17 ஜூன், 2010

டீலா? நோ டீலா?

முதலிலேயே சொல்லிவிடுகிறேன். நான் டிவி நிகழ்ச்சிகள் எதையும் குறிப்பாக பார்ப்பதில்லை. வீட்டுக்கு செல்வது என்பதே இரவு பத்து மணிக்கு மேல்தான் என்பது என்னுடைய சிறுவயது வாடிக்கை. இன்னமும் தொடர்கிறது. விடுமுறை நாட்களில் வீட்டில் இருந்தால் டிவிடியில் ஏதாவது மொக்கைப் படங்கள் பார்ப்பதுண்டு. மற்றபடி இஸ்திரி செய்யும்போதோ, முகச்சவரம் செய்யும்போதோ சன் மியூசிக்கையோ, ஆதித்யாவையோ ஓட்டிக் கொண்டிருப்பேன். ஆனாலும் எனக்கு தொழில்நிமித்தமாகவும் தேவைப்படுவதால் தொடர்ச்சியாக டி.வி.க்களில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை நண்பர்களிடம் கேட்டுத் தெரிந்துகொள்வதுண்டு.

இன்னொன்றையும் முன்னெச்சரிக்கையாக சொல்லிக் கொள்கிறேன். எனக்கு சன் குழுமத்தின் செயல்பாடுகள் ஆரம்பத்தில் இருந்தே பிடிக்காது. சன்னுக்கு சரியான போட்டி ஒன்று அமையாதா என்று ஏங்கிக் கொண்டிருப்பவர்களில் நானும் ஒருவன். கலைஞர் டிவி சன்னுக்கு சரியான போட்டியாக உருவெடுத்த காலத்தில் மகிழ்ச்சியும் அடைந்தவன்.

இன்று காலை நண்பர் கேபிள்சங்கர் எழுதிய பதிவொன்றினை வாசிக்க நேர்ந்தது. இவ்வளவு தகவல் பிழைகளோடு, சொந்த அபிப்ராயத்தை உண்மைபோலவே ஒருவரால் எழுதமுடியுமா என்று பெருத்த ஆச்சரியம் ஏற்பட்டது. இந்தப் பதிவினை எழுதுவதற்கு முன்பாக குறைந்தபட்சம் டிவி ரேட்டிங் எந்த நிலையில் இருக்கிறது என்றாவது அவர் ஒரு எட்டுப் பார்த்துவிட்டிருக்கலாம். அல்லது விளம்பரத்துறையில் பணியாற்றும் தண்டோரா போன்ற நண்பர்களிடமாவது என்ன ஏதுவென்று விசாரித்து தகவல்களை சரிபார்த்திருக்கலாம். கேபிள்சங்கர் எழுதிய பதிவுதான் காமெடியென்றால், அங்கு போடப்படும் பின்னூட்டங்கள் அதைவிட காமெடியாக இருக்கிறது. இப்படித்தான் தமிழ்ப்பதிவுலகம் அறியாமையில் மூழ்கிக் கிடக்கிறது.

சரி, கேபிள் சங்கர் பதிவின் அபத்தங்களை ஒவ்வொன்றாக பட்டியலிட்டுப் பார்ப்போம்.

//ஆனால் அதே வேளையில் இவர்களது பேக் டோர் விஷயத்தை பற்றியும் சொல்லித்தான் ஆக வேண்டும். வழக்கப்படி திடீரென விஜய் டிவி சேனல் செட்டாப்பாக்ஸில் தமிழ் தொகுப்பிலிருந்து காணாமல் போய், ஜீ தமிழுக்கு செய்தது போல தனியாக சம்மந்தமில்லாத ஒரு பொக்கேவுக்கு முன்னால் போடப்பட்டது. மக்களின் பல்ஸ் எனக்கு தெரியும் என்றேனே.. அது இப்படித்தான் ஒரே நாளில் ஏகப்பட்ட போன்கள் மக்கள் ஏன் விஜய் டிவி வரவில்லை என்று.. உடனடியாய் நாங்கள் தேடிப்பார்க்க, தள்ளிபோடப்பட்டிருப்பது தெரிய வந்தது. உடனடியாய எந்த சேனலி வருகிறது என்று போன் செய்யும் மக்களுக்கு தெரிய படுத்தினோம். இம்மாதிரியான முயற்சியெல்லாம் கல்யாணத்தின் போது சீப்பை ஒளித்து வைப்பதற்கு சமம் என்றாலும் இதையும் விடாது செய்யத்தான் செய்கிறார்கள்.
// - என்கிறார் கேபிள் சங்கர்.

மக்களின் பல்ஸ் தெரிந்தளவுக்கு (?) நமது நண்பருக்கு தொழில்நடப்பு தெரியவில்லை என்று தோன்றுகிறது. இவர் குறிப்பிடும் இச்சம்பவம் நடைபெறுவதற்கு சிலநாட்கள் முன்பு வேறொரு சம்பவமும் நடைபெற்றது. ஸ்டார் குழுமம், ஜாக் குழுமத்திடம் பேசி ஒரு ஒப்பந்தத்துக்கு வந்திருந்தது. அதாவது கேபிள் ஒளிபரப்புக்கு தேவையான ’ஸ்டார் பாக்ஸ்’ என்று பெயரிடப்பட்ட ஒரு இண்ஸ்ட்ரூமெண்டை மிகக்குறைந்த விலைக்கு (அல்லது இலவசமாக) ஜாக் குழுமத்துக்கு வழங்கப்படும். இந்த இண்ஸ்ட்ரூமெண்டில் சன் டிவிக்கு அடுத்ததாக இரண்டாவது சானலாக விஜய் டிவி ப்ரீசெட் செய்யப்பட்டிருக்கும்.

திருவள்ளூர் மாவட்டத்தின் பெரும்பகுதியையும், காஞ்சிபுரம் மாவட்டத்தின் சில பகுதியையும் ஆக்கிரமித்து வைத்திருக்கும் ஜாக் மூலமாக இப்படியொரு ‘பொசிஸனிங் விளையாட்டு’ விளையாட விஜய் டிவி முடிவெடுத்திருந்தது எஸ்.சி.வி. நிர்வாகத்துக்கு தெரிய வந்தது. மும்பையில் எல்லாம் ஸ்டார் குழுமம் சேனல் வரிசையில் முன்னுரிமை பெற கோடி, கோடியாக செலவழித்து வருகிறது. மாறாக தமிழகத்தில்தான் குறைந்த செலவில் ப்ரைம்சேனல்களில் இடம்பெற்றிருக்கிறது. ஜாக்கோடு, ஸ்டார் விளையாடும் விளையாட்டை எஸ்.சி.வி. ரசிக்கவில்லை. என்னுடைய சேனல்களை உன்னுடைய இன்ஸ்ட்ரூமெண்டில் பின்னுக்கு தள்ளினால், நான் மட்டும் ஏன் என் இடத்தில் உனக்கு முன்னுரிமை தரவேண்டும் என்றுதான் பின்னுக்கு தள்ளியது. லட்சக்கணக்கானோர் கேபிள்சங்கருக்கு போன் செய்து ஏன் விஜய் டிவி வரவில்லை என்று கேட்டதற்கான பின்னணி இதுதான். இது முழுக்க முழுக்க தொழில் போட்டி அடிப்படையில் அமைந்ததே அன்றி, ரேட்டிங் பாயிண்ட் குறைந்தது மாதிரியான அச்சத்தினால் அல்ல.

ஓக்கே, அடுத்ததாக ரேட்டிங் பாயிண்டுக்கு வருவோம்.

கேபிள்சங்கருக்கு தமிழ்சேனல்களில் எது எது எந்த எந்த ரேட்டிங்கில் இருக்கிறதென்றே தெரியாது என்று தோன்றுகிறது. சன் டிவியின் சராசரி ரேட்டிங் பாயிண்ட் 1500. கலைஞர் டிவி அடுத்ததாக வரும், இதனுடைய ரேட்டிங் பாயிண்ட் சராசரியாக 200. விஜய் பொதுவாக 3 வது இடத்தில் இருக்கும். கலைஞரை விட பத்து, இருபது பாயிண்டுகள் குறைவாக வரும். கலைஞர் தொடங்கப் பட்டதிலிருந்தே 2வது இடத்தில்தான் இருக்கிறது. ஓரிரு வாரங்கள் விஜய் கலைஞரை நான்கைந்து பாயிண்டுகள் வித்தியாசத்தில் முந்தியதுண்டு. கலைஞர் - விஜய் போட்டியை விடுங்கள். இரண்டாவது இடத்துக்கும், முதலிடத்துக்கும் இருக்கும் வித்தியாசம் என்னவென்று பாருங்கள். கிட்டத்தட்ட 8 மடங்கு வித்தியாசத்தில்தான் சன் முதலிடம் வகிக்கிறது. சன்னுக்கு போட்டி என்று சொல்லிக் கொள்ளக்கூடிய யோக்கியதை வேறு எந்த சேனலுக்குமே இல்லை. இத்தனைக்கும் கலைஞர் டிவி சமீபகாலங்களில் வெளிவந்த சூப்பர்ஹிட் படங்களின் உரிமையை வாங்கி வைத்திருக்கிறது.

ரேட்டிங் பாயிண்டை பொறுத்தவரைக்கும் இந்தியாவிலேயே இரட்டை இலக்க பாயிண்டை பெறும் நிகழ்ச்சிகள் சன் டிவியில் மட்டும்தான் உண்டு. சன் தொலைக்காட்சியின் பிரைம் டைம் மெகா அழுவாச்சி சீரியல்கள் எல்லாம் மிகச்சுலபமாக 20 பாயிண்டுகளை பெறுகிறது. இந்தியாவெங்கும் பரபரப்பாக பேசப்பட்ட ஐ.பி.எல். ஒளிபரப்பின் ரேட்டிங் பாயிண்டே மூன்றிலிருந்து அதிகபட்சமாக ஆறு தான். 4 பாயிண்டு ஏதாவது ஒரு நிகழ்ச்சிக்கு கொடுக்கப்பட்டாலே வட இந்திய சானல்கள் ஆனந்தத் தாண்டவம் ஆடுவார்கள். இந்த அளவுகோலை வைத்து சன்னின் விஸ்வரூபம் என்னவென்று நீங்கள் கற்பனை செய்து பார்த்துக் கொள்ளலாம்.

சரி. இப்போது கேபிள் சங்கர் மிகப்பிரம்மாண்டமாக கட்டமைக்க நினைக்கும் ஜூனியர் சிங்கர் மக்கள் பல்ஸுக்கு வருவோம். அனேகமாக எனக்குத் தெரிந்து கேபிள் சங்கர் வசிக்கும் இல்லத்துக்கு எதிர்வீடு, பக்கத்து வீடு, பக்கத்துக்கு பக்கத்து வீடு ஆகிய மூன்று வீடுகளை வைத்து அவர் ஒரு ரேட்டிங் பாயிண்ட் தயாரித்து இருப்பார் என்று தோன்றுகிறது. ஏனெனில் அகில இந்திய அளவில் எடுக்கப்பட்ட ரேட்டிங் பாயிண்ட் வேறு கதை சொல்கிறது.

கடந்த 10ஆம் தேதி ஜூனியர் சிங்கர் பெற்ற ரேட்டிங் பாயிண்ட் 4.14. இதுதான் அந்நிகழ்ச்சி பெற்ற அதிகபட்ச் ரேட்டிங் பாயிண்ட். இரண்டு நாள் கழித்து ஞாயிற்றுக்கிழமை ஒளிபரப்பப்பட்ட டீலா நோ டீலாவின் ரேட்டிங் பாயிண்ட் 8.66. இந்நிகழ்ச்சி சராசரியாக பார்த்தோமானால் 9 பாயிண்டுகளை தொடர்ச்சியாக பெறுகிறது. சன்னின் ஸ்டேண்டர்டுக்கு இது குறைவுதான் என்றாலும், செல்ஃப் எடுக்கவில்லை என்று கேபிள் சங்கரால் சொல்லப்படும் ஒரு நிகழ்ச்சி, அவர் சூப்பர்ஹிட் என்று சொல்லும் நிகழ்ச்சியைவிட இருமடங்கு அதிக பார்வையாளர்களால் ரசிக்கப்படுகிறது என்பதுதான் புள்ளிவிவரம், மக்கள் பல்ஸ், இத்யாதியெல்லாம்.

அடுத்ததாக ஏதோ மார்க்கெட்டிங், விளம்பரமென்றெல்லாம் ஏதேதோ எழுதியிருக்கிறார். இதையெல்லாம் சன் ஆபிஸில் யாராவது படித்தால் வாயால் கூட சிரிக்க மாட்டார்கள். தமிழ் தொலைக்காட்சி வரலாற்றிலேயே அதிகபட்ச விளம்பர வருவாய் கிடைப்பது செல்ஃப் எடுக்காத டீலா நோ டீலா நிகழ்ச்சிக்குதான். 10 வினாடிகள் 45,000 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. தொலைக்காட்சி ரசிகர்களிடையே மிகப்பெரும் ஆரவாரத்தை, ஆர்வத்தை எழுப்பியிருப்பதாக கேபிள்சங்கரால் நம்பப்படும் சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சி 10 செகண்டுகளை அதிகபட்சமாக 10,000 ரூபாய்க்கு மட்டுமே விற்கப்படுகிறது, சில கிளையண்ட்களுக்கு 2,500 ரூபாய்க்கு கூட விஜய் மார்க்கெட்டிங் டீம் விற்றதாக தகவலுண்டு.

பரபரப்பாக எதையாவது எழுதுகிறோம் என்பதைவிட பக்காவாக எழுதுகிறோமா என்பதுதான் பதிவர்களுக்கு முக்கியம்!

38 கருத்துகள்:

  1. இந்த ரேட்டிங் பாயிண்டுக்கு என்ன ஆதாரம் என்று யாராவது கேட்டால், அவர்களுக்கு மட்டும் மின்மடலில் லேட்டஸ்ட்டாக வெளியிடப்பட்ட இரண்டு வாரங்களுக்கான எக்ஸெல் ஃபைலை அனுப்பி வைக்கிறேன். முன்னதாக கேபிள்சங்கருக்கும் அனுப்பி வைத்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  2. தல, இங்க நான் மலேஷியாவில் ஒன்னுமே பாக்க முடியலை. இருந்தாலும் இதுக்குள்ள இவ்வளவு அரசியல் இருக்குறத உங்க பதிவின் மூல தெரிந்து கொண்டேன்.நான் இந்த நிகழ்ச்சியை ஒரு முறை கூட பார்த்தது கிடையாது.

    அப்புறம் ஏன் என்ன நம்ம சங்கர்ஜீயை இப்புடி ஒரு வாரு வாரிட்டீங்க...

    பதிலளிநீக்கு
  3. தனுசுராசி! நீங்க பார்க்காம இருப்பதே நல்லதுதான். எங்கள் இல்லத்தில் இருப்பவர்கள் டீலா நோ டீலாவின் தீவிர ரசிகர்கள். என்னால் ஒரு பத்து நிமிடம் கூட தொடர்ச்சியாக அந்த நிகழ்ச்சியை பார்க்கவே முடியவில்லை.

    பதிலளிநீக்கு
  4. அப்புறம் ரீடர்ல இருந்தே கமெண்ட் போடுரா மாதிரி உங்க தொழில் நுட்பத்துல வாய்ப்பு இருந்தா சொல்லவும்.

    ஆஃபிஸ்ல பிளாக் ஓபன் பண்ண உடனேயே யாராவது நீங்க அப்புடி திரும்பி நீக்குற போட்டோவை பார்த்து யாருண்ணு கேக்குறாங்க...
    எனக்கு என்ன பதில் சொல்றதுண்ணு தெரியலை...

    பதிலளிநீக்கு
  5. கேபிள் ஷங்கர் பதிவைப் படித்த போதே
    கிட்டத்தட்ட இதையே நானும் நினைத்தேன்.
    என்னிடம் எந்த ஆதாரங்களும் இல்லை.

    சன் டிவி எந்தப் பதிவருக்கும் பிடிக்காமல் இருக்கலாம்.
    ரேட்டிங்கில் அதன் பக்கத்தில் கூட எந்த டிவியும் இல்லை என்பதுதான் உண்மை

    பதிலளிநீக்கு
  6. நீங்க வேணா பாருங்க கேபிள்ஜி எடுக்குற படம் ஆஸ்கார் வாங்கும்ன்றேன்

    பதிலளிநீக்கு
  7. //என்னால் ஒரு பத்து நிமிடம் கூட தொடர்ச்சியாக அந்த நிகழ்ச்சியை பார்க்கவே முடியவில்லை//

    நானும் அவ்வளவாக டி.வி. பார்ப்பதில்லை. டீலா பீலா எல்லாம் செம எரிச்சல். அதை விட எரிச்சல் இந்த சூப்பர் சிங்கர் தான். நான் அதிகமாக பகடி செய்யும் டி.வி. நிகழ்ச்சிகளில் ஒன்று சிங்கர்.

    பதிலளிநீக்கு
  8. லக்கி.நீங்கள் சொல்லும் அந்த டீலா..நோ டீலா..யூ டிவி மார்க்கெட்டிங் செய்கிறார்கள். இன்றைய ஸ்பாட் ரேட் 31000/-ஆனால் விலை போகவில்லை. பேக்கேஜில் யுனிலீவர், மற்றும் போதீஸ் போன்ற லாயல் அடிஷன்களுக்கு கொடுக்கப்படுகிறது. சூப்பர் சிங்கர் ஜீனியர் 16,000/- .இதற்கு நிச்சயம் குறையாது . 2500 எல்லாம் கப்ஸா...

    பதிலளிநீக்கு
  9. your analysis on this matter made me your fan...Hats Off!!!

    endrum anbudan,
    N.Parthiban

    http://parthichezhian.blogspot.com/

    பதிலளிநீக்கு
  10. //கலைஞர் டிவி சன்னுக்கு சரியான போட்டியாக உருவெடுத்த காலத்தில் /மகிழ்ச்சியும் அடைந்தவன்///

    ஒ! அப்படி நம்பியவர்களில் நீங்களும் ஒருவரா?

    பதிலளிநீக்கு
  11. Yuva, I dont read Cable Shanker that often, but I regularly read yours. I dont like this blog of yours and this seems more artificial that you supporting Sun network. (edho mindla vechitu indha madhiri ezhuthi irukeenga?)
    I agree to every single word of Cableshanker regarding that Airtel supersinger and as far as I know it is true also. Deal or no deal cant even be compared with Supersinger junior. (deal or no deal ellam oru programa??...maha mattem !!! )

    பதிலளிநீக்கு
  12. முருகனடிமை10:17 PM, ஜூன் 17, 2010

    நீங்க வேணா பாருங்க கேபிள்ஜி எடுக்குற படம் ஆஸ்கார் வாங்கும்ன்றேன்//

    :))

    பதிலளிநீக்கு
  13. இப்பதான் கொஞ்சம் ஓஞ்ச மாதிரி
    இருக்கு. திரும்ப ஆரம்பிச்சிடாதீங்க
    சாமீகளா...

    பதிலளிநீக்கு
  14. யுவா!.. இது எனக்கு சுத்தமா புரியல.. எத வச்சு இந்த ரேட்டிங் கொடுக்குறாங்க? நிச்சயமா எல்லா ஷோவுலயும் உள்குத்து இருக்கு.. இருந்தபோதும் பொழுதுபோக்குங்கிற ஒரே அடிப்படையில பார்த்தா டீலா நோ-டீலா கருமத்துக்கு, சூப்பர் சிங்கர் எவ்வளவோ பரவாயில்ல.. எனக்கு தெரிஞ்சவரை சூப்பர் சிங்கரோட ரீச் ரொம்ப நல்லாத்தான் இருக்கு.. அப்புறம் ஏன் இப்புடி ஒரு கம்மியான ரேட்டிங்..

    பதிலளிநீக்கு
  15. நீங்கள் சொல்லியிருக்கும் விபரங்கள் என் போன்ற பலருக்கும் தெரிந்திருந்தாலும்,
    பக்காவாக, புள்ளி விவரங்களுடன், நேர்த்தியாக எழுதி இருக்கிறீர்கள்.

    பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  16. நீங்க வேணா பாருங்க கேபிள்ஜி எடுக்குற படம் ஆஸ்கார் வாங்கும்ன்றேன்//

    இது ஆசிர்வாதமா?

    பதிலளிநீக்கு
  17. லக்கி. சன் டிவி யின் வளர்ச்சி அபாரம். ஆரம்பத்தில் டீலா நோ டீலா சுவாரசியமா இருந்தது. ஆனா இப்ப அதுவும் சீரியல் மாதிரி ஒரே சோகமா இருக்கு. தேவையில்லாத செண்டிமெண்ட். அத மாத்துனா இன்னமும் நல்லா இருக்கும். அடுத்து விஜய் டிவி சூப்பர் சிங்கர் ஜூனியர் சரியான ஏமாத்து வேலை. அவனுங்க மலையாள குரூப் கு சப்ப கட்டு கட்டுறானுங்க. ப்ரோக்ராம் புல்லா மலையாள பொண்ணுங்கள காட்டிகிட்டே இருந்தானுங்க. கண்டிப்பா ஏதாவது ஒரு மலையாள பையனோ/ பொன்னோ தான் செலக்ட் ஆகும்னு தெரியும். நானா / நீயா ல கேபிள் கலந்து கிட்டதால இப்படி சொல்றாரு போல. அப்பறம் இந்த TRP rating எப்படி calculate செய்றாங்க அதா பத்தி கொஞ்சம் விரிவா எழுதவும்.

    பதிலளிநீக்கு
  18. வால்ஸ் நீங்க சொல்வது சரிதான். சன்டீவிக்கு இன்னும் போட்டி யாரும் வரவில்லை. சன்டிவி தூர்தர்ஷனின் தேசிய ஒளிபரப்பு போன்ற கொடூரங்களுக்கு முடிவு கட்டிய முதல் டீவி என்பதால் மக்களும் உணர்வு பூர்வமாக சன் டிவியை விரும்புகிறார்கள் என நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  19. பெயரில்லா7:47 AM, ஜூன் 18, 2010

    Everyone likes themself is the root cause for most of the problems in the world.

    பதிலளிநீக்கு
  20. நல்ல அலசல் லக்கி!

    (இதையேதான் அங்கயும் பேட்டேன்.... அதுல பாருங்க.. நமக்கிருக்கற சிக்கல்கள்ல யார் எதச் சொன்னாலும் கேட்டுக்குவோம். அலசி ஆராய்ஞ்சு பார்க்கற தீவிரம் இல்லைங்க.. இனி இதுக்கு கேபிள் எதும் ரிப்ளை போடறாரான்னு பார்ப்போம்.. தட்ஸ் ஆல்!)

    பதிலளிநீக்கு
  21. இப்ப தெரியுதுங்க....தமிழர் உணர்ச்சியெல்லாம் எங்க இருக்குதுனு...

    பதிலளிநீக்கு
  22. (சன் தொலைக்காட்சி மட்டுமல்ல அனைத்துத்) தொலைக்காட்சிகளிலிருந்தும் தங்கள் குடும்பத்தார் விடுபட நினைப்பவர்கள் செய்யவேண்டியது ஆங்காங்கே நிகழும் மாற்றுப், பொழுதுபோக்குகளை அவர்களுக்கு அறிமுகப்படுத்துவதுதான் சிறந்த வழி. அதைவிட சாலச்சிறந்தது - நமக்கு நாமே "கதைசொல்லல்" போன்ற நிகழ்வுகளை நடத்துவது!

    அன்புடன்
    வெங்கட்ரமணன்

    பதிலளிநீக்கு
  23. சன் டீவியின் தரம் எதுவாக இருந்தாலும் என்றென்றும் கேபிள் டீவி என்றாலே அது சன் டீவி தான்.
    எங்க ஊர்ல சன்டீவி கனெக் ஷன் இருக்கான்னுதான் கேட்கிறாங்க..


    நாம சன்டீவியை பார்த்து பேசுற எல்லாமே சன்னை பார்த்து குலைக்கிற நாய் கதைதான்.

    பதிலளிநீக்கு
  24. நண்பர்களே!

    கேபிள் சங்கரின் திரைப்பட இயக்கம் குறித்து சிலர் பின்னூட்டி இருக்கிறீர்கள். இதில் எனக்கு உடன்பாடு இல்லை. குறிப்பாக கேபிள் சங்கரின் டீலா நோ டீலா பதிவு குறித்த எனது அதிருப்தி மட்டுமே இந்தப் பதிவு.

    கேபிள் சங்கர் பதிவுலகுக்கு வருவதற்கு முன்பே எனக்கு அறிமுகமான நண்பர். அப்போது அவர் பதிவராக எனக்கு அறிமுகமாகவில்லை. ஒரு குறும்பட இயக்குனராக அறிமுகம் ஆகியிருந்தார். அவரோடு இரண்டு ஆண்டுகாலம் தொலைபேசியிலும், மின்மடலிலும் பேசிப்பழகிய பின்னரே அவரும் பதிவெழுத வந்தார்.

    கேபிள் சங்கரின் இயக்கத் திறமையில் எனக்கு எள்ளளவும் சந்தேகமில்லை. அவருக்கென்று ஒரு தனிப்பட்ட ஸ்டைல் இருக்கிறது. அவர் இயக்கும் படம் வெற்றிப்படமாக அமையும் என்ற நம்பிக்கையும் இருக்கிறது. முன்னதாக ஒருமுறை அவர் எடுத்த குறும்படம் குறித்த ஒரு சர்ச்சையின் போது, நான் அவருக்கு ஆதரவாக நின்றவன் என்பதையும் இங்கே இடைசெருகலாக குறிப்பிட்டு சொல்லிக் கொள்கிறேன்.

    எனவே இப்பதிவில் இனி இதுபோன்ற பின்னூட்டங்களை நண்பர்கள் இட்டு என்னை தர்மசங்கடப்படுத்த வேண்டாம்.

    அதுபோலவே எனக்கும், அவருக்கும் சண்டை என்றெல்லாம் பின்னூட்டமிட்டு தூபம் இடவேண்டாம். இதுபோன்ற பின்னூட்டங்களை கண்டு இருவரும் சிரித்துக் கொள்வோமே தவிர, ஆத்திரப்பட மாட்டோம் என்பதையும் சொல்லிக் கொள்கிறேன்.

    பதிலளிநீக்கு
  25. லக்கி, தமிழ்நாட்ல எவ்ளோ பேர் வீட்ல டிவி இருக்கு? எத்தனை வீடுகளில் பார்ப்பதை வைத்து TRP ரேட்டிங் கணக்கிடறாங்க?

    பதிலளிநீக்கு
  26. சஞ்சய்!

    ஒரு பின்னூட்டத்தில் சுலபமாக சொல்லிவிடக் கூடிய விஷயமில்லை. டி.ஆர்.பி. பற்றி தனிப்பதிவு எழுதவேண்டும். இருந்தாலும் இந்த கணிப்பு 80 சதவிகிதம் துல்லியமாக இருக்க வாய்ப்புகள் இருக்கிறது. ஏனெனில் இவர்களது sampling அளவு மிகப்பெரியது.

    பதிலளிநீக்கு
  27. லக்கி, நடிகர்/ தொலைக்காட்சி நிகழ்ச்சி தயாரிப்பாளர் விஜய் ஆதிராஜ் ஒரு முறை குமுதம் வெப் டீ விக்கு அளித்த பேட்டியில், TRP ரேட்டிங் எல்லாம் விளம்பர வருவாய்க்காக manipulate செய்யப்பட்ட ஒன்று என்று கூறினார். இதில் உன்மை இருக்குமா?

    TRP ரேட்டிங் எடுக்கபடும் sample,இந்த நிகழ்ச்சி தான் பார்க்கவேண்டும் என்று influence செய்யப்படுவதற்க்கு வாய்ப்பிருக்கிறதா?

    பதிலளிநீக்கு
  28. Mr.Yuva.. I have been reading your blogging for more than a year now.

    I hate your attitude in this post. Mr. Cable may be wrong, But there is a way to explain things. Ennamo neenga thaan ellam theringa ekambaram madhiriyum, neenga mattum thaan correct information kudkira mathiri ezhuthuvadhu thavaru.

    Idhu ungalipol kai therndha ezhuthalarkku nalla thalla... Owondrukkum sollum vitham endru ondru ullathu. Ungal mel ulla abiprayum indru sarukittru...

    பதிலளிநீக்கு
  29. Subbu Said
    //
    But there is a way to explain things.
    //

    Tell what is the way?

    I am also waiting eagerly to know that way.

    Cableji had reported an issue. Lucky defend that based on some points. That's it.

    பதிலளிநீக்கு
  30. //Subbu said
    I hate your attitude in this post. Mr. Cable may be wrong, But there is a way to explain things. Ennamo neenga thaan ellam theringa ekambaram madhiriyum, neenga mattum thaan correct information kudkira mathiri ezhuthuvadhu thavaru.//

    :-) Actually Mr Subbu, if you really wanna say that you hate his attitude, there are few other posts of his, where his attitude is evidently very bad. I hope you comment on them, instead of this post :-)

    Personally, I don't find an attitude problem in this post, especially. Ah, I repeat, I said personally!

    பதிலளிநீக்கு
  31. லக்கி, TRP ஒரு கண்துடைப்பு. விளம்பரத்திற்காக manipulate செய்யப்படுவது. உதாரணம், எல்லா கார் கம்பெனிகாரனும் ஒண்ணு போடுவான். Best car of the year. எல்லாருமே இப்படி போட்டா என்ன அர்த்தம் ? அவனவன் அவனவன் விருப்பத்துக்கு எதோ ஒரு டுபாகூர் கம்பெனி செய்த ஆராய்ச்சியை அடிப்படையாக கொண்டு சொல்வது. ஆனால் நிஜம் என்ன ? ரோட்டில் பார்த்தால் தெரியும் எந்த கார் அதிகமான பேர் வைத்திருக்கிறார்கள் என்று.
    எனக்கு தெரிந்த எல்லாரும் டீலா நிகழ்ச்சியை காறி துப்புகிறார்கள். முதலில் எல்லாரும் ஆர்வமாக பார்க்க தொடங்கியதுதான். தங்க வேட்டை போல தான் இந்த நிகழ்ச்சியும். என் கூட பணிபுரியும் சீரியல் வெறி பிடித்த தோழிகள் தோழர்கள், என் உறவினர்கள், தெரிந்தவர்கள் கூட ஏர்டெல் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை மற்றும் விஜயின் வேறு நிகழ்ச்சியை பார்க்க தவறுவது இல்லை. ஒரு கிண்டலுக்காக உன் சீரியல் பார்க்கவில்லையே தலை வெடிக்காதா என்று கேட்டால். பெரிய சீரியல். அதே கதை, ரெண்டு நாள் பாக்கலேன்னா என்ன? ஒண்ணும் புரியாம போகுதா என்ன ? என்று கேட்கிறார்கள்.
    ஒரு நிகழ்ச்சியை ஆர்பாட்டமாக ஆரம்பித்தால் மட்டும் பத்தாது. அதை கடைசி வரை ஒழுங்காக நடத்த வேண்டும். அதை விஜய் மட்டுமே செய்கிறது. ஒரு வேளை அந்நிகழ்ச்சி ஒழுங்காக இல்லை அல்லது மக்களிடம் சென்றடையவில்லை என்றால் விஜய் இந்நிகழ்ச்சியை உடனே நிறுத்தி விடும். சன்னை போல் குப்புற விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்றெல்லாம் சொல்லாது.
    அப்புறம் இந்த காஞ்சிபுரம் திருவள்ளூர் ஜாக் மேட்டர் எல்லாம் செம காமெடி. சுமங்கலி கேபிள்காரர்கள் இவ்வளோ நல்லவர்களா என்ன ? சாத்விகமான முறையில் போராடுகிறார்கள் ? சும்மா காமெடி பண்ணாதீங்க லக்கி. இந்த பதிவை போடுவதற்கு முன்னர் நீங்க ஒண்ணு பண்ணியிருக்கலாம். எக்சல் ஷீட்டை நம்பியதில் ஒரு பகுதி நிஜம் என்ன என்று யோசித்திருக்கலாம்.
    நான் ஒரு logic ஆன கேள்வி கேக்குறேன். விஜய் சன்னுக்கு ஒரு பிரச்சனையே இல்லை என்பது போல் எழுதி இருக்கிறீர்கள். அப்புறம் என்ன ***** விஜயின் நிகழ்ச்சிகளை காப்பி அடிக்க வேண்டும் ?
    உங்களது இந்த பதிவு அம்மாவின் கொடநாடு அறிக்கை போல் எள்ளி நகையாடும்படி உள்ளது. "திம்மிகள் பரப்பும் வதந்தீ"

    பதிலளிநீக்கு
  32. யுவகிருஷ்ணா 5:16 PM, June 17, 2010
    இந்த ரேட்டிங் பாயிண்டுக்கு என்ன ஆதாரம் என்று யாராவது கேட்டா.,


    என்ன ஒரு ஆதாரம்!..

    பதிலளிநீக்கு
  33. பெயரில்லா12:00 PM, ஜூன் 21, 2010

    i agreed with krishna's comment.

    syed buhari

    பதிலளிநீக்கு
  34. Cable and lucky both are talking half truth or biased view!

    Trp explain panna romba neram aagathu ,lucky avoid panrathu yen? Sonna sun network panra golmal therinjudumna?

    Cable network yaar kaila irukko avanga manam pola trp kaatalam.

    Trp is estimated based on data collected from sample tv viewers.
    For that people meter,portable people meters and set meter used.

    This is a small electronic device(like set top box) recording channels and timing.

    People meter identifies channel based on down link frequency and carrier freq.

    Oru channela adikkadi slot mathina carrier freq maarum athanala trp recording affect agum .ippo en scv pala channelkalai slot la panthaduthunu therinju irukume.

    Meter set panna house owners othukanum appadi silar than othupanga .oru areaku 10 meters irunthale athigam,avangaluku cable conection free. Melum epothum sun tv paarka anbaga arivurutha paduvarkal enpathai solla thevai illai.

    Ippadithan sun tv mokkai programe ku ellam athiga trp kaattuthu.

    Actually national levelil indepentant body irukku but mso moolama than data collection nadakuthu.

    பதிலளிநீக்கு
  35. My site is related to entertainment, but, occasionally posted news about TV programs. recently, i posted news about Super Singer 2, after that i got extra 4 thousands visitors per day for that particular post.

    பதிலளிநீக்கு
  36. read somewhere additional Tv is being supplied to metered houses-one to view suntv(obviously the metered one) the other to view whatever they like! - Muthu

    பதிலளிநீக்கு