2 நவம்பர், 2010

MIB - Men in Blogs

ஜாக்கி சேகர், கேபிள் சங்கர், வால்பையன், ஆல்-இன்-ஆல் ராஜன், பன்னிக்குட்டி ராமசாமி, பலாபட்டறை ஷங்கர், ராம்ஜி யாஹூ, வெறும்பய, ரமேஷ்-ரொம்ப நல்லவன் (சத்தியமா), மங்குனி அமைச்சர், குசும்பன், கஞ்சா கருப்பு, குடுகுடுப்பை, எல் போர்ட் – பீ சிரியஸ், ராயல்ராஜ் (பெயரில் மட்டும்) – இவர்களெல்லாம் யார்?

* - * - * - * - * - * - * - * - * - * - * - * - *

முன்பெல்லாம் ஊரில் சிலர் எப்போது பார்த்தாலும் கதையோ, கவிதையோ எழுதிக் கொண்டிருப்பார்கள். வெளிவரும் எல்லாப் பத்திரிகைகளுக்கும் தங்களுடைய படைப்பை அனுப்பி, அவை திரும்பி, திரும்ப வேறொரு படைப்பை அனுப்பி, அதுவும் திரும்பி.. இப்படியே விக்கிரமாதித்தன் – வேதாளம் கதைதான் நடக்கும். நொந்துப்போன அந்த படைப்பாளி 'கையெழுத்துப் பத்திரிகை' தொடங்கி விடுவார். இதற்குப் பிறகாக தன் பத்திரிகையை படிக்கச் சொல்லி தன்னுடைய சுற்றுவட்ட நண்பர்களையும், உறவினர்களையும் அணுக அவர்கள் தலை தெறிக்க இட்த்தைக் காலி பண்ணிக் கொண்டு ஓடுவார்கள் 

கொஞ்சம் 'பசை'யுள்ள படைப்பாளியாக இருக்கும் பட்சத்தில், லோக்கல் பிரிண்டிங் பிரஸ்ஸில் மாதாமாதம் கைக்காசைப் போட்டு அச்சடித்து, சொந்தமாக 'பத்திரிகை ஆசிரியர்' ஆகிவிடுவார். கடைகளில் யாரும் வாங்கமாட்டார்கள் என்பதால், செல்போன் எஸ்.எம்.எஸ். வியாபாரி போல கிடைக்கும் முகவரிக்கெல்லாம் அனுப்பிவைத்து 'கொசுக்கடி தாங்கமுடியலையடா நாராயணா' என்று நொந்து கொள்ளச் செய்வார். அந்தப் படைப்பாளியிடம் நம் முகவரி மாட்டிக் கொண்ட காரணத்தாலேயே மாதாமாதம், அவருடைய இலக்கிய அவஸ்தையை பொறுத்துக் கொண்டு போயாகவேண்டும். எங்கேயாவது நேரில் பார்த்துவிட்டால் "ஏப்ரல் மாசம் உங்களைப் பத்தி ஒரு பின்நவீனத்துவக் கவிதை எழுதியிருந்தேனே.. படிச்சீங்களா?" என்று கேட்டுத் வைப்பார். நாம் ஙே!

இதெல்லாம் அந்தக் காலம். டெக்னாலஜி ஈஸ் ஸ்..சோஓஓஓஓ... மச் இம்ப்ரூவ்ட். கையெழுத்துப் பத்திரிகையாகவும், லோக்கல் இலக்கியப் பத்திரிகையாகவும் படைப்பாளிகள் இலக்கியச் சேவை ஆற்றிய காலம் முடிந்துவிட்டது. தகவல் தொழில்நுட்பப் புரட்சியின் ஏதோ ஒரு பக்கவிளைவாக கையெழுத்துப் பத்திரிகைக் கவிஞர்கள் இப்போது உலகளவில் புகழ் பெற்ற கவிஞர்களாகவும், கவிதாயினிகளாகவும்  ஆகிவிட்டார்கள். இலக்கியத்தில் புரட்சி பூத்துவிட்டது!

* - * - * - * - * - * - * - * - * - * - * - * - *

சினிமா, அரசியலுக்கு அடுத்து பதிவுலகில் மவுசு இலக்கியத்துக்குதான். ஏனெனில் எப்படி எழுதினாலும் கவிதை, கதை என்கிற வடிவம் இலக்கியமென்று இங்கே நம்பப்படுகிறது. வலைப்பதிவர்களில் 95 சதவிகிதம் பேர் கவிஞர்களாகவும் இருக்கிறார்கள். சுனாமியா? பூகம்பமா? அயோத்தி தீர்ப்பா? ஈழமா? – இருக்கவே இருக்கிறது கீபோர்டு. தட்டு ஒரு கவிதையை அல்லது கட்டுரையை. அள்ளிக்கொள்ளு பின்னூட்டங்களை.

* - * - * - * - * - * - * - * - * - * - * - * - *

'பிரபல' போட்டியில் இப்போது பிரதானப் போட்டியாளர்களாக இருப்பவர்கள் ஜாக்கிசேகரும் (jackiesekar.com), கேபிள் சங்கரும் (cablesankar.blogspot.com). உலகளவில் இணையத் தளங்களின் பிரபலத்தை அளவிடும் 'அலெக்ஸா' தரவரிசையில் முதல் ஒரு லட்சம் இடங்களுக்குள் இருப்பவர்கள் இவ்விருவரும். இந்திய அளவில் முதல் பத்தாயிரம் இடங்களுக்குள்ளாக இருக்கிறார்கள்.

* - * - * - * - * - * - * - * - * - * - * - * - *

பேன நட்பு அருகிப்போன இக்காலத்தில், வலைப்பதிவுகள் மூலமாக உருவாகும் நட்புகள் மிக முக்கியமானவை. இணையங்களில் "முஸ்தபா முஸ்தபா" பாடிச்செல்லும் தோழர்கள் வலைப்பதிவுகளால் பெருகியிருக்கிறார்கள். இந்த நட்பு வட்டம் ஆரோக்கியமான சில சமூகப் பணிகளுக்கும் பயன்பட்டிருக்கிறது. வலைப்பதிவர்கள் இணைந்து பொதுப்பணிகளுக்கு நிதித்திரட்டுவது, உயிர்காக்கும் சேவைகளை செய்வது என்று ஈடுபடுகிறார்கள். சுனாமி நேரத்தில் இவர்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டதை இதில் முக்கியமாக குறிப்பிடலாம்.

நட்பு மட்டுமல்ல. வலைப்பதிவுகளால் 'காதல் கோட்டை' கட்டப்பட்டு, கல்யாணத்தில் முடிந்த சுவையான சம்பவங்களும் சில உண்டு.

* - * - * - * - * - * - * - * - * - * - * - * - *

நாளை காலை தமிழகத்தின் எல்லா பேப்பர் கடைகளில் தொங்கப் போகும் புதிய தலைமுறை தீபாவளி இதழில் வெளியாகவிருக்கும் 'வலைவீசம்மா வலைவீசு' கட்டுரையிலிருந்து சில பகுதிகள். ஏ4 அளவில் ஐந்து பக்கங்களுக்கு வலைப்பதிவுகளைப் பற்றி விரிவாக எழுதப்பட்டிருக்கும் கட்டுரையை வாசிக்க.. புதிய தலைமுறை படிங்க... அது உங்க வெற்றிப் படிங்க...

24 கருத்துகள்:

  1. அருமை யுவா..

    தலைப்பு அருமை.

    வலைப்பதிவர்களை பெருமை சேர்த்துள்ளீர்கள்..

    கட்டுரையில் சில வலைப்பதிவர்களின் முகவரி தந்துள்ளீர்களா?

    பதிலளிநீக்கு
  2. கட்டுரை ஆரம்பத்துல ஏதோ குத்தி காட்டுற மாதிரி ஆரம்பிச்சி.. அழகா முடிச்சிருக்கீங்க.. அருமை நண்பா

    பதிலளிநீக்கு
  3. காவேரியண்ணே! நன்றி. 50க்கும் மேற்பட்ட பதிவர்களின் வலைப்பதிவு முகவரியை கொடுத்திருக்கிறேன். இடநெருக்கடி காரணமாக எல்லாப் பதிவர்களையும் அறிமுகப்படுத்த முடியவில்லை. தமிழ் வலைப்பதிவுகளைப் பற்றி 200, 300 பக்கங்களில் ஒரு புத்தகமே எழுதலாம் :-)

    பதிலளிநீக்கு
  4. பெயரில்லா12:06 PM, நவம்பர் 02, 2010

    ஏதோ பழக்கப்பட்ட பெயர்களாக இருக்கிறதே என்று படிக்க ஆரம்பித்தேன். யாரையும் சாடி எழுதாமல் பொதுவாக முடித்துள்ளீர்.
    நன்றாக உள்ளது.

    பதிலளிநீக்கு
  5. முழு கட்டுரையையும் வாசிக்க ஆவலாக உள்ளது. இணையத்தில் நாளை கிடைக்குமா ?

    விஜய்

    பதிலளிநீக்கு
  6. தங்களது இக்கட்டுரை வலைப்பதிவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் இருக்கும் என்பதில் ஐயமில்லை. அவசியம் புதிய தலைமுறை வாங்கி படிக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  7. என் பேர் வர்ல்லிங்க...

    பதிலளிநீக்கு
  8. சூப்பர் பாஸ்! அதிலும் வலைப்பதிவின் தோற்றுவாய் பற்றிய விளக்கம் அருமை. ஆமா நீங்கதானே பதிவுலக சூப்பர் ஸ்டார்னு கேள்விப்பட்டேனே! :)

    பதிலளிநீக்கு
  9. அடடா என்னோடதும் கொடுத்திருக்கீங்களா அண்ணா ..?
    ஹி ஹி ஹி .

    பதிலளிநீக்கு
  10. நான் இருக்கேனா லக்கி அந்த 50ல்???

    பதிலளிநீக்கு
  11. /*வலைப்பதிவர்களில் 95 சதவிகிதம் பேர் கவிஞர்களாகவும் இருக்கிறார்கள்*/

    உண்மைதான்! தமிழில் சுலபமாய் எழுத வருவது கவிதை என்பதாலோ? நாலு வரியை விட்டுவிட்டு எழுதினால் முடிஞ்சது வேலை.

    பதிலளிநீக்கு
  12. வித்தியாசமாக இருப்பதாலேயே எனது பெயரை Men In Blogs லிஸ்டில் சேர்த்திருக்கும் இந்த ஆணாதிக்கத்தனத்தை எதிர்க்கிறேன் :)).. நானு பெண்ணுங்கோ...

    பதிலளிநீக்கு
  13. ரொம்ப நன்றி யுவா கட்டுரையில் என் பெயரையும், என் வலைப்பூ முகவரியையும் (?!) குறிப்பிட்டதற்கு

    பதிலளிநீக்கு
  14. தல முதல் பாரால உள்குத்து எதுவும் இல்லையே...

    பதிலளிநீக்கு
  15. சூப்பர். கண்டிப்பா வாங்கி படிக்கிறேன் தோழா. உங்களுக்கு நன்றியும் தீபாவளி வாழ்த்துக்களும்

    பதிலளிநீக்கு
  16. @ புவனா.,

    // Why only Men? No women in Blogs....? //

    அட எதுக்கெடுத்தாலும் இப்படி
    ஒரு கேள்வி கேட்டுடறாங்கப்பா..

    இப்ப " Ladies Spl " பஸ் ஓடுது..
    நாங்க என்னிக்காவது " Mens Spl " பஸ்
    எங்கேன்னு கேட்டு இருக்கோமா..?!!

    இது MIB..

    அடுத்து WIB எழுதுவாரு..
    கொஞ்சம் பொறுத்துக்கோங்க..

    பதிலளிநீக்கு
  17. அட என் ப்ளாக் பெயரும் இருக்கு!

    நன்றி தல!

    பதிலளிநீக்கு
  18. ரெண்டு வருசத்துக்கு மேலா பதிவுகளை படிசுகிட்டு வரேன்.அப்பப்ப கமென்ட் போடுறதோட சரி.
    ஒரு பதிவு எழுதனும்னு தோணி,எழுதியும் பாத்தாச்சு.கடை விரித்தேன் கொள்வாரில்லை கேஸ்தான்.
    ப்ளீஸ் என் பதிவ படிச்சுட்டு,தேறும் தேறாதுன்னு ஒரு வார்த்தை சொல்லுங்களேன் தோழரே!

    பதிலளிநீக்கு
  19. /
    பேன நட்பு அருகிப்போன இக்காலத்தில்
    /

    மூத்த பிரபல பதிவர் நீங்களே இப்பிடி எழுதலாமா??

    பதிலளிநீக்கு
  20. படிக்கிறதுக்கு ஆளு கெடச்சா எத வேணா எழுதலாம்னு எழுதிக்கிட்டு இருக்கேன், நம்மலையும் லிஸ்ட்ல சேத்துட்டீங்களே? பைதி பை, நாளைக்கி டெல்லி போறேன். ஹோம் மினிஸ்டர்கிட்ட பேசி உங்களுக்கு மினிஸ்ட்ரில எடம் பாத்து வெக்கிறேன்!

    பதிலளிநீக்கு
  21. //பன்னிக்குட்டி ராம்சாமி 6:00 PM, November 04, 2010
    படிக்கிறதுக்கு ஆளு கெடச்சா எத வேணா எழுதலாம்னு எழுதிக்கிட்டு இருக்கேன், நம்மலையும் லிஸ்ட்ல சேத்துட்டீங்களே? பைதி பை, நாளைக்கி டெல்லி போறேன். ஹோம் மினிஸ்டர்கிட்ட பேசி உங்களுக்கு மினிஸ்ட்ரில எடம் பாத்து வெக்கிறேன்//

    *********

    யோவ் பன்னிக்குட்டி....

    அஞ்சாநெஞ்சன் ரொம்ப நாள் கழிச்சு நாளைக்கு டெல்லி வர்றாராமாம்....

    பார்த்து சூதானமா நடந்துக்கப்பு.... அம்புடுதேன்...

    பதிலளிநீக்கு