31 ஆகஸ்ட், 2011

மங்காத்தா

நோட்புக்கை தூக்கிக் கொண்டு காலேஜூக்கு போகவில்லை. சுற்றி நூறு ஃபைட்டர்களை நிற்கவைத்து ஒத்தக்கையால் தட்டாமாலை சுற்றவில்லை. ஓபனிங் சாங் இல்லை. அச்சு பிச்சு பஞ்ச் டயலாக் இல்லை. கெட்டப் என்கிற பெயரில் கோமாளித்தனம் செய்யவில்லை. எவ்வளவு நாள் ஆகிறது ஸ்மார்ட்டான அஜித்தைப் பார்த்து.  “அடுத்த மே வந்தா 40 வயசுங்க” என்று ஒரிஜினலாக வெளிப்பட்டிருக்கிறார் அஜீத். மங்காத்தா – அல்டிமேட் ஸ்டாரின் அடுத்த கேம் ஸ்டார்ட்ஸ்...

ஒரு படத்தில் அதிகபட்சம் நான்கைந்து ட்விஸ்ட் இருக்கும். மாஸ்ராஜா ரவிதேஜாவின் படமென்றால் இருபது இருபத்தைந்து ட்விட்ஸ்ட். மங்காத்தா முழுக்க முழுக்க ட்விஸ்ட்டுதான். படம் முடிந்ததும் தலையெல்லாம் கிறுகிறுத்து விடுகிறது. இரண்டரை மணி நேர படத்துக்கு எழுபத்தைந்து சீன்கள். இந்தப் படத்தில் ஒரு இருநூறு சீன் இருக்குமோ?

முழுக்க முழுக்க அஜித் ராஜ்யம். பத்து வருடம் கழித்து கலக்கல் ஸ்க்ரீன் ப்ரெசன்ஸ். குறிப்பாக இண்டர்வெல் பிளாக்கின் ஐந்து நிமிட தொடர் பெர்ஃபாமன்ஸில் துவம்சம். ‘தல’க்கு ஒரு ஆஸ்கர் பார்சல் ப்ளீஸ். அட்லீஸ்ட் பிலிம்ஃபேர்.

“நீங்கதான் சார் ஹீரோ” என்று சொல்லி, அர்ஜூனை நடிக்க வைத்திருப்பார்கள் போல. கால் மணி நேரத்துக்கு ஒரு முறை வந்து டொப், டொப்பென்று சுட்டுக்கொண்டே இருக்கிறார். அர்ஜூனுக்கும் வயசாயிடிச்சிங்க. கண்ணுக்கு கீழே கருவளையம் விழுந்து, தோல் சுருங்கி...

த்ரிஷா சும்மா தொட்டுக்க ஊறுகாய். ஹீரோயின் என்றாலும், இவரை விட வெயிட்டான கேரக்டரை லட்சுமிராய் தட்டிச் செல்கிறார். சென்ஸார் போர்டின் அட்டூழியத்தால், இவரது அழகான தொப்புள் பல காட்சிகளில் மறைக்கப்பட்டது தமிழ் ரசிகர்களுக்கு நேர்ந்த சோதனை. முன்பு க்ளிவேஜை கட் அடித்தார்கள். இப்போது தொப்புளையும் மறைக்கிறார்கள். அடுத்து இடுப்பே தெரியக்கூடாது என்று கண்டிஷன் போட்டுத் தொலைப்பார்களோ? மத்திய அரசின் இந்த அநியாயத்தை எதிர்த்து சாஸ்திரி பவன் முன்பாக மறியல் செய்தாக வேண்டும்.

கிரிக்கெட் சூதாட்டத்தை களமாக எடுத்துக் கொண்ட புத்திசாலித்தனத்துக்கு வெங்கட்பிரபுவுக்கு சபாஷ். ஆனாலும் ஐநூறு கோடி ரூபாயை தட்ஸ் லைக் தட் சூட்கேஸில் கொண்டுபோவது மாதிரி அங்கிட்டும், இங்கிட்டுமாக அலைய விடுவது கொஞ்சம் ஓவர். அணிலுக்கு எஸ்.ஏ.சந்திரசேகர் மாதிரி, வெங்கட்பிரபுவுக்கு அவரது தம்பி பிரேம்ஜி அமரனால் சனி உச்சத்துக்குப் போகலாம். தேவையில்லாமல் இவருக்கு பில்டப் சீன்களை யோசித்து, யோசித்தே மற்ற விஷயங்களை கோட்டை விட்டுவிடுவார் போல.

படமாக்கம், இசை, எடிட்டிங், ஒளிப்பதிவு, நடிகர்களின் நடிப்பு என்று ஆல் ரவுண்டும் சிக்ஸர். படத்தின் முதல் பாதி நீளத்தை கொஞ்சம் குறைத்திருந்தால் இன்னும் ‘நறுக்’கென்று வந்திருக்கும். தேவையில்லாத சில பாடல்களும் எரிச்சல் மூட்டுகிறது. ஆனாலும் தீனாவுக்குப் பிறகு நடனமாட முயற்சித்திருக்கும் அஜீத்துக்கு சபாஷ்.

மாமாங்கத்துக்கு ஒருமுறைதான் அஜீத் படம் ஹிட் ஆகும். நல்லவேளையாக இந்த மாமாங்கம், அவரது ஐம்பதாவது படத்தின் போது யதேச்சையாக அமைந்துவிட்டது. அஜீத் ரசிகர்களுக்கு இந்த ரம்ஜான்தான் தீபாவளி.

மங்காத்தா – பர்ஸ்ட் ஹாஃப் வெளியே. செகண்ட் ஆஃப் உள்ளே.

21 கருத்துகள்:

  1. லச்சுமி ராய் உண்டு என்ற விசயமே உங்கள் விமர்சனம் மூலம் தான் அறிந்தேன்.
    நாளையே முதல் காட்சி, லச்சுமி ராய்க்காக

    அதனால் தான் தலைவர் அன்றே சொன்னார், சென்சார் போர்டை மாநில அரசு அதிகாரத்தின் கீழ் கொண்டு வாருங்கள் என்று

    பதிலளிநீக்கு
  2. //அணிலுக்கு எஸ்.ஏ.சந்திரசேகர் மாதிரி, வெங்கட்பிரபுவுக்கு அவரது தம்பி பிரேம்ஜி அமரனால் சனி உச்சத்துக்குப் போகலாம். //

    இந்த வரிகள் கொஞ்சம் இடம் மாறி வந்து இருக்க வேண்டுமென்று நினைக்கிறன்...

    பதிலளிநீக்கு
  3. நீங்க தூக்கிட்டீங்கல்லே.... காத்திருந்து பாருங்க கேபிள் கவுக்கப்போறாரு

    பதிலளிநீக்கு
  4. மங்காத்தா – பர்ஸ்ட் ஹாஃப் வெளியே. செகண்ட் ஆஃப் உள்ளே.


    SUPER

    பதிலளிநீக்கு
  5. //அணிலுக்கு எஸ்.ஏ.சந்திரசேகர் மாதிரி, வெங்கட்பிரபுவுக்கு அவரது தம்பி பிரேம்ஜி அமரனால் சனி உச்சத்துக்குப் போகலாம். //
    well said.

    பதிலளிநீக்கு
  6. //மத்திய அரசின் இந்த அநியாயத்தை எதிர்த்து சாஸ்திரி பவன் முன்பாக மறியல் செய்தாக வேண்டும்//
    மன்மோகன் நொம்ப பாவம்...! இப்போ தான் டெல்லில ஒரு பிரச்னை அடங்கி இருக்கு ..,இப்போ இப்படி ஒரு மறியல் செஞ்சா எப்படி ...?
    கிரிக்கெட் சூதாட்டம்னு சொன்னீங்க சரி ..,கதையை பத்தி உசார சொல்லுலையே ஏன் ...?

    பதிலளிநீக்கு
  7. ரொம்ப நாளைக்கு அப்புறம் எங்க தல படம் ஹிட்டாயிடுச்சு...

    பதிலளிநீக்கு
  8. மங்காத்தா – THIS IS MY F**CKING REVIEW
    http://philosophyprabhakaran.blogspot.com/2011/09/this-is-my-fcking-review.html

    பதிலளிநீக்கு
  9. அணிலுக்கு எஸ்.ஏ.சந்திரசேகர் மாதிரி,

    இந்த வரியை நன்றாக ரசித்தேன்

    பதிலளிநீக்கு
  10. super yuva, mangatha parkanumnu aarvama iruku thanks

    பதிலளிநீக்கு
  11. //வெங்கட்பிரபுவுக்கு அவரது தம்பி பிரேம்ஜி அமரனால் சனி உச்சத்துக்குப் போகலாம். தேவையில்லாமல் இவருக்கு பில்டப் சீன்களை யோசித்து, யோசித்தே மற்ற விஷயங்களை கோட்டை விட்டுவிடுவார் போல.// உண்மை..

    பிரேம்ஜி க்கு பில்டப் கொடுக்கணும்னா.. சொந்த செலவுல படமெடுக்கணும்

    பதிலளிநீக்கு
  12. மங்காத்தா... வெற்றின்னு எடுத்துக்கலாம் அப்ப.. அஜித் ரசிகர்களுக்கு இரட்டை சந்தோஷம்.. 50 வது படம் + வெற்றி படம்...

    பதிலளிநீக்கு
  13. அநியாயத்துக்கு மொக்கை படம். இவங்களை நம்பி தயவு செய்து போயிடாதீங்க.

    பதிலளிநீக்கு
  14. ''அணிலுக்கு எஸ்.ஏ.சந்திரசேகர் மாதிரி, வெங்கட்பிரபுவுக்கு அவரது தம்பி பிரேம்ஜி அமரனால் சனி உச்சத்துக்குப் போகலாம். '' சந்தானம் -கலாய்த்துட்டாராம்

    பதிலளிநீக்கு
  15. உண்மைதான் வெங்கி பிரேம்ஜி குறைப்பது நல்லது... மற்றபடி படம் சூப்பர், தல ரசிகர்களுக்கு செம தீபாவளி... அருமையான அலசல். வாழ்த்துக்கள்...!

    பதிலளிநீக்கு
  16. kaarki has got another blogger id. the name is "itsdifferent"... mankatthaadaa... hahahahahahha....

    பதிலளிநீக்கு
  17. விமர்சனத்த பார்த்த பார்க்கலாம்முனு தோணுது....
    நல்ல வேடிக்கைய எழுதுறிங்க . தேங்க்ஸ்

    பதிலளிநீக்கு
  18. //வெங்கட்பிரபுவுக்கு அவரது தம்பி பிரேம்ஜி அமரனால் சனி உச்சத்துக்குப் போகலாம். தேவையில்லாமல் இவருக்கு பில்டப் சீன்களை யோசித்து, யோசித்தே மற்ற விஷயங்களை கோட்டை விட்டுவிடுவார் போல.//

    உண்மை....

    பதிலளிநீக்கு
  19. உங்கள் விமர்சனத்துக்கு நன்றி.

    நன்றி,
    கண்ணன்
    http://www.tamilcomedyworld.com

    பதிலளிநீக்கு