<எழுத்து கூட்டிப் படிக்காமல் எப்போதுதான் கதை படிக்கக் கற்றுக் கொள்ளப்போகிறார்களோ! கதையின் தொனியைப் பிடிக்கக் கற்றுக் கொள்ளப்போகிறார்களோ!>
உப்பரிகையைப் பாராட்டினால் அது இலக்கிய அபிப்பிராயம் ஆகிவிடுகிறது. நிறத்தின் நிஜமான நிறத்தினை எடுத்துரைத்தால் ஈஸ்வரோ சர்வ ரக்ஷதா? தர்க்கமே இல்லையே? உப்பு தின்னால் தண்ணி குடிக்கணும். தப்பு செய்தால் டவுசர் அவுக்கணும்.
<நிறம் எழுதியவன் பார்ப்பணீயன் என்றால் யார்? போர்வை (1981) இதை எழுதியவன் அணிந்திருப்பது எந்த பனியன்?>
நான் 1987லே நாலாங்கிளாஸ் படிக்கிறப்போ படுக்கையிலே மூச்சா போயிக்கிட்டிருந்தேன். அப்போலாம் நைட்டுலே ஜட்டி மட்டும்தான் போட்டுக்கிட்டு தூங்குவேன். 2011லும் ஜட்டி போட்டிருக்கிற மூச்சாப்பையந்தான்னு நீங்க நம்பித்தான் ஆவணும். நான் மாறலை. நான் மாறிட்டதா நீங்க நினைச்சுப்புட்டா கொன்டேபுடுவேன்.
<பான்பராக் குதப்பியபடி, கம்பியைப் பிடித்துக்கொண்டு, தொந்திகள் தொட்டுக்கொள்ள, பிளாட்ஃபாரத்தில் நின்றிருந்த வழியனுப்பவந்த குடும்பத்துடன், பேசிக்கொண்டு இருந்தனர் இரண்டு வடக்கத்திக்காரர்கள். யாரையும் கொஞ்சம் சுற்றிக் கொண்டு போகவைக்கும் அவர்களது கனபரிமானங்கள் காரணமாகத் தயங்கி நின்றான் எஸ்ஆர்எஸ். பேச்சிற்கு இடைக்காலத்தடை போடுவதை, அவர்கள் பரிசீலிப்பதற்கான முகாந்திரம் எதுவும் தட்டுப்படாததால், எக்ஸ்க்யூஸ் மீ என்று சொல்லிப்பார்த்தான். அதுவும் எடுபடாததால், தெருவோர சாறு பிழியும் உருளைகளுக்கு இடையில் நுழையும் தோல் சுரண்டிய வெண்சோகைக் கரும்பென, சன்ன கைப்பெட்டியை முன்னுக்கு நீட்டியபடி ரயில் பெட்டிக்குள் நுழையத் தலைப்பட்டான் எஸ்.ஆர்.ஸ்ரீநிவாசன் என்கிற எஸ்ஆர்எஸ். >
இப்போல்லாம் நம்மவாக்கு எங்கே சார் ஸ்பேஸ் இருக்கு? நம்மவா இப்படியெல்லாம் கஷ்டப்பட்டு சாறு பிழியும் உருளைக்கு நடுவிலேல்லே வாழ்க்கையை நடத்த வேண்டியிருக்கு? நம்மவா நம்மளை ஆண்டா ‘பிராமின்ஸ் ஒன்லி’ போட்டு டிரைன் விட்டுருக்க மாட்டோமா?
அன்ரிசர்வ்டுலே அம்பது பேரு உட்கார்ந்து போற இடத்துலே ஐநூறு பேரு நெருக்கிக்கிட்டு போறான். அதை விடுங்கோ. அதெல்லாம் நமக்கு பெரிய விஷயமா? அதப்பத்தியெல்லாம் கவலைப்பட்டுக்கிட்டு கிடந்தா நம்ம பொழைப்பு என்னாறது? செத்த ப்ரீயா டிரெயினுக்குள்ளே போயி சீட்டுலே உட்கார முடியறதா? இந்த குண்டு வடக்கத்தி மனுஷா வழியிலே நின்னுக்கிட்டு நம்ம வாழ்க்கையிலேயே மண்ணள்ளிப் போடுறா.
நம்மாளு பேரைப் பார்த்தேளா? ஆர்.எஸ்.எஸ். ச்சீ.. இல்லே.. இல்லே.. எஸ்.ஆர்.எஸ்.
<அறிவிப்பின் நிசப்த இடைவெளிகளில் கக்கூஸ் நாற்றம் மூக்கைத் துளைத்தது>
துளைக்காதா பின்னே? கக்கூஸு கழுவுறவங்களுக்கெல்லாம் ரிசர்வேஷன்லே கவருமெண்ட் க்ளார்க் உத்தியோகம் தந்துடறா. வேற யாரு வந்து இதையெல்லாம் கழுவுவா. அவா அவா அவா அவா வேலையைத்தான் செய்யணும்னு பெரியவா சும்மாவா எழுதி வெச்சிருக்கா? நாடு நாசமாத்தான் போகப்போவுது.
<கருகருத்து அகன்றிருந்த மூக்கில் இரண்டு மூக்குத்திகள் மாரியம்மன் படம்போல் அப்பப்பட்டிருந்தன. அண்ணாச்சி மாமியோ என்னவோ. அருவாள் மாமியாகக் கூட இருக்கலாம். அல்லது அவாளாகவும் இருக்கலாம். யார் கண்டது. ஐயரையங்கார் மாத்வ ஸ்மார்த்தாள்களுக்கு இடையிலான வெளுப்புச் சாயைகளின் வித்தியாசம் போலவே கருப்பிலும் நுண்பிரிவுகள் பார்த்தவுடன் பிடிபட்டால் எவ்வளவோ நன்றாக இருக்கும். பிடிபடாத பொது இடங்களில் பேச்சைத் தவிர்த்தல் உத்தமம் என்கிற பெருநெறியைக் கடைப்பிடிக்கத் தொடங்கிப் பலகாலம் ஆயிற்று. அப்பாவின் காலத்தில் ஏற்பட்ட அரசியல் மாற்றத்திலிருந்தே ஊட்டப்டாமல் தானாய் வளர்ந்து நெரியாய்க் கட்டிக் கொண்டிருந்தது மெளனம்>
நம்மவாவா இருந்தா குலம், கோத்ரம் என்னன்னு பார்த்ததுமே சுலபமா கண்டுபுடிச்சிடலாம். சூத்திரவா எல்லாம் கருப்பா இருக்கா. நம்மவா நம்ம சாதின்னு சொல்லிக்க பூணூல் போட்டுக்கற மாதிரி, இவாள்லாம் அவா அவா சாதிக்கு ஏத்தாமாதிரி ஏதாவது கூணூல், சூணூல்னு போட்டுக்கப்படாதா? ஆளைப் பார்த்ததுமே அடையாளம் கண்டுபுடிக்கிற மாதிரி இருந்துக்க வாணாமா?
நம்மவா எல்லாம் பப்ளிக்குலே பேசப்படாது சார். நம்ம நாலெட்ஜ் லெவலுக்கு இல்லாதவா எல்லாம் வந்தும் நமக்கு சரிசமமா பேசத்தொடங்கிடறா. நாம ‘எலைட்’ இல்லையா? இவங்களாண்டே எல்லாம் பேச்சுக் கொடுத்து மாளுமா?
< ஈரோ வந்ட்டாரு. கெளப்பிக் குடுங்கடா! ஏய் யாருட்டப் பேசறேன்னு தெர்தா? ஓத்தா உங்க ராச்சியமெல்லாம் ராஜாஜி காலத்தோட ஓவரு. ங்கொம்மாள ’பத்தை’யாவாம டேசன்ல முய்ஸா எறங்கணும்னா மூடிகிணு போ. >
என்னா அநியாயமா பேசுரா. ராஜாஜி என்ன அப்படி பெரிய பாவம் செஞ்சிட்டாரு இவாளுக்கு. குலக்கல்வி திட்டம் கொண்டுவந்தார். அது தொடர்ந்திருந்தா இந்நேரம் இவாள்லாம் மாடு மேய்ச்சிக்கிட்டு, செருப்பு தச்சிக்கிட்டு, விவசாயக்கூலியா வேலை பார்த்துண்டு நிம்மதியா இருந்திருப்பாளோண்ணோ?
< ஏய் இன்னா மொறைக்கிறே! பாப்பான்னு ஸொன்னது குத்துதா. முண்ட்ஞ்சா திருப்பித் திட்டிப்பாரு. கொத்த ஸொம்மா, நீ ஸொன்னேனு ஸொன்னாலே அள்ளிடுவான். அஃபென்ஸு கேஸு.>
தீண்டாமை வன்கொடுமை சட்டத்தை கொண்டாந்து நம்மவா வாயை அடைச்சுப்புட்டா இந்த நாசக்கார கவர்மெண்டு. ராஜாஜி ஆட்சியா இருந்திருந்தா ராமராஜ்யமா இருந்திருக்கும். இம்மாதிரி கோமாளி சட்டமெல்லாம் இருந்திருக்குமா?
< ஏய் இன்னாடா ஓவரா சவுண்ட் உட்ற. ஒரே ஒரு காலு. அவ்ளதான் அட்த்த டேசன்ல ஆளு வந்து நிக்கிது பாக்றியா? இதின்னா ட்ரெயினா இல்லே டாஸ்மாக்கா? ஏம்பா டிகிட்செக்கிங்கு! இன்னா பண்ணிகினுகுறே? தோள்ல துப்பாக்கிய மாட்டிகிணு குறுக்கியும் நெடுக்கியும் நட்ந்துட்டா வாங்கற சம்பளம் ஜெர்ச்சிடுமா? பாடு, பேசிகினேப் போறான் பொட்டையாட்டம் எல்லாம் பாத்துகிணு இருக்கீங்க.>
பார்த்தேளா? ஒரு பொம்மனாட்டி சவுண்டு உட்டா அடங்கிப் போறானுங்க இந்த போக்கத்த பயலுவ. ராஜாஜி காலத்துலே நாம ஆட்சியை விட்டாலும், அவா கட்சியை உடைச்சி, அந்த கட்சிக்கு ஒரு பொம்மனாட்டியை தலைவர் ஆக்கிதானே இன்னிக்கு இவாளை அடக்கி வெச்சிருக்கோம்?
மச்சி சார் எனப்படும் எழுத்தாளர் விமலாதித்த மாமல்லனின் “நிறம்” கதையை பிச்சி பிச்சி விளையாடினால் இப்படித்தான் எழுதவருகிறது. நம்ம சார்தானே? நாம விளையாடாமல் வேறு யார் விளையாடப் போகிறார்கள்?
இந்த கதையில் மாமல்லன் என்ன சொல்ல வருகிறார்?
ராஜாஜி ஆட்சிக்காலத்தோடு பார்ப்பனர்களின் இடம் இங்கே பறிக்கப்பட்டு விட்டது. கூட்டத்தோடு கூட்டமாக பார்ப்பனர்களும் வாழ வேண்டியிருக்கிறது. திராவிட இயக்கத்தார் அதாவது பார்ப்பனரல்லாதோர் கூட்டம் பார்ப்பனர்களை சகட்டுமேனிக்கு சவுண்டு விட்டு அநியாயமாக அடக்குகிறது. அடக்குமுறைக்கு அஞ்சி ஒடுங்கி வாழ பார்ப்பனர்கள் பழகிவிட்டனர். இப்போது ஆர்.எஸ்.எஸ்.ஐ... ச்சீ... எஸ்.ஆர்.எஸ்.ஐ காப்பாற்றுபவர் இன்னொரு திராவிட இயக்கத்தின் பெண்மணி. இதுதானே?
பார்ப்பனர்கள் பாவம் என்று ‘அயோத்யா மண்டபம்’ கதை எழுதிய சுஜாதாவின் செல்லுலார் வடிவம் ‘ஜெண்டில்மேன் ஷங்கர்’. இவர்களின் தொடர்ச்சியாக இப்போது இலக்கிய வடிவமாக உருவெடுக்கிறார் மாட்சிமை பொருந்திய இலக்கிய ஜாம்பவான் விமலாதித்த மாமல்லன்.
இந்த கதையில் எஸ்.ஆர்.எஸ். குடிகார அரசியல்வாதி அடிக்க எழுந்தவுடன் அப்படியே விழுந்துவிடுவான். ஷங்கரின் அந்நியனில் அம்பி ஹீரோயிஸம் செய்வான். அப்படியே கலாட்டா செய்பவனை இழுத்துக் கொண்டு போய் கருடபுராணம் விதித்த தண்டனையின் படி, டிரெயினுக்கு வெளியே தள்ளி கம்பத்தில் மோதவிட்டு சாவடிப்பான். அம்பிக்கு இருந்த தெம்பு, பாவம் நம் மாமல்லனின் எஸ்.ஆர்.எஸ்.ஸுக்கு இல்லை.
நேர்மையான விமர்சனமாக இல்லாமல் தம்/சுயசமூக/சொந்த அரிப்பினை சொறிந்துக் கொள்ள இலக்கியம் கருவியாகப் பயன்படுவதை பார்க்கும்போது, தமிழ் இலக்கியத்துக்கு இனி ஈரேழு ஜென்மத்துக்கும் இவர்களால் விமோசனமில்லை என்று மட்டும் புரிகிறது. ஈஸ்வரோ சர்வ ரக்ஷது!
for futher details, please visit :
அருமை அண்ணே கலக்கிட்டீங்க
பதிலளிநீக்குஅரிப்பென்று வந்தபின் சொரிந்து தானே ஆக வேண்டும்?
பதிலளிநீக்குஇவ்வளவு டாமினேட் பண்ணும்போதே இந்த அங்கலாய்ப்பா?
AWESOME!
பதிலளிநீக்குGood sharing . . ThanksGood sharing . . Thanks
பதிலளிநீக்குoru elavum puriyala...!
பதிலளிநீக்குதல! யாருட்ட விளையாட்டு. நம்ப மச்சி சாரோட? கதைய நல்லா படிங்கப்பா?
பதிலளிநீக்குபல தலைமுறைகளாக அடிமைப்படுத்திக் கொண்டு இருந்தவர்கள் சிறிய மாற்றம் வந்தவுடன் ஏன் எவ்வளவு கூப்பாடு போடா வேண்டும் என்று தெரியவில்லை.
பதிலளிநீக்குஇன்னும் பல இடங்களில் குறிப்பாக சென்னையில் பார்ப்பனர்கள் ஆதிக்கம்தான். என்னதான் படித்து அவர்களுக்கு சமமாகவோ அல்லது உயர்பதவியிலோ இருந்தாலும் கூட
நம்மீதான அவர்களின் பார்வை மாறவில்லை. ஒரே ஒரு உதாரணம்...என் அலுவலக நண்பர்கள் எல்லாரும் சேர்ந்து ஒரு உணவகம் சென்றிருந்த பொது, அசைவம் சாப்பிடுபவர்களைப் பார்த்து மிகக் கேவலமாக முகத்தைச சுழித்து விட்டு, எங்கள் காதில் விழும் என்ற கவலை கூட இல்லாமல் தன் பார்ப்பனத் தோழியிடம் 'காட்டுவாசிகளைப் போல் அசைவம் சாப்பிடுகிறார்கள்.....எனக்கு வாந்தி வரும்போல் இருக்கிறது' என்று உரக்கச் சொன்னார். இதற்கு மேலுமா இவர்களைப் பற்றித் தெரிய வேண்டும்?
மணியாச்சி இரயில் வண்டி நிலையத்தில் வாஞ்சி நாதன் மாவட்ட ஆட்சியர் ஆஷ் சுட்டுக்கொன்றுவிட்டு பொது கழிப்பறையில் உள்ளே சென்று தன்னை தானே சுட்டுக்கொண்டு இறந்து போனார்.
பதிலளிநீக்குபோயும் போயும் சுத்த பிராமணாகிய வாஞ்சி நாதன் கேவலம் சூத்திரர்கள் பயன்படுத்தும் பொது கழிப்பறையினுள் சென்று சாகலாமா என்று எழுதியது ஒரு பத்திரிக்கை அன்று.
மாமல்லன் பேரில் மட்டும் தான்
பதிலளிநீக்குஞானி யார்? ஜெயமோகன் யார்?
பதிலளிநீக்குhttps://docs.google.com/document/d/1FS93Hq_KIdeqoKKDwqXfKrjqN9aLXKUSSAr9BTB5U38/edit?hl=en_US&pli=1