9 நவம்பர், 2010

கொலை செய்ய விரும்பு!

இப்படி ஒரு பதிவெழுத வேண்டியது அவசியமே இல்லாதது. எழுதவும் கூடாதது. பொதுமக்கள் தீவிரமாக நம்பும், ஆதரிக்கும் ஒரு விஷயத்தை எதிர்த்து எதையுமே எழுதக்கூடாது என்பது வெகுமக்கள் இதழியலின் அடிப்படை பாடம். ஆனாலும் கை அரிக்கிறது. என்ன செய்ய?

கொலைகளை ரசிப்பது இந்திய மனோபாவமாக இருக்கிறது. இன்னமும் ஏன் கசாப்பை சிறையில் வைத்து சிக்கன் பிரியாணி போட்டுக் கொண்டிருக்கிறார்கள், போட்டுத் தள்ள வேண்டியதுதானே? அப்சல்குருவை தூக்கில் இன்னமும் போடலை பாருங்க சார். என்ன அநியாயம் என்று, ஜெயம்ரவியை பிரபுதேவா இயக்குகிறார் என்பதை பேசுவது போல் இயல்பாக நாட்டு நடப்பு பேசித் திரிகிறோம்.

கசாப்போ, குருவோ, மோகன்ராஜோ, ஆட்டோசங்கரோ.. யாராக வேண்டுமானால் இருக்கட்டுமே? அவர்களெல்லாம் கெட்டவர்கள் என்று போலிஸ் சொல்கிறது. டிவியில் காட்டுகிறார்கள். பேப்பரில் செய்தி போடுகிறார்கள். கோர்ட்டில் கேஸ் நடக்கிறது. நாய்களை தூக்கி தூக்கில் போட்டால் மகிழ்ச்சி. கேஸ் முடிவதற்கு முன்பாகவே போலிஸ் போட்டுத் தள்ளினால் அதைவிட மகிழ்ச்சி. போடாவிட்டாலும் பிரச்சினையில்லை. ஏன் போடவில்லை என்று காலையில் ஆபிஸுக்கு வரும்போது பஸ்ஸிலோ, டிரெய்னிலோ நாலு பேரிடம் நேரப்போக்குக்காக பேச ஏதோ விஷயம் கிடைக்கிறது. யார் கிட்டேயாவது எதையாவது பேச மேட்டர் கிடைக்குதே.. இதைவிட அவனுங்க உசுரு என்ன சார் பெருசு? என்ன சொல்றீங்க?

அடப்பாவிகளா.. 'தூக்குலே போடு' என்பதை நாயரிடம், 'டீ போடு' என்று சொல்வதைப் போல எவ்வளவு கேஷுவலாக உச்சரிக்கிறோம்? வர வர நாம் இந்தியாவில் வாழ்கிறோமா அல்லது சவுதி அரேபியாவில் வாழ்கிறோமா என்று சந்தேகம் வருகிறது. சன்னமாக யாராவது மனித உரிமை அமைப்பைச் சேர்ந்தவர்கள் "தூக்குலே போடுறதெல்லாம் பாவமுங்க..." என்று சொன்னால், அவர்களையும் சேர்த்து தூக்கி தூக்கில் போடுங்கள் என்று செய்தித்தாள்களின் இணையத் தளங்களில் கமெண்டு போட்டால் போயிற்று.

இந்திய சமூகம் நிஜமாகவே கொலைவெறியில் இருக்கிறது. கோர்ட்டுக்கு கேசு போனா பத்து, இருவது வருஷம் கழிச்சி தூக்குத்தண்டனை கொடுக்குறாங்க. அதை நிறைவேத்துறதுக்கு இன்னும் ஆறு, ஏழு வருஷம். இடையிலே கருணை மணு. யாருக்காவது நூற்றாண்டு விழா வந்தா மன்னிப்பு. எதுக்கு சார் வீணா அவனுங்களுக்கு சோறு போட்டு ஜெயில்ல வெச்சிருக்கணும். போட்டுத் தள்ளணும் சார் இவனுங்களை. நான் சிகப்பு மனிதன், நான் மகான் அல்லன்னு சினிமாவில் காட்டுறான் பாருங்க.

நியாயம்தான். நரகாசுரனை போட்டுத் தள்ளுனதையே தேசம் தீபாவளியாய் கொண்டாடுதே?

ஒரு தீபாவளிக்கு வீரப்பனை போலிஸ் போட்டுத் தள்ளுனாங்க பாருங்க. அதுதாங்க நிஜமான தீபாவளி. போட்டுத் தள்ளுனதா சொல்லுற ஆளு, ஸ்பாட்டுலேயே இல்லைன்னு சவுக்குலே எழுதறாங்க. எழுதிட்டுப் போவட்டுமே? அவரு ஸ்பாட்டுலே இருந்தா என்ன? இல்லாங்காட்டி என்ன? வீரப்பன் உடம்பை தோட்டா துளைச்சது உண்மைதானே? போலிஸ் கதை உண்மையோ, பொய்யோ. எவன் எக்கேடு கெட்டு செத்தா நமக்கென்ன? நமக்கு தேவை எவனோ சாவுறது. அது நடந்தா சரிதானே? ஆனா பாருங்க. இன்னொரு தீபாவளிக்கு போலிஸ் ஒரு மடாதிபதியை, இதே மாதிரி கொலை குற்றத்துக்கு அரெஸ்ட் பண்ணிச்சி. அவரை என்கவுண்டர் பண்ணனும்னு நாம யாருமே கேட்கலை. தூக்குலே போடச்சொல்லி டைம்பாஸுக்கு பேசலை. ஏன்னா அவர் ஜெகத்குரு. பாலியல் குற்றம் கூட செஞ்சிருக்குறதா நக்கீரனுலே எழுதனாங்க. பேப்பர்காரங்களும், போலிஸும் என்ன சொன்னாலும் நம்பிடமுடியுமா? ஒரு தராதரம் இல்லையா? எதை எதை நம்பணும்னு நமக்கு தெரியாதா?

எது எப்படியோ.. இந்த தீபாவளிக்கு மோகன்ராஜை போட்டாச்சி. கோயமுத்தூர் தெருக்களில் பட்டாசு வெடித்து 'நிஜமான தீபாவளி' கொண்டாடப்படுகிறது. எதுக்கு சார் இவனை எல்லாம் கோர்ட்டுக்கு கொண்டுபோகணும்? போற வழியிலே போட்டுத் தாளிச்சிட வேண்டியதுதான். போலிஸ் வாழ்க!

ஓக்கே. கொஞ்சம் சீரியஸாப் பேசுவோம் சார்.

போலிஸோட துப்பாக்கியை அவசரப்பட்டு பாராட்டிடாதீங்க. அதுக்கு நல்லவங்க கெட்டவங்க வித்தியாசம் தெரியாது. இன்னைக்கு மோகன்ராஜை போட்ட துப்பாக்கி, நாளைக்கு யாரை வேணும்னாலும் எந்த குற்றம் சாட்டியும் போடலாம். ஏன்னா வாழ்த்தறதுக்குதான் நாம இருக்கோமே? குஜராத்துலே போட்டாங்க இல்லை. போட்டாங்க இல்லை.

மோகன்ராஜை போட்ட சம்பவத்தில் போலிஸின் கதை நன்றாக இருக்கிறது. ஆனாலும் எந்த ஒரு என்கவுண்டராக இருந்தாலும், இதே கதை-வசனம்-காட்சிகள் என்பதுதான் எரிச்சலைக் கொடுக்கிறது. வாழ்வின் சகல விஷயங்களிலும் சட்டம், ஒழுங்கு, விளக்கெண்ணெய் என்று கோருபவர்கள், மோகன்ராஜு மாதிரியான குற்றவாளிகள் கொல்லப்பட்ட விஷயத்தில் மட்டும் எல்லா லொட்டு லொசுக்குகளையும் மறந்துவிட்டு, அப்பட்டமான கொலைக்கு கைத்தட்டி மகிழ்வது என்ன லாஜிக்கென்று புரியவில்லை. என்கவுண்டர்தான் நியாயமான தண்டனைன்னா, அப்புறம் எதுக்குங்க செஷன்ஸ் கோர்ட்டு, டிஸ்ட்ரிக்ட் கோர்டு, ஹைகோர்ட்டு, சுப்ரீம்கோர்ட்டு?

மோகன்ராஜு என்கவுண்டரில் தண்டிக்கப்பட்டது நமக்கு எந்தவிதத்திலும் வருத்தத்தையோ, மகிழ்ச்சியையோ, தாக்கத்தையோ ஏற்படுத்தவில்லை (அவனுக்கு ஒன்றரை வயதில் ஒரு குழந்தை இருந்ததாக படித்ததுதான் கொஞ்சம் வருத்தம் கொடுத்தது – இனிமேல் காலம் முழுக்க தண்டிக்கப்படப் போவது அக்குழந்தையின் எதிர்காலம்).

மோகன்ராஜூ வசமாக மாட்டிக் கொண்டான். வெளியில் இருக்கும் மோகன்ராஜூகள் பலருக்கும் மாட்டிக் கொள்ளும் சந்தர்ப்பம் வாய்க்கவில்லை. மாட்டிக் கொண்டவனால் – அதனால் ஜெயிலில் இருப்பவனால் - இனி புதிய குற்றம் செய்யமுடியாது, மாட்டிக் கொள்ளாதவர்களோ யாருக்கும் தெரியாமல் எண்ணற்ற குற்றங்களை செய்துக் கொண்டே போவார்கள். இந்த அடிப்படை வித்தியாசத்தை உணர்ந்தவர்கள் என்கவுண்டர், மரணதண்டனை என்று அடுத்தவன் சாவை கொண்டாட மாட்டார்கள்.

இறுதியாக வேண்டி கேட்டுக் கொள்கிறேன் தோழர்களே. தனிநபர்கள் ஒருவருக்கொருவர் போட்டுத் தள்ளிக் கொள்வதில் கூட ஏதோ ஒருசில நியாய அநியாய காரணங்களாவது இருக்கக்கூடும். போலிஸின் என்கவுண்டரை மட்டும் எந்த ரூபத்திலும் ஆதரிக்காதீர்கள். குற்றங்களுக்கும், குற்றவாளிகளுக்கும் எதிராக நிற்கிறோம் என்றபேரில், போலிஸின் (சட்ட அங்கீகாரம் பெற்ற) குற்றங்களுக்கு வக்காலத்து வாங்காதீர்கள். இந்தப் போக்கு நீடிப்பது மனித உரிமைகளுக்கு ஆபத்தானது. ஏனெனில் உங்களால் இன்று வரவேற்கப்படுவதால், என்கவுண்டர் கலாச்சாரம் எதிர்காலத்தில் பெருகும். என்றோ ஒருநாள் நடைபெறப்போகும் ஏதோ ஒரு என்கவுண்டரின் சீஸ்ஃபயரில் நீங்களோ, அப்பாவியான நானோ கூட கொல்லப்படலாம்.

65 கருத்துகள்:

  1. //இப்படி ஒரு பதிவெழுத வேண்டியது அவசியமே இல்லாதது. எழுதவும் கூடாதது. பொதுமக்கள் தீவிரமாக நம்பும், ஆதரிக்கும் ஒரு விஷயத்தை எதிர்த்து எதையுமே எழுதக்கூடாது என்பது வெகுமக்கள் இதழியலின் அடிப்படை பாடம். ஆனாலும் கை அரிக்கிறது. என்ன செய்ய?//

    மக்களின் மன அரிப்பு நீங்கும்வரை தங்கள் கைகளுக்கு அடிக்கடி அரிப்பு எடுக்கட்டும்!

    பதிலளிநீக்கு
  2. மிக்க நன்றி இதை எழுதியதற்கு.

    பதிலளிநீக்கு
  3. //என்றோ ஒருநாள் நடைபெறப்போகும் ஏதோ ஒரு என்கவுண்டரின் சீஸ்ஃபயரில் அப்பாவியான நீங்களோ, நானோ கூட கொல்லப்படலாம்.//

    இப்படி இருந்திருக்கலாமோ? ட்வீட்டர்ல பாருங்க...ஒரு பழைய பிரச்சனை புது ரூபம் எடுக்கிறது

    பதிலளிநீக்கு
  4. பெயரில்லா3:08 PM, நவம்பர் 09, 2010

    //சீஸ்ஃபயரில் நீங்களோ, அப்பாவியான நானோ//-அப்படின்னா இந்த பதிவை வாசிக்கிற நாங்கள் அப்பாவிகள் கிடையாதா??

    நியாயமான வார்த்தைகள்.. நன்றி.

    அன்புடன்,
    சுபைர்

    பதிலளிநீக்கு
  5. dear yuva, ungalathu kopam gnayamthan anaal,kuzhanthaikalai kadathuvathu enpathu ippothu sarva saatharanamakivittathu. kovai kadathalukku pin chennaiyil nadanthathu. athiratiyana intha thandanai illavittal, intha pulla pudikkira naikalukku puthi varathu. yena pethavangalukkuthan kulanthaigalai ilantha antha kastam theriyum. avanukkum oru kulanthai irukkirathu endru varuthappatteergal,anaal antha naaikku antha arivu irunthatha. antha pinchu kuzhanthaigal enna paadu pattrikkum. avanukku panakkastam entraal visatha kudikkattum, illaatta vandikku thalai vakkattum. athavittu kuzhanthaikala konna pethavangalum mathavangalum summa iruppaangala. pazhya mannargal, senkiskhan,hitler,musolini,rajapakshe,push,ellaiyora theeviravaathigal senjatha vida intha encounter periya thappu onnum illa. neenga varuthapadathennga sir, nalla saappudunga. kaalam ellathaiyum maathum. kadavule ellarukkum nalla pouthiya kodu.

    பதிலளிநீக்கு
  6. பெயரில்லா3:15 PM, நவம்பர் 09, 2010

    இறந்த குழந்தையின் தந்தை ஒரு தொழிலதிபர்.

    ஆனால் குப்பன் அல்லது சுப்பனின் குழந்தைக்கோ இவ்வாறு நடந்திருந்தால் இந்த என்கவுண்டர் நடந்திருக்குமா ??

    பதிலளிநீக்கு
  7. அவசியமான பதிவு...வாழ்த்துக்கள்

    பகிர்வுக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  8. பெயரில்லா3:20 PM, நவம்பர் 09, 2010

    இது போன்ற என்கவுண்டர்கள் மோகன்ராஜ் போன்ற எதிரிக்கு பயத்தை உண்டு பண்ணவே அன்றி அவனுக்கு தண்டனை அல்ல. என்கவுண்டரில் ஒரு ரவுடியைப் போட்டால் எப்படி அவனவன் பயந்து ஊரை காலி செய்கிறான் அது போல.0

    பதிலளிநீக்கு
  9. //மோகன்ராஜு என்கவுண்டரில் தண்டிக்கப்பட்டது நமக்கு எந்தவிதத்திலும் வருத்தத்தையோ, மகிழ்ச்சியையோ, தாக்கத்தையோ ஏற்படுத்தவில்லை (அவனுக்கு ஒன்றரை வயதில் ஒரு குழந்தை இருந்ததாக படித்ததுதான் கொஞ்சம் வருத்தம் கொடுத்தது – இனிமேல் காலம் முழுக்க தண்டிக்கப்படப் போவது அக்குழந்தையின் எதிர்காலம்).
    //

    பதிலளிநீக்கு
  10. பெயரில்லா3:37 PM, நவம்பர் 09, 2010

    Romba nalla irukku ungal pathivu. Ellaam sari.

    Irandhu pona andha kuzhandaigal enna paavam senjanga. Adarkku ungal bathil?

    Inimel idhu pondra kutrangalukku encounter thaan mudivu endraal, yaaravadhu thunivaargala?

    Intha criminal kalukku jail'la poi konja naal irukalaam endra dhairiyam thaane?

    பதிலளிநீக்கு
  11. //மோகன்ராஜூ வசமாக மாட்டிக் கொண்டான். வெளியில் இருக்கும் மோகன்ராஜூகள் பலருக்கும் மாட்டிக் கொள்ளும் சந்தர்ப்பம் வாய்க்கவில்லை//

    //ஒருநாள் நடைபெறப்போகும் ஏதோ ஒரு என்கவுண்டரின் சீஸ்ஃபயரில் நீங்களோ, அப்பாவியான நானோ கூட கொல்லப்படலாம்.//

    TRUE!!!

    பதிலளிநீக்கு
  12. //Inimel idhu pondra kutrangalukku encounter thaan mudivu endraal, yaaravadhu thunivaargala?//

    super. itha kalvetula eluthi vachitu ethavathu kovil masoothi church munnaala ukaaru.

    INDIAvula ini meal yaarum kulanthaingala kadathamaataanga okva.

    elaam payanthu nadungi oaditaanga. sema thandanai. vaazhga police. vaazhga hitler rajangam.

    பதிலளிநீக்கு
  13. பெயரில்லா4:05 PM, நவம்பர் 09, 2010

    Dear Yuva,

    If we start to talk and discuss like this there is no end to it.

    As many criminals have not been punished - you mean to say that no one should be punished.

    This, every one knows is just a fake encounter. May be Mohankumar not the real culprit. But - this kind of swift actions will make the person to think twice before commit any such crimes.

    Just because, the children were born on a rich family, does it mean that they should be killed ?

    What all this shows is the common public looses the faith in the leagal system and the governence.


    B K R

    பதிலளிநீக்கு
  14. லக்கி, //போலிஸின் என்கவுண்டரை மட்டும் எந்த ரூபத்திலும் ஆதரிக்காதீர்கள்./// இது சரியே என்றாலும் கட்டுரையின் மற்ற கருத்துக்களுடன் முழுமையாக ஒத்துப்போக முடியவில்லை.தாமதமாக கிடைக்கும் நீதியும் அநீதியே எனபதில் உங்களுக்கு உடன்பாடில்லையா?

    பதிலளிநீக்கு
  15. பெயரில்லா4:26 PM, நவம்பர் 09, 2010

    கடைசிபத்தியில் சீஸ்ஃபய்ர் என்று தவறாக வந்திருக்கிறது. அதை கிராஸ் ஃபயர் என்று மாற்றிப் படிக்கவும்.

    - லக்கி

    பதிலளிநீக்கு
  16. பெயரில்லா4:33 PM, நவம்பர் 09, 2010

    //A Simple Man
    தாமதமாக கிடைக்கும் நீதியும் அநீதியே எனபதில் உங்களுக்கு உடன்பாடில்லையா?//

    நிச்சயமாக இது விவாதிக்க வேண்டிய அம்சம்தான்.

    காலதாமதமான நீதிக்கு காரணம், நிரப்பப்படாமல் இருக்கும் நீதிபதி பணியிடங்களும், நீதிமன்ற பணியாளர்கள் பணியிடங்களும்!

    காவல்துறையினர் பலரும் விஐபி பாதுகாப்புக்கு சென்றுவிடுவதால் விசாரணைகளும் பெருமளவில் பாதிக்கப்படுகின்றன.

    இவை அனைத்துக்கும் அரசியல்வாதிகளே பொறுப்பேற்க வேண்டும். இவர்களை யாராவது என்கவுண்டர் செய்தால் ஆதரிக்கலாம்!

    பதிலளிநீக்கு
  17. there is nothing wrong in this encounter. this is the least punishment to the suspect in my point of view if i am in the position of Mr:Sylendra Babu means the punishment was very cruel than the games played in SAW movie

    பதிலளிநீக்கு
  18. மிகவும் முக்கியமான பதிவு..

    வெகுஜன பத்திரிக்கையில் எழுத வேண்டிய, ஆனால் எழுதப்படாத தைரியமான கருத்துக்கள்.

    யாரோ செய்த கொலைக்காக ஆயிரக்கணக்கான அப்பாவிகள் நம் சிறைகளில் பல வருடங்களாக அடைபட்டிருக்கிறார்கள்.

    மோகன்ராஜ் தான் உண்மையான குற்றவாளி என்றால், சரியான ஆதரங்களோடு விரைவு நீதிமன்றத்தில் காவல்துறை வழக்கு தொடுத்து ஓரிரு மாதங்களிலேயே 'நல்ல தீர்ப்பு' பெற்றிருக்க முடியும் (சான்று: அசோக நகர் 3 பேர் கொலை வழக்கு)

    ஆனால், அவன்(ர்) நிரபராதி என்று நாளை தெரிய வந்தால் செத்தவனை உயிரோடு கொண்டு வர முடியுமா? அவன்(ர்) மனைவிக்கும், குழந்தைக்கும் யார் பதில் சொல்வார்?

    சவுதி அரேபிய பாணி தண்டனை வேண்டுவோர் இதனை சற்றே சிந்தித்து பார்க்க வேண்டும்!

    பி.கு:

    1. தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டது என கூச்சல் போடுவோரை அடக்கவே அரசு இப்படி செயல் பட்டிருக்க கூடும்!

    2. போலீஸ் இன்ஸ்பெக்டரின் இடுப்பில் இருக்கும் பிஸ்டலை எடுத்து, அவரை சுடுவது என்பது ஜேம்ஸ்பாண்ட் 007, ஆக்க்ஷன் கிங் அர்ஜுன், குயிக் கன் முருகன் போன்றோருக்கே சாத்தியம்!

    பதிலளிநீக்கு
  19. Follow up: அப்பாவியான நீங்களோ நாமோ என் கவுன்டரிலோ க்ராஸ் ஃபயரிலோ கொல்லப்பட்டால் நம் பிள்ளைகுட்டிகளுக்கு இன்சூரன்ஸ் கூட கிடைப்பது கஷ்டம்...

    இந்த 'சம்பவம்' பத்தி சவுக்கு என்ன சொல்வார்னு தெரியல?

    பதிலளிநீக்கு
  20. அருமை..

    அவனையும் , நீதிமன்றத்தில் பேசவிட்டு, உண்மைய அறிந்து பின் துப்பாக்கியால் பேசியிருக்கலாம்..

    பதிலளிநீக்கு
  21. பெயரில்லா8:00 PM, நவம்பர் 09, 2010

    இது ஒரு பைதியகரனின் உளறல்.

    பதிலளிநீக்கு
  22. உங்களது வலைப்பக்கத்தை தொடர்ந்து வாசித்து கொண்டிருப்பவன் அனால் இந்த பதிவு one dimensionl ஆக இருப்பது வருத்தமே. மோகன்ராஜின் குழந்தைக்கு வருத்தப்படும் நீங்கள் இறந்த குழந்தைகளின் பெற்றோரின் துக்கத்தை பற்றி ஒரு வரி கூட பதிவு செய்யாதது ஏன். ஒரு குற்றத்தின் தண்டனை அதன் நோக்கம் மற்றும் தாக்கம்(magnitude), இதை மனதில் வைத்தே வழங்கப்படிகிறது. இரண்டு குழந்தைகளையும் இழந்து வாழ்வதற்கு எந்த ஒரு காரணமும் இல்லாமல் ஒவ்வொரு நாளையும் மரண வலியோடு கடக்கும் அவர்களின் வலியை நீங்கள் ஏன் நினைக்கவில்லை. மரணம் ரொம்ப சாதாரன விஷயம், வாழ்வது தான் கடினம்.தமிழ்நாட்டில் ஒரு நாளைக்கு எத்தனை கொலைகள் எல்லா குற்றவாளிகளும் encounter செய்யப்படுகிறார்களா இல்லையே. குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் கொடுமையின் உச்சம், it marks the tragic end of a family. நாம் ஒரு முறை தான் பிறக்கிறோம் , பெற்ற குழந்தைகள் இறந்தால் வாழ்வதற்கு எந்த ஒரு காரணமும் இல்லாமல் போய்விடுகிறது . The worst pain one could have is when he finds there is no reason or purpose of his life. People who exploit children sexually are animals and they deserve to be hunted. Had he gone to jail , that would have been a mere news , it wouldnt have got such attention like this and we would have forgotten this like any other.India is country where dying is a way of life, until and otherwise such punishments murderers like these will continue taking lives for granted.You are talking about procedures and law, these should be executed in country where there is a value for human life, the cheapest thing in india is the lives of people.Certainly these kind of punishments are very much needed ,because fear is the only thing can prevent animals like mohan rai from doing these kind of events again.

    பதிலளிநீக்கு
  23. போலீஸ் செய்தது கொலை தான் என்று எப்படி இவ்வளவு நம்பிகையாக உங்களால் சொல்லமுடிகிறது என்று தெரியவில்லை. (Do we have any proof that it is not an encounter?)

    உங்கள் வாதத்தின்படி குற்றம் நிருபிக்கப்படும்முன் தண்டனை என்பது தவறு என்றால் அது போலீஸ்-க்கும் பொருந்தும் இல்லையா?

    பதிலளிநீக்கு
  24. இதே போல் இரு என்கவுண்டரில் சங்கராச்சாரிகளை போடுமா போலிஸ்.

    கொல்லப்பட்ட குழந்தைகளின் குடும்ப போட்டோவை கேட்டிருந்தானாம் ராகுல் எனும் பொறுக்கி, பின்னர் வந்து ஆறுதல் சொல்ல...

    எண்கவுண்டரில் இறந்த மோகன்ராஜை விட ஆபத்தனாவன் ராகுல் போன்ற சமூகத்தை ஏமாற்றும் பொறுக்கிகள்...

    பதிலளிநீக்கு
  25. பெயரில்லா8:56 PM, நவம்பர் 09, 2010

    ஆனாலும் எந்த ஒரு என்கவுண்டராக இருந்தாலும், இதே கதை-வசனம்-காட்சிகள் என்பதுதான் எரிச்சலைக் கொடுக்கிறது.//
    வயிற்றில் குண்டு பாய்ந்து ஒரு எஸ் ஐ கவலைக்கிடம் என டிவியில் பார்த்தேன்

    பதிலளிநீக்கு
  26. இருக்கட்டுமே! தலைவலியும் காய்ச்சலும் தனக்கு வந்தால்தான் தெரியும்!!!! மோகன்ராஜின் குழந்தையைப் பற்றி யோசிக்கிறீர்களே, அந்தக் குழந்தைகளின் பெற்றோர்களை யோசித்தீர்களா? மோகன்ராஜின் குழந்தையை கொல்லப்பட்ட சிறார்களின் பெற்றோர் தத்து எடுத்து வளர்க்கமுடியும்! ஆனால், அந்த சிறார்களின் உயிரை திருப்பி யாரால் தரமுடியும்? போலிஸ் செய்தது தப்புதான்! ஆனால், மோகன்ராஜ் செய்தது குரூரம்!

    பதிலளிநீக்கு
  27. பெயரில்லா8:56 PM, நவம்பர் 09, 2010

    அவனையும் , நீதிமன்றத்தில் பேசவிட்டு, உண்மைய அறிந்து பின் துப்பாக்கியால் பேசியிருக்கலாம்.//
    அவன் என்ன மனோகரா வசனமா பேசப்போறான்..?

    பதிலளிநீக்கு
  28. பெயரில்லா9:04 PM, நவம்பர் 09, 2010

    போலிசிடமிருந்து துப்பாக்கியை பறித்து சுடுவது என்பது நம்பமுடியாத கதை
    1,துப்பாக்கி போலீஸ் உடையோடு கயறு கொண்டு இனைக்கபட்டிருகும்
    2,துப்பாக்கி பற்றிய அறிவு இல்லாமல் சுடமுடியாது safety catch எடுக்க தெரிந்து இருக்கவேண்டும்

    பதிலளிநீக்கு
  29. அருமையான பதிவு லக்கி... இவ்விஷயம் குறித்து
    நீங்களும் அதிஷாவும்தான் மிகச் சரியாக எழுதியுள்ளீர்கள்..
    வாழ்த்துகள்.

    சவுதி அரேபியாவைவிட மோசமாகப் போய்க் கொண்டிருக்கின்றது.

    2000 அப்பாவி முஸ்லிம்களை கொன்ற
    கொலைகாரன் மோடியைக் கொண்டாடும் தேசமேல்லவா இது.

    பதிலளிநீக்கு
  30. luckylook,
    thanks for your timely information. i got "Rathapadalam" mega special. i was waiting for this moment long time. i know this comment is not related to this serious topic.but, i want to print this

    Thanks again.

    பதிலளிநீக்கு
  31. உணர்ச்சிக் கொந்தளிப்பில் ரீயாக்ட் செய்யும் எல்லோராலும் புரிந்து கொள்ளத்தக்கப் பதிவல்ல இது.

    நான் என் காதாரக் கேட்ட சில கமெண்டுகள்:

    மனுஷனுக்குத்தான் நீதி முறைப்படி தண்டனை தரணும், இவனைப்போல மிருகத்துக்கு இதுதான் சரி. / அவனுக்கு ஒன்றரை வயசு கொழந்தை இருக்குன்னா அதை அவன் யோசிச்சிருக்கணும். / இவனைப்போல எவனும் பின்னால பண்ணக்கூடாதுன்னா இதுதான் சரி.

    இப்படி சென்றுகொண்டே இருக்கிறது மக்களின் உணர்ச்சி வாதங்கள்.

    தமிழ்மலர் என்பவர் 'மங்குனி அமைச்சரின்' பதிவில் சில கேள்விகள் எழுப்பியிருக்கிறார். அவர் கேள்விகளின் அடிப்படையை நான் அறியாவிட்டாலும் அவர் கேட்பதில் உள்ள தர்க்க ரீதியான சில கேள்விகளுக்கு விடை காணுமுன் இந்த என்கவுண்டர் நடந்துவிட்டனவோ என்றும் ஐயப்பட வேண்டியுள்ளது.

    எது எப்படியோ, "உன் வீட்டுல இப்படி நடந்திருந்தா நீ இப்படி தர்க்க ரீதியா கேள்வி கேட்டுட்டு நின்னுட்டு இருப்பியா?" என்பதான கேள்விகளுக்கு நம்மிடம் நிச்சயம் விடையில்லை.

    பதிலளிநீக்கு
  32. //என்றோ ஒருநாள் நடைபெறப்போகும் ஏதோ ஒரு என்கவுண்டரின் சீஸ்ஃபயரில் நீங்களோ, அப்பாவியான நானோ கூட கொல்லப்படலாம்.//

    "சீஸ்ஃபயர்" என்றால் stoppage of war / stoppage of shooting என்று அறிகிறேன். சரி பார்த்துக் கொள்ளவும்.

    http://goo.gl/muiaE

    பதிலளிநீக்கு
  33. Good post, a definite need to respect law and order in a democratic country.
    இதை ஆதரிக்கும் அனைத்து பேப்பர் புலிகளுக்கும், சட்டம் தன் வேலையை சரியாக செய்யாமல் இருப்பதால் இந்த கொலை சரி என்கிறீர்கள்.
    நிஜமாகவே உங்களுக்கு அப்படி ஒரு எண்ணம் இருந்தால், சட்டத்தை விரைவாக்க தெருவில் இறங்கி போராடதது ஏன்?

    இல்லை அதையும், போலீஸ் மாதிரி ஒரு அமைப்பு செய்தால் சந்தோஷப்படுவீர்களா?

    பதிலளிநீக்கு
  34. தங்களின் இந்தப் பதிவும் - அதிஷாவின் பதிவும் மன வருத்தத்தையே கொடுக்கிறது நண்பா - ஒரு பத்திரிக்கையாளனாக இல்லாமல் - ஒரு சக மனிதனாக - அக்குழந்தைகளிண் பெற்றோர்களாகக் கூட வேண்டாம் - அக்குழந்தைகளுடன் சேர்ந்து பக்கத்து வீட்டில் வாழ்ந்த ஒரு சக மனிதனாக நினைத்து ஒரு சில நிமிடம் யோசித்துப் பார்...

    காவல்துறை செய்தது சரி என சொல்லவில்லை.. ஆனால் சில விஷயங்களில் இது போன்ற தண்டனைகள் நிச்சயம் தேவைதான். --சில விஷயங்களில்--

    :-((((

    பதிலளிநீக்கு
  35. //ஆனால், அவன்(ர்) நிரபராதி என்று நாளை தெரிய வந்தால் செத்தவனை உயிரோடு கொண்டு வர முடியுமா? //

    பைத்தியக்காரத் தனமா இருக்கு உங்க கருத்து.. குற்றவாளி ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருக்கிறான்.

    மேலும் - காவல் துறை அரசுக்கோ - இல்லை தனிப்பட்ட நபர்களுக்கோ பரிந்து செயல்பட இது ஒண்ணும் ஹவாலா - ஸ்பெக்ட்ரம் மாதிரி பைசா சம்பந்தப்பட்ட விஷயமில்ல -

    பதிலளிநீக்கு
  36. //போலீஸ் இன்ஸ்பெக்டரின் இடுப்பில் இருக்கும் பிஸ்டலை எடுத்து, அவரை சுடுவது என்பது ஜேம்ஸ்பாண்ட் 007, ஆக்க்ஷன் கிங் அர்ஜுன், குயிக் கன் முருகன் போன்றோருக்கே சாத்தியம்!//

    போலீசார் கொடுக்கும் வாக்குமூலத்தை நம்பும் அளவிற்கு தமிழக மக்கள் முட்டாள்களில்லை - ஆனாலும் இந்த வாக்குமூலத்தை மக்கள் நம்பாவிட்டாலும் விரும்புகிறார்கள் - வாழ்க மனிதநேயம்...

    பதிலளிநீக்கு
  37. நூறு பேர் கூடி ஊர்வலம் நடத்தி வாழ்த்துப்பா பாடினால் துரோகி தியாகியாவான், குழப்பம் செய்தவன் முழக்கமிட்டவனாவான், கொள்ளையடித்தவன் வள்ளலாய் மாறுவான் என்று சிவகங்கைச் சீமை படத்துக்கு கவிப்பேரரசு கண்ணதாசன் அவர்கள் வசனம் எழுதியிருப்பார். நடுநிலையன்றி விளம்பரத்துக்காக சாயும் மீடியா இருக்கும் இக்காலத்தில், யாரையும் குற்றவாளியென்று சித்தரித்து, கொலை செய்ய முடியும். அதற்கு மக்களின் ஏகோபித்த ஆதரவை பெறவும் முடியும் என்பதற்கு இது ஒரு மோசமான முன்னுதாரணம். நீதித் துறையில் கணிணி மயப்படுத்தி வழக்குகளை குறுகிய காலத்தில் தீர்ப்புக்குட்படுத்தி குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கித் தராமல் மக்களுக்கு நீதிமன்றங்களின் பேரிலிருந்த நம்பிக்கையைக் குலைத்த நீதிமன்றங்களும் நீதித் துறையைச் சார்ந்தவர்களுமே இத்தகையப் போக்கிற்கு முழுப்பொறுப்பு.

    பதிலளிநீக்கு
  38. குருணாநிதி9:56 AM, நவம்பர் 10, 2010

    கழகக் கண்மணி லக்கி,

    உனது பதிவு, எனது சிந்தனையைத் தூண்டி விட்டதடா கண்மணி.. ஆனால், அதே சமயம், இந்த என்கௌண்ட்டர் எனது ஆசியோடு தான் நடந்தேறியது என்பதைத் தெரிந்து கொண்டால், நீ எப்படிக் கண்டபடி இதனை ஆதரித்துப் பதிவிட்டிருப்பாய் என்பதனையும் எண்ணிப் பார்க்கிறேனடா வெண்மணி..

    வாழ்க உனது பதிவு.. வளர்க உனது தொண்டு.. கண்கள் பனித்தன.. உதடுகள் இனித்தன.. நெஞ்சம் விம்மியது.. வயிறு கலக்கியது..

    பதிலளிநீக்கு
  39. அந்த ஒன்றரை வயது குழந்தை பெரிதானால் அப்பாவை கொன்றது சரி என்றே சொல்லும்.அல்லது அவன் என் அப்பா இல்லை என்றே சொல்லும்.அப்படி ஒரு காரியத்தை நிகழித்தியிருக்கிறான்.அந்த அயோக்கியன்.
    பெடோஃபைல் கொலைகாரர்களை காஸ்ட்ரேஷன் செய்து அதன் பின் மின்சார நாற்காலியில் ஹைவோல்டேஜ் மின்சாரம் பாய்ச்சி கருக்கி கொல்லவேண்டும்.

    பதிலளிநீக்கு
  40. யார் கண்டார்? ,இவன் விடுதலையாயிருந்தால் ஒரு இன்ஸெஸ்டாக கூட மாறீ அந்த ஒன்றரை வயது குழந்தையை இதே போலவே வன்புணர்ந்திருப்பான்.பெடோஃபைல்களில் இன்ஸெஸ்டுகள் தான் மிக அதிகம்

    பதிலளிநீக்கு
  41. பாக்தாத் திருடன்12:02 PM, நவம்பர் 10, 2010

    இந்திய பழக்கவழங்கங்களை இகழ்ந்து எழுத மீடியா ஆசாமிகளுக்கு சில கெளவோதிகள் பணம் அழுவது தெரியும்.

    இந்த மாதிரி வெறி பிடித்த நாய்களுக்கு அழுவதற்கு யார் பணம் அழுகிறார்கள் ?

    அடுத்த பிறவியிலாவது மனுசனா பிறங்கப்பா....

    மங்குனி பதிவில சொல்லியிருக்காரு !
    அவன் குற்றவாளின்னா இறந்தது நல்லதே !

    குற்றவாளி இல்லைன்னாலும் எத்தனையோ ரானுவ வீரர்கள் நாட்டைக் காப்பாற்ற இறந்த மாதிரி , அவனை ஒரு தியாகியா நினைக்க வேண்டியது தான்.

    இந்த மாதிரி குற்றம் புரிய நினைப்பவர்களுக்கு பயம் காட்ட தன் இன்னுயிரை தந்த மோகனதியாகி என்று.

    போங்கப்பா போய் குளிச்சிட்டு வீட்ல செம்பை கழுவி கவுத்து வைங்கப்பா...

    பதிலளிநீக்கு
  42. பேப்பர் புலியொழிப்புக் கழகம்.12:07 PM, நவம்பர் 10, 2010

    //இதை ஆதரிக்கும் அனைத்து பேப்பர் புலிகளுக்கும், சட்டம் தன் வேலையை சரியாக செய்யாமல் இருப்பதால் இந்த கொலை சரி என்கிறீர்கள்.
    நிஜமாகவே உங்களுக்கு அப்படி ஒரு எண்ணம் இருந்தால், சட்டத்தை விரைவாக்க தெருவில் இறங்கி போராடதது ஏன்?//

    முதல்ல சட்டத்தை விரைவாக்க எதாவது செய்யுங்கடா வெண்ணைகளா ! அதுவரைக்கும் ஆஹே பீச்சே பந்தகர்கே ஆராம்சே பைட்டோ என்று பேப்பர் புலிகளைத் தாழ்மையுடன் வேண்டிக் கொள்கிறேன்.

    பதிலளிநீக்கு
  43. அந்த கொடூரனின் மனைவியின் பேட்டி நக்கீரனில் வந்துள்ளது. காதல் மனைவி வேறு, அவர் சொன்னது "இப்படி பட்ட ஒருவனை காதலித்தற்காக வெட்கப்படுகிறேன்" என்று. அந்த ஒன்றரை வயது குழந்தையை அந்த தாய் நன்றாக வளர்ப்பார். நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை லக்கி. மேலும் இவனை விட்டு பிரிந்து தான் தாயும் குழந்தையும் பலகாலமாக வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

    இன்னொரு பொருக்கி உயிருடன் உள்ளானே அவனுக்கு ஒரு வருடம் தான் ஆகிறது கல்யாணம் ஆகி இவனின் கஞ்சாகுடிக்கும் பழக்கத்தால் கடந்த ஆறுமாதங்களாக அவர் மனைவி அவர் தாய்வீட்டில் தான் வசித்து வருகிறார்.

    ஒன்று மட்டும் நிச்சயம் இது வரை என்கவுன்டர்கள் ஒவ்வொரு தேவைக்காக நடத்தப்பட்டு வந்தது. இப்பொழுது நடந்திருப்பது நாட்டின் தேவைக்கு..

    பதிலளிநீக்கு
  44. பெயரில்லா1:13 PM, நவம்பர் 10, 2010

    @மோனி
    ஒரு நாள் போலிசிடமிருந்து பாருங்கள்
    நீங்கள் கூட நான் தான் அவர்களை கொலை செய்தது என்று
    ஒப்புதல் வாக்குமூலம் கொடுபீர்கள்

    பதிலளிநீக்கு
  45. பெயரில்லா5:19 PM, நவம்பர் 10, 2010

    //உணர்ச்சிக் கொந்தளிப்பில் ரீயாக்ட் செய்யும் எல்லோராலும் புரிந்து கொள்ளத்தக்கப் பதிவல்ல இது.//

    வாங்க அரிஸ்டாட்டில் உங்களுக்கு ரொம்ப புரிஞ்சிருக்கு போலருக்கே.

    டே! யோக்கியன் வாரன் சொம்பை எடுத்து உள்ள வைங்கோ!!!

    பதிலளிநீக்கு
  46. பெயரில்லா5:30 PM, நவம்பர் 10, 2010

    நல்ல வேளை இந்த பதிவு எழுதுற பயலுவ கையில் எல்லாம் பெரிய அதிகாரம் எதுவும் இல்லை. அஞ்சு நிமிஷ பிரபலத்துக்கு ஆசைப்பட்டு அவன் அவன் ரெளடிகள் உயிர்க்கு அவ்வளவு வக்காலத்து வாங்குறானுவ !! எதோ நீதிப் படியாம் எலே வெளங்காதவனுகளா என்னைக்கு யாருக்குடா நீதி கிடைச்சிருக்கு இங்கே !! இதே கோவை கல்லூரியில் படித்த 3 பெண்களை உயிரோடு கொளுத்தினவனுக தூக்கு தண்டனை க்யூவில் குந்திக்கினுகிரானுவ.. அபசல்குரு விதி முடிஞ்சி சாவற வரைக்கும் அந்த பய புள்ளைகளுக்கு கவலை இல்ல.

    சட்ட சட்ட படின்னு பேசுற நல்லவனுகளுக்கு எல்லாம் பெரிசா சாபம் எதுவும் கொடுக்கலை ஆனா அவனுக பைக் மாசத்துக்கு ஒரு தடவை தொலையனும், மினிமம் டேமேஜோட திரும்பக் கிடைக்கனும். அந்தக் குற்றவாளி இவனுக கண்ணு முன்னாடியே தண்டனை இல்லாம கூல வெளிய திரியனும். அதோட மட்டுமில்ல தலைவா அடுத்த மாசம் 10 தேதி வர்ரேன்னு சொல்லிட்டு போய் பைக்-ஐ லவட்டனும்

    பர்சை அடிச்சிக்கிட்டு போனவனுகளை இவனுக கையும் களவுமா பிடிச்சுக்குடுத்தாக் கூட ஆதாரமே இல்லைன்னு அவனுகளை விட்டுறனும்
    அப்ப தெரியும் இவனுகளுக்கு வலின்னா என்னான்னு

    பதிலளிநீக்கு
  47. பெயரில்லா7:52 PM, நவம்பர் 10, 2010

    அடிதடி வழக்குகளில் தங்க சங்கலியை பறித்ததாய் வழக்கு பதிவு செய்து
    வழக்கின் குற்ற தன்மையை அதிகரிப்பதற்காக செய்வதை போன்று

    குற்றவாளி மேல் சுமத்தபட்ட பாலீயல் குற்றசாட்டு ஜோடிக்கபட்டதாக இருந்தாலும் இருக்கும்

    பதிலளிநீக்கு
  48. நியாயமான கருத்து. போலீஸ் இருமுனை கத்தி. எதிர்முனை யாரையோ காயப்படுத்தியதற்காக மகிழ்ந்தோமானால், மறுமுனை உங்களை காயப்படுத்தும்போதும் பரிதாபப்படமுடியாது.

    பதிலளிநீக்கு
  49. SAW படத்தில் வருவதை விட மோசமான தண்டனை கொடுக்க வேண்டும் என்று பின்னூட்டம் போடும் நண்பர்கள், அந்த மோகன்ராஜ் பொய்யாக போலீசால் கைது செய்யப் பட்டிருக்கக் கூடாதா என்பதை ஏன் ஒரு கணம் சிந்தித்துப் பார்க்க மறுக்கிறார்கள். ஒரு வேளை.. ஒரு வேளை, மோகன்ராஜ் அந்தக் குற்றத்தை செய்யவில்லை என்று வைத்துக் கொள்வோம். இதை விட ஒரு மோசமான குற்றம் என்ன இருக்க முடியும் ? நல்ல பதிவு தோழர். வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  50. தயை செய்து எனது பதிவினைப் பாருங்கள். உங்களது கருத்து வேண்டி.

    பதிவின் தலைப்பு: 'கொண்டு வரச்சொன்னால் கொன்று வரலாமா?'
    http://vettipaechchu.blogspot.com/2010/11/blog-post_10.html

    மக்களின் உணர்ச்சிகளை மட்டுமே இந்த செய்தியில் பார்க்க முடிகிறது. அத்தனை யும் மதிக்கத் தக்கதே. இருப்பினும் தெளிவான சிந்தனையை இழக்கலாகாது என்பது எனது எண்ணம்

    பதிலளிநீக்கு
  51. பெயரில்லா11:24 AM, நவம்பர் 11, 2010

    //சீஸ்ஃபயரில் நீங்களோ //

    cross fire என்று இருந்திருக்க வேண்டுமோ?

    பதிலளிநீக்கு
  52. பெயரில்லா11:26 AM, நவம்பர் 11, 2010

    Poiya losu.. losu tanamana pathivu..

    Ethu pannalum ungaluku elam kutram solrade vellaiya pochi..

    12 yr girle rape pannaduku kedaika vendiya sariyana thandanai tan..

    Losu Bloggers eloraiyum encounter pannanumyaa...

    -Arun

    பதிலளிநீக்கு
  53. பெயரில்லா11:51 AM, நவம்பர் 11, 2010

    போலீஸ் பாதுகாப்புடன் சடலம் எரிப்பு: குழந்தைகளை கடத்திக் கொலை செய்த வழக்கில் சுட்டுக் கொல்லப்பட்ட டிரைவர் மோகனகிருஷ்ணனின் சடலம் போலீஸ் பாதுகாப்பில் எரிக்கப்பட்டது. இறந்த டிரைவரின் சடலம் கோவை அரசு மருத்துவமனையில் நேற்று பகல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. முன்னதாக, நேற்று முன்தினம் இரவு, கோவை அரசு மருத்துவமனைக்கு வந்த மோகனகிருஷ்ணனின் தந்தை ராதாகிருஷ்ணன், மனைவி பிரியா (எ) ஆரோக்கியமேரியின் சகோதரன் பாலகிருஷ்ணன் ஆகியோர் பிரேதத்தைப் பெற்றுக் கொள்வதாக தெரிவித்திருந்தனர். ஆனால் நேற்று இவர்கள் பிணத்தை பெற மறுத்து விட்டனர். இதை தொடர்ந்து, பிரேத பரிசோதனைக்குப் பின் போலீசாரே பிணத்தை பாப்பநாயக்கன் பாளையத்தில் உள்ள மின் மயானத்துக்கு கொண்டு சென்று எரியூட்டினர். போலீஸ் பாதுகாப்பில் வந்த மோகனகிருஷ்ணனின் தந்தை, உறவினர்கள் பிரேதத்தை பார்த்து விட்டு, சில நிமிடங்களில் அங்கிருந்து சென்று விட்டனர்.

    பதிலளிநீக்கு
  54. இப்போது நடந்த என்கௌண்டர் மிக அவசரமாக நடந்தேரியதாகவே தோற்றமளிக்கிறது. அதனால் இந்த ஆதரவு கொஞ்சம் கவலையும் அளிக்கிறது. அந்த பிஞ்சு குழந்தைகளின் கொடூரமான சாவு அந்த அளவு மக்களை பாதித்து இருக்கிறது.

    அதற்காக நீங்க கையும் களவுமாக மாட்டி, குற்றம் நிரூபிக்கப் பட்டு சும்மா ஜெயிலில் வைத்து பாதுகாத்து, பாதுகாப்பு என்ற பெயரில் பணம் விரயம் மற்றும் நேர விரயம் செய்து கொண்டு இருக்கும் கேசுகளையும் சேர்த்து ஒரே தட்டில் வைத்து கருத்து சொல்லுவது சரியா?

    பதிலளிநீக்கு
  55. பெயரில்லா1:21 PM, நவம்பர் 11, 2010

    தமிழ்குரல் போன்ற கம்னாட்டிகள் தான் சமூக விரோதிகள். இவனுங்களை முதலில் போட்டுத் தள்ளனும்.

    சவுக்கு தனது முதுகு அறிப்புக்கு நம்மை சொறியச் சொல்வது இப்போது நடந்து வருகிறது.

    பதிலளிநீக்கு
  56. இததான் நானும் சொன்னேன் .
    பின்னுட்டத்தில் என்னையும் சேர்த்து encounter பண்ண தயார் ஆய்ட்டாங்க
    பொதுபுத்தி போகுற போக்கு பார்த்தா பயமா இருக்கு .

    பதிலளிநீக்கு
  57. பெயரில்லா6:11 PM, நவம்பர் 11, 2010

    அன்பார்ந்த அய்யா,

    தங்களின் பதிவைக் கண்டேன். ரொம்பக் கடைந்தெடுத்து நல்லா உட்கார்ந்து எழுதிருக்கீங்க. உங்களுக்கு என் வானம் நிரம்பிய வாழ்த்துப் புண்னகை அட்டையுடன் கூடிய வாழ்த்துக்கள். இரண்டு நாட்களாக உட்காரும் இடத்தில் கட்டி இருப்பதால் இன்னும் நாலு நாட்களுக்கு லீவு தரும்படி வேண்டுகிறேன்.

    தங்கள் அன்புள்ள..

    தமிழரசு.
    என் கவுண்டர் ஒழிக என்று சொல்லி அமர்கிறேன் நன்றி வனக்கம்!! & சபாஷ்

    பதிலளிநீக்கு
  58. குற்றவாளிகள் சுட்டுக் கொல்லப்பட்டது மனதிற்கு ஆறுதல் அளித்தாலும் , இந்த வழக்கிற்கு அதி முக்கியத்துவம் அளித்து விரைவாக விசாரித்து தூக்குத் தண்டனை அளிக்கப்பட்டு அதுவும் இந்நேரம் நிறைவேற்றப்பட்டிருந்தால் அதை இன்னும் வரவேற்கலாம். ஏனென்றால் , 'இந்த சம்பவம் எதிர்பாராமல் நடந்தது' என்று போலீசாரே சமாளிக்கும் அளவுக்குத்தான் நிலை உள்ளது. இன்னும் எத்தனை பேரை இது போல கொல்ல முடியும். தற்போதைக்கு வேண்டுமானால் இத்தகைய குற்றம் செய்வோரின் மத்தியில் ஒரு பயம் நிலவுமே தவிர சிறிது காலத்திற்குப் பின் மீண்டும் இவை போன்ற கொடூரங்கள் தலை தூக்க வாய்ப்புள்ளது. எனவே, சட்டத்தைக் கடுமையாக்கி அரசே இவர்களைத் தார்மீகமாகக் கொன்றால்தான் நிரந்தரமாக இது போன்ற குற்றங்களைக் குறைக்க முடியும். இந்த வாரம் தவறு செய்தால் அடுத்த இரண்டு வாரத்தில் 'தூக்கு' என்றானால் , தவறு செய்ய எவனும் பயப்படுவான். இந்த விஷயத்தில் போலீசாரின் திறமையைப் பாராட்டியே ஆக வேண்டும்

    பதிலளிநீக்கு
  59. பெயரில்லா3:19 PM, நவம்பர் 12, 2010

    Lucky,
    pls also put up the followup article about john david and an interview from Navarasu father.Thalaivali thanku vandha than theriyum boss.......

    பதிலளிநீக்கு
  60. தமி்ழ் வளன்1:36 PM, நவம்பர் 13, 2010

    மனித உயிர் மிக விலைமதிப்பற்றது அரசுக்கு வரும் நெருக்கடிகளை தவிர்க்க அரசு இவ்வாறன நடவடிக்கை எடுப்பது தன் வினை தன்னை சுடும் என்பதை தெரியாமல் மற்றொரு உயிரை பறிக்க எவனுக்கும் உரிமையில்லை

    நக்சலைட்டுகளிடம் காசு வாங்கிக் கொண்டு, மனித உரிமை பேசுகிறார்கள் என்பது தகப்பன் பேர் தெரியாதவன் சொல்வது நாளை ஆதிக்க சக்திகளின் ஆட்டத்தில் துப்பாக்கி இவர்களை நோக்கி திரும்பாது என என்ன நிச்சயம்

    ஒரு வேளை நக்சலைட்டுகளிடம் காசு வாங்கிக் கொண்டு செயல்பட்டாலும் அது பெருமைக்குரிய விசயம் நக்சலைட்டுகள் அநிதிக்கு எதிராக போரடுபவர்கள் அல்லாது மக்களை சுரண்டுபவர்கள் அல்ல மக்கள் உரிமைக்காக போரடுபவர்கள்

    காலம் சக்கரம் போன்றது ஒரு நாள் உண்மைகள் வெளி வரும் அன்று இனிப்புக்கள் தின்ற வயிறுகள் வெடித்து சிதறும் தங்களது தவறுகளை மறைக்க செய்யும் கொலைகளின் பழி தங்கள் சந்ததிகளை வந்து சேரும் என நினைவிருந்தால் சரி

    பதிலளிநீக்கு
  61. ராமாயணத்தில் ஒரு காட்சி
    வாலியை மறைந்திருந்து தாக்குகிறார் ராமர்
    உடல் முழுதும் அம்புகளால் துளைக்கப்பட்ட வாலி
    ராமரைப் பார்த்து கேட்கிறார்,"ராமா தெய்வப்பிறவியான நீ நேருக்குநேர் நின்று
    தாக்காமல் மறைந்திருந்து தாக்குகின்றையே இது சரியா" எனக் கேட்கிறார்

    ராமர் பதில் கூறுகிறார்
    வாலியே நீ மனிதப்பிறவியல்ல நீ ஒரு விலங்கு .
    விலங்குகளை மறைந்திருந்து தாக்குவது ஒன்றும் தவறில்லை என்கிறார்

    ஆகையால் சட்டம் நீதி என்பதெல்லாம் மனிதர்களுக்கு மட்டும்தான்
    மோகன்ராஜ் போன்ற விலுங்குகளுக்கில்லை

    பதிலளிநீக்கு
  62. பெயரில்லா8:16 AM, நவம்பர் 18, 2010

    யுவகிருஷ்ணா, கோவை குழந்தைகளுக்கு மாத்திரமல்ல,எந்தக் குழந்தைக்குமே நேரக்கூடாதது இது. குழந்தைகளை கசக்கிப் போடும் மிருகங்களைக் கொல்வது தப்பில்லை. உங்கள் குழந்தையையும் இதே போல்ஒருவன் கசக்கிக் கொன்றாலும் என்கவுண்ட்ர் தேவையில்லை எனும் நிலையைத்தான் எடுப்பீர்களா? மனச்சாட்சியோடு பதில் சொல்லுங்கள். யாரோ எவரின் குழந்தைதானே எனும் அலட்சியமே இவ்வாறு எழுத வைக்கிறது. தனக்கு வந்தால்தான் தெரியும் தலைவலியும் காய்ச்சலும்.

    பதிலளிநீக்கு