3)

13 கருத்துகள்:

  1. suppppppppppppeeeeeerrrrrrrrrrr......summa surunnu poguthu........

    பதிலளிநீக்கு
  2. வாவ் கிருஷ்!! அடுத்த புத்தகம் ரெடி!!!எடுத்தவுடன் டாப் கியரில்....பட்டைய கிளப்புங்க...

    பதிலளிநீக்கு
  3. wow,

    யுவகிருஷ்ணா, Weldon ,why cant you to try Cinema/TV serial ?

    You are no match to any one now in the field.
    We look forward to be a Famous man with wealth.

    S.Ravi
    Kuwait

    பதிலளிநீக்கு
  4. அருமை! தொடருங்கள்!
    பகிர்விற்கு நன்றி நண்பரே!
    என் வலையில்:
    "நீங்க மரமாக போறீங்க..."

    பதிலளிநீக்கு
  5. விர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.......

    பதிலளிநீக்கு
  6. //வாப்பாவின் கண்கள் நிலைகுத்தி, தனது அறுபதாண்டுகால தொடர்ச்சியான இயக்கத்தை அந்த இரவோடு நிறுத்திக் கொண்டது
    //

    you write like a seasoned writer. keep it up.

    stick to such stories & interesting articles. avoid politics pls - your political views suck.

    பதிலளிநீக்கு
  7. வாப்பா மவுண்ட்ரோடுப் பக்கம் ஏதோ சரக்கு விஷயமாப் போற மாதிரி ஒரு பில்டப் குடுத்துட்டு இப்போ வேற “சரக்கு” டீல் பண்ணப் போயி.... என்னா ஒரு எத்து வேல!!!


    அப்புறம் நண்பன் திருட்டு DVD கதைக்கு எங்கேயாவது link வருமா?

    பதிலளிநீக்கு
  8. லக்கி சார்,

    கதை 'deadly'யாப் போவுது!

    நன்றி!

    சினிமா விரும்பி

    பதிலளிநீக்கு
  9. சிவசுப்பிரமணி.K11:31 PM, டிசம்பர் 19, 2011

    அமர்க்களம்!!!
    தொடருங்கள்!!!

    பதிலளிநீக்கு
  10. பத்திரிகையில் சுவாரஸ்யமான தொடர்கதை படிக்கும் போது அடுத்த வாரம் எப்போது வரும் என்று எதிர்பார்ப்பதை போல் காலையில் தினமும் கண்விழித்ததும் லக்கிலுக் ஆன்லைன் தான்....

    பதிலளிநீக்கு
  11. // கண்டதுமே கும்பிடத் தோன்றாது, கூப்பிடத் தோன்றும் //
    என்ன ஒரு விபரிப்பு....ஆஹா!

    ஷங்கரில் தொடங்கி....அப்புறம் கிளுளுகிளுப்பு.....இப்ப திரில்லர்.
    என்ன மாதிரி கதை இது?!

    வாப்பாவின் கழுத்த அறுத்தவன்தான் கதையோட தலைப்பா?
    (அழிக்கப் பிறந்தவன்)
    வாழ்த்துக்கள் யுவா!...தொடர்ந்து எழுதுங்கள்.

    பதிலளிநீக்கு