26 டிசம்பர், 2011

சரிகாஷாவை மறக்க முடியுமா?

மிகச்சரியாக பதிமூன்று ஆண்டுகள் ஆகிவிட்டது. இன்னமும் பெண்களை பெற்ற வயிறுகளை கொடுங்கனவாய் பயமுறுத்திக் கொண்டிருக்கிறது அந்த சம்பவம்.

எத்திராஜ் கல்லூரியில் படிக்கும் சரிகாஷாவும், அவரது தோழிகளும் கல்லூரி முடித்து வீடு திரும்பிக் கொண்டிருந்தார்கள். ஒரு அரசியல் கட்சியின் மாநாட்டுக்குச் சென்று திரும்பிய இளைஞர்கள் சிலர் ஆட்டோவில் அந்த வழியாக வந்துக் கொண்டிருந்தார்கள்.

இளம்பெண்களை கண்டதுமே அவர்களுக்கு குஷி. பெண்கள் மீது தண்ணீர் பாக்கெட்டை பீய்ச்சியடித்து விளையாடினார்கள். ஆட்டோவில் இருந்து நிலைதடுமாறிய இளைஞர் ஒருவர் சரிகாஷா மீது விழுந்தார். இதனால் கீழே விழுந்த சரிகாஷாவின் தலையில் அடிபட்டு மரணமடைந்தார். அதே நாள்தான் சரிகாஷாவின் பிறந்தநாளும் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது பெற்றோருக்கு அவர் ஒரே மகளும் கூட.

தமிழகத்தையே குலுக்கிப் போட்ட மரணம் இது. அதுவரை ஈவ்-டீசிங் கொடுமையை பொறுத்துக் கொண்டிருந்த மகளிர், பல்வேறு அமைப்புகளின் சார்பாக தெருவுக்கு வந்து போராடிய வரலாற்று நிகழ்வும் சரிகாஷா மரணத்தால் நிகழ்ந்தது. இதன் விளைவாக தமிழக அரசு ‘ஈவ்-டீசிங் ஆக்ட்’ என்கிற தனிச்சட்டத்தையே கொண்டுவந்தது.

சட்டம் மட்டும் போதுமா?

இன்றும் ஈவ்-டீசிங் கொடுமை ஆங்காங்கே தினமும் நடந்துதான் வருகிறது. பெண்ணின் முகத்தில் ஆசிட் வீச்சு சம்பவங்கள் அவ்வப்போது நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது. பெண் என்கிற ஒரே காரணத்துக்காக, அவள் மீது கேலியும், வன்முறையும் ஆண்களால் ஏவப்படுவது நாகரிகமான மனித சமூகத்துக்கு அழகல்ல.

ஈவ்-டீசிங் கொடுமை என்பது தமிழகத்துக்கு மட்டுமேயான பிரச்சினை அல்ல. தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் கூட தொடர்ச்சியாக நடைபெறும் அவமானம்.

சமீபத்தில் மகாராஷ்டிராவின் அம்போலி என்கிற பகுதியில் இரு பெண்கள் ஈவ்டீசிங்கால் கொல்லப்பட்டதையடுத்து, அங்கே கொதிப்பான ஒரு சூழல் நிலவிவருகிறது. இந்தக் கொடுமைகளை ஒடுக்குமாறு அரசை நோக்கி மக்கள் போர்க்குரல் எழுப்பி வருகிறார்கள்.

இதையடுத்து அம்மாநிலத்தில் உள்துறை அமைச்சர் ஒரு புதிய உத்தியை அறிமுகப்படுத்தியிருக்கிறார். ஈவ்-டீசிங்குக்கு உள்ளாகும் பெண்கள், அதுகுறித்த புகார்களை எஸ்.எம்.எஸ். மூலமாகவோ, பிரத்யேகமான ஹாட்லைனிலோ குரல் பதிவு செய்யலாம். மும்பை காவல்துறையின் இணையத்தளத்திலும் புகார் பதிவு செய்யும் வசதியை மகாராஷ்டிர அரசு ஏற்படுத்தித் தந்திருக்கிறது. புகார் பதிவு செய்யப்பட்டதுமே, உடனடியாக புயல்வேகத்தில் காவல்துறை செயல்பட்டு சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை பிடித்துவிடும் என்றும் உறுதிகூறப்பட்டிருக்கிறது.

ஈவ்டீசிங்கால் பாதிக்கப்படும் பெண்கள் பலரும், அதுகுறித்து சொந்தத் தாயிடம் கூறக்கூட வெட்கப்படுகிறார்கள், அச்சப்படுகிறார்கள். இதனாலேயே பிரச்சினை பெரியதாகி மரணம் வரை கூடப்போகிறது. மகாராஷ்டிராவில் இப்போது அறிமுகமாகியிருக்கும் இந்த முறையில் தங்களது புகார் ரகசியமானது என்பதால் பெண்களுக்கு இருக்கக்கூடிய வழக்கமான மனத்தடை அகலும். எனவே ஈவ்டீசிங் குற்றங்களை கணிசமாக குறைக்கலாம்.

சமூகம் தொடர்பான பல புரட்சித் திட்டங்களுக்கு தமிழகம்தான் முன்னோடி. மகாராஷ்டிராவைத் தொடர்ந்து உடனடியாக இத்திட்டத்தினை தமிழக அரசும் காவல்துறையை முடுக்கிவிட்டு அமல்படுத்தினால், நம்மூர் பெண்களும் நிம்மதியாக பள்ளிக்கும், கல்லூரிக்கும், அலுவலகத்துக்கும் சென்றுவரலாம். பெண்கள் நலனில் பெரும் அக்கறை செலுத்தும் முதல்வர் இதை உடனே கவனத்துக்கு எடுத்துக் கொள்ள வேண்டும். இன்னொரு சரிகாஷா சம்பவம் இங்கே நடைபெறவே வேண்டாம்.

12 கருத்துகள்:

  1. Cinema also plays important role in eve teasing , instead of condemning it encourages youth . Always it shows men as affected parties and women as cheating ones , it might be true to certain extent and not always.

    பதிலளிநீக்கு
  2. dear yuva i have seen very worst kind of eveteasings happening to school going girls in west k.k.nagar r.t.o office bus stop while waiting there.i would just go near the boys just to be a scarecrow.no use in complaining in police stations only squads operating by tips from SMS can help.our girl children should not be humilated anymore.

    பதிலளிநீக்கு
  3. மிகபொ பொறுப்பான பதிவு யுவகிருஷ்ணா... பெண்களை “பிகர் ... ஆண்டி ”என்றுகுறிப்பிட்டு கலாய்த்து எழுதும் உங்கள் நையாண்டி பதிவுகளுக்கு சிறிய அளவில் பிராயச்சித்தம்....?”

    பதிலளிநீக்கு
  4. y they eve teasing because girls are week compare boys, sooo what ??????? so think .........

    பதிலளிநீக்கு
  5. சிந்திப்பவன்7:15 PM, டிசம்பர் 26, 2011

    மிகவும் பொறுப்பு மிக்க அவசியம் தேவையான ஒரு பதிவு.கைலாஷ் சொல்வது போல இது திரைப்படங்களிலும்,தொலைகாட்சியிலும்தடை செய்யப்படவேண்டும்.
    வாழ்த்துக்கள் இளைய கிருட்டினரே!

    பதிலளிநீக்கு
  6. படித்தவர்கள் அதிகம் வசிக்கும் கன்னியாகுமரி மாவட்டத்தில் தான் இந்த ஈவ் டீசிங் அதிகம். காவல்துறையும் கண்டு கொள்வதில்லை.

    பதிலளிநீக்கு
  7. சரிகாசாவை மறக்காத ஆண் நீங்கள்தான் யுவா நன்றி தங்கள் பதிவுக்கு..

    பதிலளிநீக்கு
  8. what happened to the Azhikka piranthavan series.. Please continue pannunga boss.

    பதிலளிநீக்கு
  9. //what happened to the Azhikka piranthavan series.. Please continue pannunga boss.//

    விக்கிறதுக்கு இருக்க சரக்க ஓசில கேட்கிறார்பா........

    அந்த தொடர் ஜஸ்ட் பார் ப்ளிசிட்டிக்கு !

    உ பதிப்பகத்தில் கிடைக்கும் வாங்கிக் கொள்ளவும்.

    பதிலளிநீக்கு
  10. ஒண்ணுமே பிரியல வாத்தியாரே ... ஒரே பேஜாராக்கீது... அயிக்கபிறந்தவன்னுட்டு ஒரு தொடர கபால்னு ஆரம்பிச்சே.. அது படா ஷோக்கா போயினுருக்க சொல்ல சொல்லாமக் கொள்ளாம நிறுத்திட்ட.. இன்னான்னு கேட்டா ஆங்.. அது பதிப்பகத்துல பொஸ்தகமா கெடைக்கும். அப்பால போய் வாங்கிக்கோன்றான் ஒரு டவுசர் பையன்.. சாரே.. அத்தக் கண்டினு பண்ணா இன்னா... .. வொய் திஸ் கொல வெறி? .. --- கந்தன்சாவடி கபாலி.

    பதிலளிநீக்கு