9 மே, 2012

நித்யானந்தா


தீவிரமாக யோசித்துப் பார்த்தால் நித்யானந்தா ஒன்றும் அவ்வளவு மோசமானவர் இல்லை என்று இப்போது தோன்றுகிறது. சில மாதங்களுக்கு முன்பு அவர் காவியும், ரஞ்சியுமாக மாட்டிக் கொண்டபோது நானும் கும்பலோடு கோவிந்தா போட்டது தவறோ என்று வருந்துகிறேன். இணைய-ஊடக வெளிகளில் தொடர்ச்சியாக இயங்குவதால் ஏற்படும் கோளாறு இது. அற-அதர்மங்களை யோக்கிய கண்ணாடி போட்டு பார்ப்பதால் ஏற்படும் விளைவு.

ஒரு நடிகையோடு உடலுறவு கொண்டார் என்பதற்காக அவர் கெட்டவர் என்று பிரச்சாரம் செய்யப்படுவது சட்டத்துக்கு எதிரானது. வயது வந்த ஒரு ஆணும், பெண்ணும் ஒத்திசைவோடு பாலியல் உறவு கொள்வதை சட்டம் மட்டுமல்ல, இயற்கையும் அனுமதிக்கிறது. அதை ரகசிய கேமிரா கொண்டு படம் பிடித்ததும், ஊடகங்களில் ஏதோ அநீதிக்கு எதிரான பிரச்சாரம் மாதிரியாக காட்டப்படுவதும் intrusion of privacy ஆக எடுத்துக்கொள்ளப்பட வேண்டியது. இந்திய ஊடகங்கள் ஸ்கூப்புக்காக ‘எதைவேண்டுமானாலும் செய்யத் தயாராகி விட்டார்கள் என்பதற்கு இந்நிகழ்வு நல்ல சான்று. இப்போது மதுரை ஆதீனமாகி விட்டதால் அடுத்த ரவுண்டு ஆடிக் கொண்டிருக்கிறது ஊடகங்கள். நித்யானந்தாவின் பெயரோ, போட்டோவோ அட்டைப்படத்திலும், போஸ்டரிலும் இருந்தால் சர்க்குலேஷன் எகிறுகிறது. இவ்வகையில் இவர் ஒரு வசூல்ராஜா.

இல்லாத கடவுளை காட்டி ஆன்மீகக் கடை விரித்தபோது நித்யானந்தாவுக்கு எதிர்ப்புகள் வந்திருந்தால் நம் மக்களின் சூடு, சொரணையை மெச்சியிருக்கலாம். இப்போதும் கூட குறிப்பிட்ட சாதியை சாராதவர் எப்படி மதுரைக்கு ஆதீனமாகலாம் என்று பொங்குகிறார்களே தவிர்த்து, அடித்தட்டு மக்களுக்கு எவ்விதத்திலும் தொடர்பில்லாத ஆன்மீக மடங்கள் இருப்பதை குறித்த எந்த ஆட்சேபணையும் மக்களுக்கு இல்லை. காசு கொடுத்து ஆதீனமாகி விட்டார் என்று அடுத்த குற்றச்சாட்டு. மற்ற மடங்களுக்கெல்லாம் என்ன யானை மாலை போட்டா அடுத்த மடாதிபதி தேர்ந்தெடுக்கப்படுகிறார்? இல்லையென்றால் மக்கள் ஓட்டு போட்டு தேர்ந்தெடுக்கிறார்களா? திரைமறைவில் ஏதேதோ நடந்து யாரையோ எதற்காகவோ சின்னவா ஆக்குகிறார்கள். நம் மட மக்கள், எந்த அற்புதமும் நிகழ்த்திக் காட்ட துப்பில்லாத அவரது காலில் விழுந்து வணங்குகிறார்கள். அடுத்த மடாதிபதி தேர்ந்தெடுக்கப் படுவதில் என்னென்ன அயோக்கியத் தனங்கள் நடக்கும் என்பதை வெட்டவெளிச்சமாக வெளிக்காட்டிய நித்யானந்தாவுக்கு நாம் நன்றிக்கடன் பட்டவர்கள். என்னவோ இதற்கு முன்பாக இருந்த மதுரை ஆதீனம் பெரிய யோக்கியர் மாதிரியும், ஆதீனத்தின் பெருமையை நித்யானந்தாதான் குலைக்கப் போகிறார் என்பது மாதிரியும் பேசுவது எத்தகைய அறிவீனம்?

எழுபத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாக மிகத்தீவிரமான பகுத்தறிவுப் பிரச்சாரங்களால் சுலபமாக மாற்றிவிட முடியாத மக்களின் கடவுள்-ஆன்மீகம்-சாமியார்கள் குறித்த மூட மனப்போக்கினில் மிகக்குறுகிய காலத்தில் பெரும் எதிர்மாற்றம் ஏற்படுத்தியவர் என்கிற வகையில் நித்யானந்தாவை பாராட்ட பெரியாரிஸ்டுகள் முன்வரவேண்டும். ஊருக்கு ஒரு நித்யானந்தா உருவாவதின் மூலமாகவே பெரும்பான்மை மக்கள் நாத்திகம் நோக்கி இயல்பாகவே நகரத் தொடங்குவார்கள். கடவுளுக்கும், சாமியாருக்கும் வீணாக்கும் தங்கள் கடின உழைப்பினையும், சிந்தனையையும் உருப்படியான விஷயங்களுக்கு பயன்படுத்த ஆரம்பிப்பார்கள். சுலபமாக தகர்த்தெறிந்துவிட முடியாத இந்துத்துவ சனாதன கோபுரத்தை இடியாகப் பாய்ந்து கட்டுடைப்பவர் என்கிற வகையில் நித்யானந்தாவை நாம் பாசிட்டிவ்வாகவும் பார்க்கலாமே... ஒய் நாட்?

30 கருத்துகள்:

  1. நித்தியானந்தன் - ரஞ்சிதா ஆபாசக் காட்சிகள்: சட்டம் என்ன சொல்கிறது?
    http://www.lawyersundar.com/2010/03/blog-post_10.html

    பதிலளிநீக்கு
  2. நித்யானந்தா ஒரு பெண்ணோடு சல்லாபித்ததில் எந்த ஒரு தவறுமில்லை... அவர் பின்பற்றும் சனாதான தருமத்தின் படி இல்லறத்தானாக இருப்பது ஒன்றும் தவறும் இல்லை...

    இப்படி இருக்கையில் தன்னை ஒரு பிரம்மசாரி என்று அத்தனை பேரையும் நம்ப வைத்ததும்.....ஒரு பெண்ணோடு சல்லாபித்த பின்...அதை மறைக்க ஆயிரம் பொய்கள் கூறியதும்தான்....குற்றமாக பார்க்கப்படுகிறது...!

    நித்தி.. கூலா சொல்லிட்டுப் போய்டலாம்...இல்லறத்துல ஈடுபடுறதுல எந்த தவறும் இல்லைன்னு...

    அப்டி சொல்லும் போது நீங்க சொல்றமாதிரி பாராட்டுறதுல எந்த ஒரு தவறும் இல்லை.

    பதிலளிநீக்கு
  3. அவர் நடிகையோடு கட்டிப் புரண்டார் என்பது பிரச்சனையே அல்ல; ஆனால் தனது ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு பிரம்மச்சரியத்தை வாய்கிழிய போதித்து விட்டு அதற்கு நேர் எதிராக அவர் அப்படி நடந்து கொண்டார் என்பது தான் பிரச்சனை. இது ஒருவகையான நம்பிக்கை மோசடி. அவர் செய்தது ஃபோர்ஜரி, கௌண்டர்ஃபீட் செயல் என தாராளமாய்ச் சொல்லலாம். மற்றபடி அவர் ஒரு சிறந்த மக்கள் தொடர்பாளர் என்பதில் மாற்றுக் கருத்தே இல்லை.

    பதிலளிநீக்கு
  4. முத‌ல் ப‌த்தியும் க‌டைசி ப‌த்தியும் முர‌ணாக‌ தோன்றுவ‌து என‌க்கு ம‌ட்டும்தானா? போல‌வே ப‌திவு மொக்கையா சீரிய‌ஸா என்று கணிக்க‌ முடியாத‌ப‌டியும் இருக்கிற‌து.. நித்தியை ப‌ற்றிய‌ உங்க‌ள் நிலையில் ஒரு சின்ன‌ மாற்ற‌ம் வ‌ருவ‌த‌ற்கான‌ அறிகுறியை அதிஷா த‌ம் கேப்பில் சொல்லியிருப்பான் என‌ யூகிக்கிறேன். உட‌னே ப‌திவு போட்டாச்சு :)))

    பதிலளிநீக்கு
  5. //சுலபமாக தகர்த்தெறிந்துவிட முடியாத இந்துத்துவ சனாதன கோபுரத்தை இடியாகப் பாய்ந்து கட்டுடைப்பவர் என்கிற வகையில் நித்யானந்தாவை நாம் பாசிட்டிவ்வாகவும் பார்க்கலாமே// niraiya comedyum parkalam, naama nithiku oru sangam arambikkalam

    பதிலளிநீக்கு
  6. பெயரில்லா2:21 PM, மே 09, 2012

    // மிகத்தீவிரமான பகுத்தறிவுப் பிரச்சாரங்களால் சுலபமாக மாற்றிவிட முடியாத மக்களின் கடவுள்-ஆன்மீகம்-சாமியார்கள் குறித்த மூட மனப்போக்கினில் மிகக்குறுகிய காலத்தில் பெரும் எதிர்மாற்றம் ஏற்படுத்தியவர் // அதே அதே... சங்கராச்சாரி, நித்தி வரிசையில் அட்டகாசமான ஆட்கள் தேவைப்படுகிறார்கள்..சமீப காலமாக 'ஆசிரமம்', 'சாமியார்' 'பஜனை; போன்ற வார்த்தைகளின் அர்த்தமே வெகுவாக மாறி விட்டிருக்கிறது.. இது போன்ற தொடர் சம்பவங்கள் மற்றும் ஹீரோக்களால் நிச்சயம் சமூகத்தில் ஒரு ஆத்திக ஒவ்வாமை வர வாய்ப்புள்ளது. .. இவர் போன்றவர்களை விட காஞ்சிபுரம் தேவநாதனின் சேவை மிகப் பெரியது.. பெரியாரால் கோவிலைத துறந்தவர்களுக்கு இணையாக இவராலும் துறந்திருக்கலாம்.. ஊருக்கு ஒரு தேவநாதன், மாவட்டத்திற்கு ஒரு நித்தி ... நமது உடனடி தேவை இதுதான். இப்பெருமக்களின் சாதனைகள் மக்கள் மனதில் நிலைத்து நிற்க திரைப்படங்கள், மீடியா, ப்லோகர்கள்... எல்லோரும் இவர் புகழ்தன்னை பரப்பிக்க் கொண்டே இருக்க வேண்டும்..

    பதிலளிநீக்கு
  7. நித்தியானந்தா யாரோடு வேண்டுமானாலும் படுத்துக்கொள்ளட்டும். அது அவர் உரிமை. ஆனால் '' நான் பிரமச்சர்யத்தை கடை பிடிக்கிறேன் ; நான் சாமியார் என்று கூறிகொண்டு இத்தகைய செயல்களில் ஈடுப்பட்டதுதான் அவர் செய்த குற்றம்.

    இப்பவும் ஒன்றும் கெட்டுப்போய் விடவில்லை. '' நான் பிரமச்சர்யத்தை கடைபிடிக்க முயற்சி செய்தேன். ஆனால் என்னால் மனக்கட்டுப்ப்ட்டோடு இருக்கமுடியவில்லை. காமத்தை கட்டுப்படுத்தமுடியவில்லை. மீண்டும் மனதை அடக்க முயற்சி செய்வேன்'' என்று மட்டும் கூறுவாரேயானால் நான் கூட அவருக்கு சீடராக போய் விடுவேன்.

    பதிலளிநீக்கு
  8. பெயரில்லா3:37 PM, மே 09, 2012

    இதில் என்ன நடக்குமென்றால் மக்கள் சாமியார் என்றால் இப்படித்தான் இருப்பார் என்று உவமானப்படுத்திக்கொள்வார்கள்.அதனால் நம்மைப் போன்றவர்கள் சுலபமாக சாமியார் ஆகி சல்லாபம் அனுபவிக்க வாய்ப்பு கிடைக்கப் போகிறது.   சட்டத்தாலும் ஒன்றும் செய்ய முடியாமல் போகும். இதுதான் சனாதன தர்மம் என்றால் நீதி மன்றம் என்ன செய்து விடும்?

    பதிலளிநீக்கு
  9. மனிதனின் போதாமையை, பலவீனத்தை முதலாக வைத்துக் கல்லாக் கட்டுவதுதான் கடவுட் பிரச்சாரம். அப்படிப்பட்ட பொய்ப்பேச்சு மாயாவிகள் பிரம்மச்சரியம் போதித்தாலும் நடிகையோடு படுத்தாலும் அல்லது இல்லத்தரசிகளோடு படுத்தாலும் கூட அது அவர்கள் கொண்ட கொள்கையின் லாஜிக்குக்கு உள்ளாகத்தான் வருகிறது. இது புரியாதவர்கள்தான் கூப்பாடு போடுகிறார்கள்.

    ஜெயேந்திரருக்கு நீங்கள் இப்படி ஒரு பதிவு போடவில்லை என்று நினைக்கிறேன். அதற்கு எனது கண்டணத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். அப்படியே தேவநாதனை புறக்கணிப்பதும் சரியென்று படவில்லை. பார்ப்பனர் அல்லாதவரை மட்டும்தான் புகழ்வது என்று ஏதேனும் கொள்கை வைத்திருந்தால் அதற்கும் என் கண்டணம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தலைவா எங்க இருந்தாலும் உன் குரல் மட்டும் தனியா கேக்குதே அது எப்படி

      நீக்கு
  10. அப்ப தமிழ் நாட்டுல "நல்லவனுங்க" எவனும் கல்யாணம் பண்ணிக்கிட்டு ஒரு பொண்ணோடு படுக்கணும்னு அவசியம் இல்லை , நமக்கு பிடிச்சிருந்தா யார்கூட வேணும்னாலும் எப்ப வேணும்னாலும் படுக்கலாம் ஒண்ணும் தப்பில்லைன்னு சொல்ல வறீங்க ...

    அதுசரி சாமியார் அப்படினா பிரமாச்சாரியம்தானே அடையாளம்.. அதனால்தானே ஊர் அவரை நம்பியது ... ஆனால் ஊருக்கு பிரமாச்சாரியாக இருந்துவிட்டு நாலு சுவத்துக்குள் வேற்று ஆணின் மனைவியை அவள் விரும்பத்துடன் புணர்வது எப்பொழுது இருந்து பிரமாச்சாரியம் என்று ஆனது?

    பதிலளிநீக்கு
  11. இது சம்பந்தமாக ஈராண்டுகளுக்கு முன்னமேயே இட்ட எனது இப்பதிவை பார்க்க http://dondu.blogspot.in/2010/03/blog-post_04.html

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    பதிலளிநீக்கு
  12. பெயரில்லா4:42 PM, மே 09, 2012

    One of you best article.
    Superb lines,
    இல்லாத கடவுளை காட்டி ஆன்மீகக் கடை விரித்தபோது நித்யானந்தாவுக்கு எதிர்ப்புகள் வந்திருந்தால் நம் மக்களின் சூடு, சொரணையை மெச்சியிருக்கலாம்.

    Also the LAST-PARA is ultimate.

    பதிலளிநீக்கு
  13. பெயரில்லா9:24 PM, மே 09, 2012

    "எழுபத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாக மிகத்தீவிரமான பகுத்தறிவுப் பிரச்சாரங்களால் சுலபமாக மாற்றிவிட முடியாத மக்களின் கடவுள்-ஆன்மீகம்-சாமியார்கள் குறித்த மூட மனப்போக்கினில் மிகக்குறுகிய காலத்தில் பெரும் எதிர்மாற்றம் ஏற்படுத்தியவர் என்கிற வகையில் நித்யானந்தாவை பாராட்ட பெரியாரிஸ்டுகள் முன்வரவேண்டும்."

    நீங்கள் சொல்வது கடவுள் மறுப்பு பிரசாரம் என்று நினைக்கிறேன். அது போன்ற பிரசாரங்களாலெல்லாம் மக்களின் கடவுள் நம்பிக்கைகள அழித்துவிட முடியாது. அதுமட்டுமல்லாமல் கடவுள் மறுப்பு பிரசாரகர்கள் பெரும்பாலோர் இந்த ராஜேந்திரனைவிட டுபாக்கூர்கள் என்பதால் அவர்களால் பெரிய மாற்றம் ஏற்படுத்திவிட முடியாது.

    மேலும் இந்த ராஜேந்திரன் இந்து சனாதன தர்மத்தை அழிக்க வந்த முதல் ஜந்து இல்லை. காலம் காலமாக பற்பல பேர் இருந்துள்ளார்கள். அவர்களாலோ உக்கிரமான மாற்று மத படையெடுப்புகளாலோ அழிந்துபோகாத இந்து சனாதன தர்மம் வெறும் ராஜேந்திரன் என்ற மனிதனாலோ அவன் பின்னால் போகும் மக்கள் கூட்டத்தால் அழிந்துவிடாது.

    "இடியாக வந்தவர்" என்ற பிரயோகம் நகைப்பை வரவழைத்தது.

    அன்புடன்
    பொன்.முத்துக்குமார்

    பதிலளிநீக்கு
  14. பெயரில்லா11:41 PM, மே 09, 2012

    இப்படியும் சொல்லலாம்
    "கடவுளுக்கும், சாமியாருக்கும்,கடவுள் இல்லை என்பதற்கும், சாமியார் போலி என்பதற்கும் வீணாக்கும் தங்கள் கடின உழைப்பினையும், சிந்தனையையும்"

    பதிலளிநீக்கு
  15. பெரியாறு அட பெரியார் வாய் கிழிய பேசிபுட்டு, ஒரு பேத்தி வயதுடைய பெண்ணை கல்யாணம் பண்ணலையா. அத நீங்க கொண்டாடலையா, அது போல இதையும் கொண்டாடுவோம்.

    பதிலளிநீக்கு
  16. ஒருவனுக்கு ஒருத்தி என்றும் வாழும் நம் "கலைஞர்" தமிழனாக வாழ்வதில் இருந்தே தமிழ் கலாசாரம் எதையும் தாங்கும் என்பது சொல்லி தெரிய வேண்டியது இல்லை.

    பதிலளிநீக்கு
  17. //தீவிரமாக யோசித்துப் பார்த்தால் நித்யானந்தா ஒன்றும் அவ்வளவு மோசமானவர் இல்லை //

    இந்தமாதிரி.. புன்னியவான்களின் தயவால்.. மக்கள் எல்லோரும் நாத்திகதுக்கு மாறனும் நீங்க ஏன் நினைக்கிறீங்க? அதனால இந்த சமூகத்துக்கு என்ன நன்மை?

    இந்த மாதிரி திருட்டு பசங்க உருவாகாம இருப்பாங்க னு பதில் சொல்லவேணாம்..

    நாத்திகம் ங்கறது இன்னொரு குரூப் அவ்வளவுதான்.. மதத்தை திணிப்பதும் நாத்திகத்தை திணிப்பதும் ஒன்றுதான்...

    பதிலளிநீக்கு
  18. கடவுள் இல்லை..கடவுளை கற்பிப்பவன் முட்டாள் என்று பெரியாரிசம் பேசினால் மக்களுக்கு எதுவும் புரியப்போவதில்லை. இதுபோல் நித்தியானந்தாக்களும் பிரேமானந்தாக்களும் ஜெயேந்திரர்களும் உருவாகி விஸ்வரூபம் எடுப்பதின் மூலம் நாத்திக சிந்தனையை மிக எளிதாக மக்கள் மனதில் விதைத்துவிடலாம். இது முள்ளை முள்ளால் எடுக்கும் கலை.நீங்கள் சொல்ல வந்தது எத்தனைப் பேருக்கு புரிந்தது என்று தெரியவில்லை யுவா...உங்கள் சிந்தனைக்கும் எழுத்துக்கும் என் ராயல் சல்யுட்.

    பதிலளிநீக்கு
  19. சிந்திப்பவன்7:51 AM, மே 10, 2012

    <>

    சுலபமாக தகர்த்தெறிந்துவிட முடியாத தி.மு.க எனும் தீய சக்தியை இடியாகப் பாய்ந்து கட்டுடைப்பவர் என்கிற வகையில் கருணாவையும் நாம் பாசிட்டிவ்வாகவும் பார்க்கலாமே... ஒய் நாட்?

    (மன்னிக்கவும்!
    எவ்வளவு முயன்றும்
    எனக்கு வெள்ளரிக்காயை, உங்களையோ அல்லது உங்கள் தலிவரையோ தொடாமல் சாப்பிட முடியவில்லை. ;-) )

    பதிலளிநீக்கு
  20. பெயரில்லா8:06 AM, மே 10, 2012

    100% true statement.

    பதிலளிநீக்கு
  21. // நாத்திகம் ங்கறது இன்னொரு குரூப் அவ்வளவுதான்.. மதத்தை திணிப்பதும் நாத்திகத்தை திணிப்பதும் ஒன்றுதான்... //

    Fact Fact Fact Fact............

    பதிலளிநீக்கு
  22. பெயரில்லா12:21 PM, மே 10, 2012

    இந்து மதம் என்கிற பேனரில் என்ன தப்பு வேண்டுமானாலும் செய்யலாம் அதற்கு நாலு பேர் விளக்குப் பிடிக்கத் எப்போதும் தயாராக இருக்கிறார்கள் என்று இங்கு வரும்.. "அவன் செய்யவில்லையா.. இவன் இப்படியில்லையா" என்கிற கருத்துக்கள் நமக்குப் போதிக்கின்றன.

    ஆகையால், இனி தவறுகள் செய்வீர்....

    வாழ்க இந்து தர்மம்...!!!

    பதிலளிநீக்கு
  23. இதையும் வாசித்துப் பார்க்கலாம்..

    http://www.thangameen.com/Archieves/ContentDetails.aspx?tid=419&iid=39

    பதிலளிநீக்கு
  24. பெயரில்லா2:44 AM, மே 12, 2012

    //அற-அதர்மங்களை யோக்கிய கண்ணாடி போட்டு பார்ப்பதால் ஏற்படும் விளைவு.//

    ஷோக்கா சொன்ன மாமே

    பதிலளிநீக்கு
  25. மாவட்டத்துக்கு ஒரு தேவநாதன், நித்தி...... வாழ்க உங்கள் சமூக அக்கறை! உங்களைப் போன்றவர்களின் கண்மூடித்தனமான துவேஷத்தை வெளிக் கொணர்ந்ததற்காகவும் நித்தியைப் பாராட்டலாம் அல்லவா? உங்கள் துவேஷம் வெற்றி பெறுவதற்காக எல்லா மாவட்டங்களும் சீரழிய வேண்டும் என்று விரும்புவதுதான் பகுத்தறிவா?
    ஊருக்கு ஒரு நித்தி வந்தா மக்கள் நாத்திகத்தை நோக்கி நகருவாங்க. சரி, பகுத்தறிவுவாதிகள் அதுக்கு மேல டுபாக்கூரா இருக்காங்களே, அப்புறம் எங்க நகருவாங்க? மறுபடி நித்தி கிட்டயா? அப்ப சாமியார்களெல்லாம் சேர்ந்து டுபாக்கூர் பகுத்தறிவுவாதிகளுக்குப் பாராட்டு விழா நடத்தணுமா?

    பதிலளிநீக்கு
  26. மாவட்டத்துக்கு ஒரு தேவநாதன், நித்தி...... வாழ்க உங்கள் சமூக அக்கறை! உங்களைப் போன்றவர்களின் கண்மூடித்தனமான துவேஷத்தை வெளிக் கொணர்ந்ததற்காகவும் நித்தியைப் பாராட்டலாம் அல்லவா? உங்கள் துவேஷம் வெற்றி பெறுவதற்காக எல்லா மாவட்டங்களும் சீரழிய வேண்டும் என்று விரும்புவதுதான் பகுத்தறிவா?
    ஊருக்கு ஒரு நித்தி வந்தா மக்கள் நாஸ்திகத்தை நோக்கி நகர்ந்துடுவாங்க. சரி, பகுத்தறிவுவாதிகள் நித்தியவிட டுபாக்கூரா இருக்காங்களே, அப்புறம் எங்க நகருவாங்க? மறுபடி நித்திகிட்டயா? அப்ப சாமியார்கள் எல்லாரும் சேர்ந்து டுபாக்கூர் பகுத்தறிவுவாதிகளுக்குப் பாராட்டு விழா நடத்துவாங்களா?

    பதிலளிநீக்கு
  27. Hi Yuva,

    Linking this old blog post to ur fb, has got any connection with today's viral video ???

    பதிலளிநீக்கு