அது எத்தனையாவது பிறந்தநாள் என்று மிகச்சரியாக நினைவில்லை. நான்காவதோ, ஐந்தாவதோ அல்லது ஆறாவதோ படித்துக் கொண்டிருந்ததாக நினைவு. வெள்ளிக்கிழமை என்று மட்டும் சரியாக நினைவிருக்கிறது. ஏனெனில் காலையில் ‘சிறுவர் மலர்’ வாசித்திருந்தேன். அப்பா பொதுவாக எட்டு, எட்டரை மணிக்கு வீட்டுக்கு வந்துவிடுவார். யானை வருமுன்னே மணியோசை கேட்குமோ, கேட்காதோ தெரியாது. அப்பா வரும்போது சைக்கிள் பெல் தொடர்ச்சியாக அடிக்கும்.
அன்று இரவு பதினோரு மணி வரை சைக்கிள் பெல் அடிக்கவேயில்லை. அம்மாவுக்கு திக், திக். எனக்கோ காரணமில்லாமல் தூக்கம் வரவில்லை. ஒருவழியாக பதினொன்றரை மணியளவில் தொடர்ச்சியான சைக்கிள் பெல் கேட்டது.
அப்பா அவருக்கேயான பிரத்யேகமான ஜவ்வாது வாசனையோடு வந்தார். காலை ஏழு மணிக்கு அவர் நெற்றில் வைக்கும் விபூதி, குங்குமம் இரவு வரை அழியாமலேயே இருந்தது உலக அதிசயங்களில் ஒன்றாக இருக்கக்கூடும்.
ப்ரீப் கேஸ் திறந்தார். ஒரு ஸ்வீட் பாக்ஸ் கொடுத்தார். அல்வா. தன் குழந்தைக்கு எது பிடிக்கும் என்று தெரிந்துவைத்துக் கொண்டு, வாங்கித் தருவதில்தான் ‘தந்தைமை’ அடங்கியிருக்கிறது. காலையிலேயே அவர் வழக்கமாக தரும் பரிசான பேனாவை தந்துவிட்டதால், வேறெதுவும் பெரிய எதிர்ப்பார்ப்பு இல்லாமல் இருந்தேன். அந்த சர்ப்ரைஸ் கிப்ட்டை எடுத்தார். லயன் காமிக்ஸ். டைட்டில் கூட இன்றும் நினைவிருக்கிறது ‘புரட்சித்தலைவன் ஆர்ச்சி’.
அந்த இரவு முழுக்க என்னுடையது. சுடச்சுட ஆர்ச்சியை வாசித்துவிட்டுதான் தூங்கினேன். இன்று பில்கேட்ஸ் தன்னுடைய பொண்ணை கட்டிக் கொடுத்து, சொத்து முழுவதையும் எனக்கு எழுதிவைத்துவிட்டாலும் கூட, ஆர்ச்சியை கையில் வாங்கிய அந்த சந்தோஷம் திரும்ப கிடைக்குமா என்பது சந்தேகம்.
அதே மாதிரியான மகிழ்ச்சியை இத்தனை ஆண்டுகள் கழித்து தோழர் அதிஷா மூலமாக நேற்று கிடைக்கப் பெற்றேன். காமிக்ஸ் ஆர்வலரான தோழர் ரிஷி எனக்காக அளித்திருந்த காமிக்ஸ்களை நேற்று மாலை கையளித்தார் அதிஷா. நேற்றைய இரவு லக்கிலுக்கின் ‘கவுபாய் எக்ஸ்பிரஸ்’சுடன் கழிந்தது.
* - * - * - * - * - *
நான்கு ஆண்டுகளுக்கு முன்பாகவும் ஒரு பிறந்தநாள்.
வழக்கமாக இருக்கும் லேசான கொண்டாட்ட மனநிலை கூட அன்றில்லை. நான்கு நாட்களுக்கு முன்பாகதான் அப்பா இயற்கையோடு இணைந்திருந்தார். அடுத்த இரண்டு நாட்களும் சிதைக்கு பால் ஊற்றுவது, அஸ்தியை கடலில் கரைப்பது என்று வழக்கமான மதச்சம்பிரதாயங்களோடு முடங்கிப் போனது.
அந்தச் சூழலில் நண்பர் அவரது தேனாம்பேட்டை அலுவலகத்துக்கு அழைத்திருந்தார். மீசையில்லாத முகத்தோடு வெளியே வர எனக்கே சகிக்கவில்லை. லேசான துக்க விசாரிப்புகளுக்குப் பிறகு, காரணம் ஏதும் சொல்லாமல் எல்டாம்ஸ் சாலையை ஒட்டிய சாலைக்கு வண்டியை ஓட்டச் சொன்னார். பாரதி புத்தகாலயம் வாசலில் நிறுத்தச் சொல்லி, உள்ளே சென்றார்.
அரை மணி நேரம் கழித்து வெளியே வந்தவர் இரு பை நிறைய ஏராளமான புத்தகங்களை கொண்டு வந்தார். குறைந்தபட்சம் ஆயிரம் ரூபாய் பழுத்து இருக்கலாம் (துரதிருஷ்டவசமாக அப்புத்தகங்களில் பெரும்பாலானவை சிந்தனை, சித்தாந்தம், கோட்பாடுகள் தொடர்பானவை). ‘பிறந்தநாள் வாழ்த்துகள்டா தம்பி’ என்று சொல்லி கைகுலுக்கி புத்தகப்பைகளை என்னிடம் தந்தார். எனக்கே மறந்துப்போன பிறந்தநாள், திடுமென சஸ்பென்ஸாக நினைவூட்டப்பட்டது. ஆனந்த அதிர்ச்சி என்கிற சொல்லுக்கான அர்த்தம் புரிந்ததும் அப்போதுதான். அன்றைய நிலையில் நண்பரின் பொருளாதாரச் சூழலுக்கு, நிச்சயம் இப்பணத்துக்கு எங்காவது கடன்தான் வாங்கியிருக்க வேண்டும். கடன், வட்டியை மட்டுமல்ல. அன்பையும் வளர்க்கும்.
நண்பரின் பெயரை சொல்ல மறந்துவிட்டேனே?
அண்ணன் யெஸ்.பாலபாரதி
* - * - * - * - * - *
குமுதம் கார்ட்டூன் கலைஞர் பாலா கடந்த ஆண்டு பிறந்தநாளுக்கு அளித்த விலைமதிப்பில்லா அரிய பரிசு இது.
* - * - * - * - * - *
இத்தனை வருட பிறந்தநாள் அனுபவத்தில் கீசெயின், டிரெஸ், பெர்ப்யூம், சைக்கிள், செல்போன், செயின், மோதிரம், முத்தம், சரக்கு, லொட்டு, லொசுக்கு என்று என்னென்னவோ, ஏதேதோ பிறந்தநாள் பரிசுகள் கிடைத்திருந்தாலும், புத்தகங்களும் நண்பர்களும் மட்டுமே மறக்க முடியாத பரிசுகளாக என்றும் நினைவில் நீடிக்கிறார்கள்.
Happy Birthday Anna :)))))))))))))
பதிலளிநீக்குபிறந்த நாள் வாழ்த்துக்கள் அண்ணா.....
பதிலளிநீக்குபிறந்த நாள் வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குமனப்பூர்வ பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குபிறந்த நாள் வாழ்த்துகள்!!!
பதிலளிநீக்குHappy Birthday
பதிலளிநீக்குHappy Birthday Yuva!!!
பதிலளிநீக்குMathiarasan
போர்ஹே பிறந்தநாளில் பிறந்திருக்கிறீர்கள். வாழ்த்துகள்!
பதிலளிநீக்கு//அது எத்தனையாவது பிறந்தநாள் என்று மிகச்சரியாக நினைவில்லை. நான்காவதோ, ஐந்தாவதோ அல்லது ஆறாவதோ படித்துக் கொண்டிருந்ததாக நினைவு.//
பதிலளிநீக்குநீங்கள் 1978-ல் பிறந்திருக்கும் பட்சத்தில், இந்த நாள் 1990-ஆகஸ்ட் 24, வெள்ளிக்கிழமை, 12-வது பிறந்த நாள்.
பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
Happy birthday Yuva!
பதிலளிநீக்குIniya Piranthanaal vazhthukkal, Yuva
பதிலளிநீக்கு-SV
Happy Birthday yuva sir.
பதிலளிநீக்குஇனிய பிறந்த நாள் வாழ்த்துகள் தோழர்.
பதிலளிநீக்குபிறந்த நாள் வாழ்த்துக்கள்!!!!
பதிலளிநீக்குஇன்று பிறந்த நாள் காணும் உ பி என் உடன் பிறவா சகோதரன் அண்ணன் மோகன கிருஷ்ண குமாருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குஎன்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்
பிறந்தநாள் வாழ்துக்கள் நண்பரே..... நன்றி மறக்காமல் நினைவுகூர்ந்தது உங்களது பெரும்தன்மையைக் காட்டுகினறத்து
பதிலளிநீக்குவாழ்த்த வயதிருப்பதால் வாழ்த்துகிறேன் !!!
பதிலளிநீக்குhappy birthday yuva.....happy birthday yuva.....
பதிலளிநீக்குபிறந்த நாள் வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குபிறந்த நாள் வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குவாழ்த்துகள் தலைவா ;-)
பதிலளிநீக்குநெகிழ்ச்சியான நினைவுகள்...
பதிலளிநீக்குபிறந்த நாள் வாழ்த்துக்கள்!!!
பதிலளிநீக்குஇனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் லக்கி!!
பதிலளிநீக்குஉடன் பிறப்பிற்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.
பதிலளிநீக்குHappy birthday bro...
பதிலளிநீக்குஅப்பா அப்பா என்று உருகி எங்களையும் உருக்குறீங்க...நீங்க தந்தை ஆகும் போது, அதே அப்பாவாக நீங்க மாறும் போது தான் இந்த ஏக்கம் குறையும்.. ஆகவே நண்பா.....
பதிலளிநீக்குPirantha naal Valthukkal Yuva !
பதிலளிநீக்கு// இன்று பில்கேட்ஸ் தன்னுடைய பொண்ணை கட்டிக் கொடுத்து, சொத்து முழுவதையும் எனக்கு எழுதிவைத்துவிட்டாலும் கூட, ஆர்ச்சியை கையில் வாங்கிய அந்த சந்தோஷம் திரும்ப கிடைக்குமா என்பது சந்தேகம். //
பதிலளிநீக்குஇந்தமாதிரி ஆசையெல்லாம் வேற இருக்குதா...
பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குநன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com
பிறந்த நாள் வாழ்த்துக்கள் தல. நீங்களும் லயன் காமிக்ஸ் ரசிகரா? "புரட்சி தலைவன் ஆர்ச்சி" என்னை அந்த காலத்துக்கு இழுத்து சென்று விட்டது. ஸ்பைடர், ஆர்ச்சி, லக்கி லுக், மாயாவி, இரும்புக்கை மாயாவி, ரத்த படலம் என்று சொல்லி கொண்டே போகலாம்.
பதிலளிநீக்குஇப்போ அந்த புக் எல்லாம் கிடைக்குமா ?
happy birthday yuva
பதிலளிநீக்குhttp://www.ranicomics.com
பதிலளிநீக்குபழைய புத்தகங்கள் இணையத்தில் வெளியிடுகிறார்கள். பார்க்கவும்.
அழகான பதிவு...
பதிலளிநீக்கு