அவளுக்கு ‘எய்ட்ஸ்’ இருப்பது அவனுக்கு தெரியும். ஆனாலும் அப்போதைக்கு ‘அது’ அவனுக்கு அத்தியாவசியமானதாக இருந்தது.
ஆளில்லாத சிறிய தீவு. இங்கே உயிரோடு இருப்பவர்கள் அவனும், அவளும் மட்டும்தான். ஒரு வாரம் முழுமையாக ஓடிவிட்டது. தாகத்துக்கு குடிக்க தண்ணீர் கூட இல்லை. காடு என்றுதான் பெயர். கனி காய்க்கும் ஒரு மரம் கூட இங்கில்லை. தென்னைமரம் கூட இல்லாத தீவிலா விதி இவர்களை கொண்டுவந்து சேர்க்க வேண்டும்?
இப்போது இருவருக்குமே தெரியும். இவர்கள் உயிரோடு இருக்கப்போவது இன்னும் சில தினங்கள்தான். உண்ண உணவில்லாமல், குடிக்க நீரில்லாமல் எத்தனை நாள்தான் வாழமுடியும்?
வெளியில் இருந்து உதவிவரும் என்கிற நம்பிக்கை முதல் நாளிருந்தது. கப்பலை விடுங்கள். ஒருவாரமாக சிறு படகினை கூட கடல்வெளியில் காண முடியவில்லை. விமானச் சத்தம் அறவேயில்லை. இருவர் இங்கிருப்பது இந்த இருவருக்கு மட்டும்தான் தெரியும்.
இந்த நாட்களில் இருவரும் பேசிக்கொண்டது மொத்தமாக இருநூறு வார்த்தைகள் இருக்கலாம். அவள் ஒரு தொழில்முறை சமூகப் பணியாளர் என்பதை முதல் பேச்சிலேயே சொல்லிவிட்டாள். எய்ட்ஸ் தாக்கி எட்டாண்டுகள் ஆகிறதாம். முதல் நாளிரவிலேயே அந்த ‘வேட்கை’ இருவருக்கும் இருந்தும், இந்த காரணத்தாலேயே இடைவெளி விட்டு இருந்து வருகிறார்கள்.
அவனுக்கு அவனது உயிர் முக்கியம். அவனை நம்பி ஒரு குடும்பம் இருக்கிறது. அப்பா, அம்மா, தம்பி, தங்கை. போராடி பெற்ற வாழ்வு. நல்ல சம்பாதித்யத்தில் அமர்ந்து, போராட்டத்துக்கான அறுவடையை செய்யும் காலத்தில் நேர்ந்து விட்டது இந்த விபத்து.
எப்போது வேண்டுமானாலும் இறப்பு என்பது தெரிந்திருந்தாலும், அவளுக்கும் இன்னும் சில நாட்கள் உயிரோடு வாழும் திட்டமிருந்தது. இன்னும் நிறைய சம்பாதிக்க வேண்டும். இருக்கும் சில நாட்களாவது இன்பமான வாழ்வில் திளைக்க வேண்டும்.
ம்ஹூம். எல்லாம் கனவு. எவருக்கும் தெரியப் போவதில்லை இவர்கள் இங்கிருப்பது. இன்னும் மிஞ்சிப்போனால் இரண்டு, மூன்று நாட்கள். பாசக்கயிறு கழுத்தில் விழும் நொடிகளை, மூன்றாம் நாளிலிருந்தே இருவரும் எண்ணத் தொடங்கி விட்டார்கள். முதலிரண்டு நாள் இருந்த நம்பிக்கை, மூன்றாம் நாள் முற்றிலுமாக தகர்ந்துவிட்டது.
இன்று ஏழாம் நாள். நாக்கு வறண்டுக்கொண்டு இருந்தது. தாகத்துக்கு கடல்நீரை கூட பருகி பார்த்தார்கள். குமட்டிக்கொண்டு வந்தது. குடலே வெளியில் வந்து விழுந்துவிடுமோ என்று அஞ்சினார்கள். பசிக்கு புல்லையாவது தின்று செரிக்க நினைத்தார்கள். முடியவில்லை. ஆடும், மாடும் எப்படித்தான் சாப்பிடுகிறதோ? ஒரு கிலோ மீட்டர் சுற்றளவு கொண்ட அத்தீவினை சல்லடை சல்லடையாக அலசியாயிற்று. இது மனிதர்கள் வாழ அருகதையற்ற பிரதேசம்.
நேற்றிலிருந்தே பேச்சு சுத்தமாக குறைந்துவிட்டது. பேச திராணியில்லை. சாடை மொழி மட்டும்தான்.
அவள் சிகப்புச்சேலை அணிந்திருந்தாள். காட்டுத்தனமான வனப்பும், செழிப்பும் அவள் உடலை நிறைத்திருந்தது. ஆரம்பத்தில் மாராப்பில் காட்டிய அக்கறை, இப்போது சுத்தமாக இல்லை. தன்னுடன் இருப்பவன் ஓர் ஆண் என்கிற உணர்வினை இழந்திருந்தாள். கலைந்த ஓவியமாக களைப்படைந்துப் போயிருந்தாலும், ஏதோ ஒரு களை அவளை உலக அழகியாக அவனுக்கு காட்டியது.
இன்று காலை யதேச்சையாகதான் அவனுக்கு ‘அந்த’ ஆசை வந்தது. சரியாக சொல்ல வேண்டுமானால், குன்றின் சரிவில் இறங்கும்போது வாகாக புடவையையும், பாவாடையையும் கொஞ்சமாக முழங்காலுக்கு மேலாக அவள் தூக்கும்போதுதான் ‘அந்த’ எண்ணம் ஏற்பட்டது. பெண்களுக்குதான் எவ்வளவு அழகான கால்கள்?
அவளிடம் சாடையிலேயே பேசிப் பார்த்தான்.
எத்தனையோ பேரை சாடையாலே அழைத்தவள். எவ்வளவோ பேரின் சாடையை புரிந்துகொண்டவள். ஏனோ இப்போது அசமஞ்சமாக இருந்தாள். ஒருவேளை அவளுக்கு புரியவில்லையோ? அவனுக்கு ‘அந்த’ விஷயத்தில் அனுபவமே இல்லை. முதன்முதலாக ‘அதற்கு’ ஆசைப்பட்டு கேட்கிறான்.
கண்களை மூடிக்கொண்டு உறக்கத்துக்கு முயற்சித்தாள். அவளுக்கு விருப்பமில்லையோ? நடந்த களைப்பு. அவனுக்கும் இருட்டிக் கொண்டு வந்தது. வகை தெரியாத அந்த காட்டு மரத்தின் நிழலில் உறங்கினர்.
எவ்வளவு நேரம் ஆகியிருக்கும் என்று தெரியவில்லை. இருவருக்கும் ஒரே நேரத்தில் விழிப்பு வந்தது. உறங்கி எழுந்த அவளைப் பார்த்ததுமே அவனுக்கு அணை கட்டியிருந்த ஆசைகள் மடை திரண்டு வெள்ளமானது. புடவையை தரைக்கு விரித்து படுத்திருந்தாள். ஜாக்கெட் அவளது திரட்சியை மறைக்க முயன்று தோற்றிருந்தது.
வெட்கத்தை விட்டுக் கேட்டான்.
“ஒரே ஒரு முறை”
“வேண்டாம். எனக்கு இருப்பது உயிர்க்கொல்லி நோய். நம்மிடம் ஆணுறையும் இல்லை”
“அந்த நோய் வந்துதான் இறக்க வேண்டும் என்பதில்லை. மரணம் ஏற்கனவே நமக்கு நிச்சயிக்கப்பட்டு விட்டது. உனக்கு இன்னும் புரியவில்லையா?”
அவளுக்கு பாவமாயிருந்தது. உண்மையில் அவளுக்கும் ‘அது’ கடைசியாக தேவைப்பட்டது. உடைகளை களைந்தாள். அவனும். வெட்டவெளியில் நடந்தது காந்தர்வ விவாகம்.
“எத்தனையோ முறை ‘இது’ எனக்கு நடந்திருக்கிறது. முதன்முறையாக உன்னிடம்தான் முழுமையான மகிழ்ச்சியை அடைகிறேன்” கிசுகிசுப்பாக, நாணத்தோடு சொன்னாள்.
ஓர் ஆணுக்கு இதைவிட வேறென்ன பெருமை? இனி நிம்மதியாக உயிர்விடலாம். ஜேம்ஸ்பாண்ட் படத்தின் இறுதிக்காட்சியில் வருவதைப் போன்ற ஒரு நீண்ட முத்தத்தை அவளுக்கு பரிசளித்தான். இந்த முத்தத்தில் காமம் சற்றுமில்லை. நூறு சதமும் காதல்தான் என்பதை அவள் உணர்ந்தாள்.
அப்போதுதான் சன்னமாக அந்தச் சத்தம் கேட்டது. ஏதோ வானூர்தியின் சத்தமாக இருக்க வேண்டும். சத்தம் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து வந்தது. சுற்றும் முற்றும் உன்னிப்பாக பார்த்தார்கள். தூரத்தில் ஒரு ஹெலிகாப்டர் வருவது தெரிந்தது. அது அந்த தீவினை நோக்கிதான் வருகிறது.
அவள் அவசர அவசரமாக உடையணிந்தாள். இருவரும் “உதவி, உதவி” என்று கூச்சலிட்டவாறே, ஹெலிகாப்டரை நோக்கி கையை உயர்த்திக் காட்டினார்கள். பைலட் இவர்களை கண்டுக் கொண்டான். தலைக்கு நேராக வந்து வட்டமடித்தான். ஊர்தியை தரையிறக்க வசதியில்லாததை கண்டுகொண்டான். மெகாபோன் எடுத்து, தெளிவான ஆங்கிலத்தில் பேசினான்.
“விபத்தில் தப்பிய பயணிகளே! உங்களை காப்பாற்றுவதில் எங்கள் தேசம் பெருமை கொள்கிறது. இன்னும் ஓரிரு மணி நேரத்தில் எங்களது மீட்புப் படகுகள் உங்களை அழைத்துச் செல்லும். அதுவரை பொறுத்திருங்கள். பசியாற்றிக் கொள்ள இதைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்” பாலித்தீன் கவரில் சுற்றப்பட்ட பெரிய பொட்டலமொன்றினை இவர்களை நோக்கி வீசினான். வந்த வழியே ஹெலிகாப்டரை திருப்பிக் கொண்டு வேகமாகப் போனான்.
கீழே விழுந்த பொட்டலத்தை அவசர அவசரமாக பிரித்தார்கள். சில ரொட்டிப் பொட்டலங்கள். தொட்டுக்கொள்ள ஜாம். தண்ணீர் மற்றும் பழச்சாறு பாட்டில்கள். முகம் ஒற்றிக்கொள்ள நாப்கின். இன்னும் ஏதேதோ இதுமாதிரியான சமாச்சாரங்களுக்கு இடையில் இருந்தது ஓர் ஆணுறை பாக்கெட்டும்.
அண்ணே கதை அருமை
பதிலளிநீக்குதல,
பதிலளிநீக்குநீங்கள் வழக்கம் போல அசத்துகிறீர்கள். தொடருங்கள். இதனை முரண் நகை என்று தமிழில் எழுதி இருந்தால் எங்களுக்கு இன்னும் ஈசியாக புரிந்து இருக்கும்.
thodakkam nalla irunthathu..
பதிலளிநீக்குmudivu mokkai!
இந்தக் கதையைப் படிக்கும்போதே சமாச்சாரம் முடிந்தவுடன் காப்பாற்றப்படுவார்கள் என்பதை நான் அவதானித்து விட்டேன். ஆனால் ‘ஆணுறை’யை நான் எதிர்பார்க்க வில்லை. உண்மையிலேயே மாஸ்டர் ‘பீஸ்’ அது!
பதிலளிநீக்குhm..innum ithe ninaipputhaan!
பதிலளிநீக்குwow super super super,,,,,,,,,,
பதிலளிநீக்குsuper sir
பதிலளிநீக்குலக்கி சார் ,
பதிலளிநீக்குகதை பிரமாதமாக வந்திருக்கிறது!
நன்றி !
சினிமா விரும்பி
யுவா... இதைதான் படைப்பு என்கிறார்களோ? அருமையான கதை...
பதிலளிநீக்குGood one Lucky :)
பதிலளிநீக்குKaviraj
Lovely story - what a fate for them!
பதிலளிநீக்குyes, me too thought like "lathanand", i didn't expect condoms!
பதிலளிநீக்குSooper thala
பதிலளிநீக்குpower rangers games, utorrent
Mr.Yuvakrishna, As usual your story is good
பதிலளிநீக்குMeaning of 'irony'
பதிலளிநீக்கு•நேர் எதிர்ப் பொருள் கொடுக்கும் சொறொடர்
I found the meaning from google..
why this title?
NICE... LUCKY SIR....
பதிலளிநீக்குgood
பதிலளிநீக்குa 0ne
பதிலளிநீக்குHow they got that strength without food and water?
பதிலளிநீக்குmano
Good one yuva! crispy and clean
பதிலளிநீக்கு