11 ஆகஸ்ட், 2011

மரணதண்டனையை ஒழிப்போம்!

1991ல் பேரறிவாளனை கைது செய்தபோது அவருக்கு வயது பத்தொன்பது. மின்னணுவியல் பொறியியல் பட்டயதாரரான பேரறிவாளன் அப்போது பெரியார் திடலில், கணிணிப் பிரிவில் பணியாற்றிக் கொண்டிருந்தார். ராஜீவ் காந்தியை கொன்ற தணுவின் இடுப்பிலிருந்த பெல்ட் பாமை உருவாக்கியவர் பேரறிவாளனாக இருக்கக்கூடும் என்று விசாரணை அமைப்பு கருதியது. தனது படிப்புக்கும், பணிக்கும் எவ்விதத் தொடர்புமில்லாத வெடிகுண்டு தயாரிப்பு பழியினை எப்படி ஏற்பது என்று புரியாமல் விழித்தார் பேரறிவாளன்.

ராஜீவ் கொலை விசாரணை அலுவலகமான ‘மல்லிகை’யில் குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொள்ளுமாறு கடுமையாக சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டார். 2007ஆம் ஆண்டு பேரறிவாளன் எழுதிய முறையீட்டு மடலில் பின்வருமாறு குறிப்பிடுகிறார். “குடிப்பதற்குத் தண்ணீர் தர மறுத்தனர், தாங்கள் கூறும் பொய்யான குற்றச்சாட்டுகளை நான் ஏற்றுக் கொள்ளாதவரை குடிக்க நீர் தரமாட்டோம் என்று கூறுவார்கள். பின்னர் அவர்களாகவே சிறிது நீர் ஊற்றுவர். இரவுகளில் தூங்கவிட மாட்டார்கள். அவ்வாறு நான் தூங்காமல் இருக்க இரவுக் காவலர்கள் வசம் பொறுப்பு ஒப்படைக்கப்படும். தூங்கினால் முகத்தில் தண்ணீர் ஊற்றுவர். உணவையும் தங்கள் ஆயுதமாகப் பயன்படுத்தினர். இவ்வாறு அந்த சட்டவிரோதக் காவல் நாட்களில் நான் துன்புறுத்தப்பட்டேன்.”

பின்னர் பூந்தமல்லி சிறையில் சித்திரவதை தாங்காமலேயே, அதிகாரிகள் நீட்டிய ஒப்புதல் வாக்குமூலம் ஒன்றினில் எதையும் வாசிக்க அனுமதிக்கப்படாமலேயே கையெழுத்து போட்டு தந்திருக்கிறார் பேரறிவாளன். இவ்வாறு கையெழுத்து போட்டு தந்துவிட்டால் ‘விடுதலை’ செய்துவிடுவதாக ‘தாஜா’ செய்திருக்கிறார்கள் அதிகாரிகள். பத்தொன்பது வயது சிறுபையனுக்கு அதைதாண்டி சிந்திக்க ஏதுமில்லை. அந்த கையெழுத்துதான் இருபது ஆண்டுகள் கழித்து இன்று பேரறிவாளனின் கழுத்துக்கு தூக்கு கயிறாக தொங்கிக் கொண்டிருக்கிறது.

அந்த ஒப்புதல் வாக்குமூலத்தில் இருந்த தகவல்களுக்கும், விசாரணை அதிகாரிகள் நீதிமன்றங்களில் சமர்ப்பித்த ஆவணங்களுக்கும் இடையில் எத்தனையோ இடங்களில் முரண்கள் இருந்தபோதும், உச்சநீதிமன்றம் 1999ஆம் ஆண்டு பேரறிவாளனுக்கு மரணத் தண்டனை விதித்தது. இவரோடு நளினி, முருகன், சாந்தன் ஆகியோருக்கும் இதே தண்டனை. பிற்பாடு நளினிக்கு மட்டும் மரணதண்டனை ஆயுள்தண்டனையாக குறைக்கப்பட்டது.

தங்கள் தூக்குத் தண்டனையை ரத்துச் செய்ய மூவரும் ஜனாதிபதியிடம் கருணை மனு தாக்கல் செய்திருந்தனர். விசாரணைக்காக ஜனாதிபதி உள்துறை அமைச்சகத்தினை ஆலோசனை கேட்க, இதற்காகவே காத்திருந்தவர்கள் ‘கருணை ரிஜெக்டட்’ என்று ஜனாதிபதி அலுவலகத்துக்கு பரிந்துரைத்திருக்கிறார்கள். கருணை மனு ஜனாதிபதியால் நிராகரிக்கப்பட்டிருப்பதாக தற்போது ஜனாதிபதி அலுவலகத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்திருக்கிறார்.

அடுத்து என்ன நடக்கப் போகிறது?

மூவரையும் தூக்கிலிடக் கூடாது என்று அங்கங்கே ஆர்ப்பாட்டங்கள் நடக்கும். உண்ணாவிரதங்கள் நடக்கும். சில இடங்களில் மறியலும் நடக்கலாம். போஸ்டர்கள் ஒட்டப்படும். இவை நமது வழக்கமான உணர்ச்சிப்பூர்வ நடவடிக்கைகள்.

இந்த மூவருக்கு மட்டுமின்றி, மரண தண்டனையே கூடாது என்று ஒட்டுமொத்தமாக இந்நேரத்தில் குரல் எழுப்புவதுதான் அறிவுபூர்வமான செயல்பாடாக இருக்க முடியும். குறிப்பிட்ட நபர்களின் அடிப்படையில் இப்பிரச்சினையைப் பார்க்காமல், உலகளாவிய அடிப்படையில் மனிதநேயப் பிரச்சினையாக மரணதண்டனை எதிர்ப்பினை பதிவு செய்யவேண்டும். அத்தண்டனையை சட்டப்பிரிவிலிருந்து நீக்குவதற்கு தேவையான நெருக்கடிகளை தரவேண்டும்.

திரும்ப திரும்ப மரணத்தண்டனைக்கு எதிராக குரல் கொடுத்து ‘தேசத்துரோகி’ பட்டம் வாங்க அயர்ச்சியாக இருக்கிறது. மரணதண்டனை கூடாது என்பதை தாண்டி, எதை புதியதாக பேசமுடியும் என்றும் தெரியவில்லை.

எனவே ஏற்கனவே எழுதிய சில பதிவுகளின் சுட்டியை இங்கே அளிக்கிறேன்:

தூக்குத் தண்டனை

தூக்குத் தண்டனை – எதிர்வினைகள்

மரண தண்டனையை ஆதரிப்பவர்கள் காட்டுமிராண்டிகள்

முகம்மது அப்சல்

19 கருத்துகள்:

  1. என்ன ஞயாயம் இது? சில தமிழர் கொலை போன்ற பெரும் தவறு செய்திருந்தா நம் நாட்டு சட்டப்படி தண்டிக்கப்பட வேணும்.

    அப்போ அப்சல் குருவை விடுதலை செய்ய சொல்லலாமா?

    பதிலளிநீக்கு
  2. மரண தண்டனையை ஆதரிப்பவர்கள் காட்டுமிராண்டிகள்!

    பதிலளிநீக்கு
  3. பெயரில்லா7:59 PM, ஆகஸ்ட் 11, 2011

    Punishment is something I believe in, not death. Death is not as painful as punishment for life, where you have to sit alone with you empty guilty mind just waiting wanting to die. Dying is a satisfaction for those who kill, they kill because they wish to die themselves.

    பதிலளிநீக்கு
  4. பெயரில்லா11:54 PM, ஆகஸ்ட் 11, 2011

    இந்தியா போன்ற போலி ஜனநாயக நாட்டில் .............

    பதிலளிநீக்கு
  5. பெயரில்லா1:43 AM, ஆகஸ்ட் 12, 2011

    இப்புடி என்ன தப்பு பண்ணினாலும் சிறைல சிக்கன் & தண்ணி & மட்டன் சாபடுக்குட்டு ஜாலியஹா இருக்கலாம் என்றால் நாம எல்லாரும் ஏன் வேலை பார்க்கணும். நம்மளும் அடுத்தவன கொலை பண்ணிட்டு நிம்மதியா ஜெயில் ல இருந்திறலாம்

    பதிலளிநீக்கு
  6. பெயரில்லா7:31 AM, ஆகஸ்ட் 12, 2011

    "STOP CAPITAL PUNISHMENT" is a very generic statement. You have to take it on "case by case". Anyway, countries like INDIA, it's very difficult to abolish capital punishment.

    பதிலளிநீக்கு
  7. கிருஷ் தூக்கு தண்டனையை ஒழிக்கனும் சொன்ன முதலில் வரும் சொல்’தேசத்துரோகி’...மிக சரி.. அதன் பினபுலம் அறியாத ‘ந்வீன புத்திசாலிகள்”

    பதிலளிநீக்கு
  8. பெயரில்லா1:26 PM, ஆகஸ்ட் 12, 2011

    onnume seyyaadha orutharai police eppadi kutram satta mudiyum? avar eppadi indha kolai case-il vandhaar?

    பதிலளிநீக்கு
  9. லக்கி! ஒரு உயிரின் மதிப்பு என்ன என்பது நம்மில் பலருக்கும் புரிவதில்லை; அந்த நிலைமை நமக்கோ, நம்மைச் சேர்ந்தவருக்கோ வரும் வரை! குடும்ப கௌரவம், சாதிப்பற்று, வாய்க்கால் தகராறு, சரக்குக்கு ஊறுகாய் கொடுக்காதது என கண்டதுக்கும் கொலை செய்யும் நம் நாட்டில் "மரண தண்டனை கூடாது " என சொன்னால் நம் மண்டை தான் உடையும். கேட்டா நம்ம நாடு ஒரு ஜனநாயகம், பெருவாரியான மக்கள் எதை சொல்றாங்களோ அதுதான் சரின்னுவாங்க! "ஏண்டா அதிமுகவுக்கு வோட்டு போட்ட? கலைஞர் கொடுத்த இலவசம் எல்லாத்தையும் வாங்கி பயனடைஞ்சு சந்தோஷப்பட்டீங்களேடா?ன்னு கேட்டா, அதெல்லாம் அப்பவே மறந்தாச்சு. அம்மா வந்தா தான் விலைவாசி குறையும், ரவுடியிசம் ஒழியும்னு சொல்றான். வந்தவுடனே பாப்பாத்தி புத்தியை காமிச்சிட்டாளே பாத்தியான்னா, அடுத்த தேர்தல்ல பாத்துக்கலாம்னு சொல்றான். படிச்சவனை போய் கேட்டா, "கருணாநிதி 5 வருஷத்துல 1 லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்கி தமிழ்நாட்டு கஜானவை காலி பண்ணிட்டாரு"ங்கறான். இந்த அம்மா போட்ட பட்ஜெட்ட பார்த்தா, போன வருஷம் மட்டும் வருவாய் 20 சதவிகதம் பெருகியிருக்குன்னு சொல்றாங்க! இது என்ன தமிழ்நாடு கஜானாவிலிருந்து வராம அவங்க @#$% லிருந்து வந்ததா? மூணே மாசத்துல இந்தம்மா 18 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கியிருக்காங்க. ஏன்னு கேட்டா, மத்திய அரசு கொடுத்துள்ள வரம்புக்குள்ள தான் வாங்கியிருக்கோம், தப்பில்லனு பதில் சொல்றாங்க. அப்ப கலைஞர் மட்டும் எந்த அரசு வரம்புக்குள்ள கடன் வாங்கினாரு?

    சே! சாம்பார்களோட பின்னூட்டத்திற்கு பதில் சொல்லலாம்னு பார்த்தா, அதை இதை பேசி மண்டை தான் காயுது. மொத்ததுல, இந்த மாக்கானுங்க கிட்ட காலம் தள்ளுறத விட தூக்கிலேயே தொங்கிடலாம், அது தான் நிம்மதி!

    பதிலளிநீக்கு
  10. அந்த தூக்கு மேடை லீவரை இழுக்கும் சப்த த்தை கேட்க வேண்டும் என்று அன்று எழுதிய மாலனின் கீழே வேலை செய்யறத ஞாபகம் வச்சிக்கிட்டு எழுதுங்க அப்பு.

    பதிலளிநீக்கு
  11. சரி அப்பு. அதுக்காக வேலையை ராஜினாமா செய்ய சொல்றீயா?

    பதிலளிநீக்கு
  12. பெயரில்லா3:45 AM, ஆகஸ்ட் 13, 2011

    Perarivaalan was 19 when arrested and still a Graduate or BE? How? Doesn't add up.....

    பதிலளிநீக்கு
  13. கசாப்பை போல் கொலைகாரர்கள் அனைவருக்கும் பலகோடி செலவில் பாதுகாப்பு ஏற்பாடு செய்து, பிரியாணி ஊட்டி மனிதநேயம் காப்போம். 'இளிச்சவாய்' நாடாக இந்தியா மேலும் வீறுகொண்டு முன்னேறட்டும்!!

    பதிலளிநீக்கு
  14. // Savitha said...
    மரண தண்டனையை ஆதரிப்பவர்கள் காட்டுமிராண்டிகள்!//

    repeatu

    பதிலளிநீக்கு
  15. Hi Yuvakrishna,

    An event is being organised in chennai from Aug-16th in solidarity with
    Shri.Anna Hazare to demand the withdrawal of Govt's JokePal(Govt's
    version of Lokpal bill reads like a cruel joke played on citizens)
    from parliament & to introduce an effective Lokpal bill.

    Shri.Kalyanam,last private to Gandhi and Mr.Lakshmikanthan Bharathi,a veteran from Quit India movement are starting indefinite fast.

    Please attend the event and spread news to your friends.
    Venue :
    Surendra Builders,#153,Lattice Bridge Road, Thiruvanmiyur,Chennai-41.

    Anna Hazaare has also requested all citizens to switch off lights(If
    we are lucky to get power supply) from 8 PM - 9 PM on Independence Day
    to demand an effective LokPal.

    Thanks,
    Venkat

    பதிலளிநீக்கு
  16. இதுக்குத்தான்யா ' என்கவுண்டர் ' அப்படின்னு ஒன்னை கண்டுபிடிச்சான் ....

    தூக்கு வேணாம்...ஆயுள்னா பதினாலு வருஷம்..அப்புறம் அண்ணா காந்தி பொறந்த நாளு....அவிங்க அண்டிராயரை அவுத்த நாளுன்னு விடுதலை வேற...

    கண்ணா ...எனக்கு ஆத்திரம் வருது....ஏன்னா நான் மனுஷன்

    பதிலளிநீக்கு
  17. பெயரில்லா10:50 PM, ஆகஸ்ட் 14, 2011

    பார்லிமென்ட் அட்டாக் நடந்ததே 2001ல் நீங்க அப்சல் பதிவு எழுதியதோ 2000 Mayயில் உங்களுக்கு அப்படி நடக்கும் என்று முன்னமே தெரியுமா?

    பதிலளிநீக்கு
  18. மிக கடுமையான சட்டங்கள் இயற்றி உடனுக்குடன் தண்டனை தந்தாலொழிய மக்கள் திருந்த மாட்டார்கள். 
    Thanks,
    Priya
    http://www.ezdrivingtest.com

    பதிலளிநீக்கு
  19. பெயரில்லா8:28 PM, ஆகஸ்ட் 17, 2011

    மாநில பிரச்சினைகளுக்கு நாம் தான் போராட வேண்டும். நம்மால் ஒரு வார்டு உறுப்பினரைக்கூட கேள்வி கேட்க முடியவில்லை. உங்களால், உங்கள் தொகுதி MLA அல்லது MP யை சந்திக்க இயலுமா ?

    சென்னை, அடையாரில் , நமது தோழர்கள் ஐம்பது பேர் இரண்டு நாட்களாக உன்ன நிலை போராட்டம் இருக்கிறார்கள்.

    முகவரி :
    153, LB Road, Adyar Depo,
    Near HDFC Bank.

    ஆயிரக்கணக்கான மாணவர்கள், இளையவர்கள், இஸ்லாமிய, கிருத்துவ நண்பர்கள் உள்ளனர். அனைவரும் வருக. மாற்றத்தினை உருவாக்குவோம்.

    பதிலளிநீக்கு