4 ஜூன், 2010

நாளை.. நாளை மறுநாள்..


நாளை..

ஜூன் 5, சனிக்கிழமை, மாலை 5 மணியளவில், சென்னை மெரீனா கடற்கரை, காந்தி சிலைக்கு பின்புறம்.

மூத்தப் பதிவரும், ஜெமோ ரசிகருமான சிரில் அலெக்ஸ் சென்னையில் இருக்கும் சாரு ரசிகர்களையும், மற்ற பதிவர்களையும் சந்தித்து உரையாட வருகிறார்.

சந்திப்பு காந்திய அறவழியிலேயே நடைபெறும் என்பதால் அனைவரும் அச்சமேதுமின்றி, கூச்ச நாச்சம் பார்க்காமல் வந்து சேரலாம்.



நாளை மறுநாள்..

ஜூன் 6, ஞாயிற்றுக்கிழமை, மாலை 5.30 மணியளவில், கிழக்கு டூரிங் டாக்கிஸில் உலகத் திரைப்பட திரையிடல்.

Paradise Now – பாலஸ்தீனியத் திரைப்படம் திரையிடப்படுகிறது. அனைவரும் வரலாம்.

இயக்கம் : Hany Abu-Assad
எழுத்து : Hany Abu-Assad – Bero Beyer
ஒளிப்பதிவு : Antoine Heberle

2005ம் ஆண்டு வெளியான இந்தப் படம் கோல்டன் க்ளோப் விருது பெற்றது. உணர்ச்சிகரமான, அற்புதமான திரைக்கதையைக் கொண்டது. உள் அரசியல்களால் ஆஸ்கர் விருது பெறாமல் போன படம் இது.

மனித வெடிகுண்டுகளாக டெல் அவிவுக்குள் நுழையும் இரண்டு பாலஸ்தீனிய இளைஞர்களைச் சுற்றி நிகழும் கதை என்று மேலோட்டமாக ஒரு வரியில் இப்படத்தைப் பற்றிச் சொல்வது அபத்தமாக இருக்கும். இடமும் இருப்பும் லட்சியங்களும் மயக்கங்களும் உறவும் உணர்வுகளும் முட்டிமோதும் அற்புதத்தை சொற்களில் விவரிக்க இயலாது. பார்க்கத்தான் வேண்டும்.

அனைவரும் வருக.

இனி ஒவ்வொரு மாதமும் கடைசி சனிக்கிழமை மாலை சரியாக 5 மணிக்கு கிழக்கு மொட்டை மாடியில் ‘கிழக்கு உலக சினிமா திரையிடல்’ நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

05-06-10 பிற்சேர்க்கை : காப்புரிமை பிரச்சினை தொடர்பாக இந்நிகழ்வு ரத்து செய்யப்பட்டிருப்பதாக இன்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும் விவரங்களுக்கு பத்ரி!

ஞாயிறு அன்று காலை 8.30 மணியலவில் இந்திராபார்த்தசாரதியின் சிறுகதை தொகுதிகள் வெளியீடும் நடைபெற இருக்கிறது. இதுகுறித்த பத்ரியின் எச்சரிக்கைப்பதிவு இங்கே! இந்நிகழ்ச்சிக்கும் அனைவரும் வரலாம் என்று அழைக்கப்படுகிறார்கள்.

6 கருத்துகள்:

  1. Cyril Alex என்று கூகிளில் தேடினால் பதிவில் இருக்கும் முதல் படம்தான் முன்னணியில் கிடைக்கிறது. படத்தில் இருக்கும் கட்டழகனுக்கு இணையான கட்டழகு கொண்டவரே நம்ம சிறிலும் என்பதாலும், பதிவுக்கும் கொஞ்சம் கூடுதல் கவர்ச்சி தேவைப்படுவதாலும் அந்தப்படத்தையே பதிவிட்டு விட்டேன்.

    பதிலளிநீக்கு
  2. தகவலுக்கு நன்றி யுவக்ருஷ்ணா

    பதிலளிநீக்கு
  3. படத்தை பார்த்து நானும் ஏமாந்து விட்டேன்

    பதிலளிநீக்கு
  4. ஆனாலும் இது கொஞ்சம் ஓவர் யுவா , i mean this picture.

    பதிலளிநீக்கு
  5. சந்திப்பு காந்திய அறவழியிலேயே நடைபெறும் என்பதால் அனைவரும் அச்சமேதுமின்றி, கூச்ச நாச்சம் பார்க்காமல் வந்து சேரலாம்.

    நல்லவேளை பாதுகாப்புக்கு காவல்துறையை என்றிருந்தேன்..

    பதிலளிநீக்கு
  6. பதிவுக்கும் கொஞ்சம் கூடுதல் கவர்ச்சி தேவைப்படுவதாலும் அந்தப்படத்தையே பதிவிட்டு விட்டேன்.
    //

    அப்ப செரி...ஹி..ஹி

    பதிலளிநீக்கு