25 மே, 2012

மூங்கில் இலை காடுகளே

மூங்கில் இலை காடுகளே
முத்து மழை மேகங்களே
பூங்குருவி கூட்டங்களே கேளுங்கள்

இரவு பத்து மணிக்கு மேலே எஃப்.எம். கேட்பவர்கள் நிச்சயம் இந்தப் பாடலை கேட்டிருப்பீர்கள். ‘நல்ல பாட்டாச்சே, ஆனா என்ன படம்னு தெரியலை’ என்றும் நினைத்திருப்பீர்கள். முப்பது வயதை கடந்து காதோர நரை ஆரம்பித்திருப்பவர்களுக்கு இந்தப் படமும் தெரியும். இந்தப் பாடலுக்கு நடித்த நடிகரையும் தெரியும்.

எண்பதுகளில் வந்த லோ-பட்ஜெட் படங்களில், அதுவும் விசு படமாக இருந்தால் நிச்சயமாக திலீப் இருப்பார். காதலனாகவும், பணக்கார இளைஞனாகவும், பாந்தமான புருஷனாகவும்.. பெரிய வெரைட்டி ஏதுமில்லாத பாத்திரங்களில் நடித்தவர். சிவந்த நிறம். பிரவுன் கண்கள். மீசையை அழகாக திருத்தியிருப்பார். இவரது ஹேர்ஸ்டைல் சிறப்பானது. உடைகள் நாகரிகமாக இருக்கும்.

மாப்பிள்ளையில் சூப்பர் ஸ்டாருக்கு மச்சானாக காமெடியில் கலக்கினார். அதற்குப் பிறகு திடீரென்று காணோம். ஏதோ பிஸினஸ் செய்துக் கொண்டிருந்தார் என்று அவ்வப்போது சினிமா துணுக்குகளில் வாசித்திருக்கிறேன். கேஸ் ஏஜென்ஸி எடுத்திருப்பதாகவும், அதில் சினிமாவை விட அதிகம் சம்பாதிப்பதாகவும் செய்திகள் வரும்.

இரண்டு, மூன்று மாதங்களுக்கு முன்னால் தினகரன் வசந்தத்தில் இவரது பேட்டி வந்திருந்தது. படத்தைப் பார்த்ததுமே ஆள் அடையாளம் தெரியாத அளவுக்கு பெருத்துப் போய் இருந்தார். அழகான அவரது ஹேர்ஸ்டைல் மிஸ்ஸிங். புருவம் கூட நரைத்திருந்தது. வடநாட்டு முதியவர் மாதிரியான தோற்றத்தில் இருந்தார். திமிர்த்தனமாக எதிர்த்துப் பேசும் பொண்டாட்டியை பளாரென்று அறையும் அந்த கோபக்கார இளைஞனை காணவே காணோம்.

உடல் உபாதையால் பெரும் சிரமத்தில் இருப்பதாக அப்பேட்டியில் குறிப்பிட்டிருந்தார். சூப்பர் ஸ்டார் ரஜினியின் நெருங்கிய நண்பர் என்பதும் அவர் பேச்சில் தெரிந்தது. மீண்டும் திரையுலகில் நுழைந்து செகண்ட் இன்னிங்ஸ் ஆட தயாராக இருப்பதாக நம்பிக்கையோடு சொல்லியிருந்தார்.

இன்று அதே தினகரனின் இணையத்தளத்தில் அவரது மரணச் செய்தியை வாசித்தபோது இனம்புரியாத துன்பமும், பீதியும் ஏற்படுகிறது. நம் கண்ணுக்கெதிரே மின்னி, மறைந்த நட்சத்திரங்களின் வாழ்வை ஏதோ ஓர் ஆர்வத்தில் தெரிந்து வைத்துக் கொள்கிறோம். அவர்களது ஏற்றம் நமக்கு மகிழ்ச்சியை அளித்ததோ இல்லையோ, இறக்கம் வருத்தத்தை நிச்சயம் தருகிறது. மரணம் கடுமையான துன்பத்தை ஏற்படுத்துகிறது. மரணம் குறித்த நியாயமான அச்சம், இதுபோன்ற மரணங்களை கேள்விப்படும்போது பன்மடங்கு அதிகரிக்கிறது.

முன்பாக பாண்டியன், முரளி போன்றவர்களின் மரணம் இம்மாதிரியான பீதியை கடுமையாக ஏற்படுத்தியது. போனவாரம் கூட யதேச்சையாக ஏதோ ஒரு டீக்கடையில் ‘துள்ளி எழுந்தது காற்று, சின்ன குயிலிசை கேட்டு’ கேட்டபோது, என்னையறியாமலேயே சிலதுளி கண்ணீர் சிந்தினேன். நாம் பார்த்து, பழகியிராதவர்களுக்கு அழுகிறோமென்றால் அவர்கள் நம்முடைய சிறுவயது நினைவடுக்குகளில் புதைந்துப் போனவர்கள் என்பதே காரணமாக இருக்கக்கூடும். நம்முடைய அழுகை அவர்களுக்காகவா அல்லது தொலைந்துப்போன நம் பால்யத்துக்காகவா என்பதை தெளிவாக வரையறுக்க முடியவில்லை.

அடுத்தமுறை எங்காவது ‘மூங்கில் இலை காடுகளே’ கேட்கும்போதும் இதேபோல என் கண்களில் ஈரம் கசியும் என்பது நிச்சயம்.

22 கருத்துகள்:

  1. பெயரில்லா1:30 PM, மே 25, 2012

    Agreed. RIP Dileep

    பதிலளிநீக்கு
  2. அருமை!!!வரிகள் அனைத்தும் பூச்சரமாய்....

    பதிலளிநீக்கு
  3. வருத்தமாக உள்ளது..

    ****

    வரிகள் அருமை

    பதிலளிநீக்கு
  4. " வாழ்வை ஏதோ ஓர் ஆர்வத்தில் தெரிந்து வைத்துக் கொள்கிறோம். அவர்களது ஏற்றம் நமக்கு மகிழ்ச்சியை அளித்ததோ இல்லையோ, இறக்கம் வருத்தத்தை நிச்சயம் தருகிறது."

    "நம்முடைய அழுகை அவர்களுக்காகவா அல்லது தொலைந்துப்போன நம் பால்யத்துக்காகவா"

    செய்தியை உங்கள் பதிவின் மூலன் தெரிந்து கொண்டேன்..
    காதோரம் நரை தொடாத பின் இருபதில் இருக்கும் எனக்கும் மனம் கனத்து போனது

    உங்கள் எழுத்தில் அழுத்தமும் உயிர்ப்பும் இருக்கிறது...
    பாராட்டும் இடம் இது அல்ல, அழுந்த பதிந்து இருகிறீர்கள் என்பதை மட்டும் தெரிவித்து கொள்கிறேன்!

    பதிலளிநீக்கு
  5. பெயரில்லா3:03 PM, மே 25, 2012

    I'v always liked him. He was so graceful and was very good looking. So shocked to hear this. May his soul rest in peace. He will always be remembered!

    பதிலளிநீக்கு
  6. RIP :-(

    //நம்முடைய அழுகை அவர்களுக்காகவா அல்லது தொலைந்துப்போன நம் பால்யத்துக்காகவா என்பதை தெளிவாக வரையறுக்க முடியவில்லை./// Excellent...

    பதிலளிநீக்கு
  7. பெண்மணி அவள் கண்மணி படத்தில் இவருடைய நடிப்பு சிறப்பாக இருக்கும்...

    என் செய்வது... காலத்திற்க்கு முன் அனைவரும் ஒன்று என்பதை உணர்த்துகின்றது.... :( RIP திலீப்

    பதிலளிநீக்கு
  8. நடிகர் திலீப்பின் மரணம் ஏற்படுத்திய பீதியைவிட தங்களின் எண்ணங்களைத் தாங்கி வரும் எழுத்துகள் படிப்பவர் அனைவரையும் கவர்ந்திழுக்கிறது. காரணம் யதார்த்தம். யதார்த்தமான எழுத்தில் எங்கள் அனைவரையும் துக்கத்தில் ஆழ்த்தும் வண்ணம் அமைந்திருந்தது இந்தப் பதிவு... இறுதியாக குறிப்பிட்ட நம்முடைய அழுகை அவர்களுக்காகவா அல்லது தொலைந்துப்போன நம் பால்யத்துக்காகவா என்பதை தெளிவாக வரையறுக்க முடியவில்லை இதுதான் உண்மையிலேயே கண்ணீர் வரவழைத்து...!! மனதுக்கு பிடித்துப் போன ஒருவர்.. அல்லது ஒன்று தொலைந்துபோனபோது ஏற்படும் துக்கம்.. அது சொல்லொனாத துக்கம்.!!

    பதிலளிநீக்கு
  9. பெயரில்லா7:06 PM, மே 25, 2012

    //முப்பது வயதை கடந்து காதோர நரை ஆரம்பித்திருப்பவர்களுக்கு இந்தப் படமும் தெரியும். இந்தப் பாடலுக்கு நடித்த நடிகரையும் தெரியும்.//

    இன்று செய்தி படித்தவுடன் வருத்தமாக இருந்தது. மணல் கயிறு போன்ற விசுவின் நிறைய படங்களில் நடித்திருந்தார்.

    - Jagan

    பதிலளிநீக்கு
  10. உங்களின் வரிகளை படித்த போது என் கண்ணில் ஒரு துளி நீர்....ராஜ் டிவி அடிக்கடி விசுவின் படங்களை பார்க்கும் போது அதில் திலீப் உடைய நடிப்பை பார்த்திருக்கிறேன். பெரிதாக மனதை impress பண்ணாவிட்டாலும் அவர் ஒரு நல்ல நடிகர்.....புகழின் சரிவும் வறுமையும் நடிகர்களை ஒரு பாடு படுத்துகிறது....

    பதிலளிநீக்கு
  11. Thilip.... emmil oruvar.. pal a thiraipadankalil kanavai sumakkum naduththara varkaththai pitathipaliththavar... kanavu niraiveraamaleye poivittaar... valikkirathu

    பதிலளிநீக்கு
  12. //பழகியிராதவர்களுக்கு அழுகிறோமென்றால் அவர்கள் நம்முடைய சிறுவயது நினைவடுக்குகளில் புதைந்துப் போனவர்கள் என்பதே காரணமாக இருக்கக்கூடும்.//

    சபாஷ், அருமையான வரிகள். இணையத்தில் அவருடைய படங்களை தேடிப் பார்க்கவேண்டும்

    பதிலளிநீக்கு
  13. http://www.youtube.com/watch?v=X3Tid1jFIao

    RIP Dileep...

    பதிலளிநீக்கு
  14. சொல்ல துடிக்குது மனசு - படத்திலும் அப்பாவியாக அவர் நடிப்பு இன்னும் நினைவில் - கடைசியாக சில ஆண்டுகளுக்கு முன்பு விஜய் டிவி தொடர் ஒன்றில் வந்தார்..

    பதிலளிநீக்கு
  15. பெயரில்லா10:39 AM, மே 26, 2012

    எல்​லோரு​டைய எல்லா கருத்துக்களுடனும் அனுபவங்களுடனும் எல்லா சமயத்திலும் நம்மால் ஒத்துப் ​போக முடியாது. அ​தைப் ​போல​வே பல விசயங்களில் பலரு​டைய கருத்துக்களுடனும் அனுபவங்களுடனும் ஒத்துப் ​போவ​தை தவிர்க்க முடியாது. உங்களு​டைய திலிப்புக்கான இரங்கல் கட்டு​ரையின் அனுபவங்கள் என் மனநி​லை​யோடு ஒத்துப்​போவ​தை இங்கு பதிவு ​செய்ய ​வேண்டும் என்று ​தோன்றியது.

    பதிலளிநீக்கு
  16. திலீப் மரணம். நீண்ட நாட்களுக்குப்பிறகு அவரைப் பற்றிய செய்தி ஒன்றை இங்கே வாசித்தேன் அதுவும் மரணச்செய்தி.. அற்புதமான நடிகர். சம்சாரம் அது மின்சாரம்... பெரிய மோட்டர் பைஃக்

    பதிலளிநீக்கு
  17. சிந்திப்பவன்8:37 PM, மே 26, 2012

    அருமையான அஞ்சலி!
    ஏதோ அவருக்கு(திலீப்)சரியான பிரேக் கிடைக்கவில்லை..
    அவர் ஆன்மா சாந்தி அடைய
    பிரார்த்திக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  18. பெயரில்லா9:18 AM, மே 28, 2012

    hey....u r absolutely correct.as cinema plays a major role in our lives,v grow with songs and dialogues of the films.so when ever,v hear un timely death of actors,v feel void at that moment,and feel depressed.any how may his soul rest in peace.

    பதிலளிநீக்கு
  19. பிழைதிருத்தி1:45 AM, ஜூன் 03, 2012

    // நம்முடைய அழுகை அவர்களுக்காகவா அல்லது தொலைந்துப்போன நம் பால்யத்துக்காகவா என்பதை தெளிவாக வரையறுக்க முடியவில்லை// இழந்த பால்யத்தின் ஞாபக அடுக்குகள்//

    முற்றிலும் சரியே தொழ்ஹர்

    பதிலளிநீக்கு
  20. அருமையான இடுகை, லக்கி ...

    //முன்பாக பாண்டியன், முரளி போன்றவர்களின் மரணம் இம்மாதிரியான பீதியை கடுமையாக ஏற்படுத்தியது. போனவாரம் கூட யதேச்சையாக ஏதோ ஒரு டீக்கடையில் ‘துள்ளி எழுந்தது காற்று, சின்ன குயிலிசை கேட்டு’ கேட்டபோது, என்னையறியாமலேயே சிலதுளி கண்ணீர் சிந்தினேன். நாம் பார்த்து, பழகியிராதவர்களுக்கு அழுகிறோமென்றால் அவர்கள் நம்முடைய சிறுவயது நினைவடுக்குகளில் புதைந்துப் போனவர்கள் என்பதே காரணமாக இருக்கக்கூடும். நம்முடைய அழுகை அவர்களுக்காகவா அல்லது தொலைந்துப்போன நம் பால்யத்துக்காகவா என்பதை தெளிவாக வரையறுக்க முடியவில்லை.
    அடுத்தமுறை எங்காவது ‘மூங்கில் இலை காடுகளே’ கேட்கும்போதும் இதேபோல என் கண்களில் ஈரம் கசியும் என்பது நிச்சயம்.
    //
    எனது எண்ண ஓட்டத்தை அப்படியே பிரதிபலித்தது இவ்வரிகள்... நாஸ்டால்ஜியா என்பது விவரிக்க முடியாத ஒரு பர்ஸனலான உணர்வு, அவரவருக்கு !!!

    பதிலளிநீக்கு
  21. Kadaisi 4 varigal romba azhagu. Guess poured out directly from your heart. RIP Dileep. He did a commedable job in Varumayin Niram Sivappu. Good actor.

    பதிலளிநீக்கு