25 நவம்பர், 2010

2011 – கவுண்ட் டவுன் ஸ்டார்ட்டிங்

இன்னும் சரியாக ஆறு மாதங்கள் கூட இல்லை தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு. பொதுவாக ஒரு வருடத்துக்கு முன்பாகவே ஓரளவு யார் யார் எந்த எந்த கூட்டணி என்று ஒரு தெளிவு தெரியும். 2006ஆம் ஆண்டின் வைகோவின் இறுதி நிமிட தாவல், பாமகவின் கிளைக்கு கிளை தாவும் ஆட்டமெல்லாம் இதில் சேர்த்தியில்லை. அதுபோலவே வேட்புமனுவுக்கு இரண்டு நாளுக்கு முன்பாக ஒரு சீட்டு, ரெண்டு சீட்டுக்காக ஏதோ ஒரு வாய்ப்பு கிடைத்த கூட்டணியில் சேரும் சாதிக் கட்சிகளையும் இந்த பட்டியலில் சேர்க்கவில்லை. நாம் சொல்ல வருவது முக்கியப் பங்காளி (Major Partner) கட்சிகள்.

'கூட்டணி' என்ற சொல் தமிழக அரசியலில் 67ல் இருந்தே முக்கியத்துவம் பெறுகிறது. அறிஞர் அண்ணாவின் வெற்றிக்கு அவர் அதிரிபுதிரியாக அமைத்த ஒரு கூட்டணியும் முக்கியக் காரணியாக இருந்தது. 72ல் காங்கிரஸ் உடைந்த நிலையில் இ.காங்கிரஸின் நிபந்தனையில்லா (அதாவது இதயத்தில் மட்டும் கூட்டணி) கூட்டணி, கலைஞருக்கு அமோக வெற்றியைத் தந்தது. இன்றுவரை அசுரபலத்தோடு கூடிய ஆளுங்கட்சி என்ற விதத்தில் அதுதான் சாதனை. 77ல் உல்டா. 80ல் யூ-டர்ன். 84லும் இந்திரா அனுதாப அலை, எம்.ஜி.ஆர். படுத்துக்கொண்டே ஜெயிக்க உதவியது.

89ல் மட்டுமே தேர்தல் வெற்றியில் கூட்டணிக்கு பெரிய பங்கில்லை. 91ல் ராஜீவ், சொல்லவே வேண்டாம். 96ல் த.மா.கா.வின் உதயம், உதயசூரியனை மலரச் செய்தது. 2001ல் அதிமுகவின் மெகா கூட்டணி புதிய 'கூட்டணி' ட்ரெண்டினை (முன்பே 98 பாராளுமன்றத் தேர்தலில் டிரைலர்) முன்வைத்து வென்றது. 2006ல் உல்டா. தமிழக சட்டமன்றத் தேர்தலில் கூட்டணியின் அவசியம் குறித்து அறிந்துகொள்ள, மொத்தமாக இவ்வளவு தெரிந்துகொண்டால் போதும்.

கூட்டணி மட்டுமல்ல. பிரச்சினைகள் அடிப்படையிலும் தேர்தல் முடிவுகள் வருவதுண்டு. 67ல் தமிழுக்கான உரிமை, 77ல் கலைஞர் மீதான ஏமாற்றம், 96ல் ஜெ. மீதான அதிருப்தி, 2001ல் பணப்புழக்கம் இல்லாமை என்று முக்கியமான சிலவற்றை குறிப்பிடலாம்.

கூட்டணி, பிரச்சினைகள் - இவை இரண்டு மட்டுமன்றி இன்னும் ஏராளாமான காரணிகள், நம்மை ஆளப் போவது யாரென்று தீர்மானிக்கக் கூடிய விஷயங்களாக இருக்கின்றன.

80ல் ஆட்சியைக் கவிழ்த்து விட்ட அனுதாப அலை எம்.ஜி.ஆருக்கு கைகொடுத்தது. 84ல் அரசின் சமூகநலத் திட்டங்கள் சிலவற்றை முன்வைத்து செய்யப்பட்ட பிரச்சாரங்களும் அவருக்கு பலனளித்தது போன்றவற்றையும் கவனத்தில் கொள்ள வேண்டும். நல்லாட்சியை முன்வைத்து 2001ல் திமுக செய்த பிரச்சாரம் எடுபடவில்லை என்பதும் இங்கே கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டியது.

2011 தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கப் போகிறது? முதல்வரை முடிவு செய்யப்போகும் காரணியாக எது அமையும்?

- தொடர்ச்சியாக அலசுவோம்

12 கருத்துகள்:

  1. 2G அலைக்கற்றை ஊழல் முக்கிய "பங்கு" வகிக்கும்.

    பதிலளிநீக்கு
  2. ரொம்பவும் விரிவாக எதிர்பார்த்தேன் யுவா. பொசுக்கென்று தொடரும் போட்டுவிட்டீர்கள்..

    பதிலளிநீக்கு
  3. இந்த அலசலுக்குள் டாக்குட்டரும் வருவாரா ?

    பதிலளிநீக்கு
  4. //தொடர்ச்சியாக அலசுவோம்.//

    அலசுங்க. நாங்களும் தொடந்து வரோம்

    பதிலளிநீக்கு
  5. பெயரில்லா8:12 PM, நவம்பர் 25, 2010

    \\ 2G அலைக்கற்றை ஊழல் முக்கிய "பங்கு" வகிக்கும். \\

    அதுதான் சென்ற பாராளுமன்றத் தேர்தலிலேயே, போதும், போதுமென்கிற அளவிற்கு இதைப் பற்றிப் பேசினார்களே?
    மக்களிடம் இதன் தாக்கம் எள்ளளவுமில்லையே.....
    பின்னுமா இப்படி ஒரு நம்பிக்கை.......

    வீரமணி அய்யா சொன்னது போல குழிப்பிணத்தைத் தோண்டி என்ன சாதித்து விட முடியும்?

    பதிலளிநீக்கு
  6. பெயரில்லா8:14 PM, நவம்பர் 25, 2010

    \\ congress-dmk koottani sikkalthaan. \\
    உண்மைதான்!, காங்கிரஸ்-திமுக கூட்டணி, அம்மையாருக்குச் சிக்கல்தான்..............

    பதிலளிநீக்கு
  7. இது வலைப்பதிவர்கள் மட்டும் ஓட்டுப்போட உரிமையுள்ள தேர்தல் அல்ல என ஒரு டிஸ்கி-யும் போட்டு விடுவது நல்லது :)

    பதிலளிநீக்கு
  8. Elections are going to be a joke hereafter in TN. Who ever has a better distribution network to pay money to the voters will win, means DMK will never loose again.....so elections comes and goes, once in a while our fellow citizens will get money to vote..bi-elections seems to be a better choice as far as the voters are concerned....

    பதிலளிநீக்கு
  9. பெயரில்லா6:42 PM, நவம்பர் 26, 2010

    சினிமாவில் வசனம் எழுதி தன் ஆரம்பகாலத்தை துவங்கிய திரு மு.க.மிகவும் சாதுர்யம் மிக்கவர்.
    நான்கு நியதிகளை அவர் நன்கு புரிந்துகொண்டார்.

    1.தமிழ் நாட்டில் புகைந்து கொண்டிருந்த
    பார்ப்பன துவேஷம்.இதை திரு.ஈ.வே.ரா பயன் படுத்த தொடங்கிய தருணம்.இதில் உள்ள potential ஐ,
    இதை போர்வையாக பயன் படுத்தினால்,இமயமலையை கூட மறைத்து விடலாம் எனும் உண்மையை மு.க புரிந்துகொண்டார்.

    2.செய்வதை விட பேசுவதே அதிக பலன் தரும் எனவும் புரிந்துகொண்டார்.எனவே நல்லதையே பேசி கெடுதலையே செய்தால் யாரும் கண்டுகொள்ள மாட்டார்கள் எனவும் அறிந்து கொண்டார்.

    3 மனித மனதில் அன்பை வளர்ப்பதை விட துவேஷத்தை வளர்ப்பது லகுவானது; பிரித்தாளுவது மிகவும் சிறந்த முறை என்பதை பிரிட்டிஷ் ஆட்சியாளர்களிடமிருந்து கற்று கொண்டார்.

    4. பணத்தால் வாங்க முடியாதது இவ்வுலகில் எதுவும் இல்லை என்பதையும் புரிந்து கொண்டார்.

    இவ்வளவுக்கும் மேல் கடவுள் அருள் அவருக்கு பரிபூரணமாக இருந்தது.

    1.அண்ணாவின் அகால மறைவு

    2. இந்திரா காங்கிரசின் தோற்றம்

    3.காமராஜின் மறைவு

    4.MGR இன் தான் மலையாளி என்கிற அநாவசியமான தாழ்வு மனப்பான்மை

    5.MGR இன் மறைவு

    6.Jaya வின் முதிர்ச்சியற்ற,அகம்பாவம் நிறைந்த மனோபாங்கு(நினைத்து பாருங்கள்... மு.க, சோனியாவிற்கும் நண்பர்,அத்வானிக்கும் நண்பர்.
    ஜெயா இருவருக்கும் எதிரி!!)

    7.இரண்டு முறை கிடைத்த ஆட்சி பொறுப்பை ஜெயா முழுவதும் வீணடித்து மக்கள் வெறுப்பை
    சம்பாதித்துக்கொண்டது.

    பதிலளிநீக்கு
  10. //89ல் மட்டுமே தேர்தல் வெற்றியில் கூட்டணிக்கு பெரிய பங்கில்லை.//

    அதிமுக இரண்டு அணிகளாகவும், காங்கிரஸ் தனியாகவும், திமுக தனியாகவும் நின்றதால் பிரதான தனிக் கட்சிகளின் பலம் எவ்வளவு, கூட்டணியின் முக்கியத்துவம் என்ன என்பதை உணர்த்தியது 1989 தேர்தல் எனலாமா?

    பதிலளிநீக்கு
  11. Adutha mudalvar amma enbathai alutham thiruthamaga padhivu seikiren....

    பதிலளிநீக்கு