நான் டவுசர் அணிந்து சுற்றிக் கொண்டிருந்த காலத்தில் வந்த படமது. ஊர்முழுக்க ஏதோ ஒரு படத்தைப் பற்றி பேச்சு. எங்கள் ஏரியா இளைஞர்கள் அந்தப் படத்தைப் பார்க்க மவுண்ட்ரோட்டுக்கு தினமும் படையெடுத்துக் கொண்டிருந்தார்கள். பார்த்தவர்கள் பரவசத்தோடு கண்கள் விரிய கண்டவர்களிடம் எல்லாம் கதை சொல்லிக் கொண்டிருந்தார்கள். ஒரு படம் இப்படிப்பட்ட சொல்லவியலா பரவச உணர்வை படம் பார்ப்பவர்களுக்கு ஏற்படுத்துமா என்ற சந்தேகம் எனக்கு அப்போதே வந்தது.
இப்போதும் கூட அப்படமோ, காட்சிகளோ தொலைக்காட்சியில் திரையிடப்பட்டால் நாற்பதை தாண்டியவர்கள் அதே பரவசத்தோடு விழிகள் விரிய பார்ப்பதை காண்கிறேன். அவ்வியக்குனரின் அடுத்தப் படமும் அதே பரவச அலையை முன்பைவிட அதிக காத்திரத்தோடு ஏற்படுத்தியது. முதல் படம் கன்னிராசி. இரண்டாவது படம் ஆண்பாவம். டீனேஜுக்கு வந்த நேரத்தில் நானும் ஒரு படத்தைப் பார்த்து இதே பரவசத்தை அடைந்தேன், வைகாசி பொறந்தாச்சி. இளைஞன் ஆனபிறகு துள்ளுவதோ இளமை.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு, இப்போது மீண்டும் திரையில் கிடைத்த பரவசம் ‘களவாணி’. புதுமுக தொழில்நுட்பக்குழு, அவ்வளவாக பிரபலமில்லாத நாயகன் என்று, பெரிய பின்புலமோ, பலத்த எதிர்ப்பார்ப்போ இல்லாமல் அமைதியாக வெளிவந்து மனசை அள்ளித் திருடிச் செல்கிறான் இந்த களவாணி.
கதை ரொம்ப சாதாரணமானதுதான். ஒரு பொறுப்பற்ற வெட்டிப்பயல் ஒரு பெண்ணை காதலிக்கிறான். படத்தின் ஸ்பெஷல், தொய்வில்லாமல் பந்துக்கு பந்து ரன் அடித்துக் கொண்டேயிருக்கும் திரைக்கதைதான். கண்ணை உறுத்தாத இயல்பான ஒளிப்பதிவு. இசை மட்டும் மேன்மை நிலையை எட்டவில்லை. இருந்தாலும் பரவாயில்லை. கிடைத்த பெனால்டி கார்னரை பயன்படுத்தி, மிகச்சரியாக துல்லியமாக ‘கோல்’ போட்டிருக்கிறது களவாணி படக்குழு.
“என்னடி உன்னோட டிஃபன் பாக்ஸ் இவ்ளோ சின்னதா இருக்கு?” (நிஜமாகவே கொஞ்சம் சின்னதுதான்)
“மாமா! நீ பாட்டுக்கு பாலிடாலை குடிச்சிட்டு ஆஸ்பத்திரியிலே வந்து படுத்துக்கிட்டே. அத்தையை வெச்சி நாங்க எவ்ளோ வேலை செஞ்சோம் தெரியுமா?”
சென்சாரின் கண்ணில் மண்ணைத்தூவி வந்திருக்கும் டைரக்ட் மீனிங் வசனங்கள் ஃபுல் மீல்ஸ் சாப்பிட்ட எஃபெக்ட்டை தருகிறது. இளவட்டங்கள் விசிலடித்து விசிலடித்து, வாய் வீங்கிப்போய் கிடக்கிறார்கள்.
ஹீரோ விமலின் இயல்பு. ஹீரோயின் ஓவியாவின் அழகு. மற்ற பாத்திரங்களின் அசலான கிராமத்தனம் என்று இயக்குனருக்கு பலம் சேர்க்க நிறைய ப்ளஸ் பாயிண்டுகள். தஞ்சையை ஒட்டிய பேராவூரணி, பட்டுக்கோட்டை, மன்னார்குடி ஆகிய சிறுநகரங்களிலும், ஒட்டியிருக்கும் கிராமங்களிலும் ஏற்பட்டிருக்கும் கலாச்சார அதிர்வுகள் மிக நுணுக்கமாக இயக்குனரால் அவதானிக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக ரீட்டாவின் திருவிழா டேன்ஸ் காட்சிகள் அட்டகாசம். கிராமப்படமென்றால் மிகைப்படுத்தப்பட்ட கிராமமொழியினை பாத்திரங்கள் பேசுவது தமிழ்ப்படங்களின் சாபக்கேடு. இப்படம் அதற்கு விதிவிலக்கு.
படத்தின் கதையை ஒட்டியே வரும் காமெடி டிராக் விலாநோக சிரிக்க வைக்கிறது. சமீபத்தில் இதுபோல வயிறுகுலுங்க சிரித்து நிரம்ப நாளாகிறது. அபூர்வசகோதரர்கள், ஜனகராஜூக்கு எப்படி ஒரு உயரத்தைக் கொடுத்ததோ, அதைப்போல கஞ்சாகருப்புவுக்கு சுப்பிரமணியபுரத்துக்குப் பிறகு கிடைத்திருக்கும் இன்னொரு மாஸ்டர்பீஸ் களவாணி.
படைப்பு அடிப்படையில் எல்லாவகையிலும் வென்றிருக்கும் இப்படம், வசூல்ரீதியாகவும் வெல்லுவது இன்றைய தமிழ் சினிமா சூழலுக்கு மிகவும் முக்கியமானது. பட்ஜெட் காரணமாக போதுமான விளம்பரம் செய்ய இயலாத நிலையில் இருக்கும் சிறுபடமிது. படம் பார்த்தவர்கள் வாய்மொழியாக பரப்புரை செய்துதான் பரவலாக்க வேண்டும். சினிமா ஆர்வலர்களின் கடமையும் கூட இது.
களவாணி - குமுதத்தனமான குறும்புப் படம்!
பார்த்தவர்கள் எல்லாம் நல்லா இருக்குன்னு சொல்லுறிங்களே பாஸ் .. ரைட் இதையும் பார்த்துடுவோம்.
பதிலளிநீக்கு//தஞ்சையை ஒட்டிய பேராவூரணி, பட்டுக்கோட்டை, மன்னார்குடி ஆகிய சிறுநகரங்களிலும்,//
பதிலளிநீக்குநம்ம ஊர்ல எடுத்த படமா? பார்த்திட வேண்டியதான்!
அன்புடன்,
-ரவிச்சந்திரன்
//நீண்ட இடைவெளிக்குப் பிறகு, இப்போது மீண்டும் திரையில் கிடைத்த பரவசம் ‘களவாணி’.//
பதிலளிநீக்குபரவசம் படத்தாலையா ? உள்ள போயிருந்த சரக்காலையா?
//தஞ்சையை ஒட்டிய பேராவூரணி, பட்டுக்கோட்டை, மன்னார்குடி ஆகிய சிறுநகரங்களிலும்,ஊர்ல எடுத்த படமா? //
பதிலளிநீக்குசினிமாவுல மதுரை வட்டார மொழியைக் கேட்டுக் கேட்டுக் காது புளிச்சி போயிட்டு. நல்ல தஞ்சை மாவட்ட கிராமத்து மொழியை காது குளிர கேட்போம்.
தல ! கலக்கிட்டீங்க போங்க ! எதிர்பார்ப்பே இல்லாம போய் ரொம்ப ரசித்த படம் ! வழக்கமான மதுரை பாஷை இல்லாமல் இருந்ததும் ஒரு ஆறுதலே !தெளிந்த நீரோடை போல அழகான படம் ! மனதை தொடும் ஹீரோயின் ...அருமையான நகைச்சுவை ! மொத்தத்தில் நல்ல படம் ! தயவு செய்து இந்த படத்த பாருங்க ! யாரும் 'பக் பக் னு சம்பந்தமே இல்லாம கத்த மாட்டாங்க !
பதிலளிநீக்குஇல்லையே.. நம்மாளு ஒரு படத்தை இவ்வளவு சொன்னா அதுக்குள்ளார ஏதோ மேட்டர் இருக்குமே.. விசாரிக்கறேன்.
பதிலளிநீக்குநல்ல விமர்சனம்..நன்றி................. லக்கி
பதிலளிநீக்குபண்ணிடுவோம்.
பதிலளிநீக்கு//“என்னடி உன்னோட டிஃபன் பாக்ஸ் இவ்ளோ சின்னதா இருக்கு?” (நிஜமாகவே கொஞ்சம் சின்னதுதான்)
பதிலளிநீக்கு“மாமா! நீ பாட்டுக்கு பாலிடாலை குடிச்சிட்டு ஆஸ்பத்திரியிலே வந்து படுத்துக்கிட்டே. அத்தையை வெச்சி நாங்க எவ்ளோ வேலை செஞ்சோம் தெரியுமா?//
onnume puriyalaiye :((
சின்னப்படங்களை ஒழித்துகட்ட முயலும்
பதிலளிநீக்குஒரு சில பதிவுகளுக்கிடையில்
உங்கள் கட்டுரை ஆரோக்கியமானது . . .
பாராட்டுக்கள்
தமிழ் படங்களில் மதுரை, திருநெல்வேலியை பார்க்கும்
பதிலளிநீக்குபோது என் பொன் தஞ்சையை பின்னணியாக கொண்ட திரைப்படம் வராதா என தவித்த எனக்கு
சரியான விருந்து "களவாணி"
இந்த படம் விகடன் விமர்சனத்தில் மதிப்பெண்கள் பெற்றிருக்கிறது. நான் இந்த ஞாயிறு பார்ப்பதற்கு முன்பதிவு செய்திருக்கிறேன். ஆனால் சென்னையில் சிறிய திரையரங்குகள் உட்பட அனைத்திலும் ஒரு காட்சி மட்டுமே ஓடுகிறது.
பதிலளிநீக்குயுவா உன் விமர்சனத்தை பார்த்த பிறகு எனக்கும் படம் பார்க்க வேண்டுமென்று தோன்றுகிறது, ஆனால் எப்போது பார்ப்பேன் என்றுதான் தெரியவில்லை, நாளுக்கு நாள் உன் எழுத்து நடை அழகும், வலிமையும் கூடிக் கொண்டே செல்கிறது
பதிலளிநீக்குமுதல் படம் ஆண்பாவம்..இரண்டாம் படம் தான் கன்னிராசி...
பதிலளிநீக்குபடத்தை பார்க்க தூண்டும் விமர்சனம்...
பதிலளிநீக்குசீக்கிரம் பார்த்திட வேண்டியது தான்....
குஹன்
www.mywritingpad.co.cc
romba naalaikku appuram nalla movie paartha thirupthi tharuthu. serious ah illamal jollyaga poguthu. thiruttu DVD la paakkama theatre la paakka arivurai kodunga lucky.
பதிலளிநீக்கு