சென்னைவாசிகளுக்கு இந்த அனுபவம் அடிக்கடி 'கெயிட்டி' தியேட்டரில் கிடைத்திருக்கும். நீண்ட காலத்துக்குப் பிறகு சமீபத்தில் 'சிந்து சமவெளி' வாயிலாக இந்த அனுபவம் நமக்கு கிடைத்தது. அந்த கொடூரத்தின் சுவடு மறைவதற்கு முன்பாகவே இப்போது மல்லிகா ஷெராவத் மூலமாக 'ஹிஸ்'ஸில் சேம் பிளட். "ஏகப்பட்ட பிட்டு, அள்ளிக்கோங்க" என்று போஸ்டரில் கடைவிரித்து, திரையில் குழந்தைகளுக்கான படம் கொடுக்கும் பாசிஸ குணம் கொண்ட இயக்குனர்கள் மீது யாராவது நல்லுள்ளம் கொண்ட வழக்கறிஞர்கள் பொதுநல வழக்கு தொடுத்தால் நன்று.
இந்த கந்தாயத்தை ஹாலிவுட்டில் இருந்து பெண் இயக்குனர் ஒருவர் வந்து இயக்கித் தொலைக்க வேண்டுமா என்று புரியவில்லை. தமிழிலேயே இராம.நாராயணன் இதைவிட மிகச்சிறந்த 'பாம்பு' படங்களை உலகத்தரத்தில் இயக்கியிருக்கிறார். படத்தில் கதை இல்லை. திரைக்கதை இல்லை. பாடல்கள் இல்லை. நல்ல இசை இல்லை. நல்ல நடிப்பும் இல்லை. இதெல்லாம் இல்லை என்பதைக் கூட பொறுத்துக் கொள்ளலாம். போஸ்டரில் போட்ட 'சீன்கள்' கூட இல்லையென்பதைத்தான் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. நம்மூர் இயக்குனர்களெல்லாம் கோயிஞ்சாமிகள் போலவும், ஹாலிவுட் இயக்குனர்கள் அறிவு ரோபோக்கள் என்றும் திரைப்பட விழாக்களில் பேசும் ஆட்கள் இனியாவது திருந்தவேண்டும்.
இச்சாதாரி பாம்பு ஒன்றின் பழிவாங்கல்தான் கதையாம். கிழிஞ்சது லம்பாடி லுங்கி. இவ்வளவு அருவருப்பாக பாம்பை பிரெசண்ட் செய்ய முடியுமா என்று அதிர்ச்சியைக் கிளப்பியிருக்கிறார் இயக்குனர். நேரடி நிர்வாணக் காட்சிகள் ஏராளமாக இருந்தாலும், அவையெல்லாம் கலைத்தன்மையோடு (?) இயக்கப்பட்டுத் தொலைத்திருப்பதால், எதுவுமே எழுந்து தொலைக்க மாட்டேன் என்கிறது. ஐ மீன், ஆச்சரியமோ, அதிர்ச்சியோ அல்லது வேறு ஏதேனும் அதிரடி உணர்ச்சியோ எழவில்லை. இந்த அழகில் 10,000 BC ரேஞ்சுக்கு படத்தின் ஓபனிங் சீங்கை சிறப்பான மொக்கைத்தன்மையில் எடுத்திருக்கிறார்கள்.
படத்தின் இசையமைப்பாளர் அனேகமாக இதற்கு முன்பாக அரசுத் தொலைக்காட்சியின் இழவுச் செய்திகளுக்கு வயலின் வாசித்தவராக இருந்திருக்கக் கூடும். இயக்குனர் பரபரப்பாக படம் பிடித்ததாக நினைத்த காட்சிகளில் கூட பின்னணியில் ஒப்பாரி வைக்கிறார். படத்தின் மொன்னைத் தன்மையை மீறி இர்பான் கான் மட்டும் கொஞ்சம் உருப்படியாக நடித்திருக்கிறார். அவருடைய மனைவியாக வரும் திவ்யா தத் நல்ல சந்தனக் கட்டை. கட்டையை கான் உருட்டும் காட்சிகள் ஏதேனும் இருக்கக்கூடும் என்கிற எதிர்ப்பார்ப்பை முதல் பாதியில் இயக்குனர் ஏற்படுத்துவதாலேயே, இரண்டாம் பாதிக்கு தியேட்டரில் நான்கைந்து பேர் நாக்கைத் தொங்கப் போட்டுக் கொண்டு அமர்ந்திருக்கிறார்கள். அவர்களது எதிர்ப்பார்ப்பை அணுகுண்டு போட்டு தகர்க்கும் வண்ணம் மிக மிக லேசான அரைகுறை இருட்டு 'பிட்டு' ஒன்றை படம் முடிவதற்கு பத்து நிமிஷம் முன்பு போடுகிறார்கள். கோயிந்தா கோயிந்தா.
மல்லிகா ஷெராவத். பாவமாக இருக்கிறது அம்மணியைப் பார்த்து. இந்தப் படத்தை ரொம்பவும் நம்பி, ட்விட்டரில் ஆஹா, ஓஹோவென எழுதிக் கொண்டிருந்தார். படத்தின் பிரமோஷனுக்காக சில திரைவிழாக்களில் பாம்பை தூக்கி தோளில் போட்டுக் கொண்டு வந்து இன்ப அதிர்ச்சி கொடுத்துக் கொண்டிருந்தார். பாவம் வசனமே இல்லை. தொடை தெரிய ஓடி ஓடி களைத்திருப்பார். படத்தின் ரிசல்ட் அவருக்கு மேலும் களைப்பும், சலிப்பும் தரக்கூடும். இதெல்லாம் கூட பரவாயில்லை. அம்மணி பாம்பு ஒன்றோடு உடலுறவு கொள்ளுவது போன்ற 'நேச்சுரலான' காட்சி வேறு வருகிறது. இனி இந்தியின் எந்த இளம் ஹீரோவும், இவரோடு ஜோடி சேர்ந்து நடிக்க கொஞ்சம் யோசிக்கவே செய்வார்கள்.
ஹிஸ் - இந்தப் பாம்பு படமெடுக்காது. மகுடியை மூடிக்கிட்டு போங்க சார். போயி பொழைப்பைப் பாருங்க.
//ஹிஸ் - இந்தப் பாம்பு படமெடுக்காது. மகுடியை மூடிக்கிட்டு போங்க சார். போயி பொழைப்பைப் பாருங்க//
பதிலளிநீக்குஹா! ஹா! சூப்பரப்பு!
நல்ல அலசல்!
பதிலளிநீக்குஇந்த படத்தை நாங்க ஹிந்தியில் பார்த்தோம், நீங்க?
பதிலளிநீக்குதமிழில் எங்கேயுமே (சென்னை நகரில்) ரிலீஸ் ஆகவில்லை. புது புரொடியூசர். ஆந்திரா நபர். அதான் மொக்கையான ஊருக்கு வெளியே இருக்கும் தியேட்டரில் தமிழில் ரிலீஸ் செய்துள்ளார்கள்.
இதே புரொடியூசர் பனிரெண்டாம் தேதி ஒரு ஆங்கில படத்தை வேறு ரிலீஸ் செய்ய உள்ளார்.
என்ன பாஸ் படம் பாக்கலாம்னு பார்த்த இப்படி ஆகிபோச்சே நெக்ஸ்ட் மீட் பண்ணுறேன்
பதிலளிநீக்குஎதையோ ரொம்ப எதிர்பார்த்து ஏமாந்த மாதிரி தெரியுது (கதை,திரைக்கதையை சொன்னேன்)
பதிலளிநீக்குஉங்கள மாதிரி உவமை, உவமானங்களோடு யாரு படத்துக்கு விமர்சனம் எழுதுவா?
பதிலளிநீக்குஅருமை, யுவா..
மிகவும் ஆபாசமாக உள்ளதாக தோன்றுகிறது. என்னைபோன்றவர்கள் படிக்க கஷ்டமாகவும், வருத்தமாகவும் உள்ளது.
பதிலளிநீக்குசூப்பர் விமர்சனம் பாஸ்! நான்கூட எங்கயாவது 'நெட்'ல பாக்கலாமோன்னு நினச்சேன் நல்லவேளை காப்பாத்திட்டிங்க! தேங்க்ஸ்!
பதிலளிநீக்கு//அம்மணி பாம்பு ஒன்றோடு உடலுறவு கொள்ளுவது போன்ற 'நேச்சுரலான' காட்சி வேறு வருகிறது.//
பதிலளிநீக்கு********
அதான் படம் புஸ்ஸ்ஸ் புஸ்ஸ்ஸ்...