'நந்தலாலா' வெளிவருவதற்கு ஒரு மாதம் முன்பாக ஒரு கூட்டத்தில் மிஸ்கின் பேசினார். "நான் முதலில் எடுத்த இரண்டு படங்களும் படமே அல்ல. நந்தலாலாதான் முதல் படம்". என்ன ஒரு ஆணவமான பேச்சு? இவரென்ன அவ்வளவு பெரிய டபாடக்கரா என்று நினைத்தேன். ஜெயமோகன் ஒரு படி மேலே போய் 'தமிழின் முதல் படம்' என்கிற அளவுக்கு சொல்கிறார். படம் பார்க்கும்போது தெளிவாக தெரிகிறது. இருவரின் கூற்றும் 100 சதவிகிதம் உண்மை.
அவதார் விமர்சனத்தின்போது சாரு எழுதியிருந்தது நினைவுக்கு வருகிறது. மனிதன் முதன்முதலாக திரையில் படத்தை கண்டபோது என்ன ஆச்சரியம் அடைந்தானோ, அதே ஆச்சரியம் 'அவதார்' காணும்போதும் ஏற்படுகிறது.
எனக்கு 'நந்தலாலா'வை காணும்போது அந்த ஆச்சரியம் ஏற்பட்டது. இதுவரை இந்தியத் திரையுலகில் யாரையெல்லாம், எதையெல்லாம் உச்சம் என்று நினைத்தோமோ, அத்தனை உச்சங்களையும் அனாயசமாக தாண்டியிருக்கிறது 'நந்தலாலா' குழு. இளையராஜாவின் இசை ஆயிரம் ஆஸ்கர்களுக்கு தகுதியானது.
சாகாவரம் பெறப்போகும் மாபெரும் காவியத்தை விமர்சிக்குமளவுக்கு அறிவோ, அருகதையோ நமக்கு இல்லை.
சில பகிர்தல்கள் :
பத்திரிகையாளரான அண்ணன் அருள் எழிலன் ஆட்டோ ஓட்டுனராக ஒரு காட்சியில் நடித்திருக்கிறார். அவரது நடிப்பைக் காட்டிலும், அவரது குரல் வசீகரமானது. தோழர் லிவிங் ஸ்மைல் வித்யா, இந்தப் படத்தில் உதவி இயக்குனராக பணிபுரிந்திருக்கிறார்.
அழகியல் இயக்குனர் டிராட்ஸ்கி மருது. இவருடைய ஸ்டோரி போர்ட் படத்தின் தீம் மற்றும் டோனை சர்வதேச தரத்திற்கு கொண்டு செல்கிறது.
12 வினாடிகள் மட்டுமே தோன்றினாலும் திரைக்கதையில் திருப்பம் கொடுக்கும் பாத்திரத்தில் நாசர்.
80களில் தமிழ் சினிமாவில் வாயாடிப்பெண்ணாக பெயரெடுத்த ரோகிணிக்கு ஒரு வசனம் கூட இல்லை.
சில காட்சிகளில் கண்ணை மூடிக்கொண்டு இசையை மட்டும் கேட்டால், நம் உயிர் பிரிந்து இறகாய் மாறி காற்றில் பறப்பதை உணரலாம்.
படத்தில் இரட்டை ஹீரோக்கள். மிஷ்கின் மற்றும் சிறுவன் அஸ்வத்.
தமிழ் லேண்ட்ஸ்கேப்பை அதன் அப்பட்டமான அழகியல் பண்போடு, அனுபவித்து காட்சியாக்கி இருக்கிறார்கள்.
அன்பும், முரட்டுத்தனமும் மிகுந்த ஏராளமான முகங்கள் படம் நெடுகிலும்.
சினிமாஸ்கோப் என்ற தொழில்நுட்பத்தை முதன்முறையாக உருப்படியாக பயன்படுத்தியிருக்கும் தமிழ்ப்படம்.
படத்தைப் பற்றி மற்றவர்களிடம் பேசும்போது 'ஸ்பாய்லர்' ஆகிவிடுமோவென்று அச்சமாக இருக்கிறது. மார்கழி மாச இரவுநேரப் பேருந்துப் பயணத்துக்கு ஒப்பான 'சிலீர்' அனுபவத்தை தருகிறது நந்தலாலா. கட்டாயம் பாருங்கள்.
இது இந்திய சினிமாவின் மகத்தான படங்களில் ஒன்று.
கண்டிப்பாக பார்க்கவேண்டும் என்கிற ஆவலை தூண்டிவிட்டீர்கள்...
பதிலளிநீக்குஅவர்கள் கூடவே பயணித்து பாதியிலேயே பிரிந்துவிட்ட சோகம்...
பதிலளிநீக்கு//..சில காட்சிகளில் கண்ணை மூடிக்கொண்டு இசையை மட்டும் கேட்டால், நம் உயிர் பிரிந்து இறகாய் மாறி காற்றில் பறப்பதை உணரலாம்..//
பதிலளிநீக்குஇது இப்போதும் - எப்போதும்
இளையராஜாவினால் மட்டுமே முடியும்
பகிர்தலுக்கு நன்றி யுவா :-)
இப்பொழுதெல்லாம் எந்த தமிழ்ப்படம் என்றாலும்.. யாரையாவது தழுவி விட்டார்கள் என்ற குற்றச்சாட்டை சுமத்துகிறார்கள். எனவே பாராட்டுவத்ற்க்குப் பயமாகத்தான் உள்ளது.
பதிலளிநீக்குnice! :))
பதிலளிநீக்குnalla padame.. aanaal kikujiro endra japaniya padathin muzhu thazhuvale nandhalala ena koora padukirathu..ithai mishkin maraikkamal thelivu paduthi irukalam..
பதிலளிநீக்குநன்றி யுவா!! நந்தலாலா ஆகச்சிறந்த படம்...
பதிலளிநீக்குஅவ்வளவு நல்ல படமா? கண்டிப்பாக தியேட்டரில் தான் பார்க்க போகிறேன். படம் நம்ம ஊரில் ஓடுமா என கூறவில்லையே?
பதிலளிநீக்குThanks Yuva
பதிலளிநீக்குசூப்பர் வாத்தியாரே இன்னிக்கு ராவோட ராவா ராவா சரக்கடிச்சுட்டு பாத்துடறேன்
பதிலளிநீக்குஇங்க ஒரு படைப்பும் ஓவரா பேசுது
பதிலளிநீக்குபடைப்பாளியும் ஓவரா பேசுறாரு சரிதானே
////சில காட்சிகளில் கண்ணை மூடிக்கொண்டு இசையை மட்டும் கேட்டால், நம் உயிர் பிரிந்து இறகாய் மாறி காற்றில் பறப்பதை உணரலாம்////
பதிலளிநீக்குஹ்ம். உசுப்பேத்தி விட்டுட்டீங்க. $20 உங்களை நம்பி எடுத்து விடலாம்னு முடிவு பண்ணியிருக்கேன். பாத்துட்டுச் சொல்றேன்.
//இப்பொழுதெல்லாம் எந்த தமிழ்ப்படம் என்றாலும்.. யாரையாவது தழுவி விட்டார்கள் என்ற குற்றச்சாட்டை சுமத்துகிறார்கள். எனவே பாராட்டுவத்ற்க்குப் பயமாகத்தான் உள்ளது.//
பதிலளிநீக்குhttp://santhoshpakkangal.blogspot.com/2010/11/blog-post.html
http://www.jeyamohan.in/?p=9484
உண்மை எதுவானாலும் முயற்சியை பாராட்டுவதே சால சிறந்தது...
//இது இப்போதும் - எப்போதும்
பதிலளிநீக்குஇளையராஜாவினால் மட்டுமே முடியும்
//
இளையராஜாவினால் முடியும் என்பது சரி கருத்து
இளையராஜாவினால் மட்டுமே முடியும் தவறான கருத்து
Kikujiro என்ற ஜப்பானிய மொழி படத்தை இறுக்கமாகவே தழுவி எடுத்து இருக்கிறார்கள். என்னவோ போங்க..அமீர் செஞ்சப்ப அந்த குதி குதிச்சாரு சாரு..இப்போ அமைதிதான்..மணி சார் அமோரஸ் பெரோஸை ஆயுத எழுத்தாக்கினப்போ வறுத்தெடுத்த சாரு எங்கே? கோவப்படாம இந்த சுட்டிய பாருங்க:
பதிலளிநீக்குhttp://www.youtube.com/watch?v=te5gmO6nj9w
இந்தப் படத்தின் இசையை "சாரு", கரகாட்டக்காரன் படத்தின் இசை மாதிரி இருக்கு என்றுச் சொல்லித் திரிகின்றாரே... என்ன அநியாயம்
பதிலளிநீக்குஇந்த வாரம் விகடன்ல சொல்லிட்டாரு.. அடுத்த படம் ஆர்யாவுடனாம். அந்த திரைக்கதைதான் அவர் எழுதியதிலே சிறந்ததாம். நந்தலாலாவை விடன்னு சொல்றாரு. :)
பதிலளிநீக்குசத்தியமா கேட்கறேன் உங்களுக்கு மனசாட்சின்னு ஒன்னு இருக்கா, இல்ல படம் பார்க்கும்போது வீட்டுல மறந்துட்டு போய்டீங்களா ?
பதிலளிநீக்குcamera மற்றும் இசை இல்லேன்னா இந்த படத்துல பத்துநிமிஷதுக்கு மேல உட்கார வேலையே இல்லை.
தமிழ் மக்கள் மிஸ்கினின் முந்தைய ரெண்டு படத்தையும் கண்டு பிரமித்துதான் இருகிறாங்கள், குறைந்தபட்சம் ஏன் அளவில் அப்படிதான். அனால் அதை விட இது நல்ல படம் என்று நீங்கள் எண்ண காரணத்தால் ஒப்புகொள்கிறீர்கள்?
பாராட்ட கோடி விஷயங்கள் உண்டு இந்த படத்தில், அனால் "இது இந்திய சினிமாவின் மகத்தான படங்களில் ஒன்று" இதெல்லாம் ரொம்ப ரொம்ப மிகை படுத்த பட்ட வார்த்தைகள்.
முக்கியமான பாத்திரங்கள் ஆச்சர்ய படுதிருகிரார்கள். மிஸ்கினின் நடிப்பு முயற்சி அபாரம், பல இயக்குனர் நடிகர்கள் நிச்சயம் கவனிக்க வேண்டியது.
மிஸ்கினின் பாத்திரம் மனநிலை சரி இல்லை, சரி... அதற்காக தமிழ் நாட்டில் தெருவில் செல்வோர் எல்லோரும் அப்படிதானா - சத்தியமாக ஒரு நல்ல படத்தில் ஒப்புகொள்ள முடியாத ஒன்று. "கத்தாழ கண்ணால குத்தாத" இந்த படத்திற்கு கொஞ்சம் கூட தேவையே இல்லாத ஒரு பாத்திரம். அவரை நீக்கி விட்டால் கூட படத்தில் எதுவும் காணமல் போன உணர்வே இல்லை. ஒவ் ஓவரு பத்திரமும் ஏனோ அநியாயத்துக்கு மௌனம், கொஞ்சம் கூட இயல்பாக இல்லை. இதற்க்கு அற்புதமான மாறுபாடு highway patrol- காரர் அனால் அவரும் இவர்களை சாதாரணமாக விட்டு விட்டு செல்வதும் ஏற்காத ஒன்று... இது போல் கதையின் ஓட்டம் நெடுக இப்படி நெளிய வெய்கும் விழயங்கள் ஏராளம். ஒரு பெரிய நாயகன், வின் உயர cut out நிச்சயம் திரைஅரங்கில் இருக்கும், பால் அபிஷேகம் உண்டு என்றால் நான் குரிபிட்டவை எல்லாம் நிச்சயம் குறைகளே அல்ல. பிரமிக்க வெய்த இரண்டு படம் குடுத்தவர். "பாருங்கடா இதுக்கு பேரு தான் படம் எடுக்குறது" என்று செவிட்டில் அறைந்தவரிடன் நிச்சயம் இது எதிர் பார்க்க வில்லை, காரணம் மேலே சொன்ன குறைகள் அனைத்தும் இயக்குனரையே சாரும்.
மிஸ்கின் இந்த படத்தில் அவருக்கே ஞாயம் செய்யவில்லை...
மேலும் அவரே நான் முன்பு எடுத்ததெல்லாம் படம் இல்லை என்று கூறினால், தலைஎழுத்து, அவர் இன்னும் ஒன்றுமே புரிந்து கொள்ளவில்லை. ஆழ்ந்த அனுதாபங்கள்.
இப்படி இவ்வளவு வன்மையாக விமரிசிக்க காரணம், நல்ல படம் எடுப்பவர் நொள்ளை என்று ஒன்று கொடுத்தால் கண்மூடித்தனமாக ஏற்பதும் ஒரு நல்ல ரசிகன் செய்யும் துரோஹம்.