3 ஆகஸ்ட், 2011

சொர்க்கம்!

இணையத்தில் இயங்குபவர்களுக்கு ரொம்ப நாளாகவே நன்கு அறிமுகமான படம். கேபிள் சங்கர் என்கிற பெயரில் இப்படத்தின் இயக்குனர் ஷங்கர் நாராயண் வலைப்பதிவு எழுதுபவர் என்பதால் வலைப்பதிவர்களிடையே பெருத்த எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் படம். புரொடக்‌ஷன்ஸ் சார்பில் கே.ஆர்.பி. செந்திலும், ஓ.ஆர்.பி.ராஜாவும் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

பாடல்கள் ஏற்கனவே இணையத்தில் ஹிட். எல்லா பாடல்களையுமே அப்துல்லா பாடியிருக்கிறார். “கிழிப்பேண்டா. உன் தொண்டையை கிழிப்பேண்டாஎன்று ஓபனிங் பாடலிலேயே எக்குத்தப்பான வாய்ஸில் எகிறியிருக்கிறார். பாடல்களை எழுதியவர் மணிஜி. பாடல்களில் சாராய நெடி அதிகமா காமநெடி அதிகமா என்று லியோனி பட்டிமன்றம் வைக்கலாம்.

இயக்குனர்கள் வழக்கமாக தொடமறுக்கும் கதைக்களன் இது. பிட்டு பட இயக்குனர்கள் மட்டுமே இம்மாதிரி ஃப்ளாட்டை யோசிக்க முடியும். சொர்க்கம் என்பது ஹீரோயினின் பெயர். ஹீரோ எதிர்த்த ஃப்ளாட் இளைஞன். ஹீரோயினை விட பத்து வயது குறைந்தவன். கட்டழகன். எப்படியாவது ஆண்டியை கவிழ்த்து விட வேண்டும் என்று ஏகப்பட்ட தகிடுதத்தம் செய்கிறான். ஒரு கட்டத்தில் ஹீரோயினும் ஹீரோவுக்கு மசிகிறமாதிரி சூழல் அமைகிறது. இதற்கு ஹீரோயினின் கணவன் முட்டுக்கட்டை போடுகிறான். கடைசியிலாவது ஹீரோவுக்கு சொர்க்கம் கிட்டியதா என்பதே கதை.

இந்தப் பாத்திரத்தில் நடிக்க முன்னணி ஹீரோக்கள் மறுத்துவிட்டதால், கேபிள் சங்கரே ஹீரோவாக நடித்திருக்கிறார். 55 வயதாகும் கேபிள் சங்கர், 20 வயது இளைஞனின் பாத்திரத்தை அனாயசமாக அடித்து நொறுக்கியிருக்கிறார். 55 வயதில் உலகம் சுற்றும் வாலிபனாக நடித்த எம்.ஜி.ஆரே செய்யமுடியாத சாதனை இது. பாடிலேங்குவேஜில் பின்னி பெடலெடுத்திருக்கிறார் கேபிள் சங்கர். குறிப்பாக “நான் யூத்துடா.. மத்தவெனெல்லாம் ங்கொய்ய்ய்..என்று பஞ்ச் வசனம் பேசும் காட்சியில் அவரது கைகள் கரகாட்டம் ஆடியிருக்கிறது. கால்கள் கம்பு சுத்துகிறது.

14 வயதான ஹீரோயின் நிரிஷா, 30 வயது கதாபாத்திரத்தில் தைரியமாக ஆண்டியாக நடித்திருக்கிறார். ஆனால் ஹீரோவுக்கும், ஹீரோயினுக்குமான ஜோடி பொருத்தம்தான் இடிக்கிறது. சிங்கம் எலியோடு ஜோடி போட்டுப் போவதைபோல. பாடல் காட்சிகளில் ஹீரோவின் ரொமாண்டிக் குளோஷப் ஷாட்டுகள் ரசிகர்களை கடுமையான மன உளைச்சலுக்கு உள்ளாக்குகிறது.

பட பூஜையின் போது வசனகர்த்தாவாக ஊன்னாதான்னா என்கிற உண்மைத்தமிழன் பெயர் போட்டு விளம்பரம் வந்தது. அவர் எழுதிக் கொடுத்த வசனங்களின் படி படமெடுத்தால், அது ஏழு வருடத்துக்கு தொடர்ச்சியாக சன் டிவியில் மெகா தொடராக வருமென்ற கட்டாயத்தால் வசனகர்த்தா மாற்றப்பட்டார். ஜாக்கிசேகர் வசனம் எழுதியிருக்கிறார். வசனங்கள் எதுவுமே முழுமையாக புரியாத வண்ணம் அடிக்கடி ங்கொய்ய்ய்.. சவுண்டு வந்து எரிச்சலூட்டுகிறது. ராட்டினத்தில் சுற்றப்போகும் ஹீரோயினிடம், காதலோடு சொல்கிறார் கேபிள் சங்கர் ‘சுத்து பத்திரம்’. இந்த வசனத்தில் வசனகர்த்தா ஏதேனும் எழுத்துப் பிழை செய்துவிட்டாரா அல்லது பத்திரமாக சுற்றச் சொல்கிறாரா என்ற குழப்பம் ஏற்படுகிறது. ஹீரோயின் ஹீரோவைப் பார்த்து ‘ஒத்துப்போஎன்று சொல்லும்போது விடலைகள் விசில் அடிக்கிறார்கள். இங்கேயும் ஜாக்கிசேகர் ஏதோ ஸ்பெல்லிங் மிஸ்டேக் செய்திருப்பார் போலிருக்கிறது. க்ளைமேக்ஸில் வில்லனைப் பார்த்து ஹீரோ மனோகரா பாணியில் ஐந்து நிமிட வசனத்தை ஒரே ஷாட்டில் பேசியிருக்கிறார். துரதிருஷ்டவசமாக சர்ச்சைக்குரிய வசனங்களை ங்கொய்ய்ய்..செய்யச் சொல்லி சென்ஸார் வற்புறுத்தியதால், அந்த ஐந்து நிமிட வசனங்கள் மொத்தமும் ங்கொய்ய்ய்..ஆகிவிட்டது.

ஆதிதாமிராவின் கேமிராவுக்கு நல்ல சதையுணர்ச்சி. ஹீரோவின் தொப்பையையும், ஹீரோயின் தொப்புளையும் அழகுற படமெடுத்திருக்கிறார்.

படத்தின் பெரிய மைனஸ் என்னவென்றால் ஹீரோ ஹீரோயின் நெருக்கம்தான். நாயக்கர் மகால் தூண் மாதிரியிருக்கும் ஹீரோவை ஹீரோயினால் முழுமையாக கட்டியணைக்க முடியவில்லை. அதுபோலவே திரைக்கதை அங்கங்கே முட்டிக்கொண்டு நிற்கிறது. ஜாக்கிசேகரின் வசனங்களை முழுமையாக சென்ஸார் இடம்பெறச் செய்யாததாலும் படத்தின் கதை என்னவென்றே புரியாமலும் முன்சீட்டில் தலையை முட்டிக்க வேண்டியிருக்கிறது.

சொர்க்கம் – சுகிக்கவில்லை, சகிக்கவுமில்லை

56 கருத்துகள்:

  1. சிரித்துக் கொண்டே படித்தேன். காஃபி கொண்டுவந்து வைக்கும் பெண் ஒரு மாதிரியாக பார்த்துவிட்டுச் சென்றது!!

    க்ளாஸ்!!!

    பதிலளிநீக்கு
  2. // நாயக்கர் மகால் தூண் மாதிரியிருக்கும் ஹீரோவை ஹீரோயினால் முழுமையாக கட்டியணைக்க முடியவில்லை.

    //


    அறை அதிரச் சிரிக்கிறேன் :)))))

    பதிலளிநீக்கு
  3. ரசிக்கும்படி உள்ளது. இணைய பின்புலமில்லாதவர்களுக்கு புரியுமா என எழுத நினைத்தேன். ஜாக்கியையும் கேபிளையும் ஆதியையும் உனாதானாவையும் அறியாதவர்கள் யாரும் இருக்க முடியாது என்பதனால் விட்டுவிட்டுவிட்டேன்.

    பதிலளிநீக்கு
  4. ஜாக்கியையும் கேபிளையும் ஆதியையும் உனாதானாவையும் அறியாதவர்கள் யாரும் இருக்க முடியாது என்பதனால் விட்டுவிட்டுவிட்டேன்.//

    என்ன இல்யாஸ்..

    எம்மாம் பெரிய ’பிக்‌’ஷாட்களுக்கு மத்தியில என்னை இணைச்சு வச்சு பேசியிருக்கீங்க.. எவ்ளோ நாள் கொலவெறி இது. அவ்வ்வ்..

    பதிலளிநீக்கு
  5. தோழர்களே!

    முன்னாடியெல்லாம் நண்பர்கள் இது மாதிரி ஒருத்தரு காலை இன்னொருத்தரு அடிக்கடி வாரிப்போம். இப்போ அந்த கலாச்சாரமே வலையுலகில் இல்லை.

    வலையுலகின் புது ஆட்களை அவ்வளவாக தெரியாது என்பதால், எனக்கு தெரிந்த பழைய ஆட்களையே யூஸ் செய்துக் கொண்டேன்.

    அதுவுமில்லாமல் இவர்கள் கோச்சிக்கிட்டாலும் பேசி அஜ்ஜஸ் செய்துவிட முடியும் என்பது அடுத்த காரணம்.

    பதிலளிநீக்கு
  6. நல்லாயிருக்கு லக்கி.....எனக்கும் முன்பு எழுதினது மாதிரி பகடி எழுதலாமான்னு தோணும்..இப்ப இருக்கிர ட்ரெண்டை வச்சு..ஆனா சூழலை நினைச்சு கட்டுபடுத்திக்குவேன்...வில்லனின் பாத்திரப்படைப்பை பறியும் எழுதியிருக்கலாம்..(அந்தப்பாத்திரத்தை நான் தான் மரு வைத்துக்கொண்டு செய்திருந்தேன்)

    பதிலளிநீக்கு
  7. மனம் விட்டு சிரிச்சேன் லக்கி. பின்னர் கம்பியூட்டரை மூடிவிட்டு கடைத்தெரு போய் வந்தேன். என்னவோ வாங்க போனேன். ஆனால் மறந்து விட்டது. ஏன்னா முழுக்க முழுக்க சிரிச்சுகிட்டே போய்விட்டு சிரிச்சுகிட்டே வந்துட்டேன் போன வேலையை விட்டுட்டு:-))))))))))

    லக்கி சொன்னது போல முன்பெல்லாம் பகடி செய்யும் போது யாரும் யாரையும் கோவிச்சுப்பது இல்லை. இனி இது முதலாக இது தொடரப்பட வேண்டும். அப்துல்லாவின் பாட்டின் உச்சஸ்தாயிலே விமர்சனம் சூடுபிடிக்க தொடங்கியது .... சுகிக்கவில்லை.. சகிக்கவில்லை என்று முடிக்கும் வரை சிரிப்போ சிரிப்பு. மொத்தத்தில் சொர்கம் எப்படியோ... சொர்கத்தின் விமர்சனம் சுகித்தது... சகித்தது...

    பதிலளிநீக்கு
  8. இது அப்பட்டமான தனி மனித தாக்குதல். இந்தப் பதிவர்களை உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால் தவிர்த்து விட வேண்டியது தானே? ஏன் இப்படி நக்கல் செய்ய வேண்டும்? அவர்களின் மனம் என்ன பாடுபடும்? இதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். தமிழ் வலைச் சூழலே கெட்டுப் போயிடுத்து. நையாண்டி என்ற பெயரில் இது போன்ற தனி மனித தாக்குதலை நிறுத்தவில்லை என்றால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும்.

    பதிலளிநீக்கு
  9. செம காமெடி லக்கி....பின்னிட்டீங்க !!!!

    சிரிச்சி மாளலை!!!

    பதிலளிநீக்கு
  10. வாவ், லக்கி ரொம்ப நாளைக்கப்புறம் அருமையான பகடி. ரசித்தேன் சிரித்தேன்.
    சகட்டு மேனிக்கு அத்தனை பிரபலங்களையும் கலாய்ச்சிருக்கீங்க, கதையாசிரியர் கார்க்கி, ப்ரொடக்‌ஷன் மேனேஜர் (சாப்பாடு) ரோலை கேபிள் (அ) விதூஷ், படத்துக்கான விளம்பரம் யுவகிருஷ்ணா - இவங்களையும் ஆட்டையில் சேர்த்திருந்தால் இன்னும் நல்லா இருந்திருக்கும்.

    அடுத்து வரும் சா & நா வில் வரப் போகும் டயலாக் :

    "என்னையும் என் ஸ்பெல்லிங் மிஸ்டேக்கையும் நண்பர் லக்கி நக்கல் விட்டிருந்தார். பதவுலக சினியர் ஜாம்பவான் லக்கி என்னைப் பத்தி எழுதுவதையே பாக்கியமாக கருதுகிறேன். என்னை வசன கர்த்தாவாக உயர்த்திய லக்கிக்கு நன்றிகள், அவர் இருக்கும் திசைக்கு ஒரு கும்பிடு. அவர் எல்லா நலங்களும் பெற எல்லாம் வல்ல பரம்பொருளை வேண்டுகிறேன். ஆனா இதுக்காக வெல்லாம் நான் என்னை மாத்திக்க மாட்டேன், நான் கடலூர் காட்டான் இப்படித்தான் மிஸ்டேக்கா எழுதுவேன், என்னை யாரும் மாத்த முயல வேண்டாம். என்னைப் படிக்கும் ஐயாயிரத்தி சொச்சம் பேருக்கு நான் என்ன சொல்ல வர்றேன்னு புரியுது, அது போதும் எனக்கு"

    என்றும் அன்புடன்
    பாஸ்டன் ஸ்ரீராம்

    பதிலளிநீக்கு
  11. :)))))

    இத்தனை பேர் சிரிப்பா சிரிக்கிற மாதிரி படம் எடுத்ததற்கு ழ பதிப்பகம் உவகை கொள்கிறது. இதே மாதிரி நிறைய படங்கள் வருமென்பதை மிரட்டலுடன் தெரிவித்துக்கொல்கிறோம் ;))

    பதிலளிநீக்கு
  12. //பட பூஜையின் போது வசனகர்த்தாவாக ஊன்னாதான்னா என்கிற உண்மைத்தமிழன் பெயர் போட்டு விளம்பரம் வந்தது. அவர் எழுதிக் கொடுத்த வசனங்களின் படி படமெடுத்தால், அது ஏழு வருடத்துக்கு தொடர்ச்சியாக சன் டிவியில் மெகா தொடராக வருமென்ற கட்டாயத்தால் வசனகர்த்தா மாற்றப்பட்டார்.//

    :)))))))))))))
    Lucky Rocks!

    பதிலளிநீக்கு
  13. அந்த ஐந்து நிமிட வசனங்கள் மொத்தமும் ‘ங்கொய்ய்ய்..’ ஆகிவிட்டது. விழுந்து விழுந்து சிரித்தென். நல்லவேளை அடி ஏதும் படல.

    பதிலளிநீக்கு
  14. ஙொக்க மக்கா.. வவாசங்க பதிவு போட்டாப்ல இருக்கு. செம கலக்கல் பதிவு.
    ஆமா நீங்க லக்கியா? யுவா? கிச்சாவா?

    பதிலளிநீக்கு
  15. முடியல. ரொம்ப நாளைக்கு அப்புறம் செம காமெடி.

    பதிலளிநீக்கு
  16. இந்தப் பதிவிற்க்கு நீங்கள் பதிவில் குறிப்பிட்டுள்ள கேபிள், உண்மைத்தமிழன், ஜாக்கி போன்றோர் வந்து பின்னூட்டம் போட்டிருந்தால் பகிடி என்று எடுத்துக் கொள்ளலாம், அவர்களும் இதை பகிடி என்று எடுத்துக்கொண்டுள்ளார்கள் என்று புரிந்திருக்கும்

    பதிலளிநீக்கு
  17. லக்கி, ரியலி சுப்பர்ப்.. எங்கன்னந்தான் யூத்து.. மத்தவன் எல்லாம் வெத்து...

    பதிலளிநீக்கு
  18. பெயரில்லா9:38 PM, ஆகஸ்ட் 03, 2011

    சிரிப்பை அடக்க முடியலை.

    பதிலளிநீக்கு
  19. அண்ணே... ரொம்ப நல்ல இருந்தது... பதிவர் ஒற்றுமை ஓங்குக...

    பதிலளிநீக்கு
  20. செமையா கலாய்ச்சுடீங்க லக்கி. செம சிரிப்பு.... எல்லாஞ்சரிங்க. படத்துக்கு ஆரு மீஜிக்? சொல்லவே இல்ல.

    பதிலளிநீக்கு
  21. பெயரில்லா1:19 AM, ஆகஸ்ட் 04, 2011

    Welcome back lucky, onna adichika aalu edhu...

    பதிலளிநீக்கு
  22. செம காமெடியா இருந்துச்சு செம சிரிப்பு ஜாக்கி மேட்டர் சூப்பர் ...

    ஜாக்கி வசனம் எழுதினா இப்படி தான் இருக்குமோ...???

    பதிலளிநீக்கு
  23. கார்க்கியையும் கோர்த்துவிட்டிருக்கலாம்...

    பதிலளிநீக்கு
  24. பெயரில்லா5:47 PM, ஆகஸ்ட் 04, 2011

    லக்கி ,

    ஒனக்கு லட்டு திங்க ஆசையா ?
    ..
    ..
    ..
    ..
    ...
    ..
    ..
    ..
    ..
    ..
    ..
    இன்னொரு லட்டு திங்க ஆசையா

    சும்மா வெளம்பர ஒலகம் எழுதின பையா தானேன்னு வெளம்பர வெள்ளையாட்டு....

    பதிலளிநீக்கு
  25. சூப்பர்... வசனகர்த்தா.... தூள்..

    பதிலளிநீக்கு
  26. பல இடங்களில் சிரித்தேன். அது என்ன போட்டோக்களில் கேபிள் மட்டும் ??மத்தவங்களை விட்டுட்டீங்க

    ஒரு நாள் நிஜமா கேபிள் படம் ரிலீஸ் ஆகி நாம எல்லாம் இப்படி விமர்சனம் எழுதணும் !

    பதிலளிநீக்கு
  27. மங்காத்தா ,வேலாயுதம், ஏழாம் அறிவு எது பெஸ்ட் -ஒரு அலசல்.இப்போது தமிழ் சினிமாவில் வெளிவரவுள்ள முக்கிய படங்கள் மங்காத்தா ,வேலாயுதம், ஏழாம் அறிவு. எதை முதலில் எழுதுவது எதை கடைசியாய் எழுதுவது என்று தீர்மானிக்கவே முடியாமல் கடைசியாய் இந்த வரிசையில் போட்டிருக்கிறேன்.இது வெற்றி வாய்ப்பு வரிசை முன்னிருந்துபின்னோ பின்னிருந்து முன்னோ அல்ல

    நேரம் இருந்தால் என் தளத்துக்கும் வாருங்கள்

    பதிலளிநீக்கு
  28. அப்படின்னா இது நிஜ சினிமா இல்லயா ? கேபிள் டைரக்‌ஷன்னு சொன்ன உடனே இது ஒரிஜினல் சினிமான்னு நெனைச்சேன்... இன்னும் பயிற்சி வேண்டுமோ ??

    பதிலளிநீக்கு
  29. பெயரில்லா4:13 PM, ஆகஸ்ட் 05, 2011

    who is KRP Senthil??? New blogger?? :)

    பதிலளிநீக்கு
  30. They are may be your old friend,but now they have good reputation in blog world.

    Your post is not fare,can you say sorry for this post in your next post.

    பதிலளிநீக்கு
  31. பெயரில்லா3:45 PM, ஆகஸ்ட் 07, 2011

    எதோ ஒரு ப்ளாக்கர் இப்படி அறிவிப்பூ வச்சிருக்கார்


    அறிவிப்பு..
    தேவையில்லாமல் என்னை வம்புக்கு இழுக்கின்றவர்களையும் என் பெயரை பயன்படுத்தி நக்கல் விடுபவர்கள்,சீண்டுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்களின் விவரம் சேகரித்து சைபர்கிரைமில் கொடுக்க இருக்கின்றேன்...அது பழைய பஞ்சாங்கமாக இருந்தாலும் சரி....சைபர் கிரைம் நண்பர் நான் கொடுத்த விபரங்கள் போதாது என்று சொல்லி இருக்கின்றார்... விபரங்கள் சேகரிக்கபட்டுக்கொண்டு இருக்கின்றது...தில் இருப்பவர்கள் உங்கள் விபரம் கொடுத்து விட்டு என்னை பற்றி எழுத வேண்டுமாய் கேட்டுக்கொள்கின்றேன்

    பதிலளிநீக்கு
  32. intha vimarisanathula enna comedy irukkunnu appadi sirichen ippadi sirichen-nu ezutharaanganu puriyalai...

    sonna enaku nagaichuvai unarvu illainuvaanga...

    vendaampa... vudu jooooottttt....

    பதிலளிநீக்கு
  33. நல்ல காமெடி.
    Thanks,
    Priya
    http://www.ezdrivingtest.com

    பதிலளிநீக்கு
  34. நான் பதிவின் ஆரம்பம் படித்து விட்டு சொர்க்கம் படப் பாடல்களை தேடி வேற பார்த்தேன், அப்புறம் வந்து பத்தாதான் மேட்டர் தெரியுது.

    பதிலளிநீக்கு
  35. பெயரில்லா10:16 AM, ஜனவரி 22, 2014

    உங்களை உற்சாகப் படுத்திக் கொள்ள உங்களால் முடியாது..அடுத்தவரை கடுமையாக விமர்சித்தோ அவமானப் படுத்தியோ தான் உங்களால் உற்சாகமடைய முடிகிறது, சரி தானே? உங்கள் தன்னம்பிக்கையை வளர்ததுக் கொள்ள வாழத்துக்கள்..

    பதிலளிநீக்கு