23 நவம்பர், 2010

நகரம் மறுபக்கம்

பரபரவென்று நகரும் காட்சிகள். பிரேம்-பை-பிரேம் உழைத்து செதுக்கிய சீன்கள். ஃபாரின் கனவுப் பாடல்கள் இல்லை. பஞ்ச் டயலாக்குகள் இல்லை. பத்து பேரை தூக்கிப் போட்டு பந்தாடும் பம்மாத்து ஆக்‌ஷன் இல்லை. சுந்தர்.சி-யை வைத்து மற்ற இயக்குனர்கள் எப்படியெல்லாம் படமெடுப்பார்களோ, அப்படியெல்லாம் இந்தப் படம் இல்லவே இல்லை. ரியாக்‌ஷனே தரமுடியாத தன்னுடைய முகவெட்டுக்கு ஏற்றமாதிரியாக 'கேட் செல்வம்' பாத்திரத்தை வடிவமைத்து கச்சிதமாக 'கோல்' போட்டிருக்கிறார்.

சொந்தப்படம் என்பதாலோ என்னவோ, 'பக்கா'வாக திட்டமிட்டு பலாப்பழம் மாதிரி பந்தாவான படத்தை எடுத்திருக்கிறார். பதினைந்து கால ஆண்டு அனுபவம் தந்திருக்கும் செய்நேர்த்தி படத்தின் ஒவ்வொரு ஃப்ரேமிலும் மிளிர்கிறது. வெல்டன் சுந்தர்.சி.

சுந்தர்.சி நாயகனாக அறிமுகமான 'தலைநகரம்' படத்தின் இரண்டாம் பாகம் மாதிரி கிட்டத்தட்ட இருக்கிறது. அதே டெம்ப்ளேட் கதை. படத்துக்கு இரண்டு கிளைமேக்ஸ். 'நாடோடி' ஸ்டைலில் இண்டர்வெல் பிளாக்குக்கு ஒன்றும், படத்தின் முடிவுக்கு மற்றொன்றும். சிறையில் இருந்து வெளியே வந்து திருந்தி வாழ நினைக்கும் கேங் லீடருக்கான பிரச்சினைகள். காவல்துறையில் பணியாற்றும் சில ஓநாய்களின் கருப்புப் பக்கம். துறைமுக 'சரக்கு' கடத்தல் கசமுசா. துப்பாக்கி. போட்டுத் தள்ளுதல் என்று சரசரவென்று ஹாலிவுட் பாணி திரைக்கதை.

படத்தின் முதல் பாகம் 'வீக்' என்று சுந்தர்.சி-க்கே தெரிந்திருக்கிறது. வடிவேலுவை வைத்து ஒப்பேற்றுகிறார். திரைக்கதையின் திடீர் ட்விஸ்ட்டுகள், காமெடி டிராக்குக்கும் அமைக்கப்பட்டிருப்பது தமிழுக்கு ரொம்பவே புதுசு. பொதபொதவென ஊதிவிட்ட வடிவேலு உடலை மூலதனமாக்கி காமெடி செய்கிறார். ஒரு கட்டத்தில் சிரித்து சிரித்து வயிறு வெடித்துவிடுமோவென்று அஞ்சி 'தம்' அடிக்க வெளியே செல்லக்கூடிய அளவுக்கு தடாலடி காமெடி. பர்ஸ்ட் ஹாஃப்பின் பெரும்பகுதியையும் வடிவேலுவின் தொப்பையே தனியாக நின்று சுமக்கிறது.

பாடல்கள் ரொம்ப சுமார் என்பதை இயக்குனர் உணர்ந்திருக்கிறார். புத்திசாலித்தனமாக எல்லா பாடல்களுக்கும் இடையே காட்சிகளை சொருகி, ரசிகனுக்கு ஏற்படவிருந்த அலுப்பையும், ஆயாசத்தையும் தவிர்க்கிறார்.

ஒரு சாதாரணக் காட்சி. சுந்தர்.சி. ஆட்டோவில் போகிறார். ஆட்டோ நிற்கும்போது 'டயருக்கு' அடியில் கேமிராவை வைத்து 'பிரேக்' அடிக்கிறார்கள். காட்சி கலக்கலாக 'ஜெர்க்' ஆகிறது. இம்மாதிரியான டெக்னிக்கல் இண்டெலிஜென்ஸ் படம் முழுக்க எல்லாக் காட்சிகளிலும் விரவிக் கிடக்கிறது.

படத்தின் சுவாரஸ்யத்துக்கு 'காஸ்டிங்' ஒரு முக்கியக் காரணம். ஹீரோவின் போலிஸ் நண்பராக வரும் போஸ் வெங்கட்டின் மீசை கூட வில்லத்தனத்தோடு நடிக்கிறது. இவரும் பாண்டிச்சேரி பாயாக வரும் சீனிவாசனும்தான் படத்தின் ரியல் ஹீரோக்கள். நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரையில் தோன்றும் சீனிவாசன், சில நிமிடங்களே தோன்றினாலும் பல வருடங்களுக்கு நினைவுகூறத்தக்க நடிப்பை தந்திருக்கிறார்.

க்ளைமேக்ஸ் சோகம் தேவையற்றது. இனி 'சுபம்' போட்டு ஒரு நல்ல கமர்சியல் தமிழ்ப்படம் முடியும் நாள் எந்நாளோ? பருத்திவீரனின் ஆண்டி-க்ளைமேக்ஸ் ஜூரம் தொடர்ந்துகொண்டே போகிறது.

அனுயாவைப் பற்றி ஒரு பத்தி எழுதாவிட்டால் இந்த விமர்சனம் எழுதியவருக்கு நரகத்தில் கூட இடம் கிடைக்காது. சின்ன முகம். ஒடுங்கிப் போன உல்லான் கண்கள். மெகா சைஸில் (34? or 36?) கழுத்துக்கும் இடுப்புக்கும் இடைப்பட்ட பிரதேசம். இடுப்பு சைஸ் 28 தானிருக்கும். ஆல்ஃப்ஸ் மலை வண்ண தேகம். விரிவாக பி.எச்.டி. செய்யுமளவுக்கு ஆராயப்பட வேண்டிய சமாச்சாரமான குண்டுமல்லி மொக்கு வடிவ தொப்புள். அந்த மழைப்பாடல் காட்சியில் தாராள முதுகு காட்டி, திரும்பிப் பார்த்து ஒரு விழிவீச்சு கொடுக்கிறார் பாருங்கள். 87 வயது இளைஞர்களுக்கு கூட சித்தப்பிரமை பிடித்துவிடும். ச்சே.. க்ளைமேக்ஸுக்கு முன்பாக சுந்தருக்கு ஒரு லிப்-டூ-லிப். பொறாமையாகவும், ஆற்றாமையாகவும் இருக்கிறது. அனுயா ஐ லவ் யூ. 'ம்'மென்று சொல்லுங்கள். நீங்கள் போட்டிருக்கும் ப்ளூகலர் ஜாக்கெட்டின் பித்தளை ஊக்காக மாறி, எஞ்சிய வாழ்நாளை கழித்து விடுகிறேன். (அன்பார்ச்சுனேட்லி பேக் ஓபன், இட்ஸ் ஓக்கே)

நகரம் மறுபக்கம் – தவிர்க்க இயலாத படம். தமிழ் சினிமாவுக்கு ரியல் ஆக்சிஜன்.

18 கருத்துகள்:

  1. அனுயா கூட அவளை பற்றி இப்படி நினைக்கமாட்டா?பாவம்ய உஙக கண்ணே பட்ரும் போல...முதல்ல சுத்திபோடனும்...விமர்சனம் அருமை...

    பதிலளிநீக்கு
  2. விருத்தகிரி ஆடியோ விமர்சனம் எங்கே தல?

    பதிலளிநீக்கு
  3. //சின்ன முகம். ஒடுங்கிப் போன உல்லான் கண்கள். மெகா சைஸில் (34? or 36?) கழுத்துக்கும் இடுப்புக்கும் இடைப்பட்ட பிரதேசம். இடுப்பு சைஸ் 28 தானிருக்கும். ஆல்ஃப்ஸ் மலை வண்ண தேகம். விரிவாக பி.எச்.டி. செய்யுமளவுக்கு ஆராயப்பட வேண்டிய சமாச்சாரமான குண்டுமல்லி மொக்கு வடிவ தொப்புள்.//

    படத்தோட ஹீரோ சுந்தர் சி. யை விட ஜாஸ்தி ரசித்து இருக்கீங்களே தலைவா?

    பதிலளிநீக்கு
  4. தல,
    இன்றுதான் படம் பார்த்தேன். படம் என்னவோ ஒக்கே தான். ஆனால் முதல் பாகத்தில் வரும் அலுப்பையும், இரண்டாம் பகுதியில் வரும் தேவை இல்லாத காமெடியையும் தவிர்த்து இருக்கலாம்.

    ஆனால் அந்த கடைசி நாற்பது நிமிடங்கள் நன்காகவே வைத்து இருந்தார்கள்.

    ஒரே ஒரு கேள்வி: (தமிழ் தெரியாத நண்பர் இருவருடன் படம் பார்த்ததால் அவருக்கு பல காட்சிகளை விளக்க வேண்டி இருந்தது. அப்போது பல வசனங்களை மிஸ் செய்து விட்டேன்) அந்த குழந்தை மேட்டர் என்னது? எப்போது இது நடந்தது? இந்த சீக்குவேன்சை மிஸ் செய்துவிட்டேன்.

    பதிலளிநீக்கு
  5. கிங் விஸ்வா!

    வழக்கம்போல படம் ஆரம்பித்து பத்து நிமிடம் தாமதமாக உள்ளே போயிருப்பீர்கள் என்பதை புரிந்துகொள்ள முடிகிறது :-)

    படத்தின் ஆரம்பக்கட்ட காட்சிகளில் அந்த பேனரில் இருப்பதைப்போல ஒரு குழந்தை பெற்றுக்கொண்டு, அமைதியாய் வாழ்வதுதான் லட்சியம் என்று கேட்டு செல்வம் சொல்வார்.

    க்ளைமேக்ஸில் அந்த குழந்தை செண்டிமெண்டைதான் ‘டச்’ செய்திருக்கிறார்கள்.

    பதிலளிநீக்கு
  6. \\87 வயது இளைஞர்களுக்கு கூட சித்தப்பிரமை பிடித்துவிடும்.\\

    உடனே அது கலைஞரை தான் குறிக்குதான்னு யாருக்காவது சந்தேகம் வந்தா கம்பனி பொறுப்பாகாதுன்னு ஒரு டிஸ்கி போட்டிருக்கலாம்:-))

    பதிலளிநீக்கு
  7. ==== க்ளைமேக்ஸ் சோகம் தேவையற்றது. இனி 'சுபம்' போட்டு ஒரு நல்ல கமர்சியல் தமிழ்ப்படம் முடியும் நாள் எந்நாளோ? ====

    பயணங்கள் முடிவதில்லை,வாழ்வே மாயம் என்று முன்பு எப்போதாவது ஒன்று வரும்.சமீப காலங்களில் பாலா போன்ற வக்கிர மனம் படைத்தவர்கள் மீண்டும் ஆரம்பித்து வைத்தது.சமீபத்தில் வந்த மைனா க்ளைமாக்சை பாருங்கள். நல்ல படத்துக்கு என்ன ஒரு கொடுமையான முடிவு. படம் முடிந்து போகிறவர்கள் கண்ணை கசக்கிக்கொண்டு போனால் படத்தின் வெற்றி உறுதி என்று நம்பும்வரை இப்படித்தான்.

    பதிலளிநீக்கு
  8. இந்தப் படம் உங்களுக்கு 'மிகவும்' பிடித்திருப்பது ஆச்சரியமாக இருக்கிறது.எனக்கு ஏனோ இந்தப்படம் பிடிக்கவில்லை.

    பதிலளிநீக்கு
  9. Ohhh... Sundar. C-yum DMK aala? athuthan ivvalavu support-a?

    .....

    Ithai naan ketkalainga... unga ethiringa ketpanga.....

    பதிலளிநீக்கு
  10. அனுயா படத்தை சுடச்சுட ஸ்க்ரீன்சேவர் ஆக்கியாச்சு... என்ன பார்வைடா சாமி அது.... நான் என்ன நினைச்சேனோ அதை எழுதி இருக்கீங்க லக்கி..

    பதிலளிநீக்கு
  11. கடைசி பாரா மட்டும் 4 தடவ படிச்சேன்.. பொறாமையாகவும், ஆற்றாமையாகவும் இருக்கு.. ஏன்னா நான் இன்னும் படம் பார்க்கல :(

    பதிலளிநீக்கு
  12. //விரிவாக பி.எச்.டி. செய்யுமளவுக்கு ஆராயப்பட வேண்டிய சமாச்சாரமான குண்டுமல்லி மொக்கு வடிவ தொப்புள்.//

    விமர்சனம் அருமை... தலைவா

    பதிலளிநீக்கு
  13. பெயரில்லா6:14 PM, நவம்பர் 25, 2010

    Yuvakrishna,

    Your writings on Tamil cinema heroines are interesting (may be due to your audiences - people like me). Keep it up. If you are not married then after marriage don't change this style. In case, you are married and still you are writing like this then you are very lucky(look).

    Mohan

    பதிலளிநீக்கு
  14. பெயரில்லா9:21 PM, நவம்பர் 25, 2010

    //
    நகரம் மறுபக்கம் – தவிர்க்க இயலாத படம். தமிழ் சினிமாவுக்கு ரியல் ஆக்சிஜன்.
    //
    மொத்த படத்துக்கும் இதுதாங்க செம காமெடி. :)
    =ஜெகன்

    பதிலளிநீக்கு