அனேகமாக +2 படிக்கும்போது என்று நினைக்கிறேன். தினத்தந்தியில் அந்த
விளம்பரத்தைக் கண்டேன். “கட்டழகுக் கன்னியை கயவர் நால்வர் கதறக் கதறக்
கற்பழிக்கும் கதை!” என்று கேப்ஷன் போட்டு, ஆனந்த் தியேட்டரில் வெளியான ஓர்
ஆங்கிலப் படத்தின் விளம்பரம் கால்பக்க அளவுக்கு வந்திருந்தது. கான்செப்டே புதுசாக
இருக்கிறதே என்று ‘ஏ’வலோடு, ஸ்கூல் கட்டடித்துவிட்டு நண்பர்களோடு ஆனந்த்
தியேட்டருக்கு படையெடுத்தோம். படத்தின் பெயர் மறந்துவிட்டது. பெயரா முக்கியம்?
ம்ஹூம்.
ஒன்று. கட்டழகுக் கன்னி என்று விளம்பர வாசகத்தை எழுதிய எழுத்தாளர் நெஞ்சறிந்து
பொய் சொல்லியிருந்தார். தினத்தந்தியில் ‘இளம் அழகி’ என்று செய்தியில்
குறிப்பிடப்படுபவர், போட்டோவில் பேரன் பேத்தி எடுத்த கிழவியாக இருப்பதைப் போன்ற
‘ஐரனி’ தான் குறிப்பிட்ட அந்த திரைப்படத்திலும்.
இரண்டு. ஃபாரினிலும் கூட ரேப் சீனை இலைமறை காய்மறையாக – அதாவது இளநீர்
வெட்டுவது, மானை புலி வேட்டையாடுவது மாதிரி குறியீடுகளால் உணர்த்துவது – எடுக்கும்
பழக்கம் இருக்கிறது போல. ‘பிட்டு’ எதிர்ப்பார்த்து போனவர்கள் பிட்டுக்கு மண்
சுமந்து முதுகில் சாட்டையடி வாங்கிய சிவபெருமான் ரேஞ்சுக்கு புண்பட்டு போனோம்.
ஆனாலும், அந்த விளம்பர வாசகம் மட்டும் இத்தனை வருடங்கள் கழித்தும்
நினைவடுக்குகளில் இருந்து தொலையாமல் வசீகரித்துக் கொண்டே இருக்கிறது.
நேற்று ஏதோ ஒரு சேனலில் யதேச்சையாக ஒரு மொக்கைப்படத்தைக் காண நேர்ந்தது. லேசான
‘கில்மா’ காட்சிகள் இருந்ததால், சுவாரஸ்யத்தோடு முழுப்படத்தையும் காண அமர்ந்தேன்.
என்ன ஆச்சரியம்..? ‘கட்டழகுக் கன்னியை கயவர் நால்வர் கதறக் கதறக் கற்பழிக்கும்
கதை!’ தான் ஒன்லைனர். படத்தின் பெயர் ‘பிரதி
ஞாயிறு 9.00 மணி முதல் 10.30 வரை’. படுமோசமான
மேக்கிங். அதெல்லாம் பிரச்சினையில்லை. கண்டெண்ட் ஈஸ் த கிங்.
நான்கு கயவர்கள் நெருங்கிய நண்பர்கள். ஒன்றாகவே எல்லா கெட்ட காரியத்தையும்
செய்பவர்கள். திருச்சிக்கு செல்லும்போது ஒரு ஓட்டலில் ‘அந்தமாதிரி’ ஃபிகருக்காக
வெயிட் செய்துக் கொண்டிருக்கிறார்கள். அதே ஓட்டலின் அடுத்த அறையில் ஒரு
கம்பெனியின் இண்டர்வ்யூ நடந்துக் கொண்டிருக்கிறது. அந்த இண்டர்வ்யூக்கு வரும் ஒரு
ஃபிகர் தவறுதலாக இவர்களது அறைக்குள் நுழைந்துவிட, கடும்போதையில் இருக்கும்
நால்வரும் சேர்ந்து...
அடுத்த காட்சியே ஒரு ட்விஸ்ட். நால்வரில் ஒருவனுக்கு திடீர் திருமணம்.
மணப்பெண்ணின் முகத்தைப் பார்க்காமலேயே தாலி கட்டிவிடுகிறான். முதலிரவில்தான்
தெரிகிறது. தான் தாலி கட்டிய பெண், அந்த திருச்சி ஓட்டலில் சின்னாபின்னப் படுத்தப்பட்டவள்.
வாழ்க்கையே நொந்து கொத்துக்கறி ஆகிறான். போட்டுத் தள்ளவும் முடியாது. புதியதாக
மணமான பெண் இறந்துவிட்டால், தாசில்தார் அலுவலகத்தில் இருந்து வந்து விசாரணை
நடத்துவார்கள். வெளியே சொல்லவும் முடியாது. ஏனெனில் கற்பழிப்புக் குற்றம்.
கவுரவமான குடும்பம். இருதலை கொல்லியாக இல்லாமல் பலதலை கொல்லியாக தினம் தினம்
மனதளவில் செத்து செத்து விளையாடுகிறான். நெருங்கிய நண்பர்கள் மற்ற மூவருக்கும்
இவளை அறிமுகப்படுத்தவும் முடியாது. அவமானம்.
இப்படியாக நாயகனின் மனக்கொந்தளிப்புகளும், அவனுக்கும் அவனது மனைவிக்குமான கேட்
& மவுஸ் விளையாட்டும்தான் படத்தின் பிற்பாதி. நாயகனாக நடித்திருப்பவர்
எல்.கே.ஜி. பையன் ரத்தக்கண்ணீர் நாடகத்தில் நடித்திருப்பதைப் போன்ற பிரமாதமான
ரியாக்ஷன்கள் தருகிறார். பான்பராக்கை வாயில் போட்டு குதப்பி, தலையில்
துப்பிவிட்டால் எப்படியிருக்குமோ அப்படியொரு ஹேர்ஸ்டைலில் கருணாஸ் நண்பர்களில்
ஒருவராக நடித்திருக்கிறார். அவரே பாடி, ஆடியிருக்கும் ஒரு குத்துப்பாட்டு ஓக்கே.
நண்பர்கள் எல்லாம் கல்யாணம் ஆகாத இளைஞர்கள் எனும்போது நாற்பதை கடந்த தொப்பை
பார்ட்டிகளை நடிக்கைவைக்கும் கலாச்சாரம் என்றுதான் நம்மூரில் ஒழியுமோ. டிவியில்
லொள்ளுசபா மாதிரி நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் ஒரு விக்கு மண்டையரும் நான்கு
இளைஞர்களில் ஒருவர். ஒரே ஒருவர் மட்டும் ஓரளவுக்கு இளைஞர் மாதிரியிருக்கிறார்.
இந்தப் படத்தையே உருப்படியான இயக்குனர் ஒருவர், கொஞ்சம் சுமாரான பட்ஜெட்டில் மீண்டும்
ரீமேக் செய்தால் நிச்சயம் சூப்பர் டூப்பர் ஹிட்டாக தரமுடியும். முதல் பாதி
நகைச்சுவை, இரண்டாம் பாதி க்ரைம் ட்விஸ்ட்டுகள் என்று நம்மூரின் அச்சு அசல் க்ரைம்
ஸ்டோரி ஃபார்முலா. எந்த காலத்துக்கும் ஒர்க் அவுட் ஆகக்கூடிய சப்ஜெக்ட்.
செண்டிமெண்டுகளை அசைத்துப் பார்க்கும் துணிச்சல் என்று மொக்கைப்படமாக இருந்தாலும்
பாராட்டக்கூடிய அம்சங்கள் நிறைய இருக்கிறது.
படத்தின் பெரிய ஆறுதல் ‘கதை’ என்றால்.. ஆச்சரியம் ஹீரோயின். “சென்னைப்
பட்டினம், எல்லாம் கட்டணம்.. கையை நீட்டினா காசுமழை கொட்டணும்” என்றொரு பாடலை
பார்த்திருக்கிறீர்களா? ‘அள்ளித் தந்த வானம்’ படத்தில் அப்பாடலுக்கு பிரபுதேவாவோடு
ஆடும் குட்டிப்பெண் கல்யாணியை உங்களுக்கு நினைவிருக்கிறதா? இல்லையென்றால் ‘ஜெயம்’
படத்தில் சதாவின் தங்கையாக நடித்த பாப்பையாவது நினைவிருக்கும். அந்த பாப்பாதான் இப்போ பீப்பாயாக மாறி, ஐமீன் பேபி கல்யாணி குமாரி பூர்ணிதாவாக மாறி கவர்ச்சிக் கடலில் குதித்திருக்கிறார்.
காட்டன் புடவை அவருக்கு மிக பாந்தமாக இருக்கிறது. குறிப்பாக மஞ்சள் புடவை. பாடல்
காட்சிகள் சிலவற்றில் ‘பேட்’ வைத்திருப்பது தெரிகிறது. அதற்கான நிர்ப்பந்தமும்
புரிகிறது. மாநிறம், களையான முகம். ஹோம்லியான பாடிலாங்குவேஜ். விடிகாலையில்
குளித்து, ஈரத்தலையில் டவல் சுற்றி, பூசை முடித்து, தீபாரதனை தட்டோடு ஒரு காட்சியில்
எதிர்படும் பூர்ணிதாவை பார்க்கும்போது இவரையே கல்யாணம் கட்டிக்கலாமா என்கிற எண்ணம்
நம்மைப் போன்ற ஒவ்வொரு இளைஞருக்கும் தோன்றும். அவ்வளவு தெய்வீகக்களை முகத்தில்.
கொஞ்சம் குள்ளம் என்பதுதான் பிரச்சினை.
இந்தப் படம் தியேட்டரில் ரிலீஸ் ஆனதா என்று தெரியவில்லை. டிவிடியாவது
கிடைக்குமாவென்றும் தெரியவில்லை. எப்போதாவது சன் குழும சேனல்களில் காணும்
பாக்கியம் கிடைத்தால் நீங்களும் என்னைப்போல பரமபிதாவால் ஆசிர்வதிக்கப்பட்டவரே.
இவர்தான் இப்போது விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளைத் தொகுக்கிறேன் என்று மொக்கை போடுவதோ?
பதிலளிநீக்குNICE
பதிலளிநீக்குஇந்த இத்துப்போன கந்தாயத்தெல்லாம் விடுங்க. உங்க பேருல ஒரு சேனல் வரப்போகுதாமே.. காத்து வாக்குல கேட்டது..
பதிலளிநீக்கு- ஜெகன்
இந்தப் படம் வந்து ஐந்து வருடம் ஆகிறதே. அப்பொழுதே கல்யாணி - பூர்னிதா நடிக்கும் செய்தியும் பத்திரிகைகளில் வந்ததே... எப்படி உங்களுக்குத் தெரியவில்லை?
பதிலளிநீக்குஇந்தக் கல்யாணி அதற்கெல்லாம் முன்பு 'சித்தி' சீரியலில் தேவதர்ஷினியின் குழந்தையாக வந்தவர். அதற்கும் முன் 1994 வாக்கில் சன் டிவியில் 3 குழந்தைகள் நடித்த ஒரு சீரியலில் கடைக்குட்டியாக நடித்தவர். அந்த சீரியல் பெயர் மறந்துவிட்டது.
நினைவு வந்து விட்டது! அவர் '94 ல் நடித்த சீரியல் பெயர் சாருலாதா ! அதில் சாருவாக 10 - 12 வயதுக் குழந்தையும் லதாவாக 6 - 7 வயது கல்யாணியும் நடித்திருந்தனர். இதற்குப் பிறகே 1998 ல் சித்தி , 2000 ல் அள்ளித்தந்த வானம் , 2002 ல் ஜெயம் , கடைசியாக 2007 ல் பிரதி ஞாயிறு காலை . இதன்படி அப்படத்தில் நடிக்கும்போது அவருக்கு 19 வயதாவது (6 + 13) இருக்குமே!
பதிலளிநீக்குChance sa illa...simply superb
பதிலளிநீக்குபேமஸ் ப்ளாக்கர் எல்லாம்
பதிலளிநீக்குரிலீசுக்கு முன்னாடியே விமர்சனம்
எழுதி படத்தை டர்ராக்கிட்டு . .
பொங்கல் வடை சாப்பிட்டுக்கிட்டுருக்காங்க . .
நீ என்னைய்யா . . .
அஞ்சு வருஷம் முன்னாடி வந்த படத்தை பத்தி ஆராய்ச்சி
பண்ணிக்கிட்டுருக்க .. ?
இது எனக்கு 90கள் ஆரம்பத்தில் வந்த வாக்குமூலம் என்ற படத்தை நினைவுப்படுத்துகிறது. 4 ஹீரொ, ஒரு ரேப்பு, கொலை என போவும்..சுபாஷ் டைரக்ஷன்..உங்களுக்கு ஞாபகம் இருக்கா?
பதிலளிநீக்குAhaaa...mokkai padathula kooda oru nalla vishayam kandu pidikira party neengathan aiya...
பதிலளிநீக்குKalyani...kalyani..kalyani ..enna oru kattai....
Pirom sandhipom seial'a partha ...ellam kaali....
Hmm...evanukku kuduthu vachurukko..?
பதிவுக்கு சம்பந்தம் இல்லாத கேள்விக்கு முதலில் மன்னிக்க!
பதிலளிநீக்குஹார்ட்ஸ்ட்ரிங்ஸ் (அல்லது) யூ ஹேவ் ஃபாலன் ஃபார் மீ என்ற கொரிய டிவி நாடகத் தொடர் யுடியூப் போன்ற இணைய வெளிகளில் கலக்கி வருவதை அறிந்திருப்பீர்கள்தானே. அந்தத் தொடரின் டிவிடி பர்மா பஜாரில் கிடைக்குமா? பர்மா பஜார் பற்றிக் கள ஆய்வு செய்தவர் என்பதால் இக்கேள்வி! (அந்தத் தொடர் சில இணையதளங்களில் ஃபெஸ்டிவல் என்ற பெயரிலும் காணப்படுவதுண்டு.)
இது போன்ற கொரிய டிவி தொடர்களுக்கு இங்கு கிடைத்துவரும் அமோக ஆதரவு பற்றி ஒரு பதிவே எழுதி, அதிலேயே என் கேள்விக்கும் பதிலை அளித்துவிட்டீர்கள் என்றால் இரட்டிப்பு மகிழ்ச்சி!
பதிலுக்கும், பின்னூட்டத்தை வெளியிட்டதற்கும் முன்கூட்டியே நன்றி!
சரவணன்
ராஜ் டிவி யில் முன்பு மைக்ரோ தொடர்கள் என்று - இருவார தினசரி தொடர்கள் வந்தன ..அதில் ஒன்று "பேச்சுலர்ஸ் பார்ட்டி" - அனுராதா ரமணன் எழுதி விடாது கருப்பு நாகா இயக்கியது..மயக்க மருந்து கொடுத்து கற்பழித்தவன் யாரென தேடும் கதை.. டிவி தொடர் அப்படியொரு கதைகளம் ! விறுவிறுப்பாவும் இருந்தது!
பதிலளிநீக்குஅண்ணே உண்மையிலேயே உங்க டேஸ்டும் என் டேஸ்டும் ஒன்னு போல இருக்குனு உங்க பழைய பதிவுகள படிக்கும் போது நினைத்தேன். ஆனால் இன்னைக்கு 100% கன்பார்ம். சான்சே இல்ல நான் இந்த படத்த T.V.ல பாத்திட்டு என்ன நினைச்சேனோ அதையே இங்க எழுதி இருக்கீங்க. ஓ மை கடவுளே....
பதிலளிநீக்கு